TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Saturday, October 31, 2015

அரசு பள்ளிகளில் போலி வருகை பதிவேடு

ஜவ்வாதுமலையில் உள்ள அரசு பள்ளிகளில், போலி வருகைப்பதிவேடுகளை பராமரித்து வந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர். திடீர் ஆய்வுதி.மலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை, கல்வியில் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இங்குள்ள மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக, அரசு தொடக்கப் பள்ளிகள், 60, மற்றும் ஆதிதிராவிட நலத்துறை சார்பில், 24 உறைவிட நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 

'இன்ஸ்பையர்' விருது போட்டி அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் புகார்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், 'இன்ஸ்பையர்' விருது; ஜவஹர்லால் நேரு தேசிய விருது ஆகியவற்றுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக, இயக்குனர் அலுவலகம் மூலம், சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. 

தேர்வா - தேர்தலா என்பதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நெருக்கடி

தேர்தல் வருவதால், பாடங்களை விரைவில் முடிக்குமாறு, பள்ளி கல்வித் துறையும்; தேர்வு வருவதால், விரிவாக பாடங்களை நடத்துமாறு, தேர்வுத் துறையும் உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும்2,243 செவிலியர்களுக்கு பாதிப்பு நியமன உத்தரவுக்கு ஏக்கம்

திண்டுக்கல்:தமிழகத்தில் 2 ஆயிரத்து 243 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின்னும், நியமனம் உத்தரவு வராததால் தேர்வு எழுதிய செவிலியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.
தமிழகத்தில் தனியார் செவிலியர் பள்ளியில் டிப்ளமோ நர்சிங் 3 ஆண்டுகள் படித்தவர்களுக்கு, அரசு பணியில் கடந்த 30 ஆண்டுகளாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

'பிளாஸ்டிக்' தேசிய கொடி பள்ளிகளுக்கு அரசு தடை

பள்ளி, கல்லுாரிகளில், 'பிளாஸ்டிக்' தேசியக் கொடியை பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.பள்ளி, கல்லுாரி விழாக்களில், பலவிதமான தேசியக் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன; விழா முடிந்ததும் வெளியே வீசப்படுகின்றன. இவற்றில், பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி மக்கிப் போகாமல்,

பி.எட்., கல்லூரிகளில் போலி முதல்வர்கள்?ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிர்ச்சி

தமிழகத்தில் செயல்படும், பல பி.எட்., கல்லுாரிகளில் முதல்வர்களே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 பி.எட்., கல்லுாரிகளும், 600 சுயநிதி கல்லுாரிகளும் செயல்படுகின்றன.

அறிவியல் கண்காட்சி போட்டி அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் புகார்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், 'இன்ஸ்பையர்' விருது; ஜவஹர்லால் நேரு தேசிய விருது ஆகியவற்றுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.இதுதொடர்பாக, இயக்குனர் அலுவலகம் மூலம், சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.

சிறப்பு பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை பரிதாப நிலையில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தரம்

சேலம்: மாற்றுத்திறனாளிகளுக்கான, 23 சிறப்புப்பள்ளிகளில், 16 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை. அதனால், அவர்களது, கல்வித்தரம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கென, 23 அரசு சிறப்பு பள்ளிகள் உள்ளன. இவற்றில், பார்வையற்றோருக்கான பள்ளி 10, காதுகேளாதோருக்கான பள்ளி 11, கை, கால் ஊனமுற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோருக்கு தலா, ஒரு பள்ளி அமைந்துள்ளன. 

ஆன்லைனில்' காப்பியடித்து இனி பிஎச்.டி., வாங்க முடியாது

ஆன்லைனில்' காப்பியடித்து, பல்கலைகளில், பிஎச்.டி., பெறும் முறைக்கு முற்றுப்புள்ளி வருகிறது. சென்னை பல்கலையில், இதற்கான புதிய சாப்ட்வேர், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும், மின்னணு ஆளுமையை பலப்படுத்த, மத்திய, மாநில அரசுத் துறைகள் முயற்சிக்கின்றன. உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வியிலும், மின்னணு ஆளுமை மற்றும் கணினி வழி பயிற்சியை கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டு உள்ளது.

6,500 பணிகளுக்கு இன்று தேர்வு

சென்னை: மத்திய அரசில், தபால் பிரிவு உதவியாளர், தகவல் பதிவாளர் (டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்) மற்றும் கீழ்நிலை கோட்ட எழுத்தர் ஆகிய பதவிகளுக்கு, 6,578 இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களை நிரப்ப, பிளஸ் 2 பாட அளவில் போட்டித் தேர்வு நவ., 1, 15 மற்றும், 22 ஆகிய தேதிகளில்,

ஜாக்டோ கூட்ட முடிவுகள்

1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள்அனவரும் கல்விச்செயலர்,நிதி,கல்வி அமைச்சர், ஆகியோரைசந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்
2-டிசம்பர் 5-6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல் ஆயத்த மாநாடு

3,டிசம்பர்,12-13 ஆகிய நாட்களில் வட்டார அளவில் போராட்ட ஆயத்த மாநாடு

வேலை வாய்ப்பு - தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறை - 859 காலியிடங்கள்


Friday, October 30, 2015

பள்ளிக்கல்வி - அனைத்து வகை பள்ளிகளிலும் காலை வழிபாட்டில் மழைவேண்டி பிரார்த்தனை செய்யவேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்


பள்ளிக்கல்வி - அக்.31 சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் - தேசிய ஒருமைப்பாட்டு தினம் - உறுதிமொழி எடுக்க இயக்குனர் உத்தரவு - உறுதிமொழி இணைப்பு

ஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய மாநில திட்ட இயக்குனரை கண்டித்து தலைமை ஆசிரியர்கள் வெளிநடப்பு

செய்யாறு: செய்யாறு தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் குறித்து புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு வந்தார். கூட்டம் மாலை வரை நடைபெற்றது.

