Tuesday, October 4, 2016

பாட புத்தகம் வழங்குவதில் கல்வித்துறை குளறுபடி

தமிழ்நாடு பாடநுால் கழகத்தில், 'ஆன்லைன்' புத்தக விற்பனையில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதால், புத்தகத்திற்கு பதிவு செய்த மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.தமிழ்நாடு பாடநுால் மற்றும் சேவை பணிகள் கழகம், சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்குகிறது. இவை, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும்,
தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்திற்கும் வழங்கப்படுகின்றன. இதில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்களை நேரடியாக விற்க, ஆன்லைன் பதிவு துவங்கப்பட்டு உள்ளது. ஆன்லைனில் புத்தகங்களை ஆர்டர் செய்வதற்கு, இணையதள வங்கி கணக்கு அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதும், புத்தகம் பதிவு செய்வோரின் இ - மெயில் முகவரிக்கு ரசீது வந்துவிடும்; இரண்டு நாட்களில், உரிய முகவரிக்கு புத்தகம் வந்து சேரும்.
முதலில் சுறுசுறுப்பாக செயல்பட்ட இத்திட்டத்தில் தற்போது, சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பதிவு செய்தால், புத்தகங்கள் கிடைக்க ஒரு வாரம் வரை ஆகிறது. இது, மாணவர்கள் மத்தியில்
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புத்தகம் பதிவு செய்தோர், தங்களுக்கு வர வேண்டிய புத்தகத்தின் நிலையை அறிய, பாடநுால் கழகத்தில் விசாரிக்க, விற்பனை பிரிவு உதவி இயக்குனர், 044 - 2821 5351; புத்தக பதிவு ரசீதில் உள்ள, 044 - 2827 5851 உள்ளிட்ட பல எண்கள் தரப்பட்டுள்ளன.
இந்த எண்களை தொடர்பு கொண்டாலும், யாரும் பதில் தராததால் மாணவர்கள்
தவிக்கின்றனர். 

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!