TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Monday, November 30, 2015

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களை பிழைகளின்றி நவம்பர் 23-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு, 26 வரை நீட்டிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: டிச. 4 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்


பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 இவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 28 முதல்

தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் பணி: கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் நடக்கிறது; டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது. 
 இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளை நேரடி நியமனம் செய்யும் வகையில்,

சென்னைபல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஓத்திவைப்பு


சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கல்லூரிகள் நடைபெற இருந்த தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்

காமராஜர் பல்கலை. பி.எட். படிப்புக்கு தகுதிப் பட்டியல் வெளியீடு: டிச.8-ல் கலந்தாய்வு


மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தின் பி.எட். படிப்புக்கான தகுதிப் பட்டியல் பல்கலை. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 தொலைதூர கல்வி இயக்ககத்தின் கீழ் வழங்கப்படும் பி.எட் (2015-2016) படிப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விபரம் காமராஜர் பல்கலைக்கழக இணையதளமான  வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர் பணி: காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையாளர் மணிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்

சென்னையில் பரவலாக மழை: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைப்பு


சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால் கடந்த வாரம் நடைபெறவிருந்த தேர்வுகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் இன்று முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு

5 நாள் கனமழை - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.


சென்னை: 'வங்கக் கடலில் உருவாகியுள்ள, புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை, தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது: இரு நாட்களுக்கு முன், அந்தமான் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை,

ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?


பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின் நோக்கம். ஆனால் இது, தமிழகத்தில்,

'புளூ பிரின்ட்' எப்போது?

தமிழகத்தில், 2006ம் கல்வி ஆண்டு முதல், அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலாகியுள்ளது. அதனால், 'ஓரியன்டல்' எனப்படும், சிறுபான்மை அல்லது அயல்மொழிகளில் படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக, தமிழைப் படிக்க வேண்டும்.இதனால், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், தங்கள் தாய்மொழியை படிக்காவிட்டால், தங்கள் மாநில வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என, அதிர்ச்சி அடைந்தனர்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

புதுடில்லி,:பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 பைசா குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 25 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

வேலூர் 4 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை...

SLAS QUESTION PAPERS DOWNLOAD 2013-2014 , 2014-2015 Download...

ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம்(B.Sc) மற்றும் இளம் கல்வியியல்(B.Ed) பட்டப்படிப்பு முடித்தால் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி உண்டு..


Sunday, November 29, 2015

Flash News : பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (30/11/2015) விடுமுறை

  • கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  •  புதுச்சேரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
  • விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • காரைக்கால்  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • அரியலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
  • திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  • திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை:8 மாவட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் யுனிசெப் சார்பில் 8 மாவட்ட ஆசிரியர்களுக்கு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

ஈரோடு செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, கல்வியாளர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் வரவேற்றார்.

"எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி'கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

ஐந்து நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர் கோரிக்கை

காரைக்குடி:வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம், உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.

பள்ளிகளுக்கு ரூ.125 கோடி சேதம்

தமிழகத்தில், தொடர் மழையால், பள்ளிக்கல்வித் துறைக்கு, 125 கோடி ரூபாய் சேதம் மற்றும் செலவு ஏற்பட்டுள்ளது. 
தமிழகத்தில், 6ம் தேதி முதல், 25ம் தேதி வரை கனமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் போன்ற மாவட்டங்களின், பள்ளி, கல்லுாரி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழை விடுமுறை அனுபவித்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி

'மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பல பகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.

10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு

'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் தவறுகள் இருந்தால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.

'கேட்' தேர்வு: பி.இ.,க்கள் ஆர்வம்

மத்திய அரசின், உயர் கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான 'கேட்' தேர்வில், சென்னையில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இவர்களில், பி.இ., எனப்படும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் அதிகம்.

Flash News : பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (30/11/2015) விடுமுறை

  • கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  •  புதுச்சேரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
  • விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • காரைக்கால்  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • அரியலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Sastra University B.Ed notification 2016 (advertisement)

BHARATHIAR UNIVERSITY B.Ed.,Admission Notification


Saturday, November 28, 2015

புதிய கல்விக்கொள்கை - வட்டம்,மாவட்டம்,மாநிலம் சார்ந்த கேள்விகள் - முற்றிலும் தமிழில் - மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD SCHOOL EDUCATION ......TEMPLATES IN TAMIL


குறிப்பு :- புதியக் கல்வி கொள்கை குறித்து ஒவ்வொரு பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். 

