TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Sunday, May 31, 2015

பள்ளிகள் இன்று திறப்பு

பள்ளிகள் இன்று திறப்பு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை ( ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியப் பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 1) கடைசி நாளாகும்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி 1 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோக அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்களை பற்றிய அனைத்து விவரங்களுடன் கூடிய, இணைய அடிப்படையிலான பிரத்யேக அடையாள அட்டையை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், அரசின் உதவிகளை பெறுவதற்காக அலைய வேண்டியுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு தாமதமாகும்

பிரிட்ஜ் கோர்ஸ்' எனப்படும் நீதி போதனை வகுப்பு குறித்து உயர்கல்வி துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு அறிவிப்பு வராததால் கவுன்சிலிங் முடித்த முதலாமாண்டு மாணவர்களுக்கு 15ம் தேதிக்கு பிறகே கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளது.
1979-க்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி., முடித்த மாணவர்கள் கல்லுாரியில் பி.யூ.சி., படித்து அதன்பிறகே பல்கலை கழகம் சார்பில் வழங்கப்படும் டிகிரி படிப்பை மேற்கொண்டனர். பி.யு.சி., யில் அவர்கள் நீதிபோதனை வகுப்பு டிகிரி படிப்புக்குரிய ஆயத்த படிப்பை மேற்கொண்டனர். இதனை 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்று அழைத்தனர்.

ஆய்வக உதவியாளர் தேர்வு: 'பேஸ்புக், மலாலா' கேள்விகள்

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வில், சமச்சீர் கல்வியில் படிக்காதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக இருந்தது. வினாத்தாளில், 'பேஸ்புக்'கை உருவாக்கியவர் யார் என்ற கேள்வியும் இடம் பெற்றிருந்தது.
அரசுப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பதவிக்கு, 4,362 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது; 1,800 மையங்களில், 8.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஆண், பெண் தேர்வர்களுக்கு, தனித்தனியே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, நண்பகல், 12:30 மணிக்கு முடிந்தது.

LAP ASSISTANT TENTATIVE KEY ANSWER 2015 - SERIES -2


2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில், மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள், பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன. இதில், பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மார்ச் மாதத்தில், ஒரே வாரத்தில் மூன்று இடங்களில், பள்ளிகளின் கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.

காலிப் பணியிடங்களால் தமிழக நிதித்துறையில் கோப்புகள் தேக்கம்

தமிழக நிதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாததால், கோப்புகள் தேக்கமடைவதோடு, பணிச்சுமையால் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.


25 ஆண்டுகளாக...:


நிதித்துறையில், கடந்த, 10 ஆண்டுகளாக, உதவி அலுவலர்கள், தட்டச்சர்கள், உதவியாளர்கள் பணியிடங்கள், அதிக அளவு காலியாக உள்ளன. கடந்த, 25 ஆண்டுகளாக, பல புதிய துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும், அதிக வளர்ச்சி பெற்று விரிவடைந்துள்ளன. அவற்றின் வரவு - செலவு திட்ட மதிப்பீடும், 40 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

அரசு பணிக்கான நேர்காணல் வீடியோவில் பதிவு:முறைகேடுகளை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி., அதிரடி

சென்னை:''அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் நேர்காணலை வீடியோவில் பதிவு செய்வதால், முறைகேடுகளுக்கு இடமில்லை,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். 
தமிழக அரசின் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டிலுள்ள, இந்திய மருத்துவ முறையிலான ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில், உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு, நேற்று நடந்தது.மொத்தம், 83 காலிப் பணியிடங்களுக்கு, சென்னை,

இன்ஜி., விண்ணப்பம் பரிசீலனை இன்று துவக்கம்

இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வந்துள்ள, 1.53 லட்சம் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி, இன்று துவங்குகிறது.
அண்ணா பல்கலையில், ஒற்றைச் சாளர முறை கவுன்சிலிங்கில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்காக 1.90 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகி, 1.53 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

'பஸ் பாஸ்' என்னாச்சு?

பள்ளிகளில் இருந்து போக்குவரத்து கழகங்களுக்கு, பஸ் பாஸ் பெறும் மாணவர்களின் பட்டியல் வந்து சேராததால், பஸ் பாஸ் தயாரிக்கும் பணி துவங்கவில்லை. இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால், பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பயணிக்க, வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

பட்டியல் வந்தாச்சு; பணி நியமனம் என்னாச்சுகலக்கத்தில் உதவி பேராசிரியர்கள்

மதுரை:அரசுக் கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியல் ஏப்ரலில் வெளியிடப்பட்டது. 
கல்லுாரி திறக்கப்படும் நிலையில் பணி நியமன உத்தரவு கிடைக்காததால் தேர்வானவர்கள் கலக்கத்தில் உள்ளனர். அரசுக் கல்லுாரிகளில் 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)

வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண்டும்?தயவு செய்து, கற்பித்தல்-கற்றலுக்காகச் செல்போனை அனுமதியுங்க

சமீபத்தில் ஆசிரியர் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, கற்பித்தல் முறையில் புதிய கருவியாகச் செல்போன் அமைந்திருப்பதை அறிந்தேன். செல்போன் என்பது வெறும் தகவல்தொடர்புச் சாதனமாக இல்லாமல், கல்வித்துறையில், முக்கியமாகக் கற்பித்தலில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றிய நீண்ட உரையாடல் புதிய உத்வேகத்தை அளித்தது என்றுதான் சொல்லவேண்டும். அதில் ’வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது எப்படி?’ என்ற வரிதான் மீண்டும் மீண்டும் உரையாடலில் எழுந்த ஒரு தேடல்.
முதலில் வகுப்பறை என்றால் என்ன என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். வகுப்பறை என்பது நான்கு சுவர்களால் சூழ்ந்த, இருக்கைகள் வரிசையாக அமைந்த, கவனிக்கும் மாணவர்களால் நிரம்பிய, கற்பிக்கும் ஆசிரியரால் அமைந்த அறை என்பது மரபான ஒன்று. தற்போது அப்படி இல்லை என்பதுதான் நிஜம். உண்மையில் தற்போதைய வகுப்பறை என்பது கற்பித்தல்-கற்றலுக்கிடையிலான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது. அதரப்பழசான கல்விக் கற்பித்தல் செயல்பாடுகள் மறந்துவிட்டு, ப்ரொக்ஜடரில், கணினியில் பாடம் கற்பிக்கும் ஸ்மார்ட் க்ளாஸ் திட்டம் பல்வேறு தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் சிறுபான்மையாக நடைமுறையில் உள்ளது. இது இரண்டும் இல்லாமல், செல்போன் வழியாகப் பாடம் சம்பந்தமான விளக்கங்களைத் தேடிக் கற்கும் கற்பிக்கும் தன்மையும் நடக்கிறது. எனவே வகுப்பறை என்பது தேடலுக்கான வழி என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஏழை மாணவர்களுக்கான 25% சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கையை அளிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஏலகிரிமலையில் இரு நாள் கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது.

'ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை

ஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான தற்காலிக கீ ஆன்சர்கள் -2015 (ALL SERIES) -----Tamilnadu Lab Asst Exam 2015 - Key Answer


ஜூலை-2015 மாத்த்திற்க்கான அகவிலைப்படி எவ்வளவு உயரலாம்?

As far as DA from July 2015 is concerned we have CPI (IW) for 9 months out of 12 months.
Jul-2014 252
Aug-2014 253
Sep-2014 253
Oct-2014 253

Saturday, May 30, 2015

திட்டமிட்டபடி ஜூன்.1ம் தேதி பள்ளி திறக்கப்படும்: இயக்குநர்

பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது.

2015 RH List (June - Dec)


June 2 - Tuesday - ஷபே பாராஅத்.
June 19 - Friday - ரம்ஜான் நோன்பு முதல் நாள்.
July 14 - Tuesday - ஷபே காதர்.
August 3 - Monday - ஆடிப்பெருக்கு.
August 28 - Friday - வரலட்சுமி விரதம்/ஓணம் பண்டிகை.
August 29 - Saturday - ரிக் உபகர்மா/யஜீர் உபகர்மா.
September 17 - Thursday - சாம உபகர்மா.

தமிழ்நாடு: இன்று பள்ளி ஆய்வக உதவியாளர்கள் தேர்வு

சென்னை: பள்ளி ஆய்வக உதவியாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆயிரத்து 800 மையங்களில் இத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு புத்தகம் விலை இரட்டிப்பு உயர்வு



பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், காலணி, சீருடை என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் பள்ளி கல்வித் துறை பரிந்துரைப்படி, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் மூலம் தருவிக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.

'ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை

சேலம்:'ஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.

அரசு ஊழியர் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை அறிமுகம்

சென்னை:அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பாஸ்போர்ட் மண்டல அலுவலக அறிக்கை:பொதுத் துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பாஸ்போர்ட் பெற, அரசின் தடையின்மை சான்றிதழை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.ஆனால், சில அரசு அலுவலகங்களில், தடையின்மை சான்று பெற, நீண்ட தாமதம் ஏற்படுகிறது. இதனால், ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் நெருக்கடி நிலவுகிறது.

ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள்:எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்

விருதுநகர்:ஒத்தி வைக்கப்பட்ட மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை, விரைவில் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், அரசு ஊழியர்கள் உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஆண்டு தோறும் சீருடை பணியாளர் அல்லாத அரசு ஊழியர்களுக்கான தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, டென்னிஸ், கபடி, மேஜைபந்து போட்டிகள் மே, ஜூனில் நடப்பது வழக்கம். மாவட்டந்தோறும், 60க்கு அதிகமான அரசு ஊழியர்கள் பங்கேற்பர்.

