Friday, October 31, 2014

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் : தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை

கடந்த மாதம் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்த முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள், தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. முதல் தாள், இரண்டாம் தாள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 89 பேர் மட்டுமே!

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்து முறையாக நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்

இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில் 2014-15ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், நீதிமன்ற வழக்கின் இடைகால தடையால் இன்னும் உரிய பணியிடத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியில் அண்மையில் நீதிமன்ற தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

SCHOOL EDUCATION - PAY ORDER FOR 13 HS HM / 210 BT & 500 PGT / 230 BT & 500 PGT / 1200 BT & 200 PET / 675 PGTs FOR SEP & OCT 2014

SSLC -Mar / Apr - 2015 -Private Application -Press Release Notification

350 டன் பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி; சி.இ.ஓ., உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு

350 டன் எடையுள்ள பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி செய்ததாக, சென்னை முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது தி.மு.க., ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடபுத்தங்களை, மாணவர்களுக்கு விநியோகம் செய்ய அனுமதிக்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், அவரது திட்டங்கள் குறித்தும், பாடபுத்தகத்தில் இடம்பெற்றதாக காரணம் கூறப்பட்டது.

பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு

கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக்கூடாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.

டி.ஆர்.பி., அறிவிப்பு

அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி, வேலை வாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு இயக்குனரகத்தால் பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, பரிசீலனை செய்யப்படுவர்.

அலுவலக நடவடிக்கையில் உறவினர்கள் தலையீடு அமைச்சரை எச்சரித்த கல்வித்துறை செயலாளர்: தலைமை செயலகத்தில் பரபரப்பு

தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம்  புதுப்பிக்கும் பணி தற்போது நடக்கிறது. அரசு அறிவித்துள்ள தகுதிகள்  உள்ள பள்ளிகளுக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதால், தனியார்  பள்ளி நிர்வாகங்கள் கலக்கத்தில் உள்ளன. வரும் மார்ச் மாதம் பொதுத்  தேர்வு தொடங்க உள்ள நிலையில் அங்கீகாரம் புதுப்பிப்பதில் மெட்ரிக்  பள்ளிகள் நடத்துவோர் வேகம் காட்டி வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 10    புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 11    வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 15    திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் வியாழக்கிழமை நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!

பள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனை சோதித்த அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர் பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார்.

Thursday, October 30, 2014

பள்ளிக்கல்வி - பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

புதிய சி.பி.எஸ்.இ., பள்ளி விதிமுறைக்கு பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய ஆசியர் பணியிடங்கள் இரண்டாவது பட்டியல் வருவது உறுதி முதலமைச்சர் தனிப்பிரில் அளிக்கப்பட்ட பதில் மகிழ்ச்சியான தகவல்

தேனியை சேர்ந்த கே.முத்துராஜ் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அளித்த மனுவின் மூலம் முதலைமைச்சர் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2011 முதல் 2013 வரை உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்பப்பட்டது போக மீதம் உள்ள பணியிடங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தேர்வர்களை கொண்டு நிரப்பப்படும்

10 & 12 - காலாண்டுத் தேர்வு - 60 சதவீதத் தேர்ச்சிக்கு குறைவாக உள்ள பள்ளிகள் மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை

காலாண்டுத் தேர்வு முடிவு எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது.

Wednesday, October 29, 2014

2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 3O- ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2014 அன்ற்றைய முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு 31.10.2014 காலை 9மணிக்கு இனையதள வாயிலாக நடைபெறவுள்ளது

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறவுள்ளது: தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள், 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள்,

ஆசிரியர் தகுதித் தேர்வு: 3000 பணியிடங்களுடன் புதிய பட்டியல் நவம்பரில் வருகிறது

3000 இடங்களுக்குள் நவம்பர் மாதம் புதிய பட்டியல் வெளியாக உள்ளது இவை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை மட்டும் கொண்டு நிரப்படுவதாக தகவல்கள் கூறுகிறது.

Monday, October 27, 2014

"பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில் மாற்றம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

"பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில்கொண்டு வரப்பட்ட "பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில், மாற்றம் செய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.சரவணக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவன். வழக்குரைஞராகப் பயிற்சி செய்து வருகிறேன்.