31.12.2015 இல் D.A 119%

01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%
கூடுதல் (119% + 6%) = D.A 125%.
கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:
Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)

ஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோ நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.

பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி

மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

       மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இடைநிலைத் தேர்வுகள் நடைபெற்றன.

வேலூர் மாவட்டத்தில் - பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சி பெட்டிகள் திருட்டு

ஆம்பூர் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக கானாற்றில் ஏற்பட்ட வெள்ளம் ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கியது.

தகுதி தேர்வுவிண்ணப்பம் வெளியீடு

சென்னை:தமிழகத்தில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டம் கீழ், உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

உதவி பேராசிரியர் தேர்வுபட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு

அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 
தமிழகத்திலுள்ள இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், காலியாக இருந்த, 139 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.முதுகலை பட்டத்துடன், எம்.பில்., ஸ்லெட், நெட், முடித்தவர்கள் என, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், விண்ணப்பித்திருந்தனர்.

தனி தேர்வர்களுக்குஅவகா சம்

சென்னை ": பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச., 4 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர், பொறுப்பு, வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், நவ., 27 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் மழை விடுமுறை ஈடு செய்ய வேண்டிய நாட்கள் குறித்த அட்டவணை வெளியீடு

திருவள்ளூர் மாவட்ட தொ.க.அலுவலரின் செயல்முறைகள்                       கனமழை விடுமுறை நாட்களை ஈடுசெய்ய வேலை செய்யவேண்டிய சனிக்கிழமைகள்.                      
19 DEC 15,
9,23 JAN16,
6,13,20,27 FEB16,

3 rd incentive பெறத்தகுதியானவர்கள் யார் என்பதற்கான விளக்கம்


அனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் வழங்குதல் தொடர்பான இயக்குநரின் தெளிவுரை Date: 20/11/2015

பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அணைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்.

NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு

NMMS EXAMINATION - 2016

NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு

தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்

SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்
30.11. 2015 to 11. 12. 2015க்குள் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்

அனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் வழங்குதல் தொடர்பான இயக்குநரின் தெளிவுரை Date: 20/11/2015


Friday, November 27, 2015

ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கழைக்கழத்தில் இரண்டு பட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகால அட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது (RTI-பதில்).

அறிவித்தபடி அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவு

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

பிளஸ் 2: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க டிச. 4 வரை கால அவகாசம்

வரும் 2016 மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் சேவை மையத்தின் மூலம் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 16 முதல் 27 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

வகுப்பில் செல்லிடப்பேசி பயன்படுத்திய மாணவிகள்: ஆசிரியர் கண்டித்ததால் அரசுப் பள்ளி முற்றுகை

கோவை மாநகரில் வகுப்பறையில் செல்லிடப்பேசி பயன்படுத்திய மாணவியை ஆசிரியர் அடித்ததாக எழுந்த புகாரை அடுத்து, புதன்கிழமை மாணவியின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு பள்ளிகளில் 3 வகை பயிற்சி

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர். 10ம் வகுப்பு தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, 

கணிதத்திறன் போட்டி டிச., 20க்கு மாற்றம்

சென்னை: தமிழக அறிவியல் தொழில் நுட்ப மையம் சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு, கணிதத்திறன் தேர்வு நடத்தப்படும். 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான தேர்வு, நவ., 22ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது; கன மழையின் காரணமாக,

மாணவர்களிடம் உறுதிமொழிஎழுதி வாங்கும் கல்வித்துறை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி,

பிளஸ் 2 மாணவர்களுக்கு புது கட்டுப்பாடு

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை;

92 ஆசிரியர் பணியிடம்விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை,: மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும், அரசு சிறப்பு பள்ளிகளில், 92 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 105 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செய்முறை பயிற்சி தேர்வு உண்டா 10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பம்

அறிவியல் செய்முறை புத்தகம் வழங்காததால், அதற்கான பயிற்சி தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டம் துவங்கிய பின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வகத்தில், செய்முறை பயிற்சியும், செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்காக, 75 மதிப்பெண், 'தியரி'க்கும், 25 மதிப்பெண் அறிவியல் செய்முறை பயிற்சிக்கும் தரப்படுகிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா,

ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு பின், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வை, இரண்டு கட்டமாக எழுத வேண்டும்.

