Tuesday, June 30, 2015

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!

‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..

‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.

புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இன்று ஒரு வினாடி அதிகம்: நாசா அறிவிப்பு

புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது:- 
பூமி, சந்திரன், சூரியன் இடையே புவிஈர்ப்பு விசை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. இதனால் பூமி தன்னைத்தானே சுற்றிவர 86,400.002 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.ஒவ்வொரு நாளும் இவ்வாறு உள்ள கூடுதலான நேரம் பல ஆண்டுகளாக சேர்த்து கணக்கிடும்போது அது ஒரு வினாடி ஆகிறது. எனவே ஜூன் 30 அல்லது டிசம்பர் 31–ந்தேதிகளில் லீப் வினாடி கணக்கிடப்படும். 

Pension- Contributory Pension Scheme- Employees contribution and Government contribution- Rate of interest for the year 2014-2015 and 2015-2016 - Orders - Issued.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் மையத்தில் பயிற்சி

பாடங்களில் மாதிரிகளை தயாரித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கற்றுத் தருவது தொடர்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கு 3 நாள்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் அனைத்து மாணவர், மாணவிகளையும் 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்யவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கற்றுத்தரும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதிரிகள் தயாரிப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து ஓய்வு

அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றார்.
 பள்ளிக் கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள்: நிகழ் கல்வியாண்டுக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவு

கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிகழ் கல்வியாண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 தமிழ்நாடு தனியார் கல்லூரிகளின் (ஒழுங்குமுறை) விதிகள் 1976-இன் படி தனியார், அரசு நிதி உதவி பெறும், சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவு ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை நியமிக்க தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பேராசியர் ஐ.இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

தலைக்கவச விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: இரா.முத்தரசன்

தலைக்கவச விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார்.
 இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

நாளை தொடங்க உள்ள டிஜிட்டல் இந்தியா திட்டத்தினால் கிடைக்கப் போகும் வசதிகள் என்னென்ன

டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடக்கி வைக்கிறார்.  இந்தத் திட்டத்தின் மூலம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை இணையம் மூலம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் நிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, மைக்ரோசாஃப்ட் முதன்மைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி, விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, "டிஜிட்டல் இந்தியா' திட்டம் தொடர்பான தங்களது கருத்துகளை முன்வைக்க உள்ளனர்.

தலைக்கவசம்: காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஜூலை 1 (புதன்கிழமை) முதல் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், காவல் துறை அதிகாரிகள் அதை செயல்படுத்துவது குறித்து செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனை செய்தனர்.
 இதுகுறித்த விவரம்: தலைக்கவசம் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த பெருநகர காவல் துறை போக்குவரத்து பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

மாணவியை ஆசிரியை அடித்த விவகாரம்: ஒழுங்கு நடவடிக்கு பரிந்துரை

பாப்பாரப்பட்டியில் பள்ளி மாணவியை அடித்த ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் திவிஜா. இவர் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு நேல் நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தலைக்கவசத்தை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள், இருக்கையில் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட இரண்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
 உயர் நீதிமன்ற வழக்குரைஞரின் குமாஸ்தா டி.கோபாலாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். அதில், இருசக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியத் தவறினால் வாகனங்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், ஐ.எஸ்.ஐ. தரத்துடன் கூடிய புதிய தலைக்கவசம், அதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திரும்பப் பெற்றுச் செல்லலாம் எனவும் கடந்த 18-ஆம் தேதி தமிழக அரசு பொது அறிவிப்பு வெளியிட்டது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் உரிய கல்லூரிகளில் சேர வியாழக்கிழமை (ஜூலை 2) கடைசி நாளாகும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசின் உத்தரவை தடை செய்ய கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

ஜூலை 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கோபாலகிருஷ்ணன் என்பவர் தாக்க செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் 

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோஇன்று கவுன்சிலிங் துவக்கம்

சென்னை:ஆசிரியர் பயிற்சி, டிப்ளமோ படிப்புக்கான கவுன்சிலிங், இன்று முதல், 4ம் தேதி வரை நடக்கிறது.தமிழகத்தில், 440 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங், இணையதளம் வழியாக, இன்று துவங்கி, 4ம் தேதி முடிகிறது.

'ஆவரேஜ்' மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் 'கல்தா'


புதிய கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், அதிக தேர்ச்சி காட்ட, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பல பள்ளிகளில், கடந்த கல்வி ஆண்டில், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில், சுமாராக படித்த மாணவர்கள், கட்டாயமாக தேர்ச்சி இழப்பு செய்யப்பட்டுள்ளனர். 

