Sunday, January 31, 2016

அரசு பள்ளிகள் இன்று மூடல்

சிவகங்கை: “தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் இன்று மூடப்படும்,” என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப்சேவியர் சிவகங்கையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளம், புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 16 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஜேக்டோ கூட்டமைப்பு ஜன.,30 முதல் பிப்.,1 வரை மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறது.

'தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமை பணியில் இருப்பவர்கள் கேட்க முடியாது'

சென்னை: எஸ்.ஐ., பணிக்கான தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை வழங்கக் கோரி, போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எஸ்.ஐ., பதவிக்கான தேர்வு தொடர்பாக, 2015 பிப்ரவரியில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், அறிவிப்பாணை வெளியிட்டது. ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களும், இத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்ற இவர்களுக்கு, உடல் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

உதவி பொறியாளர் தேர்வு ஒரு லட்சம் பேர் எழுதினர்

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவிப் பொறியாளர் பணிக்கான தேர்வை, ஒரு லட்சம் பேர் எழுதினர். 
தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், 300; சிவில், 50; மெக்கானிக்கல், 25 என மொத்தம், 375 உதவிப் பொறியாளர் பணியிடங்களை, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் போது ஏற்படும் தேர்வு பயம் மற்றும் பதற்றத்தை போக்க, பள்ளிகள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்படும். சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, 19 ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில், கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. 

'செட் தேர்வு குளறுபடி நீக்காவிட்டால் வழக்கு'

கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, பிப்., 21ல் நடக்கிறது. இந்த தேர்வு நடைமுறையிலுள்ள குளறுபடிகளை நீக்க, முதுகலை பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு, 'நெட், ஸ்லெட்' சங்க தலைவர் தங்க முனியாண்டி, பொதுச் செயலர் நாகராஜன் உட்பட சிலர், தமிழக அரசு மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,க்கு மனு அனுப்பியுள்ளனர்.

மருந்தாளுனர் வேலை விண்ணப்பம் வரவேற்பு

சென்னை: சுகாதார துறையில் காலியாக உள்ள, 333 மருந்தாளுனர் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான அறிவிப்பை, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், www.mrb.tn.gov.in இணையதளத்தில், ஆன்லைன் மூலம் பிப்., 17க்குள் விண்ணப்பிக்கலாம்.

காற்றில் பறக்கும் உத்தரவு

அரசு ஊழியர்கள் தேர்வில், ஊழலை ஒழிக்கும் பொருட்டு, மூன்று மற்றும் நான்காவது நிலை ஊழியர்கள் தேர்வில், நேர்காணலை ரத்து செய்யும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், பிரதமர், கோரிக்கை விடுத்திருந்தார். இதையேற்று, உ.பி., தமிழகம், தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள் இதற்கான முயற்சியை துவங்கியுள்ளன. ஆனால், பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத், இந்த உத்தரவை கண்டுகொள்ளவில்லை. அரசின் கடைநிலை ஊழியர்கள் தேர்வுக்கான நேர்காணலை ரத்து செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, மத்திய அரசு தகவல் கேட்டது. 18 மாநிலங்கள், இது குறித்த உறுதியான பதிலை அளித்துள்ளன. பா.ஜ., ஆளும் மாநிலங்களான குஜராத் மட்டுமின்றி, மத்திய பிரதேசமும், இந்த உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதா?: ராமதாஸ் அறிக்கை

எந்த பிரிவினருக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கு சமத்துவம் காக்கும் அரசு என்று விருது வழங்கலாம். ஒரு பிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, இன்னொருபிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறையை பின்பற்றக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு: ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மக்கள் நலப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில், ''மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தை திடீரென்று அவர்கள் துவங்கவில்லை. 

Saturday, January 30, 2016

PAY ORDER FOR 1590 PG POSTS AND 6872 BT POSTS FOR JANUARY 2016

கே.வி.பள்ளிகளில் 'எம்.பி. கோட்டா' சேர்க்கை 10 ஆக உயர்வு

கே.வி.பள்ளிகளில் 'எம்.பி. கோட்டா' சேர்க்கை 10 ஆக உயர்வு
கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.,க்கள் ஒதுக்கீடு, ஆறு இடங்களில் இருந்து, 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.பி.,யும்., ஆறு மாணவர்களை சிபாரிசின் படி, கே.வி., பள்ளிகளில் சேர்க்க முடியும். இந்த ஒதுக்கீடு, வரும் கல்வி ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 10 மாணவர்களை எம்.பி.,க்கள் சிபாரிசு செய்யலாம். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை, சி.பி.எஸ்.இ., இயக்குனர் சந்தோஷ் குமார் மல் பிறப்பித்துள்ளார். மேலும், ஒதுக்கீட்டில் சில திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

சிலிண்டர் சப்ளையில் கமிஷனுக்கு 'குட்பை': மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

சமையல் காஸ் சிலிண்டருக்கு, இணைய தளம் மூலம் பணம் செலுத்தும் திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் ஏஜன்சிகள் மூலம், வீடுகளுக்கு, சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை செய்கின்றன. ஏஜன்சி ஊழியர்கள், சிலிண்டருக்கு, பில் தொகையுடன், 50 ரூபாய் வரை கமிஷன் கேட்கின்றனர்.

