TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Friday, February 28, 2014

TET NEWS - PAPER II 5% RELAXATION SOME MORE DETAILS COMMUNITY WISE PASS % OF PAPER II 5% RELAXATION CANDIDATES (82-89)


COMMUNITY PASS % 

BC 13371 ( 53.09%)
BCM 481 (1.91%)
MBC 6729 (26.72%)
SC 4058 ( 16.11%)
SCA 458 (1.81%)
ST 80 ( 0.31%) 


TOTAL = 25,187 


PH - DETAILS IN (82-89) PASSED CANDIDATES

PASS % OF PAPER II 5% RELAXATION CANDIDATES (82-89)

visually impaired (VI) 


BC-49
BCM-2
MBC-25 

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது அதிகாரிகள் திடீர் பாசமழை

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டம் என, தீவிரம் காட்டி வருகின்றனர். மத்திய இடைநிலை ஆசிரியருக்கு இணையாக, தமிழக இடைநிலை ஆசிரியருக்கு சம்பளம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோருவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, வரும், 6ம் தேதி, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துஉள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள், முதல்வரின், ஸ்ரீரங்கம் தொகுதி யில், போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதேபோல், வேறு சில சங்கத்தினரும், போராட்ட களத்தில் குதித்துள்ளனர். ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால், தமிழக அரசின் கோபத்திற்கு, தாங்கள் ஆளாக நேரிடும் என்பதால், போராட்டத்தை அடக்குவதற்கான வேலைகளில், கல்வித்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

EXAM TIPS - தேர்வு நேரத்தில் பெற்றோர் உதவுவது எப்படி?


மார்ச் 3 ல் பிளஸ் 2தேர்வுகள் துவங்குகின்றன. பள்ளிப் படிப்பின் நிறைவாக நடக்கும் இந்த பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் "வாழ்க்கை பாதையை' தீர்மானிக்கிறது. உயர் கல்விக்கு பிளஸ் 2 படிப்பே அடிக்கல். இந்த தேர்வை பதட்டம் இல்லாமல் எதிர்கொள்ள ஏதுவாக, மாணவர்களுக்கான, பெற்றோருக்கான "டிப்ஸ்கள்' இந்த பகுதியில் இடம் பெறுகிறது. "நானும் என் மனைவியும், என் மகளுக்கு தோழர்களாக இருந்து அவரின் தேவைகளை நிறைவேற்றினோம்," என கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், மாவட்ட 'ரேங்க்' பெற்ற மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ்.பி.ஓ.ஏ.,

சி.பி.எஸ்.இ., பொது தேர்வு இன்று துவக்கம்


சென்னை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.
தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தில், 1,256 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர்.

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு, முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 4,524 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், 671 சங்கங்கள், தொடர் லாபத்திலும், 3,442 சங்கங்கள், சில ஆண்டுகளில், லாபம் ஈட்டியும், 411 சங்கங்கள் நஷ்டத்திலும், இயங்கி வருகின்றன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசு அறிவித்த, அகவிலைப்படியை வழங்க, முதல்வர் உத்தர விட்டுள்ளார். பணியாளர்கள், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு, ஐந்த ஆண்டுகள் ஆகிவிட்டதால், ஊதிய விகிதத்தை, திருத்தி அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு, முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 4,524 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், 671 சங்கங்கள், தொடர் லாபத்திலும், 3,442 சங்கங்கள், சில ஆண்டுகளில், லாபம் ஈட்டியும், 411 சங்கங்கள் நஷ்டத்திலும், இயங்கி வருகின்றன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசு அறிவித்த, அகவிலைப்படியை வழங்க, முதல்வர் உத்தர விட்டுள்ளார். பணியாளர்கள், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு, ஐந்த ஆண்டுகள் ஆகிவிட்டதால், ஊதிய விகிதத்தை, திருத்தி அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு


புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை, நேற்று நள்ளிரவு முதல், சென்னையில், லிட்டருக்கு, முறையே, 77 மற்றும் 57 பைசா விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம், பெட்ரோல், லிட்டருக்கு, 76.48 ரூபாய்க்கும், டீசல், 59.17 ரூபாய்க்கும் விற்கப்படும். இதில், விற்பனை வரி அல்லது "வாட்' வரிகள் சேர்க்கப்படவில்லை.

