TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Thursday, February 28, 2013

முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 5 ல் கவுன்சிலிங்

தேனி:ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம் மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெற்றனர்.
 இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில், கடந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் சேராமல் இருந்தவர்களையும்,.

கூட்டுறவு சங்க தேர்தல்தேர்தல் அதிகாரிகள் நியமனம்

திண்டுக்கல்:தமிழகத்தில் நடைபெற உள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அதிகாரிகளாக, அந்தந்த ச மாவட்டங்களின் துணை பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர் சேர்க்கை, படிவங்கள் சரிபார்ப்பு போன்றவை நடந்தன.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - புதிய நியமனங்கள் - TRB மூலம் 2009-2010ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் நியமனம் செய்யப்பட்ட கணித மற்றும் ஆங்கிலம்,சமுக அறிவியல்,அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்து உத்தரவு.

விடைத்தாள் திருத்தும் கட்டணம் அதிகரிப்பு

கல்லூரி ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் கட்டணத்தை அதிகரிக்க தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பி.எஸ்சி. உள்ளிட்ட இளநிலைப் பட்டப்படிப்பு விடைத்தாள் ஒன்றை திருத்துவதற்கான ஊதியம் ரூ.9-லிருந்து ரூ.12 ஆக அதிகரிக்கப்படுகிறது. எம்.எஸ்சி. உள்ளிட்ட முதுநிலைப் பட்டப்படிப்பு விடைத்தாளைத் திருத்துவதற்கான ஊதியம் ரூ.12-லிருந்து ரூ.15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு வரும் ஏப்ரல் முதல் உடனடியாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.

2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் இன்று நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

வீட்டு கடன் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வட்டி தள்ளுபடி

ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது.
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌

வி.ஏ.ஓ., 4ம் கட்ட கலந்தாய்வு: மார்ச் 5ல் துவக்கம்

வி.ஏ.ஓ., நான்காம் கட்ட கலந்தாய்வு மார்ச் 5ம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மூன்று கட்டங்களாக நடந்த கலந்தாய்வில் 1,685 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிளஸ் 2 மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அரசுப் பொதுத்தேர்வுகள், இதோ வந்தேவிட்டது.மார்ச் 1 ல் தொடங்கி மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது.


தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வுக்காக 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 மாணவியரும், 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 மாணவர்களும் அடங்குவர்.

கடந்த ஆண்டைவிட 43,559 பேர் இந்த ஆண்டு கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவர்களைத் தவிர 48,788 பேர் தனித்தேர்வர்களாக பதிவு செய்துள்ளனர். 
சென்னையில் 140 தேர்வு மையங்களில் 51,531 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 23,717 பேர் மாணவர்கள், 27,814 பேர் மாணவியர் ஆவர்.

டெல்லி: இந்த 2013-14ம் நிதியாண்டிற்காக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், கல்விக்காக, கடந்தாண்டைவிட கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி என்பது அரசின் உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தைப் பெற்ற துறையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 2013-14ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட், நாட்டு இளைஞர்கள், கல்வியையும், திறன்களையும் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, அவர்கள் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற்று, அதன்மூலம் போதுமான வருமானத்தையும், ஒரு பாதுகாப்பான நல்ல வாழ்க்கையை பெறும் நோக்கத்தையும் கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள்

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களின் வரியில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்

சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். 
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரியும் கட்ட வேண்டும். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் நடுத்தர மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

Wednesday, February 27, 2013

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவு. புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திரு. வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜய் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி. கோகுல இந்திரா ஆகிய மூன்று அமைச்சர்களை நீக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
புதிய அமைச்சர்களாக திரு. வைகை செல்வன் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் - வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு

Tuesday, February 26, 2013

பள்ளிக்கல்வித்துறையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட (CPS) பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம்

மார்ச்-2013 +2 பொதுத்தேர்விற்கான முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,கூடுதல் துறை அலுவலர் மற்றும் பறக்கும்படை உறுப்பினபர்களுக்கான தேர்வுத்துறை இயக்குநரின் அறிவுரைகள்

கருணை அடிப்படை பணி நியமனம் - பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் / ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு.

பிஎப் கணக்குக்கு 8.5% வட்டி நிர்ணயிக்க பரிந்துரை

நடப்பு ஆண்டுக்கான பி.எப் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று, விரைவில் நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

மாரடைப்பை தவிர்க்க .....நாம் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் இதை அனைவரும் தெரிந்து கொண்டால் மாரடைப்பு ஏற்படும் பொது நம்மை நாமே கத்துக் கொள்ளலாம்.அல்லது மற்றவருக்கு நாம் உதவலாம்.