இன்டர்நெட் இணைப்பு இல்லாததால்ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் கடும் அவதி



சேலம்:தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சம்பள பில் தயாரிப்பது முதல், தகவல் பரிமாற்ற கடிதம் வரை, ஆன்-லைன் மூலமே மேற்கொள்ளப்படும் சூழலில், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு, இதுவரை 'பிராட்பேண்ட்' வசதி செய்துதரப்படாததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.சொந்த பணத்தில்...தமிழக தொடக்கக்கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பளம், நிலுவைத்தொகை உள்ளிட்டவை பெற்றுத்தரும் நிர்வாக அலுவலகமாக, உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் உள்ளது. ஒரு ஒன்றியத்துக்கு ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்கிறது

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நேற்று எடுக்கப்பட்ட சில முடிவுகள் விவரம்: l மத்திய அரசு ஊழியர்களுக்கு, வீட்டு வாடகை மற்றும் பயணப்படியை அதிகரிக்கும் வகையில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், 29 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களை தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை சம்மதம் தெரிவித்தது.

Thursday, May 28, 2015

9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும் 10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா? அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை

இந்த ஆண்டு +2 மற்றும் 10 ம் வகுப்புத் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதோடு அதிக அளவில் 200 க்கு 200; 100 க்கு 100 என மதிப்பெண்களைக் குவித்தும் உள்ளனர். +2 தேர்வில் கணிதத்தில் 9,710 பேர்களும் கணக்குப் பதிவியலில் 5,167 பேர்களும் வேதியலில் 1,049 பேர்களும் 200 க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
அதே போல 10ம் வகுப்பிலும் நூற்றுக்கு நூறு வாங்கியோர் எண்ணிக்கை ஏராளம். முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் மாத்திரம் 773 பேர்கள். கணக்கில் 27,134 பேர்களும், அறிவியலில் 1,15,853 பேர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2: பிற பாடங்களின் விடைத்தாள் நகல்களையும் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி

தமிழகத்தில் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர நிறைவு செய்த விண்ணப்பத்தை அளிப்பதற்கு வெள்ளிக்கிழமை (மே 29) கடைசி நாளாகும். பி.இ.- 1.25 லட்சம் விண்ணப்பங்கள்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர இதுவரை 1.25 லட்சம் பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கியது. சென்னை தவிர்த்த பிற மையங்களில் விநியோகம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விற்பனை மையங்களில் வெள்ளிக்கிழமை (மே 29) வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

நேற்று காலை 11.30 மணியளவில் நமது பேரியக்கத்தின் சார்பாக மாநில தலைவர் கோ காமராஜ் பொதுச்செயலாளர் ந ரெங்கராஜன் ஓய்வு பிரிவு மாநில பொருளாளர் மூர்த்தி முன்னாள் மாநில பொருளாளர் எத்திராஜ் வில்சன்பர்னபாஸ் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் இராமநாதபுரம் மாநில செயற்குழு 

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு:தகுதிக் கல்வி கிடைக்கிறதா?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், அதிக தேர்ச்சி விகிதத்தை காட்டுவது, பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் தகவல். அதே சமயம், பிளஸ் 2வகுப்புகளில் இந்த மாணவர் அனைவரும், அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் கல்வியை நோக்கி பயணிப்பரா என்பது, சிந்திக்க வேண்டிய விஷயம்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில்தமிழக மாணவர்கள் 99.76% தேர்ச்சி



சென்னை:சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வில், தமிழக மாணவர்கள், 99.76 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்; சென்னை மண்டல அளவில், தேர்ச்சி அளவு, 99.03சதவீதமாக உள்ளது.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 2ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடந்தன; நாடு முழுவதும், 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள், மே 27ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது. ஒருநாள் தாமதமாகி, நேற்று வெளியிடப்பட்டது.

'குரூப் - 1' முதன்மை தேர்வு:டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை:'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 1 முதன்மைத் தேர்வு, ஜூன், 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில் நடக்கும்' என,
அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், துணை ஆட்சியர், போலீஸ் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளில், காலியாக உள்ள, 79 இடங்களை நிரப்ப, முதல்நிலைத் தேர்வு, 2014 ஜூலை 20ம் தேதி நடந்தது; இதன் முடிவுகள், ஜன., 30ம் தேதி வெளியானது.

