Tuesday, November 8, 2016

சபாஷ் * நள்ளிரவு முதல் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது * கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் அதிரடி நடவடிக்கை * டிச.30 வரை பழைய நோட்டுகளை மாற்ற அவகாசம் * நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கையை ஆதரிக்க அழைப்பு

புதுடில்லி: (புதன்கிழமை) 09.11.2016 முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். டிச.30க்குள் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்தார். 

நாட்டில் கறுப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிப்பதற்காகவே பிரதமர் இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.


எல்லையில் பாக். ராணுவம்,பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். பின்னர் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் இன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது உரையில் இடம்பெற்றுள்ள துளிகள் விவரம்:
* பொருளாதார வளர்ச்சிக்கு கறுப்பு பணம், மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. 
* ஏழைகளின் நலனுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
* உலக பொருளாதாரத்தில் இந்தியாஜொலிக்கிறது என சர்வதேச நிதியகமான ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.
* ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழித்துக்கட்டுவதே எனது தலைமையிலான அரசின் நோக்கம்..
* சில சுயநல சக்திகள், ஊழலை வளர்த்து வருகின்றன.
*நாடு விரைவாக முன்னேறினாலும் ஊழலும் அதிகரித்து வருகிறது.
* எதிரி நாடுகள் நமது எல்லைக்குள், கள்ள நோட்டை புழக்கத்தில் விடுகின்றன. 
* உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது.
* இதுவரை 1.25 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது. 
* இன்று நள்ளிரவு முதல் ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது. 
* வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை மாற்றிக்கொள்ளலாம். 
* ஏ.டி.எம்.கள் நவ. 9 மற்றும் 10-ம் தேதிகளில் செயல்படாது.
* நாளை வங்கிகள், தபால் நிலையங்கள் செயல்படாது.
* காசோலை, டி.டி. கிரிடிட், டெபிட் ,கார்டு பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
* நவ. 11-ம் தேதி வரை விமான நிலையங்கள்,ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் பெட்ரோல் பங்க்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைபயன்படுத்தலாம்.
* மேலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
* தற்போதைய 500 ,1000 ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து வங்கிகள்,தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
* இனி புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 முக மதிப்பிலான நோட்டுக்களை அரசு விநியோகிக்க உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் 
* ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். 
* நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிரமத்திற்காக வருந்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!