இன்ஜி., பொது கவுன்சிலிங் இன்று துவக்கம்

சென்னை:தமிழகத்தில் உள்ள, 539 இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான பொது கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது. இரண்டு லட்சம் இடங்களுக்கு, ஒரு மாதம் வரை கவுன்சிலிங் நடக்கும்.
* காலை 10:00 மணிக்கு, கவுன்சிலிங் துவங்கும்.
* தினமும் எட்டு பிரிவுகளில், ஒரு பிரிவுக்கு, 600 பேருக்கு என, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை

காரைக்கால் : மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(1ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.விழாவை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'காரைக்கால் அம்மையார் கோவிலில் நடக்கும் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள,

TN GOVT ALL FINANCE G.O's & PROCEEDINGS IN ONE CLICK

S.NO.
SUBJECT
G.O. NO. AND DATE
1
The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
2
Pay Fixation of fresh recruits on or after 01.01.2006
G.O Ms No 258
Dt : June 23, 2009 
3
Pay Comission arrears in respect of Government servants who died on or after 01.01.2006
4
Clarifications on The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
5
–do–
6
–do–
7
Recommendations of One Man Commission 2010 – Department wise — Government Orders – Issued.
G.O.Ms.Nos.254 to 340
Dt : August 26, 2010
 
8
9
10
11
11A
11B
12
13

Monday, June 29, 2015

ஊதிய குழு வழங்கிய 1.86 என்றால் என்ன ?

ஊதிய குழு நடைமுறை படுத்தப் பட்ட 1.1.2006 அன்று பெற்று வந்த அகவிலைபடி 86% ஆகும் . அதனுடன் 100 ஐ கூட்டி 100 ஆல் வகுத்தால் கிடைப்பது தான் 1.86 ஆகும் .

7 வது ஊதிய குழு வில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் .

ஹெல்மெட்' விவகாரம்: தடை கோரி வழக்கு

'ஜூலை 1ம் தேதி முதல், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என்ற, தமிழக அரசின் அறிவிப்புக்கு தடை கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பி.இ.: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

பொறியியல் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது.2015-16 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தொடங்கியது. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.இரண்டாம் நாளான திங்கள்கிழமை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

உபகரணம் இல்லாமல் பயிற்சியா? உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பல்.

"அரசு அறிவித்துள்ள, 23 வகையான விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க, திருப்பூரில் மைதானமோ, போதிய உபகரணங்களோ இல்லை,' என, உடற்கல்வி ஆசிரியர்கள்புலம்புகின்றனர்.அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தடகளம், கபடி, கால்பந்து, கோ-கோ, கைப்பந்து போன்ற விளையாட்டுகள், மாணவர்களுக்கு சொல்லித் தரப்படுகின்றன. 

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூலை 1-ல் கலந்தாய்வு தொடக்கம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த தண்டிப்பதைவிட, கற்றுத்தந்து பயிற்சியளிப்பதே சிறந்தது!

         அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகக் கல்வியியல் கல்வித் துறைத் தலைவர் டெபோரா லோவன்பர்க் பால் சிறந்த கல்வி நிபுணர். ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பெறும் பயிற்சியைவிட, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பெறும் பயிற்சியைத்தான் அதிகம் மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறார். ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தவுடன் அவர்கள் சிறப்பாகப் பணிபுரிய பயிற்சித் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து ஒரு பாடத்திட்டத்தை அவர் வகுத்திருக்கிறார்.

ஜாக்டா உயர்மட்டகுழு சென்னையில் கூடி முக்கிய தீர்மாணம்......அதன் முழு விவரம் வருமாறு.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வருவாய் துறையில் 12 ஆயிரம் கணக்காளர் பணி

உத்தரப் பிரதேச மாநில வருவாய் துறையில் காலியாக உள்ள 12000 கணக்காளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 12000
பணி: கணக்காளர் (Lekhpal)
தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு மற்றும் கப்பல்படையில் 375 பணி

இந்திய பாதுகாப்பு மற்றும் கப்பல்படையில் காலியாக உள்ள 375 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு அறிவிப்பு எண்.11/2015-NDA-II 
தேதி: 26.06.2015
காலியிடங்கள் விவரம்:
1. தேசிய பாதுகாப்பு அகாதமி - 320

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 6578 பணி

    மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 6578 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி அளவில் (10 + 2) தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 6578
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Postal Assistant/ Sorting Assistant: - 3523
2. Data Entry Operator - 2049
3. Lower Divisional Clerk - 1006

இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகை பெறுவது குறித்துப் பயிற்சி