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும்: இயக்குனர்

கோவை:''பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.
கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லையா

சிவகங்கை:தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு கண்காணிப்பு குறித்து சி.இ.ஓ.,க்கள் முதன்மை கண் காணிப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

Wednesday, May 27, 2015

பள்ளிக் குழந்தைகள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை: ராமதாஸ்

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அரசுப் பள்ளிகள் திறப்பை 2 வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதா? என்று பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதாவிடம் கேட்ட போது, அதற்கு வாய்ப்பில்லை என்றும், திட்டமிட்டபடி வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரி,பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி! பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் 338 அரசு ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. 53 அரசு நடுநிலைப் பள்ளிகள், 93 அரசு மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்,

தர வரிசை பட்டியலில் முதல் 25 இடங்களை பிடித்த என்ஜினீயரிங் கல்லூரிகள்

என்ஜினீயரிங் கல்லூரி களின் தரவரிசை பட்டி யலை அண்ணா பல்கலை கழகம் வெளியிட் டுள்ளது.தமிழகத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.இக்கல்லூரிகளின் 2014 நவம்பர்-டிசம்பர் பருவ தேர்வு மற்றும் ஏப்ரல்-மே மாத பருவ தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் வரும் 30க்குள் மாணவர் சேர்க்கை

ஊட்டி: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.
கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டு முதன்முறையாக, கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு, ஜூன் முதல் வாரத்தில் இணைப்பு பாட போதனை வழங்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார். பள்ளி வாழ்க்கை முடித்து, முதன்முறையாக கல்லூரிக்குள் நுழையும் மாணவ,

மாணவர்களின் உடல்நலத்தில் பள்ளிகளுக்கு அக்கறை தேவை

காற்றோட்டாமான வகுப்பறையும், இயற்கை உபாதைக்கு அனுமதியும் பள்ளி நிர்வாகங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு நிபுணர் டாக்டர் சுஜாதா சங்குமணி. புதிய கல்வி ஆண்டு இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. பள்ளிகள் திறக்க உள்ளன.
மாணவர்களின் சுகாதாரம், உடல்நலம் எப்படி இருக்க வேண்டும் என அவர் கூறியதாவது: கோடை விடுமுறை முடிவதற்குள் பிள்ளைகளுக்கான சின்னம்மை, மஞ்சள் காமாலை உட்பட தேவையான தடுப்பூசிகளை போட வேண்டும்.

இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி

மேட்டூர்: இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.
அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலை, துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும். இதன்மூலம், பணிமூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாறுதல் உத்தரவு பெறுவர்.

ஆன்மிகம் வேத பாடசாலை மாணவர் சேர்க்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலையில், இந்த கல்வி ஆண்டிற்கான வேதம் பயிலும் மாணவர் சேர்க்கை மே 22 முதல் நடந்து வருகிறது. இங்கு மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி வசதி உண்டு. ஜூன் 8ல் கணபதி ஹோமத்துடன் பாடங்கள் துவங்கும். வேதத்துடன் ஆங்கிலப் பாடமும் நடத்தப்படும்.

Tuesday, May 26, 2015

பள்ளி விடுமுறையை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை

பள்ளிகளை ஜுன் 1-ம் தேதி திறக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என ஆசிரியர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க JACTTA கோரிக்கை விடுத்துள்ளது.

500 ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று 500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநில இணைச்செயலாளர் திரு.சி.முருகன் உள்ளிட்ட சங்கப் பொறுப்பாளர்கள் (22.05.2015) அன்று  மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்தனர்.

பள்ளி திறப்பு ஒத்திவைப்பு?

பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இரு சக்கர வாகனங்களிலும், பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதற்கிடையே கத்திரி வெயிலின் உச்சகட்ட தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம் -

தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் (2015-2016) 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

LAB ASSISTANT EXAM MAY 2015 - IMPORTANT INSTRUCTIONS TO THE CANDIDATE

SSA Tamil Nadu Recruitment for Data Entry Jobs (15 Vacancies)

 SSA Tamil Nadu DEO Notification 2015 
SSA Tamil Nadu Recruitment 2015 Notification Apply Online Application Form for 15 Govt Jobs. Sarva Siksha Abhiyan Tamil Nadu  SSA Tamil Nadu  Recruitment 2015 
SSA Tamil Nadu DEO Recruitment 2015
Post Name : Data Entry Operator

Vacancies : 15
Place of Posting: Coimbatore

Qualification: Candidate should have passed Intermediate and MS Office Course Completion Certificate 
Age Limit: 35 years
How to Apply:Interested contenders can download the application form from official website and filled Application form send to office

Last date for application is 29th May 2015

Official Website: www.coimbatore.tn.nic.in

(ந.க.எண்.016410/டி1/இ4/2015) உதவிபெறும் பள்ளிகளில் 2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் மற்றும் அக்காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கப் பட்டால் ஆகும் செலவீனம் பற்றியும் கணக்கீடு செய்து அனுப்புமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணிக்கப்பட்டிருந்தனர் -(2003-06 தொகுப்பூதிய காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வழக்கு ஒன்றிற்கு எதிர்மனு தாக்கல் செய்ய சேகரிக்கப்படும் விபரங்களே இவை)


சிலநாட்களுக்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக (ந.க.எண்.016410/டி1/இ4/2015) உதவிபெறும் பள்ளிகளில் 2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் மற்றும் அக்காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கப் பட்டால் ஆகும் செலவீனம் பற்றியும் கணக்கீடு செய்து அனுப்புமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வாறு ஒரு உத்தரவு தொடக்க கல்வி துறையில் வெளியிடப் படவில்லை.
ஆனால் பளளிக் கல்வித்துறையால் இந்த உத்தரவு வெளியிடப்பட்ட உடன் தமிழகமெங்கும் உள்ள தொகுப்பூதிய ஆசிரியர்கள் தங்கள் மகிழ்ச்சியை முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் வெளிப்படுத்திக் கொண்டாடினர்....

