TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Monday, March 31, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. 12ம் தேதிக்குள் திருத்தி முடிக்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிந்தன. இதற்கிடையே 21ம் தேதியே தமிழகம் முழுவதும் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை தேர்வு அதிகாரிகள் தொடங்கினர். 24ம் தேதி துணைத் தேர்வர்கள் திருத்த தொடங்கினர். அதில் தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. மற்ற பாடங்களுக்கான தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. 

தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014 மாத நாட்காட்டி


05.04.2014~பள்ளி வேலை நாள் & குறைத்தீர் முகாம்
12.04.2014~பள்ளி வேலை நாள்
14.04.2014~தமிழ் வருடப் பிறப்பு விடுமுறை
17.04.2014~வரையறுக்கப்பட்ட விடுப்பு / பெரிய வியாழன்
18.04.2014~புனித வெள்ளி விடுமுறை
19.04.2014~பள்ளி வேலை நாள்

அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளில் 'அட்மிஷன்?'; ஆய்வு செய்ய ஏ.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு


நடப்புக் கல்வியாண்டில், அங்கீகாரம் ரத்தாகும் நிலையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தந்த பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனம், அரசு, தனியார் நிறுவனங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான புகார் கமிட்டி இல்லை

கல்வி நிறுவனம், அரசு, தனியார் நிறுவனங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான புகார் கமிட்டி இல்லை
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் (தடை, தடுப்பு, தீர்வு)வன்கொடுமை சட்டத்தின் கீழ், கல்வி நிறுவனம், அரசு, தனியார் நிறுவனங்களுக்குள், 'புகார் கமிட்டி' அமைக்கவேண்டும். பெரும்பாலான நிறுவனங்களில், இக்கமிட்டி அமைக்கப்பட வில்லை.
இதுகுறித்து, மதுரை சோகோ அறக்கட்டளை துணைத் தலைவர் செல்வகோமதி கூறியதாவது:

பின்தங்கிய மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு; இன்று துவக்கம்

மாநில அளவில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பீட்டு தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. கோவை மாவட்டத்தில், இத்தேர்வில் 3000 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மாணவர்களுக்கு பின்னறிவு தேர்வு

ஆர்.எம்.எஸ்.ஏ., (அனை வருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) சார்பில், பத்தாம் வகுப்புக்கு செல்லும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. "ஆல் பாஸ்' முறையில், ஒன்பதாம் வகுப்பு வரை வரும் மாணவர்களில் சிலர், படிப்பில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 4 முதன்மை கல்வி அலுவலர், 7 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர்கள் இன்று 31.03.2014 பிற்பகலில் ஒய்வுபெறுவதையொட்டி, பொறுப்பு அலுவலர்களை நியமித்து இயக்குனர் உத்தரவு

தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை


சென்னை: ""தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பணிக்கு வராவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.

பொது தேர்வு முடிவை வெளியிடுவதற்கு தேர்தல் தடையாக இருக்காது


"பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, தேர்தல் தடையாக இருக்காது. தேர்வு முடிவு வெளியானதும், முடிவை வெளியிடுவோம்' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்தது. பிளஸ் 2 மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி, நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இதர விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு


சென்னை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 30 பாட தேர்வுகள், லோக்சபா தேர்தல் காரணமாக, இம்மாதம் இறுதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 

பெட்ரோல் விலை ரூ.1 குறைப்பு

புதுடில்லி: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து, பெட்ரோல் விலையை, லிட்டருக்கு 75 காசுகள் குறைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. உள்ளூர் வரிகளும் குறைக்கப்படுகிறது.

விடுமுறை என்றும் பாராமல் மாணவர் நலனுக்காக உழைத்த ஆசிரியை மீது அடித்ததாக புகார். - இன்றைய கல்வியின் நிலை?

சாப்பிட சென்ற மாணவரை, எல்லோரது முன்னிலையிலும் பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவரின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர்.

        குமாரபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், ரத்தினம் தம்பதியரின் மகன் சந்தோஷ் 15. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறார். தற்போது, அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு முடிந்துள்ளது. ஆங்கிலம் முதல் தாள், நாளை (ஏப்., 1) நடக்கிறது. அதற்காக சிறப்பு வகுப்புக்கு மாணவர்களை நேற்று, பள்ளிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 24 பொது விடுமுறை அறிவித்து அரசு ஆணை வெளியிடு ....DECLARATION OF POLL DAY 24.04.2014 AS PUBLIC HOLIDAY.... GO AVL

மக்களவைத் தேர்தலை நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் விடுமுறை அறிவித்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

3 மாதங்களில் 800 பேர் மாயம் - மாணவியர் எண்ணிக்கை அதிகம்

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 800 பேர் மாயமாகி உள்ளனர். இப்பட்டியலில், மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