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

கல்வி அதிகாரிகள் மீது தலைமை ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

திருச்சி: ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் சிம்கார்டு வாங்கக் கூறி, ஏ.இ.ஓ.,க்கள் வற்புறுத்துவதாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த, திருச்சி நகரத்தில், 39 அரசு உதவிப்பெறும் மற்றும், 26 மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 65 தலைமையாசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: இறுதிக் கட்ட பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த நடவடிக்கைகளில், கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடக்கிறது.
 பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளதால், தேர்வுக்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் குறைதீர்க்கும் கூட்டம் எப்போது?

மதுரை: மதுரையில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவுப்படி, மாதம்தோறும் நடக்கும் ஆசிரியர் குறைதீர்க்கும் கூட்டம், மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் நடத்தபடாததால் ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு மற்றும் உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான குறைதீர்க் கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன், மாதத்தில் முதல்

Monday, February 25, 2013

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் 1.6.2009 க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களை வைத்து ஏன் கோரிக்கை வைக்கிறது என்பதற்கான விளக்கம்.

THANKS TO - C.T. ROCKLAND. DEPUTY GENERAL SECRETARY, TAMILNADU ALL TEACHER ASSOCIATION.     

அனைவருக்கும் வணக்கம். எங்கள் சங்கம்  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றுத்தருவதில் அதிக அக்கறையுடன் செயல்படுவதை சமீபத்தில் எங்கள் சங்கம் பெற்ற RTI தகவல்கள், மற்றும் நிதிதுறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை நமது நண்பர்களின் இணையங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

தற்போது (‎01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என

TET NEW STUDY MATERIAL TAMIL - வினா விடை குறிப்புகள்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி 15 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டம்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி அதன் மூலம் புதியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும் பணியில் சேர்வதற்கேற்ப தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என்று டி.ஆர்.பியிடம் கல்வித்துறை தெரிவித்துள்ளன. என்வே, அடுத்த டி.இ.டி தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்ச் சான்றிதழை அனுப்ப வேண்டும்: மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வூதியம் மற்றும்  குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர சரிபார்ப்புக்காக தங்களது உயிர்ச் சான்றிதழை மார்ச் 1-ம் தேதி முதல் கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்) அலுவலகத்தில்  பதிவு செய்ய வேண்டும்.இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்ப்பில்:
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் வருடாந்திர

Tax Amendments Expected in Union Budget 2013

The government has been trying to make the tax laws simpler every year; however, there are numerous amendments required in the tax laws. 

The union budget for the FY 2013-14 will be presented before the Parliament on 28th February 2013 and the finance minister has promised many reforms expected to combat inflation along with stable tax rates.

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியர் - dinamalar


மதுரை மாவட்டம், அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி. வழக்கமாய் மாலை வகுப்புகள் முடிந்ததும், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும், அவரவர் வீட்டிற்கு கிளம்பிச் செல்கின்றனர். ஆனால், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கில்பர்ட் வயது 47. இவர் மட்டும் அதற்கு பின், வகுப்பறைகள், பள்ளி வளாகம் போன்றவற்றை, குப்பைகள் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு, கூடுதலாக பள்ளியின் கழிப்பறைகளையும் சுத்தம் செய்துவிட்டே செல்கிறார்.
இதன் மூலம், மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவர்களை, பள்ளி வளாகம் சுத்தத்துடனும், சகாதாரத்துடனும் வரவேற்கிறது.

Sunday, February 24, 2013

ஆறே மாதத்தில் பி.எட்., பட்டம் : பெரியார் பல்கலை பட்டத்தை நிராகரித்தது டி.ஆர்.பி.,

சேலம் : சேலம் பெரியார் பல்கலையில், ஆறே மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்., பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து, வேலைவாய்ப்பை மறுத்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர்.
சேலம் பெரியார் பல்கலையில், 2008ம் ஆண்டுக்கு முன் வரை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. 2008ம் ஆண்டு, கல்வியியல் பல்கலை துவக்கப்பட்டு, அதில் கல்வியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டன. கல்வியியல் பல்கலை அறிவிப்பு வரும் நேரத்தில்,

Saturday, February 23, 2013

கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.


இவர்கள், நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு, IAS, IFS, IPS மற்றும் இதர மத்திய அரசின் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தனியார் பள்ளி கட்டணம் வசூல் புகார் தெரிவிக்க கல்வி அதிகாரி தலைமையில் சட்டப்பூர்வ குழு

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் சட்டப் பூர்வ குழுக்களை அரசு அமைத்துள்ளது.
 
தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த கடந்த 2009ம் ஆண்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 2010ம் ஆண்டில் தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, அந்தந்த பள்ளிகளின் வரவு செலவுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்தது. குழு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும்,

Friday, February 22, 2013

தொழிற்கல்வி விவசாய ஆசிரியர் பணியிடங்களுக்கு 19.01.2013 முதல் மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை

680 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை பணியிடங்களுக்கு 1.10.2012 முதல் 31.09.2013 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ / மாணவியர் களுக்கு TNPL மூலம் நோட்டுப் புத்தகங்கள் பெற்று வழங்க தேவைப் பட்டியல் கோரி உத்தரவு.

