TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Saturday, April 30, 2016

AIPMT Question Papers with Answers .............

விர்ர்! எம்.பி.,க்களின் சம்பளம் இரட்டிப்பாகிறது பார்லி., குழு பரிந்துரையால் அதிர்ஷ்டம்

புதுடில்லி : எம்.பி.,க்களுக்கான சம்பளம் மற்றும் பிற படிகளை, 100 சதவீதம் உயர்த்தும் படி, பார்லிமென்ட் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டது. பிரதமர் ஒப்புதல் கிடைத்ததும், எம்.பி.,களின் சம்பள உயர்வு அறிவிப்பு நடைமுறைக்கு வரும்.

தற்போது, எம்.பி.,க்களுக்கு, மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. பிற படிகளாக, 45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த சம்பளம் போதாதென்றும், சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் வலியுறுத்தி வந்தனர்.

வேளாண் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 2016 - 17ம் கல்வியாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் மே 12ம் தேதி துவங்குகிறது.

பல்கலை துணைவேந்தர் ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலையால் நடத்தப்படும், 13 இளமறிவியல் படிப்புக்கு மே, 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். மொத்தம், 2,600 இடங்களுக்கு அரசு விதித்த விகிதாச்சாரப்படி, 65சதவீதம் அரசுக்கும், 35 சதவீதம் தனியார் கல்லுாரிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மே, 12ம் தேதி முதல்

கேள்விக்குறியான ஆய்வக உதவியாளர் நியமனம்

ராமநாதபுரம்;அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனம் கேள்விக்குறியாகி உள்ளதால், தேர்வு எழுதிய எட்டு லட்சம் பேர் தவிக்கின்றனர். அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்தாண்டு மே 31ல் நடந்தது.

'கழிப்பறைகளை சுத்தம் செய்யமாணவர்களை வற்புறுத்த கூடாது

திருப்பூர்;'எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதி களை சுத்தம் செய்யும் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது' என, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவ,- மாணவியர் பள்ளிக்கு வரும்போதும், இடைவேளை நேரம், மதிய உணவு நேரம் மற்றும் பள்ளி முடிந்து வீடு திரும்பிச் செல்லும் போதும், முறையாக கண்காணிக்க ஆசிரியர்களை, சுழற்சி முறையில்நியமிக்க வேண்டும்.

புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை:பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'தேவையற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளி களில், ஏப்., 1 முதல் புதிய
கல்வி ஆண்டுக்கான வகுப்பு கள் நடந்து வருகின்றன. பாடத்திட்ட புத்தகங்கள் மட்டுமின்றி கூடுதல் புத்தகங்களும் வாங்க, மாணவர்களை பல பள்ளிகள் கட்டாயப்படுத்துகின்றன. இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை:வருகிறது மேலும் 7 புதிய நடமாடும் மையம்

சேலம்:தமிழகத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, மேலும், ஏழு நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனம் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தில், மருத்துவக்கட்டணமாக தலா, ஒரு ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்க அரசு திட்டம் நிகர்நிலை பல்கலைகளுக்கு கட்டுப்பாடு தளர வா ய்ப்பு

புதுடில்லி: நிகர்நிலை பல்கலைகள் தொடர்பான சில விவகாரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு சரியாகக் கையாளவில்லை என, மத்திய அரசு கருதுகிறது; எனவே,
அதன் அதிகாரங்களை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள, 'பிட்ஸ்' எனப்படும், பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையம், மும்பை, நார்ஸி மாஞ்சி மேலாண்மை கல்வி மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி கல்வி மையம் உள்ளிட்ட புகழ்பெற்ற சில கல்வி நிறுவனங்களுடன், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிராக, யு.ஜி.சி., உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இவற்றை எதிர்த்து, இக்கல்வி நிறுவனங்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன.

காலி பணியிடங்களுக்கு 'ஆன்லைனில்' நியமனம்

புதுடில்லி:மத்திய அரசின் காலி பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை, 'ஆன்லைன்' மூலம் நியமிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றதும், அரசு பணிகளில் ஏற்படும் காலதாமதம், பண விரயம் மற்றும் காகித பயன்பாட்டை குறைப்பதற்கும், ஊழலை ஒழிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

பொது நுழைவுத்தேர்வு உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு: அசாம் முதல்-மந்திரி தகவல்

பொது நுழைவுத்தேர்வு உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளதாக அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்
கவுகாத்தி : 
நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு மே 1-ந் தேதியும், ஜூலை 24-ந் தேதியும் 2 கட்டங்களாக என்.இ.இ.டி. எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பல மாநில அரசுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் B.Ed சேர்க்கை அறிக்கை

5 ஐஏஎஸ் அதிகாரிகள், 2 எஸ்பி.,க்கள் பயிணிடமாற்றம் !

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் மற்றும் 2 மாவட்ட எஸ்.பி.க்களை பணி இடமாற்றம் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
          சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரூர், திருவாரூர், திருவண்ணாமலை நெல்லை,
புதுக்கோட்டை ஆகிய  5 மாவட்டத்தின் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

Special benefit in cases of death and disability in service— Revision of Disability Pension/Family pension of Pre-2006 disability pensioners/ Family Pensioners


உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் நீதிமன்ற அறிக்கை நகல்

2016-சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர் -6 வருடம் ஒரே இடத்தில் பணி - திருமதி. சபிதா .அவர்களை பணியிடம் மாற்றம் செய்திட தனக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு






TNPSC உதவி புள்ளியியல் ஆய்வாளர் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION | The Tamil Nadu Public Service Commission in its notification dated 07.05.2015 had invited applications from eligible candidates for appointment by direct recruitment against 270 vacancies in the post of Assistant Statistical Investigator in the Department of Economics and Statistics in the Tamil Nadu General Subordinate Service – 2014. The written examination for the recruitment to the said post was conducted on 11.07.2015 F.N & A.N. The II phase of certificate verification to verify and confirm the genuineness of the claims made by the candidates in their applications of the 54 candidates have been scheduled to be held in the office of Tamil Nadu Public Service Commission,

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள்வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம் !

தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்,மே, 3முதல் வழங்கப்படுகிறது.
         இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில்,அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில்,தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில்,துவக்க
வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.

Friday, April 29, 2016

தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் செய்ய வேண்டியது கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது ...

தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது ....கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் மற்றும் தேர்தல்  சமயம் என்பதாலும் பெரும்பாலான 
  1. .பள்ளிகளில் உள்ள முக்கிய பொருட்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் .
  2. abl வகுப்பறையில் உள்ள பொருட்களை சரியாக அடுக்கி அதன் பாதுகாப்புக்கு உறுதி செய்திடல் வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மே இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு?

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அல்லது மே 9-ஆம் தேதியன்று வெளியாகக் கூடும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயி ரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.
இது தொடர்பாக, உச்ச நிதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தேவ், ஏ.கே,கோயல் அமர்வு முன்பு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹாத்கி இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்தார்.

மருத்துவ நுழைவுத் தேர்வு: தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை

மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
 வைகோ: காங்கிரஸ் ஆட்சியின்போது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

5-ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் தேர்வுத் துறை இயக்குநரிடம் புகார்

கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட 5-ஆம் வகுப்பு பருவத் தேர்வு வினாத்தாள்கள், தேர்வுக்கு முன்பாகவே வெளியாகியுள்ளது குறித்து தேர்வுத் துறை இயக்குநரிடம் கலை, ஆசிரியர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

வெம்பாக்கம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா 32 குழந்தைகள் கண்டறியப்பட்டு, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவின்பேரில், வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 64 பஞ்சாயத்துக்களைத் சேர்ந்த 231 குடியிருப்புகளில் 6-14 வயதுள்ள பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

கல்வித் துறையின் முரண்பாடான உத்தரவால் மாணவர்கள் அவதி

பள்ளி வேலை நாள்கள் தொடர்பான கல்வித் துறையின் முரண்பாடான உத்தரவால், மாணவர்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாநில பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலை பள்ளிகளுக்கும்,
12-ஆம் வகுப்பு வரையிலான மேல்நிலைப் பள்ளிகளுக்கும் மொத்த வேலை நாள்கள் 210 ஆகும்.

விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

             இதில், முதல் மூன்று இடங்களை ஆந்திரா, குஜராத், புது தில்லி மாநில மாணவர்கள் பெற்றனர். விஐடி பல்கலைக்கழக வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு (2016) பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வியாழக்கிழமை வெளியிட்டார். இதுதொடர்பாக,

தமிழகத்தில் 5.82 கோடி வாக்காளர் ஆண்களை விட பெண்கள் அதிகம்

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்குமான, துணை வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில், 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2011 சட்டசபை தேர்தலை விட, 1.11 கோடி வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

இ.பி.எப்., வட்டி 8.8 சதவீதம்

புதுடில்லி,:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை, மத்திய அரசு, மீண்டும் 8.8 சதவீதமாக உயர்த்தியது.இ.பி.எப்., வட்டி விகிதத்தை, 2015 - 16ம் நிதியாண்டுக்கு, 8.8 சதவீதமாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய வாரியம் பரிந்துரைத்தது.ஆனால், அதற்கு மாறாக, இ.பி.எப்., தொகைக்கு 8.7 சதவீத வட்டியை மட்டும் வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சகம், சில நாட்களுக்கு முன், ஒப்புதல் அளித்தது.

தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு

சேலம்,: மத்திய அரசு சார்பில், மைசூரில் நடக்கும், பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், மொழிக்கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு, பத்து மாதம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள, 20 மொழிக்கும், அந்தந்த மொழி ஆசிரியர்களை தேர்வு செய்து, ஏழு மையங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: மத்திய அரசு யோசனையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு இன்று மனு செய்திருந்தது.

திட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்:

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 1-ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவ நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மத்திய அரசு சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது. முதற்கட்ட நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி மே 1-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

RTE:25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம்.

தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்,மே, 3முதல் வழங்கப்படுகிறது.இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில்,அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில்,தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில்,துவக்க வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.

தபால் ஓட்டுகளில் மீண்டும் குளறுபடி: செல்லாதவை அதிகரிக்கும் அபாயம்

தேர்தல் கமிஷன் குளறுபடியால், நடப்பு ஆண்டும், தபால் ஓட்டுகளில், செல்லாத ஓட்டுகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.தமிழகம் முழுவதும், சட்டசபை தேர்தல் பணிகளுக்காக, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தங்கள் ஓட்டை, தபால் ஓட்டு மூலம் செலுத்துகின்றனர்.

Changes in National Pension System proposed in the Finance Bill, 2016

Press Information Bureau
Government of India
Ministry of Labour & Employment

27-April-2016 16:52 IST 
Changes in NPS

The Government has proposed the following in the Finance Bill, 2016 with regard to the National Pension System (NPS):

Shri Bandaru Dattatreya, Minister of State (IC)

i. Allowing 40 per cent of the NPS corpus tax exempt on lump sum withdrawal.
ii. Waiving service tax on the NPS corpus utilized for purchase of annuity.

வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெய்ல்- ஜிப் பைல் சேரிங் உட்பட புதிய வசதிகள்.

பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அண்மையில் பாதுகாப்பு அம்சமான ஒருவருடைய தகவலை வேறு யாரும் ஹேக் செய்து பார்க்க முடியாத வகையில் end-to-end encryption ஆப்சனை கொண்டு வந்தது.

நாகை மாவட்டத்தில் தொலை தூர வாக்கு மையங்களில் தேர்தல் பணியால் மண் உளைச்சல் - ஆசிரியர் சங்கம் கவலை.

ஆங்கில கல்வியில் அசத்தும் அரசு பள்ளி!

ராசிபுரம் அருகே, தமிழ் மற்றும் ஆங்கில கல்வியில் தனியார் பள்ளிக்கு இணையாக அசத்தும் கிராமப்புற பள்ளி, தற்போது இட நெருக்கடியால் அவதிப்பட்டு வருகிறது.

ராசிபுரம் அடுத்த, குட்டலாடம்பட்டி பஞ்சாயத்து, மலையம்பாளையம் கிராம சுற்றுப்பகுதியில், 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு நிகராக வாகன வசதி, இசை, நடனம், கராத்தே, யோகா, அடையாள அட்டை என செயல்பட்டு வருவதால், இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

MBBS கட்டாய நுழைவுத் தேர்வால்தமிழக மாணவர்களுக்கு சிக்கல்.

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, 2007 முதல், பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.

Thursday, April 28, 2016

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு: தேதிகளை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

புது தில்லி :அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்ப்பை இன்று வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

குறைந்த விலைக்கு ஸ்மார்ட் போன் சாத்தியமா?

டாகோஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் 888 ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபீரிடம்-251 என்னும் ஸ்மார்ட் போன் 251 ரூபாய்க்கு விற்கப்படும் என விளம்பரம் செய்தது. இதற்காக இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் பலர் முன் பதிவு செய்தனர். முன்பதிவு செய்யும் போது இணையதளம் இயங்காமல் போனதால் அந்நிறுவனம் குறித்து

சாஸ்த்ராவில் பயிற்சி பெற்ற 30 மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இரண்டாண்டு இலவச பயிற்சி வகுப்பில் படித்த 30 மாணவர்கள் இணை நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற்றனர்.
இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.

ITEM NO.90 REGISTRAR COURT. 2 SECTION XII
S U P R E M E C O U R T O F I N D I A
RECORD OF PROCEEDINGS
BEFORE THE REGISTRAR MR. M V RAMESH
Petition(s) for Special Leave to Appeal (C) No(s).
26256-26257/2015
STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRETARY TO GOVT., SCHOOL
EDUCATION (TRB) DEPARTMENT AND ORS.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு: தேதிகளை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

புது தில்லி :அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்ப்பை இன்று வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

தேர்தல் பணியில் ஈடுபடுவோர் நலனுக்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6சட்டமன்ற தொகுதியிலும் தொகுதிக்கு இரு நடமாடும் மருத்துவ குழு கோரிக்கை

பிஎப்புக்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதியமைச்சகம் திடீர் விளக்கம்

பிஎப்புக்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு 2015-16 நிதியாண்டுக்கான வட்டியாக 8.8 சதவீதம் அளிக்க வேண்டும் மத்திய அறக்கட்டளை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 8.7 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது.

வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்

வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–17 ஆயிரம் ஆசிரியர்கள்

புதிதாக விண்ணப்பித்தவர்களையும் சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் ராஜேஷ் லக்கானி பேட்டி

புதிதாக விண்ணப்பித்தவர்களை சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–வேட்புமனு நிராகரிக்கப்படும்
வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் கூடுதலாக ஒரு உறுதி மொழி கடிதம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் ஆணையம்

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அதிவேக சேவையின் மூலம் அசத்துகிறது பாஸ்போர்ட் துறை

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.

நடமாடும் மருத்துவ குழு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனடியாக சிகிச்சையளிக்க, நடமாடும் மருத்துவ குழு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முழு நேரமும் தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அவர்கள், உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில், ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்க வாய்ப்புள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் மிகவும் குறைவாக உள்ளது!

வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
         வாக்குப்பதிவு மையங்களில் 2ஆம் நிலை அலுவலர், 17ஏ பதிவேடு பராமரித்தல், அழியாத மை வைத்தல், பதிவேட்டில் விடுதல் இன்றி
ஞயதுல்லியமாக பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.அப்பதிவேட்டில், வாக்காளர் வாக்களிக்கப் பயன்படுத்தும் வாக்காளர் அட்டையின் எண்ணை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். வாக்காளரிடம் கையொப்பம் பெற வேண்டும். பதிவேடுமுக்கிய ஆவணம் என்பதால் அடித்தல், திருத்தல் மற்றும் தவறுகள் இன்றி கவனமாக பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.வாக்காளரின் விரலில் மையை வைத்துவிட்டு பூத் சிலிப்பில் விவரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

Wednesday, April 27, 2016

நடமாடும் மருத்துவ குழு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர் : "தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனடியாக சிகிச்சையளிக்க, நடமாடும் மருத்துவ குழு ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முழு நேரமும் தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அவர்கள், உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில், ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்க வாய்ப்புள்ளது.