ஆன்லைனில் மார்க்!: சி.பி.எஸ்.இ., அறிமுகம்

பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து துறைகளையும் கணினிமயமாக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் படி, கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சேவை பிரிவைத் துவக்கி, பாடம் நடத்துதல்;

நவ. 30ல் பாலிடெக்னிக் தேர்வு முடிவு

சென்னை, :பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அக்டோபரில் நடத்திய, பட்டயத் தேர்வு முடிவுகள், நவ., 30ல் வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை, www.tndte.com மற்றும் http:/intradote.tn.nic.in(nic e-portal) இணையதளங்களில் பார்க்கலாம்.

பட்டாசு ஆலைகளின் தீ விபத்தை தடுக்க தானியங்கி தீயணைப்பான்: 9ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு

சிவகாசி: பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்தை தடுக்கவும், அங்கு பணிபுரியும் தொழிலாளியை பாதுகாக்கவும் தானியங்கி தீயணைப்பான் மாதிரி வடிவமைப்பை ஜமீன் சல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவன் ஜெயக்குமார் கண்டுபிடித்துள்ளார்.

இடை நின்ற மாணவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவு

சென்னை: பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

பணிநிரவலால் பதறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள்: 'கவுன்சிலிங்' நடத்தப்படுமா

மதுரை :மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில் உள்ளதுபோல், உதவி பெறும் பள்ளிகளிலும் உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து,

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் SLAS தேர்வு

Conduct of SLAS for the Classes III & V 17.12.2015 &18.12.2015

 Conduct of SLAS for the Classes VIII  21.12.2015 &22.12.2015

வேலூர் மாவட்டம்-தொடக்கக்கல்வித்துறை- இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான காலஅட்டவணை:

16.12.2015-தமிழ்.
17.12.2015-Englishm
18.12.2015-கணக்கு
21.12.2015-அறிவியல்.
22.12.2015-சமூகவியல்.

பகுதி நேர ஆசிரியர்கள் இந்த மாத ஊதியம் தொடர்பான - மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறை கடிதம் ...Part Time Teachers 2015 NOVEMBER Month Salary Regarding - SPD Proceeding REGARDING

November மாதம் ஊதியம் பெறுவதற்கான அர சாணை - NOVEMBER MONTH PAY ORDER RELEASED .....

என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?



மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துவிட்டதாகக் கருத முடியாது.

ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம் வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும் சமூக வலைதளங்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

6-12 வகுப்பிற்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை- 2015-16 வெளியீடு..

ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'


மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்துஉள்ளது.தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிபகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

Thursday, November 26, 2015

ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ'

கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,

தமிழக கல்வித்துறைக்கு 4 ஆண்டுகளில் ரூ.85,680 கோடி ஒதுக்கீடு:அமைச்சர் கே.சி.வீரமணி

நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக அரசு கல்வித்துறை வளர்ச்சிக்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை ரூ.85,680 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குறிப்பிட்டார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் 33-ஆவது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, ராசிபுரம் பாவை கல்வி நிறுவன வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 29 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவிகள்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
 முதல்நாளில் வந்த பெரும்பாலான மாணவர்களுக்கு பாடங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டதாகவும், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகள், தாழ்வான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பள்ளிகளுக்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், 29 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உதவிகள் ஓரிரு நாள்களில் மீண்டும் வழங்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நேரடி நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்வதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டல மையத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் எஸ். ராஜகுமார், கே. கருப்புசாமி, கே. ரமேஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனு விவரம்:

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஓட்டுச்சாவடி அலுவலர் பணிக்கு பட்டியல்

சிவகங்கை,:சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடி அலுவலர் பணிக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.தமிழகத்தில் 2016 சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. சில அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளிக்க, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.தேர்தல் கமிஷனும் ஓட்டு இயந்திரம் சரிபார்ப்பு, வாக்காளர் பட்டியல், அடையாள அட்டை வழங்கல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது.ஓட்டுப்பதிவு,

தேர்தல் பணிக்கான தொகை தாமதம் ஓட்டுச்சாவடி களப்பணியாளர்கள் அவதி

திண்டுக்கல், :மத்திய அரசிடமிருந்து பெறப்படும் தேர்தல் பணிகளுக்கான செலவுத்தொகை வராததால் ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்கள் தவிக்கின்றனர்.தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் கடந்த அக்டோபரில் வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டது. பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன.