November Month Diary...

 November Diary 
  • 7th Grievenc.e day
  • RL Days -
  • 02.11.15 Kallarai thirunal.
  • 11.11.15 Diwali nombu
  • 25.11.15 Thirukarthigai
  • Holidays 10.11.15 Diwali
  • CRC days
  • 07.11.15 Primary CRC
  • 14.11.15 Upper Primary CRC
  • New Appointment Teachers- dist level 5 days training 02.11.15- 06.11.15
  • VITAL training for upper Primary Teachers 05.11.15 & 06.11.15.

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in,​​ www.cbse.nic.in​ ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மழலையர் பள்ளிகளுக்கு புதிய விதிமுறை வெளியிட உத்தரவு

:தமிழகத்தில், அனுமதியின்றி, 700 மழலையர் பள்ளிகள் இயங்குவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர், மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 

366 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 366 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். இதற்கான இணைய வழி (ஆன்-லைன்) கலந்தாய்வு மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் 'ஓகே!'

'மூன்று ஆண்டு சட்டப் படிப்பு ரத்து; பார் கவுன்சில் பொறுப்பை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி

அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது.

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு நவ., 2ல் வெளியீடு

சென்னை:தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், நவ., 2ல் வெளியாகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பரில் நடந்த தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்,

1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்

தமிழக தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்தில், மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகள், மாநில தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டன.

1590 PG, 6872 BT POST OCTOBER MONTH PAY ORDER

Thursday, October 29, 2015

குரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
 இதுகுறித்து தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடக்கிறது.

தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை!!

பொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீதாலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட கல்வி ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில், ஆசிரியர்கள் கூட்டம் நடத்தது.

கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை

தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது. 
தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொரு அலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.

அண்ணா பல்கலை இணையதளம் முடக்கம்


தமிழக இன்ஜினியரிங் மாணவர்களின் கனவு பல்கலையான, அண்ணா பல்கலையின் இணையதளம், ஈரான் நாட்டினரால், 'ஹேக்கிங்' செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ இன்ஜி., படிக்கும் மாணவர்கள், அண்ணா பல்கலையின் கல்லுாரிகளில், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்பதையே அதிகம் விரும்புவர். குறிப்பாக, அண்ணா பல்கலையில், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, ஆர்கிடெக் கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் சேரவே விரும்புவர்.

'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு

சென்னை:'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

ஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது

சென்னை: முறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடந்துள்ளது. இந்நிலையில்,

வாக்காளர் சரிபார்ப்பு பணி'மொபைல் ஆப்ஸ்' அறிமுகம்

சென்னை:வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை:சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.

16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளிகவனிப்பாரா கல்வி செயலர்

மதுரை:தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.

வணிகவியல் தேர்வு அறிவிப்பு

சென்னை, :அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், வணிகவியல் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு, 2016 பிப்ரவரியில் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற வணிகவியல் டைப் ரைட்டிங் மையங்களில் படிப்போர்,

ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்!'

பள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது. மதுரை மாவட்டத்தில், ஆசிரியைகளுக்கு, 'ஓவர் கோட்' என்ற மேலங்கி அணியும் முறை, ஒரு பள்ளியில் மட்டும், ஒரு மாதத்திற்கு முன் அறிமுகமானது.

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை

சென்னை :'தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது.

TNPSC :GROUP I HALL - TICKET PUBLISHED

BT TO PG PHYSICS ADDITIONAL PROMOTION PANEL RELEASED BY DSE TO FILL 41 P0STS RELINQUISHED ON 16.10.2015

கல்விக்கடன் பெற அரசு புதிய இணையதளம்.

அண்மையில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை ஒட்டி, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

900 PG POST PAY ORDERS

பள்ளிக்கல்வி - தமிழ் மொழியை எளிதாக கற்பிக்க "குறைந்தபட்ச கற்றல் கையேடு" - இயக்குனர் செயல்முறைகள்

1591 PG POST PAY ORDERS

அரசு ஊழியர் / ஆசிரியர்களிடமிருந்து மாதந்தோறும் (அ) பிப்ரவரி - 2015 - ல் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரிக்கு TDS - (24Q) தாக்கல் செய்வதன் மூலம் அவரவர் PAN கார்டில் வரவு வைக்கப்பட்டு F.Y 2014 - 15 க்கு FORM - 16 கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

அரசு ஊழியர் / ஆசிரியர்கள் உங்கள் சமபளத்தில் உங்கள் DRAWING OFFICER மூலம் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி  உங்கள் PAN கார்டில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை எங்களிடம் வந்து இலவசமாக உறுதிபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசுத் தேர்வுகள் இயக்கம் - பொதுத்தேர்வெழுதும் மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்துதல்


அரசுத்தேர்வுகள் இயக்ககம்- மேல்நிலை /இடைநிலைத் தேர்வெழுதும் மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்துதல் - பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வழங்குதல் சார்பு .



வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்- புதிதாக அரசுப்பள்ளிகளில் பணி நியமணம்.பெற்ற தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் பயிற்சி வழங்குதல்...தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 02.11.2015 to 06.11.2015 உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 16.11.2015 to 20.11.2015 வரை பயிற்சி நடைபெற உள்ளது.


மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதிக் கணக்குகளை அரசு தகவல் மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்திட அரசு உத்தரவு

மனிதர்களுக்கு ஓரறிவே!

மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு இருப்பதாக இதுவரை நமக்கு சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை கருதப்பட்டது போல மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு கிடையாது, அவர்களுக்கு இருப்பது ஓரறிவே என டான் காட்ஸ் என்ற நரம்பியல் விஞ்ஞானி தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் அவர், சுவை அறிவுக்கும், நுகரும் அறிவுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

பழைய ஓய்வூதியம்: ஆசிரியர்கள் தீர்மானம்

பழைய ஓய்வூதியம் முறையை அமல்படுத்த, அனைத்து இந்திய ஆசிரியர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது.மதுரையில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பாலமுருகபாண்டியன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் குமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் ஜார்ஜ் பேசினார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைதல், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VI th TERM 2 ENGLISH GRAMMAR & HARD WORDS STUDY MATERIALS

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முகாமிட்டு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்கள்

கடந்த சில வருடங்களாக எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது. 

Wednesday, October 28, 2015

படித்ததில் பிடித்தது ...புரளி...பேசாதே!

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!

25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு 10 நாளில் நிலுவைத் தொகை: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் உறுதி

தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ் ஏழை மாணவர்களைச் சேர்த்த தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 10 நாளில் கல்விக் கட்டணத் தொகை வழங்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உறுதி அளித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

'காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அரசு ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும், ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இறுதியாக, அக்., 8 ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அரசு தரப்பில் போதிய நடவடிக்கைகள் இல்லாததால், காலவரையற்ற போராட்டத்தில்

‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி’ : மு.க.ஸ்டாலின்

‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி’

சங்கராபுரத்தில் பட்டதாரி ரேணுகாதேவி பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். 2006ல் நிரந்தரம் செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சி வந்ததும் பணி நீக்கம் செய்து விட்டது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. பல ஆசிரியர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், என்றார்.

"அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு வாரம்'

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அக்.26 முதல் 31ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக கடைப்பிடிக்க ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

"நெட்' தேர்ச்சி பெறாவிட்டால் உதவித் தொகை ரத்து: ஆய்வு செய்ய குழு அமைப்பு

தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
 இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெற "நெட்' தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) சார்பில் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
 மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டது.

குறைந்தது எம்.எட். சேர்க்கை: தேதியை நீட்டிக்கும் கல்லூரிகள்

முதுநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் (எம்.எட்.) சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.
 தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் நிகழாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
 இதுவரை ஓராண்டாக இருந்த படிப்பு தற்போது இரண்டு ஆண்டுகளாக உயர்ந்ததால் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு குறைந்தது.

வினா வங்கி புத்தகம் விற்பனை தாமதம்

சென்னை:பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் வரவுள்ளதால், வினா வங்கி விற்பனை தாமதமாகியுள்ளது.பள்ளி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நடப்பாண்டு பாடத்துடன், முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் தனித்தேர்வு வினாத்தாள்களுக்கான

இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் SGT to BT promotion கொடுப்பதற்கு முன் BRTE to BT CONVERSION நடத்த கோரி தடை உத்தரவு பெற தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்ககு வந்தது.இதில் அரசு தரப்பில் 4 வாரத்திற்குள் 500 BRTE to BT conversion நடத்த அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


SG TO BT பதவி உயர்வு கலந்தாய்வு 30/10/2015 அன்று நடைபெறும் - காலி பணியிட விவரங்கள் வெளியீடு - இயக்குநர் செயல்முறைகள்

30/10/2015 அன்று நடைபெறும் SG TO BT பதவி உயர்வு கலந்தாய்வு - விடுபட்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் பெயர் சேர்த்து திருத்திய PROMOTION PANEL வெளியீடு

உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை விடுத்து மனு செய்தன. சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது.

சபாஷ் தலைமை ஆசிரியை !!!! தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி!

ரசுப் பள்ளியில் அடிப் படை வசதிகள் மற்றும் ஆசிரியர் கவனிப்பு குறைவாக இருக்கும்’ என்ற பொதுக்கருத்தை மாற்றிக் காட்டியிருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி! காரணம், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி. தன் சக ஆசிரியர்களுடன் கைகோத்தும், பல தரப்பிடம் இருந்து உதவித்தொகை பெற்றும் நூலகம், கலையரங்கம், கணினி ஆய்வகம், சிசிடிவி கேமராக்கள் என இந்த மாற்றத்தை இங்கு மலர்த்தியிருக்கிறார்!


ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்

  • இணைய தள முகவரிக்கு செல்லவும்.

  • உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்,
  • தேடலை சொடுக்கவும்.
  • உங்கள் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி எண் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.

தொடக்ககல்வி - மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - இயக்குநர் செயல்முறைகள்


G.O Ms : 169 - மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்க்காயயருக்கு மாற்றம் - - அரசாணை வெளியீடு

TET - ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் - விதிகளை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tuesday, October 27, 2015

அரசாணை தெரிந்து கொள்வோமா - ஈடு செய் விடுப்பு - G.O MS No 2218.Misc.dt . 14.12.81


பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28) வெளியிடப்படுகிறது. இதை தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 கடந்த மாதம் 29 முதல் அக்டோபர் 6 வரையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. 

அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்
 டுள்ளது.
 இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் தகவல்

2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா திங்கள்கிழமை மண்ணாடிப்பட்டு திரௌபதி அம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. பேரவை துணைத் தலைவர் டிபிஆர்.செல்வம் தலைமை தாங்கினார்.

சிறப்பு ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் பட்டத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் சிறப்பு பட்டயம் பயின்றவர்கள் தங்களது சான்றிதழ் சரிபார்ப்பை புதன்கிழமை (அக்.28) செய்துகொள்ள வேண்டும்.

குரூப்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 2-இல் (குரூப் 2) உள்ளடங்கிய பதவிகளை நிரப்பிட வேண்டி, தகுதியுடைய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பகுதி நேர ஆசிரியர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களின் தனிபிரிவில் அளித்துள்ள கோரிக்கை மனு


10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்

சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வினாத்தாள்கள் கடினமாக இருக்கும்படி அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

தொழிற்கல்வி பாடம்31ல் உண்ணாவிரதம்

சென்னை:தொழிற்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு தலைவர் ஜனார்த்தனன் கூறியதாவது:தொழிற்கல்வி ஆசிரியர் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம்;

கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள்தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தல்

சிவகங்கை: ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பிறபணி விடுப்பு இன்றி, தற்செயல் விடுப்பு தான் வழங்க முடியும் என தலைமை ஆசிரியர்கள் கூறுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி பட்டதாரி, முதுநிலை பட்டதாரி , இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்திற்குள் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கும். 

வாக்காளர் பெயர் சேர்ப்பு பணி எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல்

சென்னை,: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வு பயிற்சி

சென்னை :'நெட்' தேர்வு எழுத, சென்னை பல்கலை சார்பில், சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.கல்லுாரி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி., உதவித்தொகை பெற, நெட் தேர்வில், முதுகலை பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும்; டிசம்பரில், இந்த தேர்வு நடக்கவுள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'

சென்னை:மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது.
இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு,

கணினி தகுதித்தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு

சென்னை:'தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தும், கணினி தகுதித்தேர்வுக்கு, நவ., 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசுத் துறையில், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர, கணினி இயக்கவும் தகுதி பெற வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிக்கான தேர்வில், உரிய விதிப்படி தேர்ச்சி பெற்றாலும், கணினி தகுதி சான்றிதழ் படிப்பிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

சம்பளத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம்போராட கருவூல துறையினர் தயார்


ராமநாதபுரம் :ஊதியத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம் செய்வதை கண்டித்து, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
சென்னையில் அக்., 1 ல் கருவூலத்துறை இயக்குனர் ஆய்வு கூட்டத்தில் மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் மூர்த்தி இறந்தார். இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவூல இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். மனஉளைச்சலால் இறந்த மாவட்ட கருவூல அலுவலர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் அக்., 6 ல் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.

STATE LEVEL ACHIEVEMENT SURVEY REPORT 2014-2015 ALL DISTRICTS...

சாதனை ஆசிரியர்களுக்கு சல்யூட்!புத்தகம் வெளியிட்டு கவுரவிக்க கல்வித்துறை திட்டம்...


பள்ளிக்கல்வி - அமைசுப்பணி - இளநிலை உதவியாளர்/தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு - தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி இயக்குனர் செயல்முறைகள்

CPS-Assets under Management (AUM) of National Pension System (NPS) crosses Rs. 1 lac crore-PFRDA

தற்காலிக பணியாளர்கள், தகுதிகாண் பருவத்தினர், தகுதிகாண் பருவம் முடித்தவர் ஈட்டிய விடுப்பு இருப்பு வைத்தலுக்கான விதிகள்...

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக, ஆசிரியர் விவரம் கோரும் படிவம்

Monday, October 26, 2015

அதேஇ - பொதுத் தேர்வு எழுதும் 10, 12 வகுப்பு மாணவர்களை உளவியல் ரீதியாக தயார் செய்தல் - அறிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பொது மாறுதல் கணினி பயிற்றுநர் / தொழிற்கல்வி வேளாண்மை பயிற்றுநர் - மாறுதல் விண்ணப்பங்கள் - பரிசீலினை செய்யப்பட்ட விவரம் - சார்பு

1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர்.
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன.

பள்ளிப் பாடத்துடன் மாணவர்களுக்கு நற்பண்புகள் கற்பிக்கும் பயிற்சி: ஆசிரியர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது

பள்ளிப் பாடத்துடன் மாணவர்களுக்கு நற்பண்புகள் கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (அக்.27) தொடங்குகிறது.
 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் 6,7,8-ஆம் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின்  இணையதள முகவரியில் வேலைவாய்ப்பு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற வசதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வி - மாணவர்களுக்கு மழைகால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை - இயக்குனர் செயல்முறைகள்


பிஎச்.டி., அட்மிஷன்ஐ.ஐ.ஐ.டி., அறிவிப்பு

சென்னை:மத்திய உயர்கல்வி நிறுவனமான, இந்திய தகவல் தொழில்நுட்ப மையம் - ஐ.ஐ.ஐ.டி., காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் உள்ளது. 
இங்கு, இளங்கலை மற்றும் முதுகலையில், பி.இ., - பி.டெக்., படிப்புகள், பல்வேறு பாடப்பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஜனவரி யில் துவங்கும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நேரடி பணி நியமனத்தில் குளறுபடி

ராமநாதபுரம்:அரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வரையறைக்கு உட்பட்டதை தவிர மற்ற பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன.

