

Wednesday, July 31, 2013
அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதம் உறுதி
1 முதல் 4ஆம் வகுப்பில் 100க்கு மேல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் SABL அட்டைகள் வழங்க விவரம் கோரப்பட்டுள்ளது.
கல்வி கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கெடு
கல்வி கட்டண விபரங்களை ஒரு மாதத்திற்குள் அந்தந்த பள்ளியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளி தொடர்பான அனைத்து விவரங்களையும் தங்களது பள்ளி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சென்ட்ரல் போர்டு ஆப் செக்கண்டரி எஜூகேஷன் (சிபிஎஸ்இ) உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியரிடம் இருந்து பெறப்படுகின்ற கல்வி கட்டணம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி, இதர விபரங்கள்,
பி.எட். கல்லூரிகளின் வேலை நாள்கள்180 லிருந்து 200 வேலை நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது,மேலும் பி.எட். படிப்பில் புதிய பாடங்கள்
டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி.,
வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.
முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு
பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் இயற்பியல், கணித ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள¢ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்படும்.
ஆரம்பப் பள்ளியின் அடிப்படைப் பிரச்னைகள்-தினமணி கருத்துக்களம்
ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும், 16 வகை இலவசங்கள் கொடுத்தும், தேவையான ஆசிரியர்களைத் தகுதி அடிப்படையில் நியமித்தும் அரசுப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயரவில்லை. அத்துடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது.
Tuesday, July 30, 2013
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் அவர்களும், திரு. தேவராஜன் அவர்கள் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனராகவும், தொடக்கக் கல்வித் துறை இயக்குநராக திரு.இளங்கோவன் அவர்களையும், திரு.சங்கர் அவர்களை அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனராகவும்,
சென்னை:சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருவதால், சிக்குவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 122 துவக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 36 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள், 30 மழலையர் பள்ளிகள், ஒரு உருது மேல்நிலை பள்ளி, ஒரு தெலுங்கு மேல்நிலை பள்ளி என, மொத்தம் 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், 5,000க்கும் அதிகமான ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு
பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகளை உடனுக்கு உடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அரசு உத்தரவு
பாடப்புத்தக அட்டையில் இருந்தும் கேள்விகள்: டி.இ.டி., தேர்வுக்கு நிபுணர்கள் ஆலோசனை
பள்ளிக்கல்வி - மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்க உத்தரவு.
Monday, July 29, 2013
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இப்பணியி லிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.
2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்?
"டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித் துறை, "டிஸ்மிஸ்' செய்தது.
5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை முடிவா?
உடனடியாக மாணவர் என்னிக்கை 5க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கவும், காலம் செல்லச் செல்ல 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கவும் முடிவெடுத்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பணியினை கல்வித்துறை முடுக்கிவிட்டிருப்பதாக அலுவலக வட்டாரங்க்ள தெரிவிக்கின்றன.
இரட்டைப்பட்டம் வழக்கு - நீதிமன்ற விசாரணை தாமதம் ஏன்?
Sunday, July 28, 2013
2013 - 14 ஆம் ஆண்டிற்கான Ist std to VIIIth std -CCE முதல் பருவம் -வாரவாரி பாடதிட்டம் (புதிய பாடங்களின் படி) ..... TERM I SYLLABUS FOR I TO VIII STD ....
இரண்டாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு
நான்காம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
5முதல் 8 வகுப்பு வரை மொழிப்படங்களில்(தமிழ்& ஆங்கிலம்) கட்டுரை மாதத்திற்கு ஒன்று எழதப்பட்டு பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பல வருடங்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஏராளமானவர்கள் பணியாற்றினார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் முறையிட்டனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டம் பல வருடங்களாக நடந்தது. பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
G.O. No. 237 Dt.22.7.2013. Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம்.
G.O. No. 237 Dt.22.7.2013. Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம்.
