Thursday, March 31, 2016

Election Training Classes - Tentative Schedule

CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஊழியர்களின் பிடித்தத் தொகையில் இருந்து 25% பகுதி தொகையாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு

தேர்தல் நாளில் 30 நிமிட உணவு இடைவேளை தேவை: ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

தேர்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் 30 நிமிடம் உணவு இடைவேளை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனிடம் அளிக்கப்பட்டுள்ள மனு: 

தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கையாக பள்ளி மாணவர்களிடம் தேர்தல் உறுதிமொழி படிவம் வழங்கி பெற்றோரிடம் கையெழுத்து பெற்று வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி திட்டத்தில் வருகிறது மாற்றம் - பிரதமர் மோடி பரிந்துரை

பள்ளிகள் முதல் பல்கலை., வரை கல்வி கட்டமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என நிதி ஆயோக் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளி மாணவர்களே ஆசிரியர்களை மதிப்பீடு செய்யும் முறை கொண்டு வரப்பட வேண்டும். பல்கலை.,களிலும் ஆசிரியர் பயிற்சி கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கிரேடு அடிப்படையிலான கல்வி கொண்டு வரப்பட வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டு, சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றாற் போல் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.

பள்ளி கல்வித்துறை - 6, முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை !


150 கோடி ரூபாய் பாக்கி - வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை ?

தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதால் வரும் கல்வியாண்டில், கட்டாய கல்விச் சட்டத்தின்படி, இலவச மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது' என, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. மத்திய அரசு, 2009ல், கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இதே சட்டத்தை, மாநில அரசுகளும் கொண்டு வந்தன. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆறு வயது முதல், 14 வயது வரையிலான குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் கட்டண செலவை மத்திய அரசே ஏற்கிறது.

கல்வி கட்டண கமிட்டிக்கு அதிகாரி நியமனம்.

கல்விக்கட்டண நிர்ணய கமிட்டியின் சிறப்பு அதிகாரியாக,மெட்ரிக் இணை இயக்குனர் ஸ்ரீதேவிநியமிக்கப்பட்டு உள்ளார்.கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வந்ததும், சுயநிதி தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. 2012 ஜனவரியில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு, இந்த கமிட்டி தலைவரானார்.

வருமானம் ஈட்டும் தாய்/தந்தை விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ இதில் உள்ள விபரங்களை சேகரித்து பூர்த்தி செய்து த ஆ , உ தொ க அலுவலர் வழியாக, மா தொ க அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

இன்ஜினியரிங் விண்ணப்பத்துக்கு டி.டி., தேவையா? அண்ணா பல்கலை திட்டத்தை மாற்ற கோரிக்கை.

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்துக்கு, டி.டி., எடுக்க வேண்டும் என்பதால், மாணவர்களின் பணம், 1.5 கோடி ரூபாய் வீணாகும் என, பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே, நேரடியாக வங்கியில் கட்டண தொகையை செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.'அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' மட்டுமேவிண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துஉள்ளது.

சட்டசபை தேர்தலால் பாதிப்பு எழுத்தறிவில் தமிழகம் பின்தங்குமா?

சட்டசபை தேர்தலால், பள்ளி செல்லா குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, பெயர் விவரங்களுடன் ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்துவர்.

IGNOU- Revaluation Dec 2015 Results Published

IGNOU- Revaluation Dec 2015 Results Published click here ...

தேர்தல் பணிக்கென அறிமுக கூட்டம்-கிருஷ்ணகிரி மாவட்டம் -02.04.2016


TANGEDCO Direct Recruitment Exams Postponed

PGTRB 2014 Appointments Revised Regularisation order for PG and PET


SSLC 2016 PUBLIC KEY ANSWERS DOWNLOAD

BRTE's Regulation Order Soon - ARGTA ARGTA FLASH NEWs

இன்று(30.03.2016) நமதுஅனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்நமது மதிப்பிற்குரிய.SSA, SPD, JDs,DSE, DIRECTOR, JD(P) ஆகியோரை மாநிலத் தலைவர் திண்டுக்கல் ராஜ்குமார், மாநிலபொதுச்   செயலாளர்  விழுப்புரம் வாசுதேவன்,மாநிலபொருளாளர் மதுரை நவநீதக்கிருஷ்ணன் மாநில மகளிர்அணி செயலாளர் கரூர் அபிராமி,மாநில ஒருங்கிணைப்பாளர் காஞ்சிபுரம் ஜான்சன் ,கரூர் DS நித்தியாநந்தன் விழுப்புரம் DPS கோவிந்தராஜி மற்றும் கரூர் மாவட்ட பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ,BRTEs ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் சந்தித்தனர்.

தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள் கலைக்கப்பட்டு அதனை சரியான முறையில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்த்தைகளுக்கான சரியான தமிழ் அர்த்தமும் அதன் எதிரே விடைக்குறிப்பாக கொடுக்கப் பட்டுள்ளது.


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?

பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகலாம் என, தெரிகிறது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளையுடன் பொதுத் தேர்வுகள் முடிகின்றன. மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது; முக்கிய பாடங்களுக்கு, ஏப்., 6 முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.

மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு மின் வாரியம் திடீரென தள்ளிவைத்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 525 தொழில்நுட்ப உதவியாளர்; 50 உதவி வரைவாளர்; 900 கள உதவியாளர் என, 1,475 காலி பணியிடங்களை நிரப்ப, சென்னை,அண்ணா பல்கலை மூலம், ஏப்., 3ல், எழுத்து தேர்வு நடத்த இருந்தது.

எந்தெந்த வங்கிகளில் வீட்டு கடன் (HOUSING LOAN) பெற்றால்,அசல் மற்றும் வட்டிக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும் என RTI மூலம் DISTRICT TREASURY யிடம் கேட்டதற்கு, கருவூலத்துறைக்கு தெரிய வாய்ப்பில்லை என பதில் வழங்கிய கடிதம்


ஒழுங்கு நடவடிக்கை முடிக்கப்பட வேண்டிய காலக்கெடு


கடன்கள் மற்றும் முன்பணம் - அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அரசின் மூலம் பெறப்படும் வீட்டுக்கடனில் கூடுதலாக இனி சூரிய ஒளி மின் தகடுகள் வீட்டின் கூரை மீது பொருத்தப்படுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது - ஆணை வெளியீடு

புதிய ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்து,பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா? மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் !

புதிய ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா? மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் !

Tuesday, March 29, 2016

Department test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீ ட் டி க் கப் பட்டுள்ளது.


Department  test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது

விண்ணப்பிக்க தவறியவா்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: ஏப்., 1 முதல் அமல்


தமிழகத்தில் உள்ள, 20 சுங்கச்சாவடிகளில், ஏப்., 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில், 43 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவை, பல மாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கின்றன. இந்த சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் பராமரித்து வருகின்றன. சுங்கக் கட்டணம் வசூலித்து, சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆண்டுதோறும், சுங்கக் கட்டணத்தை உயர்த்த, சுங்க வசூலிப்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 2015 செப்டம்பர், பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

இதை தொடர்ந்து, ஏப்., 1ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள, 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. தற்போது, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு, 25 ரூபாய் முதல், 75 ரூபாய்; சரக்கு வாகனங்களுக்கு, 300 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், 10 சதவீத கட்டண உயர்வு அமலாக உள்ளது. இதனால், சரக்கு வாகனங்கள் வாடகை உயர வாய்ப்பு உள்ளது.

கட்டண உயர்வு அமலாக உள்ள இடங்கள்

சூரப்பட்டு

வானகரம்

கிருஷ்ணகிரி

வேலன்செட்டியூர்

சாலைப்புதுார்

பள்ளிக்கொண்டா

வாணியம்பாடி

எட்டூர்வட்டம்

கப்பலுார்

நாங்குனேரி

பரனுார்

ஆத்துார்

புதுக்கோட்டை

பட்டரை பெரும்புதுார்

சிட்டம்பட்டி

பூதக்குடி

லெட்சுமணப்பட்டி

லெம்பாலக்குடி

நெமிலி

சென்னசமுத்திரம்

கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம்!!!-


தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய கமிட்டியில், மூன்று மாதமாக, நீதிபதி இல்லை. எனவே, புகார் அளிக்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். தற்போது பணியில் உள்ள சட்ட அதிகாரியும், நாளை ஓய்வு பெற உள்ளார். எனவே, கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், தமிழக அரசு சார்பில், சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், இந்த கமிட்டி செயல்பட்டது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு அடிப்பயில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. தனியார் பள்ளிகள் தரப்பில் இருந்து பல வகையான நெருக்கடிகள் வந்ததால், நீதிபதி கோவிந்தராஜன் பதவியில் இருந்து விலகினார்.