மே மாதம் இட மாறுதல் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர் : மே மாதம் பொது இட மாறுதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர்கள் இடையே வலுத்துள்ளது.
அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பொது இட மாறுதல் வழங்கப்படும். மே மாதத்தில், மாவட்ட தலைநகரங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் தங்கள் விருப்ப அடிப்படையில், புதிய பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவது வழக்கம்.

தேர்தல் பணி நியமன தகுதி சிறப்பு ஆசிரியர்கள் கவலை

திருப்பூர் : "தேர்தல் பணியில், எந்த "கிரேடு' அடிப்படையில் நியமிக்கப்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என, சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி, வாழ்வியல் திறன் கற்றுத்தருவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள், மாணவர்களுக்கு மூன்று மணி நேரம் பாடம் கற்றுத்தருவர். மாதம், 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

மே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற மே 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, மாவட்டம் முழுவதும் மே மாதம் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

கல்வித் துறை எச்சரிக்கையை மீறும் தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
 தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் கடுமையாக உள்ளது. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் உள்ளது. வெயிலுக்குப் பயந்து பெரியவர்கள்கூட வீடுகளில் முடங்கி உள்ளனர்.

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? 8 லட்சம் பேர் பரிதவிப்பு


8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-RTE ACT 2009-பள்ளிகளில் செயல்படுத்தியது தொடர்பான புள்ளிவிவரங்களை அனுப்ப கோருதல் சார்பு


பொது தேர்வு முடிவில் பயமா?'104'ல் சிறப்பு ஆலோசனை

சென்னை,: அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், அச்சமின்றி தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் வகையில், இன்று முதல், '104' சேவையில், சிறப்பு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து '104' சேவை மைய, விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:தமிழக சுகாதார திட்டத்தின் கீழ், தொலைபேசி வழியே மருத்துவ தகவல்கள் தரும், 24 மணி நேர, '104' சேவை மையம் செயல்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு

ஜே.இ.இ., 'ரிசல்ட்' வெளியீடுகுறைந்தபட்ச 'கட் ஆப்' 100

உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற வற்றில் பி.இ., - பி.டெக்., படிப்பதற்கான ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு, நேற்று வெளியானது. குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண், 100 என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
10 லட்சம் பேர்...

விடுப்பு அளிக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம்

சென்னை, தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல், மே, 16ம் தேதி நடக்கிறது. தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்ய, அனைத்து நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்: 8 லட்சம் மாணவர்கள் குழப்பம்

தமிழகத்தில் போதிய நிலமில்லாத, 746 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், மே, 31ம் தேதியுடன் முடிவதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.தமிழக அரசின் நிபுணர் குழு பரிந்துரையின்படி, போதிய நிலம் இல்லாத, 746 தனியார் பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. மீண்டும் அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வித் துறை செயலகம் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'பாடம்' நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

ஆந்திர அரசு ஊழியர்களுக்குஅடிக்குது 'லக்கி பிரைஸ்'

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் நிர்மாணிக்கப்பட்டு வரும் அமராவதியில் பணியாற்றும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, வாரத்தில், ஐந்து நாள் வேலை, 30 சதவீத கூடுதல் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை அளிக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டே நுழைவு தேர்வு?

புதுடில்லி : மருத்துவ படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வை இந்தாண்டே நடத்துவதற்கான கால அட்டவணையை, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் இன்று தாக்கல் செய்ய உள்ளது.

Alagappa University Free Coaching Classes for TNPSC GROUP -1 Main Examination

ALAGAPPA UNIVERSITY FREE COACHING CLASSES FOR UGC-NET 2016 EXAMINATION

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது?- ஓரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ல் ஆரம்பித்து ஏப்ரல்11-ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப் பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத் தில் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன. எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையும் நிலையில்தான் உள்ளது.

பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் !

இன்னும், ஓராண்டு கழித்து வரவுள்ள பொதுத் தேர்வு காய்ச்சல், பள்ளிகளை ஆட்கொண்டுள்ளதால், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!! 100% தபால் ஓட்டு பதிவிற்காக........

தபால் ஓட்டு பதிவு செய்யும் போது  கவனிக்க  ...
முதலில்  கட்சிகளின் சின்னம்  அடங்கிய  துண்டு  சீட்டில் தங்களுக்கு  பிடித்த  சின்னத்துக்கு அருகில்  ✅       டிக் அடிக்க  வேண்டும் .
***** நாம்  அடிக்கின்ற டிக் பக்கத்தில்  இருக்கும்  சின்னத்தில் படாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும
்*****டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.
***stable பண்ணக்கூடாது.*

தொடக்ககல்வி - EMIS ONLINE UPDATION 29/04/2016 குள் அனைத்து பள்ளிகளும் முடிக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


Tamilnadu Open University UG,PG,B.Ed&B.Ed (SE) Timetable for Term End Examination June -2016 Published



Term End Examination June 2016 Time Table


மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் தேதி நாளை முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இராமகிருஷ்ணா உறைவிட உயர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் தேவை


பாவங்களின் 42 வகை

வள்ளலார் பாவங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
அவை வருமாறு:
1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.

24-4-16 அன்று தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் 29_4_16 அன்று நடைபெறும் சிறப்பு வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கான முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல்


நிலுவை ஊதியம் ஒரு இலட்சத்திற்கு மேலாக உள்ள பட்டியலுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரின் ஒப்புதலின்றி செலவினம் மேற்கொள்ளக்கூடாது - நிதி ஒதிக்கீட்டிற்கு மேல் செலவினம் மேற்கொள்ளப்படுவதால் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் - மாவட்ட திட்ட அலுவலக கணக்கு முடிக்கப்பட உள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும் SG/ MG செலவு செய்தது போக மீதம் உள்ள தொகையினை திரும்ப செலுத்துதல் சார்ந்த அறிவுரைகள் வெளியீடு.