நன்றி திரு.Thomas Rockland
நம் நண்பர்கள் தொடர்ந்து நம்மிடம் இது குறித்து கேட்டுவருவதால் இதுபற்றிய ஓர் விளக்கத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of
basic pay to employees on award of Selection Grade / Special Grade in
the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised
scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது.
Saturday, July 27, 2013
காப்போம் அரசுப் பள்ளிகளை! சி. சரவணன்
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவசச் சீருடைகள், இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவசப் பாட நூல்கள், தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு.
அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி: தமிழ் வழி அட்டை மூலம் பாடம் நடத்தும் பரிதாபம் - dinkaran
தமிழக அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் பணி நியமனம்: ஆதிதிராவிடர் துறை முடிவு
தலைமை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ள பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களை நியமிக்க, ஆதிதிராவிடர் நலத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பணி நியமனம், 15 நாளில் நிறைவு பெறும்.
சத்துணவு முட்டைகளை விற்றால் "சஸ்பெண்ட்"
சத்துணவு மையங்கள், பள்ளிகளில் வழங்கப்படும் இலவச முட்டைகளை, விற்பவர்களை உடனடியாக "சஸ்பெண்ட்' செய்ய பி.டி.ஓ., க்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளி டிசியுடன் சேர்த்து மாணவரின் திரள் பதிவேடு வழங்காத தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
பள்ளியை விட்டு செல்லும்போது, மாற்றுச்சான்றிதழுடன் (டிசி), மாணவரின் திரள் பதிவேடு வழங்காத தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை எச்சரித்துள்ளது.எஸ்எஸ்ஏ மூலம் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் கற்றல் குறைபாடு உள்ளவர்கள் கண்டறியப்பட உள்ளனர். இதற்காக 2 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் மதிப்பீடு தேர்வு நடக்க உள்ளது.
III MEN COMMISION IMPORTANT GO....lமூன்று நபர் குழுவில் வெளியிடப்பட்ட முக்கிய சில GOக்களின் தொகுப்பு............
click here to GO.237 One additional increment 3%of basic pay to Employees award for selection/spl grade.
பள்ளிக்கல்வி - மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தமிழ் பண்டிட், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கிரேடு - I / II, இளநிலை விரிவுரையாளர், TTI முதல்வர், DIET விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தர ஊதியம் மாற்றி தமிழக அரசு உத்தரவு
GO.263 SCL EDN DEPT DATED.22.07.2013 - Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay of certain categories in School Education / Teacher Education Research and Training Departments – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -- Orders-Issued.
RE - OPTION அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. G.O. 240 Dt.22.7.2013
எந்தப் படிப்பை முடித்தால் பி.எட். படிப்பில் சேர முடியும்?
Friday, July 26, 2013
சத்துணவுக்காக சப்ளை செய்யப்படும் தரமற்ற பொருட்களை திருப்பி அனுப்புங்கள்
6-வது ஊதிய குழு அறிவிப்பு ஆசிரியர் கூட்டணி அதிருப்தி
வேடசந்தூர்:இடைநிலை ஆசிரியரின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.
வேலூர்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் முக்கிய அறிவிப்பு --------அனைத்து தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இன்று 27.07.2013 (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளும் முழு வேலைநாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது> > >
பள்ளிக்கல்வி - மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தமிழ் பண்டிட், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கிரேடு - I / II, இளநிலை விரிவுரையாளர், TTI முதல்வர், DIET விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தர ஊதியம் மாற்றி தமிழக அரசு உத்தரவு
மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இன்று 47 அரசாணைகள் தமிழக அரசு வெளியீட்டுள்ளது
இன்று வெளியிட்ட அரசாணைகள் பதிவிறக்கம் செய்ய...
