Thursday, December 31, 2015

SLAS FLASH NEWS: PRIMARY/ UPPER PRIMARY SLAS BLOCK/ DISTRICT WISE SHOOL LIST AND INVIGILATORS NAME LIST FOR TAMIL NADU STATE

SLAS TEST 2015 - 16 INSTRUCTION IN TAMIL AND ENGLISH

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


                                                                  அன்பான தோழமைகள் அனைவருக்கும்
                                         உளம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

மூலிகை வளம் - குப்பைமேனி!

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்!

இன்று முதல் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள்!

புதுடில்லி: இன்று, 2016, ஜனவரி 1 - ஆங்கில புத்தாண்டு. இந்த புத்தாண்டில் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள், இதோ:
சலுகைகள்
இன்று முதல், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொது துறைகளில் மத்திய அரசு பணியில், 'குரூப் - சி' மற்றும் 'குரூப் - டி' பிரிவு ஊழியர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு கிடையாது 
ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான படுக்கை வசதி நான்காக அதிகரிக்கப்படுகிறது. இதனால், தம்பதியாக பயணம் செய்வோர், ஒரே பெட்டியில் பயணம் செய்ய முடியும் 

குடும்ப அட்டைக்கு (RATION CARD) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள்

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS – 2015


College Road, Chennai-600006


DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS  –  2015
Notification No. 01 /2015
Date:    30.12.2015
NOTIFICATION  
          This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – I Examination conducted in 2012 and 2013  found in that Merit List.

The Director of Social Defence Department vide Letter No.1169/A2/2014, dated 11.12.2015 has informed that the Juvenile Justice Committee of Hon’ble High Court of Madras constituted as per the orders of Hon’ble Supreme Court of India in its report in W.P.No.6915 of 2015 has   stated that appointment of Secondary Grade Teachers already made and to be made in future shall be subject to the outcome of Special Leave Petition.  
          Based on the observation of the Juvenile Justice Committee of the Hon’ble High Court of Madras and as per G.O.Ms.No.52, Social Welfare and Nutritious Meal Program (SW8(2)) Department dated 15.07.2015 and also by the Director of Social Defence D.O.Letter No.1169/A2/2014 dated 21.12.2015,  10 vacancies to be filled for the care and protection of Juveniles who are in conflict with law.
           Details of Vacancies:         
          Social Defence Department            Total Vacancies  : 10
Communal turn wise vacancy
Grand Total
GT
BC
BCM
MBC
SC
SCA
ST
General
2
2
-
1
1
-
-
6
Woman
1
1
-
1
-
1
-
4
Total
3
3
-
2
1
1
-
10
 These vacancies will be filled from the eligible qualified candidates in TNTET – Paper – I for the Residential Schools under Social Defence Department.  
          All the selections made as per this Notification will be subject to the outcome of Special Leave Petition (Civil) No.29245 / 2014 filed before the Hon’ble Supreme Court of India.

Dated: 30-12-2015

Member Secretary

Wednesday, December 30, 2015

ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31 வரை நீட்டிக்க வாய்ப்பு

ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31-ம் தேதி நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு, அரசு நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடையும் நோக்கில் ஆதார் எனப்படும் தேசிய அடையாள அட்டைகளை வழங்க மத்திய அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவு எண்களை வழங்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மின் ஊழியருக்குதேர்தல் பணி


மின் வாரியத்தில், உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட, 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். 2016 சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகளை, தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. 

RTI - 220 நாட்கள் கட்டாயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் ..


2016 - ஜனவரி டைரி

2016-ஜனவரி டைரி:

02-பள்ளி திறக்கும் நாள்
02-குறைதீர்க்கும் நாள்
5, 6, 7, 8 slas தேர்வு
14-போகி R/L
15-பொங்கல்-விடுமுறை
16-விடுமுறை
17-விடுமுறை

தொலைதொடர்பு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் டிராய் நிறுவனம் 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) குறித்த கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

தொலைதொடர்பு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் டிராய் நிறுவனம் 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) குறித்த கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