Tuesday, April 26, 2016

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர்  சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.

பிஞ்சுகள் செய்த தேர்தல் விழிப்புணர்வு தபால் அட்டை மூலம் புதிய முறையில் 100 சதவிகிதம் ஒட்டு பதிவிற்கு வாக்காளர் விழிப்புணர்வு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் புதிய முறையில் தபால் மூலம் தேர்தல் தகவல் குறித்து கார்டு எழுதி பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவிகித ஒட்டு பதிவிற்கான வாக்காளர் விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தபால் அட்டை வாயிலாக தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திருக்குறளை விளக்கத்துடன் கற்பிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஒய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜரத்தினம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மனப்பாட பகுதியாக அல்லாமல் விளக்கத்துடன் திருக்குறளை கற்பிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 2

வாக்குபதிவு அலுவலர்கள், போலீசார் அனைவரும் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்து, வரவில்லை எனில் மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்குசாவடியில் போதுமான இட வசதி, வாக்காளர்கள் உள்ளே நுழையவும், வெளியேறவும் தனித்தனி வழிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* வாக்குசாவடிக்குள் எந்த ஒரு அரசியல் தலைவரின் படம் இருந்தாலும் அதனை நீக்கிவிட வேண்டும்

வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 1

வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும்

* வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் தங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் அமைவிடம் மற்றும் வழித்தடம் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும்
வாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் 1005 ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு


CRC இல் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு சிறப்பு விடுப்பு உண்டு - தகவல் அறியும் உரிமை சட்டம் 2005

கல்வித் துறை எச்சரிக்கையை மீறும் தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
 தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் கடுமையாக உள்ளது. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் உள்ளது. வெயிலுக்குப் பயந்து பெரியவர்கள்கூட வீடுகளில் முடங்கி உள்ளனர்.

பல லட்சம் தபால் ஓட்டுகள் வீணாகும் அபாயம்!

தேர்தல் கமிஷனின் குளறுபடியான நடைமுறைகளால், நான்கு லட்சம் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. '2014 லோக்சபா தேர்தல் போல், இந்த முறையும் தபால் ஓட்டுகள் வீணாகி விடும்' என, ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு

சென்னை :எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான, தமிழக பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, மே, 2ம் தேதி துவங்க உள்ளது. சென்னை அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரி களில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர, டான்செட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வின், 'கட் - ஆப்' மதிப்பெண்ணின் படி தான், முதுநிலை படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

தமிழக பள்ளிகளில் திருக்குறளின் குறட்பாக்களை விளக்கமாக கற்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

தமிழக பள்ளிகளில் திருக்குறளின் குறட்பாக்களை விளக்கமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு வழங்கியுள்ளது...

மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது. அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும் கல்வித்துறை உத்தரவு.

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை10சதவீதம் அதிகரிக்க உத்தரவு. வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை10சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

எச்சரிக்கைக்கு பின் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள்!

ஓட்டுச்சாவடி பயிற்சி வகுப்பை புறக்கணித்த கல்லுாரி ஆசிரியர்கள்,அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு பின் நேற்று பயிற்சியில் பங்கேற்றனர்.சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லுõரியில் நேற்று முன்தினம் ஓட்டுச்சாவடிகளில் எப்படி செயல்படுவது என்பது குறித்த பள்ளி,கல்லுாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.

வாக்குச்சாவடி உள்ள பள்ளிகள் அனைத்திலும் மின் இணைப்பு பயன்பாட்டில் இருக்க வேண்டும் மாவட்ட,ஆட்சியர் வலியுறுத்தல் !!!

அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட்

அரசு ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றினார்.

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 1930 பேருக்கு நோட்டீஸ் ஆட்சியர் ராஜேந்திர ரத்னு உத்தரவு


மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர் பொறுப்பல்ல-மதுரை நீதிமன்றம் தீர்ப்பு


Monday, April 25, 2016

தேர்தல் பணியாற்றுவதில் இருந்து யார் யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது தேர்தல் கமிஷன் பதில்

அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட்

அரசு ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றினார்.

இவரது முதல் மனைவி முனியம்மாள்; இவருக்கு இரண்டு குழந்தைகள். பாக்கியம் என்பவரை வேலு இரண்டாவது திருமணம் செய்தார். பாக்கியத்திற்கு மூன்று குழந்தைகள். கடந்த, 2003ல் வேலு இறந்தார். பாக்கியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி, அரசின் தலைமை கணக்காயருக்கு மனு தாக்கல் செய்தார். இவரது மனு நிராகரிக்கப்பட்டது.இதை ரத்து செய்யக்கோரி பாக்கியம், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

முதுலை படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை

சென்னை:முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முதுகலை படிக்கு மே 2 முதல் 17-ம் தேதி வரை இணையதளம் வழியாக நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கலாம்.

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்பில் சேர மே 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மே 17–ந்தேதி

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர மே மாதம் 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 17–ந்தேதி என்றும் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை மல்லிகா தெரிவித்தார்.மே 2–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், அறிவியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளில் சேருவதற்கு அச்சடித்த விண்ணப்பம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆன்லைனிலும் விண்ணப்பித்து வந்தனர்.

இபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி.

