TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Tuesday, April 30, 2013

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது- இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே-வில் நடைபெறுமா? - ஆசிரியர்கள் எதிர்பார்பு


இரட்டை பட்டப்படிப்பு குறித்த வழக்கு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள் K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று (30.04.2013) "சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE) ஆக விசாரணை நடைப்பெற்றது.

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பு.

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்குத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் 2013 ஜூன் 10 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பதவிஉயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதிஅளித்துள்ளார்.

பள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அருகாமையிலுள்ள தொடக்க / நடுநிலை மற்றும் நர்சரி பள்ளி மாணவர்களை 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் மாணவர்களை 30.04.2013 அன்று சேர்க்க நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு.

CLICK HERE TO DOWNLOADDSE - 2013-14 - 6 & 9STD ADMISSION IN HIGH & HSS SCHOOL HMs TAKE NECEESARY ACTIONS & INSTRUCTIONS REG

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில் சேர்க்க கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.

Monday, April 29, 2013

DTEd தேர்வில் தவறியவர்கள் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 29

ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு (இடைநிலை ஆசிரியர் கல்வி தேர்வு) தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை தேர்வுத்துறையின் இணையதளத்தில் www.tn.gov.in/dge கடந்த (வியாழக்கிழமை) முதல் 29–ந் தேதி வரை பக்கம் 1 முதல் 6 வரை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை (பக்கம் 1 முதல் 4 வரை) தாங்கள்

face book மூலம் நமக்கு கிடைத்த சில தகவல் இதோ உங்களுக்காக!



ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் மதுரையில் உண்ணாவிரதம்.....


"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

"இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள் - TESTF

* இவ்வாண்டு மாறுதல் / பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும் நடக்கலாம் அல்லது வழக்கமான முறையிலும் நடக்கலாம். எப்படியாயினும் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை உரிய முறையில் சமர்ப்பிப்பதும் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் வரிசை முறைப்படி உள்ளதைச் சரிபார்த்துக் கொள்வதும் ஆசிரியர்களின் கடமையாகும்.

பள்ளிக்கல்வி - த.ப.க.சா.நி.பணி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வின்றி பணியாற்றி 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில்) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல் - உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட உள்ள மறு ஆய்வு / சிறப்பு விடுப்பு மனுவில் வழங்கப்படும் தீர்ப்பிற்குட்பட்டு ஆணை வெளியீடு.

மத்திய அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

தேனி: மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு ஊழியர்களும்,எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும் இரு முறை அகவிலைப்படி உயர்வு (டி.ஏ.,) வழங்கப்படும். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெளியாகும் அறிவிப்பு, இந்த ஆண்டு ஏப்ரல் 18 ல், 8 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 72 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இதை 8 சதவீதம் உயர்த்தி 80 சதவீதமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அறிவிப்பு வெளியான உடன், அதை அனுசரித்து மாநில அரசும் அறிவிப்பு வெளியிடும். மத்திய அரசு ஏற்கனவே தாமதமாக அறிவித்துள்ள நிலையில், விரைவில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த, அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

Saturday, April 27, 2013

2013 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் அறிந்து கொள்ள CLICK HERE &GET YOUR RESULT

பகுதிநேர கணினி ஆசிரியர்களுக்கு -கணினி ஆசிரியர் பணிக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை


அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில்முன்னுரிமை அளிக்க வேண்டும் என பகுதிநேர கணினி ஆசிரியர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பெரியசாமிசேலத்தில்செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுகிடு முறை பின்பற்ற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை! - நாளிதழ் செய்தி வெளியீடு.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31ல் வெளியீடு : அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தகவல்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகிற மே 9ந் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.  மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற மே 31ந் தேதி வெளியாகும் என்றும் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு

சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.
சத்துணவுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணை, முட்டை ஆகியவற்றை அரசே வழங்குகிறது. காய்கறி, மசாலா பொருட்கள் மற்றும் சமைக்கத் தேவையான விறகு ஆகியவற்றுக்காக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 69.50 காசுகளும், ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 79.50 காசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. "விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளதால், இத்தொகையை அதிகரிக்க வேண்டும்" என்று சத்துணவு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

Friday, April 26, 2013

TNTET தேர்வு பற்றிய அறிவிப்பு மே 10 அன்று வெளியாகுமா?