TET NEWS - சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மையங்களின் விவரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு உள்ளது.இடைநிலை ஆசிரியர் தேர்வில், 5 சதவீத சலுகைக்குப்பின்,

பொதுத்தேர்வு மையங்களுக்கு மின்தடை விலக்கு : மின்துறைக்கு கலெக்டர்கள்,கல்வித்துறை கடிதம்


விருதுநகர்: பிளஸ்2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மையங்களுக்கு, மின்தடையில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, கலெக்டர்கள், கல்வித்துறை சார்பில், மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 'சிகரத்தை நோக்கி' வழிகாட்டி நிகழ்ச்சி

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான 'சிகரத்தை நோக்கி' வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் தமிழரசி தலைமை தாங்கினார்.

5%மதிப்பெண் தளர்வுக்கு பிறகு தேர்ச்சிபெற்றவர்கள் மாவட்ட வாரியாக தாள் 2 ல்

1 Ariyalur
TOTAL 361 BC 120 33.24% 1BCM 0.28% MBC 183 50.69%SC 53 14.68% SCA3 0.8%ST 1 0.3%

2 Chennai
TOTAL 1097 BC 705 64.27%BCM 20 1.82%MBC 206 18.78%SC 154 14.04%SCA 10 0.9%ST 2 0.2%

3 Coimbatore
TOTAL 850 BC 543 63.88% BCM 19 2.24% MBC 161 18.94% SC79 9.294% SCA44 5.2%ST 3 0.4%

4 Cuddalore 

TOTAL888 BC 326 36.71%BCM 21 2.36% MBC 362 40.77% SC174 19.59%SCA 3 0.3%ST 2 0.2%

5 Dharmapuri 
TOTAL1284BC 384 29.91% BCM 19 1.48%MBC 618 48.13%SC 237 18.46%SCA 15 1.2% ST9 0.7%

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்து வழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி.


இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க மீண்டும் ஒரு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன.

Thursday, February 27, 2014

அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்துவது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி ......சிறப்பு விடுப்பு...திறமை உள்ளவர்களுக்கு எடுத்து கூறுங்கள் ....கலந்து கொண்டு வெற்றி பெறட்டும்.நாள் :04.03.2014 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

முழு மதிப்பெண் அள்ளுவது எப்படி? : கடந்தாண்டு சாதனை மாணவி ராஜேஸ்வரியின் "டிப்ஸ்'


என்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என, தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில், மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி: பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு, தேர்வு அறைக்குள் மாணவர்கள் நுழைந்தாலே, பாதி வெற்றி உறுதி. ஒரு மார்க் வினாக்களுக்கு வேகமாக எழுதுவதன் மூலம், நெடுவினாவிற்கு தேவைப்படும் கூடுதல் நேரத்தை சரிக்கட்டலாம். எனவே, முடிந்த வரை இப்பகுதியை விரைவில் முடிக்க வேண்டும். இப்பகுதியில், முழு மதிப்பெண் பெறுவது மிக முக்கியம்.

முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது : தனியார் பள்ளிகளுக்கு, தேர்வு துறை, "செக்'



கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர் (ஓ.ஏ.,) இருப்பார்.
தற்போது, பள்ளி முதல்வரில் இருந்து, ஓ.ஏ., வரை, எவருக்கும் அனுமதி கிடையாது. வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார். தேர்வு துவங்குவதற்கு முன், பள்ளி வளாகத்திற்குள், நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, நுழைய அனுமதி கிடையாது.

EXAM TIPS - தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயனுள்ள ஆலோசனைகள்

சென்னை: பிளஸ் 2 தேர்வு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. அடுத்ததாக, 10 ம் வகுப்பு தேர்வுகளும் வர உள்ளன. அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை எளிதாக எதிர்கொள்ள இப்போதில் இருந்தே, சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களுக்கான, ஆலோசனைகள்.....இதோ:

ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். நன்றாக படித்த பாடங்களுக்கு குறைந்த நேரமும், அதிகம் படிக்காத பாடங்களுக்கு, அதிக நேரமும் ஒதுக்க வேண்டும்.