கலந்தாய்வில் காலியிடங்கள் மறைப்பு பட்டதாரி ஆசிரியர்கள் புகார்

சிவகங்கை:சிவகங்கையில் நடந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில், காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

எஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்

மத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது.ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து,

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் 26/10/2015 முதல் 31/10/2015 வரை "விழிப்புணர்வு வாரம்" (VIGILANCE AWARENESS WEEK)கொண்டாட இயக்குநர் உத்தரவு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை பணி விதிகள்...SELECTION GRADE RULES...


தமிழ்நாட்டில் 5 இடங்களுக்கு ‘அறிவியல் எக்ஸ்பிரஸ்’வருகிறது

அறிவியல் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பானவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இயக்கப்படும் “அறிவியல்எக்ஸ்பிரஸ்' ரயில் கடந்த 2007-ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

Sunday, October 25, 2015

“போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்படும்”: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் திரு.ரங்கராஜன் தகவல்

மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியமுறையை நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தீவிர படுத்துவது குறித்து வரும் 31ஆம் தேதி கூடி முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் திரு.ரங்கராஜன் கூறினார்.
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள்!!!
பலர் காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான ஒன்று எழுந்ததும் மொபைலைப் பார்ப்பது. மேலும் சிலர் எழுந்திருக்கும் போதே எதற்காக விடிந்தது என்று எரிச்சலுடன் எழுந்திருப்பார்கள். இதுப்போன்று ஒருசில விஷயங்களை மக்கள் காலை வேளையில் செய்து வருகிறார்கள். நீங்கள் காலையில் எப்போதும் குழப்பமான மனநிலையோடு எழுந்திருக்கிறீர்களா? காலை உணவைத் தவிர்க்கிறீர்களா? அப்படியெனில் சில எளிய மாற்றங்கள் உங்கள் காலை நேரத்தை இதமாக்கும். அந்த மாற்றங்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சட்டென எழுந்து ஜிம்மிற்குச் செல்லுதல்
காலை என்பது ஒரு நிதானமான நேரம். எனவே அமைதியாக, மெதுவாக எழுந்து உங்களது தசைகளை மெதுவாக அசையுங்கள். நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது உங்கள் வலது பக்கமாகத் திரும்பி எழுந்திருங்கள். இது உடலின் ஆற்றல் ஓட்டத்தை சீராக்கும்.
நெட்டிமுறிக்காமை
நாம் காலையில் எழுந்திருக்கும் போது, நமது தசைகள், குறிப்பாக முதுகெலும்பு சற்று விறைப்பாக இருக்கும். நாம் நெட்டிமுறிக்காமல் எழுந்திருக்கும் போது இந்த விறைப்புத் தன்மை தொடர்வதால், இது நமது நாள் முழுவதும் நமது ஆக்கத்திறனை சமரசம் செய்துவிடும். ஆகவே எழுந்ததும் மெதுவாக நடக்கவும். தசைப்பிடிப்புகள், தசை இறுக்கங்கள் இருந்தால், நெட்டிமுறிக்கவும். மூன்று அல்லது நான்கு மெதுவான நெட்டிகள் மற்றும் சில பெருமூச்சுகள் உதவியாக இருக்கும்.
ஒரு கப் தேனீருடன் நாளைத் தொடங்குதல்
ஒரு சிறந்த வளர்ச்சிதை மாற்றத்திற்கான ரகசியம் காலையில் தேனீர் அல்லது காரத்தன்மையான பானத்துடன் அந்த நாளைத் தொடங்கக் கூடாது. உங்களது நாளை சர்க்கரை மற்றும் பால் சேர்ந்த டீ அல்லது காபி போன்ற அமிலத்தன்மையான பானங்களுடன் தொடங்க வேண்டாம். எலுமிச்சை சாறு மற்று தண்ணீர் குடிக்க வேண்டும். வைட் டீ அல்லது கிரீன் டீ குடிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
மொமைல் போன்களை செக் பண்ணுதல்
 மொபைல் போன்களை செக் பண்ணுவது, ஈமெயில் செக் பண்ணுவது மற்றும் வேறு உத்திகளை ஒரு காலையில் எழுந்தவுடன் செய்யாதீர்கள். காலையில் எழுந்து முதல் இரண்டு மணிநேரத்திற்குள் உலகப்பிரச்சனைகள் எதையும் உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது ஆற்றலை முக்கியமற்ற வேலைகளில் செலுத்தாமல் மிக முக்கியமான வேலைகளில் செலுத்துங்கள்.
காலை உணவைத் தவிர்த்தல்
காலை உணவைத் தவிர்ப்பதால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல் ஆகியவை ஏற்படுகின்றன என சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. நீங்கள் காலையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாள் முழுவதும் உங்களது உணவுத் தேர்வு தவறாகவே இருக்கும். நீங்கள் காலையில் ராஜா மாதிரி உணவு உட்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஏதாவது சாப்பிட வேண்டியது அவசியம்.
சிடுசிடுப்புடன் எழுந்திருத்தல்
அதிகமானோருக்கு விடியற்காலை அமைதியற்றதும் பரபரப்புடையதுமாக இருக்கிறது. எனவே அப்படி இருப்பதை தவிர்க்க முயல வேண்டும். எப்போதும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க பழக வேண்டும்.
அன்றைய நாளை முன்னதாகவே திட்டமிடாமை
உங்களது துணிகளை மற்றும் உணவுகளை ஒரு நாள் முன்னதாகவே திட்டமிடுகிறீர்களா? மக்கள் செய்யும் ஒரு மிகப்பெரிய தவறு முன்னதாகவே திட்டமிடாமை. ஒரு நீண்ட நாளுக்கு பின்னர், அடுத்த நாள் காலைப் பற்றி யோசிக்காமல் இருக்கலாம். ஆனால், உணவுகளைத் திட்டமிடுதல் மற்றும் துணிகளை எடுத்து வைத்தல் ஆகியவற்றை முன்னதாகவே செய்துவிடுங்கள். இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னரே அடுத்த நாள் காலை உணவிற்குத் தேவையானவற்றைத் தயார் செய்து வையுங்கள்.

