TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Monday, June 30, 2014

அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு: குடிநீருக்காக அவசரகால திட்டம் தயாரிக்க வேண்டும்

புதுடில்லி:குடிதண்ணீர் சப்ளைக்காக, அவசரகால திட்டம் ஒன்றை தயாரிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை, ஜூன் மாதத்தில், எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. வழக்கத்தை விட, 42 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. 113 ஆண்டுகளில், 12வது முறையாக, வழக்கத்தை விட, மழை குறைவாக பெய்துள்ளது.அதேநேரத்தில், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், 80 சதவீதம், மழை குறைவாக பெய்துள்ளது. எனவே, நாட்டின் பல பகுதிகளில், கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.அதனால், வறட்சி நிலவரங்களை சமாளிக்கும் வகையில், குடிநீர் சப்ளைக்காக, அவசரகால திட்டம் ஒன்றை தயாரிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

முதல் 'ரேங்க்' மாணவர்களுக்கு முதல்வர் 4ம் தேதி பரிசு வழங்குகிறார்: 2, 3ம் இடம் பிடித்தவர்களுக்கு அமைச்சர் வழங்குவாராம்

நீண்ட இழுபறிக்குப் பின், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில அளவில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த, 470 மாணவர்களுக்கு, வரும், 4ம் தேதி, சென்னையில், இரு இடங்களில் நடக்கும் விழாவில், பரிசு வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பிடித்த ஒருவர், 10ம் வகுப்பு தேர்வில், முதலிடம் பிடித்த, 19 பேருக்கு மட்டும், முதல்வர், ஜெயலலிதா, பரிசு வழங்குவார் என்றும், இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் நடக்கும் விழாவில், கல்வி அமைச்சர், வீரமணி பரிசு வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகை

சென்னை: கல்கி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கி.ராஜேந்திரன் கூறியதாவது:

இட மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்: 'ஆன்லைன்' குளறுபடியால் ஆசிரியர்கள் ஆவேசம்

திருப்பூர்: திருப்பூரில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நீலகிரி மாவட்டத்தில், பணியிடம் காலி இல்லை என 'ஆன்லைன்' தகவல் வந்ததால், ஆசிரியர்கள் ஆவேசம் அடைந்தனர்.

பிளஸ் 2 படிக்காமல் நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியரான பெண்

பிளஸ் 2 படிக்காமல் இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்பயிற்சி பெற்ற பெண், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடுநிலைப்பள்ளி பட்டதாரி
தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
OC - 508
BC - 22172

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853 
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295

டி.இ.ஓ. இன்று ஓய்வு கூடுதல் பொறுப்பை ஏற்க 20 தலைமையாசிரியர்கள் மறுப்பு

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வரும் பிரபு ராதாகிருஷ்ணன் (58). இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வின் மூலம் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார்.

அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்... : காலி பணியிடங்களால் திண்டாட்டம்

பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு,
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், 'உடற்கல்வி ஆசிரியர் காலிபணியிடம், உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமல், இதுபோன்ற நடவடிக்கைகளால், பலனில்லை' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும், 44 ஆயிரத்து 976 துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், உடற்கல்வி

இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைக்கப்பட்டது தொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற்றும் மேல்நிலைக் கல்வி இணை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது. எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சுய நிதிப் பள்ளிகளையும், மானியத் திட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்ன?

பள்ளிகள் திறந்துவிட்டன. ஏராளமான பெற்றோர், நல்ல பள்ளிக்கூடம் எது என்று தேடி அலைந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எவ்வளவு பணம் செலவானாலும் அதனைக் கடன் வாங்கியாவது சமாளிக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்கள் பற்றியெல்லாம் ஊடகங்களில் விலாவாரியாக எழுதியாகிவிட்டது.

Sunday, June 29, 2014

தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்

பிற மாவட்டத்தை பற்றி அறிந்தவர்கள் "COMMENT BOX"ல் பதிவிடலாம்...
=========================================================
திருவண்ணாமலை மாவட்டம்
*********************************************
டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளி,
பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை

ஈரோடு மாவட்டம்
*****************************
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
ஈரோடு

விருதுநகர் மாவட்டம்
*********************************
கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, சூளகிரி, விருதுநகர்

2013 - 2014ஆம் கல்வியாண்டில் 20500 காலிப் பணியிடங்கள்?

வரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB.கடந்த 2013 லிருந்து ஒரே நிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்ட பெருமைக்குரிய வாரியம் "TRB" என்ற சாதனையை படைத்திற்குக்கிறது. இந்த மதிப்பிற்குரிய சாதனையை லிம்கா, கின்னஸ், போன்ற உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதோடு சென்னையின் முக்கிய இடங்களிலும் ,ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா நகரங்களிலும் TRB சாதனையை பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் - போலீசார் "தள்ளுமுள்ளு" கலந்தாய்வில் பரபரப்பு

5 ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடம் MAN VERSUS NATURE - AUDIO LESSON

5 ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடம் MAN VERSUS NATURE - AUDIO LESSON


சரியான உச்சரிப்புடன் ஆசிரியர்கள் கற்பிக்கவும், இதை

 பன்முறைக்கேட்டு மாணவர்கள் பயிற்சி பெறவும், சரியான ஒலிப்புடன் 

வாசிக்கவும் இந்த AUDIO LESSON பெரிதும் உதவும் என நம்புகிறேன்.

பாடத்தை கேட்கவும், பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள LINK ஐ CLICK 

செய்யவும்

டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம்!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.

இணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள்

1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்படும்.

2.ஒரு மண்டலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வேறு ஒரு மண்டலத்தை எக்காரணம் கொண்டும் தேர்வு செய்ய முடியாது.

3.கலந்தாய்வு தங்களது மாவட்டத்தில் எந்த இடத்தில் நடைபெறுகின்றது என அறிந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும்.தாமதமாக செல்ல வேண்டாம்.

தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு..........

மன உளைச்சலுக்கு இலக்காகும் மாணவ, மாணவிகள்

பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

அதிக மதிப்பெண்கள் பெற வைக்கும் நோக்கில் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பள்ளி நிர்வாகங்களின் செயல்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலங்களில் அரங்கேறாமல் தடுக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

கலந்தாய்வு துவங்குவதில் தாமதம்! அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிப்பு

கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு ஆன் லைன் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

வேலூர்: அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க-----தினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை

வேலூர்: அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதில் முக்கிய பாடங்களை படிக்க மற்றும் எழுத கற்பிக்கப்படும். சிறப்பு தேர்வுகளும் நடத்தப்படும். இந்த சிறப்பு வகுப்புகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. 

இங்கிலாந்தில் 20 லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு

லண்டன்,ஜூன் 28-இங்கிலாந்தில் 20 லட்சம் ஆசிரியர்கள் வருகிற ஜூலை 20-ம் தேதி தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு சதவிகித சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக 530 பேருக்கு பதவி உயர்வு

பள்ளிக்கல்வித்துறையில் நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வில் மொத்தம் 530 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது; பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடு

ஜூன் 30, ஜூலை 1-ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு

சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 30, ஜூலை 1-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இது குறித்து தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ப.உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Saturday, June 28, 2014

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு!

சென்னை: ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார்.
 2006ஆம் ஆண்டைய தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்படி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பகுதி ஒன்றில் தமிழை கட்டாயப் பாடமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்த ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

இணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள்

1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்படும்.
2.ஒரு மண்டலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வேறு ஒரு மண்டலத்தை எக்காரணம் கொண்டும் தேர்வு செய்ய முடியாது.
3.கலந்தாய்வு தங்களது மாவட்டத்தில் எந்த இடத்தில் நடைபெறுகின்றது என அறிந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும்.தாமதமாக செல்ல வேண்டாம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் M.Ed - விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.6.2014 - 5.30 ..........

Bharathidasan University, Re-accredited with 'A' Grade by NAACProgrammes and Extended Last Dates


Sl.No.ProgrammeSubjectExtended Last Date




4M.Ed.Educational Technology30.06.2014 - 5.30 PM




  Download Adobe Acrobat Reader (PDF Viewer)
(If you have trouble in opening the PDF documents) 

 

பி.இ., கலந்தாய்வு தேதி நாளை வெளியாகுமா?

