TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Monday, August 31, 2015

இன்று முதல் எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடக்கம்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். வகுப்புகள் செவ்வாய்க்கிழமை (செப்.1) தொடங்க உள்ளன.
 தமிழகத்தில் மொத்தம் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சென்னை பாரிமுனையில் செயல்பட்டு வரும் அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளது. இந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் வருங்கால வைப்புநிதியில் முன்பணம் பெற முடியாமல் தவிப்பு

மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது வருங்கால வைப்புநிதியில் இருந்து முன்பணம் பெற முடியாமல் தவித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலர் டி.பாபுசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:

10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 இதுதொடர்பாக அந்த இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:-

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்.10-இல் தொடக்கம்

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 14-ஆம் தேதியும் தொடங்க உள்ளது.
 இந்தத் தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ். 3-ஆம் கட்டக் கலந்தாய்வு எப்போது?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மூன்றாம் கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என அனைத்திலும் மாணவர் சேர்க்கைக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

22 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவர் பேசியது:

குறைபாடுகளை நேரடியாக பிரதமரிடம் தெரிவித்தால் நடவடிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

துறை ரீதியாக தங்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் குறித்து பிரதமரிடம் நேரடியாக முறையிடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம், துணை ராணுவப் படைகளின் அதிகாரிகள் உள்பட அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சி, இரு நாள் நடைபெற்றது. கண்காட்சியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பிரிவில் தனிநபர் படைப்புகள், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் 2

விடைத்தாள் விற்பனையில் முறைகேடு புகார்: தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இடைநீக்கம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் விற்பனை, கட்டுமானப் பணிகள் போன்றவற்றில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி அலுவலர் சங்கத்தினர் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

40 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு செப்.7 முதல் 19 வரை பயிற்சி

விருதுநகர்:தமிழகத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தின் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக்.,

தள்ளாடுது எஸ்.எஸ்.ஏ. சர்ச்சையில் ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வித் திட்டங்களுக்கு விரயமாகிறதா மத்திய அரசு நிதி

மதுரை:கல்வித்துறையில் கட்டாய கல்வி, மாணவர் கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டங்கள் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஏற்படுத்தப்பட்டன.முறையே 2002 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த இத்திட்டங்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு, மாநில அரசுகள், 75:25 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.

'தொலைதூர படிப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம்'

சென்னை:'தொலைதுார படிப்புகளில் மாணவர்களை சேர்க்கக் கூடாது' என, அண்ணாமலை பல்கலைக்கு, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜிசி., பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

செப்., 20ல் மாநாடு:'ஜாக்டோ' தீவிரம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவின், உயர்நிலைக் குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இதுகுறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை:

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாய்; பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் போது, மாதம், 2,000 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் வழங்கப்படுகிறது.இதற்கான நுழைவுத் தேர்வு, முதலில் மாநில அளவில் நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.

துணைத்தேர்வு: மதிப்பெண் சான்று வினியோகம்

அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய அனைவருக்கும், நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள், தேர்வு எழுதிய மையங்களில், வரும், 9ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, மற்ற நாட்களில் சான்றிதழ் பெற்று கொள்ளலாம்.

377 ஆசிரியர்கள்ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, வரும், 5ம் தேதி, ஆசிரியர்
தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன், 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது.

தேர்வு துறை இணையதளத்தில் தனியார் நிறுவனத்துக்கு 'லிங்க்'

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நடத்தும், அரசு தேர்வுகள் துறை இணையதளம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், தேர்வு மற்றும் துறை ரீதியான ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளது.

சித்தா கலந்தாய்வு எப்போது?

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்காக, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 336 இடங்களும்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,143 இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள, 1,479 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணி, ஜூலை, 31ல் முடிந்தது; 5,100 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம்: கட்டண சலுகை வழங்க மத்திய அரசு புதிய திட்டம்

பொருட்கள், சேவைகளுக்கான கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்குப் பதிலாக, 'எலக்ட்ரானிக் பேமென்ட்' எனப்படும், கடன் அல்லது பண அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

INSPIRE AWARD LAST DATE EXTENDED UPTO 15 SEPTEMBER 2015


G.O Ms: 414 - காலை மாலை அனுமதி அரசானை - அரசு ஊழியர்கள் மாதத்தில் இரண்டு நாட்கள் முன் அனுமதியுடன் அல்லது அனுமதி இல்லாமல் காலதாமத வருகைக்கு அனுமதி உண்டு - விதிமுறைகள்


பள்ளிக்கல்வி - பள்ளிகள் 2015/2016 கல்வி ஆண்டிற்கான இரண்டாம் பருவ பாடபுத்தகங்களை "தமிழ்நாடு பாடநூல் கழகம்" இணையதளத்தில் "ONLINE" பதிந்து, புத்தகங்களை பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது - இயக்குனர் செயல்முறைகள்

Sunday, August 30, 2015

பள்ளிகல்வி துறையில் இடமாறுதல் பெற்ற விபரம்!!!

