Saturday, February 28, 2015

வினா - விடைத்தாள் பாதுகாப்பில் தேர்வுத்துறை அலட்சியம்

பொது தேர்வுக்கான விடைத்தாள் மற்றும் வினாத்தாள்களை, தேர்வுக்கு, 25 நாட்களுக்கு முன்பே தேர்வுத்துறை வினியோகம் செய்ததால், அதை பாதுகாப்பதில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன.

கற்றல் அடைவு தேர்வில் 35 சதவீதம் பேர் தேர்ச்சி

சேலம்: கற்றல் அடைவுத்திறன் தேர்வில், வெறும் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என, அரசு நிர்பந்தம் செய்வது, நடைமுறை ரீதியாக சாத்தியமானதா என, கேள்வி எழுந்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. இதில், 24 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

'நீர்நிலை பகுதியில் சுற்றுலா வேண்டாம்'

நாமக்கல்: 'நீர்நிலை பகுதிகளுக்கு, பள்ளி மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லக்கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாணவ, மாணவியரை, சுற்றுலா அழைத்துச் செல்லும்போது, சில இடங்களில் விபத்து

'டான்செட்' தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: முதுநிலை பொறியியல், எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம். பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கான, பொது நுழைவு தேர்வான - 'டான்செட்' தேர்வு, மே மாதம், 16, 17ம் தேதிகளில் நடக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
* எம்.சி.ஏ.,வுக்கான நுழைவு தேர்வு, 16ம் தேதி காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை.

மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு: தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு இணையாக எம்.எல்.ஏ., ஊதியம்?

பெங்களூரு: கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் வாங்கும் ஊதியத்தை உயர்த்தும் மசோதா, வரும் சட்டசபை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும், ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு இணையாக, மாதம், 1.23 லட்சம் ரூபாய் ஊதியம் பெற வாய்ப்புள்ளது. தற்போது, எம்.எல்.ஏ.,க்கள், மாதத்திற்கு, மற்ற படிகள் உட்பட, 65 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். மாநிலத்துக்குள் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடருக்கு, தினமும், 1,000 ரூபாயும், மாநிலத்துக்கு வெளியே கூட்டம் எனில், 1,500 ரூபாய் வழங்கப்படும்.

பட்டா வாங்குவது எதற்காக?

பட்டா வாங்குவது எதற்காக?

சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள்

புதுடெல்லி: மத்திய அரசின்  2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:

* ரூ.ஒரு லட்சம் மதிப்பிற்கு மேல் சொத்து வாங்கினால் பான் கார்டு எண் அவசியம்
*வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை

Friday, February 27, 2015

பிபரவரி 25 எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. திட்டமிட்ட படி பேரணி ஆர்பாட்டங்கள் - மார்ச் 8 தலை நகரங்களில் நடைபெறும்!!! -செ.முத்துசாமி ,Ex.M.L.C


இன்று தேசிய அறிவியல் தினம்!

பிப்.28: சி.வி.ராமன், ‘ராமன் விளைவை' கண்டறிந்த தினம். இதுவே இந்தியாவின் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
திருவானைக்காவலில் பிறந்த இவர், படிப்பில் பயங்கர சுட்டி. அப்போதே ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். முதலில் அக்கவுண்டண்டாக அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்த இவர், இரவெல்லாம் ஆய்வுகள் செய்வார்.

டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது.

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இத்தேர்வில் முதல் பிரிவில் 75 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம் பெறும். கடந்த ஆண்டு வரை இதற்கான விடையை ஓ.எம்.ஆர்., தாளில், வட்டமிட்ட பகுதியை பென்சிலால் கருமைப்படுத்தினர். இந்த ஆண்டு முதல் கறுப்பு

மாணவர்கள் அச்சமடையும் வகையில் பறக்கும்படையினர் செயல்படக் கூடாது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுரை

பிளஸ் 2 தேர்வின்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது என பறக்கும்படையினருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகளும், பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ள அறிவுரைகளின் விவரம்:

அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா: பரிசீலிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகம் முழுவதும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்குகிறது. இதையொட்டி எடுக்கப்பட உள்ள முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் ஞானதேசிகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

தமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 2) வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

மானியத் திட்டத்தில் சேராதோருக்கு எரிவாயு உருளை நிறுத்தமா? எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம்

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு எரிவாயு உருளை விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தேர்வு அலுவலர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வு அறைக்கு வரும் கண்காணிப்பு அலுவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு எழுதுவதில் மாணவிகள்... : ஆண்டுக்காண்டு குறையும் மாணவர்கள்

தமிழகத்தில் வரும் 5ம் தேதி துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட 2,322 மாணவியர் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர்.

மரத்தடி பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்: மழைக்கால சோகத்திற்கு தீர்வு

கோவை மாவட்டம், முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரத்தடியில் பிளஸ் 2 வகுப்பு நடக்கும் அவலத்தை கண்டு வருந்திய முன்னாள் மாணவர்கள், 3 லட்சம் ரூபாய் செலவில், மூன்று வகுப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளனர். 

கோரிக்கை: கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லை கிராமங்களில், ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்பும்

தினம் ஒரு அரசாணை ---பள்ளிகளில் வேலை நாள் குறைவு ஏற்படும் நேர்வுகளில் தவிர்ப்பு யாரிடம் வாங்குவது?


தினம் ஒரு அரசாணை
------------------------------------------
பள்ளிகளில் வேலை நாள் குறைவு ஏற்படும் நேர்வுகளில் தவிர்ப்பு யாரிடம் வாங்குவது??????
அரசாணை நிலை எண்.217, கல்வித்துறை நாள்.25.5.1974

Government of India - Validity of Self Attested Documents!!

Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Validity of Self Attested Documents

It is a constant endeavour of the Government to simplify procedures by introduction of self-certification. For this, all Central Ministries / Departments as well as State Government / UTs have been requested to review the existing requirement in this regard and make provision for self-certification, wherever possible. Response from 25 States / UTs has been received indicating action taken by them.

105 வங்கிகளின் புத்தகங்கள்முகவரி ஆவணங்களாக ஏற்பு:பாஸ்போர்ட் அதிகாரி தகவல்!!

''பாஸ்போர்ட் பெற முகவரி ஆவணமாக தனியார் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உட்பட 105 வங்கிகளின் புத்தகங்கள் ஏற்கப்படும்,'' என, மதுரை மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 

பிரிட்டிஷ் கவுன்சில் புதிய திட்டம்!!

பள்ளி மாணவர்களுக்காக ‘ஏப்டிஸ்’ (APTIS) என்ற ஆன்லைன் ஆங்கில மொழித் தேர்வை பிரிட்டிஷ் கவுன் சில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் சென்று படிப் பதற்காக எழுதப்படும் IELTS, TOEFL என்ற ஆங்கில தேர்வு களைப் போன்று பள்ளிப் பருவத் திலேயே மாணவர்கள் தங்கள் ஆங்கில மொழித் திறனை மதிப்பீடு செய்துகொள்ள இந்த தேர்வு உதவும்.

FLASH NEWS:-!!!உச்ச நீதிமன்ற புதிய நீதிபதியாக "அமிதவாராய்"

உச்ச நீதிமன்ற புதிய நீதிபதியாக "அமிதவாராய்"பொறுப்பேற்றுக்கொண்டார்...இவர் ஒடிசா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஆவார்.

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது

தமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.685 வரை உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்

ஜேக்டோ - 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.03.2015 அன்று மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி

Thursday, February 26, 2015

7 th PAY COMISSION : வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு 'செக்!'

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை செய்யாமல் இருக்கும் ஊழியர்களுக்கு மத்திய அரசு, 'செக்' வைத்துள்ளது.

மகனை கண்டித்த பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது

திருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் தனியார் பள்ளியின் மாணவரைக் கணடித்த உடல்கல்வி ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

கல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது.