10% அகவிலைப்படி உயர்வு எப்போது? மத்திய அரசு ஆணை வெளியிட்ட பிறகும் தமிழக அரசு மவுனம் .தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத அகவிலைப்படியுடன் 10 சதவீதம் புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டதுஅதற்கான் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது

அரசு மருத்துவக்கல்லூரிகளில், படிக்கும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு, கல்விக்கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு

அரசு மருத்துவக்கல்லூரிகளில், படிக்கும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு, கல்விக்கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க,'' மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி உத்தரவிட்டார். தமிழகத்தில்,அரசு மருத்துவ கல்லூரிகளில், முதல் பட்டதாரிகளாக சேரும்,

முற்றிலும் உதடுகள் ஒட்டாக் குறட்பாக்கள் 5 !

310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை Iṟantār iṟantār aṉaiyar ciṉattait
Tuṟantār tuṟantār tuṇai
341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்
Yātaṉiṉ yātaṉiṉ nīṅkiyāṉ nōtal
Ataṉiṉ ataṉiṉ ilaṉ

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2,120 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் மூன்று ஓட்டுப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 176 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். ஓட்டுப்பதிவு அலுவலர்கள், வரும் ஏப்., 23ம் தேதி காலை 11.00 மணிக்கு, ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டும்.

Sunday, March 30, 2014

TNTET NEWS -பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஆணை நகலினை காண...... UG+PG THEN +2 - IS ELIGIBLE FOR TEACHER POST COURT ORDER

SSLC MARCH - 2014 QUESTION PAPERS DOWNLOAD ........

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் வணிகவியல் விடைத்தாள்களை தொழிற்பாட பிரிவுகளை நடத்தும் ஆசிரியர்களை வைத்து திருத்தும்படி மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Saturday, March 29, 2014

தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை தனியாருக்கும் பொருந்தும்: அரசு உத்தரவு

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தினத்தன்று (ஏப். 24) பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்படுவதாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில்லை - தபாலிலும் சான்றிதழ்களை அனுப்பலாம்.

மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில்லை - தபாலிலும் சான்றிதழ்களை அனுப்பலாம். நாளிதழ் செய்தி வெளியிடு .

வேலூர் மாவட்டத்தில் வருகிற 3ம் தேதி -வாக்குசாவடிகளில் பணிபுரியும் 15 ஆயிரம் அலுவலர்களுக்கு பயிற்சி - 16 மையங்களில் நடைபெறுகிறது .


சிறப்பு பயிற்சி மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு


சேலம்: தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும், மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம் வகுப்பு

துவக்க பள்ளியில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி : வரும் கல்வியாண்டிலும் முக்கியத்துவம் தர உத்தரவு

சென்னை: தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரும், 1.4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். 

தனியார் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கல்வி கட்டணம் உயர்கிறது : வரும் கல்வியாண்டில் அமல்படுத்த திட்டம்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த, நீதிபதி பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக, கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே புதிய நியமனம் ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.

DGE - MARCH - 2014 PLUS TWO EXAM KEY ANSEWRS - 12 TH KEY ANSWERS - 2014 - HSC - PLUS TWO KEY ANSWERS DOWNLOAD

DEPARTMENTAL EXAM - ONLINE APPLY DATE EXTENDED - TO 15.04.2014

Departmental Examinations May 2014 - Instructions
  1. Applications are invited from the candidates for admission to the Departmental Examinations May 2014 through "FULLY ONLINE" mode. Filled-up Online Application Forms will be electronically transmitted to the TNPSC Office and hence there is no need to send the application by post. However,those who are applying for the test codes 001, 085,115,131,148,164 209,210,211,212,213,214 and 215 MUST send the Online Application Form and the Identification Slip to TNPSC Office by post with relevant details of previous examinations, Work etc.
  2. Fully Online registration for Departmental Examinations May 2014 is available for candidates applying from all the 33 Centres, from 01/03/2014 to 15/04/2014.
  3. CANDIDATES WILL NOTE THAT REGISTRATION FEE OF Rs. 30/- WILL HAVE TO BE INCLUDED IN THE POSTAL RECEIPT APART FROM THE FEE FOR THE TESTS APPLIED FOR.
  4. Total Fees should be paid through postal receipt only except the candidates opting NEW DELHI as Centre.
  5. Examination / Registration Fees: Kindly make sure that you have the Postal Receipt for the requisite number of tests that you will be applying for, before registering online. (Calculate the Total Fee using Fee Calculator)
  6. Procedure to apply online :See : Instructions to the Candidates for applying through Online in Tamil | English
  7. Kindly send WITHOUT FAIL the online Application form & Identification Slips to TNPSC by post those who are applying for the test codes 001, 085,115,131,148,164 209,210,211,212,213,214 and 215 with relevant details of previous examinations, Work etc. before April of this year. Candidates applying for other than these tests need not send the application form to the Commission by post.
  8. Last date: This facility will be available till 5.45 P.M. on 15/04/2014
     
