TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Thursday, January 31, 2013

அனைவருக்கும் கல்வி மேற்பார்வை மற்றும் குழு ஒருங்கிணைப்பு - தலைமை ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி கையேடு பதிவிறக்கம் செய்ய .........

தமிழ்நாடு அமைச்சுப் பணி, பள்ளி கல்வித்துறை - இளநிலை உதவியாளர் நேரடி நியமனம் TNPSC GROUP IV மூலம் 2007 - 2008 முதல் 2012 -2013 தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 02.02.2013 அன்று அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வு மூலம் நியமன ஒதுக்கீடு ஆணை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் 01.08.2012 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ய உத்தரவு.

JRC Minutes | இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள்

SSA - STUDY ON STUDENTS AND TEACHERS ATTENDANCE IN PRIMARY AND UPPER PRIMARY SCHOOLS, MHRD TO VISITS SCHOOLS AND TO FACILITATE TO OBSERVE REGISTERS IN SCHOOLS - REG

Wednesday, January 30, 2013

தொடக்கக் கல்வி - சில்லறை செலவினம் - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் முறையான பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் தற்காலிக பணியிடம் நீட்டிப்பு ஆணை 1.1.2013 முதல் வழங்க விவரங்கள் கோருதல் - சார்பு

அரசுத் தேர்வுகள் - பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு தேர்வுகள் சிறப்பாக நடத்த அறிவுரைகள் வழங்கும் பொருட்டு அனைத்து ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 09.02.2013 அன்று திருச்சியில் நடைபெற உள்ளது.

வரும் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

தமிழ்நாட்டில் 600–க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் சென்னையில் உள்ளதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. முன்பு ஒவ்வொரு கல்வியியல் கல்லூரியும் அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இயங்கி வந்தன.
 இந்த நிலையில், அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வருவதைப் போன்று எல்லா கல்வியியல் கல்லூரிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் வண்ணம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே ஆசிரியர் கல்விக்கென தனியே ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு மறுகூட்டல் முடிவு வெளியீடு

சென்னை : பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், வியாழக்கிழமை, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா வெளியிட்ட அறிவிப்பு:கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தனித்தேர்வை எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் முடிவுகள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், வியாழன் வெளியிடப்படும். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது குறித்து, விரைவில், தபால் வழியாக தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி மூன்று கட்டங்களாக மொத்தம் 10 நாட்கள் இப்பயிற்சி நடைபெறுகிறது

முதல்கட்ட பயிற்சி நடைபெறும் நாள்:-4.2.2013-7.2.2013(நான்கு நாட்கள்)

இரண்டாம்கட்ட பயிற்சி நடைபெறும் நாள்:-11.2.2013-14.2.22013(நான்கு நாட்கள் )

மூன்றாம்கட்ட பயிற்சி நடைபெறும் நாள்:- 18.2.2013-19.02.2013(இரண்டு நாட்கள்)
மாநிலக்  கல்வியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன செயல்முறைக் கடிதத்தினை பதிவிறக்கம் செய்ய ..............

TNPSC ANNONUCED-ANNUAL PLANNER FOR THE YEAR 2013 - 2014 RELEASED BY THE HON'BLE CHAIRMAN

Dept. of Treasuries and Accounts - Download Payroll 9.0

Tuesday, January 29, 2013

TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது

TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . 
கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை.

சமச்சீர் கல்வி திட்டம் வந்த பின் மெட்ரிக் இயக்குனரகம் தேவையா?

மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தியுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென, தனியாக இயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.மெட்ரிக் இயக்குனரகத்தின் கீழ், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பழைய பெயர் எதற்கு?
புதிய பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளிகளுக்கு, அங்கீகாரத்தைப் புதுப்பித்து வழங்குதல், பள்ளிகளின் நிர்வாகங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை, இயக்குனரகம்கவனித்து வருகிறது.

