Wednesday, September 30, 2015

அனைவருக்கும் கல்வி இயக்கம்: கல்வி புள்ளி விவர சேகரிப்பு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அனைத்து வகையான பள்ளிகளிலும் நிகழாண்டுக்கான (2015-16) மாவட்ட அளவிலான கல்வி புள்ளி விவர சேகரிப்பு படிவம் நிரப்புவது தொடர்பான பயிற்சி அனைத்து கள ஆய்வாளர்களுக்கும் அளிக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

பதவி உயர்வு பெற்று 8 ஆண்டுகளாகிய பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

இளநிலை உதவியாளர் 32 பணிக் காலியிடங்களுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதால், வியாழக்கிழமை (அக்.1) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு தகுதியுடையோர் வந்து பரிந்துரை விவரத்தினை தெரிந்து கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நெட்' தேர்வு முடிவு வெளியீடு: டிசம்பர் மாத தேர்வு அறிவிப்பு; விண்ணப்பிக்க நவ.1 கடைசி

2015 ஜூன் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ளது. அத்துடன், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான அறிவிப்பையும் சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி

தேனியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிக் கருத்தரங்கு  புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கல்வி இயக்குனராக மீண்டும் கூடுதல் பொறுப்பு


சென்னை: கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழகத்திலுள்ள, 800 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2.25 லட்சம் பேர் படிக்கின்றனர்; 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவிக்கான நியமனத்தில், சில ஆண்டுகளாக தொடர்ந்து குளறுபடிகள் நடக்கின்றன.

மத்திய அரசுப்பணிக்கு இனி நேர்முகத்தேர்வு இல்லை

புதுடில்லி : மத்திய அரசு இளநிலைப் பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு கிடையாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரியவருகிறது. இதன்படி இனி திறனறிவு மற்றும் உடல் தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. நேர்முகத்தேர்வில் சிபாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி

சேலம்,: கடந்த மாதம், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக நடந்த கலந்தாய்வில், ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வை 
நிராகரித்ததால், 928 இடங்கள் நிரம்பவில்லை. இதை நிரப்ப, மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, புதிய முன்னுரிமை பட்டியலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ஆக., 24ம் தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது.

மருத்துவப் படிப்பில் சேர அவகாசம் முடிந்தது மீதமுள்ள 74 இடங்களை நிரப்புவதில் சிக்கல்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை காலம் முடிந்துள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைத்த, 77 இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் தேர்வுக்கு கடைசி தேதி: சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை: சென்னைப் பல்கலை தொலைநிலைக் கல்வியில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கு, டிசம்பர் மாதம் நடக்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொலை நிலைக் கல்வியில், டிசம்பரில் தேர்வு எழுத விரும்புவோர்,

சத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு

''அமைச்சருடன் நடந்த பேச்சு, திருப்தி அளிக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும் என, நம்புகிறோம்,'' என, சத்துணவு பணியாளர் சங்கத் தலைவர் பழனிச்சாமி கூறினார். சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று, பேச்சு நடந்தது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு: இணையதளப் பதிவில் புதிய முறைகள்; தேர்வாணையம் வெளியிட்டது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய முறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

எட்டாம் வகுப்பில் பேரிடர் மேலாண்மைப் பாடம் அறிமுகம்

தமிழகத்தில் எட்டாம் வகுப்பில் மூன்றாம் பருவத்துக்கான சமூக அறிவியல் பாடத்தில் பேரிடர் மேலாண்மைப் பாடம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு 'ஆன் - லைன்' பதிவு கட்டாயம்

'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்.5ம் தேதி முதல் துவக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது. இதன்படி வனம், பத்திரப்பதிவு, வணிகவரி, கருவூலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் 2 ஆயிரம் உதவியாளர், கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 29ல் நடந்தது. முடிவுகள் கடந்த ஆண்டு டிச. 12ல் வெளியிடப்பட்டன.

பிளஸ் 2 காலாண்டு தேர்ச்சி விபரம் சேகரிப்பு!

சேலம்: நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த விபரங்களை சேகரித்து, இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை டிஜிட்டல்மயமாக்க உதவும் மைக்ரோசாப்ட் மேகக்கணினி சேவை (Cloud Computing Service): முதல்வர்ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

சென்னையில் மைக்ரோசாப்ட் நிறு வனம் அமைத்துள்ள தரவு மையத் தில் இருந்து வழங்கப்படும் மேகக் கணினி சேவையை முதல்வர் ஜெய லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

BT TO PG ADDITIONAL PROMOTION PANEL AFTER 24.08.2015 RELEASED

Tuesday, September 29, 2015

பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் உயர்வு


பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நலப் பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

பொறியியல் கல்லூரிகளுக்கு "ரேங்கிங்' நடைமுறை அறிமுகம்

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.

