Thursday, April 30, 2015

மே தின நல்வாழ்த்துக்கள் -மே தின வரலாறு......

தொழிலாளர் போராட்டம்

க‌டந்த‌ 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு நாடுகளில் ஆங்காங் கே எழத் துவங்கியது. இதில் குறிப்பி டத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற ‘ஒரே ஒரு ஊரிலே..’ - கிராம வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளும் புதிய தேடல்

பள்ளி, வீடு என நகர வாழ்க்கையிலேயே உழன்றுவரும் மாணவ- மாணவிகள், கிராம மக்களைச் சந்தித்து அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளச் செய்யும் நிகழ்வுக்கு திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

அரசு செலவில் ஜப்பான் செல்லும் மதுரை பள்ளி மாணவர்: ஆட்டோ டியூப்பில் அறிவியல் சாதனம் படைத்ததால் கவுரவம்

பழைய ஆட்டோ டியூப்பில் உருப்படியான அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடித்த மாணவர், அரசு செலவில் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழும் ஜப் பான், மற்ற ஆசிய நாடுகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க வைக்கும் விதமாக ஜப்பான் - ஆசிய இளையோர் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தை (சுகுரா) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா, சீனா, கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 15 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவ கல்லூரிக்கு மே 15க்குள் அனுமதி : எம்.சி.ஐ., தலைவர் தகவல்


சென்னை: ''சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்குவது குறித்து, மே 15ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்,'' என, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., தலைவர் ஜெயஸ்ரீபன் மேத்தா கூறினார்.சென்னை வந்த, எம்.சி.ஐ., தலைவர் ஜெயஸ்ரீபன் மேத்தா, தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் 

பள்ளி மேம்பாட்டுக்குரூ.100 கோடி ஒதுக்கீடு


சென்னை: ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக, நடப்பாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், புதிய கட்டடம், சமையல் கூடம் கட்டுதல், குடிநீர் வழங்குதல், கழிப்பறைகள் ஏற்படுத்துதல், போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12ல், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு ஆண்டும், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

ஆய்வக உதவியாளர் தேர்வை கல்வித்துறை நடத்த எதிர்ப்பு :டி.என்.பி.எஸ்.சி.,க்கு மாற்ற கோரிக்கை


பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, கல்வித்துறை நேரடியாக தேர்வு நடத்தாமல், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. அவசர, அவசரமாக தேர்வை அறிவித்து, குறுகிய காலத்தில் நடத்துவது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, 4,362 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு மே, 31ம் தேதி நடத்தப்படுகிறது.இதற்கான அறிவிப்பு ஏப்., 22ம் தேதி வெளியானது. பின், இரண்டு நாட்களில் ஏப்., 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி அவசர, அவசரமாகத் துவங்கி, மே, 6ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண் பணிக்கான தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான,

ரஜினியின் ஆஷ்ரம் பள்ளி விவகாரம்: விசாரிக்க மெட்ரிக் இயக்குனருக்கு உத்தரவு


நடிகர் ரஜினியின் ஆஷ்ரம் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்காதது தொடர்பாக, விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, மெட்ரிக் இயக்குனருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின், 'ராகவேந்திரா எஜுகேஷனல் சொசைட்டி' அறக்கட்டளை சார்பில், சென்னை, கிண்டியில் ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, 500 பேர் படிக்கின்றனர்.

1,241 காலியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிப்பு


சென்னை: தமிழக அரசுத் துறைகளில், 18 வகையான குரூப்-2 பதவிக்கான, 1,241 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் 
தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 (நேர்முக தேர்வு) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கை 

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு


பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நேற்றுடன் முடிந்தது; மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி துவங்கியது.10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ல் துவங்கி, ஏப்., 10ல் முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 11,827 பள்ளிகளில் இருந்து, 10.72 லட்சம் பேர் எழுதினர்.விடைத்தாள் திருத்தம், ஏப்., 20ம் தேதி, மாநிலம் முழுவதும், 73 மையங்களில் துவங்கியது. முக்கியப் பாடங்களின் விடைத்தாள்கள், 25ம் தேதியுடன் திருத்தி முடிக்கப்பட்டன; மொழிப்பாடங்கள், 28ம் தேதி வரை திருத்தப்பட்டன. 

அரசு ஊழியர்கள் பயமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி யோசனை


புதுடில்லி: ''முடிவுகள் எடுப்பதில், அரசு ஊழியர்கள் அச்சமின்றி செயல்பட வேண்டும்; அரசின் கொள்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்; அதேநேரத்தில், அரசியல் ரீதியான விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, யோசனை தெரிவித்து உள்ளார்.டில்லியில் உள்ள, இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற,

Tamil Nadu Government Industrial Employees Contributory Provident Fund – Rate of interest

FINANCE (ALLOWANCES) DEPARTMENT
G.O.No.130, DATED 28th April, 2015
(Manmatha, Chithirai 15, Thiruvalluvar Aandu 2046)

PROVIDENT FUND – Tamil Nadu Government Industrial Employees Contributory Provident Fund – Rate of interest for the years 2013-2014 and 2014-2015 – Orders Issued.

Wednesday, April 29, 2015

இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்

முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

GROUP-2 OT NOTIFICATION. (Prelims, Mains & Interview)

GROUP-2 OT NOTIFICATION.
(Prelims, Mains & Interview)
Vacancy=1241.
Prelims-26-07-2015.
Last Date to Apply - 29-05-2015.