TNTET NEWS - சலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் தடை கோரி வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. உசிலம்பட்டி ஜீவரத்தினம் தாக்கல் செய்த மனு: பி.லிட்., -பி.எட்.,(தமிழ் பாடம்) படித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 91 மதிப்பெண் பெற்றேன்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்பட்டோர், மிக பிற்பட்டோர், ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி, தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது. இதனால், தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 90 லிருந்து 82 ஆக குறைக்கப்பட்டது. அரசு உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது. ஐகோர்ட் பெஞ்ச், 'அரசு உத்தரவு செல்லாது,' என செப்.,26 ல் உத்தரவிட்டது. ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் நலத்துறை, சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகளில், சலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், அப்பட்டியலில் உள்ளனர். சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் மற்றும் பணி நியமனம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல்

லஜபதிராய் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல் : புது நடைமுறையால் திணறல்

அரசு ஊழியர்ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதளசம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்முறையில் சம்பளம் வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது. ''ஊழியர்களுக்கு முறையான பயிற்சி மற்றும்'பாஸ்வேர்டுவழங்காத நிலையில் சம்பளம் கிடைப்பதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது,'' என அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன்தெரிவித்துள்ளார்.

Sunday, October 26, 2014

மழை விடுமுறை

கனமழை காரணமாக திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
ஈரோடு மாவட்டம் விடுமுறை . மழை காரணமாக பள்ளி கல்லூரிகள் இன்று விடுமுறை அறிவிப்பு

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாதுபிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மதிப்பெண் சான்றிதழை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்.பள்ளிக்கல்வி இயக்குரின் உறுதியை ஏற்று அக். 29 -ம் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகிதம் திருத்தியமைப்பு -தேர்வு நிலை / சிறப்புநிலை பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதம்தொடர்பான தெளிவுரை

IGNOU-Term-End Examination Form -2014 december

Tamil Nadu HSC (+2) Exam Timetable 2015

Date Subjects

3rd March 2015 Tamil 1st paper

5th March 2015 Tamil 2nd paper

6th March 2015 English 1st paper

7th March 2015 English 2nd paper

ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும்உள்துறைஅமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்குஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும்கைரேகை,

Saturday, October 25, 2014

10ம்வகுப்பு பொதுத்தேர்விற்கு புதிய மையங்கள்: அக்.,30க்குள் பரிந்துரை : டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

விருதுநகர்: "10ம்வகுப்பு பொதுத்தேர்விற்கு கல்விமாவட்ட வாரியாக புதிதாக மையங்கள் அமைப்பது தொடர்பான பரிந்துரையை அக்.,30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு(டி.இ.ஓ.,) அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். அடுத்தாண்டு மார்ச்,

'வண்ண வாக்காளர் அடையாள அட்டை எல்லோருக்கும் கிடைக்குமா' : தேர்தல் அதிகாரி பதில்

மதுரை : 'எல்லா வாக்காளர்களுக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படுமா' என்ற அரசியல் கட்சிகளின் கேள்விக்கு, தேர்தல் அதிகாரி பதிலளித்தார். மதுரையில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக, தேர்தல் பார்வையாளர் வெங்கடேசன் தலைமையில், சர்வ கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு


சென்னை : அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில்,

பள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட்.,கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற இயலாத நிலையில் எம்.பில் / பி.எச்.டி / பிஜிடிடிஈ இவற்றில் ஏதேனும் 2 கல்வித் தகுதிக்கு இரு ஊக்க ஊதியம் வழங்கும் பட்சத்தில் பயன் பெறக்கூடிய ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு

நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை ஒரேநாளில் நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்

தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் . .

தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான ஆசிரியர் இயக்கக் குரலிலும், நேர்முகமாகவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வந்தோம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய TATA சங்கம் வழக்கு தொடர முடிவு

இன்று (25.10.2014) TATA  சங்கத்தின் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .அதில் முக்கிய தீர்மானமாக புதிய ஓய்வூதிய
திட்டத்தை இரத்து செய்து

தற்பொழுது பொழிந்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தத்தம் தலைமையிடத்தில் தங்கியிருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

652 Computer Science Cut Off Seniority Date Sc 24.4.2008.

SCA - 20.12.2010.