பொதுத்தேர்வை கண்காணிக்க 1 லட்சம் பேர் நியமனம் : பள்ளி கல்வித்துறை செயலாளர் தகவல்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேர்மையாகவும், முறைகேடு நடக்காமல் இருக்கவும் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1 லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்குகின்றன. இதையடுத்து, அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதற்கு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள்:்

தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.* பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும்.* தகுதிகாண் பருவம் முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான EL -ஐஒப்படைக்க முடியாது.

தினம் ஒரு அரசாணை


ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா??????

பிளஸ் 2 விடைத்தாள்களை கையாள்வதில் புதிய முறை

திண்டுக்கல்:“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ் 2 தேர்வு ஆலோசனை கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பேசியதாவது: வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர்கள்:பொதுத்தேர்வு எழுத சிறப்பு சலுகை

அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள், சிறப்புச் சலுகை மூலம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, தேர்வுத் துறை இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு தடை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் பணிகளில், இடைத்தரகர் குறுக்கீடுகளைக் குறைக்க, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில், பார்வையாளர் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசுத் துறை காலிப் பணியிடங்களுக்கு, குரூப் - 1, 2 உள்ளிட்ட போட்டித் தேர்வுகள், நீதிமன்றப் பணியிட தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில், டி.என்.பி.எஸ்.சி., தேர் வில், வினாத்தாள் கசிவு, விடைத்தாள் காணாமல் போவது, இடைத்தரகர் ஆதிக்கம் போன்ற புகார்கள் எழுந்தன.

பள்ளி கல்விச் சுற்றுலா செல்வது - அனுமதி பெறுவது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு - இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள்


Junior - Senior Pay Anomoly - Pay Drawing Officer Can Rectify - RTI LETTER!!

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழாண்டு பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள், ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்குநரக மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது: இலவச கல்வி உரிமைச்

அடிப்படை வசதிகள் இருந்தும் மாநகராட்சி பள்ளிகளில் குறையுது மாணவர் சேர்க்கை: தேவை ஆங்கிலத்தில் சிறப்புக் கவனம்!!

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இருந்தும் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனை அதிகரிக்க மாநகராட்சி போதிய கவனம் செலுத்தாமல் சுணக்கம் காட்டி வருகிறது. ஆங்கிலம் கற்பிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி, தனியார் பள்ளிகளைப் போல பஸ், வேன் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Wednesday, February 25, 2015

பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு 3மணி நேரம் முதல்வர் அறைக்கு வெளியே நின்ற ஜேக்டோ நிர்வாகிகள்


எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அறையில் 'சிசிடிவி' கேமரா?

பெங்களூரு: ''எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்த ஆலோசிக்கப்படுகிறது,” என்று, துவக்க கல்வித் துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடக்கும் மையங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்துவது உட்பட, கல்வித் துறையின் பல கோரிக்கைகளை, நாளை (இன்று) முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ள, பட்ஜெட் முன்னேற்பாடுகள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.

'ஜாக்டோ' ஆசிரியர் குழுவுடன் முதல்வர் பேச மறுப்பு

பள்ளி ஆசிரியர்களின், 15 ஆண்டுகால கோரிக்கை குறித்து, பேச்சு நடத்த அழைக்கப்பட்ட, 'ஜாக்டோ' ஆசிரியர் குழு, முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், நான்கு மணி நேரம் காத்திருந்த ஆசிரியர் குழுவினர், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


15 கோரிக்கைகள்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக் கமிஷன் படி ஆசிரியர்களுக்கு ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை

பன்றி காய்ச்சலுக்கு 'கபசுர குடிநீர்' தடுப்பு மருந்து

சென்னை: 'டெங்கு காய்ச்சலுக்கு, நில வேம்பு கஷாயம் அருந்துவது போல், பன்றி காய்ச்சலுக்கு, தடுப்பு மருந்தாக, 'கபசுர குடிநீர்' அருந்தலாம்' என, தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில், சங்க துணைச் செயலர் தமிழ்கனி, நிருபர்களிடம் கூறியதாவது:

'மொழிப்பாட விடைத்தாள்களில் முதல் 2 பக்கங்களை எழுதக் கூடாது'

சேலம்: வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து, தேர்வுத்துறை, அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்புகிறது.