"பாளம்... பாளமாக' நேபாளம்

உலகளவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாடு உருக்குலைந்து காணப்படுகிறது. 


பூமி மேலாக பார்க்கும் போது ஒரே மாதிரி இருப்பதாகவே தோன்றும். ஆனால் பூமி அமைப்பில் பல்வேறு புவி தட்டுளாக(பிளேட்) பிளவுபட்டுள்ளன. ஆப்ரிக்க தட்டு, அண்டார்டிகா தட்டு, யுரேசியன் தட்டு, இந்தோ - ஆஸ்திரேலியா தட்டு, வட அமெரிக்கா தட்டு, பசிபிக் தட்டு, தென் அமெரிக்க தட்டு என 7 முதன்மை தட்டுகள் உள்ளன. இது தவிர இதன் கீழ் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தட்டுகள் உள்ளன. ஒவ்வொரு தட்டும் மற்ற தட்டுகளுடன் தொடர்ந்து மோதுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

வேடிக்கை பார்ப்பதா? -------------------------------------------------தீக்கதிர் தலையங்கம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக் கிறது. அதே நேரம் மாநகரங்கள் உள்ளிட்டு தமிழகத்தில் உள்ள நகர்புறப் பள்ளிகளில் விறுவிறுப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதுவும்தற்போது நடைபெறும் சேர்க்கையில், பணமே பள்ளியையும், பாடப்பிரிவையும் தீர்மானிக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவு இன்னும் வெளிவரவில்லை.

மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன சட்டத்திருத்தம் "சாலைப் பாதுகாப்பு மசோதா -2015"

1.இனிமேல் நீங்கள் உங்கள் வண்டிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி.எடுக்க வேண்டும்.(டூ வீலருக்குத்தான்அய்யா..!)
2.உங்கள் வாகனத்திற்கு ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் தான் மாற்ற வேண்டும்.
3.இவற்றை மீறினால் சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.
4.ரோட்டோரமாய் இருக்கும் வொர்க் ஷாப்பில் எல்லாம் இனி உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்ய விட முடியாது.

ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவு ....கூடுதல் எவை மையம் திறக்கப்படுமா !

மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம்: 23 ரயில் நிலையங்களில் இனி பெறலாம்

இ-டிக்கெட் மூலம் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிக்கு புதிய புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான படிவங்களை தமிழகத்தின் 23 ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி பெற சலுகை:

கிராம பகுதி மாணவர்கள் உயர் கல்வி பெற செயல்படுத்தியுள்ள, 'வித்யாஸ்ரீ' திட்டத்தில், இந்தாண்டு, 70 முதல் 80 ஆயிரம் மாணவர்களுக்கு சலுகை வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என, சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு டேக்கா கொடுத்தவர்களின் விபரங்கள் சேகரிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளில் உரிய காரணமின்றி விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விவரத்தை, கல்வி அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 20 துவங்கி 25ல் முடிக்க தேர்வுத் துறை அறிவுறுத்தியது. ஆனால் மதுரையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்பட்டு ஏப்.29 வரை திருத்தும் பணி நீடித்தது.

அரசு பேருந்துகள் நாளை வழக்கம் போல் ஓடுமா?- அதிகாரிகள் விளக்கம் - தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து சேவை பாதிக்காது

-மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடுமுழுவதும் 11 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள 45 தொழிற்சங்கங்களும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதில், பேருந்து, லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால், தமிழகத்தில் போக்குவரத்து சேவை பாதிக்குமா? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மே 5–ந்தேதி முதல் 65 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த திட்டம்

தமிழ்நாட்டில் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போட்டோ எடுத்து விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் 69 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.

பல்வேறு குளறுபடிகள்: ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் அவதி

தேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர் இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் அவதிக்கு ஆளாகின்றனர். விண்ணப்பதாரர்கள், நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

"தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல் மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநகராட்சி பள்ளிகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்குள் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.

ஊழலை ஒழிக்க தண்டனை அதிகரிப்பு அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு ஜெயில் சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்


அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் ஊழலை வேரடி மண்ணோடு வீழ்த்தி, ஒழிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஊழலுக்கு எதிரான சூளுரை
சமீபத்தில் 3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக அவர் கனடா சென்றபோது, டொரண்டோ நகரில், கடந்த 16–ந் தேதி கனடா வாழ் இந்தியர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், ‘‘இதற்கு முன்பு இந்தியா ‘ஊழல் இந்தியா’ என்று அறியப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் அதை ‘திறன் வாய்ந்த இந்தியா’வாக மாற்றிக்காட்ட விரும்புகிறோம். அதை செய்து காட்டுவோம்’’ என சூளுரைத்தார்.

அரசு அங்கீகாரம் இல்லாத ரஜினியின் ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி: 4 ஆண்டுகளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை

நடிகர் ரஜினிகாந்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான, சென்னை, கிண்டி யில் செயல்படும் ஆஷ்ரம் பள்ளி, கடந்த, நான்கு ஆண்டுகளாக அங்கீகாரமின்றி செயல்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர்த. சபீதா நேற்று நிருபர்களிடம்கூறியதாவது:-
2015-2015ம் கல்வி ஆண்டில்பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1-ந்தேதிதிறக்கின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே அவர்களுக்குதேவையான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்அச்சடிக்கப்பட்டு

LAB ASST தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நண்பர்களுக்கு பயன் தரும் வகையில் - தமிழ்வழிக் கல்வி சான்று விண்ணப்பம்.