கரூர் மாவட்டத்தில் 39 கல்லூரி முதல்வர்கள், 228 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கு இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகை பெறுவது குறித்து திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ச. ஜெயந்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

மதுரை: சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தடையை நீக்க மறுத்து, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்தவர் பி.அசோக், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 2015-16க்கான மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பை தளர்த்தி, ஜூன் 4ல் பதிவாளர் அறிவிப்பையும்  பார் கவுன்சில் அறிவிப்பையும், வயது

கொல்கத்தாவில் பரபரப்பு: நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்டில் நாய் படம்


கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டம் ஜிராபாரா பகுதியைச் சர்ந்த மாணவர் சௌமியதீப் மகாட்டோ பிளஸ்டூ தேர்வில் 74 சதவீத மார்க் பெற்றார். ரங்காமதி நகர் ஐ.டி.ஐ.யில் சேர பொது நுழைவு தேர்வுக்கு ஆன்லைனில் தனது புகைப்படத்துடன் கல்வி தகுதியை உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பித்தார். சம்பந்தப்பட்ட ஐ.டி.ஐ நிர்வாகம் இணைய தளம் மூலம்  வெளியிட்ட ஹால்டிக்கெட்டில் மாணவர் சௌமியதீப் மகாட்டோ புகைப்படத்திற்கு பதில் நாய் படத்தை வெளியிட்டது. 

புத்தகம் வாங்க பலமணி நேரம் காத்துகிடக்கும் பெற்றோர் - கூடுதல் கவிண்டர் இல்லாததால் அவதி


தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, பிளஸ் 2 வரை, இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான சமச்சீர் புத்தகங்கள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான தமிழ் புத்தகங்கள் போன்றவை, பாடநுால் கழகம் மூலம் விற்கப்படுகின்றன.

நாளை முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்: விற்பனை ஜரூர்!

தமிழகத்தில், கட்டாய, 'ஹெல்மெட்' சட்டம் நாளை அமலுக்கு வருகிறது. அதனால், அசல் மட்டுமின்றி, போலி ஹெல்மெட் விற்பனையும், இரட்டிப்பு விலைக்கு அதிகரித்து
உள்ளது.
* இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும், ஐ.எஸ்.ஐ., தர முத்திரை உடைய ஹெல்மெட் அணிய வேண்டும்.
* ஹெல்மெட் இல்லாவிடில், மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு, 206ன் கீழ், ஓட்டுனர் லைசென்ஸ் பறிக்கப்படும். அசல் லைசென்ஸ் எடுத்து வராவிட்டால், 'பைக்' தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு, அந்த எல்லைக்குள் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் வைக்கப்படும். அசல் லைசென்ஸ் கொடுத்த பின், வாகனம் ஒப்படைக்கப்படும்.

'ஸ்மார்ட் சிட்டி', 'அம்ருட்' திட்டத்திற்கு தேர்வான நகரங்கள் எத்தனை?

தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு, 12 மாநகராட்சிகள்; 'அம்ருட்' திட்டத்திற்கு, 20 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு, அடுத்த ஏழாண்டுக்குள், 100 ஸ்மார்ட் சிட்டிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதேபோல், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கும் நகராட்சிகளில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த, அம்ருட் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை நினைவு கூறும் வகையில், 'அடல் மிஷன் பார் ரிஜுவனேஷன் அண்டு அர்பன் டெவலப்மென்ட்' என, பெயரிடப்பட்டு உள்ளது.

இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1 பாடம்

'இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த வேண்டும்' என, கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிப்படிப்பை முடித்து, புதிதாக பொறியியல் கல்லுாரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்த வேண்டும்; அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலையில், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற. முன் தயாரிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை

புதுடில்லி: மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படும், பார்வையின்மை, காது
கேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை, பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, வயது வரம்பு, 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை, நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:

பயோ-மெட்ரிக்' வருகைப்பதிவு: பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியம்.

                   ஆசிரியர்களின் முறையான வருகைப்பதிவை உறுதிசெய்யும் விதத்தில், பள்ளிகளில், 'பயோ-மெட்ரிக்' எனும் கைரேகை பதிவு முறையை அறிமுகம் செய்யவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை முறைப் படுத்தி கண்காணிக்கும் நோக்கில்,   'எஸ்.எம்.எஸ்' முறை திருச்சிமாவட்டத்தில் மட்டும் முன்னோட்டமாக

10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு வெளியீடு

SSLC - MARCH - 2015 

 RETOTAL CHANGES SUBJECT LIST DETAILS AVAIL IN

www.tndge.in

துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்: குப்பை போடுபவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவு

புதுடில்லி: சாலைகள், தெருக்களில் எச்சில் துப்புவோர், குப்பைகளை வீசி, சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்கெடுப்பவர்களுக்கு கண்டனம், அபராதம், சிறை தண்டனை அளிக்க வகை செய்யும்
சட்டத்தை மத்திய கொண்டு வர உள்ளது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின்,
'துாய்மை இந்தியா' திட்டத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறுபான்மையினர் உதவி பெற சுய சான்று அளித்தால் போதும்

புதுடில்லி:'மத்திய அரசு நலத்திட்டங்களின் பயன்களை பெற, சிறுபான்மையினர், சுய சான்று அளித்தால் போதும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.
முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பவுத்தர், பார்சிக்கள், ஜைனர் ஆகிய ஆறு மதத்தவர், சிறுபான்மையினராக, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு நலத்திட்டங்களை பெற, சிறுபான்மையினர் என்பதற்கான சான்றிதழை, அரசு உயரதிகாரிகளிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.

ஜீன்ஸ், மிடி அணிய தடை மாணவியருக்கு அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்:கேரளாவில் உள்ள தனியார் பெண்கள் கல்லுாரியில், மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், குட்டை பாவாடை ஆகியவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவியருக்கு சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - அனைத்து பள்ளிகளுக்கும் ஆங்கில கல்வி ஒலிப்புமுறை" யை[PHONETIC METHODOLOGY] பயிற்றுவிக்க கொடுக்கப்பட்ட குறுந்தகடு மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறதா? - அனைத்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களும் அறிக்கை சமர்பிக்க இயக்குனர் உத்தரவு


PLI Loan Condition


CPS-மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் படி பிடித்தம் செய்த தொகை ,அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

CPS-திருத்தம் செய்து செய்து வெளியிட்ட அரசாணை -நாள் 05.06.2015

ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த தண்டிப்பதைவிட, கற்றுத்தந்து பயிற்சியளிப்பதே சிறந்தது!

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகக் கல்வியியல் கல்வித் துறைத் தலைவர் டெபோரா லோவன்பர்க் பால் சிறந்த கல்வி நிபுணர். ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பெறும் பயிற்சியைவிட, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பெறும் பயிற்சியைத்தான் அதிகம் மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறார். ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தவுடன் அவர்கள் சிறப்பாகப் பணிபுரிய பயிற்சித் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து ஒரு பாடத்திட்டத்தை அவர் வகுத்திருக்கிறார்.

2015-16 ஆம் ஆண்டின் தொடக்கக் கல்வித்துறையின் வேலை நாட்கள்.

 

"அச்சம்" சிறுகதை

அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.
“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

Sunday, June 28, 2015

சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை பெற சுய சான்றளிக்கப்பட்ட சாதி சான்றிதழ் போதுமானது: மத்திய அரசு அறிவிப்பு

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இத்தகைய சிறுபான்மையினருக்காக மத்திய-மாநில அரசுகள் அவ்வப்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.  

பள்ளிக்கல்வி துறையில் தேங்கும் வழக்குகள்.

கோவை மாவட்டத்தில், சட்டம், நீதிமன்றம் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு 
இன்மையால், நாளுக்கு நாள் அதிரித்து வரும் நிலுவை வழக்குகளை சமாளிக்க முடியாமல், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திணறி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையின் கீழ், ஆசிரியர் நியமனம், ஊதியம் மற்றும் பதவி உயர்வு, தகுதித்தேர்வு, பணி முன்னுரிமை மற்றும் பொது நல வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தனியார் பள்ளி இடப்பிரச்னை, கலையாசிரியர்கள் தேர்வு என, ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படுகின்றன.

நெட் தேர்வு: நாடு முழுவதும் 7 லட்சம் பேர் பங்கேற்பு

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ஒதுக்கிய இடங்கள் 900 : விண்ணப்பமோ 14;2ம் ஆண்டு இன்ஜி., நிலைகாரைக்குடி:பி.எஸ்சி., முடித்து இன்ஜி., நேரடி இரண்டாம் ஆண்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் வெகுவாக குறைந்துள்ளது.

டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில், கடந்த 26-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. பி.எஸ்சி., முடித்தவர்களுக்கென ஒவ்வொரு ஆண்டும், 900 இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

ஆக., 1ல் போராட்டம்: ஜாக்டோ குழு அறிவிப்பு


சென்னை:அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 30 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை அமைத்துஉள்ளன. 
இக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.இந்நிலையில்,

70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்

தமிழகத்தில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களை, ஜூலையில் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியர் விவரங்கள், 'இ.எம்.ஐ.எஸ்.,' என்ற கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு திட்டத்தில் சேகரிக்கப்படுகின்றன. மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களில், ஆதார் எண்ணையும் இணைக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.