இந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் 
பெற்றுள்ளனர். 

இன்று 31-08-2015 திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி முடிய தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியில் எனது பொம்மலாட்ட வழி கற்பித்தல் நிகழ்ச்சியானது ஒளிபரப்ப உள்ளனர் .



 வருகின்ற  31-08-2015  திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி முடிய  தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியில்  எனது பொம்மலாட்ட வழி  கற்பித்தல் நிகழ்ச்சியானது ஒளிபரப்ப உள்ளனர் .அதுசமயம் தங்களது கல்வி இணையதளத்தில் இந்த செய்தியினை வெளியிட்டு அனைத்து ஆசிரிய பெருமக்களும் பார்த்து பயன் பெற  உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .......

சம்பளப் பட்டியல் & ஊதிய நிலுவைத் தொகை விவரம் நாமே அறியலாம்.

CHECK YOUR PAY STATUS :-
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா?
எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

TET Article : ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்கு மனநிம்மதியை தருவது டெல்லி அறவிப்பா? தமிழக அறிவிப்பா? ›

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் :

    2013ம் ஆண்டு தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குள் இறுதி விசாரணைக்காக வரும் செப்டம்பர் முதல் தேதியில் வருகிறது. ... இதையொட்டி தமிழக அமைச்சரவையின் பள்ளிக்கல்விததுறையின் மானியக்கோரிக்கையும் செப்டம்பர் 1ம் தேதி வந்துள்ளது இந்நிகழ்வு பெருத்த மாற்றத்தை நிச்சயம் தரும் ... அவ்விதமான நல்ல செய்தி எங்கிருந்து வரப்போகிறது என்று தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்...

கலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

இந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர். இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி பள்ளிகளுக்கு கலந்தாய்வு எப்போது: அறிவிப்பை எதிர்பார்த்து ஆசிரியர்கள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு முடிந்த நிலையில், மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் விரைவில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு உட்பட்ட அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும், ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு முடிந்தது. மேலும் சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும் நேற்றுடன் முடிந்தது.

ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வ நேற்று நிறைவு.


ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகிறது.பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கியது. 

சுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணப் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும்.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்படுவது போல, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

செப்டம்பர் மாத நாட்காட்டி- 2015 உயர் நிலை ,மேல்நிலை,தொடக்க ,நடுநிலை பள்ளிகளுக்கான வேலைநாட்கள் பட்டியல் !

மீண்டும் வருகிறது TET வழக்கு !!!


உச்சகட்ட குழப்பத்தில் உயர் கல்வித்துறை: சட்டசபையில் நாளை விடிவு கிடைக்குமா?

தமிழக சட்டசபையில், உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், நாளை நடைபெற உள்ளது. அப்போது, உயர் கல்வித்துறை குளறுபடிகளை நீக்கும் அறிவிப்புகள் வரலாம் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இன்று நர்சிங்கலந்தாய்வு

சென்னை:இரண்டு ஆண்டு 'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என 27 இடங்களில் இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2100 இடங்கள் உள்ளன.

Saturday, August 29, 2015

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்!!!

FLASH NEWS : SG TEACHER VACUNT LIST THIRUVALLUVAR DIST MINJUR BLOSCK AND GUMMIDIPOONDI BLOCK

TNPTF news :
Sec. Gr  vacant palace  at minjur block in Thiruvallur dist
1.PUMS. MADIMAIKANDIGAI
2.PUMS. THATHAIMANJI (2)
3.PUMS. AAVOOR
4.PUMS. ARANGANKUPPAM
5.PUMS.KORAIKKUPPAM
6.PUMS. SENGAZHANEERMEDU
7.PUES. THANGALPERUMPULAM
8.PUES. PAKKAM
9.PUES. AGARAM
10.PUES. GOONANKUPPAM
11.PUES. SIRUPAZHAVERKADU (2)
12.PUES. KOLUR
13.PUMS.VELUR

பள்ளி மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கடன் அட்டை: நிதிஷ்குமார் அதிரடி திட்டம்

பள்ளி படிப்பை முடித்த அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய் பெரும் வகையில் கடன் அட்டை வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

நாட்டு முன்னேற்றத்திற்கு காரணமான பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்: யுஜிசி தலைவர்

இன்றய கல்வி, ஒரு தனிப்பட்ட மாணவனின் முன்னேற்றத்திற்கு மட்டும் அல்லாது, நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமான பாடதிட்டங்கள் அமைய வேண்டும் என்று புதுதில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் கூறினார்.

பி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்? விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்.11 கடைசிநாள்

இந்தக் கல்வியாண்டில் (2015-16) பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன. 

காலியிடங்களை தெரிவிக்காமல் கலந்தாய்வு:ஆசிரியர்கள் வாக்குவாதம்

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தொடக்கக்கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் காலியிடங்களை அறிவிக்காததால், ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நேற்று நடந்த கலந்தாய்வில் இவர்களில் 45 பேர் பங்கேற்றனர். முதலில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் முதல் 3 இடங்களை தேர்வு செய்தனர்.