Tuesday, April 28, 2015

PAY CONTINUATION ORDERS RELEASED UPTO 31.12.2015

PAY ORDER FOR SSA HEAD FOR 7979 B.T.ASSISTANT POST

RMSA KH HEAD AND BC HEAD ALLOTMENT GOS ALL DISTRICTS PARTICULARS:

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா?: பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்

சென்னை, ஏப்.29-ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்களால் முடியும்!

இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும் தாண்டி ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும் என்றால், அவர் ஆசிரியர்.

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா?

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் உறவில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்க இந்த கல்வியாண்டு முதல் ஆசிரியைகள் தங்களின் சேலைக்கு மேல் ‘கோட்’ அணியவேண்டும்

பிரச்சினை எங்கேயிருக்கிறது

நூறாண்டு கடந்துவிட்ட அரசு உதவி பெறும் பள்ளி அது. பத்து வருடங்களுக்கு முன்பு வரையில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு ஆயிரத்து சொச்சம் மாணவர்கள் கூட இல்லை. சில பல ஏக்கர்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன. மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அப்படியேதான் இருக்கிறது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கூட அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து விட்டது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி: மெரினா கடற்கரையில் கூட்டம் அலை மோதியது


சென்னை, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

விடைத்தாள் திருத்தும் பணியும் இழு... இழு... மன அழுத்தத்தில் ஆசிரியர்கள்

மதுரை : மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 4500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

ஆய்வக பணிக்கு விண்ணப்பிக்க 'தள்ளுமுள்ளு':தேர்வு துறை சேவை மையங்களில் குளறுபடிதேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர் இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், அவதிக்கு ஆளாகின்றனர். விண்ணப்பதாரர்கள், நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை:ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்குஉயர்கல்வி ஆலோசனை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு:பல ஆண்டுகள் கனவு நிறைவேறுமாமதுரை:"தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல் மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

குட்டி கதை


ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
அக்கடையில் முதலாளியே தொழிலாளி.
ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.

Monday, April 27, 2015

நெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய்!

ந்தியா முழுவதும் எதிர்ப்பையும், விவாதத்தையும் உண்டாக்கிய நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையதள சமவாய்ப்பு தொடர்பாக, இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்களை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்களுடன் அதை பகிர்ந்து கொண்டவர்களின் இ-மெயில் முகவரிகளும் வெளியிடப்பட்டது சர்ச்சைக்கு இலக்காகி உள்ளது.

இமய மலைப் பகுதியில் நிலநடுக்கம் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது: தொடர்ந்து ஏற்படலாம் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்கள்

இமய மலைப் பகுதிகளில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். தற்போது நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதைப் பார்க்கும் போது, அந்த ஆய்வில் கூறப்பட்ட தகவல்கள் துல்லியமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட கிராம பள்ளி: ஆசிரியைகளின் முயற்சியால் நடுநிலை பள்ளியாக தரம் உயர்வு

மதுரை அருகே மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட அரசு தொடக்கப் பள்ளி, ஆசிரியைகளின் தொடர் முயற்சியால், தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், ஆசிரியர்களின் அலட்சியப் போக்காலும், கிராமப் புறங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்,

நம் கல்வி... நம் உரிமை!- அஜிதனும் அரசுப் பள்ளியும் ஜெயமோகன்

அஜிதனுக்கு எல்கேஜி, யுகேஜி முடிந்ததும் பத்மநாபபுரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தோம். பள்ளியில் சொன்னார்கள், “பையன் சராசரிக்கும் மிகக் கீழே, அவனுக்கு எழுதவே வரவில்லை” என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை. அஜிதனுக்கு சிறு வயதிலேயே இடது கைப்பழக்கம். அதைப் பொது வாகக் கவனித்திருந்தோம் என்றாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மழலையர் பள்ளியில் அவனை முரட்டுத்தனமாக வலது கைக்குப் பழக்கியிருக்கிறார்கள். அவன் அதற்குச் சரிவராதபோது அவனைத் தொடர்ந்து அடித்திருக்கிறார்கள். சின்ன வயதில் மழலையர் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவன் தொடர்ந்து அடம்பிடிப்பான். அது சிறுவயதில் என் வழக்கமும்கூட.

எல்.ஐ.சி. துணை நிறுவனத்தில் அதிகாரி பணிகள்


எல்.ஐ.சி. துணை நிதி நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின், துணை நிதி நிறுவனம் எல்.ஐ.சி. ஹவுசிங் பினான்ஸ் என்பதாகும். வீட்டுவசதி கடன் வழங்கும் நிறுவனமான இதில் தற்போது அசிஸ்டன்ட் மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 93 பேரும், அசிஸ்டன்ட் பணிக்கு 200 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 293 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 

ஆம்பூரில் 10ம் வகுப்பு வினாத்தாள் திருத்திய ஆசிரியர்கள் காத்திருப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 10ம் வகுப்பு வினாத்தாள் திருத்திய ஆசிரியர்கள் காக்க வைக்கப்பட்டனர். ஆங்கில வினாத்தாள் திருத்தப் பணி பிற்பகல் 3 மணிக்கு முடிந்தும் படி தரவில்லை. வினாத்தாள் திருத்தப்படி வழங்காததால் வெளியூர்

அச்சுப்பிழை வினாக்களுக்கு விடை? முயற்சித்தோருக்கு மதிப்பெண்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால், மதிப்பெண் வழங்க, அறிவுறுத்தப்பட்டுவிட்டதாக, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.