நர்சு வேலைக்கு போட்டி தேர்வு


சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 40,432 பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான போட்டித்தேர்வு, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, மற்றும் திருச்சி நகரங்களில், 89 மையங்களில் நேற்று நடந்தது. சென்னையில், அண்ணா பல்கலை

சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

சென்னை:தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா (பி.எஸ்.எம்.எஸ்.,), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்.,), யுனானி (பி.யு.எம்.எஸ்.,), நேச்சுரோபதி மற்றும் யோகா (பி.என்.ஒய்.எஸ்.,), ஓமியோபதி (பி.எச்.எம்.எஸ்.,) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகள் உள்ளன.நடப்பாண்டில், இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஆறு மருத்துவக் கல்லுாரிகளில் இன்று துவங்குகிறது.

அரசு விளையாட்டு விடுதிகளில் ஜூலை 3ல் மாணவர் சேர்க்கை

சென்னை:தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரை விளையாட்டுத் துறையில் சாதிக்க வைக்கும் வகையில், விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில், 28 இடங்களில், பயிற்சி, தங்கும் இடம், உணவு வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் உள்ளன. இதற்கான சேர்க்கை, ஜூலை 3ம் தேதி நடக்கிறது.

விளையாட்டு பிரிவில் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் முன்னிலை:இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவக்கம்

சென்னை:இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்கள் எதிர்பார்த்த, அண்ணா பல்கலை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. விளையாட்டுப் பிரிவில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., மாணவர்கள், முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 539 இன்ஜி., கல்லுாரிகளில், இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.54 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான, கவுன்சிலிங் நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு துவங்கியது.

ஹெல்மெட் அணியலையா:நீதிமன்றம் அலைய தயாரா

மதுரை:'ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் என்ற நிலையில், அதை அணியாமல் வந்தால் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றுகளின் நகல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது' என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:டூவீலர் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். மீறினால் மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 206ன்படி, அசல் ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு சான்று மற்றும் டூவீலர் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் உரிய ஒப்புகைக்கு பின் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்; ஆவணங்களின் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

'கட் - ஆப்' மதிப்பெண் 192 எடுத்தும் படிப்பை தொடர முடியாத மாணவர்

திருச்செங்கோடு:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பாவடித் தெருவைச் சேர்ந்த குமார் - சாந்தி தம்பதியின் மகன் லோகநாதன், 17. இவர், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார்; பொதுத்தேர்வில், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றதை தொடர்ந்து, கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக்., பள்ளியில், பிளஸ் 2 இலவசமாக முடித்தார். 

AADHAAR EMIS SEEDING

ஜாக்டோ --1.8.2015 அன்று மாநில தலைநகர் சென்னையில் தொடர் போராட்டம் நடத்துவோம்

ஜாக்டோ உயர் மட்ட குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் வரும் 1.8.2015 அன்று மாநில தலைநகர் சென்னையில் தொடர் போராட்டம் நடத்துவோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் பேரினமே அணிதிரண்டு ஆர்பரிப்போம். உதித்தபோதே போராட்டத்தில் குதித்த இயக்கம் சீரியக்கம் இந்த இயக்கம் வாழ்வதிலே இருப்பதெங்கள் வாழ்வாகும். ஒன்றுபடுவோம் போராடுவோம் இறுதி

7th Pay Commission expected to submit its report to the Centre in September 2015

According to reliable sources of information, the 7th Pay Commission is expected to submit its final report including the revised pay and pension structure for Central Government employees and pensioners to the Central Government on in the first week of September.

Saturday, June 27, 2015

உத்தரவுகளை வேண்மென்றே அமலபடுத்தாமல் இருக்கும் அரசு அதிகாரிகளை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள்.


தேர்வாணைய தடையை நீக்க கோரிய அரசு ஊழியருக்கு ஐகோர்ட் அபராதம்

தேர்வாணைய தடையை நீக்க கோரிய அரசு ஊழியருக்கு ஐகோர்ட் அபராதம் தேனியைச் சேர்ந்தவர் வி.தமிழ்மொழி, மாவட்ட கருவூலக நிரந்தர இளநிலை உதவியாளர். இவர் 2010ல் நடந்த கணக்காளர் பணிக்கான தேர்வில் உயர் அதிகாரிகள் தயாரித்த வினா, விடைத்தாளை திருடி முழு மதிப்பெண் பெற்றது தெரிந்தது. இதனால் தமிழ்மொழிக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க நிதித்துறைச் செயலர் 29.11.2012ல் உத்தரவிட்டார்.

