Saturday, December 31, 2016

கல்வி துறையில் 'மாபியா' கும்பல் நடவடிக்கை எடுக்க அரசு திட்டம்

கல்வி உட்பட, பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும், 'மாபியா' கும்பல்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம்

சென்னை, தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து வந்தது.

ஓய்வூதியர் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

சென்னை,: ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மண்டல வைப்பு நிதி கமிஷனர், பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஓய்வூதியம் பெறுவோர், உயிர் வாழ் சான்றிதழ், மறுமணம் செய்யவில்லை

SSA : தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 12.12.2016 & 17.12.2016 அன்று நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொள்ளாதவரக்ளுக்கு மீண்டும் 03.01.2017 & 04.01.2017 அன்று பயிற்சி

SSLC - SCIENCE PRACTICAL EXPERIMENTS TAMIL & ENGLISH MEDIUM

CLICK HERE TO DOWNLOAD - X Science Practical Expts TM FOR 2016


CLICK HERE TO DOWNLOAD - X Science Practical Expts EM FOR 2016


நன்றி      ; MR.RAVIKUMAR
                   Headmaster, Govt. High School, Pasmarpenta,
                   Vellore - 635810 Ph: 9994453649 

SSA - மாவட்டம்தோறும் 2000 மாணவர்களுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலா - இயக்குனர் செயல்முறைகள்


கற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஐனவரியில் சிறப்பு பயிற்சி: அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க ளின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஜனவரியில் சிறப்பு பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி
இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில்மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனமும் அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து அவர்களுக்கு அவ்வப்போது பணியிடைப் பயிற்சியை அளித்து வருகின்றன.

விரைவில் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான பணம் வங்கிகளில் வைக்கப்படும்: பிரதமர் மோடி உரை

புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை (31.12.2016) இரவு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.தீபாவளிக்கு பிறகு கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கருப்பு பணமும், ஊழலும் நேர்மையானவர்களையும் வீழ்த்தி விடுகிறது. ஊழலை ஒழிக்க ஒலு நல்ல வாய்ப்புக்காக இந்திய மக்கள் காத்திருந்தனர். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அரசின் நடவடிக்கையால் நேர்மையான மக்களும் கடும் சோதனைக்கு ஆளாகினர். மக்கள் தாங்கள் பட்ட துன்பங்களை என்னுடன் பகிர்ந்துள்ளனர்.

''ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவி''

Image may contain: 2 people, people sitting and crowdதனது பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த மாவட்ட ஆட்சியரைப்போல நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று உறுதிகொண்டு, அதைச் செய்துகாட்டிய சாதனையாளர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த வான்மதி.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு

பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. பள்ளிகள் மூலம் சுமார் 20 லட்சம் மாணவ,
மாணவியர் மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகளை எடுத்து படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

Friday, December 30, 2016

பிம் (BHIM app)ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது???

பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) எனற் புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப்ஸ், ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு செயல்படும். ஐஓஎஸ் ( ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும்.     

இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.

ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் ரூ.4,500 எடுக்கலாம்

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.

மருத்துவம் படித்தவர்கள் சிகிச்சை அளிக்க "நெக்ஸ்ட்' தகுதித் தேர்வு

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பயின்றவர்கள், பதிவுபெற்ற மருத்துவர்களாகச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், தேசிய அளவிலான தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை கூறியதாவது:

2 வாரங்களில் வருகிறது ஆதார் அடிப்படையில் பண பரிவர்த்தனை முறை: மோடி தகவல்

புதுடெல்லி : ரொக்கம் குறைவான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆதார் தளத்தை பயன்படுத்தி பயோமெட்ரிக் மூலம் பரிவர்த்தனை செய்யும் முறை இன்னும் 2 வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டெல்லியில் நேற்று, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டவர்களுக்கு குலுக்கல் மூலம் பரிசு வழங்கும் டிஜிதன் மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, செல்போன் நம்பரை பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்யும் `பீம்' என்ற ஆப் அறிமுகம் செய்து வைத்தார். 