மருத்துவக் கலந்தாய்வு விவகாரம்: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை முதலில் நிரப்ப உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் 2015-16 ஆண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 2015-16 கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று கட்டக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இன்னும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 55 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

"கேட்' தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாள்

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கும் அங்கீகாரம் விதிமுறை தளர்ந்தது! பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கும் அங்கீகாரம் விதிமுறை தளர்ந்தது!

அரசு நிர்ணயித்த அளவுக்கு, இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், போதிய வசதிகள் இல்லாமல், சிறிய இடத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என, தமிழக அரசு, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

விடுமுறையில் வகுப்பு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதி முதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என, இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தனியார் கல்லூரிகளுக்கு பல ஆண்டுகளாகவழங்கப்படாத சம்பளம் சாரா செலவினம் ;நீதிமன்றத்தை அணுக தனியார் கல்லூரிகள் முடிவு

மதுரை: தனியார் கல்லுாரிகளுக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள சம்பளம் சாரா செலவினங்களை வழங்க கோரி நீதிமன்றத்தை அணுகுவது என மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரி 
நிர்வாகிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மதுரையில் சங்க ஆண்டு பொதுக் கூட்டம், தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது. கல்லுாரிகள் வளர்ச்சிக்காக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

நெட்' தேர்வு முடிவுகள் வெளியீடு


சென்னை: கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறவும், தேசிய அளவிலான நெட் தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். 

வட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக்கடன் சுமை குறையும்

மும்பை: ரிசர்வ் வங்கி நேற்று, குறுகிய காலக்கடனுக்கான வங்கி வட்டி விகிதத்தில், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள் வாங்குவோருக்கான கடன் சுமை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

சீன பொருளாதாரம் மந்தமடைந்து வருவதால், உலக பொருளாதாரத்தில் தடுமாற்றம் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார தேக்கநிலை நிலவுகிறது. இதனால், இந்திய பொருளாதாரம் பாதிப்படைந்து, சிக்கலை சந்தித்து வருகிறது.இந்திய பொருளாதாரத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டுமென, தொழில் துறையினரும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தன. அதற்கு, அதிகமாக அழுத்தம் தரப்பட்டு வந்ததால், குறைந்தபட்சம், 0.25 சதவீதமாவது வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் நான்காவது நிதிக் கொள்கையை, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், மும்பை யில் நேற்று வெளியிட்டார். 

SSA&RMSA-U DISE 2015&2016 INSTRUCTION MANUAL-SCHOOL INFORMATION SCHEDULE...

TNPSC-DEPARTMENTAL TEST DECEMBER-2015...ONLINE APPLICATION LAST DATE - 30.09.2015

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ்டிக்கைக் குழு சார்பில் கோரப்பட்ட கோரிக்கைகள் அரசின் கொள்கைக்குட்பட்டது என கோரிக்கை நிராகரித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்

Monday, September 28, 2015

சொன்னது போல 'ஸ்டிரைக்' நடத்த ஆசியரியர்கள் முடிவு!

'தமிழகத்தில், வரும், 8ம் தேதி, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும்' என, ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' அறிவித்து உள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் சேர்ந்து, 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

டெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு மாணவர்களிடம் காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு தெரியப்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடிதம்

மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கடுமையான காய்ச்சல் இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவே உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிக் கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.

பி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில்  உள்ள 1,777 இடங்களுக்கு 8,005 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இவர்களுக்கான கலந்தாய்வை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், லேடி வெலிங்டன் கல்லூரியில் பேசியதாவது: பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 2011ம் ஆண்டு 18 சதவீதமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கை வீதம் தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தொடங்கியது பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 78 பேருக்கு சேர்க்கைக் கடிதம்

ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 78 பேர் சேர்க்கை கடிதங்களைப் பெற்றனர்.

வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாலுகா அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.

அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சிஇஓ பணியிடங்களை நீட்டிக்கக் கோரிக்கை

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவிகளை நீட்டிக்க வேண்டும் என தமிழக மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கம் கோரியுள்ளது.
 இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கட்டாய தலைக்கவச உத்தரவு: மறுபரிசீலனை செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கட்டாய தலைக்கவச உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரும் சீராய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 கட்டாய தலைக்கவச உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

மத்திய அரசு வழங்கியதுபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
 இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 3,000 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
 சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி நிரந்தரம், பதவி உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் - dinamani

தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைத்து ஆசிரியர்களும் அக்டோபர் 8-இல் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு

சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, 2016 மார்ச்சில், தனித்தேர்வராக எழுத உள்ளவர்கள், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், தங்களின் விவரங்களை, அக்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும்.

வேளாண் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இடமாறுதல்இவர்களில், வேளாண் ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாகவும், கணினி ஆசிரியர்கள், எட்டு ஆண்டுகளாகவும், எந்தவித இடமாறுதலும் இல்லாமல், ஒரே இடத்திலே பணிபுரிகின்றனர். 

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க 20 நடமாடும் குழுக்கள் அமைப்பு

ஈரோடு மாவட்டத்தில்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக 20 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசுப்பங்களிப்பு ரூ.6000 கோடி இது வரை வழங்கவில்லை : அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு.


Tamil Font in android mobile.

1. Instal ex file explorer.
2. After installing es explorer go to setting in es explorer and find display option then tick show hidden files option.
3.close the ex explorer.
4. Make sure that you already saved the vanavil font in SD card or download its only takes 100 KB.

திட்டமிட்டபடி அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுததம் நடைபெறும்; இன்றைய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு

இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக கட்டடத்தில் சுழற்சிமுறை தலைமையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர்(பொறுப்பு) திரு. செல்வராஜ் மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி சங்கங்களின் சார்பில் திரு.இளம்பருதி ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். 

நிதித்துறை - திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - "SUPERANNUATION "இல் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து திருத்தம் மற்றும் தெளிவுரை - செயல்முறைகள் ( நாள் : 21/09/2015)

உடற்கல்வி-இந்தியப்பள்ளிகளுக்கான விளையாட்டு குழும்ம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு இடமாற்றம் தெறிவித்தல் சார்ந்து முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகள்!!!


சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால், செல்லிடப்பேசி எண் மூலம் புகார் அளிக்குமாறு, முகவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்.கட்டாய வசூல்: பெரும்பாலான இடங்களில் விநியோக ஊழியர்கள், ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.25 முதல் ரூ.35 வரை ரசீது தொகையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கின்றனர்.

கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்

மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

தமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்கப் பயன்படும் ஆய்வு: முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்ற சென்னை மாணவி மிழைக் கணினியில் மொழி பெயர்க்கும் மென்பொருளை உரு வாக்கப் பயன்படும் ஆய்வுக் கட்டுரைக்கு முதன்முறையாக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் சென்னை மாணவி.

மொழிபெயர்ப்புக்கு 100 ஆண்டு வரலாறு உண்டு. இந்தியாவில் இந்தி உட்பட பல மொழிகளின் மொழிபெயர்ப்புக்குக் கணினியை ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுத்திவிட்டனர் என்றே சொல்லலாம்.
அதாவது பிற மொழியில் நடைமுறையில் எழுதப் படும் ஒரு வாக்கியத்தைக் கணினியில் பதிவு செய்தால், அது அப்ப டியே ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்படுகிறது. ஆனால், தமிழ் மொழி யில், நாம் எழுதுகிற தமிழை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் நிலை இப்போது இல்லை.

Sunday, September 27, 2015

மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவு

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்களையும் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அமைப்பு அண்மையில் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சி.பி.எஸ்.இ. அமைப்பின் இணைப்பைப் பெற்றுள்ள அனைத்துப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கையின்போது தாய்மொழி குறித்த விவரங்களையும், மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் கற்பிக்க விரும்பும் மொழிகளையும் சேர்க்கைப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

அரசுத்துறை காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

வருவாய், வணிக வரி, ஊரக வளர்ச்சித்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் 12-ஆவது மாவட்டப் பேரவைக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.இன்னாசிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஆசிரியர்களின்றி சுயமாக கல்வி கற்கும் இணையதளம் நவம்பரில் செயல்படத் தொடங்கும்: யுஜிசி துணைத்தலைவர் தேவராஜ் தகவல்

ஆசிரியர்களின்றி சுயமாக கல்வி கற்கும் வகையிலான புதிய இணையதள சேவை நவம்பரிலிருந்து செயல்படத் தொடங்கும் என யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.