சென்னை பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு: மேயர் 29–ந் தேதி வெளியிடுகிறார்.

மாணவர்கள் உயர்கல்வி பயில 10 மற்றும் பிளஸ் – 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது இன்றியமையாததாகும். அதன்படி 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வை எதிர் கொள்ளும் மாணவ – மாணவிகள் கூடுதல் மதிப்பெண் வாங்குவதற்காக பல்வேறு வினா – விடை பயிற்சி கையேடுகளை வாங்குவார்கள். தற்போது அண்ணா நகரில் உள்ள ராங்கி மார்ஸ் நிறுவனத்தார் பிளஸ் – 2 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறும் வகையில் வினா – விடைகளை சி.டியாக தயாரித்து உள்ளார்கள்.

ஏழு ஆண்டுகளாக சம்பள உயர்வின்றி தவிக்கும் கல்வித்திட்ட ஊழியர்கள்

சிவகங்கை:தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்து சம்பள உயர்வின்றி தவிப்பதாக அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட( ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.அனைத்து குழந்தைகளும் கட்டாயம் 8ம் வகுப்பு வரை படிப்பதை வலியுறுத்தும் எஸ்.எஸ்.ஏ., கல்வி திட்டத்தை மத்திய அரசு 2002ல் கொண்டு வந்தது. இதையடுத்து,

பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்:பல்கலை துணைவேந்தர் ஆலோசனைதிருநெல்வேலி:கல்வியியல் பல்கலை துணைவேந்தர் நெல்லையில் பி.எட்., கல்லுாரி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான காலஅளவு இரண்டு ஆண்டுகளாகிறது. தேசிய கவுன்சில் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை அமலாகிறது.

அண்ணாமலை பல்கலை.,யில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்

சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது. கலந்தாய்வை, நேற்று காலை, 9:00 மணிக்கு, துணைவேந்தர் மணியன் துவக்கி வைத்தார். பொறியியல் தர வரிசை பட்டியலில், 194.75 'கட் - ஆப்' மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்ற, புவனகிரியைச் சேர்ந்த அருள்வேல் என்ற மாணவர், சிவில் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்தார்.

அரசு ஊழியர்கள் ஜி.பி.எப்.,இனி 'ஆன்லைனில்' மட்டுமேசென்னை:'அரசு ஊழியர்களின், பொது சேம நல நிதியான - ஜி.பி.எப்., தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைனில்' மட்டுமே மேற்கொள்ளப்படும்' என, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அறிவித்துள்ளது.

பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்:மன உளைச்சலால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு அதிகரித்த நிலையில், அரசு பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஆர்வம் அதிகரித்தது.

படிப்பை இடையே நிறுத்தும் மாணவர்கள் அதிகரிப்பு?

தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட்சத்து, 8 ,224 மாணவ, மாணவியர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையால், ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாழாக்கப்படுகிறது.

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்.,2ம் ஆண்டில் சேர வாய்ப்பு

சென்னை:அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு, பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்., படிப்புகளில், டிப்ளமோ முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான விண்ணப்பத்தை, www.tnhealth.org; www.tn.gov.in என்ற இணையதளங்களில்,

செயல்வழிக்கற்றல் கல்வியில் தொய்வு:புது வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு

தமிழகத்தில், முப்பருவக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் கல்வி முறையில், தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை போக்கும் வகையில், புதிய வழிமுறைகளை பின்பற்ற, ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும், தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை, செயல்வழிக்கற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.

ஜூலை 1 முதல் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்: ரூ.1 லட்சம் கோடியில் நிறைவேற்றம்

புதுடில்லி: தே.ஜ., கூட்டணி அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, அடுத்த மாதம், 1ம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் நாட்டை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அகஇ-2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான கதை புத்தகங்களுக்கான ஓவியங்கள் வரைதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல்!

மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் ஏற்றும் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE) இணையதள முகவரி

மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் ஏற்றும் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE) இணையதள முகவரி

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் ஏற்றும் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE) இணையதள முகவரி நம் தளத்தில் 

11.07.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான(ENRICHMENT TRAINING ON CCE IN SABL') குறு வளமைய பயிற்சி அட்டவணை


Friday, June 26, 2015

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது

 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.5,000 கோடியை எக்ஸ்சேஞ்ச் டிரேடர் பண்டுகளில் நடப்பாண்டுக்குள் முதலீடு செய்ய உள்ளது. 