எம்பிபிஎஸ் முடித்தாலும் தகுதி தேர்வு உண்டு

புதுடெல்லி : எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு எழுத வகை செய்யும் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியின் தரம் குறித்து நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான உயர்நிலைக் குழு கவலை தெரிவித்திருந்தது. இதையடுத்து தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் தேசிய தகுதி தேர்வு எழுதினால்தான் டாக்டராக பணிபுரிய வகை செய்யும் வரைவு மசோதாவை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அடுத்து என்ன நடவடிக்கை? பிரதமர் மோடி இன்று அறிவிப்பு

புதுடெல்லி : ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு நேற்றுடன் 50 நாள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.

ஒரு நொடி தாமதமாக பிறக்கிறது 2017 புத்தாண்டு!


புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வருகிற 2017-ஆம் ஆண்டு ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் என்று கால அளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனால் ஏற்படும் காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில் உலகக் கடிகாரத்தில் செயற்கையாக "லீப்' நொடி ஒன்றை சேர்க்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப்...'பீம்!' :டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப்...'பீம்!' :டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்
புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன்படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அடுத்தகட்டமாக, 'பீம்' என்ற பெயரில், புதிய மொபைல் ஆப், பிரதமர், நரேந்திர மோடியால் நேற்று, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டில்லியில் நேற்று நடந்த, டிஜிட்டல் பரிவர்த்தனை விழாவில், இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.

எண்ணிக்கையில் குறைவு; கல்வியில் நிறைவு : மாணவர்களை வழிநடத்தும் அரசுப்பள்ளி


பசுமையின் மத்தியில் எழில் கொஞ்சும் கிராமத்தின் மத்தியில், தேயிலை எஸ்டேட்டுகளை அரணாக கொண்டு ஒரு பள்ளி செயல்படுகிறது என்றால் அது தாய்முடி முதல்பிரிவு அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியாகும்.


இந்தப்பள்ளியில் எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் தான் அதிக அளவில் படிக்கின்றனர்.கடந்த, 1959ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பள்ளியில் ஆரம்ப காலத்தில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். 

மகாளய அமாவாசை விடுமுறையில் சேர்ப்பு

வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை பட்டியலில், 'மகாளய அமாவாசை' சேர்க்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு அறிவித்த, 2017க்கான, வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில், சித்ரா பவுர்ணமி, ஆடி பெருக்கு, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, புத்த ஜெயந்தி, மாசி மகம் உட்பட, 32 பண்டிகைகள் இடம் பெற்றுள்ளன.

G.O Ms.No. 122 Dt: December 28, 2016 -RESTRICTED HOLIDAYS - Inclusion of MAHALAYA AMAVASAI in the list of Restricted Holidays - Orders - Issued.

TNTET Duplicate CertificateTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Duplicate certificate பெறுவது எப்படி TRB அதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது. பயன்படுத்தி கொள்ளவும்...

அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும் இணையம் ?

Image result for internetதமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தற்போது அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும்   
இணையம்(INTERNET)வசதியுடன் மோடம், புதியகணினி, சாம்சங்M2876FD  Multifunctionபிரிண்டர்,  மேசை, நாற்காலி, 3 பேட்டரிகளுடன் இன்வேட்டர் வசதி பொருட்கள் வந்து கொண்டு உள்ளது. புத்தாண்டு பரிசாக Internet மாதச்செலவினத்திற்கு 32 மாவட்டங்களுக்கும் ஆண்டொண்டிற்கு ஏறத்தாழ

Thursday, December 29, 2016

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டி - வரும் 3-ம் தேதி நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டி - வரும் 3-ம் தேதி நடைபெறுகிறது.

PRIMARY - 3 rd TERM FA(a) & FA(b) ACTIVITIES, DICTATION WORDS & TAMIL MEANINGS

WAY TO SUCCESS - SSLC - SPECIAL GUIDE FOR ALL SUBJECTS (TAMIL & ENGLISH MEDIUM)

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான குருவளப்பயிற்சி 21.01.2017 primary and upper primary 28.01.2017

JAN 2017 CRC 

 PRIMARY        : 21.01.2017 

 UPP.PRIMARY: 28.01.2017

எழுதுங்கள் ஜே.இ.இ.,!

நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கை பெற எழுத வேண்டிய தேசிய நுழைவுத் தேர்வான, ஜாயின்ட் என்டரன்ஸ் எக்சாமினேஷன் (ஜே.இ.இ.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது! மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) நடத்தும் இந்த பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்

கோவை: கற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின.தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

பழைய நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு 'வாபஸ்'

வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்கு பிறகு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற முந்தைய முடிவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

January 2017 Diary


  • 2-Schools reopen
  • 7-Grievance day
  • 9-RL-Karvin mukaithin kathar
  • 11-RL-Arudhra dharsan

மின்னணு பரிவர்த்தனை பழநி கிராம மக்கள் ஆர்வம் 'ஆதார்' எண் மூலம் பரிமாற்றம்


பழநி:பழநி பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆதார் எண் மூலம் பணம் செலுத்தல், எடுத்தல் உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர்.


பிரதமர் நரேந்திரமோடியின் 'டிஜிட்டல்' இந்தியா திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் கிராமப்புறங்களிலும் மின்னணு பரிவர்த்தனை விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. 

தினமலர் 'லட்சிய ஆசிரியர் 2016' விருது; டி.இ.ஓ., வழங்கினார்


மதுரை: "மாணவர்கள் திறமையை கண்டறிந்து அவர்கள் மனதில் இடம் பிடிப்பதே ஆசிரியர் பணியின் உண்மையான வெற்றி," என மதுரையில் தினமலர் நாளிதழ் சார்பில் நடந்த 'லட்சிய ஆசிரியர் --2016' விருது வழங்கும் விழாவில், மதுரை மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) முருகானந்தம் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணியை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தினமலர் நாளிதழ் சார்பில் 'லட்சிய ஆசிரியர்' விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கு தேர்வான 25 பேருக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.

தொகுப்பூதியம் ரூ.40 உயர்வு

சென்னை: தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு, மாதம், 20 முதல், 40 ரூபாய் வரை உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், அரசு அலுவலர்களுக்கு, ஜூலை, 1 முதல், அகவிலைப் படியை உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு: இன்று கடைசி நாள்

புதுடில்லி : செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கு, இன்று(டிச.,30) கடைசி நாள்.

வாபஸ்:

நவம்பர், 8ம் தேதி இரவு, தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள், நள்ளிரவு முதல் செல்லாது' என அறிவித்தார். எனினும், அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்து, அதற்கு பதிலாக, செல்லத்தக்க நோட்டுகளை பெற, அவகாசம் அளிக்கப்பட்டது. உரிய அடையாள சான்று காட்டி, எந்த வங்கியிலும், நாளொன்றுக்கு, 4,000 ரூபாய்க்கு மிகாமல் பெறலாம் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.

Wednesday, December 28, 2016

செல்லாத ரூபாய் நோட்டு நாளை கடைசி நாள்

செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கு, நாளை கடைசி நாள். நவம்பர், 8ம் தேதி இரவு, தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள், நள்ளிரவு முதல் செல்லாது' என அறிவித்தார். எனினும், அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்து, அதற்கு பதிலாக, செல்லத்தக்க நோட்டுகளை பெற, அவகாசம் அளிக்கப்பட்டது. 

10 வகுப்பு தமிழ் பாட தேர்வுக்கு விலக்கு : அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் வழி கல்வி பயிலாத மாணவர்களுக்கு, தமிழ் மொழி பாடம் எழுத, மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்புபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

சென்னை: அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.ஜெ., முதல்வராக இருந்த போது, அவரை, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளால், எளிதில் சந்திக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தை, அனைத்து தரப்பினராலும், எளிதாக சந்திக்க முடிகிறது. சென்னை, தலைமை செயலகத்தில், தமிழ்நாடு தலைமை செயலக சங்கத் தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள், முதல்வரை சந்தித்தனர்.