CPS கணக்கில் தங்கள் NOMINEE பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்


CPS கணக்கில் தங்கள் NOMINEE பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்

வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை: இன்று முதல் அமல்


வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தொலைந்து போன, வாக்காளர் புகைப்பட அட்டைக்கு பதிலாக, புதிய மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும், அண்மையில் எடுக்கப்பட்ட, வண்ண புகைப்படத்தை, வாக்காளர் அடையாள அட்டையில் புதுப்பித்துக் கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று முதல், வாக்காளர் அடையாள அட்டையை, வீட்டிலேயே பெற்றுக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

பி.இ. கலந்தாய்வு: ஏப்ரல் 15 முதல் இணையத்தில் மட்டுமே பதிவு: விண்ணப்ப விநியோகம் கிடையாது


2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் www.annaunivtnea.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த முறை விண்ணப்பப் படிவம் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் அண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:-

அகஇ - வீடு கட்ட நிலம் வாங்கியதற்கு, துறை முன்னனுமதி வாங்கியிருந்தால் தான், IT -யில் Housing loan காட்ட முடியும் -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


Monday, March 28, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-M.Com.,M.A.Economics.,படிப்புகளுக்கு ஊக்க ஊதியம் உண்டு. RTI-பதில்.

Tamilnadu Open University Seminar Class Schedule for Bachelor Degree(UG) & Master Degree (PG) Programmes


Tamilnadu Open University

Seminar Class Schedule for Bachelor Degree(UG) & Master Degree  (PG) Programmes

Click Here

இன்ஜி., விண்ணப்பம் எப்போது?ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை.


இன்ஜி., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது என்பது குறித்து, இன்று நடக்கும் இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்பட உள்ளது.அண்ணா பல்கலை இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில், தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கிறது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தாமதம் !


தேர்தலையொட்டி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளும் தாமதமாக நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இம்மாத இறுதியில் வர வேண்டிய சுற்றறிக்கை இதுவரை வராததால் ஆசிரியர் பயிற்றுனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஏப்., மற்றும் மே மாதத்தில் பள்ளி
செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்து கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இவ்வாறு கணக்கெடுக்கப்படும் குழந்தைகள், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

பள்ளித் தேர்வுகளை இனி பிப்ரவரியிலேயே நடத்தலாமே?

மார்ச் தொடக்கமே வெளுத்து வாங்கும் வெயில் காலமாக மாறிவிட்டதால், அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளித் தேர்வுகளை ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி மாதத்திலேயே நடத்தினால் என்ன என்ற கேள்வி கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
பருவநிலை மாற்றம் என்றழைக்கப்படும் மாறுபட்ட காலநிலைச் சூழலில் மழைக் காலம் சுருங்கிப் போய், பரவலாக- சராசரியாக ஆண்டுக்கு 50 நாள்கள்தான் மழை பெய்கிறது. ஆனால், பல நாள்கள்
பெய்ய வேண்டிய மழையின் அளவு, ஓரிரு நாள்களில் கொட்டித் தீர்க்கத் தொடங்கிவிட்டது.

மயில்சாமி அண்ணாதுரை உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் பிரணாப் முகர்ஜி


மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற வண்ணமயமான விழாவில், திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானி, தனது கணவரின் சார்பில் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.

ஏப். 1ம் தேதி முதல் அமல் 18 சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு


மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம், கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

100,101,108 இனி கிடையாது : அவசர உதவிக்கு 112 விரைவில் அமலாகிறது

நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம் என தொலை தொடர்பு  ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரையை தொலைத்தொடர்பு கமிஷன் ஏற்றுள்ளது. இது. ஒருசில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ

Monday, March 21, 2016

Tamilnadu Revised Scales of Pay Rules,2009- Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade/Special Grade in the revised scales of pay - Orders - Issued on GO.237 ( Finance Dept) Dt.22.07.2013 GO.237 ( Finance Dept)

Dt.22.07.2013

Tamilnadu Revised Scales of Pay Rules,2009- Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade/Special Grade in the revised scales of pay - Orders - Issued.


ஏ.டி.எம்., மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!


ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மத்திய அரசு பயிற்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு


மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாநில அரசுப் பள்ளிகளில், பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை உயர்த்த, மத்திய அரசு புதிய முன்னோடி திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்தி, அவர்கள் மூலம், மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர, மத்திய அரசு திட்டமிட்டது.

No more Duplicate PAN Possible – IT Department Gets Smarter No more Duplicate PAN Possible –

There have been numerous instances in the past when while probing tax evasion and black money cases, investigators found duplicate PAN cards being used.  After years of labour, the IT department has finally got a new technology tool to check duplicate PAN cards, allowing them to ‘kill’ it. An ambitious electronic platform called the Income Tax Business Application-Permanent Account Number (ITBA-PAN) has been operationalised.

TNPSC DEPARTMENT EXAM DEC 2015 LIST OF PUBLISHED RESULT -PAPERS DETAILS AS ON 21/03/16


விரைவு தபாலில் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி -மார்ச் 23 முதல் அமல்


மின் வாரிய வேலை தேதியை நீட்டிக்க கோரிக்கை


'தமிழ்நாடு மின் வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாததால், கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியம், உதவியாளர் உட்பட, 2,175 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு, விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். ஒரே நேரத்தில், பலரும் விண்ணப்பித்ததால், இணையதளத்தின் வேகம் குறைந்தது.