பள்ளிகளில் தரமான இலவச கல்வி

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் ஒரே தரத்துடன் இலவச கல்வியை அளிக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகருமான ஆர்.சரத்குமார் வலியுறுத்தினார்.

'தாய்மொழி கல்வி குறித்த தீர்ப்பு மாநில மொழிகளுக்கு பின்னடைவு'

பெங்களூரு:''தாய்மொழியில் கல்வி அளிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, கன்னடம் உட்பட அனைத்து மாநில மொழிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு மொழிகளை காப்பாற்ற, அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த வேண்டும்,'' என, கன்னட எழுத்தாளர் ஜாவரே கவுடாதெரிவித்தார்.

காவல் நிலையத்தில் பள்ளிக்கூடம்!

புதுடில்லி:மக்கள், பாதுகாப்பிற்காக நாடும் காவல் நிலையம், ஆதரவற்ற சிறுவர்கள் பலருக்கு, பாடம் போதிக்கும் பள்ளிக்கூடமாகவும் திகழ்கிறது. டில்லி ரயில் நிலையத்தில் தான், இந்த அதிசய காவல் நிலையம் உள்ளது.

வட்டி விகிதம் குறையுமா? ரிசர்வ் வங்கி நாளை அறிவிப்பு

புதுடில்லி;மத்திய அரசும், தொழில் துறையினரும் கொடுத்து வரும் அழுத்தத்துக்கு பணிந்து, ரிசர்வ் வங்கி, நாளை, வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பொருளாதாரம் மந்தமாகி வருவதால், உலகம் முழுவதும், பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

'நேதாஜி அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்

கோல்கட்டா:''ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் உள்ள, விமான விபத்தில் இறந்ததாக கூறப்படும் நேதாஜியின் அஸ்தியை,டி.என்.ஏ., சோதனை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்,'' என, நேதாஜியின் மகள் அனிதா போஸ், 72, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு தனித்தேர்வு இன்று துவக்கம்

சென்னை;பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு இன்று துவங்குகிறது. பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பள்ளி களில் படிக்காமல் தனியாகப் படித்து தேர்வு எழுதுவோருக்கு, செப்., - அக்., மாதங்களில், அரசு தேர்வுத் துறையானது,

பி.எட்., மாணவர் சேர்க்கைகவுன்சிலிங் இன்று துவக்கம்

சென்னை;தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிக் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கையை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.

வழக்காடும் மொழியாக தமிழ்;முதல்வருக்கு நீதிபதி கடிதம்

சிவகங்கை;டி.என்.பி.எஸ்.சி., மூலம் பணியில் சேர்ந்த வி.ஏ.ஓ.,க்களை பணிவரன்முறை செய்யாமல் அரசு இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்த 2008ல் இருந்து இதுவரை 6ஆயிரம் வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாக தேர்வாகியுள்ளனர்.

பணிவரன்முறை செய்யாததால் வி.ஏ.ஓ.,க்கள் தவிப்பு;அரசு மீது குற்றச்சாட்டு

சிவகங்கை;டி.என்.பி.எஸ்.சி., மூலம் பணியில் சேர்ந்த வி.ஏ.ஓ.,க்களை பணிவரன்முறை செய்யாமல் அரசு இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்த 2008ல் இருந்து இதுவரை 6ஆயிரம் வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாக தேர்வாகியுள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அடிப்படை விதிகள்....

Saturday, September 26, 2015

G.O Ms - 242 - உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் தரஊதியம் ரூ4900/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ள அரசாணை, நாள் 23. 09. 2015.

RTI Letter - SABL பாட ஆசிரியர்கள் WORK DONE REGISTER (ஆசிரியர் வேலை பதிவேடு) எழுதவேண்டியதில்லை!மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு

மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு
பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

துவக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு 214 பேர் தேர்வு


புதுச்சேரி கல்வித் துறையில், துவக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்குவிண்ணப்பித்தவர்களுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில்,௨௧௪ பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி, காரைக்காலில் அரசு துவக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 425 பணியிடங்களை நிரப்ப, கடந்த மே27ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி: இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; 'படிப்பு அவசியம் இல்லை' என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பள்ளியில் சேர்க்க பணம் இல்லாமை, வீட்டு வேலைகள் போன்ற பல்வேறு காரணங்களால், சிறுவயதில் பள்ளியில் சேர முடியாமல் போவது சகஜம். மாறாக, படிப்பு அவசியம் இல்லை என நினைப்பதால், பெரும்பாலானோர் பள்ளியில் சேர்ந்து படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாக, என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய மாதிரி கணக்கீட்டு அலுவலக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

