Friday, May 31, 2013

கல்வித்துறையின் கவனத்திற்கு---


ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 தேர்வின்போது வெற்றிபெற்ற மாணவர்களின் பேட்டிகள், ஏழை மாணவர்களின் சாதனைகள் என எல்லாமும் மனநிறைவு தரும் செய்திகளாக வந்து விழும்போது, "கல்வித்துறையின் தனிப்பட்ட சாதனை' என்ன என்பதைப்பற்றி யாரும் யோசிப்பதில்லை.

பள்ளிக்கல்வியில் வரலாறு காணாத அளவுக்கு மாணவ, மாணவியர் தேர்ச்சி

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 198 பேர் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடத்தை 9 பேரும், 2ம் இடத்தை 52 பேரும், 3ம் இடத்தை 137 பேரும் பிடித்துள்ளனர்.தமிழகத்தில் 1978ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி வகுப்பு படித்த மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்ற முறை மாற்றப்பட்டு, பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பத்தாம் வகுப்புதான் பள்ளி இறுதித் தேர்வாக உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வியை பொருத்தவரை மாநில பாடத் திட்டம், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன்,

ஓய்வூதிய தனியார்மயம் கூடாது ஆக.6 கோட்டை நோக்கிப் பேரணி'

ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆகஸ்ட் 6ம் தேதி சென் னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு அர சுப்போக்குவரத்து ஓய்வுபெற் றோர் நல அமைப்பின் 3 வது மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.இம்மாநாட்டின் முதல் நாள், பொதுமாநாடு மதுரை கே.கே.நகர் வி.ஆர்.கிருஷ்ணய் யர் சமுதாயக்கூடத்தில் வெள்ளி யன்று மாலை நடைபெற்றது. ஸ்தபாக தலைவர் எஸ்.ஆடிய ராஜன் கொடியேற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் என்.

"நீதிக்கதை"- SHORT STORY .,,,

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.

சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆகஸ்ட் 17,18 தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் தலித் மற்றும் பழங்குடியினர் பங்கேற்பதற்கும், வெற்றி பெறுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. இதில் உளவியல், ஆங்கிலம், கணிதம், தமிழ், அறிவியல், உள்ளிட்ட பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த 9 மாணவிகளின் சிறப்பு பேட்டிகள்.........

10 ம்வகுப்பு தேர்தவில் முதலிடம் பிடித்த மாணவிகள் 9 பேர் தங்களின் ஆசைகளையும், எதிர்கால லட்சியங்களையும் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் அளித்த பேட்டிகள் விவரம் வருமாறு: நியூராலஜிஸ்ட் ஆக விருப்பம் ; அனுஷா ; தந்தை: சிவசங்கர்; தாய்:கன்யா; இருவருக்கும் பெருந்துறை மருத்துவக் கல்லூரியில், அக்கவுன்ட்ஸ் பிரிவில் பணி. பள்ளி: கொங்கு வேளாளர் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி,பெருந்துறை. மொத்த மதிப்பெண்:498.

வகுப்பில் முழுமையாக பாடங்களை கவனிப்பேன். படித்ததை அன்றன்றே எழுதிப் பார்ப்பேன். பள்ளி வாலிபால் டீமில் உள்ளதால், தினமும் குறித்த நேரம் வாலிபால் பயிற்சி எடுப்பேன். "ஸ்டேட் லெவல் பிளேயராக' உள்ளேன். மருத்துவம் படித்து, நரம்பியல் நிபுணர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

"திட்டமிட்டு படித்ததால் சாதிக்க முடிந்தது'

சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பலனில்லை? தனியார் பள்ளி மாணவர்கள் அனைத்தையும் வாரிசுருட்டினர்-தினமலர்

தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தால், அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, பெரிய அளவில், எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்பது, நேற்று வெளியான, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, வெட்ட வெளிச்சமாக்கியது. மாறாக, தனியார் பள்ளி மாணவர்களே, மாநில அளவில், அனைத்து இடங்களையும் வாரி சுருட்டினர்.