10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் திருச்சி மத்திய சிறையின் 67 கைதிகள்

திருச்சி :திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளில், 67 பேர், நடப்பாண்டு, ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.தமிழகத்தில் சென்னை புழல், வேலுார், சேலம், கடலுார், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறையில், விசாரணை மற்றும் தண்டனை கைதிகள், 20,000 பேர் அடைக்கப் பட்டுள்ளனர்.

Friday, January 29, 2016

பிளஸ் 2 தேர்வுக்கு அனுமதிச் சீட்டு: தனித் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் சனிக்கிழமை (ஜனவரி 30) முதல் பிப்ரவரி 1 வரை தேர்வறை அனுமதிச் சீட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை பதிவேட்டுப் பணி : ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி வழக்கு

மதுரை: ஆதார் எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:

புதிய கல்வி திட்டங்களுக்காக யு.ஜி.சி., ரூ.31.27 கோடி ஒதுக்கீடு : பட்டமளிப்பு விழாவில் தகவல்

காந்திகிராமம்: 'புதிய கல்வி திட்டங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.31.27 கோடியை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) ஒதுக்கியுள்ளது' என, காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் தெரிவிக்கப்பட்டது.காந்தி கிராம பல்கலையின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. டில்லி கட்டடக்கலை குழும தலைவர் உதய்சந்திரகாந்த் கட்காரி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். பல்கலை வேந்தர் ரெனானா ஜாப்வாலா தலைமை வகித்து பேசுகையில், “கல்வியை பாடங்களாக படித்தீர்கள். பட்டம் பெற்றபின் நீங்கள், அமைதி வழியில் சமூகத்தை மேம்படுத்த உறுதி கொள்ள வேண்டும்” என்றார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: 'தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கு, இந்த ஆண்டில் தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான தேர்வு அட்ட வணையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி நேற்று வெளியிட்டார். இந்த அட்டவணைப்படி இந்த ஆண்டில், மொத்தம், 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, 35 தேர்வுகள் நடக்க உள்ளன. இதில், 23 தேர்வுகள் மூலம், 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வி.ஏ.ஓ., தேர்வு இருப்பதோ 800; 10 லட்சம் பேர் போட்டி

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங் களுக்கு, பிப்., 28ம் தேதி தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, 10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், சரியான முறையில் விவரங்கள் அளித்து, தேர்வுக்கட்டணம் செலுத்திய மற்றும் கட்டண சலுகை பெற்ற விண்ணப்பதார்களின் விவரம், www.tnpscexams.net இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்ப எண் அல்லது பயனாளர் குறியீட்டை பதிவு செய்து, விவரம் அறியலாம்.

தேர்தல் பணியில் இருந்து விதிவிலக்கு தேர்தல் அதிகாரியிடம் 'ஜாக்டா' மனு

சென்னை: 'வயது முதிர்வு மற்றும் நோய்வாய்பட்டவர்களுக்கு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டா' சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:

ஆசிரியர் பயிற்சி: பிப்., 1ல் சான்றிதழ்

சென்னை: டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பிப்., 1ல், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தொடக்க கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும், இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு, அவர்களின் பயிற்சி நிறுவனங்களில்,

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பள்ளிகள் தோறும் பிப்.10ல் வழங்கல்

விருதுநகர்: சுகாதாரத்துறை சார்பில் பிப்.,10ல் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.மத்தியரசு சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளாக பிப்.,10 கடை பிடிக்கப்படுகிறது. அன்று சுகாதாரத்துறை சார்பில் அங்கன்வாடிமையம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரை வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம் இன்று துவக்கம் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் ஆசிரியர் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதனால், பிப்., 1ல் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, மீண்டும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
நாளை மற்றும் பிப்., 6ல், மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடைபெறும். இதில், வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

பள்ளி பாடத்திட்டத்தில் தொழிற் பயிற்சிகள்: அமைச்சர்

புவனேஸ்வரம்: பள்ளி பாடத்திட்டத்தில் தொழிற்பயிற்சிகள் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மததிய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். நாட்டில் திறன் மி்க்க தொழிலாளர்களின் தேவை அனைத்து துறைகளிலும் அதிகளவில் தேவைப்படுகிறது. இதனை கருத்தி்ல் கொண்டு 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் உள்ள பாடத்திட்டத்தில்

TNPSC : 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் (ANNUAL PLANNER)அட்டவணை வெளியீடு

7 வது ஊதியக்குழுவினை அமுல்படுத்த அமைக்கப்பட்ட உறுப்பினர்கள் முதல் கூட்டம் கூடுகிறது!!!

Nodal officers of different ministries and departments will hold first meeting on February 2 to formulate action points for processing 7th Pay Commission recommendations that have bearing on remuneration of about 1 crore central government employees and pensioners.

An Empowered Committee of Secretaries, headed by Cabinet Secretary P K Sinha, has been set up to process the panel's recommendations that would put an additional burden of Rs 1.02 lakh crore on the exchequer.

ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு Cps தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTER ஆணையாளர் கடிதம்!!! CPS தொடர்பான அனைத்து அரசாணைகளும் நிதித்துறை மூலம் வெளியிடப்பட்டு கருவூலம் மற்றும் கணக்குத்துறை வாயிலாக செயல்படுகிறது.

CPS ல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு  Cps தொகையினை வழங்கத் தேவையான அரசாணை
வெளியிட DATA CENTRE ஆணையாளர் நிதித்துறை முதன்மைச்செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

01.02.2016 மறியல் தொடர்பாக வேலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் சுற்றறிக்கை..


கணினி வழி கற்பித்தலில் கலக்குது கன்னியாகுமரி

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், கணினி வழி கற்பித்தல் மூலம், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அரசு பள்ளிகளை உற்சாகமடைய செய்துள்ளன.மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி, மாநில, 'ரேங்க்' எடுப்பது போன்றவற்றில், அரசு பள்ளிகள் பின்தங்கி இருப்பது வழக்கம். அதிகாரிகளின் நிர்வாக மேலாண்மையிலும் பல குறைபாடுகள் உள்ளதாக புகார்கள் உள்ளன. இந்த குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நவீன தொழில் நுட்பத்தையும், 'டிஜிட்டல் இந்தியா'வின் நோக்கத்தை அடையும் வகையிலும், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ.,வின் இணையதள மேலாண்மை, தென் மாவட்ட அரசு பள்ளிகளை உற்சாகம் அடைய செய்துள்ளது.

Thursday, January 28, 2016

SOCIAL SCIENCE & SCIENCE LESSONS BOOK BACK QUESTIONS ANSWERS

மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் ச.ஜெயந்தி

ஆசிரியர்கள், பெற்றோர் நிலையிலிருந்து பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று ஆட்சியர் ச.ஜெயந்தி பேசினார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர், குமார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கற்றல் அடைவுத் திறன் குறித்து அதிகாரிகள் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் மிகவும் குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன்களில் மாணவர்களது அடைவுத் திறனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: 42,748 பேர் எழுதுகின்றனர்

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 42,748 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வை 52,353 பேரும் எழுதவுள்ளனர்.

மாநிலம் முழுவதிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரையும் நடைபெறுமென கல்வித் துறை அட்டவணை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை வேலூர் கல்வி மாவட்டத்தில் 21,610 மாணவ, மாணவிகளும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 21,138 பேரும் என மாவட்டம் முழுவதிலும் 42,748 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதிலும் 145 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளை...கவனமா கையாளுங்க! ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

திருப்பூர் : "பள்ளிகளில், குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்; பள்ளிதோறும், ஆலோசனை கமிட்டி ஏற்படுத்த வேண்டும்' என, திருப்பூரில் நடந்த, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது.

குரூப் - 2 ஏ தேர்வு விடைகள் வெளியீடு

சென்னை: தமிழக அரசு துறையில் குரூப் - 2 ஏ மூலம் நிரப்பப்படும் நேர்முகத் தேர்வு அல்லாத 1,947 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, ஜன., 24ம் தேதி நடந்தது; எட்டு லட்சம் பேர் எழுதினர்.இந்த தேர்வில், பொது தமிழ், பொது ஆங்கிலம் மற்றும் பொது கல்வி ஆகியவற்றுக்கு, தலா, 300 மதிப்பெண் என, மூன்று தாள்களுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான விடைகளை, அரசு பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.

100 சதவீதம் தபால் ஓட்டு: தேர்தல் அதிகாரி அறிவுரை

சென்னை: 'தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுரை வழங்கினார்.தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளதால், சென்னை மண்டலத்திற்குட்பட்ட, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நேற்று நடந்தது.

பாட வாரியாக ஆசிரியர்கள் விபரம்

விருதுநகர்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகள் மற்றும் முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் விபரங்களை பாடம் வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, பாடவாரியாக உள்ள ஆசிரியர்களின் விபரங்களை ஜன.,27 முதல் ஜன.,29 மாலை 5 மணிக்குள் www.tn.dge.in

நிதி நெருக்கடியில் தள்ளாடுது அரசு அரசு பணியாளர் சங்கம் குற்றச்சாட்டு

சேலம்: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது: அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த முதல்வர், ஐந்து ஆண்டுகளில், எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, தினம் ஒரு நகரம் என, சென்னை, திருச்சி, மதுரையில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழக அரசு, நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, 1.25 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது, 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு,

புகாருக்கு மின் அஞ்சல் முகவரி

உதவிப் பொறியாளர் தேர்விற்கு, 'ஹால் டிக்கெட்'டில் தவறு இருந்தால், 'hallticket@tnebnet.org' என்ற மின் அஞ்சல் முகவரியில் தெரிவிக்குமாறு, தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 375 உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு ஜன., 31ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்த பலருக்கு, ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது. இது குறித்து, மின் வாரியம் வெளியிட்டுள்ள விவரம்:

பிளஸ் 2 தேர்வு பிப். 2 முதல் 'தத்கல்' விண்ணப்பம்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள், பிப்., 2ம் தேதி முதல், 'தத்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, ஏற்கனவே, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல், பிப்., 2ம் தேதி வரை, www.tndge.in என்ற இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, ஹால் டிக்கெட் பெற முடியும்.

முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் மார்ச் முதல் புதிய நடைமுறை

முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் பெறுவதில், புதிய நடைமுறைகளை ரயில்வே வாரியம் கொண்டு வந்துள்ளது.
மின்சார ரயில்கள் இயக்கப்படும் புறநகர் வழித்தடம் தவிர்த்து, தொலைதுார வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் பயணிக்க, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்போர் ஏராளம். இவர்களில், 199 கி.மீ., துாரத்திற்குள் பயணிப்போருக்கு, புதிய விதிமுறை வகுக்கப்பட்டு உள்ளது.

'சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு தமிழக அரசு கல்வி கட்டணம் நிர்ணயிக்க முடியாது'

புதுடில்லி: 'தமிழக அரசின், பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளி
களுக்கு பொருந்தாது என்பதால், அவை, தங்களுக்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை

'இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மற்றொரு பட்டம் படிப்பது வழக்கம். அதே போல், ஒரு தொலை துார கல்வி பட்டம் படித்து கொண்டே, வேறு பல்கலையில் இன்னொரு தொலைதுார பட்டமும் படிப்பர்.இதனால், மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு, இரண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும். எந்த வேலைக்கு என்ன தகுதி தேவையோ, அந்த சான்றிதழை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்து விடுவர்.தற்போது, 'இதுபோன்ற இரட்டை பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என்று, யு.ஜி.சி.,எச்சரித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜாக்டோ தொடர்பு மறியல் காரணமாக 1.2.2016 அன்று பள்ளியை பார்த்துக் கொள்ள மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்


மக்கள் தொகை கணக்கு ஆசிரியர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 வரை அனுமதி

கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான "அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்" டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களுடைய அப்ளிகேஷன் எண்ணைக்கொண்டு உறுதிபடுத்திக்கொள்ளவும்

போலீஸ் தொந்தரவு இனி இருக்காது: சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவலாம் - மத்திய அரசு புதிய உத்தரவு

சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு இனி போலீஸ் தொந்தரவு இருக்காது. அதற்கான பல புதிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை,அருகில் உள்ளவர்கள் காப்பாற்றவே நினைக்கின்றனர். ஆனால் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, இவர்களே குற்றவாளிகள் என்பது போல் பார்ப்பதும், போலீஸார் விசாரணை என்ற பெயரில் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் அடிக்கடி நடக்கிறது.

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை

அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில், எட்டு வயது அரசுப் பள்ளி மாணவி கார்த்திகா, ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.


உலகம் முழுக்க இருந்து பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் கார்த்திகாவும் ஒருவர். தரமணியில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மூன்றாவது படிக்கிறார் கார்த்திகா. அவரிடம் பிடித்த பாடம் எது என்று கேட்டால், 'கணக்குப்பாடம்!' என்ற பதில் அடுத்த நொடியில் வந்து விழுகிறது.

பள்ளிக்கல்வி - அரசு/நிதிஉதவி பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் வெளிநாடு செல்ல பள்ளிக்கல்வி இயக்குனர் அனுமதி பெற்றபின்னரே விடுப்பு அளிக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

Wednesday, January 27, 2016

Constitution of Empowered Committee of Secretaries for processing the Report of the Seventh Central Pay Commission-finmin orders


ஜனவரி 30,31 பிப்ரவரி 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் தொடர் மறியல்

ஜனவரி 30,31,பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்கள் வழக்கமாக வந்து போகும் நாட்கள் அல்ல.

*இடைநிலை ஆசிரியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் நாள்.

இடைநிலை ஆசிரிய நண்பர்களே கடந்த 22 வருடங்களாக நாம் பெற்று வந்த மத்திய அரசிற்கு இணையான ஊதியம் ஆறாவது ஊதியக் குழு நடைமுறைப் படுத்தப் பட்டதில் பறிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் : கல்வி இயக்குனரகம் முடிவு!

நாடு முழுவதும் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும்  ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதார்புகைப்படம் எடுப்பதற்காக சிறப்பு மையங்கள்
திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2016 மே இறுதிக்குள் அனைவருக்கும ஆதார் எண் கொடுக்கும் பணி முடிக்க வேண்டும் என்று மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

ஆதார், ரேஷன் கார்டுகளின் எண்கள் மக்கள்தொகை பதிவேட்டில் இணைப்பு பணி: 10 மாவட்டங்களில் தொடங்கின

அரசின் திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடையும் வகையில் மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார், ரேஷன் கார்டு, கைபேசி எண்களை இணைக்கும் பணி 10 மாவட்டங்களில் தொடங் கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சார்பில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆர்) பொதுமக்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

வீட்டுக் கடன்... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!

லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.

இந்தியாவில் 15,  ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்கள் விநியோகம்: பள்ளி கல்வித்துறை

வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்களை, விண்ணப்பித்த இடங்களிலேயே 27.01.2016  முதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்:பிப்.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பு

ஆம்பூர் ஆனைக்கார் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.தலைமை ஆசிரியர் ஷேக் அப்துல் நாசர் தலைமை வகித்து இதனைத் தொடக்கி வைத்தார்.