தேர்வு எழுத வந்த மாணவர்களை 'துணை நடிகர்களாக' ஆக்கி சினிமா ஷூட்டிங்

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவர்களை 'துணை நடிகர்களாக' ஆக்கி சினிமா ஷூட்டிங் நடத்திய கூத்து நேற்று நடந்தது. இதை பார்த்த பெற்றோர் அதிருப்தியடைந்தனர். 

TRB - PG ASSISTANT - Provisional Selection List After Certiificate Verification

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED
          

Dated: 25-02-2015

Member Secretary


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு

தற்காலிக மதிப்பெண் சான்று 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்: பள்ளிக்கல்வித்துறை செயலர்.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை எவருக்கேனும் இருப்பின் அரசாணை எண்.23 நிதித் துறை நாள்.12.01.2011ன்  படி அரசு கடித எண்.8764/சி.எம்.பி.சி/2012, நாள்.18.04.12ன் படி தணிக்கை தடை நீக்கம்

சற்றுமுன்: ஜாக்டோ பொறுப்பாளர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் முரண்பாடு

இன்று காலை முதல் தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் சுனுக்கும் ஏற்பட்டுள்ளது. ஜாக்டோ அமைப்பில் 16 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும்,

Tuesday, February 24, 2015

'ஜாக்டோ'வுக்கு பணிந்தது அரசு: இன்று சமாதானம் பேசுகிறார் முதல்வர்

ஆசிரியர்களின், 15 ஆண்டு கால கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ' என்ற ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.

நெல்லையில் ப்ளஸ் 2 விடைத்தாள்கள் எரிப்பு: மாவட்ட கல்வி அதிகாரி டிரான்ஸ்பர் Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/2-answer-sheets-torched-nellai-221632.html

நெல்லை: ப்ளஸ் டூ தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நெல்லையில் விடைத்தாள்கள் மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்பாட்டம்

15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் 8ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள்

தமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு.

மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்

பள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து சக ஆசிரியர்கள், காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.இச்சம்பவம் திருப்போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்'

மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

Monday, February 23, 2015

பிளஸ் 2 தேர்வு தனித் தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்!'

சென்னை: 'தத்கல்' திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும், 'ஹால்டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்து உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு:

ஆசிரியர் இல்லாமல் பிளஸ் 2 தேர்வு : அரசுப்பள்ளியில் தொடரும் அவலம்


சிங்கம்புணரி:இந்த கல்வி ஆண்டு முழுவதும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் எஸ்.புதுார் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2,பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு

சேலம்: பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.
அரசு பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது.

மாநிலம் தழுவிய போராட்டம்:ஜேக்டோ கூட்டமைப்பு அறிவிப்பு

“மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காவிடில் மாநில தழுவிய போராட்டம் நடைபெறும், என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ) வேண்டுகோள் விடுத்துள்ளது.திண்டுக்கல்லில் 28 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்த போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது? மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட்தோறும் எதிர்பார்ப்புஒவ்வொரு ஆண்டும், பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றால், மாத சம்பளம் பெறுவோரின் எதிர்பார்ப்பு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்பதாக உள்ளது. 

Direct Recruitment of Computer Instructor - Certificate Verification Details


DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
In pursuant to the announcement dated 19.01.2014 the Certificate Verification process for selection of 652 Computer Instructors that has been kept in abeyance was published in the TRB website.  Now the directions has been issued by the Hon’ble Supreme Court of India on 10.02.2015 to complete the process of Direct Recruitment of 652 Computer Instructors. 