மருத்துவ விடுப்பு குறைந்தது 2 நாட்கள் துய்க்கலாம் - RTI தகவல்

BT TAMIL APPOINTED ON 2010-11 & BT ENGLISH APPOINTED ON 2009-10 - REGULARAISATION ORDERS RELEASED

தொடக்கக்கல்வி- செயல்முறைகள் ந.க.எண்:024145 நாள்:29/12/15- இளம் மழலையர் பள்ளிகளுக்கான விதித்தொகுப்பு(Code for regulations for play school 2015) -அரசிதழில் வெளியிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது-சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்து

Tuesday, December 29, 2015

தொடக்கக்கல்வி - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28. 12. 2015


பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மழை-வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களிலுள்ள பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

10ம் வகுப்பு தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத விரும்புவோர் டிசம்பரம் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை


கெஜட்டட் அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு 2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை யூ.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு

பெங்களூரு:'கல்வி நிறுவனங்கள், 'ஆன் லைன்' எனப்படும், இணையம் வாயிலாகவே மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, யூ.ஜி.சி.,எனப்படும், பல்கலைக்கழக மானிய கமிஷன் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் வேத் பிரகாஷ், பெங்களூருவில் கூறியதாவது:கல்வி நிறுவனங்கள் சிறப்பாகவும், ஒளிவுமறைவின்றியும் செயல்பட, ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்து,

மகப்பேறு விடுமுறை 26 வாரம்?

புதுடில்லி:அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது. 

FLASH NEWS - 30-12-2015 -தொடக்கல்வித்துறையில் பதவி உயர்வு - இயக்குநர் அனுமதி.

30-12-2015 -தொடக்கல்வித்துறையில் பதவி உயர்வு -  இயக்குநர் அனுமதி. இன்று (29.12.2015)  தொடக்கக் கல்வி இயக்குநர் மதிப்புமிகு முனைவர் ரெ. இளங்கோவன் அவர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரிர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்,  

HIGHSCHOOL H.M PANEL PREPARATION AS ON 01-01-2016 -ORDERS RELEASED

ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

CLICK HERE- TO DOWNLOAD G.O NO113 DT-18.09.2015-EF DEPARTMENT

தமிழ் நாட்டில் 01.04.2003 க்கு முன் நியமனம்செய்யப்பட்டு 01.04.2003 க்குப் பின் நிரந்தரம் செய்துபணிவரன்முறை செய்யப்பட்டஅரசு ஊழியர்களில்   ஓய்வுபெற்ற மற்றும் 
மரணம்அடைந்தவர்களுக்கு 
உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழையஓய்வூதிய திட்டப்படிஓய்வூதியம் , பணிக்கொடை.,கம்முடேஷன் மற்றும் குடும்பஓய்வூதியம் வழங்கஅரசாணை வெளியீடு.  
நன்றி-திரு.எங்கெல்ஸ்.

பள்ளிக்கல்வி - தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்தல் - அரசாணைப்படி உள்ளாட்சி அமைப்புகளுடன் இனைந்து துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY

தேசிய திறனாய்வுத் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான முக்கிய விடைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

Monday, December 28, 2015

தேர்தல் பணியின்போது பாதுகாப்பு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

சிவகங்கை:சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு,வசதிகளை செய்து தர வேண்டும் என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில 
பொருளாளர் ஏ.ஜோசப் சேவியர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில் தேர்தல் பணிக்காக ஆசிரியர், அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.

பொது தேர்வு தேதி வெளியாவதில் இழுபறி

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் ஏற்பட்ட, மழை வெள்ள பாதிப்பால், பொதுத் தேர்வை தள்ளிப் போடலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், கல்வி ஆண்டின் இறுதியில், சட்டசபை தேர்தல் வர உள்ளதால், தேர்வுகளை விரைவில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறையும், தேர்வுத்துறையும் இணைந்து, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை தயாரித்தன. ஆனால், அந்த கோப்பு, அரசு அனுமதிக்காக பல நாட்களாக கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், தேதி அறிவிப்பு தாமதம் ஆகியுள்ளது.