வாக்காளர் பெயர் நீக்கம் செய்ய புதிய முறை அறிமுகம்ஓட்டுச்சாவடி அலுவலர் சான்று வழங்கினால் மட்டுமே அமல்

வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பரிவர்த்தனையில், உரிய அலுவலர் சான்று வழங்கும் முறை அறிமுகமாகி உள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பத்துடன் முகவரி, வயது போன்றவைகளுக்கான ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை போன்றவைகளின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். 

பள்ளிகளில் 'டெங்கு'வை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோவை: பள்ளிகளில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 
தமிழக அரசு சார்பில் செப்.,14ல் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில், திருப்பூர், திருச்சி, சேலம், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டது. 

பார்வை இழந்தாலும் பாதை மாறாத பயணம்... மாற்றுத்திறன் ஆசிரியர் - முத்துசாமி


ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8,9,10 வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துசாமி, 33. சத்திரக்குடி அருகே செவ்வூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் யாரும் பள்ளிப்படிப்பை முழுமையாக தாண்டாத நிலையில், பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று இன்று எம்.ஏ., பி.எட்., எம்.பில்., தேர்ச்சிபெற்று முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரிய ராக மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகிறார். 

பள்ளிக்கல்வி-கணினி பயிற்றுநர்களுக்கான பொது மாறுதலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்...

Computer Instructor Transfer Norms GO 348, Date: 25.9.2015


Friday, September 25, 2015

கல்வித்துறை பணிகளுக்கு தனி கட்டடங்கள் தேவை: ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

கல்வித் துறை பணிகளுக்கு தனி கட்டடங்கள் தேவை என்று மதுரையில் உள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியூர்களில் இருந்து மதுரைக்கு முக்கிய கூட்டங்களுக்கு வரும் ஆசிரியர்கள் தங்குவதற்கு ஏதுவாக மதுரையில் நடப்பாண்டில் ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர்

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக்குகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

எம்.எல். தேர்வு: மறுமதிப்பீடு தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக எம்.எல். (தனிப் படிப்பு) மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (செப்.26) வெளியிடப்பட உள்ளன.
 இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது அளிக்கப்பட்டிருந்த புகார் மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் விசாரணை நடத்தினர். தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு மீது ஆசிரியர் கலந்தாய்வு, வழிகாட்டி விற்பனை உள்ளிட்டவை குறித்த புகார் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுவின் மீதான நடவடிக்கை ஆகியவை குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

செப்.28 முதல் அக்.6 வரை பத்தாம் வகுப்பு தனித் தேர்வு

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் - அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

2015-16-ஆம் ஆண்டில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகள் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் 5 உறுப்பு கல்வியியல் கல்லூரிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் - தமிழக முதல்வர் ஜெயலலிதா

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில்,

1. கடந்த நான்கு ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் 14 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த நான்காண்டுகளில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

8642 BT, PG PAY CONTINUANCE ORDER

பள்ளிக்கல்வி - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை "இளைஞர் எழுச்சி நாள்"- ஆக கொண்டாட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில்  கூறியதாவது:–

மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும், தரமான கல்வியை வழங்கும் நோக்கிலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டும், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பல வகைத்தொழில் நுட்பக் கல்லூரிகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு எவ்வாறு வழங்கப்பட வேண்டும்? -RTI பதில்


இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு !!!

சமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டம் மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,யை பின்பற்றும் பள்ளிகளைத் தவிர, மற்ற பள்ளிகள், தமிழக அரசின் சமச்சீர் கல்வியை பின்பற்றுகின்றன.

SSLC QUARTERLY KEY ANSWER 2015-16 (Social Science)

EMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...

தளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் சிறிது காலம் செயல்படாமல் இருந்த EMIS இணையதளம் தற்போது செயல்பட்டு வருகிறது,எனவே தலைமையாசிரியர்கள் I-Vlll வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விபரங்களை Student என்பதை Click செய்து உங்களது மாவட்டம்.,ஒன்றியம்.,பள்ளி,வகுப்பு என்பதை தேர்வு செய்வதன் மூலமாக அறியலாம்.I வகுப்பு மாணவர்களின் விபரங்களயும் ஏற்றலாம்.