Sunday, February 22, 2015

தொடக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலகை திட்டம் - 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.10.2014 முதல் 31.01.2015 வரை பணி நீட்டிப்பு செய்து சம்பள வழங்க அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - 2014-15ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான "ENRICHING ENGLISH TRAINING" என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது

இடைநிலை பொதுத் தேர்வு 2015 (SSLC - 2015) அறை கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் மற்றும் பணிகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு

Saturday, February 21, 2015

தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது? - Karunai Doss

தமிழகத்தில் கணினி வழிக் கற்பித்தலை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எனது ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம்.
என்னிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கு விடையினை அளிக்கிறேன். நான் விடையளிப்பது மற்ற ஆசிரியர்களை ஊக்கமூட்டுவதற்காக மட்டுமே!
1. தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது?

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிநிரவல் கணக்கெடுக்க உத்தரவு

தொடக்க கல்வி இயக்குனரகம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31.8.2014 தேதியில் உள்ளவாறு மாணவர்கள், ஆசிரியர்கள் விவரங்களை வரும் 25-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

ஊக்க ஊதிய உயர்வில் தவறு: மாற்றி அமைத்தது தமிழக அரசு

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்க ஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது.

பள்ளிகளில் முகமூடி அணிந்து மாணவர்கள் பாடம் படித்தனர்; பன்றிகாய்ச்சல் பரவுவதை தடுக்க ஆசிரியர்களுக்கும் முகமூடி

சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க மாணவர்கள் முகமூடி அணிந்து பாடம் படித்தனர். ஆசிரியர்களும் முகமூடி அணிந்த படியே பாடம் நடத்தினார்கள்.

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?nநீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

ஒவ்வொரு பக்கமும் 25 வரி எழுத வேண்டும்: பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுற்றறிக்கை:
இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கை: 
தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் செய்யக்கூடியது

Friday, February 20, 2015

நடப்பு கல்வி ஆண்டில் ரூ1100 கோடி மதிப்பில் மடிக்கணினி வழங்க ஏற்பாடு

நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் ரூ.1100 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் வெளியீடு

கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் குறித்து கேள்வி, பதில் வடிவில் விளக்கங்களை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கால அவகாசம் - மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கால அவகாசம்

வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

Thursday, February 19, 2015

SSTA இடைநிலை ஆசிரியர் வழக்கு நீதிமன்ற ஆணையுடன் முதலமைச்சர் தனிபிரிவில் மனு கொடுக்க தீர்மானம் !!

வரும் வாரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற அசல் ஆணை கிடைத்தவுடன் SSTA மாநில அமைப்பின் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள உண்மையான எண்ணிக்கை மற்றும் தற்போது ஊதியம் வழங்கினால் ஆகும் ௯டுதல் செலவு பட்டியலில் ,நாம்
அனைவரும் +12 ம் வகுப்பு முடித்து தான் பணிபுரிகிறோம் என்ற விளக்கம் (ஆதாரம் ),தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களில் சுமார் 75% பேர் கிராம புறத்தில் தான்

ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு

வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு சந்திக்கிறார் ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களிடம் முறையிட இன்று செல்வதென முடிவெடுக்கப்பட்டது.

Wednesday, February 18, 2015

புத்துணர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் 'குஷி'

தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளின் கல்வி மற்றும் தகவல் தொடர்புத்திறனை உயர்த்து வதாக, அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் சூளுரைத்து உள்ளனர்.

பாரதியார் பல்கலை ஆசிரியர் நியமனத்துக்கு அரசு ஒப்புதல்

பாரதியார் பல்கலையில், 12 ஆசிரியர்கள் நியமனத்துக்கான தடையை, தமிழக அரசு விலக்கியதால், திட்டமிட்டபடி நேர்காணல் நடக்கிறது.

பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

பிளஸ் 2 வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், 'லீக்' ஆகாமல் பாதுகாக்க, ரகசிய காப்பு அறைகளில், இன்று முதல் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச், 5ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 வினாத்தாள்கள் சென்னையிலிருந்து, நேற்று பிற்பகலில் மாவட்டங்களுக்கு தனித்தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

தொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பட்ட சந்தா மற்றும் ஓய்வு / இறப்பு / வேறு துறைக்கு சென்றவர்கள் 2013-14ம் ஆண்டு வரை கணக்கு சீட்டு விடுதலின்றி விவரம் கோரி உத்தரவு

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.