    பள்ளிக் கல்வித் துறை மீதான மானிய கோரிக்கை மே 10 அன்று நடைபெற உள்ளது நம் தமிழக சட்ட மன்றத்தில் அன்று ஆசிரியர் பணி நியமனம் பற்றியும்
   ஆசிரியர் தேர்வு செய்யப்படும் முறை பற்றியும் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் : அரசு பணியாளர் சங்க தலைவர் கோரிக்கை

 ""புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என, அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளன தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம்

அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில திறன் வளர்க்க ‘ரேடியோ இங்கிலீஷ்’ திட்டம் - இது சார்பாக ஜூலை 5ல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

சென்னை லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பிரான்சிஸ் தலைமையிலான குழு இப்பயிற்சியை வடிவமைத்துள்ளது. தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு ரேடியோ ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

நீதிமன்றம் குப்பையில் போடச் சொன்ன பட்டியலை வைத்துக் கொண்டு பணி நியமனம் செய்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளிகள் யார்? Thanks : Viduthalai.in

நேற்றைய விடுதலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மோசடிகள் குறித்த முன்னோட்டம் வந்ததும், அதைக்கூட படிக்காமல் ஆசிரியர்களெல்லாம் தகுதியின் அடிப்படை யில்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சும்மா அதில் போய் பிரச்சினை பண்ணக்கூடாது என்றெல்லாம கருத்துக்கூறிவருகின்றனராம் முகநூலில்!

அவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால் என்னபள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

M.Tech., (Environmental Science & Tech) என்ற கல்வித்தகுதி M.E., (Environmental Engineering) இணையாக கருத அரசாணை வெளியீடு

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO பணி மாறுதல் மூலம் மீளவும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் செய்ய விவரம் & படிவம் கோருதல்

Dir. of School Education: Application for the post of Coordinator for IEDSS

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு சார்பான கருத்துக்களை நிபுணர் குழுவிடம் தெரிவிக்க கால அவகாசம் கோரி பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்களின் உரிமைக்காகவும் பட்டதாரி ஆசிரியர்களின் நன்மைக்காகவும் எப்போதும் ஓங்கி உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.அ.வ.அண்ணாமலை அவர்கள் வெளிட்டுள்ள மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) அவர்களுக்கு அனுப்பி உள்ள கடித விபரம் வருமாறு:

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கவும், உடனடியாக இடைகால நிவாரணமாக 2009-க்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு 1.86ஆல் பெருக்கி வழங்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில் நடத்த SSTA முடிவு.


இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கி ஊதிய விகிதத்தை PB-1ல் இருந்து PB-2 மாற்றி வழங்க வலியுறுத்தியும், உடனடியாக இடைகால அடிப்படையில் 01.06.2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86ஆல் பெருக்கி ஊதியம் வழங்க வலியுறுத்தியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மே 4ல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில் நடத்த இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் திரு. இராபர்ட் கூறுகையில் ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை

தொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து விண்ணப்பம் பெற தகவல் இன்று (26.04.2013) மாலைக்குள் வெளிவரும் - TNPTF-ன் மாநில பொதுச் செயலாளர் தகவல்

தொடக்கக்கல்வித் துறைக்கான 2013-14ஆம் ஆண்டிற்கான இட மாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்து இதுவரை எந்த தகவலும் வராததால் ஆசிரியர்கள் மத்தியில் இதுகுறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

DSE - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் 25.04.2013ல் தொடங்கி 30.04.2013 வரை நடைபெறுகிறது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

கோடை விடுமுறையின் போது பள்ளியின் கணினி, அச்சுப்பொறி, ப்ரொஜெக்டர், எல்.சி.டி மானிட்டர், மடிக்கணினி போன்ற விலையுயர்ந்த பொருட்கள் உங்கள் பள்ளியில் இருந்தால் அவற்றைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் தலைமையாசிரியரையே சாரும்.

மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் மே 9 முதல் ........................

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 9 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துப் படி வருவாய் மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதித்து ஆணை வழங்க இயக்குநர் உத்தரவு.

