TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Saturday, May 31, 2014

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று 12ல் வினியோகம்


சென்னை: 'பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு, வரும், 12ம் தேதி, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு: கடும் வெயிலால், தள்ளிவைக்க வலியுறுத்தல்


பள்ளி கல்வித் துறை அறிவிப்புப்படி, தமிழகம் முழுவதும், நாளை (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், 'அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் கொடுமை நீடிப்பதால், பள்ளி திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு, தள்ளிவைக்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

பணி நிரவல் டிரான்ஸ்பர் தயார் பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்கள் கடும் பீதி-tamilmurasu.org

தமிழகம் முழுவதும் வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பணி நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்களை மாற்றம் செய்ய கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதனால், பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்கள் கடும் பீதியில் உள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளிகள் ஜுன் 4ம் தேதி திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகள் வரும் 4ம் தேதி திறக்கப்படுகிறதுஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம்
தேதி அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
கடும் வெயில் காரணமாக, கோடை விடுமுறை நீடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் புதுச்சேரியில்  ஜூன் 4ம் தேதி அரசு பள்ளிகளை மீண்டும் திறப்பது என பள்ளிக் கல்வித்துறை முடிவு

தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு? DINAMALAR TRICHY EDITION

கடுமையான வெயில் காரணமாக இன்று (31.05.2014 )சனிக்கிழமை கல்வி அதிகாரிகள் சென்னையில் இறுதி ஆலோசனை செய்து தொடக்கப்பள்ளிகளுக்கு

Friday, May 30, 2014

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு

திண்டுக்கல்: பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: 9ம் தேதி வரை வினியோகம்


சென்னை: ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசம், ஜூன், 9ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த, 14ம் தேதி முதல், விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்,

பி.இ., 'கவுன்சிலிங்' அட்டவணை: ஓரிரு நாளில் வெளியிட திட்டம்

சென்னை: 'பி.இ., கலந்தாய்வு அட்டவணை, ஓரிரு நாளில் வெளியாகும்' என, அண்ணா பல்கலை வட்டாரம், நேற்றிரவு தெரிவித்தது.

பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, கடந்த, 27ம் தேதி வரை, மாணவர்கள் விண்ணப்பித்தனர். பதிவு அஞ்சல் மூலம் அனுப்பிய விண்ணப்பங்கள், நேற்றும், அண்ணா பல்கலைக்கு வந்தன. இன்று, மேலும் சில விண்ணப்பங்கள் வரலாம் என, தெரிகிறது.

ஜூன் 23ம் தேதி பி.இ., கலந்தாய்வு துவக்கம்: அண்ணா பல்கலை அறிவிப்பு


சென்னை: 'பி.இ., கலந்தாய்வு, ஜூன், 23ம் தேதி துவங்கும்' என, அண்ணா பல்கலை, நேற்று அறிவித்தது. வரும் கல்வி ஆண்டில், பி.இ.,- பி.டெக்., படிப்புகளில் சேர, 1.75 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்த அட்டவணையை, அண்ணா பல்கலை, நேற்று மாலை அறிவித்தது.
அதன் விவரம்: * 'ரேண்டம்' எண் வெளியீடு - 11.6.14 * 'ரேங்க்' பட்டியல் வெளியீடு - 16.6.14 * விளையாட்டு பிரிவின் கீழ் பெறப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு - 13.6.14 முதல், 16.6.14 வரை * விளையாட்டு பிரிவுக்கான, 'ரேங்க்' பட்டியல் வெளியீடு - 17.6.14

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள்

10 ஆயிரம் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் வெளியீடு

புதிய பள்ளிகள், மேல்முறையீடு செய்த பள்ளிகள் உள்பட 10 ஆயிரத்து 55 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
நீதிபதி எஸ்.சிங்காரவேலு குழு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு கட்டணம் நிர்ணயம் செய்தது. 2013-14, 2014-15, 2015-16 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து இந்தக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

திட்டமிட்டபடி ஜூன் 2-இல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளி கல்வித் துறை

கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் திட்டமிட்டபடி ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது சில நாள்கள் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திட்டமிட்டவாறு பள்ளிகளை ஜூன் 2-ஆம் தேதியே திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது.