பாடநூல் விற்பனை மையம் மூடல்: புத்தக தட்டுப்பாடு எதிரொலி

பாட புத்தக தட்டுப்பாடு காரணமாக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்ட புத்தக விற்பனை மையம் திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால், பல கி.மீ., தூரத்திலிருந்து வரும் பெற்றோர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை

ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முற்றுகையிட்டனர்.

விளையாட்டு விடுதிகளுக்கு மே 2 ல் மாணவர்கள் தேர்வு

விருதுநகர்: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இங்கு வரும் கல்வியாண்டில் 7,8,9,11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், குத்துசண்டை விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

மாணவர்களுக்கு 'ஆதார்'

சென்னை: சென்னையில், 6 முதல் 18 வயது வரை உள்ள, மாணவர் களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில், இதுவரை 29.72 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது;

கல்வி காவியமாகவில்லை:ஸ்மிருதி இரானி பார்லி.,யில் தகவல்

புதுடில்லி:கல்வித்துறை நியமனங்கள் காவியமாக்கப்படவில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். லோக்சபாவில் மனிதவள மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது அதற்கு பதிலளித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.

மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள்; ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள் அமல்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மணிவாசகம் வலியுறுத்தினார்.
மதுரையில் மாநில பொதுக்குழு இதில் மணிவாசகம் பேசியதாவது:
கல்வித் துறையில் தற்போது ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பிலும் இம்முறை பின்பற்றப்பட உள்ளது. ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2வில் அனைத்து பாடங்களையும் படித்து மாணவர்கள்

20 years’ Service enough for full pension even for Pre-2006 Pensioners Outcome of Supreme Court Judgment on this issue

Apex Court dismissed SLP No.C…/2014 CC No (s) , 20144/2014 on 20-02-2015. This SLP was arising out of final judgment of Kerala High Court at Ernakulam dated 07.01.2014 in OPCAT No.8/2014 viz., Union of India vs M.O.Inasu.

CCL - விடுப்பு குறித்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரிஷிவந்தியம் அவர்களின் அறிவிப்பு.

Tamil Nadu School Lab Assistant List of Nodal Centers / Application Center

Vellore

Male

St Andrew's Hr Sec School Arakkonam

 Govt Hr Sec School Ranipet

 Govt Hr Sec Vellore

 Donbosco Hr Sec School Gandhinagar

 Mazharul Uloom Higher Secondery School Ambur

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி

பேராசிரியர், விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள்.

ஆய்வக உதவியாளர் பணி - மதிப்பெண் வழங்கும் முறை....LAB ASST CUT OFF MARKS IN DETAILS .....

நேரடி நியமனம் மூலம் ஆய்வக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிக்கை (6 DISTRICT UPDATED)


நிதி உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி ஒரு நாள் பணிமுறிவின் பேரில் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தவருக்கு நிதியுதவி பள்ளியில் பணிபுரிந்த காலத்தினை கணக்கில் கொள்ளலாமா ...அதன் படி அவறுக்கு தேர்வுநிலை வழங்கலாமா...RTI தகவல்கலந்தாய்வுக்கு கல்வித்துறை ஆயுத்தம் - பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு.

நிதி உதவி பெறும் பள்ளிகளின் பள்ளிக்குழு புதுப்பித்தல் மற்றும் அங்கீகாரம் பெற ஏற்படும் காலதாமதத்திற்காக ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தக் கூடாது என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.


Merger of DA, demand scrapping of NPS for Central Government Employees to march Parliament on 28th April

Merger of DA, demand scrapping of NPS for Central employees to march Parliament on 28th April

Central employees to march Parliament on 28th, demand scrapping of NPS, merger of DA


Central Government employees have decided to hold a demonstration near Parliament on April 28 for bringing to notice their long-pending demands such as scrapping of the new pension scheme, merger of dearness allowance, and putting a stop to outsourcing, among others.

Sunday, April 26, 2015

நீதிகதைகள்


மேகலாவுக்கும் சரவணனுக்கும் அர்ச்சனா என்ற 2 வயது மகள் இருந்தாள், அரச்சனாவுக்கு வீட்டின் முற்றத்தில் வைத்து சோறு ஓடினார் அவளின் அம்மா

LAB ASSISTANT NOTIFICATION & INSTRUCTION OF LAB ASSISTANT RECRUITMENT

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் ( அசல் மற்றும் நகல்கள் )

(*கட்டாயம் தேவைப்படுவன)
1) *பத்தாம் வகுப்பு சான்றிதழ் / கூடுதல் கல்வித்தகுதி சான்றிதழ்
2) *சாதி சான்றிதழ்
3) *வேலைவாய்ப்பு அட்டை ( employment card)
4) முன்னுரிமை கோரினால் அதற்கானச் சான்றிதழ்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மழலையர் வகுப்பு தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மழலையர் வகுப்பு தொடங்கப்பட உள்ளதற்கு, தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு:டி.ஆர்.பி., மீது 'நெட்' சங்கம் புகார்

சென்னை:'அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ரத்து செய்ய வேண்டும்' என, நெட், ஸ்லெட் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது.

ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? :தேர்வுகள் துறை இணையதளத்தில் தகவல்

அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு, மத்திய அரசின், 'ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான்' திட்டத்தில், 4,362 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான எழுத்துத் தேர்வு மே 31ம் தேதி நடக்கிறது. 10ம் வகுப்பு, அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ளோர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு முடிக்காமல், அதை விட அதிகபட்ச கல்வி பெற்றவர்கள், விண்ணப்பிக்க தகுதியில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப தேர்வு சான்றிதழில் கெடுபிடி

கலைப்பாட தொழில்நுட்பத் தேர்வு சான்றிதழ்களை, மூன்று நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோதாது என்பதால், கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்' என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓரங்கட்டப்படும் வேளாண் பிரிவு; ஆசிரியர்கள் ஓட்டம் :அரசின் தொலைநோக்கு திட்டம் - 2023' நிறைவேறுவதில் சிக்கல்

ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ரத்து, வேளாண் பிரிவுக்கு வசதியின்மை போன்ற நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளில் வேளாண் படிப்புக்கு முழுக்கு போடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதை எதிர்த்து, பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட, வேளாண் ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்

பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான, மத்திய அரசின் புதிய மருத்துவத் திட்டம், தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக, 770 மருத்துவக் குழுக்கள் அங்கன்வாடி குழந்தைகளை பரிசோதித்து வருகின்றன. 

மாணவரின் இதயம் காக்க நிதி திரட்டும் ஆசிரியர்


மேலுார்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒடுகம்பட்டியில் சஞ்சீவி, 11, என்ற மாணவரின் இருதய சிகிச்சைக்கு பள்ளி ஆசிரியர் கணேசன் நிதி திரட்டி வருகிறார்.நத்தம் அருகே ஒடுகம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. மனைவி சின்னம்மாள். இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் சஞ்சீவி. அங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். ஓராண்டுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் இதய வால்வில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்

கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக, பல மெட்ரிக் பள்ளிகள், அரசின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறாமல், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன. 

தமிழகத்தில், 9,600 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன; 5,000 தொடக்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன. இவற்றில், 4,000 தனியார் மெட்ரிக் பள்ளி கள், 40 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும் செயல்படுகின்றன. 

10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு விடைத்தாளை திருத்துமாறு கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்தம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி நிறைவடைந்தது. 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத் தாள் திருத்தும் பணி கடந்த 20-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 93 மையங்களில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Saturday, April 25, 2015

nepal earth quick video......


நீதிக்கதைகள்..

ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,

ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.

ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.
வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

கோடை விடுமுறையில் பிளஸ் 2 சிறப்பு வகுப்புகள்: ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சல்


கோடையில் வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிக்கவும், விடுமுறையில் வகுப்பறை கல்வியையும் தாண்டி வெளியுலகை அறிந்து, புரிந்து கொள்ளவும், குடும்ப உறவு மேம்படவும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம் உதவுகிறது. இந்த உளவியல் நலனுக்கா கவே ஆங்கிலேயர் காலத்திலிருந்து ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

அழகப்பா பல்கலைக்கழகம் 2015-2016 B.Ed தொலைநிலைக் கல்வி இரண்டு வருடப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் - மே-2015


100% வரி வசூல் இலக்கை அடைய சம்பளம் பிடித்தம்: தற்கொலை செய்வதாக ஆர்.ஐ கடிதம்


நாகை:  நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் அன்பழகன், சென்னை நகராட்சி நிர்வாக அரசு முதன்மை செயலாளர், சென்னை  நகராட்சி நிர்வாக இயக்குனர், தஞ்சை மண்டல இயக்குனர்,  கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகை மாவட்டம்

முதுநிலை கல்வியை தமிழில் படிக்காதவர் தமிழ் வழிக்கல்வி சலுகை பெற முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

முதுநிலை கல்வியை தமிழில் படிக்காதவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விடைத்தாள் திருத்தும் பணி ஒரு மணிநேரம் புறக்கணிப்பு: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் இன்று (சனிக்கிழமை) ஒரு மணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுக் கடனுக்கு ஒரு நல்ல செய்தி

வீட்டுக் கடன் குறித்த செய்திகள் பத்திரிணகைகளில் மீண்டும் வலம்வரத் தொடங்கி யிருக்கின்றன. இம்முறை அதன் வட்டி விகிதக் குறைப்பு கவனப்பட வைக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி வட்டிக் குறைப்பு விகிதத்தில் அடிப்படைப் புள்ளிகளில் 25 புள்ளிகள் குறைத்து முன்னிலை வகிக்கிறது. இந்தத் திட்டம் ஏப்ரல் 13, 2015 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதனால் குறைந்தபட்ச வட்டி விகிதம் 9.9 சதவிகிதமாக இருக்கும். பெண் வீட்டுக் கடனாளிகளுக்கு மேலும் 0.5 குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான வட்டி விகிதம் 9.85 சதவிகிதமாகும்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அதிமுக அரசு வரும் கல்வி ஆண்டில் முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ''இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூபாய் 150 கோடியை, தமிழக அரசு உடனடியாக மே மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்.

பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்

புதுடில்லி: வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்குள், தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்ய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (ஈ.பி.எப்.ஓ.,) முடிவு செய்துள்ளது.இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில்,

பள்ளி செல்லா பிற மாநில குழந்தைகள் உடுமலை பகுதியில் அதிகம்

உடுமலை: உடுமலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த, பள்ளி செல்லாக்குழந்தைகள் கணக்கெடுப்பில், பிற மாநில குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சத்தம் இல்லாமல் அரசு துறையில் புது வசதி அறிமுகம்: அனைத்து அனுமதியும் இணைய வழியில் தான்: 2 மாதத்தில் 2,700 விண்ணப்பம்; 500க்கு அனுமதி

அனைத்து அனுமதிகளையும், இணைய தளம் வழியாக வழங்க, புதிய மென்பொருள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், சத்தமின்றி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இரண்டு மாதங்களில், 2,700 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

ஜீன்ஸ் அணிய தடை; மொபைல் 'நோ!': பள்ளி ஆசிரியர், ஆசிரியை, மாணவர்களுக்கு வருகிறது புது கட்டுப்பாடு

வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியலை, தமிழக ஆசிரியர்தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

போலி வாக்காளர்கள்: மாணவர்கள் உதவி கேட்கும் தேர்தல் கமிஷன்

வாக்காளர் பட்டியலில் போலிகள் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.

அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறோம்: அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது பணிக்கு வந்தவர்களை, அதிகாரிகள் புறக்கணிப்பதாக, தமிழ்நாடு அரசு, 2003ம் ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்கம், குற்றம் சாட்டி உள்ளது.

கட்டாய கல்வி சட்டத்தில் பெரும் குளறுபடி: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மோசம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவர்களின் கல்விச் செலவுக்கான நிதி, மத்திய அரசின், 'சர்வ சிக் ஷா அபியான்' என்ற அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி .விரைவில் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.

நீண்ட நாட்களாக  நிலுவையில்  இருந்துவந்த   மத்திய அரசு ஊழியர்களுக்கான 50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக  மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி  நேற்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மத்தியில் - புதிய தீண்டாமை!

புதிய தீண்டாமை:தற்பொழுது புதிய வகை தீண்டாமை ஒன்று ஆசிரியர்கள் மத்தியில் வெகுவேகமாக பரவிவருகிறது.வெளிமாவட்ட ஆசிரியர்கள் மீது பணிபுரியும் சொந்த ஒன்றிய ஆசிரியர்கள் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவது,உரிமையோடு பேசினால் வெளிமாவட்ட ஆசிரியர்களிடையை

Friday, April 24, 2015

மே 21 முதல் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வை, மே, 21ம் தேதி முதல், 10 நாட்களுக்கு நடத்த, போக்குவரத்து துறை முடிவு செய்து உள்ளது.
தமிழகத்தில், 22 ஆயிரம் பள்ளி வாகனங்கள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிகள் திறப்பதற்கு முன், கோடை விடுமுறையில், பள்ளி வாகன ஆய்வை, போக்குவரத்து துறை துவக்கி விடுவர்.

30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா

சேலம்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் எனப்படும், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும், 30 ஆயிரம் ஆசிரியர்கள், இம்மாதத்திற்கான சம்பளத்தை, வரும், 30ம் தேதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

'மாணவர் சேர்க்கைக்கு இணையதள மதிப்பெண் நகலை பயன்படுத்தலாம்'

கோவை: 'இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்புகளுக்கு ஏப்., 29ல் மீண்டும் கலந்தாய்வு

சென்னை: மருத்துவ மேற்படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இம்மாதம், 29ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்புகள் என, பலவிதமான மருத்துவ மேற்படிப்புகள் உள்ளன.

இன்ஜி., - மே 6; எம்.பி.பி.எஸ்., மே 11ல் விண்ணப்ப வினியோகம்

சென்னை: தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே, 6ம் தேதியும் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் மே, 11ம் தேதியும் துவங்குகின்றன.

மாணவர்கள் கடத்தலை தடுக்க பள்ளியின் வாசலில் அறிவிப்பு பலகை

ஆழ்வார்திருநகர்: போலீசாரை தொடர்பு கொள்ளும் வகையில், அரசு பள்ளி அருகே, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளின் நுழைவாயில்களில்,

Thursday, April 23, 2015

சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி – பிவிஎஸ்என் மூர்த்தி மையம்


சென்னை, மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத்தைச் (பப்ளிக் ஹெல்த் சென்டர்) சார்ந்த பிவிஎஸ்என் மூர்த்தி (BVSN MURTHY) மையம் – மூளை மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் (SCHOOL FOR SPECIAL CHILDREN), சமீபத்தில் தனது 33-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி

         மதிப்பெண் பதிவில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், பிளஸ் 2 விடைத்தாள் டாப் சீட்டின் ’பி’ பகுதி, மாநில அளவில் சரிபார்த்தலுக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியற் கல்லூரிகளில் 2014-15ம் கல்வியாண்டிற்கு பகுதி நேர பி.இ / பி.டெக் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் தி ஹிந்து வலைதளத்தில் -நமது வலைதளம் ...நன்றி க.சே. ரமணி பிரபா தேவி

நெட்டெழுத்து: இணையத்தில் வழிகாட்டும் தமிழக ஆசிரியர்!

க.சே. ரமணி பிரபா தேவி

கதை, கவிதை, கட்டுரை எனக் கற்பனைக் கடிவாளங்களை அவிழ்த்துவிட்டு வலைப்பதிவுகளில் அதைத் தொடுப்பவர்கள் பலர். அவர்களுக்கு மத்தியில் முழுக்க முழுக்கத் தமிழக ஆசிரியர்களுக்காகவே இயங்கி வருகிறார் சுரேஷ்.
அவரின் http://www.tamilagaasiriyar.com/ வலைதளம், அரசு வெளியிடும் அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பாடங்கள் சார்ந்த கையேடுகள், பாடப் புத்தகங்கள், பவர் பாயிண்ட் விளக்கக் காட்சிகள், பொது அறிவு சார்ந்த புத்தகத் தொகுப்புகள், ஆய்வுக் குறிப்புகள் என அறிவுக் களஞ்சியமாக இருக்கிறது.
வேலை பார்ப்பவர்களுக்கு உதவும் விதமாக சம்பளப் பட்டியலுக்கான பே-ரோல் மென்பொருளின் இணைப்பு, வருமான வரி குறித்த சந்தேகங்களுக்கான விளக்கப் பட்டியல் ஆகியவையும் இத்தளத்தில் உண்டு.