மத்திய அரசு ஒப்புதல்2015-16-ம் நிதி ஆண்டுக்கான இபிஎப் டெபாசிட் திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் வட்டி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல் அலுவலர்களுக்குதுப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

சிவகங்கை:அச்சுறுத்தலை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.பணப்பட்டுவாடா,தேர்தல் விதிமீறல் குறித்த
புகார்களை மாவட்டத் தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரடியாக சென்று விசாரிக்கின்றனர். பாதுகாப்பின்றி செல்லும் அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

பணியாளர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு?

பணியாளர் பற்றாக்குறையை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டதால், எட்டு பதிவு மாவட்டங்களில், சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு போட வேண்டிய ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய, 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்க, 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.நடைமுறை

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவு

ராமநாதபுரம்:வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில் 10 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர், ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டான்செட் தேர்வு: மே 2 முதல் 17 வரை இணையத்தில் பதிவு செய்யலாம்

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 ஜூன் 11, 12 தேதிகளில் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு, மே 2-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை www.annauniv.edutancet2016  என்ற பல்கலைக்கழக இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கணினி ஆசிரியர்களுக்கான தேசிய விருது: மே 31-க்குள் அனுப்ப கல்வித்துறை அறிவுறுத்தல்

நிகழ் கல்வியாண்டில் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மே 31-ஆம் தேதிக்கு முன் அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களை பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒடிஸா முழுவதும் வாட்டுகிறது வெயில்: பள்ளிகளுக்கு முன்னதாகவே கோடை விடுமுறை

புவனேஷ்வர் : மிகக் கடுமையான கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு நா ளை முதல் கோடை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா மாநில அரசு.ஒடிசாவில் கடந்த சில நாட்களாக 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் வாட்டிவருகிறது. இதனை முன்னிட்டு, ஒடிசாவில், முன்னதாகவே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி நேரத்துக்கு வரம்பு வகுக்க வேண்டும்:காவல்துறை ஆணையருக்கு காவலர் பகிரங்க கடிதம்

காவல் துறையில் பணியாற்றும் தன்னைப் போன்றோருக்கு பணி நேர வரம்பை வகுக்க வேண்டும் என்று தில்லி காவல் துறை ஆணையர் அலோக் வர்மாவுக்கு காவலர் ஒருவர் பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
இது பற்றி காவல் ஆணையர் அலோக் குமார் வர்மாவுக்கு அந்தக் காவலர் அண்மையில் எழுதியுள்ள கடிதம் ஊடகங்களில் கசிந்துள்ளது. அதன் விவரம்:
தில்லி காவல் துறையில் நான் கடந்த 25 ஆண்டுகளாகக் காவலராகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை பணிக் காலத்தில் எந்த தண்டனைக்கும் உள்ளானது கிடையாது. என்னுடன் பணிபுரிந்தவர்கள், பதவி உயர்வு பெற்று தலைமைக் காவலராகவும், உதவி காவல் ஆய்வாளராகவும் உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதிய விவரம்.


Sunday, April 24, 2016

ELECTION-2016:வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?

ELECTION-2016:வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்:          

                                                 ************************                                                           


       பகுதி - I 

1. வாக்குப் பதிவு இயந்திரம் 1/2/3 2. வாக்குப் பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவி - 1 (இவற்றை முறையாக மூடி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மெட்டல் சீல் வைக்க வேண்டும். முகவர்களும் முத்திரை வைக்கலாம்)    

மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு

தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மையங்களில் நடைபெற்று வந்த பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. மார்ச் 14-ஆம் தேதி முதலே தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

108 ஆண்டுகளுக்குப் பின்பு வேலூரில் 111 டிகிரி வெயில்

தமிழகத்தில் வட மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். வேலூரில் இன்று அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் சராசரி வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை  பதிவாகும். கோடை வெயிலின் உச்சமான 'கத்திரி' வெயில் காலத்தில், 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கத்திரி தாக்கத்திற்கு முன்னரே 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவுகிறது.

தரமான கல்வி தருவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: நரேந்திர மோடி

நாடு முழுவதும் தரமான கல்வி தருவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தனது 19-வது 'மன் கி பாத்' வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

பள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை

நாடு முழுவதிலுமுள்ள சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை தெரிவித்தார்.

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பிளஸ் 2 மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, சென்னையிலுள்ள அரசு

தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் அவதி:அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் புலம்பல்

சட்டசபை தேர்தல் தொடர்பாக, ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், தேர்தல் அதிகாரிகள், எந்த அடிப்படை வசதியையும் செய்யாததால், ஆசிரியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சட்டசபை தேர்தல் அன்று, ஓட்டுச்சாவடி மையத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைத்து, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்புதல்; ஓட்டு எண்ணிக்கை போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கோடை துவங்கியாச்சு பெற்றோர்களே உஷார் :அறிவுத்திறன்களை வளர்க்க வழி செய்வோமே:அவசியம் கண்காணிப்பு

பள்ளி வகுப்புகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் நிலையில், தற்போது வெயில் கொளுத்தி வருவதால் தங்களது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் கண்காணிப்பு மிக அவசியமாகிறது. கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகதானகவும் இருக்குமாறு பெற்றோர்கள் பார்த்துகொள்ளவேண்டும்.

BLINDER's VOTE ,TENDER VOTE ! BLINDER's VOTE:

கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் ' 17C' யில் பதிவு செய்ய வேண்டும்.
TENDER VOTE:
சரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

சட்ட மன்ற தேர்தல் - 2016 பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளார்கள்

டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளார்கள் .அதன்படி மாற்று திரனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்கு -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-
நன்றி : TATA KIPSON.