பள்ளி திறப்பு நாளில் நோட்டு, புத்தகம் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: இணை இயக்குனர் எச்சரிக்கை

பள்ளி திறக்கும் நாளில், விலையில்லா நோட்டு, புத்தகங்களை வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்,

50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு

50 மாணவர்களும், அதற்கு மேலும் உள்ள இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை நிகழாண்டில் தொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு ஆங்கில வழிக்கல்வியை கடந்தாண்டு தொடங்கியது. இதில், கடந்தாண்டு முதல் வகுப்பு, 6-ஆம் வகுப்புகளில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க கட்டாயமாக்கப்பட்டது.
மேலும், மூன்று ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளை தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 10.6.2014 முதல் 13.06.14 வரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவதற்கான கடைசி வாய்ப்பு

Thursday, May 29, 2014

சென்னை பல்கலை, தொலைதுார கல்வி திட்டத்தின் கீழ், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் பட்டப்படிப்புகளில் சேரநாளை கடைசி நாள்

சென்னை;சென்னை பல்கலை, தொலைதுார கல்வி திட்டத்தின் கீழ், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, நாளை, 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க திட்டம்

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை

கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள் எம்.எட். படிப்பில் சேரலாம். அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளியிலோ தற்போது பணியில் இருக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்

அமைச்சரின் ஆலோசனையின்படி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் உபரியாக எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்று கணக்கெடுக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதனால் டிஇடி தேர்வு எழுதிய பட்டதாரிகள் வேலை கிடைக்காதோ என கலக்கம் அடைந்துள்ளனர்.

TNPSC DEO Exam Hall Ticket Download - 2014

TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி .....28.5.2014 FN,THE ACCOUNTS TEST FOR EXECUTIVE OFFICERS - 117 - தாளில் கொடுக்கப்பட்ட VI கணக்கு கேள்வியில் குளறு படி.25 மதிப்பெண் வழங்க கோரிக்கை.

VI வது கேள்வியில் கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ் வழியில் SPECIAL ALLOWANCE - Rs 1000  ஆனது கொடுக்கப்படவில்லை ஆனால் ஆங்கிலத்தில் SPECIAL ALLOWANCE - Rs 1000  என்று கொடுக்கபட்டிருந்தது. இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு ......அந்த SUPERVISORS களுக்கு எதுவும் தெரியவில்லை 
பிறகு அவர்களில் சிலர் ஆங்கிலத்தில் கொடுத்த வினாத்தாள் தான் சரியானது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது படி போடவும் என்று அவர்களில் சிலர் கூறினர் ஒரு சில தேர்வு மையங்களில்  தமிழ் வழியில் எழுதுபவர்கள் அந்த கேள்வியில் குறிப்பிட்டுள்ளது  படி விடை அளிக்குமாறு அவர்களை அறிவுறுத்தியதாக  நமக்கு தகவல் கிடைத்துள்ளது ..............

இது குறித்து TNPSC - முறையான அறிவிப்பு வெளியிட்டு அந்த தேர்வில் தமிழ் வழியில் எழுதிய அரசு ஊழியர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதே எல்லோரது கோரிக்கையாக உள்ளது.


Wednesday, May 28, 2014

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம்: கோவை மாவட்ட கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'

கோவை: அரசு பள்ளிகளில், முறைகேடாக, ஆசிரியர் நியமனத்துக்கு துணை போனதாக, கோவை மாவட்ட கல்வி அதிகாரி, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

விருதுநகர்: அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

ராமநாதபுரம்: தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்

மதுரை: ''கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை நீக்குவது, குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை எனில் போராட்டம்

சமீபத்தில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள், பெரிய அளவிற்கு தேர்ச்சி பெறவில்லை என்பதும், மதிப்பெண் குறைவாக பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. பள்ளியில், அலுவலக பணியாளர் பணியிடங்களும், அதிகளவில், காலியாகவே உள்ளன. இந்த பணியையும், ஆசிரியர் செய்ய வேண்டி உள்ளது.

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு

பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன.

அழகப்பா பல்கலைக்கழகம் பி.எட். விண்ணப்ப தேதி நீட்டிப்பு.......