சென்னை: பி.இ., கலந்தாய்வு தேதியை, நாளை அல்லது நாளை மறுநாள், அண்ணா பல்கலை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 27ம் தேதி துவங்க வேண்டிய பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்றம் உத்தரவு காரணமாக, கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.

தமிழ் கட்டாய பாடம்: முதல்வர் ஆய்வு

சென்னை: தமிழகத்தில், அனைத்து மாநில வாரியப் பள்ளிகளிலும், முதல் வகுப்பில் இருந்து, பத்தாம் வகுப்பு வரை, பகுதி ஒன்றில், தமிழை கட்டாய பாடமாக்கும் சட்டத்தை கடைபிடிப்பது குறித்த, ஆய்வு கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.

பி.எட்., விண்ணப்பம்: அவகாசம் நீட்டிப்பு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார்.

நமது சூரிய மண்டலத்தில் பூமி போல் ஒரு கிரகம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நமது சூரிய மண்டலத்தில் இருந்து 19 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சூரியக் குடும்பத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகச் சிறிய கிரகம் இது தான் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த கிரகம் கிலிசி 876 என்ற அதன் தாய்க் கிரகத்தை சுற்றி வருகிறது. இந்த இரு கிரகங்களுக்கும் இடைப்பட்ட தூரம் 20 லட்சம் மைல்கள். பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 9 கோடியே 30 லட்சம் மைல் ஆகும். இந்த கிரகம் பூமியைப் போல் ஏழரை மடங்கு பெரியது.

ART AND CRAFT PART -II


வாசி...நேசி .....சுவாசி ....பிழையின்றி தமிழ் படிக்க ......

Friday, June 27, 2014

மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்

சிவகங்கை: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. 'இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், சேலம் உட்பட எட்டு மாவட்டங்களில், பட்டதாரி தமிழாசிரியர்களுக்கான காலியிடங்களை 'ஆன்லைனில்' காண்பிக்கவில்லை' என சர்ச்சை எழுந்தது.

பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் காலமுறை ஊதிய உயர்வு பெறுவதில் ஓர் முக்கிய ஆலோசனை

பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் நடைபெற்று வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில் முந்தைய பணியில் 1,4,7 மற்றும் 10ம் மாதத்தில் ஊதிய உயர்வு பெற்று வந்தவர்களாக இருப்பர்.

ART AND CRAFT - PART - I


ஐந்தாம் வகுப்பு பாடத்தில் வரும் MAN VERSUS NATURE பாடத்தில் வரும் சொற்களை வாசிக்க எளிமையான வழி முறைகள் ..........

ஆசிரியர் தகுதித் தேர்வு என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்! - the hindu நாளிதழ்

TET - அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க முடியும்.
கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் வைத்து கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோது, பரவலான வரவேற்பை பலரிடம் பெற்றது. வெறும் பட்டப்படிப்பும் பட்டயப்படிப்பும் மட்டுமே ஆசிரியருக்கானத் தகுதியாக நிலவிவந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உறுதியானது.

பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை: தலைமை ஆசிரியர் காயப்படுத்தியதாலும், இன்னொரு பெண் ஆசிரியர் மாணவர்களுக்கு மட்டும் பாடம் நடத்துவதாகவும் மாணவி எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது

பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை: தலைமை ஆசிரியர் காயப்படுத்தியதாலும், இன்னொரு பெண் ஆசிரியர் மாணவர்களுக்கு மட்டும் பாடம் நடத்துவதாகவும் மாணவி எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது

உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.

பங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், ஜூனியர் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன. இதன்படி கூடுதலாக (சர்பிளஸ்) உள்ள ஆசிரியர்கள், பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் அடிப்படையில் மாற்றப்படுவர்.