காலி பணியிடங்களால் கல்வி தரம் பாதிப்பு


மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில், பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வித் தரம், பாதிக்கப்படும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click Here for Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks

TET EXAMS PAPER I AND II சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 .02.14 ல் வழக்குகள் விசாரணை


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
TRB அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 27.02.14 பிற்பகல் 2.15 விசாரணைக்கு வருகின்றன.
particulars of writs
GROUPING MATTERS

1..WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING

2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING

Wednesday, February 26, 2014

வர இருக்கும் 2014 லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் -வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடு

12 ஆயிரம் ஆசிரியர் "ஆப்சென்ட்' : துறை ரீதியான நடவடிக்கை பாய்கிறது


சென்னை: தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த, 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று, விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு, இரண்டு நாள், சம்பளம், "கட்' செய்வதுடன், துறை ரீதியாக, பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது. இயக்குனரக வட்டாரம், மேலும் கூறியதாவது:

பிளஸ் 2 "ஹால் டிக்கெட்' இன்று பதிவிறக்கம் செய்யலாம்


சென்னை:பிளஸ் 2 தனிதேர்வர், இன்று, பிற்பகல் முதல், "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வு வினாத்தாள், விடைத்தாளை கொண்டு செல்ல துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

விருதுநகர்: பிளஸ் 2, பத்தாம்வகுப்பு பொதுதேர்வில், முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள், விடைத்தாளை, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், காரில் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

"ஸ்டிரைக்' செய்யும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு : கலக்கத்தில் ஆசிரியர்கள்

கோவை: மாநிலம் முழுவதும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்,

தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை விறுவிறுப்பு : 25 சதவீத இட ஒதுக்கீடு கேள்விக்குறி

முன்னணி தனியார் பள்ளிகளில், அரசு விதிமுறைக்கு மாறாக, முன்கூட்டியே, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதை தடுக்க, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்கூட்டியே, இடங்களை நிரப்பி விட்டால், இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், ஏழை, எளிய குழந்தைகளுக்கு, 25 சதவீத இடங்களை தர, "சீட்'டே இருக்காது என்ற நிலையும் உருவாகி உள்ளது.

இலவச கல்விக்கு பழைய முறையே தொடரும்


"தினமலர்' நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, "கல்லூரி நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் பயிலும்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான இலவச கல்வியில், பழைய முறையே தொடரும்' என, அரசாணை ?வளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத் துறையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ?வளியிடப்பட்ட அரசாணையின் படி, "கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்கப்படும். நூலகம், பயிற்சி, மாணவர் சங்கம் உள்ளிட்ட,

தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு?

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், மக்களவைத் தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைகின்றன. இதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை:பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பதிவு செய்த நாள் - பெப்ரவரி 26, 2014


2012-ல் ஆ‌சிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: இவ்வார இறுதியில் நடைபெற வாய்ப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

இன்று (26.02.2014) காலை தொடக்க கல்வி இயக்குநர் முனைவர். இளங்கோவன் அவர்களை நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தான தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடமிருந்தும்,

Tuesday, February 25, 2014

மார்ச் 2 அல்லது 3ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு?


டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் 2 அல்லது 3ம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தல் 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தப்படும் என்றும் தெரிகிறது.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன.


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டனமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )

டி.இ.டி., தேர்வில் சிறப்பு தேர்ச்சியா:மார்ச், 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை:ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு:டி.இ.டி., தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும், மாவட்டங்களில், மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. முதற்கட்டமாக, இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.பின், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடக்கும்.

கடைசி நேரத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பு:குளறுபடி கணக்கை துவக்கியது தேர்வு துறை

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை, கடைசி நேரத்தில், தேர்வுத்துறை அறிவித்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பதிவு எண்களை, இணையதளத்தில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டதால், செய்முறை தேர்வு மதிப்பெண்ணை, பதிவு செய்வதற்கான படிவங்களை, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்ய முடியாமல், ஆசிரியர் தவித்தனர். இதன்மூலம், பிரதான எழுத்து தேர்வு துவங்குவதற்கு முன்பே, குளறுபடி கணக்கை, தேர்வுத்துறை துவக்கி உள்ளது.

மாணவர்கள் முன் வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு:தேர்வு துறை கிடுக்கிப்பிடியால் பலரும் அதிர்ச்சி

பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, 'கவர்' செய்யப்பட்டு உள்ளதால், தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க, உத்தரவிட்டு உள்ளது. இதனால், முன்கூட்டியே வினாத்தாள், 'அவுட்' ஆவதற்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். தேர்வுத் துறையின் கிடுக்கிப்பிடியால், சில தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய, பார்கோடு எண் கொண்ட விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு இல்லை:பி.எட்., கணினி பட்டதாரிகள் தவிப்பு

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, கணினி பாடப் பிரிவு துவங்கப்படாததால், மாநிலம் முழுவதும், 15 ஆயிரம், பி.எட்., கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், இலவசமாக கணினி, லேப்-டாப் ஆகியவை கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் இல்லாததால், அவை, பயன்படுத்தப்படாமல், முடங்கிகிடக்கின்றன.