EMISன் கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் பதிவு செய்யவும் / விவரங்களை சரிப்பார்த்து 31.07.2013 -க்குள் முடிக்க உத்தரவு - பதிவுகள் உள்ளீடு செய்ய இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர், நூலகர் பணி
கேந்திய வித்யாலயா சங்கதன்(கே.வி.எஸ்) என்பது இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னிச்சையான அமைப்பாகும். கே.வி.எஸ் பள்ளிகளில் நாடு முழுவதும் 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் RE - OPTION அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. G.O. 240 Dt.22.7.2013
அதாவது 1.1.2006 டு 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.
பிளஸ் 2 உடனடி தேர்வு 20.5 சதவீதம் பேர் "பாஸ்'
பிளஸ் 2 உடனடித் தேர்வில், வெறும், 20.5 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்று, அதே கல்வியாண்டில், உயர்கல்வியை தொடரும் வகையில், உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த தேர்வுக்கு தயாராக, போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், மாணவர்கள், தேர்வை சந்திக்க வேண்டியுள்ளது.
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
CLICK HERE TO SEE RESULT
சம்பள உயர்வில் பெரிய மாற்றம் இல்லை: ஆசிரியர்கள் கருத்து
"சம்பள உயர்வில், ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில், மாற்றம் எதுவும் இல்லை' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
Thursday, July 25, 2013
மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் மேலும் அரசாணைகள் வெளிவர வாய்ப்பு உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைப்பட்டம் வழக்கு வருகிற திங்கள்கிழமை (29.7.13) விசாரணைக்கு வரும்
சென்னையில் அரசு ஊழியர்கள் 150 பேர் கைது.
அரசு பள்ளிகளில் வருகை பதிவு முறையாக கண்காணிக்க உத்தரவு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு
சிவகங்கை: ""அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதி வேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும்,'' என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
Wednesday, July 24, 2013
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.
மூன்று நபர் குழுவின் அறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் / ஜூலை 2013, மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வுகள் முடிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.
6th Pay Commission - 3 Member Committe Report Submit- Expected GO | 6-வது ஊதியக்குழு குறைபாடுகளுக்காக அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கை சமர்பிப்பு - விரைவில் அரசாணை வெளியாகும் என எதிர்பார்ப்பு - ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு
அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு
. இளநிலையில் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் ஒரு வருட கூடுதல் படிப்பு, பி.ஏ. வரலாறு, பி.எஸ்சி.-யில் கணிதம், கணினி அறிவியல், கணினி அறிவியல் நேரடி 2-ஆம் ஆண்டு, பி.எஸ்சி. சைக்காலஜி, பி.சி.ஏ, பி.சி.ஏ நேரடி 2-ஆம் ஆண்டு, பி.காம்., பி.காம் நேரடி 2-ஆம் ஆண்டு, பி.காம் சி.ஏ., பி.காம்., சி.ஏ நேரடி 2-ஆம் ஆண்டு பாடப் பிரிவுகளுக்கும்,
Tuesday, July 23, 2013
பிளஸ் 2 உடனடி தேர்வு முடிவுகள் தாமதம் கேள்விக்குறியாகும் 50,000 மாணவர்கள் உயர்கல்வி
7 நாளும் திறந்திருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் குறைப்பு
ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்
சென்னை: தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களேஉள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலைவெளியிட்டுள்ளது.
தபால், தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலை மூலம் எம்.பில்., பிஎச்.டி.,: அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
தபால், தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலை மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை, கல்லூரிகளில் விரிவுரையாளராக நியமிக்கத் தகுதியில்லை" என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் 17000 பள்ளிகளில் 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர் - dinakaran
தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.
Monday, July 22, 2013
CPS திட்டத்தில் செலுத்தப்படும் சந்தா தொகையை பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதை எதிர்த்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு வார காலத்திற்கு தடையாணை பெற்ற விவரத்தை குறிக்கும் தடையாணை நகலை உங்களுக்காக வெளியிடுகிறோம்.
சத்துணவுக்கூடங்களில் சோதனை தினமணி.