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட். (இரண்டாண்டு காலம்) படிப்புக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை, அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி இயக்ககத்தில் பெற்று "இயக்குனர், தொலை தூர கல்வி இயக்ககம், அழகப்பா பல்கலைக் கழகம்" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Tuesday, May 27, 2014

உபரி என்ற பெயரில் பந்தாட திட்டம்? கலக்கத்தில் ஆசிரியர்கள்

தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல் தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு முன்பு உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுமோ என்ற கலக்கம் ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது.
ஒவ்வொரு, ஆண்டும் மே இறுதியில் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூன் மாதம் புதிய பள்ளிகளில் பணியல் சேர்வது வழக்கம். ஆனால், இக்கல்வியாண்டிற்கான கலந்தாய்வு குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

பள்ளிகளை தாமதமாக திறக்க கோரிக்கை

கடும் வெயில் சுட்டெரிப்பதால் இந்தாண்டு பள்ளிகளை தாமதமாக திறக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்தியாவின் புதிய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி!

இந்தியாவில் பதவியேற்ற நரேந்திர மோடி அரசில், மத்திய மனிதவளத் துறையின் கேபினட் அமைச்சராக ஸ்மிருதி சுபின் இரானி நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடியின் அமைச்சரவையில் யார், யாருக்கு என்னென்ன துறை? ஸ்மிரிதி இரானி - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

மோடியின் அமைச்சரவையில் யார், யாருக்கு என்னென்ன துறை கிடைக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன் விவரம் 

வருமாறு, 

1. ராஜ்நாத் சிங் - உள்துறை 2. அருண் ஜேட்லி - நிதி மற்றும் பாதுகாப்புத் துறை 3. நிதின் கட்காரி - போக்குவரத்து துறை 4. சுஷ்மா ஸ்வராஜ் - வெளியுறவுத் துறை 5. வெங்கையா நாயுடு - நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, நாடாளுமன்ற விவகாரத் துறை 6. சதானந்த கவுடா - ரயில்வே துறை 7. உமா பாரதி - நீர்வளம் மற்றும் கங்கை சுத்தப்படுத்தும் துறை 8. நஜ்மா ஹெப்துல்லா - சிறுபான்மையினர் நலத்துறை 9. கோபிநாத் முண்டே - ஊரக வளர்ச்சித் துறை 10. ராம்விலாஸ் பாஸ்வான் 11. கல்ராஜ் மிஸ்ரா 12. மேனகா காந்தி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை 13. அனந்த் குமார் 14. ரவி சங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் தொலைதொடர்புத் துறை 15. அசோக் கஜபதி ராஜு - விமான போக்குவரத்து துறை 16. அனந்த் கீதே 17. ஹர்சிம்ரத் கவுர் பாதல் 18. நரேந்திர சிங் தோமார் 19. ஜுவல் ஓரம் 20. ராதா மோகன் சிங் - விவசாயம் 21. தவார் சந்த் கெஹ்லாட் 

22. ஸ்மிரிதி இரானி - மனிதவள மேம்பாட்டுத் துறை 

Sunday, May 25, 2014

ஜூன் 12ல் எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் :விண்ணப்பம் பெற 5 நாள் தான் இருக்கு!

சென்னை : எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல், அடுத்த மாதம், 12ம் தேதி வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இதுவரை, 27 ஆயிரம் பேர் 

தேர்ச்சி சதவீதம் குறைவு சி.இ.ஓ.,க்களுக்கு சிக்கல்

சிவகங்கை : பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து மாவட்ட

தலைமை ஆசிரியர்களாக பணிமாற ஏ .இ .இ .ஓ .,க்களுக்கு வாய்ப்பு

உதவி கல்வி அலுவலர்கள் ,தலைமை ஆசிரியர்களாக   பணிமாறிய பின் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான   பதவி  உயர்வு இடமாறுதல்  கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

SPECIAL TET EXAM KEY ANSWERS DOWNLOAD - 2014 ......

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.......

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 30.05.2014 (வெள்ளிக்கிழமை) வரை தேர்வுக்கட்டணம் ரூ.125/-ஐ பணமாக செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

2014 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 31.05.2014 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு  (Retotalling)    விண்ணப்பிக்கலாம். மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர்     26.05.2014 (திங்கட்கிழமை) முதல்  31.05.2014 (சனிக்        கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.  