Results of Departmental Examinations - DECEMBER 2015 (Updated on 21 March 2016)


Click Here

கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு: பாராளுமன்ற குழு அறிக்கை

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் ஒரு பாராளுமன்ற குழு செயல்பட்டு வருகிறது. பாரதீய ஜனதா எம்.பி., சத்திய நாராயண ஜாத்தியா தலைமையிலான இந்த குழு தனது 274-வது அறிக்கையில், நாட்டின் கல்வித்தரம் குறைந்து போனது குறித்து குறிப்பிட்டுள்ளது.

அதில், கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் பொறுப்பு என கூறப்பட்டுள்ளது.

EMIS - 17.03.2016 முடிய மாவட்ட வாரியாக "ONLINE" இல் EMIS பதிவு செய்த பள்ளிகளின் எண்ணிக்கை விபரம்


Sunday, March 20, 2016

ஆசிரியர்கள் நாள்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்

ஆசிரியர் என்பவர் நாள்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாகவும், தமக்குத் தாமே உந்துதலைக் கொடுத்து முன்னேற்றத்தை அறிவார்ந்த தளத்திலும், ஒழுக்க நிலையிலும் முன்மாதிரியாக விளங்குதல் அவசியம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கூறினார்.

பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்

பிளஸ் 2 தேர்வு தாமதமாகத் தொடங்கிய விவகாரத்தில், முதன்மைக் கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியரை தேர்வுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், வெள்ளிக்கிழமை பிளஸ் 2 விலங்கியல், கணித பாட பொதுத் தேர்வு நடைபெற்றது. இதற்காக தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கே வர வேண்டிய தேர்வு அறை கண்காணிப்பாளர்களான ஆசிரியர்கள் 17 பேரும் வராததால், தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

+2 கணிதத் தேர்வு கடினம்: சேலம் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

தமிழகத்தில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், முழு மதிப்பெண் பெற முடியாது என்ற விரக்தியில், சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வந்தார்.

உயர்கல்வி செயலருக்கு வலுக்கும் எதிர்ப்பு

சென்னை பல்கலையின் ஒருங்கிணைப்பு குழுவில், ஒரு பதவிக்கு, இரண்டு பேரை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதால், இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, உயர்கல்வி செயலருக்கு எதிராக, போர்க்கொடி துாக்கியுள்ள பேராசிரியர் மற்றும் பணியாளர் குழுவினர், இன்று கவர்னரை சந்திக்க உள்ளனர். சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன், ஜனவரியில் ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, தற்காலிக நிர்வாககுழு அமைக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்:'டேக்டோ' வலியுறுத்தல்

மதுரை:மதுரையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு (டேக்டோ) ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மற்றும் 'டேக்டோ' சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தொடர்வது குறித்து ஆராய, திட்டக்குழு துணைத்தலைவர் சாந்தா ஷீலா

பிளஸ் 2 தேர்வில் 'போனஸ்' மதிப்பெண் தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

'பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளில், மதிப்பெண் வழங்குவதில் சலுகை அளிக்க வேண்டும்' என, தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் தேர்வு, மாணவர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாள், மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருந்ததாக, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வுகளில் சிந்திக்க வைக்கும் வினாக்கள்:மனப்பாடத்தை நம்பிய பள்ளிகள் தவிப்பு

சேலம்:பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிந்திக்கும் திறன் கொண்ட வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மனப்பாட முறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்திருந்த தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான மதிப்பூதியம் மற்றும் படிகள்


Saturday, March 19, 2016

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 3 லட்சம் பேர்; போலீசார், 75 ஆயிரம் பேர்; டிரைவர்கள், கிளீனர்கள், 75 ஆயிரம் பேர் என, மொத்தம், 4.50 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட
உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு கடினம்: பி.இ., 'சீட்' கிடைக்குமா?

பிளஸ் 2 தேர்வுகள் கடினமாக உள்ளதால், வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, 'கட் ஆப்' மதிப்பெண் குறையும். அதனால், திறமையான மாணவர்களுக்கே, பி.இ., - பி.டெக்., படிப்பில், விரும்பிய பாடம் மற்றும் கல்லுாரி கிடைக்க வாய்ப்பு உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் முடிந்து, உயர் கல்வியை நிர்ணயிக்கும் முக்கிய பாட தேர்வுகள் நடந்து வருகின்றன. முக்கிய பாடங்களின் மதிப்பெண் தான், இன்ஜி., மற்றும் மருத்துவம் போன்ற உயர் கல்விக்கான வாய்ப்பை முடிவு செய்யும். 