படித்ததில் பிடித்தது -உங்களிடம் மட்டும் எதிர்பாருங்கள்

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றங்களும் குறைவாக இருக்கும் என்ற பழமொழி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அது நூறு சதவீதம் உண்மையும் கூட. எதிர்பார்ப்புகள் இருக்கையில் அதற்கு எதிர்மாறாக என்ன நடந்தாலும், யார் நடந்து கொண்டாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கசப்பையே எதிர்பார்ப்பின் பலனாக நாம் காண நேர்கிறது. 

CPS குறித்து TNPGTA இதழில் வெளிவந்த கட்டூரை.

மாணவ, மாணவிகளின் மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்க பள்ளிகளில் ‘வெயிலோடு விளையாடி’: அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருமா?

பள்ளிகளுக்கு விடுமுறை என்றால் கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் என எல்லாவற்றிலும் தனிநபர் விளையாடும் கேம்ஸ்களில் மூழ்கி விடுகின்றனர் இன்றைய சிறுவர் சிறுமியர். ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் தனியாளாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உலகத் தரத்தில் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்: யு.ஜி.சி. துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ்

உலகத் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்று, புதுதில்லி பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார்.
 காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

பள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

வட கிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கப் பயிற்சி திருவண்ணாமலையில் இன்று தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான இலவச சிறப்பு ஊக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை (அக்டோபர் 26) தொடங்குகிறது.

மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

புதிய பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்

புதியபள்ளி தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறைவரவேற்றுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2016-17-ஆம் கல்வி ஆண்டில் புதிதாக மானியம் பெறாத தொடக்கநிலை ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தொடங்குவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு வழங்க அக்டோபர் 26, 27, 30 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு

சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

ஊதிய முரண்பாடுகளைக் களைய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர்

ஊதிய முரண்பாடுகளைக் களைவது உள்ளிட்ட அரசு அலுவலர்களின் 25 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற தமிழக அரசு, அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத்தலைவர் சண்முகராஜன் வெள்ளிக்கிழமை கூறினார்.

தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?

மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது? 

SSLC SCIENCE PRACTICAL EXAM - MARCH - 2016

சிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம் வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில், 500 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்வு பெற்றவர்களுக்கான பிரதானத் தேர்வு, டிச., 18ம் தேதி துவங்குகிறது.

பருவ மழை ஆபத்து... கவனமா இருங்க!

சென்னை : பருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
*வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பில் ஆய்வு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Saturday, October 24, 2015

சிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. தகுதியுடையோர் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.,28 இல் பதிவு மூப்பு சரி பார்க்கலாம்.

தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க வலியுறுத்தல்

இலவச மடிக்கணினி திருடுபோன பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.

ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி

மாணவர்களுடன், ஆசிரியர்களுக்கும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க, வரும், 27ல், சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன், நற்பண்புகள் மற்றும் தனித்திறனை வளர்க்கும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவல்

சென்னை:''தகவல் அறியும் உரிமை சட்டப்படி, விபரங்கள் கோரும் மனுவையும், அதற்கான பதிலையும், 'ஆன்லைனில்' அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மத்திய தகவல் ஆணையர் யசோவர்த்தன் ஆசாத் கூறினார்.நெய்வேலி நிலக்கரி கழகமான, என்.எல்.சி., சார்பில், 'தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை வகித்தார்;

1,500 காலிப் பணியிடங்கள்: தள்ளாடுது கருவூலத்துறை

ராமநாதபுரம்:தமிழக கருவூல கணக்குத்துறையில் 1,500 பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகளை முடிக்க முடியாமல் ஊழியர்கள் தத்தளிக்கின்றனர்.தமிழகத்தில் 32 கருவூல அலுவலகங்கள், 229 சார்நிலை கருவூலங்கள் உள்ளன. இங்கு 5,186 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது 3,600 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். கண்காணிப்பாளர், கணக்காளர், இளநிலை உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் பெரும்பான்மையாக காலியாக உள்ளன.

லேப்- - டாப் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்ட கல்வித்துறை

திண்டுக்கல்: மூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜாதி, இருப்பிட விவரங்களை, ஒரேநாளில் வழங்க அறிவுறுத்தியதால் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறை பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் - டாப் வழங்குகிறது.