Saturday, May 24, 2014

DEPARTMENTAL EXAM - DECEMBER - 2013 BULLETIN PUBLISHED

Bulletin No.View/Download
Bulletin No. 7 dated 16th March 2014(contains results of Departmental Examinations, December 2013)View
Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013)View

பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் - 790 பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மே 2014 மாததிற்கான ஊதியம் வழங்க உத்தரவு

Expected DA From July 2014-Possibility Of Increase Of DA By 6%

Dearness Allowance is given twice a year in the months of January and July. The benefit of this allowance is being enjoyed by both central and state government employees. Every time when the DA is given, there is an increasing curiosity among central and state government employees to know in advance the DA that they will get the next time. As everyone knows well, DA is calculated based on the increase of the price of the essential commodities. Hence, the expectation of the central and state government employees about the DA that they are going to get in the month of July 2014 is quite reasonable.

கடும் வெயில் எதிரொலி: பள்ளி திறப்பு தேதி மாறுமா?

அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் தருவாயிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலை, மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்பதால், தமிழகத்தில், பள்ளி திறப்பு தேதியை, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

ஏ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்.

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவிதொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Friday, May 23, 2014

பள்ளி பாடப்புத்தகங்களுக்கான 'நோட்ஸ்' விலை அதிகம்: 'சிடி'யை காரணம் காட்டி விலை 40 சதவீதம் உயர்வு


தமிழக 'நோட்ஸ்' தயாரிப்பு நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலை உ-யர்வை காரணம் காட்டி, நோட்ஸ்களின் விலையில், கடந்த மாதம், 25 சதவீதம் அதிகரித்த நிலையில், நோட்ஸ்களுடன் 'சிடி'யும் வழங்குவதாக கூறி, மேலும், 15 சதவீத விலையை உயர்த்தி உள்ளன.

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வ தமிழ் வினாக்களில் பிழைகள்


திண்டுக்கல்:மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில், கேட்கப்பட்ட தமிழ் வினாக்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. இதனால், தேர்வர்கள் சிரமப்பட்டனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மே 21 ல் ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்தது. 4,476 பேர் பங்கேற்றனர். தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. 'டி

சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்தியது சாதனைக்கு உதவியது: .2 ம் இடம் பிடித்த தேனி மாணவர்கள் பேட்டி


தேனி:பத்தாம் வகுப்பு பொது தேர்வில், 498 மதிப்பெண்கள் பெற்று, தேனியை சேர்ந்த இருவர், மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றனர்.

எம்.சத்தியசெல்வன், மேரி மாதா மெட்ரிக்., பள்ளி, தேனி: பள்ளியிலும், வீட்டிலும் படிக்க நல்ல சூழ்நிலை உருவாக்கி தந்தனர். படிக்க தனியாக நேரம் ஒதுக்குவதில்லை. எப்பொழுது படிக்க தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் படிப்பேன்.

500/500 மாநிலத்தில் முதலிடம் மதுரை மாணவி சாதனை

மதுரை:மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவி துர்கா தேவி, 10ம் வகுப்பு தேர்வில் 500 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தில், சமஸ்கிருதத்தை முதல்பாடமாக படித்த இவரது இந்த சாதனை, பள்ளி, மாவட்ட அளவிலும் புதிய வரலாறாக இடம்பெற்றுள்ளது.

எழுதிப் பார்த்தால் முழு 'மார்க்'

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.அபிநயா 498 மதிப்பெண்ணுடன் (தமிழ்- 98, ஆங்கிலம் -100, கணிதம்- 100, அறிவியல்- 100, சமூக அறிவியல்- 100) மாநில ?ம் இடம் பிடித்தார்.

'டென்ஷன்' தவிர்த்தேன் தேர்வில் சாதித்தேன் : மாணவி சஞ்சனா


புதூர்:"பதட்டமில்லாமல், ஆர்வத்துடனும் தேர்வு எழுதியதால் அதிக மதிப்பெண் எடுத்து சாதிக்க முடிந்தது," என பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி சஞ்சனா தெரிவித்தார்.மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் அருண், மதுரையில் வியாபாரம் செய்து வருகிறார். அம்மா பிரியா. இவர்கள் மகள் சஞ்சனா. திருப்பாலை ஜெயின் வித்யாலயா பள்ளியில் படிக்கும் இவர், மாநில அளவில் முதலிடம் பெற்றார். இவர், தமிழில் 99, பிற பாடங்களில் தலா 100 என, மொத்தம் 499 மதிப்பெண்கள் பெற்றார்.