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி: புறக்கணிக்கும் ஆசிரியர்களால் அவதி

சேலம்: விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, ஆசிரியர்களை அனுப்ப மறுக்கும், தனியார் பள்ளிகளின் போக்கு, கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக, மாவட்டங்களுக்கு, இரண்டு முதல், நான்கு மையம் வரை அமைக்கப்பட்டுள்ளது.இதில், மதிப்பீட்டு பணியை தாமதமின்றி முடிக்க,

10ம் வகுப்பு தேர்வு புதிய அறிவிப்பு

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. ஏப்ரல், 7ல் அறிவியல் தேர்வு நடக்க உள்ளது.இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10ம் வகுப்பு 'தியரி' தேர்வு: புதிய அறிவிப்பு

பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுக்கு வராதவர்களுக்கு அறிவியல் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை' என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தமிழ் மற்றும் பிறமொழி பாடங்களுக்கான தேர்வுமுடிந்துள்ளது. 22ம் தேதி ஆங்கிலத்தேர்வு துவங்குகிறது; ஏப்ரல் 7ல் அறிவியல் தேர்வு நடக்க உள்ளது.

பிளஸ் 2 கணித குழப்பத்திற்கு 13 மதிப்பெண்கள் 'கீ ஆன்சர்' தயாரிப்பு குழுவிடம் வலியுறுத்தல்

'பிளஸ் 2 கணிதம் வினாத்தாளில் குழப்ப வினாக்களை கருத்தில்கொண்டு மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் வழங்க 'கீ ஆன்சர்' தயாரிப்பு குழு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்,' என கணித ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு பிளஸ் 2 கணிதம் உட்பட பல பாடங்களிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் 'சென்டம்' பெற்றனர். இதற்கு, 'வினாத்தாள் எளிதாக இருந்ததாகவும், விடைத்தாள் மதிப்பீடு கடுமையாக இல்லை,' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

சத்துணவு வழங்கப்படாததால் மாணவர் வருகை குறைவு ஆசிரியர்கள் சங்கம் புகார்

திண்டுக்கல்:'தமிழக பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படாததால் மாணவர்கள் வருகை சதவீதம் குறைந்துள்ளது' என, தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு 1984 ஜூலை 26ல் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் (சனிக்கிழமை உட்பட) ஆண்டுக்கு 220 நாட்கள் சத்துணவு வழங்க வேண்டும் என அரசாணை வெளியிட்டது. பின், மாதந்தோறும் வாரம் இருமுறை என,மாதம் 8 முறை முட்டை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த சில நாட்களாக சத்துணவு வழங்காததால் மாணவர்கள் மயங்கி விழும் சூழ்நிலை உள்ளதாக ஆசிரியர்கள் சங்கங்கள் புகார் கூறியுள்ளன.

4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு?

சிவகங்கை:தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த நான்-கு லட்-சத்து, 23 ஆயி-ரத்து, 441 அரசு ஊழியர், ஆசிரியர்கள், புதிய ஓய்-வூ-திய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். ஊழியர்களிடம் வசூலித்த தொகை மற்றும் அர-சின் பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. 

கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிளஸ் 1 வகுப்பு இறுதி தேர்வு நடந்து வரும் நிலையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் கீழ், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வு அறை கண்காணிப்பு பணி; விடைத்தாள் திருத்தும் பணி; 'டிஸ்லெக்சியா ' எனப்படும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர் மற்றும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்யும் பணி என, ஆசிரியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

மாதம் ரூ.3,000 சம்பளத்தில் முழுநேர பணி அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள் கொதிப்பு

சேலம்:அரசு பள்ளிகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள், கால முறை ஊதியத்துக்கு மாற்றப்படாததால், நான்கு ஆண்டுகளாக, மாதம், 3,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த, 2012ம் ஆண்டு, 3,000 துப்புரவு பணியாளர்கள், 2,000 இரவுக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.இரு பணியிடங்களுக்கும், அடிப்படை கல்வித்தகுதி, ௧௦ம் வகுப்பு என்ற நிலையில், இரவு காவலர் பணியிடங்களை கால முறை ஊதியத்திலும், துப்புரவு பணியாளர் பணியிடங்களை சிறப்பு கால முறை ஊதியத்திலும் நியமிக்கப்பட்டனர்.

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு 10 மாதங்களாக சம்பளமில்லை

திண்டுக்கல்:தமிழகத்தில், ௧௦ ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு கடந்த, 10 மாதமாக சம்பளம் வழங்காததால் உணவுக்கே பரிதவிக்கும் நிலை உள்ளது. 
தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு அரசு வழங்கும் நலத்திட்ட விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய பட்டப்படிப்புடன், ஓராண்டு கம்ப்யூட்டர் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அரசின் அடிப்படை விவரக் குறிப்பு எழுதுபவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு

வேலூர்:அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதில், 6,௦௦௦க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன.