E-mail :  coetnpsc . tn @ nic . in    |  Call :   1800 425 1002

பள்ளிகளில் இப்படியும் பாகுபாடு ‘டல்’ மாணவர்கள், இனி தனித்தேர்வர்கள்! தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க... விபரீத ஐடியா

தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 7 ஆயிரத்து 281 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ல் தொடங்கி 25ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 8.26 லட்சம் பள்ளி மாணவர்களும், 53 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது நடந்து வருகிறது. ஏப். 9ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 10 லட்சத்து 39 ஆயிரம் பள்ளி மாணவர்களும், 75 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: கூடுதல் கவனம் செலுத்த திணறும் ஆசிரியர்கள்

சேலம் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு மட்டுமே ‘டம்மி’ எண் பயன்படுத்தப்படும். 

5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் அறிய சிறப்பு தேர்வு

மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தமிழகத்தில் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாட திட்டங்களை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் அறிவுத்திறன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 5ம் வகுப்பு மாணவர்கள் கற்றதன்மூலம் அடைந்த திறன்குறித்து தமிழ், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம் ஓய்வூதியத்தை : எஸ்பிஐ புதிய திட்டம்

75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

நீங்கள் வாக்குசாவடி தலைமை அலுவலரா- WATCH THIS VIDEO- MALYALAM!! Presiding Officers Training Video for EVM operations


ஏப்ரல் 10 முதல் 19 வரை பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்.,குடிநீர் பற்றாக்குறை ....அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வகுப்பு நேரம் குறைக்கப்படுமா?

"வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும்,' என, ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக, பகல் முழுவதும் கடுமையான வெயில் காணப்படுகிறது; இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும்

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகளை நேரிடையாகச் சென்று கணக்கெடுத்து அவர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Friday, March 28, 2014

வாக்குசாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?

வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களை எந்த தகுதி அடிப்படையில் தேர்வு செய்வது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. ஒரு வாக்குசாவடியில் முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர் 1, வாக்குசாவடி அலுவலர் 2, வாக்குசாவடி அலுவலர் 3 ஆகிய 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், வாக்குசாவடி முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளன.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அரசாணையை எதிர்த்து வழக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்ப்பது தொடர்பான அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், விருகம்பாக்கத்தை சேர்ந்த ஏ.நாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper(Relating to Secondary and Special Schools) (without books
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper(Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s TestEducational Statistics (With Books).
4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for Executive Officers (With Books).

"டான்செட்' நுழைவுத்தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல்


சென்னை: எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்திய, பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) முடிவு வெளியாவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு


சென்னை: ""உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதம், 23ல் இருந்து, ஜூன், 1 வரை, கோடை விடுமுறை. ஜூன், 2ம் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது: உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதம், 16 வரை பொதுத் தேர்வுகள் நடக்கின்றன. அதன் பின், நான்கு நாள் விடுமுறைக்கு பின், பள்ளிகள் இயங்கும். பின், 23ல் இருந்து, ஜூன், 1 வரை, கோடை விடுமுறை.

சென்னை பல்கலை தொலைதூர கல்வி தேர்வுகள் அறிவிப்பு


சென்னை: சென்னை பல்கலை தொலைதூர கல்வி, இளங்கலை பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு, ஏப்ரல் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Thursday, March 27, 2014

DGE- எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - விடைத்தாள் மைய மதிப்பீட்டுப் பணிக்கு முகாம் அலுவலர்கள் நியமித்து உத்தரவு

ஆசிரியர்களின் ஓய்வூதிய பலன் கிடைப்பதை தாமதித்தால் கடும் நடவடிக்கை: பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடும் எச்சரிக்கை

ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஓய்வூதிய பலன் கிடைப்பதை தாமதித்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு

கலவரத்தில் பலியாகும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது எதிர்பாராமல் நிகழும் கலவரங்கள், வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க மாநில அரசுகளை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Wednesday, March 26, 2014

புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் - சட்டப்பிரிவு 12(5)ன் படி அரசு, ஏற்கனவே மற்ற ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களையும் பு.ப.ஒ.திட்டத்தில் சேர்க்கலாம்

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கோடை விடுமுறைக்கு பின் 2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: 100% இலக்கை எட்ட வேண்டும்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டில் (2014-15) 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உத்தரவிட்டுள்ளார்.

பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் குளறுபடி; பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி

10ம் வகுப்பு பொது தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில், குளறுபடி நடந்துள்ளதால், பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்
விருதுநகர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் ரமேஷ் அறிக்கை:

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிரம்

உடுமலை அரசு நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி உட்பட கட்டமைப்பு வசதிகளை நோட்டீஸ்களாக வினியோகித்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; தமிழில் 978 பேர் 'ஆப்சென்ட்'

மதுரை மாவட்டத்தில், நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு தமிழ்த் தேர்வில், 978 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆயினர்.மாவட்டத்தில், 121 மையங்களில், 450 பள்ளிகளை சேர்ந்த 47,030 மாணவர்களுக்கு (மாணவர்கள் 24,749; மாணவிகள் 22,281) 'ஹால்டிக்கெட்' வழங்கப்பட்டன.

பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் மிக எளிது: மாணவர்கள், ஆசிரியர் கருத்து

திண்டுக்கல்: 'தமிழ் முதல்தாள் மிக எளிதாக இருந்தது,' என, மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எம்.கார்த்திகேயன், மாணவர், அச்சுதா அகாடமி மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: 'ப்ளு பிரிண்ட்' படி, கேள்விகள் கேட்கப்பட்டது. ஒரு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் அனைத்தும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில், ஒன்பதாவது கேள்வி பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டது. நான்கு மதிப்பெண் பகுதியில், 39 வது கேள்விக்குரிய பதில் தெரிந்திருந்தாலே, 9 ம் கேள்விக்கும் பதில் அளித்துவிடலாம். மொத்தத்தில் தேர்வு எளிதாக இருந்தது.

வி.ஏ.ஓ., தேர்வில் பிரிவு ஒதுக்கீட்டில் குளறுபடி: மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

கோவை: அரசு பணி தேர்வாணையத்தால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ., தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு ஒதுக்கீட்டில், குளறுபடி செய்துள்ளதால், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

TNTET NEWS - தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா? மாவட்ட கல்வி அலுவலர்கள் கேள்வி

'தேர்வு நேரத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மிகவும் அவசியமா' என, மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகள், கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேர்வுப் பணி முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுப் பணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முக்கிய பங்காற்றுகின்றனர்.

விபத்தில் சிக்கிய 10ம் வகுப்பு மாணவி; மருத்துவமனையில் தேர்வு எழுதினார்

கடலூர்: விபத்தில் சிக்கிய, 10ம் வகுப்பு மாணவி, அரசு மருத்துவமனையில், ஆசிரியர் உதவியுடன், தேர்வு எழுதியுள்ளார். கடலூர் மாவட்டம், வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 15; பண்ருட்டி சுப்புராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவி.

10ம் வகுப்பு தேர்வு துவங்கியது: 10.38 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்று துவங்கியது. மொழி முதற்தாள் தேர்வு, எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய கல்வி முறை குறித்து தமிழ் தி ஹிந்து பத்திரிக்கையின் தலையங்கம்

கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்விமுறையும்…
நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல் பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி B.ED. சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

வெயிலின் தாக்கம்: தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்க கோரிக்கை

காலை 08.30மணி முதல் மதியம்1.00 மணிவரை என தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்கக்கோரி அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவுசெய்துள்ளது. 

தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்களை 200 நாட்களாக என்பதை குறைக்க நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் நமது பொதுச்செயலர் செ.முத்து சாமி தொலைபேசியில் பேசினார்.

பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

கற்றல் திறனை சோதிக்க தேசிய அளவில் தேர்வு; ஏப்ரல் 10-ல் தொடக்கம்


மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில், தமிழகத்தில், ஐந்தாம் வகுப்பு மாணர்களுக்குரிய தேசிய அடைவுத்திறன், ஏப்ரல் 10,11, 15,16 ஆகிய தேதிகளில் நடத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் திட்டமிட்டுள்ளது.பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக, தேசிய அளவில், அடைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

Tuesday, March 25, 2014

ஓய்வூதிய பலன்கள் பெற்று தருவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் பணியாளர் மீது நடவடிக்கை -பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை

தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் பணி அவர்கள்  ,ஓய்வு வருங்கால வைப்புநிதி இறுதி பணம் பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இறுதி பணம் பெறுவதற்கான விண்ணப்பம் சென்னை மாநில கணக்காயருக்கு தாமதமின்றி அனுப்புதல் குறித்து முதன்மை கல்வி  அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது .

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு - பிப்ரவரி 2014 கட்டணம் செலுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

கடவுச் சீட்டு - பணி நியமன அலுவலர் வழங்கும் மாதிரிப் படிவம் | NOC - Appointment Authority Issuing Model Format

படிக்கும் நேரத்தில் கரென்ட் போனால் மாத்தி யோசி; படிக்கும் நேரத்தை மாற்றிக்கொள்ளுங்கள்

உடுமலை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், மாணவ, மாணவியர் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின்தடையால் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க, படிக்கும் நேரத்தை மாற்றியமைக்க கல்வியாளர்கள் 'அட்வைஸ்' வழங்கியுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கும் நிலையில், இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டால், தேர்வுக்கு படிக்க முடியாமல், மன உளைச்சலுக்குள்ளாகும் மாணவர்கள், தங்கள் எதிர்காலத்தை நினைத்து அச்சப்படுகின்றனர். 

தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு: முறைகேடு நடக்காமல் இருக்க உஷார்

'இன்று துவங்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்' என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

கணினி அறிவியலில் அதிக மதிப்பெண் எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

மதுரை: "பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக அமைந்ததால், அதிக மதிப்பெண் பெற முடியும்," என மாணவர்கள் தெரிவித்தனர்.

இத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியரின் கருத்து:

வெயில் தாக்கம்: 1/2மணி நேரம் முன்னதாக தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு

8 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு இன்று முடிந்தது. இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நாளை (26–ந் தேதி) தொடங்கி ஏப்ரல் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது.

பிளஸ்–2 பரீட்சை கடந்த 3–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது. இன்று பிளஸ்–2 தேர்வு முடிந்தது. இன்று கடைசி பரீட்சை எழுதிவிட்டு மாணவ–மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.

பரீட்சை முடிந்ததை யொட்டி அவர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்து இப்போதே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் உற்சாக மிகுதியால் ஒருவர் மீது ஒருவர் மை தெளித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். இனி கல்லூரியில் நாம் சந்திப்போம் என ஒருவருக்கொருவர் கை கொடுத்து விட்டு தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு: காப்பி அடித்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடங்குகின்றன. ஏப்ரல் 9ம் தேதி தேர்வு முடியும். இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரம் பள்ளிகள் மூலம் சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் முறையாக 10ம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும். முதல் தேர்வாக நாளை தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது. 

குரூப்-4 பணிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

தமிழக அரசு பணியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவி களில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதிய இந்த தேர்வின் முடிவு மார்ச் 5-ம் தேதி வெளியானது.

அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசுதகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசுதகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த கூடாது என்று தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. மொழித்தாள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் 20ம் தேதியுடன் முடிந்தன. இதையடுத்து 21ம் தேதி முதல் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொடக்கத்தில் முதன்மை தேர்வாளர்கள், சிறப்பு அதிகாரிகள் விடைத்தாள் திருத்தினர். இன்று துணை தேர்வாளர்கள் திருத்துகின்றனர். ஏப்ரல் 1ம் தேதி முதல் பாட ஆசிரியர்கள் திருத்துகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: 11 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தேர்வு நேரம் மாற்றம்
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின்படி, மாணவர்களின் நலன்கருதி பல்வேறு புதிய நடைமுறைகள் இவ்வாண்டு தேர்வுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு: முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளி அங்கீகாரம் ரத்து

நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11,552 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தேர்வில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்குகிறது. ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கும். கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. விடைத்தாளின் முகப்பு படிவத்தில் மாணவர்களின் போட்டோ, பதிவெண் விவரங்கள் இடம் பெறுகின்றன. இவற்றை சரிபார்க்க 5 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. 

Monday, March 24, 2014

விரைவில் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க திட்டம் : DINAMANI -PAPER NEWS

தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தமிழகத்தில் ஒரு தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவுள்ளது. இதற்கான கொள்கைகள், சட்டத்திட்டங்கள், வரையரைகள், விதிமுறைகள் ஆகியவைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

Sunday, March 23, 2014

TNTET - WEIGHTAGE - IN DETAIL


TNTET NEWS - ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றுள்ள 73 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்குமா? விரக்தியில் 73,000 பேர்: வழக்குகளின் பிடியில் தேர்வு வாரியம்

கடந்த, 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றுள்ள 73 ஆயிரம் பேர், தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

நடந்தது என்ன? கடந்த, 2013, ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த ஜனவரி 20 - 27ம் தேதி வரை, நடந்து முடிந்தது. இறுதிப் பட்டியல் வெளியிட, தேர்வு வாரியம் தயாராக இருந்த நிலையில், இடஒதுக்கீடு பிரிவினருக்கான, 'மதிப்பெண் தளர்வு' அறிவிப்பை, கடந்த பிப்ரவரி 3ல், முதல்வர் வெளியிட்டார். இதற்குப் பிறகு தான், பெருவாரியான குழப்பங்கள், அரங்கேறத் துவங்கின.