மேல்நிலைப் பள்ளியாக உயரும் தரம் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம்

முகலிவாக்கம் அரசு உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தும் அளவிற்கு வசதிகள் இருந்தும், கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, மாணவ, மாணவியரின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

Thursday, June 26, 2014

ஆசிரியர் கலந்தாய்வு: இன்றும்கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா

மதுரை:பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த பணிநிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், 'ஜூனியர்' ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது

பி.இ., கலந்தாய்வு திடீர் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: சென்னை, அண்ணா பல்கலையில், பி.இ., சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு, இன்று துவங்க இருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், இன்று முதல் நடக்க இருந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக, அண்ணா பல்கலை, நேற்றிரவு அறிவித்தது.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காத 77 தலைமை ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி வழக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காத, 77 தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீசு அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரை சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜூ தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77 தலைமை ஆசிரியர்கள், 2011-12 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.81 லட்சம் கல்வி உதவி தொகையை வழங்கவில்லை என்று அவர்களை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி உத்தரவிட்டது.

'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விண்ணப்பித்தும் பெயர் இல்லை; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

மதுரையில் பொது மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களின் பெயர்கள் விடுபட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர்.

"அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்லுவது அரசுப் பள்ளிகளே"

"அரசு பள்ளிகள் தான், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது" என்று கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் தெரிவித்தார்.

கரூரில் நடந்த ரோட்டரி கிளப் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் பேசியதாவது:

ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு: பள்ளியை பூட்டி மாணவர்கள் பெற்றோர் சாலை மறியல்

ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாராயணன்.
இந்நிலையில் இவரை சங்கீதவாடி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணியளவில் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

ஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1.8.1992 முதல் 1.9.1998 வரை உள்ள STENO-TYPIST, GRADE-III 5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு

கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டம்

கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3ஆண்டுகள்   சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்விதிக்கும் வகையில்,   அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

TET புதிய வழக்கு தாக்கல் : வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்

TET NEW CASE : வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில்,  அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில்பட்டதாரி ஆசிரியராக இருந்த வி.வையணன், கலந்தாய்வு மூலம்தூத்துக்குடி மாவட்டம் கடல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 2012-ஆம்ஆண்டு ஜனவரி மாதம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்) பதவி உயர்வு பெறுவதற்கு வையணன் தகுதியானார். 

TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாம்-UG TRB EXAM FOR TET PASS CANDITATES (TNTET 50% + UG TRB 50% )

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான CV முடிந்தவுடன் விரைவில் FINAL MARK/WEIGHTAGE LIST ( NOT SELECTION LIST) – TRB இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கையுடன் போட்டிதேர்வுக்கான தேர்வாணைய விளம்பரம் வெளியிடப்படும். TET PASS செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள். B.A/B.Sc MAJOR பாடத்திட்டம் 110 மதிப்பெண்கள், கல்வியியல் 30 மதிப்பெண்கள், பொது அறிவு 10 மதிப்பெண்கள் கொண்டதாக UG TRB போட்டித் தேர்வு நடைபெறும்.

Wednesday, June 25, 2014

2013-14ம் நிதியாண்டு முதல் ஜிபிஎப் ஆண்டறிக்கை: இணைய தளத்தில் மட்டும் பெற சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தல்

நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் செய்ய உள்ள ஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்ய உள்ள ஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு இன்று அனுப்பப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்

மதுரை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட, துறை ரீதியான மாறுதல் உத்தரவு, 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வரவில்லை.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், 2004 முதல் 2006 ம் ஆண்டு வரை கள்ளர் சீரமைப்புத் துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 150 பட்டதாரி மற்றும் 50 முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) பணி நியமிக்கப்பட்டனர்.

கல்வி உதவி தொகை கையாடல்: நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், கீழ்மருவத்தூரை சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77 தலைமை ஆசிரியர்கள், 2011-12 கல்வியாண்டுகளில் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவி தொகையை வழங்காமல் கையாடல் செய்துள்ளனர். இதையடுத்து, இந்த 77 தலைமை ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி உத்தரவிட்டது.

Tuesday, June 24, 2014

வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்கிறது? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு - சிஎன்என்-ஐபிஎன்

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வருமான வரி விலக்கு வரம்பை எதிர்வரும் பட்ஜெட்டில் தற்போதைய ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தும் என தெரிகிறது. அதிகார வட்டாரங்களை மேற்கோளிட்டு இந்த தகவலை சிஎன்என்-ஐபிஎன் வெளியிட் டுள்ளது. வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவதற்கான சாத்தியம் பற்றி முடிவு செய்து அறிக்கை தரும்படி வருமான வரித்துறைக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

TRB PG TAMIL: சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று (25.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று ( 25.06.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.