‘கொடிது, கொடிது, வறுமை கொடிது, இளமையில் வறுமை அதனினும் கொடிது’ என்று பாடினார் அவ்வை பிராட்டியார் அன்று. அப்படி வறுமையால் வாடும் இளம் பருவத்தினருக்கு அவர்களின் வறுமையே கல்வி கற்க தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய எண்ணத்தில், மறைந்த பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார். நான் சிறு வயதில் பசிக்கொடுமையை அறிந்தவன் என்று பகிரங்கமாகவே சொல்லிய மறைந்த முதல்–அமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அந்த கொடுமையை தமிழ்நாட்டில் உள்ள எந்த மாணவனோ, மாணவியோ அனுபவிக்கக்கூடாது என்று கருணையோடு தொடங்கியதுதான் ‘சத்துணவு திட்டம்’.
ஜூலை-31-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜூலை 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினவிழா பள்ளிகளில் கொண்டாடப்படுவது தொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநரால் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல்லை; ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்
ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளக்காரர்களும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
சுதந்திர தினத்தன்று, அரசு பள்ளி மற்றும் விடுதி மாணவ, மாணவியர், புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, அவர்களுக்கு இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில், மதியம் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, அரசு சார்பில், இலவச சீருடை வழங்கப்படுகிறது. அதேபோல், அரசு விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை வழங்கப்படுகிறது.
அரசு பொது தேர்வில் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தை ஐகோர்ட்டு எடுத்துக்கொள்ள முடியாது: நீதிபதிகள் உத்தரவு:
மதுரையை சேர்ந்தவர் கே.கீதா. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்னுடைய மகன் அருண் பிளஸ்–2 பொது தேர்வு எழுதினான். உயிரியல் தேர்வில் அ பிரிவில் 13–வது கேள்விக்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், சரியான விடையில் எழுத்து பிழை இருந்தது. இதனால் சரியான விடையை என் மகனால் தேர்வு செய்ய முடியவில்லை. எனவே என் மகனுக்கு ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறைக்கு உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
குளறுபடிகளை நீக்கி கற்பித்தல் முறையை தெளிவுபடுத்த வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - dinakaran
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் கற்பித்தல் முறையில் உள்ள குளறுபடிகளை நீக்கி, தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; நிதிச் செயலாளர், இயக்குநர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆஜராக தலைமை நீதிபதி உத்தரவு.
பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 01.08.2013 & 02.08.2013 அன்று நடைபெறுகிறது.
இரட்டைப்பட்டம் சார்பான நீதிமன்ற விசாரணையின் தற்போதைய நிலை?
பொதுவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பல நீதியரசர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தலைமை நீதிபதி மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு பொறுப்பாக சென்ற வாரம் முழுவதும் மதுரையில் இருந்தார் எனவும், எனவே இந்த வாரம் கட்டாயம் விசாரணைக்கு வரும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.
Sunday, July 21, 2013
ஆங்கிலமொழிவழிக் கல்வி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமா?'' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில-தினமணி
ஆசிரியர் தகுதி தேர்வு மேல் முறையீடு: கருணாநிதி கண்டனம்
தொழில்நுட்ப கோளாறால் தவிப்பு டிஆர்பி போட்டி தேர்வு 8,000 பேர் எழுதவில்லை
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு இரண்டாம் கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 5ம் தேதி தொடக்கம்
பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்பட்ட 50 ஆயிரம் முட்டைகள் அழுகல்
சத்துணவு மையங்களில் 20 ஆயிரம் காலி பணியிடங்கள் சத்துணவு வழங்குவதில் சிக்கல்
கனமழை : கூடலூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தரம் உயர்ந்த பள்ளிகளில் காலியிட விதிமுறை தளர்வு?