TESTF STRIKE நாளை நடைபெறும் ஆசிரியர் ஸ்டிரைக் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: கல்வித்துறை உத்தரவு


ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொடக்க கல்வியில் தமிழ்வழி கல்வி முறையை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று கோரிக்கை அட்டை அணிந்து தொடக்க கல்வி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் 26ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

NMMS - EXAM -8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் ரிசல்ட்


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்தேர்வு என்ற சிறப்பு திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. 
இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 

60 ஆயிரத்தை 4 ஆயிரம் சமாளிக்குமா? நாளை ஆசிரியர் போராட்டத்தால் சிக்கல்

தமிழகத்தில நாளை ஒரே நாளில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில்  4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுநர்களை வைத்து சமாளிக்க முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது .....நாளிதழ் செய்தி வெளியிடு 

12 TH STD CHEMISTRY (EM)MATERIAL FREQUENTLY ASKED 3.5.10 MARKS QUESTION CLICK HERE TO DOWNLOAD

12 TH STD CHEMISTRY (EM) MATERIAL FREQUENTLY ASKED 3.5.10 MARKS QUESTION CLICK HERE TO DOWNLOAD

THANKS TO :-
A.Thangamani,M.Sc.,B.Ed.,
PG Teacher in Chemistry,
Jothi Vidhyalaya Mat. Hr. Sec. School,
Elampillai, Salem-637502

SSLC 2ND REVISION TEST - FEB 2014 ........இரண்டாம் திருப்புதல் தேர்வு - 2014

SSLC NEW STUDY MATERIAL ......2014...........10 STD STUDY MATERIAL பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி ........NEW STUDY MATERIAL


SOCIAL SCIENCE :-


SSLC 10TH STD GEOGRAPHY IMPORTANT  MATCH THE FOLLOWING .......CLICK HERE TO DOWNLOAD...

THANKS TO:
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)

GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT

அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  


* நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தடுக்கப்படும் என்றும் அதிமுக உறுதியளித்துள்ளது.  

* மேலும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.  


* சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

TET FLASH NEWS- 2013 TET PAPER - I , 5% RELAXATION candidates certificate verification date start on 12 march 2014,anyone missed on january verification also come up

2013 TET (PAPER - I) 5% RELAXATION candidates certificate verification date start on 12 march 2014,anyone missed on January verification also attend.....
TET - 2013 CV Announced for Relaxation Candidates ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு மார்ச் - 12 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல் தாளைத் தொடர்ந்து 2 ஆம் தாளுக்கும் நடைபெறும் (2 ஆம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் நிதி முறைகேடு: சங்க நிர்வாகம் கூண்டோடு கலைப்பு.

புதுக்கோட்டையிலுள் கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடன் வழங்கியதில் ரூ. 9 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த   விசாரணைக்குப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகத்தை கூட்டுறவுத்துறை இணை பதிவாளர்  கலைக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் பெண் ஊழியர்களுக்கு சலுகை

தொடக்கக் கல்வி - 25.2.2014 மற்றும் 26.2.2014 ஆகிய நாட்களில் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் இயக்குநர் உத்தரவு

Monday, February 24, 2014

DGE - SSLC PRACTICAL INSTRUCTIONS GUIDE - இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2014 - செய்முறை தேர்வுக்கான அறிவுரைகள்

DGE - SSLC - பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2014 மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்வதற்கான வழிமுறைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

TET NEWS - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு ‍- DINAMANI

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

           இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?

           மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை  அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது சார்பான அறிவிப்பு கடந்த வாரமே எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த வாரத்தில் கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் மத்திய நிதியமைச்சர் தற்பொழுது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிற 26ம் தேதி இந்தியா வருகிறார்.