Thursday, September 24, 2015

6%அகவிலைப்படி உயர்வு ஆணை வெளியிட்டது மத்திய அரசு


Fake news spreading about DA Merger and Retiring age

பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
 வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை www.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 

சும்மா சம்பளம் வாங்கும் ஆசிரியர் கணக்கெடுக்க அரசு உத்தரவு


அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 
தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, அரசு செலவில் வழங்கப்படும் ஊதியம் வீணாகிறது என, புகார்கள் எழுந்துள்ளன.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்

சென்னை :ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:சத்துணவு மற்றும் அங்கான்வாடி பணியாளர்கள் ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் மாயமலை, 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசுக்கு 

'ஸ்கூல் ஹெல்த்' பரிசோதனைமாணவர்களுக்கு சிகிச்சை குழு: மருத்துவமனைகளில் தொய்வு

சிவகங்கை,: தமிழகத்தில் 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் குழு அமைப்பதில் அரசு மருத்துவமனைகளில் தொய்வு உள்ளது.சுகாதார நலப்பணித்துறை மூலம் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் பகுதி வாரியாக 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தின. இதன்படி,

அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் தாமதப்படுத்தும் கல்வித்துறை

திண்டுக்கல்:அரசு தொழில்நுட்பத் தேர்வை நடத்தாமல், கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது.கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஓவியத்தில் 10 தேர்வுகள், தையலில் 4, நடனம், இசையில் தலா 3 தேர்வுகள் நடத்தப்படும்.

'இவர் பழைய வாக்காளர்'காட்டிக்கொடுக்கும் 'சாப்ட்வேர்'

தேனி"ஒரு வாக்காளர் இரண்டு இடங்களில் இருந்தால் வாக்காளரின் போட்டோவை அடையாளம் காட்டும் புதிய 'சாப்ட்வேரை' தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகள் நடக்கிறது.

சமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனியார் பள்ளிகள்

சமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில்,

கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் கலை விழாவில், தமிழக பாரம்பரிய கலைகளான, கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.கலை விழாமத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், தேசிய கலை விழா, 'கலா உத்சவ்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

Wednesday, September 23, 2015

12 Std quarterly key answer 2015-2016

10 QUARTERLY SCIENCE KEY ANSWERS 2015 -16 AVL

7979 SSA BT Post Continuance Orders

4393+1764 Lab Assistant, Junior Assistant Post Continuance Orders

2408+888 RMSA Post Continuance Orders

5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு& 39 புதிய தொடக்கப் பள்ளிகள் : ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, செப். 23–முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:–கடந்த நான்காண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்!!!


*புதியதாக 39 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 5 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி உத்தரவு. இப்பள்ளிகளுக்கு புதியதாக 78 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு

ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. 
 தேர்வாணையத்தின் அறிக்கை (2009 முதல் 2014 வரை), சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டடங்கள் கட்ட ரூ.1,263 கோடி: முதல்வர் அறிவிப்பு

உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அரசு ஊழியர்களுககு திமுக பாதுகாப்பு அரணாக திகழும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு அரணாக திமுக திகழும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு வழிக் கல்வி தொடர வேண்டும்: ஆந்திர அரசு

தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு வழிக் கல்வியும், தெலுங்கை இரண்டாவது மொழியாக தேர்வு செய்யும் வாய்ப்பும் தொடர வேண்டும் என்று தமிழக அரசிடம் ஆந்திர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
 இதுதொடர்பாக ஆந்திர மாநில தகவல், கலாசார மற்றும் தெலுங்கு மொழி வளர்ச்சித் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டியின் அலுவலகம், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 இந்த தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஏ.டி.எம். அட்டை, கல்விக் கடன் குறித்து அதிகப் புகார்கள்: வாடிக்கையாளர்களின் பிரச்னைகளுக்கு வங்கிகள் சுமுகத் தீர்வு காண வலியுறுத்தல்

வங்கிச் சேவை குறித்து வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு சுமூகத் தீர்வு காண தொடர்புடைய வங்கிகள் முயற்சிக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் குறைதீர் ஆணையத்தின் பொது மேலாளர் செல்வராஜ் ராஜா வலியுறுத்தினார். 

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்: அமைச்சர் பழனியப்பன்

சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக, தெரிவித்தார்.