Thursday, April 25, 2013

அனை வருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அனை வருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின¢றனர். இவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ஊதியம்

திருவாரூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதி வாய்ந்த நாடுனர்கள், விண்ணப்பத்தை, முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதி வாய்ந்த நாடுனர்கள், விண்ணப்பத்தை, முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். உடற்கல்வி ஆசிரியர் 18, கலை ஆசிரியர் (ஓவியம்)21,  வாழ்வியல் திறன்   பயிற்றுனர் 1, தையல் ஆசிரியர் 1, இசை ஆசிரியர் 4 என மொத்தம்,45 காலிப்பணியிடம் உள்ளது

நாகை மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி 22, ஓவியம் 22, இசை 4, கணினி 1 ஆகிய பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாள் என்று நாகை முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப் பட உள்ளனர். உடற்கல்வி 22, ஓவியம் 22, இசை 4, கணினி 1 ஆகிய பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்.

8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி : பரிசீலிக்க நாடாளுமன்ற குழு கோரிக்கை

இந்தியாவில் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்: முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம்

"மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி ஊதியம் வழங்க முறையான அரசாணை இன்று மத்திய அரசு வெளியீடு

அரசுப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஊதிய முரண்பாடு பிரச்னையில் குழுவின் அறிக்கையை வெளியிடும் முன்பு கருத்து கேட்கக் கோரி அரசுப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான குழுவின் அறிக்கையை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 55 பகுதி நேர ஆசிரியர் பணியிடம் நிரப்பபடுகிறது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

M.S WORDஇல் நாம் பயன்படுத்தும் முக்கியமான SHORTCUT KEYகள்


Crl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).
Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க.

Wednesday, April 24, 2013

5 shocking things we eat every day


While reading food labels is helpful for identifying what ingredients have gone into your food, there are some things you won’t see listed on packages but which most of us eat every day. Check out these five shocking things we unknowingly eat.


1. Arsenic

Many of us view rice as a pretty safe, healthy food; however, studies have suggested that it may also contain unsafe levels of the toxic substance arsenic. One study has suggested that one in five packs of American long-grain rice contain potentially harmful levels of the toxic substance, while others have reported concern for the levels of arsenic in rice milk and baby rice. In fact, according to tests by Consumer Reports, those who ate rice had 44 per cent greater levels of arsenic in their bodies than those who had not. While there is relatively little risk of the odd bowl of rice causing any long lasting harm, the popular grain may be best enjoyed in moderation if reports are to be believed.




கல்வி ஆண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

கல்வி ஆண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, கல்வி ஆண்டு முடிய பதவி நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அண்ணா அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்செல்வன், ஐகோர்ட் கிளையில் தாக் கல் செய்த மனு: நான் பட்டதாரி ஆசிரியராக 2007 அக்டோபர் 8ம் தேதி முதல் பணிபுரிந்து வருகி றேன். எனது ஓய்வு நாள் 2013 மார்ச் 31ம் தேதி ஆகும்.

Tuesday, April 23, 2013

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பகுதிநேர ஆசிரியர்களுக்காண விண்ணப்ப படிவம்.

2013-14ஆம் கல்வியாண்டில் 400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம்

வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த, 32 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், பகுதி வாரியாக

Directorate of Employment and Training - Information on Cut-off Seniority dates adopted for nomination- march 2013

Directorate  of Employment  and Training
Information on Cut-off  Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
(March -2013)

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணி சார்ந்த விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 34351/ஏ1/இ4/2013, நாள். 19.04.2013-ன் படி தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் தொடக்கக் கல்வி இயக்குனரின் ஆளுகையின் கீழ் பணிபுரியும்  மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும்

ஜூன் 21ம் முதல் கலந்தாய்வு: பொறியியல் சேர்க்கை தொடர்பான முழு அட்டவணையை, பொறியியல் சேர்க்கை செயலர், ரெய்மண்ட் உதிரியராஜ், நேற்றிரவு வெளியிட்டார். அதன் விவரம்:

* விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13
* விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13
* விண்ணப்பம் வழங்க, கடைசி நாள் 20.5.13
* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 20.5.13
* "ரேண்டம்' எண் வெளியீடு 5.6.13
* "ரேங்க்' பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13
* மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13
* கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13
இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை
அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும், www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணி சார்ந்த விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 34351/ஏ1/இ4/2013, நாள். 19.04.2013-ன் படி தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் தொடக்கக் கல்வி இயக்குனரின் ஆளுகையின் கீழ் பணிபுரியும்  மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும்

Monday, April 22, 2013

TET NEW STUDY MATERIAL - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்...

புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?

புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் இதுவரை விவாதிக்காதது ஏன் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.) தேசியக் குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் கேள்வி எழுப்பினார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு காளைமாட்டுச் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பேசியது:புதிய ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அடிப்படையாகக் கொண்டது.

பணி நியமன அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார்: நர்சரி ஆசிரியர்கள் நம்பிக்கை

"தமிழக சட்டசபையில் மே 10ம் தேதி நடைபெறவுள்ள கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பணிநியமனம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார்," என நர்சரி பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க வேண்டும் என்று, பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில், பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், ஓவியம் மற்றும் கணினி ஆசிரியர்கள் என, 15 ஆயிரம் பேரை அரசு நியமித்தது. இவர்கள், மாதத்தில் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர்.

2012-13ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கான (GPF) வட்டி விகிதம் 8.8%ம், 2013-14ஆம் நிதியாண்டிற்கு 8.7% அறிவித்து தமிழக அரசு உத்தரவு.

Sunday, April 21, 2013

பள்ளி திறந்த ஒரே வாரத்தில் பஸ் பாஸ் வழங்க உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் தகுதியுள்ளோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பஸ் பாஸ் கிடைக்காமல் மாணவ,

பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்ற விண்ணப்பங்களை 27க்குள் சமர்பிக்க திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு


face book மூலம் நமக்கு கிடைத்த தகவல் இதோ உங்களுக்காக!

தகவல்:
நாமக்கல் மாவட்டத்துக்கானது.


*22.04.13~தமிழ் தேர்வு.
*23.04.13~ஆங்கிலம் தேர்வு.
*24.04.13~மகாவீர் ஜெயந்தி விடுமுறை.
*25.04.13~கணிதம் தேர்வு.
*26.04.13~சூழ்நிலையியல் அறிவியல் தேர்வு.
*27.04.13~பள்ளி வேலை நாள்.
(பள்ளி வேலைநாட்கள் குறைவுபடுபவர்கள் மட்டும்)
*29.04.13~சமூகவியல் தேர்வு.

(தகவல்:உதவி தொடக்கக் கல்வி அலுவலர், எருமப்பட்டி)

டி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க கோரிக்கை

"டி.இ.டி., தேர்வில், பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும்" என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. 

பட்டதாரிகளை சமாதானம் செய்ய கடந்த ஆட்சியின் இறுதியில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை தூசு தட்டி எடுத்து, இப்போது பணி நியமனம் வழங்க அரசு முடிவு

மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப்போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல்

மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

Saturday, April 20, 2013

உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 23ஆம் தேதி 11.00 மணியிலிருந்து 12.00 மணி வரை மாணவர்களுக்கு படிப்பதற்கு புத்தகங்களை வழங்குவதோடு ஒரு இலட்சம் உறுப்பினர்கள் பத்தாயிரம் புரவலர்களை சேர்க்கவும் பொது நூலக இயக்ககம் உத்தரவு.

கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள்

*மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
*மக்கள் தொகை சுருக்கம்
*தேர்ச்சி சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
*இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
*பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல்/ இன்மை அறிக்கை
*மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*பள்ளி வேலை நாட்கள் விபரம் 
*கோடைவிடுமுறை அனுமதி





Friday, April 19, 2013

Madurai Kamaraj University Notification For B.Ed. Entrance Examination (2013 - 2015

மதுரை காமராஜ் பல்கலை - நவம்பர் - 2012 தேர்வு முடிவு வெளியீடு

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 1590 முதுகலை ஆசிரியர், அஇக திட்டத்தின் கீழ் 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் 2013 மாதங்களுக்கு சம்பளம் வழங்க ஆணை

25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கோரி இன்று பேக்ஸ் அனுப்பும் இயக்கம்


25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி இன்று ( 19ம் தேதி) தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்தப்படுகிறது.தமிழகத்தில் உயர்,

குரூப்-2 உள்ளிட்ட ஆறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் : T.N.P.S.C நாளிதழ் செய்தி வெளியீடு.