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக இன்று 'ஜெயித்து காட்டுவோம்' நிகழ்ச்சி

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில், பிளஸ் 2 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்காக, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'ஜெயித்துக் 
காட்டுவோம்' நிகழ்ச்சி, இன்று நடைபெற உள்ளது.சென்னை பல்கலைக் கழகத்தில், காலை, 8:30 மணிக்கு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில், கணித ஆசிரியர் பவானி; அறிவியல் ஒன்று - ஆசிரியர் ரேகா யஷ்வந்த்; அறிவியல் இரண்டு - ஆசிரியர் சாந்தி பிரபுராம்; ஆங்கில ஆசிரியர் முனிராமையா; சமூக அறிவியல் ஒன்று - ஆசிரியர் ரஜினிபால்; சமூக அறிவியல் இரண்டு - ஆசிரியர் சந்திரகலா; தமிழாசிரியை சுப்புலட்சுமி ஆகியோர், பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுப்பது எப்படி என விளக்க உள்ளனர்.கல்வியாளர் ரமேஷ் பிரபா, 'தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது எப்படி?' என, விளக்க உள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி, நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.

பேராசிரியர் நியமனம் யு.ஜி.சி., அறிவுரை

'பல்கலை விதிகளை மீறாமல், தகுதியான பேராசிரியர்களை நியமித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்' என, பல்கலை மானிய குழு - யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா பல்கலையில், அவர் அளித்த பேட்டி:பல்கலைகளில், யு.ஜி.சி., விதிகளின் படி, தகுதியான பேராசிரியர்களை நியமிக்க, பலமுறை அறிவுறுத்தி உள்ளோம்.

'நெட்' தேர்வில் கெடுபிடி

நாடு முழுவதும், நேற்று முன்தினம் நடந்த பேராசிரியர்களுக்கான, 'நெட்' தகுதித் தேர்வில், தேர்வு அடிப்படை பொருளான பேனா, பென்சில் உட்பட எந்த பொருளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.பேராசிரியர் பணிக்கான, இந்த ஆண்டின், இரண்டாவது, நெட் தேர்வு, நாடு முழுவதும், 89 இடங்களில் நடந்தது. அதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்; தமிழகத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர்வர்கள் காப்பி அடிப்பதை தடுக்க, புதிய நிபந்தனைகள், இந்த தேர்வில் அமலானது. தேர்வர்கள் யாரும் பேனா உட்பட எந்த பொருளும் கொண்டு வரக்கூடாது என உத்தரவிடப்பட்டு, தேர்வறையில் பேனா வழங்கப்பட்டது; வாட்ச், ஹேர் பின் உட்பட எந்த பொருளும் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.

IT 2015-16 – Deductions and Exemptions for Salaried Employees

IT 2015-16 – Deductions and Exemptions for Salaried Employees
Salaried Employees are a relieved lot now after fulfiling all the formalities for Income Tax 2014-15. But, by that time six months in the new financial year 2015-16 is already over.
So, preparation of statement for salary income, deductions and saving under various clauses of Income Tax Act in respect of Financial year 2015-16 is already due for submission to the employer.
Tax Planning and submisstion of statement to that effect to the employer would be mainly useful to avoid additional deduction of Income Tax by the employer over and above income tax estimated by an individual on the basis of his / her savings or deductions.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இறுதிகெடு ...

Sunday, December 27, 2015

UGC-GAZETTE NOTIFICATION FOR DISTANCE EDUCATION APPROVAL...


திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக அய்யலூரை சேர்ந்த ஓர் ஆசிரியைக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு-நகல்

2015-16 ஆம் கல்வி ஆண்டில் நடைப்பெற்ற ,CRC நாட்களின் ஈடு செய்விடுப்பு காலாவதியாகும் நாளின் விவரம்...


சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி; ரூ.3,200-க்கு விற்பனைக்கு வருகிறது

தற்போது, சாதாரண லேப்டாப்புகள் மீதான ஆர்வம் மெதுவாக குறைந்து வருகிறது. இலகுவாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது. 

படித்ததில் பிடித்தது ...உண்மையான பார்வை.

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், " ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார்.

3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மின் பயன்பாட்டை கணக்கிட நவீன மீட்டர்

மின் பயன்பாட்டில் முறைகேட்டை தடுக்க, ஏ.எம்.ஐ., என்ற அதி நவீன மின் பயன்பாடு அளவை கணக்கிடும் மீட்டர் பொருத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என, எல்லா மின் நுகர்வோர்களிடமும் இந்த புதிய மீட்டர் மூலம் மின் பயன்பாடு அளவு கணக்கிடப்பட உள்ளது. 


தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கிறது. வீடுகளில், 500 யூனிட் கீழ் மின்சாரம் பயன்படுத்தினால், தமிழக அரசு மானியம் வழங்குகிறது. 500 யூனிட் மேல் பயன்படுத்தினால், முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சில ஊழியர்கள், வீடு, வணிக நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, மின் பயன்பாட்டை குறைத்து எழுதுவதாக கூறப்படுகிறது. இதனால், மின் வாரியத்திற்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்

அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்ைல. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. 

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே


வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published...

ஜனவரி.1 முதல் எந்தெந்த துறைகளுக்கு PAN CARD கட்டாயமாகிறது - வருமானவரித்துறை பட்டியல் வெளியீடு


மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்) பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது..


Saturday, December 26, 2015

15 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளின் கதி என்ன?

சட்ட அங்கீகாரம் இல்லாமல் செயல்படும், 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில், 1923ல், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் உருவானது. இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை கட்டுப்பாட்டில், 44 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்கின. கல்லுாரி படிப்புக்கு இணையாக, பி.யூ.சி., படிப்பும் நடத்தப்பட்டது.

'இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதற்கும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், 6,293 மாணவ, மாணவியருக்கு, உதவித்தொகையாக தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

'திங்கள், வெள்ளியில் 9 விடுமுறை நாட்கள்'

சேலம்: தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில், 9 நாள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், சொந்த ஊர் அல்லாத வெளிமாவட்டங்களில் பணிபுரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு

சேலம்: தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தம் செய்ய, பகுதி நேர பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும், 27 ஆயிரத்து, 700 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 7, 247 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், அனைத்து பள்ளிகளிலும், பல்வேறு திட்டங்களில், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எட்டு ஆண்டாக முடங்கிய ஆசிரியர் பயிற்சி படிப்பு

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய பாடத் திட்டங்களின் படி, செயல்வழிக் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் ஓவியம், இசை, தையல், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தனித்திறன்களுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

'நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு

திண்டுக்கல்: இன்று நடக்கும் கல்லுாரி உதவிப்பேராசிரியர் பதவிக்கான 'நெட்' தகுதிதேர்வில் 'பேனா, கடிகாரம்' போன்றவற்றுடன் பங்கேற்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) தடை விதித்துள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) வழிகாட்டுதலில் தேசிய தகுதி தேர்வை (நெட் தேர்வு) இன்று டிச.,27ல் நாடு

பள்ளிக்கல்வி - மழை பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு விடுமுறையில் இரண்டாம் கட்ட தூய்மை பணிகளை 28/12/2015 முதல் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

Friday, December 25, 2015

மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பு: மாநில அரசுகளுக்கு தடை: யூ.ஜி.சி., பார்த்து கொள்ளும் :மத்திய அரசு

நிகர் நிலை பல்கலை மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பை, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டாம்; பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., பார்த்து கொள்ளும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.வெளிநாடுகளில் படிக்க செல்லும் அல்லது பணிக்கு செல்லும் மாணவர் சான்றிதழ்களை, சரிபார்க்கும் பணி, மாநில அரசுகளின் அயல்நாடு விவகாரத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

7,000 பேராசிரியர்களுக்குகல்வி ஊதியம் பாக்கி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், கல்வித்தர மேம்பாட்டு ஊதியம், நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், 7,000 பேராசிரியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும், 140 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உள்ளன; இவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, சம்பளம் தவிர்த்து, கல்வித்தர ஊதியம் கூடுதலாக வழங்கப்படுகிறது.இவ்வாறு, பேராசிரியர்களுக்கு, மாதம், 6,000 ரூபாய் வழங்கப்படும். 

மதுரை காமராஜ் பல்கலை கல்விப் பேரவை கூட்டம் எப்போது: சிக்கலில் தனியார் கல்லூரிகள்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்வி பேரவை கூட்டம் நடத்த தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலை அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரிகள், புதிய பாடத் திட்டங்கள் குறித்து முடிவு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணி ஆறு மாதங்களுக்கும் மேலாக நடக்கிறது. இதனால் ஆராய்ச்சி பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் முடங்கிக் கிடக்கின்றன.

ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஜன., 18 முதல், இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள், ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறைக்கு பின், ஜன., 2ல் பள்ளிகள் திறந்ததும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27 வரை, தேர்வுகள் நடக்க உள்ளன.

7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தாதீங்க ஐந்து மாநிலங்கள் கோரிக்கை


புதுடில்லி:'ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை, அடுத்த மாதம் அமல்படுத்தக் கூடாது; அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு, அதன் பரிந்துரையை, மத்திய அரசிடம் அளித்துள்ளது. 

Thursday, December 24, 2015

CPS-புதிய பென்ஷன் திட்டத்தில் பயன் இல்லை - நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள் ..


முதல்வர் ஜெயலலிதா - கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள “கிறிஸ்துமஸ்” திருநாள் வாழ்த்துச் செய்தியில், கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.பி.க்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்த நிதித்துறை முடிவு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்த பாராளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. அதனை நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போது மாத சம்பளம் ரூ.50 ஆயிரமாக உள்ளது. இதனை ரூ.1 லட்சமாக உயர்த்தவும், தொகுதி அலவன்ஸ் தொகையை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ90 ஆயிரமாக உயர்த்தவும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நிதித்துறைக்கு சிபாரிசு செய்துள்ளது. இதனை நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்.

ஜனவரி 2வது வாரம் சென்னை வரும் அவர், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் நஜீம் கேட்டறிவார் எனத் தெரிகிறது. தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன்,

Aided School without TET Teachers Increment Regarding RTI Letter

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு -இருக்கா ?RTI -NEWS

பிப்ரவரியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு

சென்னை : பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக, பிப்ரவரி முதல் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு

ராமநாதபுரம்:அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அந்த பட்டியலில் உள்ளோர்

வங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு: மன உளைச்சலில் தேர்வர்கள்

மதுரை:தமிழகத்தில் வங்கி தேர்வு பணியாளர் மையம் (ஐ.பி.பி.எஸ்.,) நடத்தும் மெயின் தேர்வுக்கான மையங்கள் அனைத்தும் வட மாவட்டங்களில் அமைக்கப்பட்டதால் தென் மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைந்து ஐ.பி.பி.எஸ். (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) என்ற கூட்டமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் போட்டி தேர்வு நடத்தி, அனைத்து வங்கிகளுக்கும் தேவைப்படும் கிளர்க்குகளை தேர்வு செய்கின்றன. ஏதேனும் ஒரு பாடத்தில் இந்தாண்டிலிருந்து முதல்நிலை, மெயின் மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. 
இதன்படி ஜன., 2ம் வாரத்தில் முதல்நிலை தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேல் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜன., 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கும் மெயின் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 40 ஆயிரம் பேர் தென் மாவட்டத்தினர்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக, பிப்ரவரி முதல் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு, மழை விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு தாமதத்தால், பிப்ரவரி, இரண்டாம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது' என்றனர்.

மாதிரி வினாத்தாள்சி.பி.எஸ்.இ., ரிலீஸ்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.
மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அடிப்படையிலும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அடிப்படையிலும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன.இதில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், வினா வங்கி,

தகவல் சேகரிப்பு ஜன., 18ல் துவக்கம்

சென்னை:தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், 'ஆதார்' எண்ணை இணைக்க, வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி, தமிழகத்தில் ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடைபெற உள்ளது.
தேசிய அடையாள அட்டை விதியின் படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், அனைவரின் ஆதார் எண்கள் இணைக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும், வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது.இப்பணியை, ஜன.,18 முதல், பிப்., 5 வரை,

அண்ணாபல்கலைக்கழகம் - 30 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை

அண்ணா பல்கலையின் இணைப்பு பொறியியல் கல்லுாரிகளில், நடப்பாண்டில், 325 புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அறிவுசார் சொத்துரிமை கோரப்பட்டு உள்ளது; 30 கண்டு
பிடிப்புகளுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ், 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரி மாணவர்கள், புதிய பொருட்களை கண்டுபிடித்து, அதற்கு அண்ணா பல்கலை வழியே காப்புரிமை பெறுவது வழக்கம்.இந்த அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில், 39 கல்லுாரிகள், 325 புதிய கண்டுபிடிப்புகளை, பல்கலைக்கு அனுப்பின. அவற்றை ஆய்வு செய்து, முதற்கட்டமாக, 30க்கு, அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் மூலம், காப்புரிமை பெறப்பட்டு 

நிபந்தனைகளை மீறி பேராசிரியர் நியமனம் ஜரூர்!