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை !!!

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.
1.வாக்குச்சீட்டில்(*)செய்யவும்
2.உறை(A)யில் வைத்துஒட்டவும்
3.படிவம்   13Aயில் முதல்வரியில் வாக்குச்சிட்டின் தொடர் எண்னை எழுதி
வாக்காளர் கையொப்பமிடவும்
4.இதே படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின்
கையொப்பம் பெறவும்(உயர்/மேல் நிலை.பள்ளி த் தலைமைஆசிரியர்கள்/அரசுமருத்துவர்கள்/----------)

Saturday, April 23, 2016

TAMILAGAASIRIYA SPECIAL - தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் PO , PO 1 ,PO 2,PO 3 பயனுள்ள பதிவுகளின் தொகுப்பு.












அண்ணா பல்கலை இணையதளத்தில் இன்ஜி., கல்லூரிகளின் கட்டண விவரம்

இன்ஜி., கல்லுாரிகளின் பாடப்பிரிவு மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 570 இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இந்த ஆண்டுக்கான அங்கீகார பட்டியல் வெளியிடப்படவில்லை.

சிறந்த ஆசிரியர்களுக்கான விருது பட்டியல் அனுப்ப உத்தரவு

கணினி வழி கல்வி யில், சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க, ஆசிரியர்கள் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களிடம் கணினி வழி கல்வியை ஊக்குவிக்க, மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.

வினாத்தாள் பிழைகளால் 22 மார்க் போச்சு

பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளால், 22 மதிப்பெண் வரை மாணவர்கள் இழந்து, உயர்கல்வி திட்டம் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, இந்த ஆண்டு மார்ச் 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. தேர்வில் வினாத்தாள்களில் பல மாற்றங்கள் இருந்ததால், நுாற்றுக்கு நுாறு என, 'சென்டம்' வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க களம் இறங்கிய கல்வித்துறை

சிவகங்கை: போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத் தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது.
சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார். இதையடுத்து, 2012, 2013ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.

Election -2016:உங்கள் வாக்குச் சாவடியை அறிய....

SMS மூலம் உங்கள் வாக்குச் சாவடியை கண்டரியTypeஎன்று Type செய்து 9444123456 என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்

Click here for SMS Sending Format

இணையதளம் வாயிலாக உங்கள் வாக்குச் சாவடியை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

Download Click Here

SABL ஐ நீக்க முடியாது, முதலைமைச்சர் தனிப்பிரிவு மனு " SABL இல் மாணவர்கள் அடைவுத்திறன் குறைவுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல !!!

SABL பாடமுறையில் மாணவர்களின் கல்வித்தரம் (students education capacity) தேர்ச்சிவிகிதம் குறைந்தால்  (Results low percentage) வகுப்பாசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று அரசாணைகளோ
(No GO ) செயல்முறைகளோ  இல்லை
என்று கூறியதோடு SABL Method Only implemented by the SSA என்று பதில் அளித்துள்ளனர்.

சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பவர்கள் மீண்டும் பெற ஓராண்டுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம்: மத்திய அமைச்சர்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்தவர்கள் மீண்டும் மானியம் பெற ஓராண்டுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக ஈட்டுவோர் அரசின் ‘கிவ் இட் அப்’ திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் தங்களுக்கு வேண்டாம் என்று விட்டுக் கொடுக்கலாம், ஆனால் மீண்டும் மானியம் பெற விரும்பினால் ஓராண்டுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம்.

ALAGAPPA UNIVERSITY (DDE) B.Ed Admission Notification & Prospectus 2016-17

ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 27.04.2016 அன்று பதிவாளர் நீதிமன்றத்தில் கோர்ட் எண்.2 யில் வரிசை எண் 90 ஆவதாக விசாரணைக்கு வருகிறது.


மாணவர் விபரம் புதுப்பிக்கும் பணி; அலட்சியம்!

மாணவர்களின் விவரங்களை புதுப்பிக்கும் பணிகளுக்கான சுற்றறிக்கை அனுப்புவதில், கல்வித்துறை அலட்சியம் காட்டி வருவதால், பள்ளி நிர்வாகத்தினர் பணிச்சுமைக்கு ஆளாகின்றனர்.
மாணவர்களின் விவரங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் தொடர்பாக, பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்புகிறது. தகவல்களை அனுப்ப, குறுகிய நாட்கள் மட்டுமே உள்ள இடைவெளியில் தான் அவை பள்ளிகளைச் சென்றடைகின்றன. இதனால், அத்தகவல்களை முழுமையாக சேகரிக்க முடியாமல் போகிறது. சில நேரங்களில் தகவல்களை சரிபார்க்க ஒரு நாள் அவகாச இடைவெளியில் அனுப்பப்படும்.

தாய்மொழி வழி கல்வி; மத்திய அரசு திட்டம்

அலுவலகப் பணிகளில், ஹிந்தியின் பயன்பாடு குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:
குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி வரை, தாய்மொழி வழி கல்வியை அளிக்க வேண்டும். இது குறித்து மாநில அரசுகளுடன் பேசி, ஒருமித்த கருத்து உருவாக்கப்படும். அதே நேரத்தில், தேசிய மொழியான, ஹிந்தியையும் மாணவர்கள் கற்க வேண்டும்.

கல்வி முறை சீரமைக்கப்படும்!