6,000 புதிய ஆசிரியர்களுக்கு டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை

சென்னை: புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு, டிச., 13ம் தேதி, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, 21 ஆயிரம் ஆசிரியர்கள், புதிதாக நியமிக்கப்பட்டனர்.

பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரியில் 22 நாள் தொடர் பயிற்சி

கல்லல்: அரசு விடுமுறை, பயிற்சி என, ஜனவரி மாதம் 22 நாட்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை.
பள்ளிகளில் பருவமுறை கல்வி திட்டத்தில், பாடம் கற்பிக்கின்றனர். மூன்றாம் பருவ வகுப்புகள், ஜன., 2 ல் துவங்கின. ஜனவரியில், 13 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை, அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் 9 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனால், அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

காஞ்சிபுரம்: "தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மே மாதத்திற்கு முன், மாணவர் சேர்க்கை பணி மேற்கொள்ளக் கூடாது" என, அரசு உத்தரவிட்டுள்ளது. மே மாதத்திற்கு முன்பாக, மாணவர் சேர்க்கை நடந்தால், சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை, தற்போதே துவக்கி விட்டனர். மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர்.

10ம் வகுப்பு வினா வங்கி புத்தகம்: மாவட்டங்களில் விற்கப்படுமா?

சென்னை: பத்தாம் வகுப்பு வினா வங்கி புத்தகம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழக அலுவலகத்தில், விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மாநிலத்தின் கடைகோடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், சென்னைக்கு படை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், மாநில பெற்றோர்- ஆசிரியர் கழகம், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக, வினா வங்கி புத்தகங்களை தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது.

சுதந்திர போராட்டத்தின் போது உயிர் நீத்தத் தியாகி களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 30.01.2013 அன்று காலை 11.00 மணி முதல் 11.02 மணி வரை இரண்டு நிமிடங்கள் அமைதி அனுசரித்தப் பின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி அனைத்து அரசு அலுவலகங்கள் / பள்ளிகளில் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.

SCHOOL EDUCATION - TEMPERORY POSTS - TEACHING & NON - TEACHING STAFFS - PAY CONTINUATION FROM JAN 2013 TO MARCH 2013 ORDER ISSUED

 
 
 

பிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் 5ம் தேதி துவங்கும் தேர்வானது, மார்ச் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேதி வாரியான விபரங்கள்

பிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள்
பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30
மார்ச்  5
தமிழ் முதல் தாள்
மார்ச்  8
தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 12
ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 13
ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 19
இயற்பியல் / பொருளியல்
மார்ச் 20
கணினி அறிவியல்
மார்ச் 22
வேதியியல் / கணக்கியல்
மார்ச் 26
கணிதம் / வணிகக் கணிதம்
மார்ச் 28
உயிரியல் / வணிகவியல்

 

வரலாறு, வணிகவியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டை நிரப்ப நடவடிக்கை

சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில், தமிழ் வழி இடஒதுக்கீட்டை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடவடிக்கை எடுத்துள்ளது.
போட்டித் தேர்வு அடிப்படையில், சமீபத்தில், 2,300 முதுகலை ஆசிரியர்களை, டி.ஆர்.பி., தேர்வு செய்தது. இவர்கள் அனைவரும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த தேர்வில், தாவரவியல் பிரிவிற்கான ஆசிரியர் தேர்வு செய்யப்படவில்லை. மேலும், தமிழ் வழிக்கான, 20 சதவீத இட ஒதுக்கீடும் நிரப்பப்படவில்லை.

பணிவரன் முறை ஊதியத்திற்க்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

சென்னை: புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின், சான்றிதழை சரிபார்த்து அனுப்புவதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பதால், பணி வரன்முறை ஊதியம் பெற முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
கல்வித் துறையில், தொடக்க, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு, இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, டிகிரி சான்றிதழ், சம்பந்தப்பட்ட பல்கலைக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ், மாநில தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கும் அனுப்பப்படுகின்றன.