மேல்நிலை புத்தகங்கள் மீண்டும் அச்சடிப்பு: அரசியல் வெறுப்புக்காக வீண் செலவா? : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு மற்றும் பொருளியல் பாடநூல்களை புதிதாக அச்சிட தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. பாடநூல்களில் திருத்தங்கள் செய்வதற்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் தமிழக அரசை பாராட்டியிருக்கலாம். ஆனால், பாடநூல்களில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் முன்னள் கல்வியமைச்சர் தங்கம் தென்னரசின்  பெயர்கள் இருந்ததால் அவற்றை நீக்குவதற்காக பாடநூல்களை புதிதாக அச்சிடுவது கண்டிக்கத்தக்கது.

பிஎப் கணக்கு எண் வைத்திருப்பவரா? ஆதார் எண் கட்டாயம்


சென்னை:  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்த ஒரு மாத காலத்திற்குள் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் உறுதி ஆவண படிவம் - 11ஐ (புதியது) நிறுவன உரிமையாளர்கள்  கட்டாயமாக பெறவேண்டும். மற்றும் படிவத்திலுள்ள விவரங்களை நிரந்தர கணக்கு எண் (யுஏஎன்.) இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் 25 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

30-இல் கணினி விவரப்பதிவாளர் காலிப்பணி எழுத்துத்தேர்வு

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் காலியாகவுள்ள கணினி விவரப்பதிவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என அறிóவிக்கப்பட்டுள்ளது.

ANNA UNIV ENGINEERING IMPORTANT COUNSELING DATES....

107 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: 6ம் வகுப்பில் புதிதாக துவங்க உத்தரவுகோவை :கோவை மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், 107 அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில், ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கென தனிவகுப்பு துவங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் யோகா கற்றுக்கொடுக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உத்தரவு


கோவை :யோகா பயிற்சிகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு, யோகா பயிற்சியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கடந்த, 2014ம் ஆண்டு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகளில் முறையாக பின்பற்றப்படவில்லை. தற்போது, முன்பு வெளியிட்ட அரசாணையின் படி, தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், யோகா பயிற்சியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை .....! அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் கவுன்சலிங் துவக்கம்...

Dinamalar Banner Tamil Newsதமிழகத்தில் உள்ள, 539 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்காக, சென்னை அண்ணா பல்கலையால் நடத்தப்படும் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தனியார் கல்லுாரிகள் ஆள் பிடிப்பதை தடுக்க, இடைத்தரகர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள் குளிக்கவும் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்ஜி. கவுன்சிலிங் ஒரே நேரத்தில் 50 பேர் தேர்வு செய்யலாம்

கவுன்சிலிங் ஏற்பாடு குறித்து தமிழ்நாடு இன்ஜி. மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்ததும் கல்லுாரிக்கு கட்ட வேண்டிய கல்வி கட்டணத்தில் முன்தொகை செலுத்த வேண்டும்.இதற்காக கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில் எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன.

இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்கள்:மன்னர் ஜவகர் தகவல்

காரைக்குடி:“கடந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்களே சேர்ந்துள்ளனர்,” என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.காரைக்குடி ராஜராஜன் இன்ஜி., கல்லுாரி ஆண்டு விழா நிகழ்ச்சி யில், அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் 22 மாநில பல்கலை கழகங்கள், 3 மத்திய பல்கலை கழகங்கள், 26 நிகர்நிலை பல்கலை கழகங்கள் உள்ளன. இன்ஜினியரிங் படிப்புக்கென அண்ணா பல்கலை உள்ளது. இன்ஜி., கல்லுாரி எண்ணிக்கையில் ஆந்திரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை துவக்கம்:இன்று'சிவில்' படிப்பு

காரைக்குடி:பி.எஸ்சி., பாலிடெக்னிக் முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான 'கவுன்சிலிங்' காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் நேற்று தொடங்கியது. ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. 91 ஆயிரத்து 371 இடங்கள் காலியாக உள்ளன.

முடி கொட்டுமா, வியர்க்குமா, மூச்சு விட முடியுமா? 'ஹெல்மெட்' சந்தேகங்களுக்கு டாக்டர்களின் பதில்

மதுரை: 'ஹெல்மெட்டா... தலைவலிக்கும், வியர்க்கும், முடிகொட்டும், கழுத்து வலிக்கும், காது கேட்காது, பக்கவாட்டில் வாகனம் வந்தால் தெரியாது...' என்றெல்லாம் பல்வேறு எதிர்மறை சாக்கு போக்குகள், சந்தேகங்கள் வாகன ஓட்-டிகளுக்கு இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கு துறை நிபுணர்களான டாக்டர்கள் பதில் இதோ... 