"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு' - அமைச்சர் கே.சி.வீரமணி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
 அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளையே அனைவரும் நாடிச் செல்வதாகவும் கூறி, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

வாட்ஸ்-அப்களுக்குக் கொண்டு வரப்பட இருந்த புதிய வரைவுக் கொள்கை ரத்து: பின்னணி என்ன?

பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக வாட்ஸ்-அப்களுக்கு மத்திய அரசு கொண்டு வர இருந்த புதிய கெடுபிடிகளுக்கான வரைவு தேசிய கொள்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

புதிய மாவட்டக் கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு

மதுரை, உசிலம்பட்டி மற்றும் மேலூர் கல்வி மாவட்டங்களின் புதிய மாவட்டக் கல்வி அலுவலர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றனர்.
 நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பெ.சாத்தாவு மதுரை மாவட்டக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கையேட்டை இலவசமாக வழங்க கோரிக்கை

அரசு பொதுத் தேர்வு எழுதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கையேட்டை இலவசமாக வழங்கவேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்: செப். 30, அக் 7-ல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள செப். 30 மற்றும் அக். 7 ஆகிய இரு தினங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற உள்ளன என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்!

புதுடில்லி:மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, ஏழாவது சம்பள கமிஷன், விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்ய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியர்கள், பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை நாளிலும் கட்டாய பணிபள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி

அரசு விடுமுறை நாட்களிலும், அலுவலகம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதால், ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வி அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழக பள்ளி கல்வித் துறையில், 20க்கும் மேற்பட்ட இயக்குனரக மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் கல்வி திட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றிலும், பள்ளிகளிலும், 15 ஆயிரம் நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

கோவை : தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, இயற்கை கிருமிநாசினி தயாரித்து, அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.ஆமதாபாத், 'டிசைன் பார் சேஞ்ச்' அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான, 'புராஜக்ட் எக்ஸ்போ' போட்டி நடத்தப்படும். இந்தாண்டு தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில், கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக, பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள், நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோர், இயற்கை கிருமிநாசினியை கண்டுபிடித்துள்ளனர்.

வேலைக்கு செல்லும் பெண்கள் தான் வேலையில்லா பிரச்னைக்கு காரணமாம்

ராய்ப்பூர்: 'வேலையில்லா திண்டாட்டத்துக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தான் காரணம்' என, சத்தீஸ்கர் மாநில, பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தரம் உயர்ந்தும் வளர்ச்சி பெறாத பள்ளிகள் கல்வித்துறை கவனிக்குமா?

தரம் உயர்ந்தும் வளர்ச்சி பெறாத பள்ளிகள் கல்வித்துறை கவனிக்குமா?
              உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், அதற்கான கூடுதல்வகுப்பறை, சுற்றுச்சுவர் போன்ற வசதிகள் செய்து தருவதில், தாமதம் நிலவுவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப தரம் உயர்த்தப்படுகிறது. 

தகுதி தேர்வில் தேர்ச்சி இல்லை: வக்கீல் தொழில் செய்ய 2495 பேருக்கு தடை - பார் கவுன்சில் உத்தரவு

தகுதி தேர்வில் தேர்ச்சி இல்லை: வக்கீல் தொழில் செய்ய 2495 பேருக்கு தடை - பார் கவுன்சில் உத்தரவு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2010-ம் ஆண்டுக்கு பிறகு சட்டம் படித்து வக்கீலாக பதிவு செய்துள்ளவர்கள், வக்கீலாக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 2 ஆண்டுக்குள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

DTEd முடித்து, பட்டப் படிப்பு படிப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர் மட்டுமே IGNOU BEd

DTEd முடித்து, பட்டப் படிப்பு படிப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர் மட்டுமே IGNOU BEd
மதுரை மண்டலத்தில், 'இக்னோ' நடத்திய பி.எட்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.15 மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நுழைவுத் தேர்வு, மதுரை உட்பட ஒன்பது மாவட்ட மையங்களில் நேற்று நடந்தன. 

1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் : ‘கணித உபகரண பயிற்சி பெட்டி’ அரசு உதவி பள்ளிகளுக்கு நிராகரிப்பு

1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் : ‘கணித உபகரண பயிற்சி பெட்டி’ அரசு உதவி பள்ளிகளுக்கு நிராகரிப்பு
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும், “கணித உபகரண பயிற்சி பெட்டி” அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு, உதவி பெறும் பள்ளிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பயிற்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகளும், 15 ஆயிரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. அதேபோல, 7,307 அரசு நடுநிலை பள்ளிகளும், 2,400 அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

Tuesday, September 22, 2015

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு தொழிற் பயிற்சி

‛‛நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படும்’’ என தொழிற் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டலஇயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பு எதிரொலி: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது

நவீனகால தந்தி சேவையாக மாறிப்போன வாட்ஸ்அப் தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரைவு திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து உடனடியாக கைவிடப்பட்டது.