மாநில அளவில் 2-வது இடம் பெற்ற ஆத்தூர் அரசு பள்ளி மாணவி தேவிஸ்ரீ

ஆத்தூர், மே. 31- வறுமையிலும் ஆத்தூர் மாணவி தேவிஸ்ரீ நன்றாக படித்து மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 52 மாணவ-மாணவிகள் மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்று உள்ளனர். இதில் 51 பேர் தனியார் பள்ளியில் படித்தவர்கள். ஒரே ஒரு மாணவி மட்டும் அரசு பள்ளியில் படித்தவர். அவரது பெயர் தேவிஸ்ரீ.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு

அரசு பள்ளி மாணவர் மாவட்டத்தில் முதலிடம்

தர்மபுரி: தர்மபுரியை அடுத்த லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பூவரசன், 495 மதிப்பெண்கள் பெற்று, அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றர்.இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம்: தமிழ் 97, ஆங்கிலம் 98, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனம் ஆணை 03.06.2013 என்பதற்கு பதிலாக 10.06.2013 அன்று பணியில் சேர அறிவுரை வழங்கி உத்தரவு

தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டு அங்கன் -வாடிகளில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவு.

தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டு அங்கன் -வாடிகளில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவு.

தொடக்கக் கல்வி - 2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.31.05.2013ன் படி 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல், 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை 31.05.2013 மாலைக்குள் இமெயில் மூலம் அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

SSLC மதிப்பெண் மறுகூட்டலுக்கு Online முறையில் 07.06.13 முதல் 10.06.13 வரை விண்ணபிக்கலாம், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ரூ.305/- மற்ற பாடங்களுக்கு ரூ.205/- கட்டணம் நிர்ணயம்

SSLC துணைத் தேர்வெழுத Online மூலம் 03.06.2013 முதல் 05.06.2013 விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் : ஒரு பாடத்திற்கு ரூ.125/-, தேர்வுகள் 24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும்

விஞ்ஞானி ஆவதே லட்சியம்: முதல் இடம் பிடித்த காட்பாடி மாணவி சாருமதி:

காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி சாருமதி 10-ம் வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம்
பிடித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றார்.

காட்பாடி அடுத்த கல்புதூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சக்கரவர்த்தி முன்னாள் ராணுவ வீரர். தாய் சுமதி கே.வி.குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

Thursday, May 30, 2013

SSLC May 2013 Exam Results | Tenth May 2013 Results | 10th May 2013 Results | பத்தாம் வகுப்பு மே 2013 தேர்வு முடிவுகள் 31.05.2013 அன்று காலை 09.15 மணிக்கு வெளியிடப்படும்


SSLC EXAM RESULTS - MAY -2013 LINK 4 

SSLC Result only for School HMs - Link 1
SSLC Result only for School HMs - Link 2 
http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_55602663756.jpg 

498 மதிப்பெண்கள் பெற்று அனுஷா முதலிடம்!
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது
9 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்
10ஆம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனுஷா 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார். 
 52 பேர் 497/500 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்துள்ளனர். 
 136 பேர் 496/500 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3வது இடம் பிடித்துள்ளனர்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிதம்

http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-frc3/292694_615144928503906_167896597_n.jpg
இன்று வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவில் அதிக மாணவ- மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதில் அறிவியல் பாடத்தில்தான் அதிகமான பேர் 100-க்கும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 38, 154 மாணவ- மாணவிகள் 100 மதிப்பெண் (செண்டம்) பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 28, 917 பேர் அதிகமாகும். கடந்த ஆண்டு 9, 237 பேர்தான் அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்று இருந்தனர்.