ஜூலை 1ம் தேதி முதல் பி.எப் கணக்கை ஆன்லைனில் மாற்றலாம்

வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ப்பவர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கை இனி ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளும் வசதி ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. தொழிலாளர் வருங்கால

வைப்பு நிதி (இ.பி.எப்) ஆணையர் அனில் சொரூப் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: பி.எப். சந்தாதாரர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை

தமிழ்நாடு அரசு பணியாளர் சிறப்பு சேம நல நிதி மற்றும் பணிக்கொடை திட்டம், 2000- திட்டத்தின் கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது புதிய அரசானை வெளியீடு

உயர்நிலை/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான குறைகளை ஆராய்வு செய்ய ஏதுவாக, சார்பான கருத்துகளை 25.04.2013க்குள் தெரிவிக்க பள்ளிகல்வி துறை உத்தரவு

குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி

Thursday, April 18, 2013

இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்துள்ளது. அதன் உயர் நீதி மன்றத்தின் நகல்

அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லியில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

கிருஷ்ணகிரி மாவட்டம் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் சார்பில்விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம்:


 புதன்  கிழமை (17.02.2013) கலை 9.00 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம்  அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்கழகத்தின் சார்பில்  விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. வாயிற் கூட்டத்தில் பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை  முன் வைத்து
 மாநில பொதுச்செயலாளர் திரு அ.வ.அண்ணாமலை அவர்கள்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (CTET) ஆன்லைன் பதிவு ஏப்ரல் 22 வரை நீட்டிப்பு.

TET STUDY MATERIAL - NEW - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்............

தொடக்க கல்வி பட்டயதேர்வு (D.El.Ed) விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கலாம்

TO DOWNLOAD APPLICATION FOR ADMISSION TO THE EXAMINATION FOR DIPLOMA IN ELEMENTARY EDUCATION CLICK HERE...

"தொடக்க கல்வி பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்," என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்தார்.
திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : இன்று முடிவு - DINAMANI

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு அளிக்கும் முடிவை மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்ய உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் குழந்தைகளுக்கான நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்களில், உளவியல் ஆலோசகராக பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பு.

தொடக்க கல்வி பட்டயதேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கலாம்

உடுமலை: "தொடக்க கல்வி பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்," என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்தார்.
திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிக்கை:

Wednesday, April 17, 2013

Census Consolidation Model Form |குடிமதிப்பு விபரப்பட்டியல் மாதிரிப் படிவம்

அகஇ - சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் இடைநின்ற / பள்ளி செல்லா குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கும் சலுகைகளை வழங்க மாவட்ட ஆய்வு அலுவலர்களுக்கு தெளிவுரை வழங்க கோருதல் - சார்பு

ஒரு கோடி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை

சென்னை: வரும் ஜூன் 3ம் தேதி, பள்ளிகள் திறந்ததும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒரு கோடி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் ஒரு, "செட்" சீருடை ஆகியவற்றை வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை அளிக்கப்படும் என சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படும் எனவும், ஞாயிற்றுக்கிழமைக்கான உணவு கெட்டுப் போகாமல் சனிக்கிழமையன்றே வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Tuesday, April 16, 2013

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் 8.8%ல் இருந்து 8.7%ஆக குறைப்பு

2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் வெளியிடப்படப்பட்ட  மத்திய நிதி அமைச்சக உத்தரவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த வைப்பு நிதிக்கு  2013-14ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7 சதவீதமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில்(2012-13) பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8%ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விதமானது 01.04.2013ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு முடிவுகள் அரசு இணையதளங்களில் மட்டுமே


தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை அரசு தேர்வுத் துறை ஆண்டு தோறும் நடத்தும் மேல்நிலை மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அரசு இணையதளம் மூலமாகவும், தனியார் இணையதளங்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்தது.

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.
2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

cps முறையினை ரத்து செய்திட கோரியும் மற்றும் மூன்று நபர் ஊதியக்குறை தீர்க்கும் பிரிவின் அறிக்கையினை உடனடியாக வெளியிட்டு இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை அளிக்க ஆவன செய்யுமாறு வேண்டிடும் விண்ணப்பம்.

பள்ளியில் பராமரிக்கப்படவேண்டிய முக்கிய பதிவேடுகள்

TET NEW SOCIAL SCIENCE STUDY MATERIAL .....................

மே மாதத்துக்கும் ஊதியம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

அரசுப்பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிவோர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை மே மாதத்துக்கும் வழங்க வேண்டும் என்று தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது சேவைகள் - வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் / ஆசிரியர்கள், ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு, நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு உத்தரவு.

டி.இ.டி., தேர்வு அறிவிப்பு: மாத இறுதிக்குள் வெளியீடு

"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்" என துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.

பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்" நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. 

தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி மாணவர் தர நிலைப் மாதிரி பட்டியல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்துக்கு 10 மார்க் போனஸ் அளிக்கும் முறை

பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 10  மதிப்பெண்  கூடுதலாக வழங்க (Grace Mark) பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

 இந்நிலையில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. இதில் கணித பாடத்திற்கு கொடுக்கப்பட்ட ‘ஆன்சர் கீயில்‘ 2 ஐந்துமார்க் வினாக்களுக்கு போனசாக 10 மார்க் கொடுக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மொத்தம் எழுத வேண்டிய

Monday, April 15, 2013

தங்கத்தின் விலை 20% சரிவு.. இப்போது வாங்காலமா?

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தற்போது 20% குறைந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் மிக உச்சியில் இருந்த தங்கத்தின் விலை கடந்த வாரம் 4.11% குறைந்திருக்கிறது.
உலகச் சந்தையினைத் தொடர்ந்து இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
தற்போது இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.28,000க்கு குறைந்திருக்கிறது. மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தங்கம் வாங்கலாமா?

10 ஆம் வகுப்பு கணித தேர்விற்கு கூடுதலாக 10 மதிப்பெண்?

பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 10  மதிப்பெண்  கூடுதலாக வழங்க (Grace Mark) பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

          பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு வழக்கத்திற்கு மாறாக ப்ளுபிரின்ட் படி இல்லாமலும், நேரடி கேள்வியாக இல்லாமலும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறையும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கருத்து கூறியிருந்தனர்.  

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - 2013 சமூக அறிவியல் பாடத்திற்கான விடைகள்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ( C.T.E.T) தேர்வு கால நேரம் 1:30 லிருந்து 2:30 மணி நேரமாக மாற்றம்

CLICK HERE download to CTET July 2013 - Time duration increased to complete CTET Exam 


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி 16-4-2013.

FOR ONLINE APPLY CLICK HERE

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் வெளியிட வாய்ப்பு


பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 2வது வாரத்தில் வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதை கணக்கில் வைத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை தேர்வுத் துறை துரிதப்படுத்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது.

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு அமைச்சுப் பணி - வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர், ஊழியர் சங்கத்தினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்

மதுரை: "ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்ரல் 17ல் துவங்குகிறது" என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.
மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஆசிரியர் கல்வி பாடத் திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு பின் மாற்றியமைக்கபடவுள்ளது. புதிய பாடத்திட்டங்கள், தற்கால கல்வி முறைக்கு ஏற்ப மாற்றப்படும். இதற்காக கல்வியாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் ஏப்.,17 முதல் 19 வரை நடக்கிறது.
அடிப்படை வசதிகள் இல்லாத பி.எட்., கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதில், சில கல்லூரிகள் மட்டுமே பதில் அளித்துள்ளன. அனைத்து கல்லூரிகளும் பதில் அளித்தவுடன், என்ன வகையான நடவடிக்கை எடுப்பது குறித்து "சிண்டிகேட்" கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும், என்றார்.

அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தை  அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த பழைய தெளிவுரை

Simplfied Active Learning Methodology ( SALM) - Complete Methodology

Sunday, April 14, 2013

TET - NEW SOCIAL SCIENCE PART VI STUDY MATERIAL

துறைத்தேர்வுகள் மே 2013 விண்ணப்பத்தேதி நீட்டிப்பு

துறைத்தேர்வுகள் மே 2013 விண்ணப்பத்தேதி நீட்டிப்பு
மே மாதம் நடைபெறும் துறைத்தேர்வு எழுதுவதற்கான தேதி நீட்டிப்பு.
தேதி: 22-4-2013 
மாலை 5-45 வரையில் நீட்டிக்கப்படுகிறது.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது?

மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், காலியாக உள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்து வருகிறது.

12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு NCERTஆல் 18 & 19ஆம் தேதி நடைபெற உள்ளது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் , சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் 250 தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 3ஆம்

Saturday, April 13, 2013

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


ஆன்லைனில் உள்ள படிக்கும் மாணவர்களின் விவரங்களை, துல்லியமாக ஏப்ரல், 18ம் தேதிக்குள் சரி பார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும், ஆன் -லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதில், 22 லட்சம் மாணவர்களின் விவரங்கள் விடுபட்டுள்ளன.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!