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர வேண்டும்.

பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு? malaimalar.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இரு சக்கர வாகனங்களிலும், பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதற்கிடையே கத்திரி வெயிலின் உச்சகட்ட தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மே மாதம் முடிந்து ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. வெயிலின் தாக்குதலுக்கு சிறு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஜூன் 12–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு விழிப்புணர்வு குறைவு: காந்திகிராமம் பல்கலை. ஆய்வில் தகவல்-

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய விழிப்புணர்வு மிக மிகக் குறைவாக இருப்பதாக, திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐ.ஏ.எஸ். தேர்வு மத்திய அரசு நிர்வாகத்தில் பங்கேற்கும் தகுதியை தீர்மானிக்கும் முக்கி யமான தேர்வாகும். இத் தேர்வில் பங்கேற்பதற்காக அனைத்து மாநிலங்களிலும் பயிற்சி மையங்கள் உள்ளன.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு'ரிசல்ட்' இன்று எதிர்பார்ப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வை,13.74 லட்சம் பேர் எழுதினர்; சென்னை மண்டலத்தில், 1.7 லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடை திருத்தம்,

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விபரங்களை வெளியிட்ட பல்கலை



காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் பெயர், மதிப்பீடு செய்யப்படும் நாள் மற்றும் இடம் ஆகியவை பல்கலை கழக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்திற்குட்பட்ட இணைப்பு கல்லுாரிகளில், கடந்த ஏப்ரலில் செமஸ்டர் தேர்வு நடந்தது. விடைத்தாள்கள் தேர்வு மையங்களிலிருந்து பல்கலையின்

இலவச மாணவர் சேர்க்கை நிதியை பெற்றோருக்கு தரலாம்! தனியார் பள்ளிகள் புது முடிவு

கட்டாயக் கல்வி சட்ட மாணவர் சேர்க்கை நிதியை, சமையல் காஸ் மானியம் போல், பெற்றோரிடமே ஒப்படைக்கவும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் மானியம் தரவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், இந்த விஷயத்தில், தமிழக அரசு புதிய முடிவு எடுக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.கோரிக்கை:இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில், 2013 - -14-ல், 49,864; 2014 - -15ல், 86,729 ஏழைகள், நலிவடைந்த பிரிவு குழந்தைகள், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்கு, 2013 -- 14க்கு, 25.13 கோடி; 2014 - -15க்கு, 71.91 கோடி ரூபாய் வழங்க, தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தன. இந்த நிதியை, மத்திய அரசு உடனடியாக வழங்க, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாள்:இன்றுடன் வினியோகம் முடிகிறது

அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை தாக்கல் செய்ய, இன்னும் இரு நாட்களே உள்ளன. இதுவரை, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.அண்ணா பல்கலை இணைப்பில், 580 இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையில், ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான விண்ணப்பம், மே 6ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், 59 மையங்களிலும், சென்னையில் கூடுதலாக அண்ணா பல்கலையிலும்,
விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை:கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை:'தமிழகத்தில் பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி திறக்கப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.'தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும், ஜூன் 1ம் தேதி திறக்கப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில்,

Monday, May 25, 2015

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு


தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த இயக்குனரின் வழிமுறைகள்


பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நாளையுடன் முடிகிறது : இதுவரை 1.85 லட்சம் விற்பனை

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரை 1.85 லட்சம்  விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பொறியியல்  மாணவர் சேர்க்கையில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது. 

பி.எட்., எம்.எட். படிப்பு நாடு முழுவதும் இனி இரண்டு ஆண்டுகளாக அமல்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்

நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 

SSA-TAMILNADU STATE MISSION EDUCATION FOR ALL INSTRUCTIONS ON MAINTANANCE OF DIARY OF APO/BRC/BRTE-REGARDING.....