இ - சேவை மையத்தில் இனி வேலைக்கேற்ற ஊதியம்

தமிழகத்தில், அரசு, 'இ - சேவை' மைய ஊழியர்கள், பணியில் அலட்சியம் காட்டுவது, ரகசிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஊழியர்களுக்கு, வேலை அடிப்படையில் ஊதியமும், ஊக்கத் தொகையும் தர, அரசு முடிவெடுத்துள்ளது. 

பேராசிரியர் நியமன பேச்சு நடத்த குழு: ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பேராசிரியர் நியமனம் தொடர்பாக, நேரடி பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2012ல், சட்டசபையில், 110 விதியின் கீழ், '162 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 3,120 காலியிடங்கள் நிரப்பப்படும்' என, அறிவித்தார்.

கம்ப்யூட்டர் மூலம் பாடம் சொல்லித் தரும் திட்டம் (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) சுருக்கமாக ஐ.சி.டி.

 பெரிய, பெரிய தனியார் பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் லேப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித்தரக்கூடிய
வசதிகள் இருக்கின்றன. எனவே தனியார் பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவில் திறமையானவர்களாக இருக்கின்றனர். இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்கும் திட்டத்தை (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின் போது அறிவித்தார்.

RTI - மூலம் தகவல் பெறுபவர் மற்றும் பெறப்படுபவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 01.12.2016 அன்றைய நிலைப்படி உதவி / கூடுதல் / மழலையர் / அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு


Tuesday, December 27, 2016

அரசு உதவிபெறும் பள்ளியில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து உத்தரவு.

TET சிலபசில் மாற்றம் வருமா ? -ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

POLYTECHNIC EXAM RESULTS 2016

பாலிடெக்னிக் படிப்புக்கான அக்டோபர் மாதம் நடந்த தேர்வு முடிவுகள் 28-12-2016அன்று வெளியிடப்பட உள்ளதாக தொழில்நுட்ப கல்விஇயக்ககம் அறிவித்துள்ளது.
POLYTECHNIC EXAM RESULTS Click here link ...

தற்போது EMIS இணையதளம் Open ஆகியுள்ளது


குடும்ப அட்டைக்கு மீண்டும் “உள்தாள்” மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது தமிழக அரசு..

IAS தேர்வு என்றால் என்ன ? உங்களுக்கு தேவையான விவரங்கள் இதோ.....!!!

IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் பிரநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்....

சபாஷ் தலைமை ஆசிரியை !!!! தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி! (நமது கிருஷ்ணகிரி மாவட்டம்)

அரசுப் பள்ளியில் அடிப் படை வசதிகள் மற்றும் ஆசிரியர் கவனிப்பு
Image may contain: 3 people, people sitting and textகுறைவாக இருக்கும்’ என்ற பொதுக்கருத்தை மாற்றிக் காட்டியிருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி! காரணம், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி. தன் சக ஆசிரியர்களுடன் கைகோத்தும், பல தரப்பிடம் இருந்து உதவித்தொகை பெற்றும் நூலகம், கலையரங்கம், கணினி ஆய்வகம், சிசிடிவி கேமராக்கள் என இந்த மாற்றத்தை இங்கு மலர்த்தியிருக்கிறார்!
‘‘இந்தப் பள்ளிக்கு,2012-ம் ஆண்டு பணி மாறுதலில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றபோது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. மழைபெய்தால் வகுப்பறைக்குள் நீர் ஒழுகும்; தரை குண்டும் குழியுமாக இருக்கும். கணினி, நூலகம் போன்ற கல்வி வெளிச்சங்கள் இல்லை என பலவும் இங்கே இல்லை.

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் !!

இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.

சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.

ரேஷன் கார்டுகளில் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்ட உத்தரவு

சென்னை: ரேஷன் கார்டுகளில், ஓராண்டுக்கு உள்தாள் ஒட்ட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, முதன்மை செயலர் பிரதீப் யாதவ் கூறியுள்ளதாவது:தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஜன., 1 முதல், டிச., 31 வரை நீட்டிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.