இந்தியாவில் கல்வித் துறையின் பரிதாபகரமான நிலை!

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் பரிதாபகரமான நிலையை அண்மையில் வெளியிடப்பட்ட "கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014' படம்பிடித்துக் காட்டுகிறது. மூன்றாம் வகுப்பில் 75 சதவீதத்தினர், 5-ஆம் வகுப்பில் 50 சதவீதத்தினர், 8-ஆம் வகுப்பில் 25 சதவீதத்தினர் 2-ஆம் வகுப்புப் பாடத்தை சரியாகப் படிக்கக் கூட முடியவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.

மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23–ந் தேதி கூடுகிறது. இதில் மத்திய பட்ஜெட் 28–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி 2015–16 ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு – செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

6வது ஊதிய குழு அரசாணையின்படி (மூத்தோர் இளையோர்) - ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தால் களைய நீதிமன்றம் உத்தரவு.

 பணியல் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகளை 45113 ஊதிய பிரிவு.17.08.2009 - இதன்படி களைந்துகொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது

CLICK HERE TO DOWNLOAD JUDGEMENT COPY

தமிழக சட்டப்பேரவை: ஆளுநர் உரையில் கல்வித் துறை சார்ந்த முக்கிய அம்சங்கள்

அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.

Tuesday, February 17, 2015

தொடக்க நிலை மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிக்க பயிற்சி .....TEACH ENGLISH IN ESAY METHOD ....

12 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் கைகோர்ப்பு: மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த ஆயத்தம்

கடந்த 2003ல், அரசு ஊழியர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட, 32 ஆசிரியர் சங்கத்தினர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்றிணைந்து, பல கோரிக்கைகளுக்காக, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி உள்ளனர்.
ஜாக்டோ கூட்டமைப்பு:
முதற்கட்டமாக, அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை, நேற்று முன்தினம் துவக்கினர்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன? , செய்யக் கூடாதவை என்னென்ன? - தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தேர்வுத்துறை  தெளிவுபடுத்தியுள்ளது. 

செய்யக்கூடியவை என்ன?

* விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.

நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம் - ஆளுநர் உரை

தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 வினாத்தாள் இன்று அனுப்பப்படுகிறது

பிளஸ்-2 வினாத்தாள்கள் சென்னையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு தேர்வுத்துறை சார்பில் அனுப்பப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வு: மாணவர்களை கண்காணிக்க 1,000 பறக்கும் படை: தொழில்நுட்ப பாட தேர்வை ஆய்வு செய்கிறது அண்ணா பல்கலை குழு

மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள, பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களைக் கண்காணிக்க, 4,000 ஆசிரியர், அதிகாரிகளைக் கொண்ட, 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

"ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் விடைத்தாள்களில் எழுதக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் எழுதக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு புதிய மருத்துவத் திட்டம்: சோதனை முறையில் மதுரையில் அமல்

தமிழகத்தில் விரைவில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புதிய இலவச மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மத்திய அரசின் உதவியோடு மாநில அரசு செயல்படுத்தும் இந்த திட்டத்துக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிக் குழந்தைகளின் உடல் நலத்தைப் பரிசோதிக்க மாவட்டந்தோறும் ஏற்கெனவே மருத்துவக் குழு செயல்பட்டது. அதில் முழு பயன் கிட்டவில்லை. ஆகவே பள்ளிக் குழந்தைகளின் உடல் நலத்தைப் பேணும் வகையில், மத்திய அரசின் சுகாதாரத் துறையானது, மாநில அரசு உதவியுடன் "ராஷ்ட்ரீய பால்சுவத்ஸ்திய காரிய கிராம்' எனும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவசமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த திட்டத்துக்கான வட்டார அளவிலான மருத்துவக் குழுவில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோர் இடம் பெறுவர். குழுவிற்கான மருத்துவர்கள் அரசால் நியமிக்கப்படுவர். செவிலியர், மருந்தாளுநர் ஒப்பந்தப் பணியில் நியமிக்கப்படுவர்.