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 82 சதவீத தேர்ச்சி

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். சென்னை மண்டலத்தில், 91.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். திருவனந்தபுரம் மண்டலம், தேர்ச்சி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று பகல், 12:00 மணிக்கு வெளியானது. டில்லியில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டு, www.cbseresults.nic.in இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. இந்த ஆண்டு, 10 மண்டலங்களைச் சேர்ந்த, 10.30 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இதில், 82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு, 82.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இப்போதே திட்டமிட்டால் அதிக மதிப்பெண்: மாநில ரேங்க் மாணவிகள் திட்டவட்டம்

"தேர்விற்காக கடைசி நேரத்தில் அவசரகதியில் மாங்கு... மாங்கு... என படித்து பதட்டத்துடன் தயாராவதை விட கல்வியாண்டு துவக்கம் முதல் திட்டமிட்டு படித்தால் அதிக மதிப்பெண் பெறுவதுடன் தேவையில்லாத அவஸ்தையை தவிர்க்கலாம்" என மதுரை சாதனை மாணவிகள் பார்வதி, சசிகலா தெரிவித்தனர்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 9 வகை கிரேடு மதிப்பெண்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், ஐந்து பாடங்களில், தலா, 100 மதிப்பெண்கள் வீதம், மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் தலா, 33 சதவீத மதிப்பெண், செய்முறை மற்றும் தியரி தேர்வுகளில் பெற்றால் தான், அவர்கள் தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகின்றனர்.

வியாபாரிகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் கிடைக்குமா? தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் விளக்கம்

கோவை: பள்ளிப்பாட புத்தகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு, புத்தகம் விற்பனை செய்ய தமிழ்நாடு பாட நூல் கழகம் புத்தகங்களை வழங்கவில்லை. இதனால் போட்டித்தேர்வு எழுதுவோர், தனித்தேர்வர்கள், டுட்டோரியல் முறையில் தேர்வு எழுதுவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஜவகர் நவோதயா பள்ளிகள் சாதனை: கேந்திரிய வித்யாலயாவை மிஞ்சின

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், ஏழைக் குடும்பத்தினர் படிக்கும் ஜவகர் நவோதயா பள்ளிகள், கே.வி., என்ற கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை விட அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
ஜவகர் நவோதயா பள்ளிகள், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், அனைத்து மாநிலங்களிலும், மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் செயல்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பள்ளிகள் இல்லை.

Sunday, May 24, 2015

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' இன்று வெளியீடு


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, 10ம் வகுப்பு முடித்தோருக்கு, பிளஸ் 1 சேர்க்கையும், பிளஸ் 2 முடித்தோருக்கு, 
மருத்துவம், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை 

கட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு


சட்டப்பூர்வ சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் பல பள்ளிகள், கட்டாய கல்விச்சட்டத்தை பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளன. பெற்றோரின் புகாரால், விதிமீறல் பள்ளிகள் பட்டியலை தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.நலிந்த பிரிவுகள்மத்திய அரசின் கட்டாய கல்விச்சட்டப்படி, ஆறு முதல், 14 வயது வரை, நலிந்த பிரிவினர், 25 சதவீதம் பேருக்கு கட்டணமின்றி சேர்க்கை தர வேண்டும்;

மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆட்குறைப்பு: ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு


தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

அரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு

காரைக்குடி :அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மே 29-க்குள் முடித்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மறு கூட்டல், உடனடி தேர்வு எழுதும் மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ம் தேதி வெளியானது. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அடுத்த மாதம் 22-ம் தேதி சிறப்பு உடனடி தேர்வு நடத்தப்பட உள்ளது.

பி.ஆர்க்., படிப்புக்கு ஜூன் முதல் வாரம் விண்ணப்பம் 'நாட்டா' தேர்வு முடிவுக்கு பல்கலை காத்திருப்பு


பி.ஆர்க்., எனப்படும் கட்டடக்கலை வல்லுனர் படிப்புக்கான விண்ணப்பங்கள், ஜூன் முதல் வாரம் அண்ணா பல்கலையில் வழங்கப்பட உள்ளன.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 580 இன்ஜினியரிங் கல்லூரிகளில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பி.இ., - பி.டெக்., இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் + பெற்றோர் = சிறந்த மாணவர்கள்: தலைமை ஆசிரியரின் ஆலோசனை


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அதிகபட்சமாக உச்சரிக்கும் வார்த்தைகள் தான், படி... படி... படி... மாணவர்களை சிந்திக்க விடாமல், சுதந்திரமாக நடக்கவிடாமல் எந்நேரமும் படிக்கச் சொன்னால் படிப்பு வராது. விரும்பி படித்தால் பாடம் மனதில் ஏறும். மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன்.பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவர் கூறியதாவது:

சிவகங்கை,: புதிய கல்வியாண்டு துவங்கும் முன் பள்ளிகளில் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பி இருந்தால் அவற்றை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி துவங்கும் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம், சீருடை வழங்க வேண்டும்.

கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன :வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை


தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள் அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பமும், தயக்கமும் நிலவுகிறது.எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு இல்லை என்றால், வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, 

45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா?


தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.கடந்த, 2003 - 06ல், அ.தி.மு.க., ஆட்சியில், தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில், 40 ஆயிரம் ஆசிரியர்கள்; அரசு உதவிபெறும் பள்ளிகளில், 5,000 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில்நியமிக்கப்பட்டனர்.