இந்த ஆண்டு கணிதம் பாடத்தில் 39,905 பேர் 100 மதிப்பெண் பெற்று உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 28,764 பேர் கூடுதலாகும். கடந்த ஆண்டு கணிதம் பாடத்தில் 1141 பேர்தான் `சதம்' அடித்து இருந்தனர்.

சமூக அறிவியல் பாடத்தில் 19,680 பேர் 100 மதிப்பெண் பெற்று உள்ளனர். கடந்த ஆண்டு 5,305 மாணவ- மாணவிகளே 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து இருந்தனர்.

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 522 மாணவ- மாணவிகள் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------
பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.15 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியானது.  மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் குறித்து மறுகூட்டல் செய்ய ஆன்லைன் முறை யில் விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும். இதற்காக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


தொலைதூரக்கல்வி முதுகலை தேர்வுகள் 8–ந் தேதி தொடக்கம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு:

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஜி.கோட்டீஸ்வர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தின் முதுகலை பட்டப் படிப்புகள் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் மாதம் 8–ந் தேதி தொடங்கி, ஜூலை 28–ந் தேதி வரை நடைபெற உள்ளன. வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) தேர்வு நடத்தப்படும்.

விடுவிப்பு படிவம் --------RELEVING ORDER

ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்


அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஏன் மாணவர்கள் பள்ளியில் சேர்வதில்லை. அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் செயல்வழிக் கற்றல் படைப்பாற்றல் கல்விமுறை மிகச் சிறப்பானது இந்த முறை எந்த பெரிய புகழ்பெற்ற பள்ளிகளிலும் பின்பற்றப் படுவதில்லை. பின்னர் ஏன் மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை. பல்வேறு சலுகைகள் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவு ஏன்? என்ற கேள்வியை கல்வித்துறை அதிகாரிகள் எழுப்பி வருகிறார்கள்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு (மார்ச் - 2013) - நாளை மதிப்பெண் அட்டவணைப்பட்டியல் வெளியிடப்படும்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு தேர்வு துறை இணை இயக்குனரின் அறிவுரை

SMALL STORY - குட்டிக்கதை: புத்திசாலித்தனம்:

ஒரு முனிவர் ஒரு அரசனிடம் மரணத்தை வெல்லும் அபூர்வக் கனி ஒன்றைக் கொடுத்தார். அப்போது அருகிலிருந்த காவலாளி அதை அவரிடமிருந்து பறித்துச் சாப்பிட்டு விட்டான்.

கோபமுற்ற அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.’ ‘இறவாக்கனியை உண்ட என்னை உங்கள் தண்டனை ஒன்றும் செய்ய முடியாது. ”என்றான் காவலாளி.’

சிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு 7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி இடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவை கொண்டாட, 2013-14 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.

தொடக்கக் கல்வி - உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முழு நேர கைத்தொழில் ஆசிரியர்களுக்கு பொது கல்வி மற்றும் டி.டி.சி பெறாமைக்கு தவிர்ப்பாணை வழங்க விவரம் கோருதல்

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! - - - ஓர் ஆய்வு

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்)

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

HIGHER SECONDARY SPECIAL SUPPLEMENTARY EXAMINATION TIME TABLE, JUNE/JULY - 2013

பள்ளிக்கல்வி - 2008-2009, 2009-2010 மற்றும் 2011-2012 ஆண்டுகளில் நிலை உயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுவதற்கான ஆணை

பொருளாதாரத்தில் பின்தங்கிய, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு புதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்

நீங்கள் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பொருளாதாரக் காரணங்களால் மேற்படிப்பைத் தொடர இயலாத மாணவரா? தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தரம் வாய்ந்த கல்லூரிகளோடு இணைந்து உங்களுக்கு இந்த ஆண்டும் உதவ முன் வந்திருக்கிறது ‘புதிய தலைமுறை’.
எந்தெந்தப் படிப்புகள்?
B.E / B.Tech (ECE, CSE, EEE, IT, Mech, Civil) • B.Pharm
• Bachelor of Physiotherapy • B.Sc. Micro Biology
• B.Sc., Bio tech • B.Sc. IT
• B.Sc. Bio Chemistry • B.Sc. Nursing
• B.Sc.Computer Science • B.A. Journalism
• B.O.T. • MBA
• B.Ed (பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்)

செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
அண்ணாமலை நகர், கோயம்பத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 17ல் கலந்தாய்வு தொடக்கம்

கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 17ம் தேதி தொடங்க உள்ளது.

அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்

மதுரை: தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.

மதுரையில் பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் மற்றும் பிச்சை ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

மாறுதல் ஆணை பெற்ற முதுகலை / பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுநர் / இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.13 முதல் 07.06.13 -க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-2014 ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / ஆசிரியர் பயிற்றுநர் / இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம் - அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

Wednesday, May 29, 2013

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் 30.05.2013 காலை 10.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு  முதல் முறையாக ஆன்லைனில்  30.05.2013 காலை 10.00 மணி முதல்  நடத்தப்பட உள்ளது.

மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013 அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

10½ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியாகிறது

10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பள்ளி படிப்பின் முக்கியத்துவம்

மாணவ–மாணவிகளின் பள்ளிக்கல்வி வாழ்க்கையில் எஸ்.எஸ்.எல்.சி. என்று அழைக்கப்படும் 10–ம் வகுப்பு தேர்வும், பிளஸ்–2 பொதுத்தேர்வும் முக்கிய இடம் வகிக்கின்றன. 10–ம் வகுப்பு முடித்த கையோடு பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும்.

Retirement age to be raised to 62?

The Union Government is seriously considering raising the retirement age to 62 for Central Government employees. Obviously, if the Congress announces this before the Lok Sabha polls, it could expect a sizeable vote share. North Block, which

2013 - 14 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

சிறப்பு ஆசிரியர் பணி:

உத்தேச பதிவுமூப்பு பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியீடு,7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்:

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 6 -எஸ். முத்துக்கிருஷ்ணன்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மேற்படிப்பு ஜுரம் தொடங்கி விடுகிறது. பணம் சம்பாதிக்கும் படிப்பு, சமூக அந்தஸ்துக்கான படிப்பு என்று விதவிதமான படிப்புகளில் பிள்ளைகளை சேர்த்து விட வேண்டும் என்று பெற்றோர்களின் போராட்டம் தொடங்கி விடுகிறது. படித்து முடித்து ஒரு நல்ல வேலைக்கு போய்விட்டால் பிள்ளையின் எதிர்காலம் செட்டில் ஆகி விடும். அதனால் தங்களுடைய சக்திக்கு அதிகமாக செலவு செய்தாவது பிரபலமான கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் துடிக்கிறார்கள். இதுதான் கல்வி நிறுவனங்களை நடத்துவோருக்கு மூலதனமாகிறது.

ஒரு குட்டி கதை! tamil short stories.......

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.
வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. "எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

தொடக்கக்கல்வித் துறையில் 2013-14 பொது மாறுதல் மற்றும் பதவியுயர்வு பெற்ற (அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்) அனைவரும் 31.05.2013 பிற்பகல் விடுவிக்கப்பெற்று உடன் பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

(மாணவர் நலத்திட்டங்கள் அனைத்தும் உரிய காலத்தில் அவர்களுக்கு கிடைத்திட உடனடியாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்,ஆசிரியர்கள்  விடுவிக்கப்பெற்று உடன் பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.)

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

800க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் சிக்கல்!