'பள்ளியில் கற்றுத்தரும் பாடங்களை அன்றே படிப்பேன்'

பொள்ளாச்சி:''படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் 'டிவி' பார்ப்பேன்,'' என மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவி பிருந்தா ஹாசினி தெரிவித்தார். பொள்ளாச்சி பி.வி.எம்., பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி பிருந்தா ஹாசினி, 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும்;

மாநில அளவில் மதிப்பெண் பெற விளையாட்டும் உதவியது

உடுமலை:''பொதுத்தேர்வில், மாநில அளவில் மதிப்பெண்கள் பெற விளையாட்டும் முக்கிய பங்கு வகித்தது,'' என மாநில அளவில் 2ம் இடம் பெற்ற உடுமலை சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மாலினி தெரிவித்தார்.இம்மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார்.

'தினசரி பயிற்சி அதிக மதிப்பெண் பெற முடிந்தது'மாநிலத்தில் 3ம் இடம் பெற்ற மாணவி


பொள்ளாச்சி:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 497 மதிப்பெண்கள் பெற்று மாநில மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த பொள்ளாச்சி மாணவர்கள் தங்களது வெற்றி ரகசியங்களை விளக்கினர். பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி பவதாரிணி: ஆசிரியர்கள் தினசரி பயிற்சி அளித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. 'தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாநில அளவில் மதிப்பெண் பெற இந்த நிகழ்ச்சி ஊக்கமாக இருந்தது. ஆடிட்டராக விருப்பம்.

பத்தாம் வகுப்பில் 90.7% தேர்ச்சி: மாநில அளவில் 19 பேர் முதலிடம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 19 மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை, 400-ஐ கடந்திருப்பது புதிய வரலாறு ஆகும்.
அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தேவராஜ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
19 பேர் முதலிடம்; 125 பேர் இரண்டாம் இடம்; 321 பேர் முன்றாம் இடம்
தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை, 321 பேர் பிடித்துள்ளனர்.
சென்னைக்கு முதலிடம் இல்லை:
தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்து, 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற 19 பேரில் ஒருவர் கூட தலைநகர் சென்னையைச் சேர்ந்தவர் இல்லை. அதிகப்படியாக தர்மபுரி மாவட்டத்தில், 9 பேர் முதலிடம் பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முதலிடம் பெற்றவர்களின் ஒரே ஒரு மாணவர் இடம் பெற்றுள்ளார்.
முதலிடம் பெற்றவர்கள் விபரம்:
1. அக்‌ஷயா, தர்மபுரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி.
2. பஹிரா பானு, பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி.
3. தீப்தி, தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவி.
4. தீப்தி, தர்மபுரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் பள்ளி மாணவி.
5. காவ்யா, கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி.
6. கயல்விழி, தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி
7. கீர்த்திகா, கள்ளக்குறிச்சி வான்மதி மெட்ரிக் பள்ளி மாணவி.
8. கிருத்திகா, தர்மபுரி ஸ்ரீ விஜய்வித் மெட்ரிக் பள்ளி மாணவி
9. மகேஷ்லகிரு, பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி மாணவர்.
10. மைவிழி, தர்மபுரி ஸ்ரீ விஜய் வித் மந்திர் பள்ளி மாணவி.

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.
பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.
வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:

10 th results -----sslc results 2014 may.......click here to view

Wednesday, May 21, 2014

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை, நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை வெளியிடுகிறது.


சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை, நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை வெளியிடுகிறது. 10.38 லட்சம் மாணவர்கள், தேர்வு முடிவை, ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல் கோரி, 26ம் தேதி முதல், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.


சென்னை: ""பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல் கோரி, 26ம் தேதி முதல், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, 23ம் தேதி காலை (நாளை), 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வை, தனிதேர்வாக எழுதிய மாணவர்களுக்கு, 23ம் தேதியே, சம்பந்தபட்ட மையங்களில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 3,000 பேர், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில், "கட்-ஆப்' மதிப்பெண், 185க்கும் அதிகமாக பெற்று, சாதனை படைத்து உள்ளனர்.


சென்னை: தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 3,000 பேர், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில், "கட்-ஆப்' மதிப்பெண், 185க்கும் அதிகமாக பெற்று, சாதனை படைத்து உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த, 9ம் தேதி வெளியானது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது.