சிறு கதைகள் ....

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன்  குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அதில் சோமு, சிண்டு  என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணியின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்; இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்சவயது வரம்பு தளர்வு உண்டு

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணித்து ஆசிரியர் போராட்டம் - See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=73885#sthash.Vkmb3E53.dpuf


சென்னை: 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து கடந்த 20ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தமிழக முழுவதும் 70 மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில், உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 45 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா

மதுரை:ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது. பங்கேற்க விரும்புவோரிடம் கோடை விடுமுறை துவங்கும் முன் ஏப்ரலில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு பள்ளிகள் திறப்பதற்கு முன் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு:ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

சென்னை:டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 பிரதான தேர்வு, ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த ஆண்டு ஜூலை, 20ம் தேதி, குரூப்-1 முதல் நிலை தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள், கடந்த ஜனவரியில் வெளியானது.

பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்பு:மே ௮ வரை விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகளில், பகுதி நேர பி.இ., - பி.டெக்., பட்டப் படிப்புகளில் சேர, மே, 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகளில், 2015 - 16ம் கல்வியாண்டிற்கு, பகுதி நேர பி.இ., - பி.டெக்.,

மாணவர்களை கண்டித்து திருத்த உரிமை வேண்டும்: அரசுக்கு தனியார் பள்ளிகள் வேண்டுகோள்


சென்னை: 'மாணவர்களை கண்டித்து, திருத்தும் உரிமையை ஆசிரியர்களுக்கு, அரசு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.சங்கத்தின், வெள்ளி விழா மாநாடு, சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடந்தது; கவர்னர் ரோசையா சிறப்புரையாற்றினார். சங்க தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார்; பொதுச் செயலர் நந்தகுமார், துணைத் தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.

மே 7ல் பிளஸ் 2; மே 21ல் 10ம் வகுப்பு:தேர்வு முடிவு தேதி அறிவிப்பு

சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி ெவளியிடப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கி, 31ம் தேதி முடிந்தது. 8.75 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுதினர்.விடைத் தாள்களை திருத்தும் பணி, மார்ச் 16ம் தேதி

துவங்கியது. நேற்று முன்தினம், பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்தும் மையப் பட்டியல்படி, மதிப்பெண், 'சிடி' தயாரிப்பு, மதிப்பெண் பட்டியல்

இணைய சமநிலை: டிராய்க்கு 10 லட்சம் ஆலோசனைகள்...இன்னும் கருத்து தெரிவிக்காதவர்கள் கிழே கொடுக்கப் பட்ட லிங்கை பயன்படுத்தினால் மட்டும் போதும் நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்து விடலாம்.

இன்னும் உங்களின் கருத்து பதிவு செய்யாமல் உள்ளீர்களா இன்றுடன் டிராய் நமக்கு அளித்த கருத்துக்களை தெரிவிக்கும் காலக் கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆகையால் விரைந்து உங்கள் கருத்தினை பதிவு செய்வீர்.அதில் respond to trai என்பதை கிளிக் செய்ய வேண்டும்.....
The letter also talks about how startups will help fulfill his dream of Digital India. “Bringing them (people in India) online is not merely a question of infrastructure or affordability; there should first be demand for Internet access. No-one will begin using the Internet just because access is cheap or even free, if all the content and applications are in foreign languages and don’t solve their problems. The key to attaining a Digital India is to let Indian startups experiment and build the must-have apps for the next 100 crore Internet users,” it further adds.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வெளியாகிறது.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வெளியாகிறது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா இதற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டார்.

+2 தேர்வு முடிவுகள் மே7 காலை 10 மணிக்கு வெளியாகும்


ஆய்வக உதவியாளர் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விளம்பர அறிக்கை.(பள்ளிகல்வித்துறை)

'வாட்ஸ் அப்' புகழ் கொண்ட தமிழ்நாடு: எஸ்.சிராஜ் சுல்தானா, முதுகலை ஆசிரியர்


அன்று வள்ளுவனால் வான்புகழ் கொண்ட தமிழகத்தில், 'வாட்ஸ் - அப்' மூலம் கேள்வித்தாள் வெளியாகி வான்புகழ் கண்டுள்ளது.தன் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோரும், தன் மாணவன் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆசிரியர்களும், தான் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று, ஒவ்வொரு மாணவனும் எண்ணித் தான் தேர்வுகளை சந்திக்கின்றனர்.

பன்முக அறிவுத்திறன்: நாளை நமதே ம.சுசித்ரா

இறுதிப் பரிட்சை எழுதி முடித்தவுடன் பள்ளியைவிட்டு வெளியே ஓடிவரும் மாணவர்களைப் பார்த்திருப்பீர்கள். அடேங்கப்பா, என்ன ஒரு கொக்கரிப்பு, கூச்சல், மகிழ்ச்சி! கையிலும், பையிலும் வைத்திருக்கும் பாடப் புத்தகங்களைத் தூக்கி எறிந்து ஆரவாரம் செய்வார்கள். இது எதைக் காண்பிக்கிறது? கல்வி என்பது சுகமா அல்லது சுமையா? சாமானியரின் எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஒரு கட்டத்தில் தூக்கிச் சுமக்க முடியாத பாரமாகிப்போன அவலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதே நேரம், சமீப காலங்களில் கல்வி உலகில் மாற்றத்துக்கான ஒளிக் கீற்றுகள் ஆங்காங்கே தென்படுகின்றன.