தனித்தேர்வர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இணையதளத்தில் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்

இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல்) விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

விடைத்தாள் திருத்தும் பணி சீனியர்களுக்கு "கல்தா' : தேர்வுத்துறை உத்தரவு

திண்டுக்கல்: "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (மார்ச் 25) முடிவடைகிறது. விடைத்தாள்களை திருத்துவதற்காக, மாநிலம் முழுவதும் 66 மதப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் தேர்வு துறை புது திட்டம்

திண்டுக்கல்: ""பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும்,'' என, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளையுடன் (மார்ச் 25) முடிவடைகிறது. விடைத்தாள்களை திருத்துவதற்காக, மாநிலம் முழுவதும், 66 மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

10ம் வகுப்பு தேர்வு: 40 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்

பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வுகள் வரும் 25ம் தேதி முடிகின்றன. அதை தொடர்ந்து 26ம் தேதியே 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது.

அனைவருக்கும் உயர்கல்வித்திட்டம்-பரிந்துரை அனுப்பாத தமிழகம்

உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்ற தலைமையாசிரியை, உதவி ஆசிரியை 'சஸ்பெண்ட்': மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நடவடிக்கை

மதுரை மாவட்டம்மேலுார் அருகே கீரனுார் ஊராட்சிஒன்றிய துவக்கப் பள்ளித் தலைமையாசிரியை மற்றும் உதவிஆசிரியை 'சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்இப்பள்ளி மாணவர்களைஇவர்கள்சில நாட்களுக்கு முன் உரிய அனுமதியின்றி திருச்சிக்குகல்விச்சுற்றுலாஅழைத்துச் சென்றனர்

Saturday, March 22, 2014

பிளஸ் 2 உயிரியல் வினாத்தாளில் குளறுபடி: தேர்வர்களின் 'சென்டம்' வாய்ப்பு குறைவு

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத்தேர்வருக்கான உயிரியல் வினாத்தாளில், நான்கு ஒரு மதிப்பெண் வினாவும், ஒரு மூன்று மதிப்பெண் வினாவிலும் பிழை இருப்பதால், தேர்வர்கள் குழப்பத்துக்கு ஆளாகினர். அதனால், உயிரியல் பாடத்தில் சென்டம் மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

மேலந்தல் பள்ளி ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை

திருக்கோவிலூர்: பள்ளிக்கு வராமல், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட ஏழு ஆசிரியர்கள் மீது, மாவட்ட கல்வி அதிகாரி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

உயர்கல்விக்கு வழிகாட்டும் 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி: கோவையில் 28ம் தேதி துவக்கம்

கோவை: 'தினமலர்' நாளிதழ் மற்றும் எம்.ஜி.ஆர்., பல்கலைகழகம் சார்பில்,பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான 'வழிகாட்டி' நிகழ்ச்சி மார்ச் 28ம் தேதி துவங்குகின்றது. 30ம் தேதி நிறைவடைகிறது.

TNTET NEWS - தகுதி தேர்வில் விலக்கு: குழப்பத்தில் ஆசிரியர்கள்

மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை 'ரெடி'

இன்னும் மூன்று நாட்களில், 26ம் தேதி துவங்க உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, தீவிரமாக செய்து வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

CENTRAL TEACHER ELIGIBILITY TEST - FEB- 2014 RESULT

CENTRAL TEACHER ELIGIBILITY TEST

In accordance with the provisions of sub-section (1) of Section 23 of the RTE Act, the National Council for Teacher Education (NCTE) had vide Notification dated 23rd August, 2010 and 29th July, 2011 laid down the minimum qualifications for a person to be eligible for appointment as a teacher in classes I to VIII. It had been inter alia provided that one of the essential qualifications for a person to be eligible for appointment as a teacher in any of the schools referred to in clause (n) of section 2 of the RTE Act is that he/she should pass the Teacher Eligibility Test (TET) which will be conducted by the appropriate Government in accordance with the Guidelines framed by the NCTE.

பத்தாம் வகுப்பு தேர்வு: 9.15 மணிக்குத் தொடங்கும். மாற்றம் எதுவும் இல்லை, தேர்வுத்துறை வட்டாரங்கள்

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன.

2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் ஆனவர்களுக்கு புதிய ஓய்வூதிய விதிகள் பொருந்தாது ஐகோர்ட்டு உத்தரவு

2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு, 2 மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஓய்வூதிய திட்ட விதிகள் பொருந்தாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், மத்திய அணுசக்தி துறையும், கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது:–

நீதி மன்ற வழக்குகளை கவனிக்க மாவட்டம் தோறும் நீதி மன்ற தொடர்பு அலுவலராக (NODAL OFFICER )ஒரு AEEO -வை நியமித்து இயக்குநர் உத்தரவு

பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :பென்சிலை பயன்படுத்தி OMR தாளில் மாணவர்கள் Shade செய்யலாம்

பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :

 OMR தாளில் வட்டங்களில்  Shade  செய்ய  வேண்டிய  பகுதிகள்   அனைத்தும்    கருப்பு அல்லது நீல நிற பந்துமுனை  பேனாவை பயன்படுத்த  வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தி இருந்தது  . ஆனால் தற்போது    பென்சிலை  பயன்படுத்தி OMR தாளில்    மாணவர்கள்  Shade செய்யலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் .