301 'ஆதார்' உதவி மையம் இன்று முதல் செயல்படும்

சென்னை: 'தமிழகம் முழுவதும், 301 இடங்களில், 'ஆதார்' உதவி மையங்கள், இன்று முதல், பிப்., 28 வரை செயல்படும்' என, அரசு அறிவித்துள்ளது. 
தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், 339; தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில், 206 என, மொத்தம், 545 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படுகின்றன.ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, ஆதார் எண் அல்லது அட்டை கிடைக்கப் பெறாதவர்கள்,

பாலிடெக்னிக் தேர்வு இன்று 'ரிசல்ட்'

சென்னை: பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வரும் மாணவர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், அக்டோபரில் பட்டயத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள்,

இரண்டு ஊக்க ஊதியம் : தொழிற்கல்வி ஆசிரியர் மனு

சென்னை: 'தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, உயர் கல்விக்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொது செயலர் ஜனார்த்தனன், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர், நேற்று, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

ரேஷன் புகார் பதிவேடு : ஊழியர்களுக்கு உத்தரவு

ரேஷன் கடைகளில், புகார் பதிவேட்டை, மக்கள் பார்வைக்கு வைக்காமல், ஊழியர்கள்அலட்சியமாக உள்ளனர். ரேஷன் கடைகளில், புகார் பதிவேடு என்ற நோட்டு உள்ளது. அதில், மக்கள், தங்களின் புகார்களை எழுதுவர். தற்போது, பல கடைகளில், புகார் பதிவேடு இல்லாததால், மக்கள் புகார் செய்ய முடியாமல், சிரமப்பட்டு வருகின்றனர். 

Monday, December 26, 2016

அனுமதி கடிதம் எழுத தெரியாத அரசு ஊழியர்கள் : ஆய்வில் 'திடுக்'

Image result for tamil language
'அரசு ஊழியர்களில் பலருக்கு அனுமதி மற்றும் விடுப்பு கடிதம் கூட, முறையாக தமிழில் எழுத தெரியவில்லை' என, தமிழ் வளர்ச்சித் துறை
ஆய்வில் தெரியவந்துள்ளது.அனைத்து துறைகளிலும், தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள், அனைத்து அலுவலகங்களிலும், ஆய்வுகளை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Image result for TRB IMAGE
அரசு மேல்நிலைப் பள்ளிக ளில் புதிதாக 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை தோற்றுவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி நியமனத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்துகிறது. கடந்த 2015-16-ம் கல்வி ஆண்டில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப அரசு அனுமதி அளித்தது. இதற் கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நேரத்திலும் வெளியிடலாம் என்ற சூழல் நிலவுகிறது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் கல்வி தரத்தில் பின் தங்கிய மாணவர்களை வேறு பள்ளிக்கு TC கொடுத்து அனுப்பக்கூடாது.NOMINAL ROLL -ல் எவர் பெயரும் விடுபடக்கூடாது. பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அபராதம்?

Image result for 1000 noteசெல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலஅவகாசம் 30–ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. அதன்பின்னர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

LIST OF RESTRICTED HOLIDAYS FOR THE CENTRAL GOVERNMENT OFFICES IN TAMIL NADU FOR THE YEAR 2017


அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமித்து 39,000 பட்டதாரிகளுக்கு வேலை அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா க.பாண்டியராஜனிடம் தமிழ்நாடு பி.எட். வேலையில்லாத கணினி பட்டதாரி ஆசிரியர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலத்தில் அமைச்சரிடமும், முதல்வரின் தனிப் பிரிவிலும் சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜனவரி 9, 10, 11 BRC Level upper primary Kit 3 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது.