பிளஸ் 2-க்குப் பிறகு: வருமானம் தரும் ஹார்டுவேர் பயிற்சி

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சொல்லியுள்ளபடி, நாட்டில் லட்சக்கணக்கான வேலைகளைத் தரும் வாய்ப்பு கொண்டது கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறை. அடிப்படைப் பழுது நீக்கல் தொடங்கி, நிறுவனங்களின் சிஸ்டம் அட்மின்வரை பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பு உண்டு.

பள்ளிபாளையம் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு நடக்கயிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

பள்ளிபாளையம் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு நடக்கயிருந்த திருமணத்தை நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

கட்டாய இலவச கல்வி சட்டப்படி மாணவர்களை சேர்க்கபோவதில்லை: தனியார் பள்ளிகள் சங்கம் எச்சரிக்கை


சென்னை: இலவச கல்விக்கான நிலுவை தொகையை தமிழக அரசு வழங்காவிட்டால் கட்டாய இலவச கல்வி சட்டத்தின் படி மாணவர்களை சேர்க்கபோவதில்லை என்று தனியார் பள்ளிகள் சங்கம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னையில் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரைவில் புதிய படிவம் : சந்தீப் சக்சேனா தகவல்


சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கு விரைவில் ஒரே படிவம் அறிமுகப்படுத்த உள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல் தெரிவித்துள்ளார்.

கே.வி. பள்ளிகளில் விருப்பப் பாடமாக ‘ஜெர்மன்’

புதுடில்லி: ”நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழியை, விருப்ப படமாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,” என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்

சென்னை : மே 2,3,4 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுகள் ஜூன் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் வருமானவரி பிடித்தலுக்கு புதிய படிவம்

சென்னை செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஓய்வூதியர்கள் மார்ச் மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய ஓராண்டில் பெறும் மொத்த ஓய்வூதியத்தின் மீது கணக்கிடப்படும் வருமான வரியினை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலர், கருவூல அலுவலரால் அவர் தம் மாதாந்திர ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

மாணவிகளுக்கு பாடம் நடத்தும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்

சென்னை, ஏப். 22–பள்ளி மாணவ–மாணவிகள் தற்போது 10–ம் வகுப்பு, பிளஸ்–2 தேர்வு எழுதி முடிவுக்காக காத்து இருக்கின்றனர். எதிர் காலத்தில் என்னவாக வர வேண்டும் என்று தீர்மானிக்கும் தேர்வு என்பதால் இதில் எடுக்கப்படும் மதிப்பெண் பற்றி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

8–ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி கூடாது: தனியார் பள்ளி மாநாட்டில் வலியுறுத்தல்

சென்னை, ஏப். 23–தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடந்தது.
மாநில தலைவர் ஏ.கனகராஜ் தலைமை தாங்கினார். ஜி.ஆர். ஸ்ரீதர், ஆர். நடராஜன், நிர்மலா, சந்திரசேகரன், எஸ்.ஆர். அனந்தராமன், என்.ராஜன், ஜெரால்டுபின்னி, அருள் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவர்னர் ரோசய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார்.

Wednesday, April 22, 2015

அரசு பள்ளிகளை வளர்த்தெடுத்த பெரம்பலூர் கலெக்டர்! - சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதுக்கு தேர்வு!

அரசு பள்ளிகளை வளர்த்தெடுத்த பெரம்பலூர் கலெக்டர்! - சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதுக்கு தேர்வு! சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் ஆட்சியர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்திருக்கும் பெருமைக்காக பெரம்பலூர் மாவட்டமே வாழ்த்துப்பா பாடுகிறார்கள்.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை,ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி வகுப்புகள் நேற்று (புதன்கிழமை) முடிவந்தன. இன்று  (23-ம் தேதி) முதல் மே 31-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுவதாகவும், ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்

பி.எட். அட்மிஷன் நடைமுறைக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல்: படிப்பு காலம் இன்னும் முடிவு செய்யப்படாததால் பிரச்சினை ஜெ.கு.லிஸ்பன்குமார்

பிஎட் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று என்சிடிஇ திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான பிஎட் அட்மிஷன் நடைமுறைகளுக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
கிரேடுபே: 5,200- 20,200 .. 
தர ஊதியம் - 2400.

ஆசிரியர் நலச்சங்களில் வெளிமாவட்ட ஆசிரியர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு


CM -CELL- பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவவிற்கு உட்பட்டது

Petition Reply Details
Petition No2015/823374/AT
Forwarded toSCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
Petition StatusRejected
Concerned Office Replyநிராகரிக்கப்பட்டது - அரசு ஆணை எண்.408- நாள் 25.08.2009 -ன்படி முழு நேரப்பணியில் 01.04.2003 -க்கு முன்னர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். திரு.குருசாமி என்பார் பகுதி நேரப்பணியà ��லிருந்து 2008-ல்தான் முழு நேரப்பணிக்கு ஈர்க்கப்பட்டுள்ளார். அன்னாரின் சி.பி.எஸ்.எண்.7049473. பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவவிற்கு உட்பட்டது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.025293/ஆர்1/15 நாள் 17.4.15     engelsdgl@gmail.com
Fax : 044 - 2567 6929
Contact Us : Chief Minister's Special Cell, Secretariat, Chennai - 600 009.

Phone: 044 - 2567 1764         
Fax : 044 - 2567 6929

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!