ஆசிரியர் சங்கத் தலைவர் தொடுத்த வழக்கு: தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50 சதவீதம் இடங்களை பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பி.எப்., தொகை கணக்கு வைக்காதது கிரிமினல் குற்றம்: அதிகாரி எச்சரிக்கை

ஊட்டி: ''பி.எப்., தொகையை, முறையாக கணக்கு வைக்காமல் இருப்பது, கிரிமினல் குற்றம்,'' என, பி.எப்., கோவை மண்டல உதவி கமிஷனர் ரவிதேஜாகுமார் ரெட்டி எச்சரித்து உள்ளார்.
ஊட்டியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு, 'யு.ஏ.என்.,' எனப்படும், நிரந்தர வைப்பு எண் சேவை பயனுள்ளதாக இருக்கும். அரசு போக்குவரத்து கழக

சென்னையில் இன்று தேர்தல் பயிற்சி வகுப்பு

சென்னை: மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான, தேர்தல் ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, சென்னையில் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களுடனான ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, தலா, எட்டு மாவட்டங்கள் வீதம், நான்கு கட்டமாக நடத்தப்படுகிறது.

தொடக்கக்கல்வி-2015-2016 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு வளர் பயிற்சி-SSA வுடன் இணைந்து நடத்துதல்-மாநில அளவிளான கருத்தாளர் பயிற்சிக்கு தலைமையாசிரியர்களை தேர்ந்தெடுத்து அனுப்புதல்.

12th Common Half Yearly Examination question paper and Answer Key 2015-2016 (UPDATED KEY ANSWERS Computer Scienc version 1 )

12 std Computer Science  key answers download 2015-16 :


income tax excel sheet year 2015-2016 (pages - 4) NEW

10th Common Half Yearly Examination question paper and Answer Key 2015-2016: (UPDATED SOCIAL SCIENCE KEY VERSION I, SCIENCE KEY VERSION 3)

SOCIAL SCIENCE SCIENCE 

K.POOLOGAPANDIAN
KARAPETTAI NADAR HR SEC SCHOOL 
TUTICORIN
9489739377

  T.SAMPATHKUMAR, B.T.ASST.
S.M.H.H.S.S.   -    SIRKALI. NAGAI DT.

TNPSC GROUP IIA TENTATIVE ANSWERS KEY DT:24.01.2016

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES)
(Dates of Examination:24.01.2016 FN)

         1
       2
       3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 3rd February 2016 will receive no attention.

ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்: சென்னை ஆட்சியர்

பொது இடங்களில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

புதிய அரசாணை அரசு வெளியிட வேண்டுகோள்!!! அரசின் திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் சிக்கித்தவிக்கும் 15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி?

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனைகளில் ஒன்றாக 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணைப்படி அரசுப்பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளான 6 முதல் 8 வரையிலான வகுப்புமாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்விமற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளான கணினி, இசை, தையல், தோட்டக்கலை,கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.

Tuesday, January 26, 2016

10th Common Half Yearly Examination question paper and Answer Key 2015-2016: (UPDATED SCIENCE KEY VERSION I, VERSION 2,)

5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல்

கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் மறியல் செய்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


இந்த மறியல் போராட்டத்துக்கு தலைமையேற்ற தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச் செயலாளர் டி.கனகராஜ் கூறியதாவது:

பத்தாம் வகுப்பில் கட்டாய தமிழ் தேர்வு: விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

பத்தாம் வகுப்பில் கட்டாயமாகத் தமிழ் தேர்வு எழுத விலக்கு கோரியவர்களுக்கு விலக்கு அளிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால உத்தரவிட்டது.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று 2006-இல் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.

"தாய்மொழி வழிக் கல்வியே புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும்'

தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே புதுமையான சிந்தனைகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்க முடியும் என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் கூறினார்.

 தமிழ் இலக்கியப் பாசறை மற்றும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச் சங்கம் சார்பில் "கலாமைப் பாடிய கவிக் குயில்கள்' நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஆர்.எஸ். புரம் அன்னபூர்ணா கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு பணி?

பள்ளிகளில் உடற்பயிற்சி அளிப்பது, தேசத்துக்காக தியாகம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில் இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு

இலங்கையில் மாணவர்களுக்கான அழுத்தங்களை குறைக்கும் வகையில் கல்வியில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில்

13 மாதங்களாக சம்பளம் இல்லை துப்புரவு பணியாளர்கள் பரிதவிப்பு

வேலுார்: தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, கடந்த, 13 மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்கள் விரக்தியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதிய அடிப்படையில், நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மாதம், 25 ரூபாய் சம்பளத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்.