ஆறு வயதில் சாலை விழிப்புணர்வு பாடம்: விபத்தில்லாமல் ஆயுளுக்கும் தொடரும்

அவசர மயமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய மக்களின் வாழ்க்கையில், 'விபத்து நேருமிடம் பார்த்து செல்லவும்' என்ற வாசகத்தைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அவசரமாய் சென்று, அவர்களின் வாழ்க்கை பயணத்துக்கும் முற்றுப்புள்ளியை வைத்துக்கொள்கின்றனர். 

இதெல்லாம் 100 சதவீத தேர்ச்சிக்கான முயற்சி

வேலுார்:சிறப்பு வகுப்புக்கு செல்லாமல் கட் அடித்த மாணவர்களை, செய்யாறு அரசு பள்ளி ஆசிரியர்கள் தேடித் தேடி அழைத்து, பாடம் நடத்திய வினோதம் நடந்திருக்கிறது. இது, 100 சதவீத தேர்ச்சிக்கான தீவிர முயற்சி என்று, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பில் மட்டும், 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், 100 சதவீத தேர்ச்சிக்காக, பல்வேறு நடவடிக்கைகைள, ஆசிரியர்கள் எடுத்து வருகின்றனர்.

50 லட்சம் போலி ரேஷன் கார்டு தமிழகம் முழுவதும் புழக்கம்

தமிழகத்தில், ௫௦ லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
தமிழக அரசு, ரேஷனில் வழங்கும் பொருட்களுக்காக, ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறது. ரேஷன் கார்டு பெற, தனி சமையல் அறை இருக்க வேண்டும்; நாட்டில், வேறு எங்கும் ரேஷன் கார்டு இருக்கக் கூடாது.

நாளை கணினி அறிவியல் தேர்வு 4 வகை வினாத்தாள் தயாரிப்பு

பிளஸ் 2 தேர்வில் நாளை நடக்கவுள்ள கணினி அறிவியல் தேர்வில், நான்கு வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 தேர்வில், கணினி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நாளை கணினி அறிவியல் தேர்வு நடக்க உள்ளது. தேர்வில், 30 பக்கங்களுக்கு கோடில்லாத விடைத்தாள்கள் வழங்கப்படும்.75 வினாக்களுக்கு...மேலும், ஒரு மதிப்பெண்ணில், 75 வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும். இதற்காக, 'ஆப்டிகல் மார்கிங் ரெகக்னிஷன்' என்ற, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில், இதுபோன்ற வினாத்தாள்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

Revision of Interest rates for small savings schemes- Central Govt


Friday, March 18, 2016

TODAYS CRC SPECIALS 19/03/2016


--CRC- மீட்டிங் -தற்செயல் விடுப்பு -இல்லை -SSA- இயக்குனர் பதில் --டாட்டா கிப்சன் -

SSLC ENGLISH PAPER I AND II IMPORTANT TAMILAGAASIRIYAR COLLECTIONS

PRIMARY & UPPER PRIMARY CRC MODULES 19.03.2016

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-குழு காப்பீட்டு திட்டம் குடும்ப நல நிதி(FBF) ரூ 150000 லிருந்து ரூ 300000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.மாத சந்தா தொகை ரூ 30 லிருந்து ரூ 60 ஆக உயர்த்தி சம்பளத்தில் பிடித்தம் செய்தல் சார்பு

Annamalai university DDE - Examination Results - December 2015

CLICK HERE TO GET THE RESULTS DECEMBER 2015 

DDE - Examination Results - December 2015

Enter Student Roll Number / Register Number  


ஆங்கில உச்சரிப்புக்கு உதவும் 'Syllable Chart' !!

வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு:ஏப்ரல் 1 முதல் அமல்

புதுடில்லி;சாதாரண, நடுத்தர குடும்பங்களை பாதிக்கக் கூடிய வகையில், பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், ஒவ்வொரு காலாண்டுக்கும் மாற்றியமைக்கப்படும் என, மத்திய அரசு, பிப்., 16ம் தேதி அறிவித்தது.

பிளஸ் 2 கணித தேர்வு:புதிய கேள்விகளால் மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 கணித தேர்வில், சில புதிய கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் குழப்பமடைந்தனர்; நீண்ட பதிலளிக்க வேண்டிய கேள்விகளால், நேரமின்றி தவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று கணித தேர்வு நடந்தது.