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய-மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 3 சதவீத இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
ஆனால், இந்த உத்தரவு சரியாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என்ற புகார் பரவலாக இருந்து வருகிறது.

'விலங்கியல்' விடைத்தாள் பகுதியில் 'தாவரவியல்' விடை எழுதியதால் குழப்பம் : அச்சத்தில் மதுரை மாணவிகள்

மதுரையில், பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர்.
விடைத்தாள் அமைப்பு உட்பட தேர்வுத் துறையில், இந்தாண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, உயிரியல் தேர்வில், விலங்கியல், தாவரவியல் என இரு பகுதிகளுக்கும் தலா 26 பக்கம் கொண்டதாக விடைத்தாள் தயாரிக்கப்பட்டன. தேர்வின்போது, இந்த இரண்டு விடைத்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதற்குரிய விடைத்தாளில் தான் விடைகள்

10ம் வகுப்பு தேர்வு : ஹால்டிக்கெட் வினியோகம் தொடங்கியது

பத்தாம் வகுப்பு தேர்வுகள் 26ம் தேதி தொடங்குவதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு நேற்று ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.  அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டுகள் தேர்வுத்துறையில் இருந்து நேற்று பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Friday, March 21, 2014

பிளஸ் 2 தேர்வில் பிட்: இடுப்பு வரை வெட்டப்பட்ட சுடிதார்: அவமானத்தால் கதறி அழுத மாணவிகள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவிகளில் இருவர், சுடிதாரின் கீழ்பகுதியில் விடைகளை எழுதி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பறக்கும் படை அலுவலர்களின் உத்தரவால் அவர்களது மேலுடையில் இடுப்புப் பகுதி வரை வெட்டி எடுக்கப்பட்டதால், அந்த மாணவிகள் வீட்டுக்குச் செல்ல அவமானப்பட்டு கதறி அழுதனராம்.

அறிவியல் உபகரணங்கள் வாங்க தலைமை ஆசிரியர்கள் மறுப்பு

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், கடந்த 2011ம் ஆண்டு முதல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த, அறிவியல் உபகரணங்கள் வாங்க, ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு, வெளிமாவட்டங்களை சேர்ந்த தனியார் கம்பெனி மூலம், கருவிகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர் பட்டயப் படிப்பு: ஏப். 2 முதல் 10 வரை செய்முறைத் தேர்வு

ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 400-க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன.

TNTET - ஏப்ரல் 7 முதல் டி.இ.டி., - 2 சான்றிதழ் சரிபார்ப்பு


சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார்.

"குரூப் 2' தேர்வு ஜூன் 29க்கு மாற்றம்

சென்னை: அரசு துறையில், நேர்முகத் தேர்வு அல்லாத 2,269 பணியிடங்களுக்கான, "குரூப் 2 தேர்வு, லோக்சபா தேர்தல் காரணமாக, மே மாதம், 18ல் இருந்து, ஜூன், 29க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வுக்கு, ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

மே முதல் வாரத்தில் இருந்து பி.இ., விண்ணப்பம், "சேல்ஸ்'


மே மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.இ., விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, மே 4 முதல், 20 வரை, அண்ணா பல்கலை மட்டும் இல்லாமல், பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன;

விடைத்தாள் திருத்தும் பணி: ஊதியத்தை உயர்த்தித் தர ஆசியர்கள் கோரிக்கை

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வழங்கப்படும் ஊதியத்தை 20 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-க்குள் வெளியாகும் என தகவல்

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதிக்குள் வெளியாகும் என அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ளது.

EMIS - ஆசிரியர் சுயவிவரங்கள் ஆன்லைன் பதிவு:

தற்போது மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் பள்ளிகள் போன்றவற்றில் பணிபுரியும் தொடக்க நடுநிலை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் ஆன்லைன் மூலம் உரிய வலைதளத்தில் (Part-I, Part-II) பதிவு செய்யப்பட்டுள்ளன.

10ம் வகுப்பு தேர்வு நேரம்: அரசு ஆசிரியர்களிடையே குழப்பம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தை மாற்றியமைப்பது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்காத நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை பத்தாம் வகுப்பு தேர்வு, காலை, 10 மணிக்கு துவங்கி வந்தது. இந்த நேரத்தை மாற்றும் படி யாரும் எவ்வித கோரிக்கையும் வைக்காத நிலையில் அரசு தேர்வுத்துறை திடீரென 45 நிமிடம் முன்னதாக தேர்வு தொடங்கும் படி மாற்றியமைத்தது.