ST - 3.9.2011.

BCM- 17.8.2009

கணினி பயிற்றுனர் பணிக்குபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

கடலூர்:பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள கணினிபயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளதுஇது குறித்துகலெக்டர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு;தமிழக பள்ளிகல்வித்துறையில் காலியாக உள்ள 652 தொழிற் கல்வி கணினிபயிற்றுநர் பணி காலியிடங்கள்

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி..,) படி, 'எட்டாம்வகுப்பு வரை கட்டாய தேர்ச்சிஎன்ற நிலையால்அந்தந்தவகுப்பிற்குரிய திறனை பெறாமல்அடுத்தடுத்த வகுப்புகளுக்குமாணவர் வந்துவிடுவதால்பெரிய வகுப்புகளில்மாணவர் திணறும்நிலை
ஏற்பட்டுள்ளது.

பிளஸ்2 பயிலாமல் பட்டயப் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உத்தரவு

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும்.

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங்  நடத்திநிரப்ப வேண்டும்,' எனதமிழ்நாடு முதுநிலை  பட்டதாரி ஆசிரியர்  கழகம் வலியுறுத்தியது.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது

Friday, October 24, 2014

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை இல்லை : தொடர்ந்து லீவு அறிவித்ததன் எதிரொலி

கன மழை காரணமாகபெரும்பாலான மாவட்டங்களில்ஒருவாரமாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாகஇழப்புஏற்பட்ட பள்ளி வேலை நாட்களை ஈடு செய்யஇனிவாரந்தோறும்,சனிக்கிழமைகளில்பள்ளிகளை நடத்ததலைமை ஆசிரியர்கள்முடிவு செய்துள்ளனர்.

தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை.

தொட்டக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலக திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜுன் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை.

தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்

அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்குமிடையே சில வேறுபாடுகள்

1.அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு ஆசிரியர்களுக்கு17 நாட்கள் மட்டுமே.

2.ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு மட்டுமே கோடை
விடுமுறைப்பணியாளர்கள்.

பேராசிரியர்களின் சான்றிதழ்களை திரும்பத் தராமல் அலைக்கழிக்கும் தனியார் கல்லூரிகள்

பெரும்பாலான தனியார் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு, அவசரத் தேவையின்போது தர மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சில கல்லூரிகள், சான்றிதழ்களைத் திரும்பக் கேட்பவர்களின் அவசரத்துக்கு ஏற்ப பிணையத் தொகையை உயர்த்தி வாங்கிக்கொண்டு, சான்றிதழ்களைத் தருவதாகவும் தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஆண்டு நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்குதகுதியான தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட, தேர்வுத்துறை சேவை மையங்களில், ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் கழிப்பறை தேவை குறித்து பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தேவை குறித்த இறுதி பட்டியல் தயாரித்து அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதியின்றி உள்ளது. குறிப்பாக நடுநிலையில் இருந்து தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவியருக்கு மட்டும் கழிப்பறை இருந்தாலும் போதிய வசதிகளின்றி உள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறையால் சரிந்தது மாணவர் சேர்க்கை

அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்தது.

கொத்தபுரிநத்தம், அரசு நடுநிலைப் பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள், கடந்த 4 மாதங்களுக்கு

4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

 வேலூரில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று பதவி ஏற்றார். 4 பேர் முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- கரூர் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பொன்னம்மாள் பதவி உயர்வு பெற்று, கரூர் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Thursday, October 23, 2014

ஜனவரி- 2015 ல் அகவிலைப்படி எவ்வளவு ஓர் அலசல் ?வெறும் 7%மட்டுமே???

Now, the next episode begins...'Expected DA from January 2015'


It is highly unlikely that there will be a two-digit DA hike in the next two instalments 
(January 2015 and July 2015). Kindly keep in mind the fact that despite a 6 point 
increase of the AICPIN from 246 to 252 for the month of July 2014, there was 
hardly an impact. Even if it increases by 3 points over the next five months, the 
DA would increase to 9% only. It is impossible for AICPIN to constantly increase in future. 

CTET-89 CANDITATES PASSED IN TAMIL NADU

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!