தீபாவளி முன்பணம்: ஆசிரியர்களுக்கு சந்தேகம்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை முன்பணம் என, 5,000 ரூபாய் வழங்கப்படும். தீபாவளியை ஒட்டிதான், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், அதிக அளவில், முன்பணத்துக்கு விண்ணப்பிப்பர். அதேபோல், அனைத்து பள்ளிகளில் இருந்தும், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு, விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஆனால், இதுவரை நிதித் துறை அனுமதி வரவில்லை. அதனால், முன்பணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Friday, October 23, 2015

21 வயதுக்குள்பட்டோருக்கு மதுபானங்கள் விற்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

மதுபானங்களை 21 வயதுக்குள்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் சார்புநிலை சேவை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல், பொருளாதாரம், நிலவியல்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தத் தேர்வு டிசம்பர் 13-ஆம் தேதி காலை, மாலை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அங்கன்வாடிகளுக்கு 'ஸ்மார்ட் போன்

புதுடில்லி": சிறு குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடிகளின் தரத்தை மேம்படுத்த வும், அவற்றின் செயல்பாட்டை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, நாடு முழுவதும், மூன்று லட்சம் அங்கன்வாடிகளில் உள்ள பணியாளர்களுக்கு, 'ஸ்மார்ட் போன், டேப்லெட்' ஆகிய வற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு மாநில தீர்ப்பாயம் சங்க தலைவர் வலியுறுத்தல்

சிவகங்கை: ''அரசு அலுவலர், ஆசிரியர் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் சம்பளக்குழுவை உருவாக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறினார்.சிவகங்கையில் அவர் கூறியதாவது:அமைச்சு, தொழில்நுட்ப, சார் நிலை, களப்பணியாளர், ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களைதல் உட்பட 25 அம்ச கோரிக்கைகளை 

நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது.

குரூப் - 2 ஏ விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா?

தமிழக அரசின், 33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தேதியில், மத்திய அரசின், 'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.

திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம்பரிசீலிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவு

சென்னை,: 'திறந்தநிலை பல்கலைக்கழக பட்டத்தின் அடிப்படையில், பதவி உயர்வு கேட்கும் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்து, ஆறு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் கற்றுத்தருவது எப்படி?

சிறந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கான விருதுகள் - புதிய நெறிமுறைகள்:தமிழக அரசு உத்தரவு

சிறந்த ஊழியர், பணியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில், அரசு விருதுக்கு மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்வதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதீன் வெளியிட்ட உத்தரவு:

கணினி வழி கற்றல் கற்பித்தலை எளிதாக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "Basic Computer Training" வழங்க முடிவு - இயக்குநர் செயல்முறைகள்

TNTET-2013 தேர்வு நடத்துவதற்கு NCTE -ன்அனுமிதி பெறப்படவில்லை - RTI LETTER


ஊதிய முரண்பாட்டை போக்க முற்றுகை போராட்டம் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு - ஜாக்டா - பி.கே.இளமாறன்.


Thursday, October 22, 2015

எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?

* வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம்? என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்!

* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த அப் தான் உங்கள் ஆண்ட்ராய்ட் போனின் செயல்திறன் அதிகம் பாதிக்கிறது

எவ்வளவு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்கினாலும் நாளடைவில் அதன் பேட்ரி லைப்பும், செயல்திறனும் குறைந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் சில அப்ஸ்.

CTET September 2015 Examination OMR Sheet Image & Answer key Declared

நடுநிலைப் பள்ளியில் 6,7,8 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு 05.11.2015 மற்றும் 06.11.2015 ஆகிய நாட்களில் "Value Integrated Teaching and Learning (VITAL)" என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் - இயக்குநர் செயல்முறைகள்

DDE - TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY(TNPESU) 2015-2015 ACADEMIC YEAR ADMISSION NOTIFICATION - LAST DATE : 31.12.2015

நாசா செல்ல வாய்ப்பு தரும் 'சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்'

மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் சிந்தனையை துாண்டும், 'சூப்பர் ப்ரெய்ன் சேலஞ்ச்' போட்டியை, 'எட் சிக்ஸ் பிரெய்ன் லேப் ஸ்கில் ஏஞ்சல்ஸ்' என்ற, நிறுவனம் அறிவித்துள்ளது;

போனஸ் சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்த ஒப்புதல் : மத்திய அமைச்சரவை அனுமதி

புதுடெல்லி: தொழிற்சாலை ஊழியர்களுக்கான போனஸ் சம்பள உச்சவரம்பை ரூ.21 ஆயிரமாக உயர்த்தி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தற்போதுள்ள போனஸ் சம்பள உச்சவரம்பை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. 

மலேசியாவுக்கு இந்திய ஆசிரியர்கள்

மலேசியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் மலேசியர்களின் திறனை அதிகரிப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் புதன்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள கிராமப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சி அளிப்பதற்காக, இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம்.

கலைப்பாட தொழில்நுட்பதேர்வில் மறுகூட்டல் தேவை

சென்னை,:'கலைப் பாட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வழங்க வேண்டும்' என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கலை, ஓவியம், இசை, கணிதம் உள்ளிட்ட, சிறப்புப் பாடங்கள் உள்ளன; இவற்றை கற்பிக்க, சிறப்பாசிரியர்கள் உள்ளனர். கலைப் பாடம் படித்துள்ளதுடன், தமிழக அரசு நடத்தும், தொழில்நுட்பத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் தான், சிறப்பாசிரியர் பணி கிடைக்கும்.

மாணவர்களுக்கு இலவச சுற்றுலா

சென்னை: அறிவியல் மையம் மற்றும் தோட்டக்கலைப் பண்ணைகளுக்கு, மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின், புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தில்,

6 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் குழந்தை பாதுகாப்பு ஊழியர் தவிப்பு

சென்னை,:தமிழகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், ஊழியர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், 2012ல் துவங்கப்பட்டது.