'கல்விக்கடன் வட்டி தள்ளுபடி செய்யுங்களேன்!'

'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதித்துள்ள, கல்வி கடன் வட்டி தள்ளுபடியை அளிக்க, வங்கிகள் விரைந்து செயல்பட வேண்டும்' என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 'உயர்கல்வி பயில, 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் அளிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய வங்கிகள் சங்கத்தை வலியுறுத்தி உள்ளது.

கூடுதல் பணிகளுக்கு எதிர்ப்பு:தலைமை ஆசிரியர் போராட முடிவு

காரைக்குடி: 'அரசு நலத்திட்ட பணிகளுடன், கூடுதலாக, 'ஆதார்' அட்டை வழங்கும் பணிகளையும் கவனிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக அரசு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், 'லேப்-டாப்' உட்பட, 14 வகை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.

செப்., 5ல் கலாம் உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்துங்கள்:மாணவர்களுக்கு பொன்ராஜ் வேண்டுகோள்

சென்னை:'ஆசிரியர் தினமான, செப்., 5ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் லட்சிய உறுதியேற்பு நிகழ்ச்சியை, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்த வேண்டும்' என, கலாம் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் மந்தமான மாணவர்கள் உஷார்!

தேர்ச்சி விகிதம் குறித்து இலக்கு நிர்ணயித்துள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களை, 'பெயில்' ஆக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இலவச திட்டம்:

சிலபசில் இல்லாத புத்தகங்களை வாங்க நிர்ப்பந்திக்க கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

'பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்களை கூடுதல் விலைக்கு வாங்கி, மாணவர்களின் புத்தகச் சுமையை அதிகரிக்கக் கூடாது' என, பள்ளிகளுக்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
'புத்தகச் சுமையில்லாமல், மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த, பேராசிரியர் யஷ்பால் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

மாணவியர் விடுதிகளில் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் செயல்படும் மாணவியர் விடுதிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், பிளஸ் 2 வரை படித்த பெண்களே வார்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், தலா, 100 மாணவியர் தங்கியிருக்கும் விடுதியில், அதில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச அறிவியல் சுற்றுலா

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட விழிப்புணர்வை செய்முறை பயிற்சி வழியே ஏற்படுத்த, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பருக்குள் மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்க உத்தரவு

தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் - டாப்புக்கான செலவுத்தொகை, ஆண்டுக்கு, ஆண்டு எகிறி வரும் நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் டிசம்பர் மாதத்துக்குள், லேப் - டாப் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பயிலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள்,

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்!!!

நிரந்தர பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேவை : pay - 9300 - 34800 + 4600

இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக மாநிலங்களுக்கு ஏற்ப 20 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, பதில் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

6-12 Std காலான்டுத் தேர்வு Time table 2015,...

Friday, August 28, 2015

அதிர்ச்சியில் பொறுப்பு மேற்பார்வையாளர்கள்....6 வார காலத்திற்குள் பள்ளிக்கு இடம் மாற்ற கோர்ட் ஆணையா?

பொறுப்பு மேற்பார்வையாளர்களாக இருக்கும் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பள்ளி செல்லவே விருப்பம் இல்லையாம். அனைவரு்க்கும் கல்வி இயக்கத்தில் பதவி சுகம் கண்டுவிட்டதாலும், பள்ளிக்கு சென்றால் பாடங்கள் எடுக்க வேண்டும் என்ற காரணத்தாலும் பல பேர் இதனை வெறுக்கின்றனராம்.
1. பொறுப்பு மேற்பார்வையாளர்களுக்கு காம்போனன்ட் இல்லை.
2. பயிற்சிகளுக்கு செல்ல தேவையில்லை
3. பயிற்சிகள் கொடுக்கத்தேவையில்லை

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் - முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்

நன்றி - அனைத்து வளமைய பட்டதாரி சங்கம்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2 ஆண்டுக்கு பின் முடிவு

சென்னை : தோட்டக்கலைத் துறையில், 183 அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன; இதை நிரப்ப, இரு ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. ஆனால், தேர்வு முடிவு அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது;

மாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி

சென்னை : பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்.எட்., படிப்புக்கு அந்தந்த கல்லுாரிகளே மாணவர்களை சேர்த்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாணவியருக்கு புது 'நாப்கின்'


பள்ளி மாணவியர், வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 'நாப்கின்' வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வர, சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது.
வளர் இளம்பெண்கள் மற்றும் அரசு பள்ளி மாணவியருக்கு, இலவச 'நாப்கின்' வழங்கும் திட்டத்தை, 2012ல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. மாணவியருக்கு பள்ளி ஆசிரியை மூலமாகவும், வளர் இளம்பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட மையம், அங்கன்வாடி ஊழியர், கிராமங்களில் கிராம சுகாதார செவிலியர் மூலமாகவும் வழங்கப்படுகிறது. 

பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி ஆசிரியர் பணி யாருக்கு என்பதில் குளறுபடி

பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

காலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்


அரசுப் பள்ளிகளில், 14ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வை நடத்தி, 26ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, மாவட்ட தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2 ஆண்டுக்கு பின் முடிவு

தோட்டக்கலைத் துறையில், 183 அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன; இதை நிரப்ப, இரு ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. ஆனால், தேர்வு முடிவு அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது; இந்த தடையை சமீபத்தில், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகளை அறிவித்து,

சான்று கிடைக்குமா, இல்லையா? தவிக்கின்றனர் மாணவர்கள்

பெற்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆசிரியர் தம்பதி உடல் தானம்

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் படிப்பிற்கு உதவ, அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியர் உடல் தானம் செய்தனர்.சிவகங்கை காளையார்கோவில் அருகிலுள்ள மரக்காத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பெஞ்சமின்,45. இவரது மனைவி சகாயமேரி,39. இவரும், செவல் புஞ்சை அரசு பள்ளியில் ஆசிரியை. 

பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு

பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே மோதலாகும் சூழல் உருவானது. 

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு

வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார்கள் வந்தன.

இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கம், நேற்று(28-08-15) வெளியிட்டுள்ள அறிக்கை: 'கல்விக்கடனுக்கு, அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் உடனே அளிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உதவியால் இந்திய வருவாய்த்துறை பணிக்கு கூலித்தொழிலாளி மகன் தேர்வு தனது வெற்றியை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிப்பதாக உருக்கம்

பள்ளி படிப்பு முதல் என்ஜினீயரிங் படிப்பு வரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்த கல்வி உதவி தொகையால் கூலித்தொழிலாளி மகன் இந்திய வருவாய்த்துறை பணிக்கு தேர்வாகியுள்ளார். அவர் தனது வெற்றியை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிப்பதாக உருக்கத்துடன் கூறினார்.

2015 - BT TEACHER - DISTRICT TRANSFER ONLINE COUNSELLING SENIORITY LIST [ Tentative ] - REVISED

பள்ளிக்கல்வி : 21.06.2012 -ல் நியமனம் பெற்ற 192 கணினி பயிற்றுனர்களை முறைப்படுத்தி ஆணை.

ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது.

சமூகநலத்துறை - G.O MS : 53 - புரட்சித்தலைவர் M.G.R சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி திட்டம்(GPF) தொடங்க அரசானை வெளியீடு

TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? - பீனிக்ஸ் தமிழன்

மதிப்பிற்குறிய நண்பர்களே,

     அரசு பணிக்கு மட்டுமே செல்ல துடிக்கும் நண்பர்களே அரசு பணிக்கு செல்வதற்கு தகுந்த திட்டமிடல் இருந்தாலே போதுமானது வெற்றி என்பது உறுதி. TNPSC  கடந்த 3 ஆண்டுகளில் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது அதற்கேற்ற முறையில் நம்மை நாமே தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

Thursday, August 27, 2015

வேலூரில் செப்டம்பர் 3-இல் பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்டப் பிரிவின் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி வேலூரில் செப்டம்பர் 3-இல் நடைபெறுகிறது.

மாணவர்கள் இல்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பள்ளியில் தற்போது 16 மாணவர்கள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரை நூற்றாண்டை கடந்த அரசுப் பள்ளி 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவர்கூட இல்லாத நிலையில், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால், பல்வேறு தரப்பினர் முயற்சியால் தற்போது 3 ஆசிரியர்கள், 16 மாணவர்களுடன் செயல்படும் இந்த பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கட்டித் தரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

"பள்ளிகளில் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாக பராமரிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்'

பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும்  பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

சிவகாசி அருகே மாரனேரியில் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

 விருதுநகர் மாவட்டம் மாரனேரியைச் சேர்ந்த கோபிநாத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு வரும் 29, 30 தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராஜ், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2015 - 16-ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி,

ஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதி மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.
 கடந்த ஆண்டில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியன்று பள்ளி வகுப்புகள் முடிந்த பிறகு மோடி உரை நிகழ்த்தினார். இதனால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளானதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் மோடி உரை நிகழ்த்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

செவிலியர் பட்டயப் படிப்பு: 31-இல் கலந்தாய்வு

நிகழ் கல்வியாண்டு செவிலியர் பட்டயப் படிப்பில் 2000 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது என மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
 இதற்கான அறிவிப்பு சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணி

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 30
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Computer on Office Automation படிப்பில் தமிழக அரசின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

செப்டம்பர் 2ல் வேலைநிறுத்தம்ரேஷன் கடைகள் திறந்திருக்குமா?

அடுத்த மாதம், 2ம் தேதி நடைபெறும், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களும் பங்கேற்பதால், கடை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பல்வேறு சங்கங்களும் ஒன்றிணைந்து, பல கோரிக்கைகளை வலியுறுத்தி,வரும், 2ம் தேதி, அகில இந்திய அளவில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்தப் போராட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்களும் பங்கேற்கின்றனர்.

இடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி

பட்டதாரி ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது; ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளில், அதிகபட்சம், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில், ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகமாக உள்ள அல்லது ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.

இடஒதுக்கீடு குறித்து விவாதம்:மாணவர்களுக்கு அரசு உத்தரவு

அம்பேத்கரின், 125வது பிறந்த நாளை முன்னிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 'மாதிரி பார்லிமென்ட்' நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டு உள்ளது. அப்போது, கீழ்கண்ட தலைப்புகளில், மாணவர்கள் விவாதம் நடத்த வேண்டும் எனவும், அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
வழங்கப்பட்டுள்ள தலைப்புகள்:
பேச்சுரிமை முறையாக அமலாகி இருக்கிறதா?
பழங்குடியினரின் கலாசார மரபுகளை பாதுகாக்கவும், வாழ்க்கை முறையை உயர்த்தவும், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியா?
கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில், அனைத்து மக்களுக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா?

செப்., 3 முதல்பி.எட்., விண்ணப்பம்

'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லுாரி கல்வி இயக்ககம் நேற்று அறிவித்தது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில்,

690 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690
கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., - எம்.பி.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கல்லுாரிகளில் பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கடந்த மாதமே நடக்க வேண்டிய நிலையில், புதிய விதிமுறை பிரச்னைகளால் தள்ளிப் போனது.

SSA-உயர் தொடக்க நிலை அறிவியல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவில்"அறிவியல் கற்பித்தலில் படைப்பாற்றல் கல்விமுறை"என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள்!!!


வேலூர் மாவட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையதளவழியில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு:--- அட்டவணை மற்றும் நடைபெறும் இடம்


அன்பாசிரியர் - சித்ரா: அஞ்சல் அட்டை முதல் யூடியூப் வரை அசத்தும் ஆசிரியை!

"பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, பெரிய மாற்றத்தை விதைக்க ஆசைப்பட்டேன். அதனாலேயே ஆசிரியர் ஆனேன்!"- தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, அப்துல் கலாமின் பாராட்டு, மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய மன்ற, தேசத்தின் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள் பெற்ற சித்ரா என்னும் அரசுப் பள்ளி ஆசிரியரின் வார்த்தைகள் இவை.

இனி சித்ராவின் பயணம், அவரின் வார்த்தைகளிலேயே...
"1996-ம் ஆண்டு விக்கிரவாண்டி ஊராட்சியின் வாக்கூர்பகண்டை என்னும் ஊரின் தொடக்கப் பள்ளியில், என் ஆசிரிய வாழ்க்கை தொடங்கியது. அப்போது நான் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை. வழக்கமான அ, ஆ தானே என்றிருந்த எனக்கு, மாணவர்களே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள், அவர்கள் எழுதிய 'அ'வையும், 'ஆ'வையும், படிக்க கூடுதல் முயற்சி தேவைப்பட்டது.

ஆதிதிராவிட மாணவர்களுக்கான நலத் திட்டங்களை சட்ட சபையில் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில்,வலுவான பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவை அளிப்பதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வில் நிரந்தரமான மாறுதலை ஏற்படுத்த இயலும் என்பதால் எனது தலைமையிலான அரசு, அதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றை செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

நீங்களும் கல்விக் கடன் பெறலாம் !

உயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும்.
உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர் கல்வியை பயிலவும் கல்விக் கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்வு

ஸ்மார்ட் நகரங்கள் என்றால் அனைத்து விதமான கட்டமைப்பு- பொருளாதார, நிதி, சமுதாய மற்றும் உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டமாகும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான 98 நகரங்கள் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில்
��மதுரை
��கோவை
��சென்னை,
�� வேலூர்,
�� சேலம், 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை கல்வி மாவட்டத்திற்கு நாளை (28.08.2015) விடுமுறை - செயல்முறைகள்


POST CONTINUANCE ORDERS

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி தலைமையாசிரியராக பணிப்புரிந்த காலத்தினையும் கணக்கில்கொண்டு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் "தேர்வுநிலை" அனுமதித்து ஆணை - ஆலந்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

நன்றி : திரு. செல்வராஜூ

TRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு விரைவில் அறிவிப்பு....


Wednesday, August 26, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் ஜூலை மாதத்திற்கு உரிய அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 113 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 

அரசு ஊழியர்களுக்கு எட்டு மாதம் பிரசவ விடுமுறை - மத்திய அமைச்சர் கோரிக்கை

SSA- PART TIME INSTRUCTORS- DEPLOYMENT WITH IN DISTRICT - UPPER PRIMARY BASED ON TOTAL NO OF STUDENT IN (6-8)

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரவல் இடமாறுதலைக் கைவிட கோரிக்கை

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரவல் செய்து இடமாறுதல் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

அமைப்பு பொதுச்செயலர் (பொறுப்பு) கே.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கலை, ஓவியம், தையல், உடல்பயிற்சி, கணினி போன்ற பாடங்களை கற்பிக்க 16,549 பகுதிநேர பயிற்றுநர்களை 2012 ஆம் ஆண்டு அரசு நியமனம் செய்தது. அவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.7,000-ஐ அரசு வழங்கி வருகிறது.