500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு

பட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
தகுதி வாய்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்கிறது? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு - சிஎன்என்-ஐபிஎன்

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வருமான வரி விலக்கு வரம்பை எதிர்வரும் பட்ஜெட்டில் தற்போதைய ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தும் என தெரிகிறது. அதிகார வட்டாரங்களை மேற்கோளிட்டு இந்த தகவலை சிஎன்என்-ஐபிஎன் வெளியிட் டுள்ளது. வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவதற்கான சாத்தியம் பற்றி முடிவு செய்து அறிக்கை தரும்படி வருமான வரித்துறைக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

பழைய ஓய்வூதிய நடைமுறை: தமிழ் ஆசிரியர்கள் தீர்மானம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என, திருவண்ணாமலையில் நடந்த தமிழக தமிழாசிரியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து தமிழாசிரியர்களும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த சிறந்த முறையில், மாணவர்களை உருவாக்க பாடுபட வேண்டும். பணி நிரவல் என்ற பெயரில், ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதை தடுக்க, தமிழக அரசு பணி நிரவலை கைவிட வேண்டும்.

சிவகங்கை: அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நற்று நடந்தது. காலியிடங்கள் குறித்த விபரம் வெளியிட தாமதம் ஆனதால் ஆசிரியர்கள் பரிதவித்தனர்.

ராமநாதபுரம்: அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உடற்கல்வி, இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

காலியிடங்கள் அறிவிப்பதில் தாமதம்: முதுகலை ஆசிரியர்கள் கொதிப்பு

சிவகங்கை: அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நற்று நடந்தது. காலியிடங்கள் குறித்த விபரம் வெளியிட தாமதம் ஆனதால் ஆசிரியர்கள் பரிதவித்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2014 மாதத்திற்கான அகவிலைப்படி 7% உயர்த்தி வழங்க பரிந்துரை?

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜுலை 2014 மாதத்திற்கானஅகவிலைப் படியை 7% உயர்த்தி 107% ஆக வழங்க நிதித்துறைபரிந்துரை   செய்துள்ளதாக இரயில்வே துறையில் உள்ள ஊழியர்கள்அமைப்பு ஒன்று
தகவல் கூறியுள்ளது.எனினும் இறுதி விவரம் விரைவில்வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு -

18.06.2014- அன்று நடந்து முடிந்த தொடக்கக் கல்வி துறைக்கான  பட்டதாரிஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலிபணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே மாவட்ட மாறுதல் மூலம்

முதுநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல்: இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்

'போலி' பணி நியமன ஆணை: சம்பளத்தை திரும்பப் பெற நடவடிக்கை

வேலூரில், 'போலி' பணி நியமன ஆணை வழங்கிய, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' ஆனது அம்பலமாகியுள்ளது. வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலராக மதி பணிபுரிந்து வந்தார். இவரை, சஸ்பெண்ட் செய்து, பள்ளி கல்வித் துறை செயலர் சபிதா, 20ம் தேதி உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பகுதிநேர ஆசிரியர்கள் 8 பேர் டிஸ்மிஸ் DINAKARAN

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததால் பகுதி நேர ஆசிரியர்கள் 8 பேர், பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 8,612 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

Monday, June 23, 2014

பதவி உயர்வு கலந்தாய்வு ஆணை ரத்து செய்ய கூட்டமைப்பு கோரிக்கை

ஒருங்கிணைந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், தஞ்சாவூரில் நடந்தது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள் கழக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

RIGHT TO CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT - 2009,NORMS AND STANDARDS FOR A SCHOOL (PUPIL-TEACHER RATIO)

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click Here for Additional Certificate Verification