Saturday, May 23, 2015

தனியார் பள்ளிகளுக்கு 97 கோடி ரூபாய் வழங்க எதிாப்பு: இலவச மாணவர் சேர்க்கையில் கூடுதல் கட்டணம் வசூல்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களிடமும், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்துள்ளதால், பள்ளிகளுக்கு, அரசின், 97 கோடி ரூபாயை தரக் கூடாது என, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், இரு வாரங்களுக்கு முன், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஏழைகள், நலிவடைந்த பிரிவு குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் இல்லை: வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சி முடிவு

கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (மேனேஜ்மென்ட் கோட்டா), கல்விக் கடன் வழங்குவதற்கு, இந்திய வங்கிகள் சங்கம், புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இதனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கடன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுயநிதி கல்வி நிலையங்களில், மொத்த முள்ள இடங்களில், 50 சதவீதம் கல்லூரி நிர்வாகத்தாலும், 50 சதவீதம், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்பப்படுகின்றன.

மாணவர் விரும்பிய பிரிவில் பிளஸ் 1 சேர்க்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு

'பத்தாம் வகுப்பு முடித்துள்ள மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 1ல் தேவையான பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும்' என, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10.60 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதி, 9.85 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 7.96 லட்சம் பேர், 60 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜூன், 15ம் தேதி பிளஸ் 1 வகுப்புகளை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் தேர்வு நடக்குமா?' வரும் 25ம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்படும்' என, இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கும் பணி, இரண்டாவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு திட்டமிட்ட படி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பதவிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், 'ஆசிரியர்களை மட்டும் தான் நியமிப்போம். ஏற்கனவே பல நியமனங்கள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதால், புதிய தேர்வு நடத்துவது மற்றும் நியமனம் தாமதமாகும்' என, டி.ஆர்.பி., தெரிவித்துவிட்டது.

பள்ளிகளில் 'அம்மா உப்பு' படப்பிடிப்பு: தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு

நாமக்கல்: 'அம்மா உப்பு' குறித்த படப்பிடிப்பை, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடத்திட, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், அனுமதி வழங்கி உள்ளார்.
ரேஷன் கடை விலை:




ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, வாலிநோக்கம் என்ற இடத்தில், 2,000 ஏக்கரில், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உப்பு, தொழிற்சாலை, பொது வினியோக திட்டம் போன்றவற்றுக்கு சப்ளை செய்யப்படுகிறது. கடந்த, 1997ம் ஆண்டு முதல், ரேஷன் கடைகளில், உப்பு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில், அயோடின் கலந்த உப்பு, கிலோ, 3.50 ரூபாய், அயோடின் கலந்த சுத்திகரிப்பு செய்யப்பட்ட தூள் உப்பு, ஆறு ரூபாய் என, விற்பனை செய்யப்படுகிறது.

அரசு பள்ளிகளிடம் விளக்கம் கேட்கிறது கல்வி துறை

விருதுநகர்: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அதிகரிப்பு:




தேர்வுகளில், கல்வி மாவட்ட வாரியாக, அரசு பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், கடந்தாண்டை விட அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என, கணக்கிடப்படுகிறது. குறைந்திருப்பின், அது குறித்து, தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகள் கலக்கம்: விசாரணை நடத்த உத்தரவு

சிவகங்கை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி முடிக்க இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு தலா ஒரு கல்வித்துறை இணை இயக்குனர் நியமிக்கப்பட்டார். இவர்கள்,

எஸ்.ஐ., தேர்வு வினாக்கள் எளிமை: பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: தமிழகத்தில் நடந்த எஸ்.ஐ., தேர்வில் உளவியலில் சில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்ததால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எஸ்.ஐ., நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. எப்போதும் கடினமாக இருக்கும் 'உளவியல்' வினாக்கள், இம்முறை எளிதாக இருந்தன. கணிதப் பகுதியும் எளிதாக இருந்தது. பொது அறிவு பகுதியில் மட்டும் சற்று கடினமான வினாக்கள் இருந்தன. '

குரூப் 2 மெயின் தேர்வு கேள்விமுறையை மாற்றக்கூடாது: டி.என்.பி.எஸ்.சிக்கு கோரிக்கை

பழநி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்2 மெயின்தேர்வில் கேள்விமுறையை மாற்றம் செய்துள்ளதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்2 பிரிவில் காலியாக உள்ள வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்புஅலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1,241 பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு உள்ள தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். முதல்நிலைதேர்வு ஜூலை 26ல் நடைபெற உள்ளது.

பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர் இடைநிலை ஆசிரியராக பணி நியமணம் பதவி உயர்வு கோருதல் சார்பு.