தட்டெழுத்துத் தேர்வுகள் ஆக.,29-ம் தேதி தொடக்கம்

கணினி பயிற்றுனர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு கிடையாது -RTI Letter

பொது விடுமுறை - 2015ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு 28.08.2015 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு


அகஇ - 28 & 29 அன்று ஹைதராபாத் - இல் நடைபெறவுள்ள பணிமனையில் கலந்துக்கொள்ளும் மேற்ப்பார்வையாளர்களை விடுவித்து அனுப்ப திட்ட இயக்குனர் உத்தரவு - மேற்ப்பார்வையாளர் பட்டியல் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்

TRB:ஆசிரியர் தேர்வு வாரியம்-RTI Letter


தொழிற்கல்வி ஆசிரியர்கள் 3ஆம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு


தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, 3-ஆம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் மாநில பொதுச் செயலர் செ.நா.ஜனார்த்தனன் தெரிவித்தார்.

7வது ஊதியக்குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்க காலக்கெடு டிசம்பர் 31 வரை நீடிப்பு


48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.

ஒரே இடத்துக்கு 2 பேர் நியமனம் நீலகிரியில் இடியாப்ப சிக்கல்

நீலகிரி மாவட்டத்தில், ஒரே இடத்துக்கு, இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், யாருக்கு பணி ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகள், நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தன.

மாணவர்களுக்கு மழைக்கால எச்சரிக்கை:பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

திருப்பூர்:மழைக்கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவ - மாணவியருக்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறு இருந்தால், உடனடியாக மூட வேண்டும். நீர்த்தேக்க தொட்டி, கழிவுநீர் தொட்டி மூடிய நிலையில் உள்ளதா என்பதை, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, மழை பெய்யும் நேரங்களில் மரங்கள் மற்றும் பழுதடைந்த வீடுகள், கட்டடங்கள் அருகே நிற்கக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.மழை பெய்த நாட்களில், பழுதடைந்த மின்கம்பங்கள் அருகில் செல்லக்கூடாது;

பள்ளி மாணவர்களுக்கான பாரம்பரிய கலை போட்டிகள்

ராமநாதபுரம்:பாரம்பரிய கலைகளை அறியும் வகையில், பள்ளி மாணவர்கள் இடையே, 'கலை போட்டிகள்' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடையாளமாக, பாரம்பரிய கலைகள் உண்டு. கிராமப்புற விழாக்களில் மட்டும் நடந்து வரும் இக்கலைகளை, இளைய தலைமுறையினர் அறியும் வகையில், பள்ளி மாணவர்கள் இடையே இசை, நடனம், நுண்கலை, நாடகம் ஆகியவற்றை பாரம்பரிய கலை போட்டிகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெற்றோர் 'ஆதார்' மூலம் குழந்தைகளுக்கும் பதிவு!

பெற்றோர் ஆதார் அட்டை நகல் மூலம், மாணவர்களுக்கு, ஆதார் அட்டை முகாம் நடத்த, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளி கல்வித்துறை யில், 14க்கும் மேற்பட்ட இலவசத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் மோசடி நடக்காமல் தடுக்க, மாணவ, மாணவியரின் ஆதார் எண்களைப் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.மாணவர்களிடம் ஆதார் எண் சேகரித்ததில், 70 லட்சம் பேருக்கு ஆதார் எண் இல்லை என்பது தெரிய வந்தது.

திறனறி தேர்வுக்கு கடைசி தேதி அறிவிப்பு


கிராமப்புற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு, செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.கிராமப்புற மாணவ, மாணவியரில், நன்றாக படிப்பவர்கள், எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.

அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 86 லட்சம்.

தமிழகத்தில், வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து, அரசு வேலை வாய்ப்புக்காக, 86 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக மனுக்கள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தில், அரசு வேலைக்கென தனி மவுசு இருந்து வருகிறது. படித்து, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய வசதியாக, மாநிலம் முழுவதும், 37 வேலை வாய்ப்பு பதிவு மையங்கள் உள்ளன. இங்கு பதிவு செய்வோர், பதிவு மூப்பு அடிப்படையில், வேலை வாய்ப்புக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

பள்ளிக்கல்வி - பணி நிரவல் செய்வதற்கான புதிய விண்ணப்ப படிவம்


பள்ளிக்கல்வி - 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "எரிசக்தி சேமிப்பு" ஓவியப் போட்டி - முதல் பரிசு ரூ.20000/- வழிகாட்டுதல்கள் - இயக்குனர் செயல்முறைகள்

Tuesday, August 25, 2015

SG Teacher Dindigul district, Guziliamparai union Vacunt List 2015- 2016.