வினாத்தாளில், ஆறு மதிப்பெண்ணுக்கான கட்டாய கேள்விகளில், 46, 47, 52 மற்றும், 55ம் எண் கேள்விகள், இதுவரை முந்தைய தேர்வில் இடம்பெறாத புதிய கேள்விகளாக இருந்தன

தேசிய விருதுக்குவிண்ணப்பம் வரவேற்பு

சென்னை:சிறந்த கைவினைஞர்களுக்கான, 2015ம் ஆண்டின் தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் கைவினை மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கைத்தறி, கைத்திறன் துறையில், 40 சிறந்த கைவினைஞர்களுக்கு தேசிய விருதுகளும்; துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு, 40 தேசிய சான்றிதழ்களும் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. ஓய்வூதியம்விருது மற்றும் சான்றிதழ் பெறுபவர்களுக்கு, 60 வயதிற்கு மேல், மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். கைவினை மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் ஏற்பாடு செய்யும் சந்தை சார்ந்த விழாக்களுக்கு, ரயிலில் பயணம் செய்ய, 20 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படும்.

விலங்கியலில் தேர்ச்சி எளிது: 'சென்டம்' கடினம்:ஆசிரியர்கள் வருத்தம்

மதுரை:"பிளஸ் 2 விலங்கியல் தேர்வு எளிதாகவும், அதிக எண்ணிக்கையில் 'சென்டம்' எடுக்க முடியாத வகையில் வினாக்கள் இடம் பெற்றுள்ளன," என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.இத்தேர்வு குறித்து ஆசிரியைகள் மெர்லின் (திருமங்கலம் பி.கே.என்., பள்ளி), ஜீவா (பேரையூர் அரசு பள்ளி) ஆகியோர் கூறியதாவது:ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட 30

'கீ ஆன்சர்' தயாரிப்பில் மதுரை ஆசிரியர்கள் குழு

மதுரை:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக பாடங்களுக்கு 'கீ ஆன்சர்' தயாரிக்கும் குழுவில் மதுரை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவதற்குள் பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்கி விட்டன. மொழிப் பாட தேர்வுகள் முடிந்த பின், விடைத்தாள் திருத்தும் பணிகளும் அடுத்தடுத்து துவங்கின.பத்தாம் வகுப்பில் தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் 'கீ ஆன்சர்' தயாரிப்பில், மதுரை ஆசிரியர் குழு ஏற்கனவே இடம் பெற்றது. தற்போது பிளஸ் 2 தேர்வுகளுக்கான 'கீ ஆன்சர்' தயாரிக்க, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு, மதுரை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்லில் அங்கீகாரம் இல்லாத பத்து செவிலியர் பள்ளிகளுக்கு தடை:மாணவர்களுக்கு எச்சரிக்கை

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 10 அங்கீகாரம் பெறாத செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் அங்கீகாரம் பெறாத பல செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்குவதாகவும், இதில் பயின்ற மாணவர்கள் வேலைக்கு செல்லும் போது புறக்கணிப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைகளிலும் இவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்றும்சென்னை மருத்துவ இயக்குனரகத்திற்கு புகார்கள் சென்றன.இதையடுத்து மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா, திண்டுக்கல் நகரில் திடீர் சோதனை நடத்தினார். இதில் அங்கீகாரம் இல்லாத 10 செவிலியர் பயிற்சி பள்ளிகள் சிக்கின.

பிளஸ் 2 கணிதத்தில் 'சென்டம்' எடுப்பது எளிது:மாணவர்கள் உறுதி

ராமநாதபுரம்:பிளஸ் 2 கணிதத்தேர்வு நேற்று நடந்தது. இதில் 200க்கு 200 எடுப்பது எளிதென ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.மாணவர்கள் கூறியதாவது:வி.பாலசந்திரன், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: பகுதி 1ல் முதல் 40 ஒரு மதிப்பெண் வினாக்களில் 26வது கேள்விக்கு மட்டும் பதில் அளிப்பதில் குழப்பம் இருந்தது. புத்தகத்தின் உள்ளிருந்தும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட வினா வங்கியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 6 மற்றும் 10 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினாக்கள் முதல் தொகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. 200க்கு 200 எளிது.