தலை வியர்க்குமா; முடி கொட்டுமா?
டாக்டர் ஆர். சுகந்தி, பேராசிரியர், தோல் நோய் பிரிவு, மதுரை அரசு மருத்துவமனை:ஹெல்மெட் அணிந்தால் தலை வியர்க்கிறது என்றால், சுத்தமான காட்டன் கைத்துண்டை தலையை சுற்றி கட்டி அதன் மேல் அணியலாம்; அது, வியர்வையை உறிஞ்சி விடும்.

இடைநிற்றல் உதவித்தொகைக்கு 'ஜீரோ பேலன்ஸ்' வங்கிக்கணக்கு

காரைக்குடி:2015--16-ம் கல்வி ஆண்டிற்கான 10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விபரங்களை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்து, 'ஜீரோ பேலன்ஸில் அவர்கள் வங்கி கணக்கு துவக்க பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்

மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளியாக மாற்றும்படி, அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.
நடப்பு கல்வியாண்டில், மாற்றுத்திறனாளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளிகளை உருவாக்க, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பி.எப்., எண்ணை 15 நாளில் பயன்படுத்த உத்தரவு

சென்னை:பி.எப்., மண்டல ஆணையர் பிரசாத் தொழிலதிபர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:பி.எப்., திட்டத்தில், தொழிலாளர்கள் உறுப்பினரான, ஒரு மாதத்துக்குள், உறுதி படிவத்தை பெற்று, 25 நாட்களுக்குள், நிரந்தர எண் பெற பதிவு செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை


புதுடெல்லி: அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல வகை பாடத்திட்டங்கள் உள்ளன. இதில், உயர்கல்வி படிப்புகள் மட்டும், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகக் கட்டுப்பாட்டில் அமலாகின்றன. ஆனால், பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் தனித்தனியே இருக்கின்றன.

பள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை - 2015-16ஆம் கல்வியாண்டிற்கான 10 முதல் 12ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் விவரங்களை இணையவழி மென்பொருளில் 26.06.2015 முதல் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு

சிறப்புஊக்கத்தொகை (Special Cash Incentive) 2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான 10 முதல் 12ம் வகுப்புகள்வரையிலான மாணவர்கள் விவரங்கள்-இணை வழி மென்பொருளில் (Online Software) பதிவேற்றம் செய்தல்.

கடந்த ஆண்டு +2 முடித்தவர்கள் மருத்துவ படிப்பில் பங்கேற்கலாம்: உயர்நீதிமன்றம் அனுமதி - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=152678#sthash.5aHL5JVv.dpuf

சென்னை: கடந்த ஆண்டு +2 முடித்தவர்கள் மருத்துவ பிடிப்பில் பங்கேற்கலாம் என்று நடப்பு ஆண்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பழைய மாணவர்களுக்கு தடைக்கோரி மாணவர் கபிலன் உள்ளிட்ட 60 பேர்

Thursday, June 25, 2015

அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி

குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் "மழையில் ஒருநாள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படவுள்ள இந்தப்போட்டியில் 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கு அனுப்பப்படும் வடிவமைப்புகள் மை,

25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் - CPS

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுகளாக நிறுத்திவைப்பு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் கடந்த 4 ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.ஓ.) ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகம் செய் கிறார்கள். ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் தயாரிப்பு, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர்களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண் டர், வங்கிக்கடன், பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎப்) முன்பணம் பெறுதல் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் பட்டியலை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) காலை 10 மணி முதல் பல்கலைக்கழக இணையதளத்திலும் மாணவர்கள் காணலாம்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள், மூன்றாண்டு சட்டப் படிப்புகள், அரசு கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

CPS:பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்துஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), இவற்றுக்கான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்குச் சமமான தொகையை அரசு தன் பங்காக செலுத்தும்.

கம்ப்யூட்டர் ஆசிரியர் பற்றாக்குறை;அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அவதி.

தமிழகத்தில் உள்ள பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பாமல் உள்ளதால், மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த வளர்ச்சி மற்றும் பணிகளுக்கு மவுசு அதிகரித்து வருவதால், 

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்.

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல வகை பாடத்திட்டங்கள் உள்ளன. 
இதில், உயர்கல்வி படிப்புகள் மட்டும், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகக் கட்டுப்பாட்டில் அமலாகின்றன. ஆனால், பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் தனித்தனியே இருக்கின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, புதியகல்விக் கொள்கை வரைவு விதிகளை, மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. 

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!