Dindigul district, Guziliamparai union sec.gr teachers vacant list. 
1)Karikkali, 
2)Palayam, 
3)K.Chinnathambipatti,
4)D.Gudalur, 
5)T.Chettiur, 
6) Jegalammanpatti, 
7)L.Chettiur, 

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் வியாழக்கிழமை (ஆக.27) முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் சுகாதாரக் குழு அமைக்கப்படுமா?

மாணவர்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலும், தனி மனித ஒழுக்கம் வளரும் விதத்திலும், அரசுப் பள்ளிகளில் சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 நகரப் பகுதியில் நிலவும் மோசமான சுகாதாரக்கேடு காரணமாக சிறியவர்கள், முதியவர்கள் அதிகளவில் பாதிப்படைகின்றனர். ஆறு முதல் 14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பிள்ளைகளின் சுகாதாரமான பழக்க வழக்கங்கள் குறித்து கவனிக்க பெற்றோர்களுக்கு நேரமும், விழிப்புணர்வும் இருப்பதில்லை.

மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு

அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது. 

பள்ளிகளில்...:

தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழில் மாணவர்களை வாசிக்க வைத்தால், தனித்தனியே பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.இதன்படி, தொடக்கப் பள்ளிகளில், 4, 5ம் வகுப்பு; நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள்,

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு

கல்வித்துறையில், 3,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் என்ற பெயரில், இன்று பணிமாறுதல் வழங்கப்பட உள்ளது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்கள் கடுமையாக பாதிப்பட வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.பள்ளிக் கல்வித்துறையில், தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணி மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இன்று முதல், 28ம் தேதி வரை, 6 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், 3,000 பேருக்கு பணி நிரவல் என்ற பெயரில், பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது.

பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் :இன்று முதல் கொண்டாட உத்தரவு

அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், இன்று முதல் செப்., 1ம் தேதி வரை, சமஸ்கிருத வாரம் கொண்டாட, மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டு உள்ளது.இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, நேற்று அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 துணை தேர்வு சான்றிதழ் வினியோகம்

சென்னை:பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுதி யவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் செப்., 4ம் தேதி வரை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இச்சான்றிதழ், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். அதன்பின், தேர்வுத்துறை மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

வி.ஏ.ஓ., பதவிக்கு செப். 2 கலந்தாய்வு

சென்னை:'வி.ஏ.ஓ., பதவியில், 660 காலியிடங்களை நிரப்ப வரும், 2ம் தேதி துவங்கும் கலந்தாய்வு, 11ம் தேதி வரை நடக்கும்' என, -டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பு: முதல் கட்ட கலந்தாய்வில் அறிவிக்கப்பட்ட, 2,342 காலிஇடங்களில்,

பள்ளி அருகே டாஸ்மாக் கடையா : வழக்கறிஞர் கமிஷனர் நியமனம்



மதுரை:விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாரனேரியில் அரசுப் பள்ளி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிய வழக்கில், 'வழக்கறிஞர் கமிஷனர் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மாரனேரி கோபிநாத் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், பெண்கள் சுகாதார வளாகம் உள்ளது.

SSA 100% வாசிப்புத் திறனுக்கு ஊக்கத் தொகை அறிவிப்பு

பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் வெளியிட மாணவர்கள் படைப்புகளை வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் மாணவர்கள் படைப்புகள் வெளியிட மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு

பள்ளிக்கல்வி - 01/08/2015 நிலவரப்படி உபரிப்பணி இடங்களை பணி நிரவல் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

SG Teachers Vacunt List Ponnagaram Block

பென்னாகரம் ஒன்றியம் மொத்த காலிபணியிடங்கள்=84 பணியிடங்கள். அதில் மற்ற மாவட்ட ஆசிரியர்களுக்காக இடம் மற்றும் தொலைவு,பஸ் வசதி அல்லது ஆட்டோ வசதி,சரியான தொலைவு,பஸ் வசதி இல்லாத இடங்கள் என அனைத்தும் இதில் தெளிவாக கூறுகிறேன்.bus standல் இருந்து,
1.கள்ளிபுரம் 1.5km
2. கடைமடை 10 km bus,auto உண்டு
3.பட்டகாரன்கொட்டாய் 18km bus ஏரியூர் மிக அருகில்
4.கூக்குட்டமருதள்ளி(முதுகம்பட்டி என்று கேட்டால் அனைவருக்கு தெரியும்)10 km bus,auto

Monday, August 24, 2015

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான "கல்வி உதவித்தொகை "விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - செயல்முறைகள்

SABL - குறித்து RTI - 2005 இல் பெறப்பட்ட தகவல்

100% தேர்ச்சிக்காக மாணவர்களை பள்ளிகள் கட்டாய தோல்வி அடையச் செய்கின்றனவா? அரசு பதிலளிக்க உத்தரவு

பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்காக ஒன்பதாம் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவர்களை கட்டாயமாக தோல்வியடையச் செய்வதாகக் கூறப்படும் புகார் குறித்து அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 இதுதொடர்பாக மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள ஏ.தொட்டியபட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் தாக்கல் செய்த மனு விவரம்: 

பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்: மே மாதத்துக்கு தள்ளிவைக்க கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலை மே மாதத்துக்கு தள்ளிவைக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணியிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. அந்த மனு விவரம்:-

மாவட்டக் கல்வி அலுவலர் பதவி; நிரப்பப்படாத 75 பணியிடங்கள்: தலைமை ஆசிரியர்கள் புகார்

மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான 75 காலிப் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமலேயே உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
 நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் அளவில் 125 பணியிடங்களில் 65 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளை கட்டுப்படுத்த எத்தனை இயக்குனரகம்?

'தமிழகத்தில், சமச்சீர் கல்விச் சட்டம் அமலுக்கு வந்தாலும், ஐந்துக்கும் மேற்பட்ட இயக்குனரகங்களால், பள்ளிகள் ஒழுங்கின்றி செயல்படுகின்றன. எனவே, ஒரே இயக்குனரகம் கொண்டு வர வேண்டும்' என, தனியார் பள்ளி அதிபர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பள்ளி ஆசிரியருக்கு தகவல் தொழில்நுட்ப விருது


மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருதுக்கு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அன்பழகன், தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், அடுத்த மாதம், 5ம் தேதி, ஜனாதிபதியிடம் விருது பெறுகிறார்.

தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வு யாருமே விரும்பாத அரசுப்பள்ளிகள்


ராமநாதபுரம்:தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்ய, யாரும் முன்வரவில்லை.ஆசிரியர்களுக்கு மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வேதாளை, ரெட்டையூரணி, புதுமடம், பெரியபட்டினம், எஸ்.பி.பட்டினம், சனவேலி, திருவாடானை, தொண்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், மங்களக்குடி,

முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு


திண்டுக்கல்:முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

பள்ளிகளில் ஆய்வுக்குழு அரசுக்கு 'நோட்டீஸ்'


மதுரை:பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தோல்வியடையச் செய்வது குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்ய, சிறப்புக்குழு அமைக்கக் கோரி தாக்கலான வழக்கில், அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. 
மதுரை அருகே, பேரையூர் தொட்டியபட்டி பாண்டியம்மாள் தாக்கல் செய்த மனு:

இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் ஏ.ஐ.சி.டி.இ., புது முடிவு

இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான - ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. பொறியியல் மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளை நடத்தும், நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லுாரிகளும், ஏ.ஐ.சி.டி.இ.,யில், அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் இல்லாத கல்லுாரிகள், மாணவர்களை சேர்க்க முடியாது. 

டிப்ளமோ நர்சிங் படிப்பு 31 முதல் கலந்தாய்வு

சென்னை:'டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு, வரும், 31ம் தேதி துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. இதற்கு, 9,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு,

குரூப் - 2 தேர்வில் முதல் 10 இடங்களில் பி.இ., பட்டதாரிகள் வணிகவரித்துறை துணை ஆணையர் பதவி ஒதுக்கீடு


சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் -- 2 தேர்வில், நான்கு லட்சம் பேர் பங்கேற்றதில், முதல், 10 இடங்களில், பி.இ., பட்டதாரிகள் பிடித்துள்ளனர்.முதன்மை தேர்வுகுரூப் - 2வில் இடம்பெறும் வணிகவரித் துறை துணை ஆணையர், சார் - பதிவாளர் உள்ளிட்ட, 19 பதவிகளில், 1,130 காலியிடங்களுக்கான முதல்நிலை போட்டித்தேர்வு,

குடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !


1 ,குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf  என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.
 
2, விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்பு ஆவணங்கடன் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் (மண்டல) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் பகுதி எந்த உதவி ஆணையாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்தால் தொலைபேசி மூலம் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி பங்கீட்டு அலுவலர்*, (கோயம்புத்தூர் நகரம் மட்டும்) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வார்கள்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருந்தபோதிலும் விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்துக் கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லது.

7979 POSTS -AZ CONTINUATION ORDER FOR AUGUST-2015

LIST OF HOLIDAYS 2015-16 - DEEO VELLORE


பள்ளிக்கல்வி - பள்ளிகள் பின்பற்ற வேண்டிய மழைகால முன் எச்சரிக்கை நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்

Online Income Tax Paying Method e - ITR Form Filling Tutorial

Tamil step by step tutorial with pictures.


  1. Go to the Income tax website and get the User ID and Password.
  2. The Already registered persons may Log in.
  3. Those who did not register already must register by click the Register Yourself Link.
  4. Click the Individual link on the next page.

பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல்/விருப்ப மாறுதல் கோரும் புதிய விண்ணப்ப படிவம்

கல்வித்துறையின் நடவடிக்கை:தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவால், தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமீபகாலமாக பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பது அதிகரித்துள்ளது.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!