போதிய ஆசிரியர்களை நியமிக்ககோரி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

தஞ்சை மேம்பாலம் அருகே பார்வையற்றோர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 150 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.

TET:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

புதுச்சேரி கல்வித் துறை பணியிட நியமனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 
        இதுதொடர்பாக கல்வித் துறை இயக்குநர் ல.குமாரிடம், புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் வை.பாலா அளித்த மனு:

             கடந்த ஜூலை 2012-ல் தமிழக அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் (பஉப) புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த சுமார் 8,500 பேர் பங்கேற்றனர். இதில் 20 பேர் மட்டுமே 90 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்று தேர்வாகி இருந்தனர்.கடினமான இதில் தேர்ச்சி பெற்ற இவர்களில் பலர் இன்று வரை அரசுப் பணி கிடைக்காமல் வேதனையில் உள்ளனர்.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-அதிகாரபூர்வ வெளியீடு

ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-ல் விண்டோஸ், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அலுவலக பணியாளர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்ய அனுமதிக்கிறது ஆபிஸ்-2016.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றமா? 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தி!

பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உட்பட, பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டதாக, 'வாட்ஸ் ஆப்'பில் நேற்று பரவிய வதந்தியால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவலை உறுதிபடுத்தாமல், சில, 'டிவி' சேனல்கள் மற்றும் இணையதளங்களும் இச்செய்தியை ஒளிபரப்பின. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ, அரசுத் துறைக்கோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றம் செய்யும் பொதுத்துறைக்கோ, இதுகுறித்த எந்த தகவலும் தெரியவில்லை.
பட்டியல் அதனால், தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தொடர்ந்து குழப்பத்தில் இருந்தனர். காலை, 11:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணி வரை, போனில் விசாரித்த வண்ணம் இருந்தனர்.

26, 27ல் எம்.பி.பி.எஸ்., 3ம் கட்ட கலந்தாய்வு

சென்னை:மருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, வரும், 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடந்தது; ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, சில தினங்களுக்கு முன்

யு.ஜி.சி., அங்கீகாரத்துடன் 88 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரத்துடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது; மொத்தம், 88 படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.

பள்ளிக்கல்வி செயலர் மாற்றம் இல்லை - தொடர்கிறார் - மாற்றம் என்பது தவறான தகவல்.


Its a false news...


"WhatsApp"  மற்றும் FACEBOOK - இல் தற்போது பள்ளிக்கல்விச் செயலாளர் மாற்றம் என்று பரவும்  தகவல் தவறானது. இது 12/2013 அன்று வந்த செய்தி. அன்று  வந்த இந்த செய்தியும் தவறானது    

22 IAS officials reshuffled in TN | igovernment.in***See this ��link.. Its a old news December 2013***

SSLC QUARTERLY KEY ANSWERS 2015

Monday, September 21, 2015

12 std quarterly key 2015-16

பாமக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2016 வரைவுத் தேர்தல் அறிக்கை

ஆசிரியர் & அரசு ஊழியர் நலன்;
*புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.
*7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
*இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 15% சேர்த்து வழங்கப்படும்.
*அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்.
*மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
*அனைத்து நிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் காணப்படும் முரண்பாடுகள் களையப்படும்.
*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
*பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், அரசுத் துறைகளில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
*அரசு ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து சரி செய்வதற்காக அரசுத்துறை செயலாளர் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும்.
முக்கிய அம்சங்கள்;
கல்வி;
*கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆக அதிகரிக்கப்படும். அதாவது கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும்.
*மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும்.
*மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு
பள்ளித் தர இயக்குனர் நியமிக்கப்படுவார்.
*மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஆந்திரம் மாநிலப் பாடத்திட்டங்களில் உள்ள சிறந்த அம்சங்களை கண்டறிந்து அவற்றை உள்ளடக்கிய புதியக் கல்வித் திட்டம் உருவாக்கப்படும். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்படும். புதியக் கல்வித் திட்டம் 2017 ஆம் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

செப்.26 முதல் அக்.4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது.
 பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இப்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!