'செட்' தேர்வு அவகாசம் தேர்வர்கள் அதிருப்தி

கோவை: பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள, 'செட்' தேர்வுக்கு, குறுகிய கால அவகாசமே இருப்பதால், தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர். கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணி தகுதித்தேர்வான, 'செட்' தேர்வு, மாநில அரசு சார்பில் நடத்தப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார் உட்பட பல பல்கலைகள், மூன்றாண்டுகளுக்குஒரு முறை தேர்வு நடத்துகின்றன.மூன்றாண்டுகளுக்கு பின், அன்னை தெரசா பல்கலை சார்பில், பிப்., 21ல், தேர்வு நடக்கிறது. இது குறித்து, www.setexam2016.in என்ற இணையதளத்தில், விவரம்

ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30, 31 மற்றும் பிப்., 1ல் மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதையடுத்து, அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து, போராட்டம் குறித்து பிரசாரம் செய்யவும் ஜாக்டோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதனால்,

'பேஸ்புக் - வாட்ஸ் ஆப்' ஜோடி வாடிக்கையாளருக்கு வசதிகள்

புதுடில்லி: தகவல் அனுப்ப உதவும், 'ஆப்'களால் எழுந்துள்ள கடும் போட்டியை சமாளிக்க, முன்னணி சமூக வலைதளமான, 'பேஸ்புக்' உடன் இணைந்து, தகவல்கள், ஆவணங்கள் பரிமாற்றம், 'வீடியோ' அழைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளை, 'வாட்ஸ் ஆப்' ஏற்படுத்தித் தந்துள்ளது.
மொபைல் போனில் தகவல் அனுப்ப உதவும், 'வாட்ஸ் ஆப்'புக்கு போட்டியாக, 'லைன், வைபர், மெஸேஜ்மீ, வாக்ஸர், ஹேடெல், டெக்ஸ்ட்நவ், டாக்கடோன், கீக்' என, ஏராளமான, 'ஆப்'கள், மக்களிடையே பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில், வாட்ஸ் ஆப் முன்னணியில் உள்ளது.

'பேஸ்புக்' விமர்சனம்:ஆசிரியர் 'சஸ்பெண்ட்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், முள்ளுவாடி அரசு துவக்கப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி, 34. இவர், முதல்வர் ஜெயலலிதா, தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன், சி.இ.ஓ., மகேஸ்வரி ஆகியோர் குறித்து, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில், அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, தகவல்களை பரப்பி உள்ளார்.

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை: தேர்வுத்துறை அதிரடி உத்தரவு

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்லத்தடை விதித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி 1 முதல் அதிரடி நடவடிக்கைரயிலில் மூத்த குடிமகன் சலுகைக்காக தவறான வயது குறிப்பிட்டால் அபராதம்: ரயில்வே அறிவிப்பு

ரயிலில் மூத்த குடிமகன்கள் சலுகையின் கீழ் பயணிப்பவர்கள் தவறான வயதை குறிப்பிட்டு பயணித்தால், பயணச்சீட்டு இன்றி பயணிப்பதாக அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய கெடுபிடி பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலாகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.

காலையில் டி.டி.சி.பி., - மாலையில் சி.எம்.டி.ஏ., தேர்வு; ஒரே நாளில் நடத்துவதால் தேர்வாளர்கள் குழப்பம்

நகர், ஊரமைப்புத் துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., ஆகியவற்றில், சர்வேயர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்கு, ஒரே நாளில் தேர்வு நடப்பதால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

Central Teacher's Eligibility Test ( CTET ) - Admit Card -2016 published.

Central Board of Secondary Education
Central Teacher's Eligibility Test ( CTET )
Date of Exam - 21.02.2016

Monday, January 25, 2016

இன்று 67வது குடியரசுதினம்: இந்திய தேசம்... இளைஞர்களின் நேசம்

''நாட்டுப்பற்று மிக்க நுாறு இளைஞர்களை தாருங்கள். இந்தியாவையே உயர்த்திக்காட்டுகிறேன்'' என்றார் சுவாமிவிவேகானந்தர். இன்றைக்கு உலகில் அதிக இளைஞர்கள் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த இளம் படை சாதிக்கும் பட்டாளமாக உருவெடுக்க வேண்டுமென குடியரசு தினத்தில் சபதம் ஏற்போம்.

'மொபைல் ஆப்'பில் 'இ - சேவை' மைய தகவல்

சென்னை: அரசு இ - சேவை மையங்களில், பல்வேறு வகையான அரசு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, சொத்து வரி, தொழில் வரி, கம்பெனி வரி, மின் கட்டணம் ஆகியவற்றையும், இ - சேவை மையத்தில் செலுத்தலாம்.

'பள்ளிகள் ஹோம் ஒர்க் கோ - எஜுகேஷன் கூடாது'

புதுடில்லி: புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, தேவையான ஆலோசனைகளை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி, பல்வேறு ஆலோசனைகள் அளித்துள்ளது; அதன் முக்கிய அம்சங்கள்:* காலை, 7:30 மணி முதல், மாலை, 7:30 மணி வரை, 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்* வெளிநாட்டு மொழிகளுக்குபதிலாக, சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டும்* சிறிய வயதில், மாணவர்கள், மிகவும் எளிதாக மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். அதன்படி, தாய்மொழி, சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள்

வாக்காளர் கையேடு வெளியிட்டது கமிஷன்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, முகவரி மாற்றம், எப்படி வாக்களிப்பது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அடங்கிய வாக்காளர் கையேட்டை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு இந்த கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது.
கையேட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:
* தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி இணைய தளத்தில் சரி பார்க்கவும்
* ஓட்டு போட, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் போதாது; உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும்
* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, ஓட்டு போடுவது தொடர்பான தகவல்களுக்கு, '1950' கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்
* ஒரு நபர், ஓரிடத்தில் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும்

டி.இ.ஓ.,க்கள் பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு

மதுரை: தமிழகத்தில் பதவி உயர்வு மூலம் பணியேற்ற மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (டி.இ.ஓ.,க்கள்) நிர்வாக பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை நேற்று ஒத்திவைத்தது. இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி ஜன.,27 முதல் 29 வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி பிப்., 1 முதல் 3 வரையும் சென்னையில் நடப்பதாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் 'நிர்வாக காரணங்களுக்காக இப்பயிற்சி வகுப்புகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,' என கல்வித்துறை அறிவித்துள்ளது.