தனியார் பள்ளிகள் இட வசதி நிர்ணயம் தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. மதுரை மகாத்மா காந்தி பள்ளியில் நடைபெற்ற இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வல்லுநர் குழுத் தலைவராக பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன், உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆர்.பிச்சை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட ஏழு துறைகளைக் கொண்ட குழு கலந்து கொண்டது. இந்தக் குழு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் பேசிய தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், பள்ளிகளின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கூறுகையில்,

Tuesday, May 28, 2013

SSTA-செய்திகள்*


மூன்று ஆண்டு காலமாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து வழக்குப் பதிவு செய்த விபரம். ஆறாவது ஊதியக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை ஏற்ப்படுத்தினர்.ஊதியத்தை உயர்த்தி தருகிறோம் என்று கூறி பெற்று வந்த ஊதியத்தை பறித்துக்கொண்டனர். ஐந்தாவது ஊதியக்குழு தொடந்து இருந்தாலே தற்போது பெரும் ஊதியத்தை விட அதிகம் பெற்று இருப்போம்.ஐந்தாவது ஊதிக்குழுவில் அடிப்படை ஊதியம் Rs3050 பெற்று வந்த நம்மைவிட கல்வித்தகுதியிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிதவர்களுக்குகூடRs. 9300 -34800+4200 முதல் 4600 வரை தர ஊதியம் வழங்கி உள்ளனர்.

SHORT STORY - 2 "நீதிக்கதை"

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

SHORT STORY - 1 உதவி!


இங்கிலாந்தில் பிளெமிங் என்ற விவசாயி ஒருநாள் காட்டு வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு பணக்காரச் சிறுவன் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். உடனே பிளெமிங் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்.

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 5 -எஸ். முத்துக்கிருஷ்ணன்

தமிழ்நாட்டில் நடக்கும் கல்வி கொள்ளையை தடுக்கவே முடியாதா என்ற கேள்விதான் ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் எழுந்து கொண்டிருக்கிறது. இதற்கான எத்தனையோ போராட்டங்கள் நடந்து விட்டன. இன்னும் நடக்க இருக்கின்றன. சென்னை தனியார் பள்ளி ஒன்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று கடந்த 27 ஆம் தேதி அன்று ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அதுபோலவே, பொறியில், மருத்துவ கல்லூரிகளிலும் கட்டணக் கொள்ளை நடப்பதை தட்டிக் கேட்ட முடியாமல் எத்தனையோ பெற்றோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கூடுதல் கட்டணத்தை செலுத்த வசதி இல்லாததால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாத அவலநிலை தொடர்கிறது. காற்றில் பறக்கும் அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - கோடை விடுமுறைக்குப் பின் 2013-2014ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 10ஆக மாற்றம் செய்ததற்கான- அரசு ஆணை வெளியீடு..

கல்வி உரிமை சட்டம் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கை: கோவா முதல்வர்

கல்வி பெறும் உரிமை சட்டம் என்பது மத்திய அமைச்சர் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கை என கோவா முதல்வர் மனோகர் பரிகர் தெரிவித்துள்ளார். கல்வி பெறும் உரிமை சட்டம் குறித்து மாநில முதல்வர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவா மாநில முதல்வர் மனோகர் பரிகர் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் குறித்து கடுமையாக தாக்கி பேசினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :

அரசு கலை மற்றும் கலை கல்லூரிகளுக்கான 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு


எனக்கு தெரியாமலேயே ஆங்கிலத்தி்ல் கல்லூரி தேர்வு எழுத உத்தரவு: முதல்வர்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிக கோடை வெயிலின் காரணமாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3 ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிக கோடை வெயிலின் காரணமாக தற்போது அனைத்து விதமான பள்ளிகளும் அதற்கு பதிலாக வரும் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி கற்பது அடிப்படை உரிமை! இலவசமாக வழங்குவது அரசின் கடமை! - நாளிதழ் செய்தி

தமிழக அளவில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகின. அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் கூட 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும் பல பள்ளிகளில் 22 முதல் 38 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசாணை எண்.216 நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை, விரைவில் உரிய அரசாணை வெளியிடப்பட உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் திரு.முத்துசாமி அவர்கள் தகவல்

அரசாணை எண்.216 இதுவரை அமுல்ப்படுத்தாமலேயே இருந்தது, இதை அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தனர். அரசாணை எண்.216 என்பது சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசால் போடப்பட்ட ஆணையாகும். இந்த ஆணையை தமிழக அரசு இதுவரை அமுல்ப்படுத்தாத காரணத்தால் தான் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது, அரசும் அடிக்கடி வாய்தா வாங்கி கொண்டு இருந்தது.