TNTET : 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் சாத்திய கூறுகள் இருக்கிறது. தகுந்த ஆதரங்களுடன் சிறப்பு பார்வை

வணக்கம் நண்பர்களே,
ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் தளர்வில் 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தமிழக அரசு.
அதன் பிறகு தேர்வு முடிந்த பின்பு அளிக்கபட்டது என காரணம் காட்டி 5% மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இறுப்பினும் இவை தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இவற்றில் நாம் எந்த கருத்தும் கூற இயலாது நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இருப்பினும் சில அடிப்படை ஆதரங்களுடன் கூடிய விவதம் மற்றும் பேச்சு சுகந்திரத்தின் அடிப்பையில் கருத்துக்களை வெளியிடலாம்.

மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி (திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்


விருதுநகர்: அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன் பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன. ஒரு பள்ளியில் ஆசிரியர் எடுக்கும் பாடம் இந்த முறை உள்ள மற்ற பள்ளிகளிலும் பார்வையிடும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் இவ்வசதி துவங்க உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை,

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு

மத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல் ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., புதுச்சேரி போலீஸ் சர்வீஸ், இந்தியக் கணக்குகள் துறை அதிகாரி உள்ளிட்ட, 24 வகை பதவிகளுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வை, மத்திய அரசு நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வின் அறிவிக்கை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. இந்த ஆண்டு, ஆக., 23ல் முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய ஊர்கள்,

Friday, May 22, 2015

நாளை ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு: 1.50 லட்சம் பேர் பங்கேற்பு


ஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதன்மைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வில், ஜே.இ.இ. பிரதான தேர்வு தகுதிப் பட்டியலில் முதல் 1.50 லட்சம் இடம் வரை பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்.

நலத்துறை பள்ளிகளில் 87 சதவீதம் தேர்ச்சி


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில், 87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 47 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளன.

தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்தும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு


புதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

மே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு தோட்டக்கலை அலுவலர் பணிக்கு ஜூன் 1 முதல் நேர்முகத் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


தோட்டக்கலை அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஜூன் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. 
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியுமா? சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பம்

சென்னை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு மாணவ, மாணவியர், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. விண்ணப்பிக்க, வரும் 29ம் தேதி கடைசி நாள். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

ஜூன் 1ம் தேதி 9ம் வகுப்பு வரை இலவச புத்தகம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு, ஜூன் 1ம் தேதி, இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு, 14 இலவசத் திட்டங்களை அமல்படுத்துகிறது. இலவச 'ஜியோமெட்ரிக் பாக்ஸ்', 'க்ரயான்ஸ்' பென்சில்கள், சீருடை, காலணிகள், பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் 19 பள்ளிகளுக்கு மூடுவிழா: முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 19 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூட, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அரசு அங்கீகாரம் பெறாமல், அடிப்படை வசதியின்றி செயல்படும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் போதிய வசதிகளை செய்து ஆவணங்களை சமர்ப்பிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டது.

குரூப் - 4 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: பத்து லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.
நில அளவர், 702; வரைவாளர், 52; தட்டச்சர், 1,653; இளநிலை உதவியாளர், 2,872; குறுக்கெழுத்து தட்டச்சர், 331; வரித்தண்டலர், 22, உட்பட, பல பதவிகளுக்கான, 4,963 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு, கடந்த ஆண்டு டிச., 21ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்பட்டது.

சிவகங்கையில் தேர்ச்சி விகிதத்தை கவிழ்த்த இரு அரசு பள்ளிகள்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை இரு பள்ளிகள் கவிழ்த்து உள்ளது.
கடந்த கல்வியாண்டில் இத்தேர்வை 261 பள்ளிகளை சேர்ந்த 20,684 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழில் 304 பேரும், ஆங்கிலத்தில்584 பேரும், கணக்கில் 253 பேரும், அறிவியலில் 21 பேரும், சமூக அறிவியலில் 168 பேரும் தோல்வியை தழுவினர். அதிக பட்சமாக ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களில்தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 127 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

TNPSC GROUP IV IMPORTANT INFORMATION

டி.என்.பி.எஸ்.சி துளிகள்
• குருப் நான்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8 அன்று தொடங்கப்பட வாய்ப்பு
• குருப் இரண்டு வாய் மொழி தேர்வு ஜூன் இரண்டாம் வாரம் முதல் நடைபெற வாய்ப்பு
• குருப் இரண்டு நேர்முகத் தேர்வில் கூடுதலாக 80 பதவிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் (Total goes around 1130)

TNPSC GROUP 4 RESULTS 2013–14 & 2014–15 AVL


Posts included in GROUP-IV Services, 2013–14 & 2014–15
(Date of Written Examination: 21.12.2014)
MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION

           Enter Your Register Number :                                      
Name of Post (s)
Date of
 Written
Exam
Written
 Exam Results
Date of
 Oral Test
Oral Test
 Marks
Final
 Results
Written
 Exam Marks
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES, 2013–14 & 2014–15
21.12.2014
(MARKS&
RANK)




SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!