பள்ளி மாணவர்களுக்கான, இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம், மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படவுள்ளது.


பள்ளி மாணவர்களுக்கான, இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம், மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படவுள்ளது. இதற்கிடையே, பள்ளிகளின் நிர்வாகத்தினர், பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பங்களை, போக்குவரத்துக் கழகங்களில் இருந்து பெற்று செல்கின்றனர்.

TNPSC வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?


சென்னை: ஜூன், 14ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கு, விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா என்பதை, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்வாணையத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: ஜூன், 14ல் நடக்கும் வி.ஏ.ஓ., போட்டித் தேர்வுக்கு, 9.95 லட்சம் பேர், விண்ணப்பித்து உள்ளனர். 2,342 காலி பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு, நடத்தப்பட உள்ளது. தேர்வெழுத, முறையாக விண்ணப்பித்து, உரிய கட்டணங்களை செலுத்திய தேர்வர்களின் விவரம், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது.

12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு


பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. 

தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும்.
இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

மதிப்பெண் சான்றிதழில் எழுத்து பிழையா? : தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்' உறுதி


"பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக, தேர்வுத் துறை வழங்கிய சுற்றறிக்கையை, சரியாக அமல்படுத்தாத தலைமை ஆசிரியர் மீது, "சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத் துறை நேற்று தெரிவித்தது.

சிறப்பு டி.இ.டி., தேர்வில் 4,476 பேர் பங்கேற்பு

தமிழகத்தில், நேற்று நடந்த, மாற்றுத் திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 4,476 பேர், பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கென, தனியாக, சிறப்பு டி.இ.டி., தேர்வை (இரண்டாம் தாள்) நடத்த, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, இத்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும், 39 மையங்களில் நடந்தது. காலை, 10:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, தேர்வு நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக, கூடுதலாக, ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இதில், பார்வையற்றவர்கள்,

அரசு ஊழியர்களிடம் தி.மு.க., செல்வாக்கு சரிவு: லோக்சபா தேர்தலில் வெட்ட வெளிச்சம்

அரசு ஊழியர்களிடமும், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருவது, தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். காலம் காலமாக இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தது. ஆனால், அது தற்போதைய தேர்தல் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது.

Tuesday, May 20, 2014

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வினியோகம்

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த, 9ம் தேதி வெளியானது. 8.21 லட்சம் பேர் தேர்வெழுதியதில், 7.44 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். 77 ஆயிரம் பேர், தோல்வி அடைந்தனர்.

சி.பி.எஸ்.இ., 99.94 சதவீதம் 'பாஸ்!'


சென்னை : சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழக மாணவர்கள், 99.94 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். தேர்வு முடிவு, நேற்று முன்தினம் மாலை, சி.பி.எஸ்.இ., இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. 

25 ஆயிரத்தை தாண்டியது எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்

சென்னை : தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு, 15 சதவீதம் போக, மீதம், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 14ம் தேதி துவங்கியது.

திருச்சியில் நடைபெற்ற இரட்டைப்பட்டம் வழக்கின் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் மாவட்ட தொடர்பாளர்கள் அறிவிப்பு

திருச்சியில் கடந்த 18.5.2014 அன்று இரட்டைப்பட்டம் ஒருங்கிணைப்பு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலின் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை வருமானவரி துறை ஆய்வாளர் திரு.மீரான் இப்ரான் அலி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் இதுவரை நீதி மன்றத்தில் நடந்த வழக்கின் தன்மை மற்றும் தற்போதைய உச்ச நீதி மன்றத்தில் வழக்கின் நிலை குறித்து வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி,

Departmental Examinations, May, 2014 Memorandum of Admission (Hall Ticket)


Departmental Examinations, May, 2014
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 24.05.2014 to 31.05.2014)
 
           Enter Your Application Number :DEM14                                  
                                                                                          Date                  Month             Year
                Enter Your Date of Birth         :                    /                /   
                                                                                              
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

பள்ளி திறப்பு ஒத்தி வைப்பு: கல்வித்துறை ஆலோசனை


Monday, May 19, 2014

முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை

சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக

பி.இ., விண்ணப்பம் வழங்கும் தேதி நீட்டிப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: பி.இ., விண்ணப்பம் வழங்கும் தேதியை, வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.