18 நாளுக்கு பின் பள்ளிகள் திறப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாள் தொடர் விடுமுறைக்கு பின், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.முதல் நாளான நேற்று, 30 சதவீத மாணவர்கள் வரவில்லை. மழையில் பாதிக்கப்பட்டு, அரசு முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியுள்ள குழந்தைகளும் வந்திருந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்
களுக்கு, நேற்று புதிய நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன;

பாடம் முடிக்காமல் தேர்வா

வட கிழக்குப் பருவ மழை காரணமாக, 9ம் தேதி முதல், பல்கலை, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது; தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., செமஸ்டர் தேர்வு டிச., 7ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அதனால், வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, 250க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அன்பாசிரியர் 8 - நேசமணி: கணினி மூலம் தேர்வும் மதிப்பீடும்!

போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆவதில்லை; யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.

அன்பாசிரியர் நேசமணி, ஆசிரியர் பயிற்சியில் சேர ஆசைப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் போதாததால் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தவர். எதிர்பாராத விதமாக ஆசிரியர் பயிற்சிக்கு இடம் கிடைக்க, பொறியியல் படிப்பைக் கைவிட்டு ஆசிரியரானவர். தொழில்நுட்பத்தின் மேல் தீராத ஆர்வம் கொண்டவர். தகவல் மற்றும் தொலைதொடர்புக்கான தொழில்நுட்ப சாதனையாளர் விருது பெற்றவர். திருப்பூர் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வழங்கிய, 'சாதனை ஆசிரியர்' விருதுக்கு சொந்தக்காரர். செயல்வழிக் கற்றல், கணினிவழிக் கற்றல் என இரண்டையுமே பயன்படுத்திக் கற்பித்தலைச் சிறப்பிக்கும் ஆசிரியர்!

Remedial teaching for late bloomers - Primary & upper primary - CRC பயிற்சி.,

SPD proceedings for 3 days SMC training

DECEMBER MONTH TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS.........

டிசம்பர் மாதம் Training.. மாதம்....
(30.11.2015)to (4.12.2015) - 5 days IED TRAINING for primary teachers
Another 5 days IED training for upper primary teachers 
Another 5 days IED training for Angan wadi
30.11.2015, 1.12.2015 - 2 days SMC RP training 
5.12.2015 - primary CRC 
12.12.2015 - upper primary crc

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 5 வருடங்களாக அரசு பள்ளியில் இரவு காவலராக திருநெல்வேலியை சேர்ந்த திரு.குருசாமி என்பவர் பணிபுரிந்து, 2013ல் மரணமடைந்தார். பின்பு அவருடைய மனைவியும் இறந்துவிட்டார். ஆனால் இதுவரை பிடித்தம் செய்த தொகை மற்றும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை; அதற்கான மனு

Wednesday, November 25, 2015

இந்திய அரசிலமைப்பு சட்ட நாள்(26.11.15) கொண்டாடப்பட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!!!


10 ஆம் வகுப்பு பாடநூல் (2015 - 2016) பிழை திருத்தம்


இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் 12-ஆம் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் வியாழக்கிழமை (நவம்பர் 26) திறக்கப்படுகின்றன.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக நவம்பர் 13-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் 13 நாள்கள் இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் வியாழக்கிழமை திறக்கப்படுகின்றன.

தமிழகம், புதுச்சேரியில் மீண்டும் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு: தெற்கு அந்தமான் கடலில் புதிய மேலடுக்குச் சுழற்சி

தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதியில், புதிதாக மேலடுக்குச் சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 24 பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை : சென்னை மாவட்டத்தில் இன்று(26ம் தேதி) 24 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த 24 பள்ளிகளை தவிர பிற பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 24 பள்ளிகள்:
1. அரும்பாக்கம் நடுநிலைப்பள்ளி
2. கோயம்பேடு தொடக்கப்பள்ளி
3. சைதாப்பேட்டை பஜார்ரோடு தொடக்கப்பள்ளி
4. எம்.ஜி.ஆர். நகர் நடுநிலைப்பள்ளி
4. சைதாப்பேட்டை, திடீர்நகர் நடுநிலைப்பள்ளி
5. மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி
6. வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி
7. ஆசிர்வாதபுரம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி

அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை

பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சு: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளம் தேங்கிய சில இடங்களுக்கு மட்டும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், நவ., 9 முதல் மழை விடுமுறை துவங்கியது. தீபாவளிக்கு மறுநாள், 11ம் தேதி, சில பள்ளி, கல்லுாரிகள் திறந்தாலும், மழை தொடர்ந்ததால் அரை நாள் மட்டுமே இயங்கின. தொடர்ந்து விடுமுறைமழையின் சீற்றம் அதிகரித்ததால், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சென்னை பல்கலையில் நவ., 28 வரை தேர்வு ஒத்திவைப்பு


சென்னை,:மழை எச்சரிக்கையால் நவ., 28 வரை, சென்னை பல்கலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சட்ட பல்கலையில், இன்று முதல் தேர்வுகள் துவங்குகின்றன.
மழை, வெள்ளப் பிரச்னையால், இரண்டு வாரங்களாக, சென்னை பல்கலையின் தேர்வுகள் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக,

விருப்ப மொழிப்பாட மதிப்பெண்ணையும் சராசரியில் கணக்கிட முடிவு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை

திண்டுக்கல்:மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வுகளில் சிறுபான்மை(விருப்ப)மொழித்தாள் மதிப்பெண்ணையும் சராசரிகணக்கிட பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் வழங்க ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வில் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் முறையே ஆங்கிலம், தமிழ் மொழித்தாள்கள், பகுதி 3ல் இதர பாடங்களும், 4ல் விருப்ப (விருப்ப) சிறுபான்மை மொழிப் பாடமும் உள்ளன.இதில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தெலுங்கு

பாடத்தை கவனிக்காமல் மொபைல்போனில் விளையாட்டு: ஆசிரியர் சோதனையில் சிக்கினர் பள்ளி மாணவியர்

கோவை,: கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, மொபைல்போனில் விளையாடிக்கொண்டிருந்த மாணவியர் ஐந்து பேர், கையும் களவுமாக சிக்கினர்.

வழிக்கு வந்தது தமிழக அரசு: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மழை நீர் வெளியேற இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாடகை இயந்திரங்கள்:


தமிழகத்தில், மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளத்திலும் வேலைஆசிரியைகள் அதிருப்தி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்வதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு, கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என, பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி உள்ளன. இதுகுறித்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வு தேதிஅடுத்த வாரம் அறிவிப்பு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது.

அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க 'ஆதார்' எண் கட்டாயம்?

'தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், 'ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பம் செய்ததற்கு பெற்ற ஒப்புகை ரசீதை, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலரிடம், இன்று அளிக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊதியக்குழு பரிந்துரைகளைஅமல்படுத்த குழு


புதுடில்லி: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, குழு ஒன்றை, மத்திய நிதியமைச்சகம் நியமித்து உள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான, ஏழாவது ஊதியக்குழு, தன் பரிந்துரைகளை, மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, 23 சதவீத ஊதிய உயர்வு வழங்க

7வது ஊதியக்குழு....DINAMANI தலையங்கம் - தேவையற்ற சுமை

Tuesday, November 24, 2015

7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு எதிர்ப்பு: வேலைநிறுத்தத்தில் ஈடுபட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு

மத்திய அரசு ஊழியர்கள், 7-வது ஊதியக் குழு பரிந்துரையைக் கண்டித்து வரும் 24-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.

Flash News : இன்று (25.11.2015) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.


  • தூத்துக்குடி தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை
  • சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறவிப்பு


7 TH PAY COMMISSION - ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமுல்படுத்த தனி குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு


7th Pay: ஊதியக் குழு பரிந்துரை-225 மடங்கு உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அளிக்கப்பட உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ரூ.90 ஆயிரமாக இருந்த சம்பளம் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு

இடைத்தரகர்களால் நடைபெறும் ஊழலைத் தடுப்பதற்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சி.சி. டி.வி. கேமரா பொருத்தக் கோரிய மனுவை 2 மாதங்களுக்குள் தமிழக அரசு முடித்து வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 இதுதொடர்பாக கோவை நுகர்வோர் குரல் அமைப்பைச் சேர்ந்த என்.லோகு தாக்கல் செய்த மனு விவரம்:

பிளஸ்-1 மாணவிகள் நான்கு பேர் சஸ்பெண்ட் - தலைமை ஆசிரியர் நடவடிக்கை .