பள்ளிகளில் பரிசோதனைக்குப் பிறகு தொடர் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க தனிப் பிரிவும் ஏற்படுத்தப்படும். இந்தப் பிரிவில் பொது, குழந்தைகள் நலம், நரம்பியல், காது-மூக்குத் தொண்டை சிகிச்சை, தோல், மனநலம், பல் சிகிச்சை உள்ளிட்ட பல பிரிவின் மருத்துவர்கள் என 15 பேர் கொண்ட குழு செயல்படும்.

உச்சநீதிமன்றத்தில் வெய்ட்டேஜ், 5% மதிப்பெண் தளர்விற்கான வழக்கு முன்னதாகவே மார்ச் 9 விசாரணைக்கு வருகிறது.

SUPREME COURT OF INDIA

Case Status Status : PENDING

Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது.

 ஆளுநர் ரோசய்யா உரையின் சிறப்பம்சம் வருமாறு
* வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
* கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.
* சூரிய மின்சக்தியுடன் கூடிய 2.4 லட்சம் பசுமை வீடுகள் ரூ.4,680 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி தமிழாசிரியர்கள் மார்ச் 8-ல் ஆர்ப்பாட்டம்

தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி வரும் மார்ச் 8-ல் பேரணி நடத்தப்படும் என தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 வாரத்தில் 6வது ஊதியக் குழு பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க பரிசீலிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Monday, February 16, 2015

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு


மதுரை :ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன்.

பிளஸ் 2 தேர்வு: 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்

நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கு 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை, 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு 5,200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அந்த இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வு காலங்கள்.. மாணவனே பதட்டம் தவிர்... மனதை லேசாக்கு!


பிளஸ் 2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம் அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி. 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

தலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின் முன்மாதிரியாக திகழவேண்டும். அப்படி விளங்கினால்தான் சக ஆசிரியர்கள் முன்மாதிரியாக வருவார்கள். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால்தான் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள், ஒழுக்கமாக நடப்பார்கள் என்பதை பள்ளி கல்வித்துறை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தது.

தட்டிக்கழிக்கும்' அதிகாரிகள்780 ஆசிரியர்களுக்கு சிக்கல்


மதுரை:ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன உத்தரவில் 'தற்காலிக பணியிடம்' என குறிப்பிடப்பட்டது.

முறைகேட்டை தடுக்க 9200 பறக்கும்படை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர்: தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, பத்தாம்  வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.


செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

2009 க்குப்பின் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரி செய்ய தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவு.

2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பளம் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதை தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இன்றைய மாலைமலர் சென்னை, பிப்.16–தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பளம் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

மதிய உணவைப் பரிமாறும் முன் ஆசிரியர், நிர்வாகி சுவைப்பது கட்டாயம்

பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறுவதற்கு முன்னர் ஓர் ஆசிரியரும், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவரும் சுவைத்துப் பார்ப்பதை மத்திய அரசுகட்டாயமாக்கியுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, பிப்.16–இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்,

பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு தேவை.............

ஐந்து ஆண்டுகளுக்கு முன் காய்ச்சல், சளி வந்தாலே எல்லோரும் பயந்தார்கள். அரசு அறிவித்த ஆய்வகங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள நீண்ட வரிசை காத்திருந்தது. பொது இடங்களுக்கு முகமூடி அணியாமல் வரப் பலரும் பயந்தார்கள். அன்று அப்படி மக்களைப் பயமுறுத்திய காய்ச்சல், ‘ஹெச் 1 என் 1’ என்று பெயர் சூட்டப்பட்ட பன்றி காய்ச்சல்தான்.

CPS MISSING CREDIT மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு

Sunday, February 15, 2015

ரூ.3 லட்சம் வரையில் வருமானவரி விலக்கு நிதி அமைச்சகம் தகவல்

 மத்திய அரசு வரும் 28ம் தேதி 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் கருத்தில் கொண்டு மாத சம்பளம் வாங்குபவர்களின் வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஈடுசெய் விடுப்பு கோரி ஆசிரியர்கள் போராட்டம்


SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!