கடந்த, 3ம் தேதி முதல், பி.இ., விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதுவரை, இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளன. அண்ணா பல்கலை, ஏற்கனவே அறிவித்தபடி,

நாளை நடக்கிறது சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: 4,692 பேர் பங்கேற்பு

விருதுநகர்: மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர்.

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), சென்னை மண்டல, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.

மார்ச் மாதம், நாடு முழுவதும், 10ம் வகுப்பு தேர்வு நடந்தது. சி.பி.எஸ்.இ.,யை பொறுத்தவரை, பள்ளி அளவிலான தேர்வு, சி.பி.எஸ்.இ., போர்டு அளவிலான தேர்வு என, இரு வகையாக நடக்கிறது. இதில், போர்டு தேர்வில், அதிக மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

கீழ் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி பிளஸ் 2 தோல்விக்கு காரணம் முதுநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம்.

ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரம் ரத்தாகுமா? பரபரப்பை ஏற்படுத்திய அரசின் கடிதம்.


அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரிய சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் செயல்படுகின்றன. கடந்த மார்ச் 6ம் தேதி "இடை நிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி ஆகிய சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, பல ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

Sunday, May 18, 2014

ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பம் பெறாததால் தயக்கம்


காரைக்குடி: தமிழகத்தில், ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்கிற்கு, இதுவரை விருப்பம் கோரி விண்ணப்பம் பெறாமல் இருப்பதால், ஆசிரியர்கள் தயக்கம் அடைந்துள்ளனர். தொடக்க, நடுநிலை, உயர்,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கிற்கு, ஆசிரியர்களிடம் ஏப்ரலில் விருப்ப மனு பெற்று, மே- மாதத்தில் அந்தந்த சி.இ.ஓ.,க்கள் முன்னிலையில், கவுன்சிலிங் நடத்தப்படும்.

காற்று வாங்கும் தொடக்க கல்வி பட்டய படிப்பு : ஒதுக்கீடு இருந்தும் விண்ணப்பிக்க ஆள் இல்லை


தகுதி தேர்வால், தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு, அரசின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஒதுக்கீடு இருந்தும் விண்ணப்பம் பெற ஆள் இல்லாமல், காற்று வாங்குகிறது.
தமிழக அரசின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு சான்றுகளை வழங்கி வருகின்றன. அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர, பிளஸ் 2 தகுதி மட்டுமே தேவை என்பதால், கடந்த காலங்களில் ஏராளமானோர் சேர்ந்தனர்.

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் ஏழை, நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அறிமுக வகுப்புகளில் (எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு) 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த இடஒதுக்கீட்டு இடங்களுக்கு மே 18 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்த வலியுறுத்தல்

மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பேனல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

மதுரை மாவட்ட கல்வித்துறையில் நிரம்பும் பணியிடங்கள்

மதுரை மாவட்ட கல்வித்துறையில் பல முக்கிய பணியிடங்கள் பொறுப்பு அலுவலர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன.
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாக இருந்த ரவி (மேல்நிலை பள்ளிகள்) விருப்ப ஓய்வு பெற்றார். சீனிவாசன் (உயர் நிலை பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார் (தற்போது ஓய்வு).

பத்தாம் வகுப்பு சான்றிதழை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தல்

பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள மாணவர்கள், பத்தாம் வகுப்பில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த சான்றிதழை தயார் நிலையில் வைத்துக்கொள்ள, கோவை மண்டல வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் ஜோதிமணி அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளன்று மாணவர்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யவேண்டி அலைமோதும் நிலை இருந்தது. இதனால் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டுவருகிறது.

ஆசிரியரெல்லாம் நொந்து இருக்காங்க...தினமலர் டீக்கடை பெஞ்ச்

ரெண்டு அமைச்சர்களும் நழுவியதால, ஆசிரியரெல்லாம் நொந்து போயிருக்காங்க பா...'' எனக் கூறியபடியே, பெஞ்சில் வந்தமர்ந்தார் அன்வர்பாய்.
''அமைச்சருங்க யாரு... ரகசிய துாது எதுக்காமுங்க...'' என, கேட்டார் அந்தோணிசாமி.

குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை பெற்றோருக்கு உண்டா?