மது அருந்தியதால் பள்ளியிலேயே மயங்கி விழுந்த திருச்செங்கோடு அரசு பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழை விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகள் செய்யப் போவது என்ன?

சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பொதுவாகவே, எதிர்பாராத விடுமுறைகளை ஈடுகட்ட, பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்குவது வழக்கம். ஆனால், பள்ளிகளில் சிறார்களுக்கான வகுப்புகளுக்கு பொதுவாக சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்துவது இல்லை. ஆனால், இந்த அளவுக்கு விடுமுறையை ஈடுகட்ட வேண்டும் என்றால், எல்கேஜி மற்று யுகேஜி வகுப்புகளுக்கும் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மனுக்கள்: பரிசீலனை நடவடிக்கையை இணையத்தில் அறியலாம்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
 இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தல்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை மாநில அரசு நேரடியாக முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

7-ஆவது ஊதியக் குழு: அனைத்து முதல்வர்கள் கூட்டத்தை கூட்டக் கோரிக்கை

7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள பிரச்னைகளை ஆராய்வதற்கு அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக கூட்ட வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 இதுகுறித்து ஜம்முவில் அச்சங்கத்தின் தலைவர் சுபாஷ் சாஸ்திரி தெரிவித்ததாவது:

மதுராந்தகம் ஏரி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பொதுப்பணித்துறை தகவல்

மதுராந்தகம் ஏரி உடைந்து விட்டதாக கட்செவியில் பரவிய தவறான தகவலை யாரும் நம்பவேண்டாம் என பொதுமக்களுக்கு பொதுப்பணித் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
 தொடர்மழையால் மதுராந்தகம் ஏரி தனது முழுக் கொள்ளவை எட்டி அதன் உபரி நீர் கிளியாற்றில் வெளியேறி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தவண்ணம் உள்ளது. திங்கள்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, சுமார் 18 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

சம்பள உயர்வு பரிந்துரையால் பணித்திறன் அதிகரிக்கலாம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை மகிழ்ச்சி அளிக்கும். மத்திய அரசு ஊழியர்கள், 48 லட்சம் பேர் மட்டுமின்றி, பென்ஷன் பெறுவோரும் பயனடைவர்.
இந்த பரிந்துரையை அரசிடம் தயாரித்து சமர்ப்பித்த நீதிபதி மாத்துாரின் நுாற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையில், சில புதிய அணுகுமுறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. 

நோய் தடுப்பு: பள்ளிகளுக்கு உத்தரவு

பள்ளி வளாகங்களில், கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக, பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமியின் ஆலோசனையின் படி, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
  • பள்ளிகளின் குடிநீர் அமைப்புகள், பம்புகள், தொட்டிகளில், நோய் கிருமி தேங்கி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும் 

அரசுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. மழையை விட ஆக்கிரமிப்புகளால் தான் சேதம் அதிகம்.

தமிழகத்தில், கொட்டித் தீர்த்த கனமழை, அரசுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. மழையை விட ஆக்கிரமிப்புகளால் தான் சேதம் அதிகம். எதிர்காலத்தில் இதுபோன்ற சேதங்களை தவிர்க்க, நீர் நிலைகளில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில், நவ., 8ல் கனமழை துவங்கியது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட, உயர் காற்றழுத்த தாழ்வு நிலை, 10ம் தேதி, மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.

10ம் வகுப்பு துணைத்தேர்வுஇன்று மறுகூட்டல் 'ரிசல்ட்'

சென்னை :பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பில், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த துணைத்தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன.

SSLC MARCH/APIRL 2015 TENTATIVE KEY ANSWERS........

Flash News : கன மழை - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (25.11.2015) விடுமுறை

FLASH NEWS
  • காஞ்சிபுரம்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

பட்டதாரி ஆசிரியை தேவை - காலியாக உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தேவை....



7th PAY COMMISION IN DETAILS (மொத்தம் - 24+6=30 பதிவுகள்)

பி.லிட்.,பட்டத்துடன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்று பணியாற்றுபவர்கள் பி.எட்.,தேர்ச்சிக்கு ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு...RTI-தகவல்...


Monday, November 23, 2015

புதிய பென்சன் திட்டத்தில் பலன் பெறாமலே இறந்த தம்பதி - போராடியும் பலனில்லை.