3 நபர் குழு அமைக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டும் அரசாணை வெளியிட தாமதம் ஏன்?அரசு தரப்பில் மேல் முறையீடா?

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி வெங்கடாஜலமூர்த்தி அவர்கள் தலைமையில் 2முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க  நீதிபதிகள் உத்தரவிட்டனர். இக்குழு 20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் உள்ள இந்த ஊதிய முரண்பாடை அரசு அகற்ற வேண்டும்.

பிளஸ் 2 விடைத் தாளை ஏப்ரல் 5க்குள் திருத்தி முடிக்க பள்ளி கல்வி துறை திட்டம்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் நேற்றுடன் முடிந்ததை அடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. இதில் 66 மையங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத் தாள் திருத்தி வருகின்றனர்.பிளஸ் 2 தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று முதல்

Thursday, March 20, 2014

பிளஸ்–2 தேர்வு: உயிரியியல், தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது வரலாறு தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ–மாணவிகள் கருத்து

பிளஸ்–2 மாணவர்களுக்கு நேற்று நடைபெற்ற உயிரியியல், தாவரவியல் தேர்வு எளிதாக இருந்தது என்றும், வரலாறு தேர்வில் சில கேள்விகள் சற்று கடினமாக இருந்தது என்றும் தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

TNTET COURT NEWS - சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (20.03.14)

(20.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு TET 2012 மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை அரசின் தரப்பில் அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் நடைபெறவில்லை .

TRB PG TAMIL பி வரிசை கருணை மதிப்பெண்: நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?

முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக கருணைமதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?
நீதிமன்றத்தை நாட TRB முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி மற்றும் சில்லரை செலவின பணியாளர்கள், 10ஆண்டு பணிமுடித்த நாள் பணிவரன்முறைப்படுத்துதல் - வழக்குகள் மற்றும் வழக்குகளின் மீது பெறப்பட்ட தீர்ப்பாணை சார்பு

முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூல் - சி.பி.எஸ் .சி பள்ளிகள்

தமிழகம் முழுவதும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் இயங்கி வரும் பள்ளிகளில், 2014 - 15ம் ஆண்டு மாணவர் சேர்க்கை, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னணி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தடுக்க வேண்டிய, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளும், கட்டண நிர்ணய குழு அலுவலர்களும், வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும். ஊழியர்கள் - விடுப்பு எடுப்பதை தவிர்த்து தேர்தல் பணியில் ஈடுபட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

பொது தேர்வுகளில் "ஜெல்' பேனா பயன்படுத்தலாமா?

பொது தேர்வுகளில், "ஜெல்' பேனாவை பயன்படுத்தலாம்' என, கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது. பொது தேர்வுகளில், விடை எழுத, பெரும்பாலான மாணவ, மாணவியர், நீல நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர். சிலர், கறுப்பு நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர்.

உயிரியல் தேர்வு எப்படி : பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியை கருத்து

உயிரியல் பாடத்தில்,200 மதிப்பெண் பெறுவது கடினமே,'என,பிளஸ் 2 மாணவர்கள்,ஆசிரியை கருத்து தெரிவித்துள்ளனர். கே.அபிநயா (மாணவி, என்.எம்.ஆர்.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்): உயிரியல் பாடத்தில், விலங்கியலில் 10, 3 மார்க் கேள்விகள் எளிதாக இருந்தது. ஐந்து மார்க் கேள்விகள் கட்டாய வினாக்கள் மட்டுமின்றி, எதிர்பாராத கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது. 

SCERT - தேசிய அளவிளான அடைவு ஆய்வு மூன்றாம் வகுப்பிற்கு 2013 ஆம் ஆண்டிற்க்கு தமிழ் நாட்டிலுள்ள பள்ளிகளில் நடத்துவதற்கு மாவட்ட அளவில் களஆய்வாளற்களுக்கு அறிவுரை வழங்குதல் ....

பள்ளிகளில் ஆய்வு ஆனது ஏப்ரல் மாதம் 10,11 மற்றும் 15,16 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடை பெறுகிறது ......................... 

தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் -பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக பட்டியல் வெளியிட முடிவு.

DEE - கரும்பலகை திட்டத்தின் கீழ் 1610 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.1.2014 முதல் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது


SCERT - தேசிய அடைவுத் திறன் தேர்வு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 11 மற்றும் 15,16 ஆகிய தேதிகளில் 15மாவட்டங்களில் நடத்த திட்டம்

TNPSC - Results of Departmental Examinations - DECEMBER 2013

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!