பிளஸ் 2 புவியியலில் 'சென்டம்' கஷ்டம்

மதுரை:பிளஸ் 2 புவியியல் தேர்வில், பாடத்தில் இல்லாத வினா மற்றும் பாடத்திற்கு உள்ளே 'துளைத்து... துளைத்து' கேட்கப்பட்ட வினாக்களாலும் மாணவர்கள் 'சென்டம்' பெறு வது கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து புவியியல் பாட ஆசிரியர்கள் கூறியதாவது:எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் 'பொருத்துக' பகுதிகளில் மாணவர்களை குழப்பும் வகையில் வினாக்கள் இடம் பெற்றன. 'சரியான வாக்கியத்தை தேர்வு செய்து எழுதுக' பகுதியில் இடம் பெற்ற 41, 42வது வினாக்கள் ஒன்று மற்றும் இரண்டாம் பாடங்களில் ஏதோ ஒரு மூலையில் உள்ள 'பாராகிராபில்' ஒரு வரியை கேட்டுள்ளனர். பாடத்தில் இல்லாத வினா

Thursday, March 17, 2016

TNPSC - Results of Departmental Examinations December 2015 List of Tests Published

Click Here - Results of Departmental Examinations December 2015 List of Tests Published

SSLC & HSC 2016 PUBLIC EXAM QUESTION PAPERS AND KEY ANSWERS DOWNLOAD

SSLC TAMIL PAPER - II MARCH 2016 QUESTION PAPERS AND  KEY ANSWERS UPDATED .........

SSLC PUBLIC EXAMS QUESTION PAPERS AND KEY ANSWERS  
2015-2016.

QUESTION PAPERS

KEY ANSWERS

KEY ANSWERS

தில்லி நீதிமன்றம் தடை எதிரொலி: மீண்டும் விற்பனைக்கு வருகிறது `விக்ஸ் ஆக்ஷன் 500'

சில குறிப்பிட்ட கலப்புகளை கொண்ட மருந்துகளை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுக்கு, தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து 'விக்ஸ் ஆக்ஷன் 500' உள்ளிட்ட பிரபலமான மாத்திரைகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.

சில குறிப்பிட்ட கலப்புகளை கொண்ட 340 வகையான மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய சுகாதாரத் துறை மார்ச் 10 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

போனஸ் மதிப்பெண் உண்டா?10ம் வகுப்பு தமிழ் 2ம் தாளில் பிழை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ், இரண்டாம் தாளில் பிழையாகவும், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றதால், போனஸ் மதிப்பெண் வழங்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், இரண்டாம் தாளுக்கு, நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, 41 கேள்விகள் இடம் பெற்று இருந்தன.

பிளஸ் 2 வணிகவியல் தேர்வு:சராசரி மாணவர்களும் 'குஷி'

பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, 'காமர்ஸ்' தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மொத்தமுள்ள, 200 மதிப்பெண்களில், இரண்டாம் பிரிவு (பார்ட் பி) பகுதியில், தலா, நான்கு மதிப்பெண்களுக்கு, 10 கேள்விகளை எழுத வேண்டும். இதில், 'சாய்ஸ்' அடிப்படையில் இடம் பெற்ற, 15 கேள்விகளும், பாடங்களின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. சராசரி மாணவரும் தேர்ச்சி பெறும் வகையில், நேற்றைய தேர்வு அமைந்து இருந்தது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்ஆசிரியர்கள் வலியுறுத்தல்

பிளஸ் ௨ விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்  வலியுறுத்தியுள்ளது. மதுரையில் மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பிளஸ் ௨ விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை

சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு: கணக்கு வினாத்தாள், வாட்ஸ் அப்பில் வெளியானது குறித்து விசாரணை மத்திய அரசு முடிவு.

சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுக்கான கணக்கு வினாத்தாள், வாட்ஸ்அப்பில் வெளியான விவகாரம் குறித்துவிசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மிகவும் கடினம்சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில் இருந்து லட்சக்கணக்கான மாணவ–மாணவிகள் இத்தேர்வை எழுதி வருகின்றனர். 

தனியார் பள்ளியில், மாணவர்கள் தேர்வு எழுத உதவிய ஆசிரியர்கள்: கூண்டோடு இடமாற்றம்

பரமக்குடி, மார்ச். 17–ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் விடைகளை கூறியுள்ளார்.

இதேபோன்று பிளஸ்–2 வேதியியல் தேர்விலும் சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியுள்ளனர். இதுகுறித்து சென்னையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிந்தது.

ஆசிரியர்கள் சம்பளம் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க டிவிசன் பெஞ்ச் மறுப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேரர்வு கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2011–ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

தொடக்க கல்வி அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை

வேடசந்தூர்: ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறாததால் வேடசந்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும், கோவிலூர் பள்ளி ஆசிரியர் செந்தில்குமாரின் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்த கோரியும், மாவட்ட அளவிலான காத்திருப்பு போராட்டம் மார்ச் 9ல் திண்டுக்கல்லில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்காலிகப் பணிநீக்கம் - விளக்கம்

SSLC ENGLISH PAPER I AND II IMPORTANT TAMILAGAASIRIYAR COLLECTIONS

ENGLISH

CLICK HERE TO DOWNLOAD PLUS TWO ENGLISH ALL SHORT CUT ONE MARK ANSWERS ……

English


SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!