சென்னையில் மா.தொ.க அலுவலர்களுக்கான கூட்டம். ( ஆசிரியர்கள் வைப்பு நிதி கணக்கு முடித்தல் சார்பான )-இயக்குநர் செயல்முறைகள்

DEE.20046/C2/201 . 
Dt.23.11.15
All DEEOs Meeting except Chennai& Nagerkoil on 04.12.15 @11am @DEE Chennai reg Panchayat/Municipal School TRs Provident Fund Audit

Flash News : கன மழை - 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (24.11.2015) விடுமுறை

FLASH NEWS :- 


  • நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
  • கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • தூத்துக்குடி,ஒட்டப்பிராடம் வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. 
  • சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

7-வது ஊதிய குழு பரிந்துரை குறித்து அரசு ஆய்வு: மத்திய அமைச்சர்

ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அரசு சரியான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.

இன்றைய கல்வித் தேவை

ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் கல்வித்தரத்தைப் பொருத்தே அமைகிறது. இதனை உலக வங்கி, "2000-ஆம் ஆண்டின் நலிவும் நம்பிக்கையும்' என்னும் தன்னுடைய ஆண்டறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குத் தவிர்க்க முடியாத தேவை உயர்கல்வி என்றும், வளர்ந்த இந்தியா உருவாக அறிவார்ந்த சமுதாய வளர்ச்சியே முதல் தேவை என்றும் கூறுகிறார் நமது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம்.

27-இல் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி

திருப்பூரில் வரும் 27ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான (இருபாலருக்கும்) விளையாட்டுப் போட்டிகள் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொடரும் மழை எதிரொலி: சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பலத்த மழை தொடர்வதைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகமும் பருவத் தேர்வுகளை மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 8 ஆம் தேதி முதல் தொடர் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேர்வுகள் ஒத்திவைப்பு: தேர்வுக்கான மறு தேதி அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பலத்த மழை தொடர்வதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் பருவத் தேர்வுகளை மீண்டும் ஒத்திவைத்து தேர்வுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரையாண்டு தேர்வு தள்ளிப்போகும் என்ற தகவலால் மாணவர்கள் குஷி

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து, கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.

பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை அகற்ற உத்தரவு

பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை, 'பம்ப்செட்' மூலம் வெளியேற்றவும், கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மழை குறைந்து மீட்பு பணி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் சீரமைப்பு பணி துவங்கி உள்ளது. பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தேங்கியுள்ள நீரை, பொதுப்பணித்துறை மூலம் அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்விக் கடனுக்கு அசலுக்கு மேல் வட்டிபொறியியல் பட்டதாரிகள் அதிர்ச்சி

சிவகங்கை,:சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கிகளில் கல்விக் கடன் பெற்றவர்களிடம் அசலுக்கு மேல் வட்டி கேட்பதாக பாதிக்கப்பட்ட பொறியியல் பெண் பட்டதாரிகள் சிவகங்கை கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.கடந்த காங்., ஆட்சியின் போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஏழை மாணவர்கள் கல்வி கற்க வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கச் செய்தார். தேசிய வங்கிகள் பொறியியல், மருத்துவம், பி.எட்., உள்ளிட்ட படிப்பிற்கு கல்விக் கடன் வழங்கின. கடன் பெறும் மாணவர்கள்,படிப்பை முடித்து, வேலை தேடுவதற்கு 6 மாதம் ஆகும். அது வரை கடன் பெற்றோரிடம் வட்டி வசூலிக்கப்படமாட்டாது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தள்ளிவைக்கப்பட்ட தேர்வுக்குபதிலாக புதிய தேதி அறிவிப்பு

சென்னை, :அண்ணா பல்கலை யில், தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கல்லுாரி மற்றும் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி யில், நவ., 28ம் தேதி வரை,

7 வது ஊதியக்குழுவில் பென்ஷன் ( இந்த 5 steps for calculation உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்) ...

First They have to calculate the Two options and  whichever is benefit for them They can select higher amount as their Pension

Option No.1 .  The existing Pension may be Multiplied by 2.57

Option No.2 . The Pay Scale  on their retirement and Number of increments they earned  to be taken for calculation

In that Case they should know their Pay Scale and Basic Pay drawn on the date of their Retirement and number increments they earned

By referring the Corresponding Pay scale in successive Pay Commission, they should identify their Sixth pay commission Pay band. If they Know their corresponding Pay Band in sixth Pay commission then it will be easy for them to arrive their Basic Pension to be fixed in VII pay commission.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!