50% DA Merger, Retirement Age 62 and Interim Relief – Cabinet is likely to be approved in the next meeting

50 da merge
This week may bring cheer to central employees and pensioners
Central Govt. employees and pensioners will find reasons to celebrate this week. The union cabinet is likely to clear some long awaited demands for it’s staff in the next meeting later this week The F.M., currently on foreign tour, likely to return India on 26th February and after which cabinet meeting is likely to take place. According to information available

"டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்


"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம், தேர்வு பணி காரணமாக, நடைமுறைப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், வகுப்பு களை ஒருங்கிணைந்து பயிலும், கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், முதற்கட்டமாக, 160 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், செயல்படுத்த திட்டமிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில், திட்டமிடப்பட்டிருந்தாலும், அதற்கான, நிதி ஒதுக்கீடு, உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகளால், தாமதம் ஏற்பட்டு வந்தது.

டி.இ.டி., தேர்வுக்கு புதிய அரசாணை


"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும், இலவச டி.இ.டி., தேர்வு பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டிருந்தது. 

அதிகாரிகளுக்கு நடைமுறை சிக்கல் தெரியவில்லை : ஆசிரியர் சங்க நிர்வாகி "அட்டாக்'


கல்வித் துறை அதிகாரிகளுக்கு, நடைமுறை சிக்கல் தெரியவில்லை. 10ம் வகுப்பு, பொதுத்தேர்வுக்கான நேரத்தை, பழையபடி மாற்றாவிட்டால், தேர்ச்சி சதவீதம், கண்டிப்பாக குறையும்,'' என, தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், சங்க பொதுச் செயலர், சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

ஒரே பள்ளியில் 28 ஆண்டு பணி: ஆசிரியருக்கு பாராட்டு விழா

மேட்டூர்: ஒரே பள்ளியில், 28 ஆண்டு பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், பைக், தங்க பேனா, தங்க செயின் வழங்கி கவுரவித்தனர்.
அரியலூர் மாவட்டம், குமிலியம் பகுதியைச் சேர்ந்தவர், உடற்கல்வி ஆசிரியர், திருஞானசம்பந்தம். இவர், 30வது வயதில், சேலம் மாவட்டம், மேட்டூர், மேல்நிலை பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 28 ஆண்டு, ஒரே பள்ளியில் பணி புரிந்த, ஆசிரியர் திருஞானசம்பந்தம், ஏராளமான மாணவர்களுக்கு சிறப்பாக

SMC TRAINING POSTPONED - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒரு நாள் போராட்டத்தால், அகஇ சார்பில் நடத்தப்படும் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி ஒத்திவைக்க இயக்குனர் உத்தரவு

பிளஸ் டூ தேர்வு: வீண் குழப்பம் வேண்டாம்....PLUS TWO EXAM NO TENSION -PLUS TWO EXAM TIPS


பிளஸ் டூ தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்த நேரத்தில் நன்றாகப் படிக்கும் சிலருக்கும்கூட, எல்லாவற்றையும் படித்து விட்டோமா? குறிப்பிட்ட பாடத்திலிருந்து முக்கியமான கேள்விகள் கேட்டுவிட்டால், நம்மால் பதில் அளிக்க முடியாதே, எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது, ஆனால் ஒரே குழப்பமாக இருக்கிறதே. பரீட்சை ஹாலில் பதில் மறந்து போய்விட்டால் என்ன செய்வது என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழும்.

தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் எதைப் பற்றியும் குழப்பிக்கொள்ளாமல், சகஜமான மனநிலையில் இருந்தாலே நிறைய மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும். இந்தக் கடைசிக் கட்டத்தில் தேர்வுக்கு எப்படித் தயாராவது என்பது குறித்துச் சில யோசனைகள்:

தேர்வுக்கு முந்தைய தயாரிப்பு

l தேர்வுக்குக் குறைந்தது பத்து நாட்களுக்கு முன்பாகவே அனைத்துப் பாடங்களையும் படித்துவிடுவது நல்லது.

l நமக்கு எந்தப் பாடம் பிடிக்குமோ, அந்தப் பாடத்தை முதலில் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும்

இரட்டைப்பட்ட வழக்கு இறுதித் தீர்ப்பு நகல் ........DOUBLE DEGREE HIGH COURT -JUDGEMENT COPY

ஆசிரியர்த் தகுதித் தேர்வு 2012ல் தேர்வு எழுதியவர்களுக்கும் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு

தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வணையம் மூலம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. அண்மையில் தமிழக முதலமைச்சர் 2013ல் தேர்வு எழுதியவர்களில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5% மதிப்பெண் தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து 2012ல் ஆசிரியர்த் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை

Sunday, February 23, 2014

இன்று 66ஆவது பிறந்த நாள் கொண்டாடும் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம்.


பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2014ல் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு

மார்ச் 2014ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ / மாணவியர்களின் தேர்வு எண் மற்றும் பெயர் பட்டியல்WWW.TNDGE.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை, பூத் சிலிப் மட்டுமே அனுமதி.


நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல¢ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர

எம்ஜிஆரின் தத்துவ பாடல்கள் தெரியாத நீங்கள் எல்லாம் டீச்சரா? சென்னைமேயர் கேள்வியால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு.


ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பரிசளிக்கும் நிகழ்ச்சி ஷெனாய் நகரிலுள்ள மாநகராட்சி அரங்கத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. 

விடைத்தாள் திருத்தும் பணி விரைவில் முடியும்


சிவகங்கை: நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது.

கார் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு புது பதவி


பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள், "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. இதற்காக, தேர்வு மையத்தில், புதிய பணியிடம் ஒன்றை, அரசு தேர்வு துறை தோற்றுவித்துள்ளது. தேர்வு மையங்களில், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், எழுத்தர், இளநிலை உதவியாளர் ஆகியோர், தேர்வுக்கான முன் ஏற்பாடுகளை கவனித்தல், தேர்வு அறை அமைப்பு, வினாத்தாள், விடைத்தாள் சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபடுவர். தற்போது, தேர்வு துறை, அந்தந்த மாவட்டங்களில், சொந்தமாக கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள் குறித்து, பட்டியல் எடுத்து வருகிறது; அவர்கள், "ரூட் ஆபீசர்

Saturday, February 22, 2014

பிளஸ் 2 தேர்வுக்கு பார்கோடு எண் அமைந்த மேல் தாள்கள்

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்காக, பார்கோடு எண் அமைந்த மேல் தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; மேல்தாளுடன், விடைத்தாள்களை, 16ம் எண் ஊசியில், வெள்ளை நூலால், ஒரு அங்குலத்துக்கு, ஆறு தையல் விழும் வகையில் தைக்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச், 3ல் துவங்கும் பிளஸ் 2 தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சு! : தேர்வுப்பணியில் 1 லட்சம் பேரை ஈடுபடுத்த திட்டம்


பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், ஒன்பது நாள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. தேர்வுப் பணியில், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர், ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மார்ச், 3 முதல், 25 வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. 8.45 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுத உள்ளனர்.

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே இடைநிற்றல் உதவித்தொகை ?

சிவகங்கை: தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பிளஸ் 2 மாணவர்களுக்கு இடைநிற்றல் கல்வி உதவித் தொகை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

TETOJAC - 06.03.2014 ஒரு நாள் வேலை நிறுத்தம் - பத்திரிக்கை செய்தி, படிவம், திட்டம் மற்றும் விதிகள்

தொடக்கக்கல்வித்துறையில் விரைவில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு


இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.இதுகுறித்து நமது பொதுச்செயலர் திருமிகு செ முத்துசாமிஅவர்கள் ஏற்கனவே தொடக்கக்கல்வி இயகுனரிடம் முறையிட்டது அனைவரும் அறிந்ததே,

இடைநிலை ஆசிரியர்களுக்கான- பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த களின் பட்டியல் 1.1.2013 இன் படி தயார் நிலையில் வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு உத்தரவு.updated....

Friday, February 21, 2014

வட்டி செலுத்தாவிடில் கல்விக் கடன் மறுப்பா? : ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்யலாம்


மதுரை: ""வங்கியில் வாங்கிய கல்விக்கடனுக்கு வட்டி கட்டாவிட்டால், தொடர்ந்து கடன் வழங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது, தலைமை அலுவலகத்தில் புகார் செய்யலாம். 30 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால், ரிசர்வ் வங்கியை அணுகலாம்,'' என, சென்னை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு அறிவிப்பு

சென்னை: பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், இன்று நடக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இந்த கலந்தாய்வு நடக்கிறது.