இதெல்லாம் செய்தால் டாப் ஸ்கோர் எடுக்கலாம்! சென்ற ஆண்டின் முதல் மாணவி தரும் டிப்ஸ்!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. காலையில் அலாரம் வைத்து எழுந்து படிப்பது தொடங்கி, மாணவர்களின் வழக்கமான நடவடிக்கைகள் மாறத் தொடங்கியிருக்கும். நாட்கள் நெருங்க, நெருங்க பயம் தொற்றிக்கொள்வது இயல்புதான். ஆனால், அவசியமற்ற 
அந்த பயத்தை ஒதுக்கித்தள்ளி, தேர்வை நம்பிக்கையுடன் எழுதுவதோடு, டாப் ஸ்கோர் எடுக்கவும் ஆலோசனைகள் தருகிறார் ஆர்த்தி.

பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் கடும் தண்டனை: விரைவில் புதிய சட்டத்திருத்தம் - மத்திய அரசின் அடுத்த அதிரடி.

💶 காசோலை மோசடி செய்து வருபவர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக மத்திய அரசு விரைவில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

💵 வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் இரு ஆண்டுகள் சிறை அல்லது இரு மடங்கு அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிய வந்துள்ளது.

சாப்ட்வேரில் மாணவர்கள் விவரங்களை தவறாக பதிவு செய்தால் கடும் நடவடிக்கை மாவட்ட கல்வி அலுவலர் எச்சரிக்கை

வேலூர்: சாப்ட்வேரில் மாணவர்களின் விவரங்களை தவறாக பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை ஆசிரியர்களை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன் எச்சரித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான சாப்ட்வேர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மாணவர்களின் முழுவிவரங்களையும் சேகரித்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

ஐம்பத்து மூன்று வயதைக் கடந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி ரத்து; தமிழக அரசு உத்தரவு

பணிப்பதிவேட்டில் பதிவுகளைக் காணலையே! ஆசிரியர்கள் அதிர்ச்சி....

Image may contain: text

ஆதிதிராவிடர் நலப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை


அரசுப்பள்ளிகளில் வழங்கப்பட்ட அறிவியல் உபகரணங்களில் மோசடி - விசாரிக்க கோரிக்கை


Pay PLI Premium through Debit / Credit Card without Service Charges & its activation procedure

Image result for postal life insurance logoPlease apply for online payment registration with aadhar, email and mobile number update in PLI records Today's Good News You can pay premium through Debit card ( ATM) / Credit card without any extra charge

How To Update Phone Number, Email Id For PLI Customers For Allowing Online Access
To incorporate the mobile number and email address in the System the following procedures are to be followed by CPC.

ஐம்பத்து மூன்று வயதைக் கடந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி ரத்து; தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு பணியில் உள்ள பதவி உயர்வு பெற்றுள்ள உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:–

அரசுக்கு பரிந்துரை 2003–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் 2007–ம் ஆண்டு பணியில் சேர்ந்த தட்டச்சர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்டு, 53 வயதை கடந்த நிலையில் உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

பாதிரியார் கன்னியாஸ்திரி சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யக்கூடாது -ஐகோர்ட் தீர்ப்பு

Sunday, December 25, 2016

சம்பளமின்றி பணியாற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள்

பெங்களூரு: அரசு முதல்நிலை கல்லுாரிகளில், கடந்த ஐந்து மாதங்களாக தங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என, சிறப்பு விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அரசு கல்லுாரி சிறப்பு விரிவுரையாளர் ஒருங்கிணைப்பு குழு மாநில ஒருங்கிணைப்பு செயலர் ராஜேஷ்குமார் கூறியதாவது:

அண்ணா பல்கலை துறைக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து

அண்ணா பல்கலையின், 'பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்' துறைக்கு, மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது.உயர் கல்வியில், அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கு, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சீர்மிகு அந்தஸ்து வழங்குகிறது. அதை பெறும் கல்வி நிறுவனங்களுக்கு, மத்திய அரசின், பல கோடி ரூபாய் நிதி உதவி கிடைக்கும்.

ரயில்வே தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

'ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனைத்து வகையிலும், அரசு பணிகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தும் முறை அறிமுகமாகிறது. இதன்படி, மத்திய அரசின் நுழைவுத்தேர்வான, ஜே.இ.இ., - மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வுகளுக்கு, ஆதார் எண் கட்டாயமாகி உள்ளது.