தமிழக அரசு கல்லுாரிகளில் போட்டி தேர்வு இல்லாமல், தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள, 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 8,000 பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், காலை மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கு தனித்தனியே, இரண்டு, 'ஷிப்டு'களாக, 3,300 கவுரவ பேராசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மாதந்தோறும், ஊதியமாக, 10 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. 

புகார்களை விசாரிக்க தகவல் ஆணையம் மறுப்பு

'பொது தகவல் அதிகாரி, தவறான தகவல் அளித்ததாக வரும் புகார்களை விசாரிக்க முடியாது' என, மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை எழுந்துள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் பெறலாம். இதற்காக விண்ணப்பிக்கும் போது, அரசு துறைகளில் உள்ள பொது தகவல் அதிகாரிகள், சில நேரங்களில், தவறான அல்லது சம்பந்தம் இல்லாத தகவல்களை அளித்து மனுதாரர்களை அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.இந்த சமயங்களில் மனுதாரர், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடமும், அவரை தொடர்ந்து, மாநில தகவல் ஆணையத்திலும் புகார் செய்யலாம்.

Wednesday, December 23, 2015

FLASH NEWS :- INSPIRE AWARD - LIST OF SELECTED STUDENTS - 2015-2016

பட்டதாரி ஆசிரியர் - மூத்தோர் இளையோர் -750 முரண்பாடு குறித்து கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் - ஊதிய நிர்ணயம் சார்ந்த கருத்துருக்கள் .....

ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ்

ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைப்பிடித்து வரும் அணுகுமுறை, சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன் ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தகுதிகாண் மதிப்பெண் முறை கடைப்பிக்கப்படவில்லை.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு: 4 மாதங்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பி.கார்த்திக் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: குரூப்-1 பதவிகளுக்கு காலியாக உள்ள 74 பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி நடத்தியது.

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது. 
 தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன. இந்த வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்துக்கானப் பாடங்கள் ஜனவரி முதல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லாப் பாடப் புத்தகங்களும், நோட்டுகளும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆட்சியரிடம் வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் சங்கத்தினர் ஆட்சியர் இ.வல்லவனை சந்தித்து வலியுறுத்தினர்.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆம்பூர் அருகே உள்ள வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் எஸ்.தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மாதனூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.திருப்பதி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் டி.நடராஜன் ஆகியோர் கண்காட்சியை தொடக்கி வைத்துப் பார்வையிட்டனர்.

மருத்துவ கல்லூரியில் 'ராகிங்': 12 மாணவர்கள் 'சஸ்பெண்ட்?'

சென்னை: 'ராகிங்' குற்றச்சாட்டில், சென்னை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், 12 மாணவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகளுக்கு மாறியது விடுமுறை சத்துணவில் முட்டை 'போச்சு'

தேனி: அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. முட்டைகள் வினியோகிக்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனம், எந்தெந்த நாளில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என ஒரு மாதத்திற்கு முன்பே தேவைபட்டியல் தயாரித்து அனுப்பிவிடும்.
'டிச.,௨௩ல் மிலாடிநபியை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் விடுமுறை' என ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மிலாடிநபி டிச.,24க்கு மாற்றப்பட்டு, நேற்று பள்ளிகள் செயல்பட்டன. ஆனால், மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை.

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு

அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா,

FLASH NEWS :- INSPIRE AWARD - LIST OF SELECTED STUDENTS - 2015-2016

பள்ளிக்கல்வி - 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு ஆலோசனை வகுப்புகள் - இயக்குனர் உத்தரவுTuesday, December 22, 2015

SLAS QUESTION PAPERS ALL LINKS....UPDATED...பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை

மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவிய பல்கலைக்கழக பேராசிரியர்கள்

காட்டங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு நடுநிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வழங்கினர்.
 காரணைப் புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி, குமிழி ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கூடுவாஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1,725 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்விகள் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மன்றம் சார்பில் வழங்கப்பட்டன.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!