Monday, May 27, 2013

மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மே 30-ம் தேதி மனு அளிப்பது என வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கற்பது கற்கண்டா? கசப்பா?byஉதயசங்கர்

கற்றலின் இனிமை என்ற செயல்முறைக்கல்விமுறைக்கு முன்னோடி கிஜூபாய் பகேக. இன்றும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இந்த முறை உவப்பானதாகத் தெரியவில்லை. கையில் பிரம்பு இல்லாமல் குழந்தைகளுடன் சமமாக உட்கார்ந்து விளையாட்டாகக் கல்வி போதிக்கும் முறை அவர்களுக்கு அச்சலாத்தியாக இருக்கிறது. ஆசிரியர் என்றால் ஒரு பயம் வேண்டாமா? என்ற எண்ணம் அவர்கள் மனதில் வேரோடியிருக்கிறது. குழந்தைகளைப் பயமுறுத்தியே தாங்கள் அவர்களை விட உயர்ந்தவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள், என்ற அதிகாரத்தை நிலைநிறுத்த நினைக்கிறார்கள். அன்பே உருவான குழந்தைகள் தாய், தந்தைக்குப்பிறகு ஆசிரியர்களிடமே அதிக அன்பு செலுத்துகிறார்கள்.

தமிழ்நாட்டில் அனல் காற்று வீசுவதால் பள்ளிக்கூடம் திறப்பு தள்ளிவைக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரி பதில்

கடந்த 1998–ம் ஆண்டு இப்படி அதிக வெயில் அடித்த காரணத்தால் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் ஒரு வாரம் தள்ளி திறக்கப்பட்டன. அதுபோல இந்த வருடம் பள்ளிக்கூடம் திறப்பது தள்ளிப்போகுமா என்று ஆசிரியர்களும், மாணவர்களும், பல பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் ஜூன் மாதம் 3–ந்தேதி திறப்பதாக இருந்தது. இது தள்ளிவைக்கப்பட்டு 10–ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

புதுடில்லி: மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு

வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் புதுச்சேரியை விட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளும் ஜூன் 10-ந் தேதி திறக்க விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

ப்ளஸ் 2 "மார்க் ஷீட்' இன்று முதல், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

2012-13ம் ஆண்டிற்கான ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச், 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட்டது. ப்ளஸ் 2 "மார்க் ஷீட்' இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இன்று காலை முதல், திருச்சி மாவட்டத்தில் அந்தந்த பள்ளிகளில் "மார்க் ஷீட்' வினியோகம் செய்யப்படுகிறது.

Sunday, May 26, 2013

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் - ஒரு பார்வை.

பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என நான்கு வகையான பள்ளிகள் உள்ளன.
அவை கீழ்கண்டவாறு பல வகையான பள்ளிகளாக உள்ளன.
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் [State Board Schools]
மெட்ரிக் பள்ளிகள் [Matriculation Schools]
ஓரியண்டல் பள்ளிகள் [Oriental Schools]
ஆங்கிலோ இந்திய பள்ளிகள் [Angilo-Indian Schools]

பள்ளிக்கல்வி துறைக்கு மாறிய 4000 பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு கனவு பலிக்குமா? - DINAKARAN


சேலம் : தமிழகம் முழுவதும், தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு மாறுதலில் (யூனிட் டிரான்ஸ்பர்) சென்ற 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கக் கல்வியை உயர்த்தும் நோக்கில், கடந்த 2004ம் ஆண்டு 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் முதன்முதலாக நியமிக்கப்பட்டனர்.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!