'ராகிங்' தடுப்பு கமிட்டி கல்லூரிகளுக்கு உத்தரவு

'ராகிங் மற்றும் பாலியல் கொடுமை உட்பட, கல்லுாரி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தடுக்க, ஐந்து வகையான கமிட்டிகளை கட்டாயம் அமைக்க வேண்டும்' என, இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நிபந்தனை விதித்துள்ளது.
ஏ.ஐ.சி.டி.இ.,யின் கட்டுப்பாட்டில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கு அங்கீகாரம் பெற, பிப்., 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டு உள்ளது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் பாடத்திற்கு 'விலக்கு'

சென்னை: 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக பள்ளிகளில், தமிழ் மொழியை கட்டாயமாக்கி, 2006ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, 2006ல், 1ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, அடுத்த அடுத்த ஆண்டுகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டது. கடந்த, 2006ல், 1ம் வகுப்பு படித்த மாணவர்கள், வரும் மார்ச் -ஏப்ரலில்,

10th Common Half Yearly Examination question paper and Answer Key 2015-2016: (UPDATED SCIENCE KEY VERSION I, VERSION 2,)

SCIENCE T.SAMPATHKUMAR, B.T.ASST.

S.M.H.H.S.S.   -    SIRKALI. NAGAI DT.

6 வது ஊதிய குழு ஊதிய பிரச்சனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 159 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் ...


Sunday, January 24, 2016

பள்ளிகளில் 'தமிழ் வாசித்தல் திறன' ஆய்வு செய்ய மாநிலம் முழுவதும் குழு ஆய்வு

தேர்தல் பணி விலக்கு குறித்த அரியலூர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று ( 25/01/16 திங்கள் ) காலை 11 மணிக்கு வாக்காளர் தினத்தை முன்னிட்டு "வாக்காளர் தின உறுதிமொழி " எடுக்கவேண்டும்.... NATIONALVOTERS DAY(NVD PLEDGE)

குடியரசு தினம் என்றால் என்ன? ஒரு பார்வை

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள்,

TNPSC GROUP 2A - ANSWER KEYS

NR IAS ACADEMY TNPSC GROUP 2 A ANSWERS KEY 
TNPSC Group 2(A) 2016 General Tamil - Answer Key - Click Here
TNPSC Group 2(A) 2016 General Knowledge - Answer Key - Click Here
TNPSC Group 2(A) 2016 General English - Answer Key - Click Here

குரூப் 2ஏ தேர்வு: தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது

தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது.
 இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:
 தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர்-நேர்முக எழுத்தர் பதவிகளில் காலியாகவுள்ள குரூப் 2ஏ தொகுதியில் வரக்கூடிய 1,947 காலியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

30-முதல் ஆசிரியர்கள் தொடர் மறியல்

வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜேக்டோ அறிவித்துள்ளது.

கோவை தாமஸ் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஜேக்டோ மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை, ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்புக்கென தனிச் சட்டம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் சிவானந்தா காலனியில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மடத்துக்குளம் வட்டம், கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, செங்கண்டிபுதூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இதில், ராமசாமி கொழுமத்திலும், சிவராஜ் துங்காவியிலும் கிராம நிர்வாக அலுவலர்களாக கடந்த 1999-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர்.

ஆசிரியர் குடும்பத்திற்கு பணப்பலன் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

காளையார்கோவில்:ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டனர், இவர்களின் குடும்பத்திற்கு பணப்பலன் வழங்கவில்லை. தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

தீவிரமாக ஆராய்கிறது பதிவுத்துறை எந்த ஊரில் இருந்தும் பத்திரப்பதிவு சாத்தியமா?

சொத்து அமைந்துள்ள பகுதிக்கு செல்லாமல், எந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், பத்திரப்பதிவு செய்யும், புதிய வசதிக்கான சாத்தியக் கூறுகளை பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது.

தமிழகம் முழுவதும், சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. குறைந்துள்ளது

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை

சென்னை:'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது. 

சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்

வேலுார்:தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் முதுகலை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது.பின், மத்திய அரசு உத்தரவுப்படி, 2013ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படுகிறது.

'ஆல் பாஸ்' திட்டம் மாநிலங்களுக்கு கெடு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்காமல், அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்ய வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது. இந்த திட்டப்படி, 'அனைவருக்கும் கட்டாயமாக பள்ளிக்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கம், சரியாக நிறைவேறவில்லை' என்ற, புகார் எழுந்தது.

