Monday, August 1, 2016

ரயில் பாதைகளில் விழும் மனித கழிவு அகற்றும் கருவியை உருவாக்கிய மாணவி

ஊட்டி: ரயில் பாதைகளில் விழும் மனித கழிவை, மனிதனே அகற்றும் அவலத்தை போக்க, ஊட்டி அரசு பள்ளி மாணவி, பிரத்யேக உபகரணத்தை உருவாக்கியுள்ளார். டில்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் (சென்னை) மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து, புத்தாக்க அறிவியல் விருதுக்கான போட்டிகளை நடத்தி
வருகின்றன. தற்போது, மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்து வருகின்றன. ஊட்டி பாக்யாநகர் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும், 8ம் வகுப்பு மாணவி சவுமியா, நீலகிரி மாவட்ட அளவில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 'மலம் அகற்றும் தானியங்கி' என்ற பெயரில் ஒரு உபகரணத்தை, உருவாக்கியதன் வாயிலாக, இவர் தேர்வு பெற்றுள்ளார். ரயில் பெட்டிகளில் இருந்து, பாதையில் விழும் மனித கழிவை, 'சென்சார்' உதவியுடன் தானாகவே உள்ளிழுத்து, ஒரு பெட்டியில் சேகரித்து வைத்து கொள்கிறது இந்த உபகரணம். சோலார் மின்னாற்றலின் உதவியால், உபகரணம் இயங்குகிறது. கழிவு அகற்றப்பட்ட இடத்தில், நறுமண திரவத்தை தெளிக்க, 'புளோயர்' வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. சேகரமாகும் கழிவை இயந்திரத்தின் உதவியுடன் அகற்றும் வகையில், உபகரணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவி சவுமியாவின் தந்தை திருச்செல்வன்; தாய், பூங்கொடி. இருவரும் கூலித் தொழிலாளர்கள். சவுமியா கூறுகையில், ''சிறு வயது முதலே, எனக்கு அறிவியல் பாடம் மீது ஆர்வம் அதிகம். பிரதமரின், 'துாய்மை இந்தியா' திட்டத்தை முன்னிறுத்தியே, இந்த உபகரணத்தை கண்டுபிடித்துள்ளேன்,'' என்றார். மாணவியின் படைப்புக்கு, அறிவியல் ஆசிரியர் சுந்தரம் உதவியுள்ளார். அவர் கூறுகையில், ''மனித கழிவுகளை, மனிதனே அகற்றும் முறையை ஒழிப்பது, சவாலான பணியாக இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இந்த உபகரணம் உதவும்,'' என்றார்.

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!