பணியில் இருக்கும் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் அந்த ஊழியரின் மனைவியோ, கணவரோ அல்லது பிள்ளைகளோ குடும்ப ஓய்வூதியம் பெற முடியும் என்பது தெரியும். ஆனால், திருமணம் ஆகாத ஊழியர் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுமா? அந்த ஊழியரின் பெற்றோருக்கு அதைப் பெறும் உரிமை உண்டா? இந்த சந்தேகம் பலருக்கும் உள்ளது. 

பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கல்வி சார்ந்த அம்சங்கள் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள்

பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கல்வி சார்ந்த அம்சங்கள் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் 

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி தொடபான சில முக்கிய அம்சங்கள்:

கல்வித்திட்டம், ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ஆகியவை, ஆய்வு செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்படும்

Saturday, May 17, 2014

பிளஸ் 2 மதிப்பெண்பட்டியல் விநியோகம்

மதுரை:மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், அந்தந்த பள்ளிகளுக்கு நேற்று வழங்கப்பட்டது.மே 9ல் வெளியான தேர்வு முடிவுகளை அடுத்து, 21ம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்குவதாக தேர்வுத் துறை அறிவித்திருந்தது.

ஆர்.டி.இ., விண்ணப்ப வினியோகம்: வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

'இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், விண்ணப்ப வினியோகத்தை வேகப்படுத்த வேண்டும்' என, சென்னையில், நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், இயக்குனர், பிச்சை உத்தரவிட்டார்.

8,000 விண்ணப்பங்கள்:




ஆர்.டி.இ., கீழ், 60 ஆயிரம் இடங்கள் உள்ள போதும், 8,000 விண்ணப்பங்கள் மட்டுமே வினியோகிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பம் வழங்க, வரும், 31ம் தேதி கடைசி நாள். போதிய அளவிற்கு, தனியார் பள்ளிகள் விண்ணப்பம் வழங்காதது, கல்வித் துறையை கவலை அடையச் செய்துள்ளது.

40 பி.எட்., கல்லூரிகளுக்கு என்.சி.டி.இ., அனுமதி

சென்னை: தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 40, பி.எட்., கல்லூரிகளுக்கு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ.,), அனுமதி வழங்கி உள்ளது.

கல்வி கடனுக்கு 'பான்கார்டு' அவசியம்

திண்டுக்கல்: வங்கிகளில் கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்களுக்கு, 'பான்கார்டு' அவசியம் என்பதால், அதை பெறுவதற்கான முயற்சியை உடனே துவக்கினால், கடன் பெறவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கலாம்.

ஜூன் மாதத்தில் பதவி உயர்வு: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை: மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 'பேனல்' வெளியிடப்பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' விரைவில் நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: தேர்வுத்துறை புது நடவடிக்கை

விருதுநகர்: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, எவ்வித பிழையும் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்பு!!!

மே 22ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என்றுஎதிர்ப்பார்க்கப்படுகிறதுஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்புவிரைவில் வெளியாக வாய்ப்பு!!!

Friday, May 16, 2014

இரட்டைப்பட்டம் ஒருங்கிணைப்பு கூட்டம். 18.5.2014 அன்று திருச்சியில் நடைபெறுகிறது.

இரட்டைப்பட்டம் பயின்று முடித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹேட்டலில் வருகிற 18.4.2014 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இது குறித்து வழக்கை எடுத்து நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் கூறியதாவது

இரட்டப்பட்டம் வழக்கு குறித்து வழக்குரைஞரின் கடிதம் .......

தேர்தல் முடிவு முன்னணி நிலவரம் .........2014

இந்தியா
கட்சிகள் முன்னிலை முடிவு
பா.ஜ. கூட்டணி 59 336
காங்., கூட்டணி 13 34
திரிணமுல் காங்., - 34
இடதுசாரி -
சமாஜ்வாடி -
பகுஜன் சமாஜ் 0
பிஜு ஜனதா 0
தெ.ரா.ச., -
ஐ.ஜ.த., 0
ஆம் ஆத்மி - 4
மற்றவை 109
தமிழ்நாடு
கட்சிகள் முன்னிலை முடிவு
அ.தி.மு.க., - 37
தி.மு.க., 0
பா.ஜ.க., 1
காங்கிரஸ் 0
ம.தி.மு.க., 0
பா.ம.க., 1
தே.மு.தி.க., 0
விசி 0
மற்றவை 0

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!