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click Here for Additional Certificate Verification
DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
ADDITIONAL CERTIFICATE VERIFICATION
As per the Notification No 04/2012 dated 28.05.2013, TRB conducted certificate verification process from 25.11.2013 to 06.12.2013 and certificate verification marks of all candidates were uploaded in TRB website. A clarification camp was also conducted by the TRB from 30.01.2014 to 01.02.2014 to clarify candidates claim in the certificate verification marks awarded by Board Members.
As per Government clarification, TRB has decided to collect the following information from the candidates to update the certificate verification marks in accordance with clarification received from the Higher Education Department.
This opportunity is provided to candidates who fall in the below mentioned categories (Table 1). The candidates are advised to submit the relevant documents to support their claims in the prescribed format in the notified centre. The required formats may be downloaded from the TRB Website.
Table 1
Category
Form to be submitted
Candidates who gained Teaching Experience in Educational Colleges (B.Ed / M.Ed – Colleges)
Form - I
Candidates who possess M.Phil., Degree through Distance / Open University / Correspondence Course prior to 03.04.2009 and who possess valid service certificates but not awarded weightage marks during the certificate verification process for the Teaching Experience.
Form - II
TABLE 2
Subject
Date
Name of the Centre
Tamil and English
01.07.2014 (Tuesday), 09.30A.M to 05.30P.M
Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002
Commerce
02.07.2014 (Wednesday), 09.30A.M to 05.30P.M
Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002
Maths, Physics, Chemistry, Botany, Zoology, History and Economics
03.07.2014 (Thursday), 09.30A.M to 05.30P.M
Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002
Computer Science and all other subjects
04.07.2014 (Friday), 09.30A.M to 05.30P.M
Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002
          

Dated : 23-06-2014

Member Secretary




RTI- 2005 - தமிழகத்தில் கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு 31.12.2013 வரை 6172 பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்

பொது சேவைகள் - வேலை வாய்ப்பக அலுவலகம் மூலம் நியமனம் செய்யப்படும் பணிகளில் இடஒதுக்கீடு பின்பற்றுவது சார்பான அரசாணை

உதவி பேராசிரியர் பணிக்கு கூடுதல் தகுதி படிவம்: சமர்ப்பிக்க, டி.ஆர்.பி., அறிவுறுத்தல்

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள், கூடுதல் தகுதிகள் குறித்த படிவங்களை, ஜூலை 1 முதல், 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்தாண்டு நவ., 25 மற்றும் டிச., 6ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

மாணவரே இல்லை; கலந்தாய்வு உண்டு

சிவகங்கை: சிவகங்கையில் ஒரு மாணவர் கூட இல்லாத இரு அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில், இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. ஒன்றியம் வாரியாக காலியிட விவரங்கள் அறிவிக்கப்பட்டன. கண்ணங்குடி ஒன்றியத்தில் கும்மங்குடி, உடையனசமுத்திரம், மாடக்கோட்டை;

10ம் வகுப்பு உடனடி தேர்வு துவங்கியது

சென்னை: பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடங்களில், மீண்டும் தேர்வெழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காக, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது.

புறக்கணிப்பு, போராட்டம், பங்கேற்பு: 'கவுன்சிலிங்கில்' ஆசிரியர்கள்

மதுரை: மதுரையில் நடந்து வரும் பொது மாறுதல் 'கவுன்சிலிங்கில்' காலி பணியிடங்களை மறைத்ததாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதிகாரிகளின் சமாதானத்திற்கு பின், பங்கேற்றனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் பணி மாறுதலுக்கான 'கவுன்சிலிங்' நேற்று நடந்தது. இதற்காக, காலை 10 மணிக்கு ஆசிரியர்கள் இளங்கோ மாநகராட்சி பள்ளி மையத்தில் திரண்டனர். மாநில அளவில் 'ஆன்லைனில்' ஏற்பட்ட தாமதம் காரணமாக, காலை 12:40 மணிக்கு 'கவுன்சிலிங்' துவங்கியது.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது ஆந்திராவில் 60 ஆக உயர்ந்தது

ஐதராபாத்: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 58லிருந்து, 60 ஆக, ஆந்திர மாநில அரசு உயர்த்தி உள்ளது. இது தொடர்பான, ஆந்திர மாநில பொது வேலைவாய்ப்பு திருத்தச் சட்டம், 1984க்கு, ஆந்திர மாநில சட்டசபை, நேற்று ஏகமனதாக ஒப்புதல் அளித்தது. சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!