இணையதள மையங்களில் குவியும் தலைமையாசிரியர்கள்

சென்னை: ஸ்மார்ட் கார்டு பணிகளுக்காக, மாணவர்களின் விவரங்களை, ஆன்-லைனில் பதிவு செய்ய, தனியார் இணையதள மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் படையெடுத்து வருகின்றனர். ஆன்-லைன் பதிவிற்கு மாணவர்களிடம் தலா, 10 ரூபாய் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
மாணவர்களின் அனைத்து விவரங்கள் கொண்ட, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. ஒன்று முதல், பிளஸ் 2 வரை, 80 லட்சம் மாணவர்களுக்கு கார்டுகள் தயாராகின்றன. மாணவர்களின் விவரங்களை சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் விவரங்களை சேகரித்து, கல்வித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Monday, January 28, 2013

ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவி: அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்

தியாகதுருகம்:சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை தியாகதுருகம் அருகே உள்ள, தொடக்கப்பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம் பல்லகச்சேரி உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் வேலு, 38 பணிபுகிறார். அறிவியல் துறையில் ஆர்வம் உள்ள இவர், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை உருவாக்கியுள்ளார். இதற்கான, மினியேச்சர் ஊஞ்சலை செய்து, அதன் அச்சுடன் சிறிய ஜெனரேட்டரை இணைத்துள்ளார்.

1200 பணி இடங்கள் காலி:கணினி அறிவியலை பிற ஆசிரியர்கள் நடத்திவரும் அவலம்,பொதுத் தேர்வு மாணவர்கள் தவிப்பு.

தமிழகத்தில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளதால், பிற பாட ஆசிரியர்கள், அப்பாடத்தை நடத்தி வருகின்றனர். இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ், ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
 
 
 2001 முதல், 2012 வரை, தமிழகம் முழுவதும், 1,200 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இவற்றில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியின் மூலமாக, குறைந்த சம்பளத்துக்கு, கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பல பள்ளிகளில், பிற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாட வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இப்பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்உள்ளது.

ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் :அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குளறுபடியா?


ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் :அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குழப்பம் .
27.03.2013 அன்று பனிரெண்டாம் வகுப்பிற்கு Political science ,Nursing,Statistics ஆகிய தேர்வுகள்  நடைபெறும் என அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் அலட்சியம் பொது இடத்தில் சுற்றும் மாணவர்கள்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளியில் ப்ளஸ், 1 வகுப்பில் பாடம் எடுக்க ஆசிரியர்கள் இருந்தும், அவர்கள் பணியை புறக்கணிப்பதால், மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்து, பொது இடங்களில் பொழுதை கழிக்கின்றனர். இதை யாரும் கண்டு கொள்வதில்லை என, பெற்றோர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரத்தில் அரசு ஆண்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவு ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பாடம் எடுக்கின்றனர். மற்ற ஆசிரியர்கள் இருந்தும் பணியை புறக்கணித்து, வகுப்பு எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

ஆசிரியர் பற்றாக்குறை - வகுப்புகளை இழக்கும் மாணவர்கள்

சென்னை: தமிழகமெங்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிலவும் கடும் ஆசிரியர் பற்றாக்குறையால், வகுப்புகள் நடப்பதே அரிதாக உள்ளது. தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில், வாரத்திற்கு 20 மணிநேர வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பகுதிநேர விரிவுரையாளர்களைக் கொண்டு, நிலைமையை சரிசெய்யும் முயற்சிகள் நடந்தாலும், நிரந்தரமான ஆசிரியர்கள் நியமனத்தை, அரசு உடனடியாக மேற்கொண்டால் ஒழிய, இப்பிரச்சினைக்குத் தீர்வில்லை என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sunday, January 27, 2013