பி.டெக்., படித்தால் நேரடி பிஎச்.டி., ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு

இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும். அதற்கு, முதுநிலை படித்த பின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கப்படுவர்.ஆனால், ஐ.ஐ.டி.,க்களில், பிஎச்.டி., படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

Wish you all a very Happy christmas....


அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி முறையாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது .
5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை மாற்ற மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Saturday, December 24, 2016

டிச.30-ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

மும்பை: ஊழலை நாட்டில் இருந்து வேரோடு ஒழிக்கும் வரையிலும் கறுப்பு பணத்திற்கு எதிரான போர் தொடரும் எனவும், நேர்மையற்ற நபர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு பிரச்சனைகள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்

புதுடில்லி:'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீன வசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம் செலுத்த முடியும். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள், வங்கிகள், ஏ.டிஎம்.,களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது; வர்த்தக நடவடிக்கையும் முடங்கி வருகிறது. எனவே மக்கள், ரொக்கமின்றி டிஜிட்டல் முறை யில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

பள்ளியில் குழந்தையை சேர்க்காவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது?

உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்தால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் (என்சிபிசிஆர்) கேட்டுக் கொண்டுள்ளது.

அலுவல் முடிவுகளை சமூக வலைதளங்களில் பகிரகூடாது: வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்

அலுவலகரீதியாக எடுக்கப்படும் முடிவுகளையும், முக்கியத் தகவல்களையும் சமூக வலைதளங்களில் விவாதிக்க வேண்டாம் என்று வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
வரிவிதிப்பு வாரியத்தின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னரே, ஊடகங்களில் அவை கசிவதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்... மாற்றம்!:ஊழல் நபர்களை நீக்கி நேர்மையானவர்களை நியமிக்க திட்டம்:விடுமுறை நாளிலும் முதல்வர், தலைமை செயலர் ஆலோசனை

தமிழக அரசு நிர்வாகத்தை,முழுமையாக மாற்றி அமைக்கும் வகையில், விரைவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் மாற் றப்பட உள்ளனர். ஊழல் நபர்களை நீக்கி, நேர்மையானவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. 

சர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' : ரெட்டிக்கு தொடர்பா; கலக்கத்தில் அதிகாரிகள்!

தமிழக கல்வித்துறையில் பெரும் அளவில் 2014-15ல் நடந்த 4 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் பின்னணியில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தேவையா?

சிவகங்கை, : 'தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய தேவையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 
அரசு பள்ளிகளில், கடந்த காலங்களில், சீனியாரிட்டி மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நியமனம் செய்யப்பட்ட ஓராண்டில், அவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட வேண்டும். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும்.

4 ஆண்டுகளாக முடங்கிய கோப்புகளுக்கு புத்துயிர் கல்லூரி கல்வி புதிய இயக்குனருக்கு அனுமதி

கல்லுாரி கல்வித்துறையில், நான்கு ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் கோப்புகளின் மீது உடனடி முடிவு எடுக்க, புதிய இயக்குனருக்கு, உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
உயர் கல்வி நிர்வாகத்தில் முக்கியமான கல்லுாரி கல்வித்துறை இயக்குனர் பதவி, மூன்றரை ஆண்டுகளாக காலியாக இருந்தது. இப்பதவியில் இருந்த செந்தமிழ்செல்வி ஓய்வு பெற்றதும், செய்யார் கலை கல்லுாரி முதல்வர் தேவதாஸ், கூடுதல் பொறுப்பு வகித்தார். 

நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் விவரம் - 2017 ஆம் ஆண்டு 


Friday, December 23, 2016

DESIGN - CORRECTED COPY FOR BUSINESS MATHEMATICS (Blue Print,Question Paper And marks Distributions,distribution of questions) pdf

HALF YEARLY KEY ANSWERS - HSC -2016 (UPDATED - ACCOUNTANCY)

CPS பழைய ஓய்வூதியத் திட்டம் : அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்

''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்,'' என, மதுரையில் அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: 

இன்று முதல் பள்ளிகளுக்கு 'லீவு'

பள்ளிகளில், அரையாண்டு தேர்வு முடிந்து, இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளில், டிச., 9ல், அரையாண்டு தேர்வுகள் துவங்கின; நேற்று முடிந்தன. கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி, இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிளஸ் 1 மாணவர்களுக்கு 'EMIS' பதிவேற்றம் பணிகள் : இணை இயக்குனர் உத்தரவு

'அனைத்து மாவட்டங்களிலும் அரசு, உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு 'எமிஸ்' (கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு) எண்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தும் பணிகள் ஜன.,க்குள் முடிக்க வேண்டும்' என தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்கு, டிச., 26 முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பள்ளிகளுக்கு 3-ஆம் பருவ பாடப் புத்தகம் அனுப்பி வைப்பு

பள்ளிகளுக்கு 3-ஆம் பருவப் பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அரசு, தனியார் பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகள் வெள்ளிக்கிழமையுடன் முடிகின்றன. அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, ஜன.2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகின்றன. 

சவுதி அரேபியாவில் செவிலியர் பணி, ஜனவரி முதல் வாரத்தில் நேர்முக தேர்வு : தமிழக அரசு தகவல்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு  என்ஐசியூ, மருத்துவம், அறுவைசிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவத்துடன் 38 வயதிற்கு உட்பட்ட  பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. 

புகாரில் சிக்கிய ஈரோடு பள்ளிக்கு தேர்வு மையஅங்கீகாரம் ரத்து.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், ஈரோடு, ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளிக்கு, தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுபிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற பலரின் விடைத்தாள்களை, தேர்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

தமிழக அஞ்சல் வட்டத்தில் பணி: ஜனவரி 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் தமிழக அஞ்சல் வட்டத்தில் 2017-ஆம் ஆண்டிற்கான 8 ஸ்கில்டு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க சில குறிப்புகள்

Image result for memory power1 . சொல்லக் கேட்டு எழுதுதல்.
 (  உணவு இடைவேளையின் போது )     ஒரு மாறுதலுக்காக  வகுப்பறையில் உள்ள கரும்பலகையை தவிா்த்து வகுப்பறை வெளிச்சுவற்றில் ஒரு தாளில் எளிய வாக்கியம் ( புள்ளி மான் துள்ளி ஓடும்)   ஒன்றை எழுதி ஒட்டி விடலாம். அதனைப் படித்துவிட்டு பாா்க்காமல் என் முன்பு எழுதிக்காட்ட  வேண்டும் என மாணவா்களிடம் கூறவும்.

பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு.... பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 1989ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!! மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை::

1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு
நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.


2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,

HALF YEARLY SSLC KEY ANSWERS - 2016 - DECEMBER (UPDATE - SOCIAL SCIENCE)

Thursday, December 22, 2016

ஈடு செய் விடுப்பு விவரம் 2016-17

SSA ...RMSA உடன் இணைப்பு....நாளிதழ் செய்தி வெளியீடு


Tamilagaasiriyar whats app - group ( new)

தமிழக ஆசிரியர்  குழுவில் இணைய விரும்பும் ஆசிரியர்கள் கீழ் காணும் ஏதாவது ஒரு லிங்கை click செய்து join செய்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்கள் யாரேனும் இக்குழுவில் சேர விரும்பினால் அவர்களுக்கு இந்த லிங்கை ஷேர் செய்யவும் ஒருவர் ஒரு குழுவில் சேர மட்டுமே அனுமதி...... நன்றி
Image result for whats app
Tamilagaasiriyar East

https://chat.whatsapp.com/C85rp3MTRbwKMFEUTeGcFR

Tamilagaasiriyar North

https://chat.whatsapp.com/COInsOnztnPKSGZKdZpIqu

Tamilagaasiriyar South

https://chat.whatsapp.com/DcYjs5UZdaEKbDecmlfYvg

Tamilagaasiriyar West

https://chat.whatsapp.com/GPnmFQNUcVdHUYRY1Ju8aY

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!