பள்ளிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் - தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி

மதுரை: தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்க, தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இத்திட்டம் சார்பில், 2009ம் ஆண்டு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக, மானியம் ஒதுக்கப்படுகிறது. 2012-13 ம் ஆண்டிற்காக, மாநிலத்தில் சுமார் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு, ஆய்வக உபகரணங்கள், நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் அடிப்படை தேவைக்காக,

Thursday, February 21, 2013

அரசு வேலைவாய்பு! – இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி? (Department of Employment and Training, Govt. of Tamilnadu)

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் “சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல்,

தெரிந்து கொள்வோமா! HRA SLAP ......இந்த HRA SLAPனை DOWNLOAD செய்து உங்கள் பள்ளிகளில் வைத்துகொள்ளவும் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் சம்பள பட்டியல் தயாரிக்கும் பொழுது.

பொதுத்தேர்வு நெருங்கும் இந்தத் தருணத்தில் மாணவர்களுக்கு பெற்றோர்கள் எப்படி உதவலாம்?

பொதுத்தேர்வு நெருங்கும் இந்தத் தருணத்தில் மாணவர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் தங்களைத் தகுந்த முறையில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதில் மிக முக்கியமாக கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டிய விஷயம் பிள்ளைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகும்.
இரவில் கண் விழித்து படிக்கும் பிள்ளைகளுக்கு, புரதச்சத்துமிக்க உணவுகளையும், சின்ன சின்னதாக இடைவெளிவிட்டு விதவிதமான பழங்களையும் படித்துக்கொண்டே சாப்பிடும் படியாக வெட்டிக் கொடுக்கலாம். குழந்தைகளின் மனநம்பிக்கை குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்த நேரத்தில் மிக அவசியம்.
மாரத்தான் எனப்படும் ஒரு நெடு ஓட்டத்தின் கடைசிக்கட்டம் இது. மாணவர்கள் தங்கள் சக்தியின் எல்லைக் கோட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் இதை கவனத்தில் கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ளவேண்டியது மிக மிக முக்கியம்.

நர்சரி பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., பொருந்துமா? - மத்திய அரசு தகவல்

நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது, நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்துள்ளது.
நர்சரி பள்ளிகள் சேர்க்கை குறித்து, ஒரு தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.முருகேசன் மற்றும் நீதிபதி வி.கே.ஜெயின், ஆர்.டி.இ., விதிமுறையை விளக்க சில நாட்களுக்கு முன் மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

Wednesday, February 20, 2013

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய MINIMUM LEARNING MATERIAL..CEO.,RMSA., KRISHNAGIRI DISTRICT.

பதிவிறக்கம் செய்ய 

12 STD MINIMUM LEARNING MATERIALS


 

அனைவருக்கும் கல்வி இயக்கம் - எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி., "பகீர்' தகவல்

முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.

ஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது - இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது.

Tuesday, February 19, 2013

பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவு

பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்பட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதால், ஊழியர்களின் வருகையை அதிகாரிகள் தொகுத்து துறை வாரியாக வைத்து கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசுக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக இயக்குநரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி..!


இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.

பிப்ரவரி 20 மற்றும் 21 நாளை நடைபெறும் தேசிய அளவிலான 48 மணி நேர பொது வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளர் திரு.முருகசெல்வராஜன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்.

Sunday, February 17, 2013

(17.02.2013)கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு தேவையான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ,மேலும் மாவட்ட தேர்தல் நடைப்பெற்றது இதில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டர்கள் மாநில பொது செயலாளர் திரு அ.வ.அண்ணாமலை அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான தீர்மானங்கள்

1.உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 50% பதவி உயர்வு
பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கும் 50% நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி
ஆசிரியருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் ,
2.அரசாணை எண் 720 ஐ எந்த காரணம் கொண்டும் திருத்தம் செய்யக் கூடாது என்றும்,
3. மாணவர் நலன் கருதி அனைத்து மேல் நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ம்
வரை உள்ள வகுப்புகளை நிர்வாகம் செய்ய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடம் ஒன்று உருவாக்கி அதில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி
ஆசிரியர்களுக்கு 50% பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று
தீர்மானிக்கப்பட்டது.

CLICK HERE TO DOWNLOAD FILE 1

CLICK HERE TO DOWNLOAD FILE 2

இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளி - நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் B.Ed., தகுதியுடன் பணியாற்றிவரும் (01.06.2006 வரை) இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.