ஒரு பணியிடத்திற்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்
அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 90 ஆயிரம் அதிகரிப்பு
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்: தனியார் பள்ளிகளில் 18,946 மாணவர்களுக்குச் சேர்க்கை
Saturday, July 20, 2013
சென்னை மாவட்டம் – திருவல்லிக்கேணி ஓன்றியம் – அரசு நிதி உதவி M.O.P. வைணவ துவக்கப் பள்ளியில் அசத்தல் --- “காலை உணவு திட்டம்” – (PROJECT AHAR)-- துவக்கம்
கவுன்சிலிங்கை புறக்கணித்த ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி
குழந்தைகள் பள்ளிகளில் சாப்பிட பெற்றோர் தடை
Friday, July 19, 2013
பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்
தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வேண்டும் - DINAKARAN
தகாத வார்த்தைகளில் திட்டிய தலைமை ஆசிரியர்: மனமுடைந்து விஷம் குடித்த பள்ளி ஆசிரியை - நாளிதழ் செய்தி
பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,800 பேர் பணி நியமனம்
Thursday, July 18, 2013
கூடுதல் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை
2015-ல் கல்வி அறிவு 80 சதவீதம் இலக்கு: அமைச்சர்
பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் கருணை அடிப்படையில் நியமனம்
தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான நடைமுறைகளை ஆராயும் குழுவிடம் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி / தமிழாசிரியர் கழகம் சார்பில் அளித்த கடிதத்தின் விவரம்
அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தை அளிக்க கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான நடைமுறைகளை ஆராயும் குழுவிடம் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி / தமிழாசிரியர் கழகம் சார்பில் அளித்த கடிதத்தின் விவரம்
CCE - E-Register for CCE for I to IX Std lமுப்பருவ மதிப்பீட்டு முறை E-Register for CCE எனப்படும் Excel file வெளியீடு.
1 - 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது. மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.
2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும், நீக்கவும் வசதி உண்டு.
4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.
5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டினையும் அறிய முடியும்.
To Download CCE - 9th Std Tamil Medium Click Here...
To Download CCE -9th Std - English Medium Click Here...
To Download CCE -1 to 8th std -Tamil Medium Click Here...
புதிய பாடதிட்டத்தில் கற்பித்தல் என்பது இனி கிடையாது!
ஆசிரியர்கள் பணி என்பது முன்பு கற்பிப்பவர்தான்.
ஆனால் தற்போது வந்துள்ள புதிய கல்விமுறைப்படி மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வி வழிகாட்டிதான் என்று தூத்துக்குடியில் நடந்த பயிற்சியில் தகவல்
தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலமாக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
Wednesday, July 17, 2013
கலந்தாய்வை யார் நடத்துவது? என்று போட்டா போட்டி பி.எட். மாணவர் சேர்க்கை தாமதம் ஆவதால் மாணவர்கள் தவிப்பு:
பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை யார் நடத்துவது? என்று கல்லூரி கல்வி இயக்ககத்திற்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டா போட்டியால் மாணவ–மாணவிகள் பரிதவிக்கிறார்கள்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க புதிய முறை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 532 பேர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துவிட்டனர். 8 ஆயிரம் பேர் ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க முயற்சி மேற்கொண்டும் அதில் வெற்றிபெறவில்லை. 27,500 ஹால்டிக்கெட்டை எடுப்பதற்கான முயற்சிகூட செய்வில்லை.
SSLC STUDY MATERIAL | PLUS TWO STUDY MATERIAL |
SYLLABUS(UP DATED SOON) | |
உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com |

முக்கிய பகிர்வுகள்
#SLAS QUESTION PAPERS DOWNLOAD - 2014-15 - III STD TO V STD CLICK HERE TO VIEW ......
#SLAS QUESTION PAPERS DOWNLOAD 2013-14,14-15 VIII STD ALL QUESTION PAPERS AVL
Ø SSLC KEY ANSWERS – 2015 DOWNLOAD
Ø HSC KEY ANSWERS – 2015 DOWNLOAD

முக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.
நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும் |
join face book :
Follow @sureshedn
thank you!