NMMS - கேள்வித்தாள் இல்லாததால் தேர்வு நேரம் மாற்றியமைப்பு


சென்னை: பல மாவட்டங்களில், கேள்வித்தாள் கட்டுகளை ஏற்றிய வாகனங்கள், குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால், பள்ளி மாணவர்களுக்கு, இன்று காலை, நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக, இன்று காலை, 10:00 மணிக்கு, தேசிய திறனாய்வு தேர்வை நடத்த, தேர்வுத் துறை ஏற்பாடு செய்திருந்தது.

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற புது விண்ணப்பம்


புதுடில்லி: ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, "பென்ஷன்' மற்றும் இதர பணபலன்களை வழங்கும் நடைமுறையை எளிதாக்குவதற்காக, புது விண்ணப்பத்தை, அரசு அறிமுகப்படுத்த உள்ளது. 

FLASH NEWS- NMMS Exam Time Changed.தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறும் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகிறது.


EXAM CONDUCTED IN AFTERNOON INSTED OF FORE NOON AS ALREADY ANOUNCED 


NMMS - தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறும் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகிறது.

முதல் தாள் (Mental Ability Test) - 2.00 PM to 3.30 PM
இடைவேளை (Break Time) -3.30 PM to 4.00 PM 
இரண்டாம் தாள் (Scholastic Aptitude Test ) - 4.00 PM to 5.30 PM

TETOJAC - அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு


நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னையில் கூடிய டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), பார்வையற்றோர் மட்டும், அனுமதிக்கப்படுவர்' என்ற, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டி.ஆர்.பி.,) உத்தரவை ரத்து செய்து, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் தேர்வு எழுத, அனுமதிக்க வேண்டும்' என, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.இ.டி., தேர்வில், மாற்றுத் திறனாளிகள்,தேர்ச்சி பெறுவதில், பல சிரமங்கள் இருந்ததால், அம்முறையைமாற்ற வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 1995ல் இயற்றப்பட்ட, சமவாய்ப்பு சட்டத்தின் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்எனவும், பல போராட்டங்களை நடத்தினர். 

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

DEE-பதவிஉயர்வு கலந்தாய்வு.... 2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையின் கிழ் உள்ள 55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்குமான கலந்தாய்வு, 01.01.2013 தேதிய பேணலின் அடிப்படையில் நாளை(22.02.2014) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி பதவி உயர்வு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

FLASH NEWS - HIGHER SECONDARY SCHOOL SECONDARY GRADE TEACHER B.T PROMOTION COUNSELING WILL BE HELD TOMORROW 10.00 AM( AT CONCERN CEO OFFICE)

மேல்நிலை பள்ளிகளில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை காலை அந்ததந்த  மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடை பெறுகிறது........


நாளை (பிப்ரவரி 22சனியன்று) பள்ளிக்கல்வித்துறையில் உள்ளஇடைநிலைஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு   பள்ளிக்கல்வித்துறையில் உள்ளஇடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான   பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (பிப்ரவரி 22சனியன்று) சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது 2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கானகலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை(பிப்ரவரி 22சனியன்று) காலை 10மணி முதல் நடைபெற உள்ளது. 

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம்தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எச்சரிக்கை

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 6 சங்கங்கள் இணைந்த டிட்டோஜாக் சார்பில் வலியுறுத்தப்பட்ட 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி வரும் 22ம் தேதி வேலூரிலும், 23ம் தேதி கடலூரிலும் , மார்ச் 1ம் தேதி காலை மதுரையிலும், மாலை திருச்சியிலும், மார்ச் 2ம் தேதி கோவையிலும்  ஆசிரியர் மன்றத்தின் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். 

இரட்டைப்பட்டம் வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் அடுத்த வாரம் SLP தாக்கல்


இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி ஆனதால் வழக்கை உச்ச நீதி மன்றம் கொண்டு செல்ல வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 18.2.2014 அன்று சென்னையில் வழக்குரைஞரை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு பின் நம்மை தொடர்பு கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், அடுத்த வாரம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வழக்குரைஞருடன் புதுதில்லி செல்லவிருப்பதாகவும் அப்பொழுது சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் நம்மிடம் தெரிவித்தனர்.
தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இணைப்பு:
இந்த வழக்கில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் 10 பேர் இணைந்துள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஆசிரியர்களின் பி.எட் கல்வித் தகுதியை பறிக்க முடிவு ..

டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு


டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை.

ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

Thursday, February 20, 2014

நிதித்துறை - படிகள் - மலை பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு படியை (HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது

 "ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல்  காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண்  அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய  (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது. 

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!