வேலைநிறுத்தத்தை கைவிட மன்மோகன் வேண்டுகோள்

புதுடில்லி : ""வேலைநிறுத்த போராட்டத்தை தொழிற்சங்கங்கள் கைவிட வேண்டும்,'' என, பிரதமர், மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய, மத்திய அரசை கண்டித்து, வரும், 20 மற்றும் 21ம் தேதிகளில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.வேலை நிறுத்த போராட்டத்தை, கைவிட வேண்டும் என, பிரதமர், மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிப்., 20, 21 ஸ்டிரைக்கில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பு


விருதுநகர் :""புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, பிப்., 20, 21ல் நடக்கும் வேலை நிறுத்தத்தில், 30 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளோம்,'' என, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.விருதுநகரில் நடந்த, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டத்தில், அவர்

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு 19 முதல் ஹால் டிக்கெட்

சென்னை: "பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு, 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை, ஹால் டிக்கெட் வழங்கப்படும்,' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: மார்ச் மாதம், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, தனித்தேர்வாக எழுத விண்ணப்பித்துள்ளவர்கள், அவர்களின் இருப்பிட முகவரிக்கு அருகில் உள்ள தேர்வு மையத்தில், பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

OCTOBER 2012 SSLC QUESTION PAPER IN PDF FORMAT

SSLC OCTOBER 2012 QUESION PAPER CLICK HERE TO DOWNLOAD....................

Saturday, February 16, 2013

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகம் : கிருஷ்ணகிரி மாவட்டம் :


அரசு அங்கீகார எண் 125/2001 பதிவு எண் 100/92

மாவட்ட பொதுக்குழு  கூட்டம்:

இடம்:  கவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி

இடைநிலை / சிறப்பாசிரியர்கள் பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ,
 
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் சார்பில்
மாவட்ட பொதுக்குழு  கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்   கவேரிப்பட்டணம் அரசு
ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் வரும் ஞாயிறு (17.02.2013) அன்று காலை
10.00
மணி அளவில் நடை பெற உள்ளது  . இந்த கூட்டத்திற்கு மாநில பொது
செயலாளர் திரு . .அண்ணாமலை மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள்

Thursday, February 14, 2013

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2011-12ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர்களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு.

ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை.

அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என இயக்குனர் உத்தரவு.

CLICK HERE TO DOWNLOAD RTI LETTER..........

12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் -2011, 2012,10 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011,2012 DINAMALAR.

          12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2012

கல்விமலர் இணையதளத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள்கள்!

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில், நமது கல்விமலர் இணையதளத்தில் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில், தினமலர் இதழில் வெளிவந்த மாதிரி வினாத்தாள்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களின்

Tuesday, February 12, 2013

NEW AND VERY EASY INCOME TAX CALCULATOR IN EXCEL FORMAT 2012-2013.......

நண்பர்களே தோழர்களே நாம் எளிய வழியில் நமது INCOME TAX CALCULATION செய்ய இந்த EXCEL FOMAT மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .....
பதிவிறக்கம் செய்து பயன் பெறுமாறு தங்களை கேட்டு கொள்கிறேன்
குறிப்பு
EL SURRENDER 10 ஆம் மாதம் அதாவது அக்டோபர் மதமாக PROGRAM செய்யப் பட்டுள்ளது.மற்ற மாதத்தினர் MANUAL ஆக ENTRY செய்து கொள்ளவும்
நன்றி திரு சேகர் தலைமை ஆசிரியர்
மாதனூர் ஒன்றியம்
வேலூர் மாவட்டம்.

சஸ்பெண்ட் தலைமை ஆசிரியர்கள் 67 பேர் மீண்டும் பணியில் சேர்ப்பு


நாமக்கல்  நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை மோசடியில் சிக்கிய 67 தலைமை ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றி பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சுகாதாரக் குறைவான தொழில்புரியும் பெற்றோரின் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 2010, 2011ம் ஆண்டு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ.81 லட்சம் வரை மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. தொடர்ந்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் நடத்திய ஆய்வில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பணப்பலன் கிடைக்காமல் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் அவதி

சென்னை: எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த, 433 முதுகலை ஆசிரியர்களை, கோர்ட் உத்தரவிட்டும், பணிவரன் முறை செய்யாமலும், உரிய பணப் பலன்களை வழங்காமலும், பள்ளி கல்வித்துறை, பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.
கடந்த, 1978களில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., ஆகிய, முதுகலை பட்டப் படிப்பு படித்த, 433 பேர், தொகுப்பூதிய அடிப்படையில், முதுகலை ஆசிரியர்களாக, பணி நியமனம் செய்யப்பட்டனர்.

Sunday, February 10, 2013

சென்னை: தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தும், மின்னணு முறையில் மாற்றப்பட்டு வருகிறது. இதனால், அரசின் தகவல் பரிமாற்றங்களைக் கூட, மின்னணு முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு- முதல் திருப்புத் தேர்வு -சமூக அறிவியல் பாடத்திற்கான வினா விடைகள்-2013

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!