வீட்டில் சூரிய ஒளி மின்சாரம் குறைந்தது கட்டணம்

காரைக்குடி:மொட்டை மாடியில் சோலார் அமைத்ததால் ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்கள், 10ல் ஒரு மடங்கு மட்டுமே கட்டணமாக 
செலுத்துகின்றனர்.தமிழகத்தில் 250 முதல் 300 நாட்கள் வரை முழுமையான சூரிய ஒளி கிடைக்கிறது. மின்வெட்டு பிரச்னை தீவிரமாகி வரும் நிலையில், மாற்றான சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம் - ரூபாய் 5000/-

பட்டப்படிப்புக்கான கூடுதல் கால அவகாசம் 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்: பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை

பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறா விட்டால் வழங்கப்படும் கால நீட்டிப்பை 2 ஆண்டாக குறைக்கும்படி பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ல் கணிதத்திறன் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி சென்னையில் கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.

அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கவும், கொடுக்கவும் தடை. G.O.Ms.No. 133. Date 29.09.2009

கடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம்..

CPS : பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் வட்டி வரவுக் கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களது பங்குத்தொகைக்கான வட்டி வரவுக்கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

4.20 லட்சம் பேர்

தமிழகத்தில் 2003–ம் ஆண்டு ஏப்ரல் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்செய்யப்பட்டது.

கல்விக்கு அனைத்து உதவியும் செய்யப்படும்: அமைச்சர் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் விசுவநாதன் பேசியதாவது:ஒரு சமுதாயம், நாடு முன்னேற கல்வியே அடித்தளம். இதற்கான விதையை பள்ளியில் விதைத்தால் தான் நோக்கம் நிறைவேறும் என்பதற்காக அரசு 14 வகை உபகரணங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

கலந்தாய்வில் 1.20 லட்சம் இடங்கள் காலி எதிரொலி: தமிழகத்தில் விற்பனைக்குத் தயாராகும் தனியார் பொறியியல் கல்லூரிகள்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள 58 சதவீத இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரம்பியுள்ளன. 1.20 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. இதன் எதிரொலியாக பல பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்காக பேரம் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது.

Wednesday, October 21, 2015

திட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி., தொடர்ந்து தேர்வுகளை நடத்துகிறது

மதுரை :தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1947 காலியிடங்களை நிரப்ப குரூப் 2 ஏ தேர்வை அறிவித்துள்ளது.இது குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவது:தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் இளநிலை அலுவலர், வணிகவரி, பதிவுத் துறை, போக்குரவத்து, தொழில்நுட்ப கல்வி, பள்ளிக்கல்வி, ஊரக மேம்பாட்டு துறையில் 1947 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

போனஸ் சம்பள உச்சவரம்பு உயர்வு: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

புதுடில்லி: தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு தொகையை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரமாக உயர்த்த, பிரதமர் மோடி தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

அகஇ - நவம்பர் மாத CRC - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 07/11/2015 அன்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 14/11/2015 அன்றும் நடைபெறும் - செயல்முறைகள்


தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி !! நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 1ம் ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி

நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் சார்பாக நடைபெற்ற 1ம் ஆண்டு நிறைவு விழா பேச்சு போட்டி மதுரையில் நடைபெற்றது.இதில் சுமார் 5 மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று அரசு விடுமுறையாக இருந்த போதும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்தின் ஆலோசனையின் படி ஆசிரியை திருமதி தி.முத்து  மீனாள் மற்றும் ஆசிரியர் திரு.சோமசுந்தரம் ஆகியோர் காலை 5.30 மணிக்கு மாணவர்களை தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றனர்.

அரசு ஊழியர்களுக்காக போனஸ் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சாரவைக் கூட்டம் இன்று காலைதில்லியில் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

MOVEMENT REGISTER பராமரிப்பது சார்ந்த அறிவுரைகள்.

தன் பங்கேற்பு ஓய்வூதிய கணக்குத் தாளில் உள்ள குறைகளை சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அலுவலர் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளுதல் சார்பான அரசு செய்திக்குறிப்பு


பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணி நிரவல் சார்ந்த திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

"வினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்'-அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு)தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் வாயிலாக பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 927 காலிப் பணியிடங்கள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்காக, 927 காலிப் பணியிடங்கள் உள்ளன.பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 26-இல் மாவட்டத்துக்குள்ளும், 27-இல் மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு: தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுக்காக சுமார் 8 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நியமி்க்கும் வகையில் கடந்த மே மாதம் 31-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. 

அரசு ஊழியர்களுக்காக போனஸ் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சாரவைக் கூட்டம் இன்று காலைதில்லியில் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Tuesday, October 20, 2015

பள்ளிக்கல்வி - சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடுதல் - பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்துதல் சார்பு!!

FLASH NEWS : குரூப் 2A தேர்வு தேதி மாற்றம்

குரூப் 2A தேர்வு தேதி டிசம்பர் 27 என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேர்வு தேதியை மாற்றி TNPSC இன்று அறிவித்துள்ளது. 
இதன் படி தேர்வு ஜனவரி 24 ஞாயிற்று கிழமை அன்று நடை பெறும். 

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது  

மூவகைச் சான்றுகள்(சாதி/வருமானம்/இருப்பிட சான்றிதழ்)-2015-16ஆம் ஆண்டு பள்ளிமாணவர்களுக்கு (6,10 மற்றும் 12) மின்மம் சார்ந்த சான்றுகள் (Electronic Certificate) - பெற விண்ணப்ப படிவம்

ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

புதுடில்லி: மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோர், அரசுக்கு தவறான தகவல்களை அளித்தால், இனி, குற்ற வழக்குகளை சந்திக்க நேரிடும். 

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:அரசின் உயர் பதவிகளில் பணியாற்றியவர்கள் பலர், ஓய்வு பெற்றதும், அரசு சாரா அமைப்பிலோ, தனியார் நிறுவனங்களிலோ சேருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!