1 கோடி மாணவர்கள் விவரம் இணையதளத்தில் பதிவு பிப்.15 வரை அவகாசம்

குஜிலியம்பாறை: தமிழகம் முழுவதும் உள்ள 1.33 கோடி பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான
கால அவகாசம் ஜனவரி 31ம் தேதியுடன் முடிகிறது. இதை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்ய பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்களை உள்ளடக்கி கல்வி நிர்வாக தகவல் கட்டமைப்பை உருவாக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த தகவல்களின் அடிப்படையில் பல திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 720ல் உரிய திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். இதில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 720ல் உரிய திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணப்பலன் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தையின்போது ஒத்துக்கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘ஆசிரியர்கள் ஏற்கனவே உரிய பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களை பணியில் சேர்க்க தகுதித்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கிறது. எனவே தற்போது தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான NEW STUDY MATERIAL

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடத்திற்கான வினா வங்கி.....

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடத்திற்கான வினா வங்கி.....பதிவிறக்கம் செய்ய .............






 READ THIS AND HELP OTHERS!
தங்களிடம்  உள்ள பயனுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடம் சார்ந்த கையேடுகள், வினாத்தாள்கள் இருந்தால் அதை நமது வலைதளத்தின் EMAIL முகவரிக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம் நன்றி !.........

EMAIL :- tamilagaasiriyar@gmail.com

Saturday, January 26, 2013

பட்டதாரி ஆசிரியர்,முதுகலை ஆசிரியர்,உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் - ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணைகள்.

இணையத்தில் மாணவ, மாணவியர் விவரம் பதிய அவகாசம்


சென்னை: மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் விவரங்களை உள்ளடக்கி, "கல்வி நிர்வாக தகவல் கட்டமைப்பை" உருவாக்க, கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பயிற்சி


திருநெல்வேலி: தமிழகத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 311 மையங்களில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது.
தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 29 ஆயிரத்து 176 பட்டதாரி ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் முதற்கட்டமாக கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுவான பயிற்சி நடந்தது.

Professional Tax | புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 2013 தொழில் வரி உண்டா ?


ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இது மத்திய அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).புதிய ஆசிரியர்கள் பணி சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகவில்லை என்றாலும்,

Friday, January 25, 2013

கவனிக்க தவறிய இந்திய கணித மேதை காப்ரேகர்

பூச்சியத்தை கண்டறிந்து கணிதம் தழைத்தோங்க இந்தியா உதவினாலும் ஆர்யப்பட்டர், பாஸ்கரர், பிரம்மகுப்தர், சீனிவாச இராமானுஜம் போன்ற ஒரு சில இந்திய கணிதமேதைகளே புகழ் அடைந்தனர் . அவர்களின் வரிசையில் கணிதத்தில் பல ஆய்வுகள்  செய்த காப்ரேகர் எனும் இந்திய கணிதமேதையை கவனிக்க தவறிவிட்டோம் வாருங்கள் நண்பர்களே அவரின் வரலாற்றினை புரட்டிப்பார்ப்போம்
பிறப்பும் இளமைபருவமும்

2014-15 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2015-16), பிளஸ் 2 வகுப்பிற்கும், புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் ஆகின்றன. வரைவு பாடத்திட்டம் பிப்., 13ல் www.tnscert.org என்ற துறை இணையதளத்தில் வெளியீடப்படுகின்றன.

அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, பாடத் திட்டங்களை மாற்றி, அவ்வப்போதைய கால கட்டத்திற்கு ஏற்றார் போல், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். 

பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.பில் / பி.எச்டி கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அரசாணை எண்.1024 வெளியிட்ட நாள். 09.12.1993 முதல் வழங்கப்படும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் ஊக்க ஊதியம் பெற புதிதாக எம்.பில் / பி.எச்டி போன்ற உயர்க்கல்வித் தகுதிகள்  சேர்த்து ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 உயர்க்கல்வித் துறை நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. 
இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற அணுகிய போது பல்வேறு தரப்பு பதில்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் நிதிசார்ந்த அரசாணைகளில் பணப்பலனானது எந்த தேதி முதல் அமுலுக்கு வரும் என்று குறிப்பிடப்படும் என்றும் ஆனால் இந்த தேதி எதுவும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை என்றும் குழப்பம் நிலவி வருகிறது. எம்.எட்., கல்வித்தகுதியை தொலைத்தூரக் கல்வி வாயிலாக பெற இயலாத சூழ்நிலை உள்ளது எனவும், ஆசிரியர்கள் எம்.பில்., / பி.எச்.டி., போன்ற கல்வித்தகுதிகள் தொலைத்தூரக் கல்வி மூலம் பெறும் நிலை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 24, 2013

பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரம் ஆன்லைனில் பதிவேற்றும் பணி வரும் 28.01.2013 வரை நீடித்து அரசுத் தேர்வுத்துறை உத்தரவு.

வருகிற மார்ச் 2013 ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்ய அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்  துறை உத்தரவிட்டு இருந்தது.

பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்விற்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு, கடந்த டிசம்பரில் நடந்தது. இத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று, வெளியிடப்படுகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கம்-தமிழகம் முழுவதும் 714 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 44 உண்டு உறைவிடப் பள்ளிகள் புதிதாக தொடங்கவும், 312 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது

தொடக்கக் கல்வித்துறையின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 714 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 44 உண்டு உறைவிடப் பள்ளிகள் புதிதாக தொடங்கவும், 312 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் எஸ்எஸ்ஏ இலக்கு நிர்ணயித்துள்ளது.

பிபிஇ பட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு விரைவில் ஆசிரியர் பணி கிடைக்க உள்ளது.

தமிழகம் முழுவதும் 2012 மே மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தியது.
இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பொருளியல் பாடத்திற்கான தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் பிபிஇ பட்டத்தை அங்கீகரிக்க மறுத்து பணி வாய்ப்பு மறுக்கப்பட்டது.

தேசிய வாக்காளர் தினத்தை வாக்குச்சாவடிகளில் கொண்டாட உத்தரவு மற்றும் உறுதிமொழி கடிதம்

ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்

கட்டாயக் கல்வி சட்டத்திற்கு எதிராக (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் முடிவை, கல்வித்துறை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஒரே நேரத்தில், 2,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால், இம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஜன. 29ல் விடுப்பு எடுக்க தலைமையாசிரியர்கள் முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 29ல் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்தனர். மாநிலத்தில் காலியான 35 டி.இ.ஓ.,க்கள் இடங்களை நிரப்ப வேண்டும். உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்பு, மாணவர்கள்,

அனைவருக்கும் கல்வி இயக்கம் - இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 - விழிப்புணர்வு கலைபயணம், வீதி நாடகங்கள், பாடல்கள், தின படிவம் மற்றும் கலைக் குழுவினர் கலைப்பயணத்தின் பொது கடைப்பிடிக்க வேண்டியவைகள்

11, 12ம் வகுப்புகளுக்கு வரைவு பாடத்திட்டம்: பிப்., 13ல் வெளியீடு

சென்னை: அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, பாடத் திட்டங்களை மாற்றி, அவ்வப்போதைய கால கட்டத்திற்கு ஏற்றார் போல், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தற்போதுள்ள பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, ஆறு ஆண்டுகள் ஆகின்றன.

Wednesday, January 23, 2013

250 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம்: கல்வித்துறை யோசனை

சென்னை: அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காமராஜர் பல்கலை வழங்கும் தொலைநிலை பி.எட்., படிப்பு

மதுரை: காமராஜர் பல்கலைக்கழகம், 2 வருட தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பை, 2013-15 கல்வியாண்டில், வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பானது, NCTE(National Council for Teacher Education)  மற்றும் DEC(Distance Education Council) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது. இப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் பின்வருமாறு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள உயர் தொடக்கநிலை கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டாரவள மையங்களில் கற்றல் குறைபாடு விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள். இரண்டு நாள் பயிற்சி.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!