2016ம் ஆண்டிற்கான  தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, கல்வி  ஓர் பார்வை
சாத்தியம்:
மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு நிகராக அரசு பள்ளிகளின் தகுதியை மேம்படுத்த கல்வி முறை சீரமைக்கப்படும்.

ஆசிரியர் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவு சரியே.

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து,தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள, அரசு உதவி பெறும்பள்ளியில், சரவணபாபுஎன்பவர், இடைநிலைஆசிரியராக, 2012 பிப்., 20ல் நியமிக்கப்பட்டார்; அன்றே பணியிலும் சேர்ந்து விட்டார்.
மறுப்பு
அன்று முதல், பணிக்கான ஒப்புதல் வழங்கும்படி, நாகை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.ஆனால், ஒப்புதல் வழங்க, தொடக்க கல்வி அதிகாரி மறுத்து விட்டார்.

தனியார் கலைக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு கடந்த 15-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண்களால் குழப்பம் சீரமைக்கும் கருவூலத்துறை

 புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை.

National ICT Award for school Teachers-2016 Advertisement


Friday, April 22, 2016

அமெரிக்க கல்வி பெறுவது எப்படி சென்னையில் மாணவர்களுக்கு பயிற்சி

சென்னை,:அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகம் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க துாதரக அதிகாரிகள் கூறியதாவது:அமெரிக்காவில் கல்வி பெற விரும்புவோர், 'எப் 1' விசா பெற வேண்டும். அது தொடர்பான நடைமுறைகளை அறிந்து கொள்ள, மே, 13ல், சென்னை, அமெரிக்க துாதரகத்தில் உள்ள நுாலகத்தில், மதியம், 2:30 மணி முதல், மாலை, 4:00 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

அச்சுப்பிழையால் அதிகபட்ச 'கருணை' பிளஸ் 2 மாணவர்கள் 'குஷி'

மதுரை: பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை காரணமாக மாணவர்களுக்கு இந்தாண்டு 22 மதிப்பெண் 'கருணை' மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.மார்ச் 4ல் பிளஸ் 2 தேர்வுகள் துவங்கி ஏப்.,1ல் முடிவுற்றது. மார்ச் 14ல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி பல மாவட்டங்களில் நேற்றுடன் திருத்தும் பணிகள் முடிந்தன. கடந்த ஆண்டில் அனைத்து பாடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் 'சென்டம்' பெற்றனர். இதனால், விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக கல்வித்துறையில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.இதனால் இந்தாண்டு மாணவர்கள் அதிக 'சென்டம்' எடுப்பதை தவிர்க்க வினாத்தாள் கடினமாக அமைக்கப்பட்டது. அதேநேரம் வினாத்தாளில் அச்சுப்பிழை மற்றும் தவறுகள் அதிகம் இருந்தன.

பள்ளிக்கல்வி - ICT AWARD 2016 - கணினி வழி கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களிடம் இருந்து ICT AWARD காண விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்


தேர்தல் 2016 - PO, P1, P2 , P3 ஆகியோரின் கடமைகள் - தேர்தல் நாள் அன்று, மற்றும் முந்தய நாள் செய்ய வேண்டியவைகள் - EVM, MOCK POLL, SEAL பற்றிய முழுமையான தகவல்கள் - அனைத்தும் எளிய தமிழில் பட விளக்கங்களுடன்

தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு ( தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ) பெறுவோர்க்கு, பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல்- தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரை... (15/04/2016)

தேர்தல் 2016 - P1, P2 , P3 ஆகியோரின் பணிகள்(தமிழில்)


ஆசிரியர்கள் தேர்தல் ஆணையை ரத்து செய்யவோ , மாற்றவோ கூடாது - முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு

G.O.Ms.No.407 Public Dept Dt: April 22, 2016 Holidays - Public Holiday - General Elections to Tamil Nadu Legislative Assembly 2016 - Declaration of the poll day 16.05.2016 as Public Holiday - Notified.


தேர்தல் பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டும்: அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் தேர்தல் பணிகள் தொடர்பாக, மூன்று பயிற்சிக் கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-

இ - சேவை மையங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை பெறலாம்: தமிழக அரசு

தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், அரசு இ- சேவை மையங்கள் மூலம் வழங்கும் புதியநடைமுறை இன்று தொடங்கியது.ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. வரும் கல்வியாண்டில் வழங்குவதற்காக 10 கோடி புத்தகங்கள் தயார்நிலையில் உள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்கள்களுக்கும் EMIS ல் உள்ளீடு செய்து முடிக்க வேண்டும்!

ஏழாவது ஊதியக்குழுவில் 14.28% மட்டுமே ஊதிய உயர்வு , இயக்கங்கள் போர் கொடி !

The 7th pay commission report has failed to address the welfare of employees, said president of confederation of central government employees and workers KKN Kutty.

Criticising strongly, K K N Kutty said it is “totally disappointing and beats logic”.

“It is the only commission, which has reduced the allowances and due to which the growth in net income is only 14.28 percent,” he added.

தபால் ஓட்டு விண்ணப்பிக்க, 24.04.2016 அன்று நடைபெறும் தேர்தல் வகுப்பிற்கு கீழ் கண்ட ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவும். தபால் ஓட்டு விண்ணப்பிக்க,

24.04.2016 அன்று நடைபெறும் தேர்தல் வகுப்பிற்கு கீழ் கண்ட ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவும்.

1.  Voter. ID Xerox

2.  Assambly Name, No.

3.  Serial No.

4.  Part No.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2016 கோடை விடுமுறை நாட்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய குறித்து அறிவுரைகள்

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!
</