TNPSC GROUP 2A - ANSWER KEYS

Vidiyal coaching centre, Vellore
TNPSC GROUP II A VIDIYAL ANSWER KEYS (GENERAL ENGLISH) 

TNPSC GROUP II A VIDIYAL ANSWER KEYS (GENERAL TAMIL) vidiyal coaching centre, vellore

Puthiya vidiya, theni  
GENERAL TAMIL 


TNPSC Group 2A 2016 General Tamil 1-100 ( 24-01-2016 )  CLICK HERE
TNPSC Group 2A 2016 General English 1-100 ( 24-01-2016 ) CLICK HERE CLICK HERE
TNPSC Group 2A 2016 General Studies 101-200 ( 24-01-2016 ) CLICK HERE

TNPSC Group 2A 2016 Answer Key by Iyachamy Academy
TNPSC Group 2A answer key for General Tamil by Iyachamy Academy. Download them by a click. Download
நேரடி நியமனம் மூலம் உதவி பட்டு ஆய்வாளர் மற்றும் இளநிலைபட்டு ஆய்வாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிக்கை

12th Common Half Yearly Examination question paper and Answer Key 2015-2016 (UPDATED KEY ANSWERS Accountancy version 1 )

Saturday, January 23, 2016

இரு ஆண்டுக்கும் சேர்த்து இலவச 'லேப் - டாப்'

தமிழக அரசின் இலவச லேப் - டாப் கிடைக்காதவர்களுக்கு கொடுப்பதற் காக, தமிழ்நாடு மின்னணு கழகம் எனும், 'எல்காட்' நிறுவனத்தினர், 2014 - 15 மற்றும் 2015 - 16 கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து, 10.5 லட்சம் லேப் - டாப்களை கொள்முதல் செய்துள்ளனர். இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரு கல்வியாண்டுக்கும் சேர்த்து தர வேண்டிய லேப் - டாப்கள் அனைத்தும், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி முடிவடைந்தது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 1மெயின் தேர்வு முடிவு தாமதம்

திண்டுக்கல்;தமிழகத்தில் குரூப்- 1 மெயின் தேர்வு முடிந்து ஆறுமாதமாகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாததால் எழுதியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல் நிலை தேர்வு கடந்த ஓராண்டுக்கு முன் நடந்தது. டி.எஸ்.பி., டி.இ.ஓ., சப் கலெக்டர், வணிகவரித்துறை ஆணையர், நகராட்சி கமிஷனர் உட்பட பல பதவிகளில், 79 காலியிடங்களுக்கான தேர்வு நடந்தது.

துணைவேந்தர்கள் இன்றி 8 பல்கலைகளின் பணி முடக்கம்

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பதில், புதியவர்கள் நியமிக்கப்படாததால், எட்டு பல்கலைகளில், துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில், 22 பல்கலைகள் உள்ளன. இவற்றில் வேளாண், மருத்துவம், சட்டம், கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் உடற்கல்வி பல்கலைகளும் அடங்கும். திருச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளியும் பல்கலை அந்தஸ்தில் உள்ளது.

சான்றிதழுக்கு ரூ.6 லட்சம்: போலி பேராசிரியரை தப்பவிட்ட நிர்வாகம்

நாமகிரிப்பேட்டை;நாமக்கல், அரசு கல்லுாரியில், உதவி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி., போலி சான்றிதழ் கொடுத்த பேராசிரியரை, கல்லுாரி நிர்வாகம் தப்பவிட்டதும் தெரியவந்துள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், 2011ம் ஆண்டு தாவரவியல் உதவி பேராசிரியராக, நீலகிரி மாவட்டம், குன்னுாரைச் சேர்ந்த ஜோஸ்பீன் கமோலியா சேர்ந்தார். இவரது, பிஎச்.டி., சான்றிதழின் உண்மை தன்மை அறியும் பொருட்டு, சம்பந்தப்பட்ட, பீஹார் வீர் குன்வார் சிங் பல்கலைக்கு அனுப்பப்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்பெண் டாக்டர்கள் அதிக தேர்ச்சி

சென்னை;இந்திய மருத்துவ துறையில், அரசு உதவி மருத்துவ அதிகாரி பணியிடத்துக்கான மதிப்பெண் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. இதில், பெண் டாக்டர்கள் அதிகளவில் தேர்வாகி உள்ளனர்.

ரிட் மனு என்றால் என்ன? நன்றி ஐயா. Selvam Palanisamy & Councel Sree

தன்னால வழிக்கு வருவாய்ங்க!ன்னு சிலர் பேசுறத கேட்டுருப்பீங்க. அப்படீன்னா என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்.
"WRITTEN ORDER" என்பதைத்தான் ரிட் மனு என்று சொல்கிறோம். அதாவது அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்க சொல்லி நாம் தாக்கல் செய்யும் மனுவிற்கு பெயர்தான் ”ரிட்” மனு. இப்ப புரியுதா? சரி, எது எதுக்கெல்லாம் இந்த மனுவை தாக்கல் செய்யலாம்! என்பதை பார்ப்போமா?
அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கல் தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு “ரிட்” மனு தாக்கல் செய்யலாம்.
பொதுநல வழக்குகளை (PUBLIC INTEREST LITIGATION), பொதுநலம் பாதிக்கும் போது வழக்கு தொடரலாம்.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!