Thursday, December 1, 2016

விக்ஸ் ஆக்‌ஷன் உள்ளிட்ட 344 மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

எஃப்டிசி எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட கலவையில் தயாரிக்கப்படும் 344 மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

எஃப்டிசி முறையில் தயாரிக்கப்படும் விக்ஸ் ஆக்ஷன், டி கோல்டு உள்ளிட்ட 344 பொது மருந்துகளை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி தடை செய்தது. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த மருந்துகளை தயாரிக்கவும், விற்கவும் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஃபைசர், க்ளென்மார்க், ப்ராக்டர் அண்ட் கேம்பிள், சிப்லா ஆகிய முன்னணி மருந்து நிறுவனங்கள் சார்பில் 454 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
மனுக்களை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவுக்கு மார்ச் 14ம் தேதி இடைக்கால தடை விதித்தது. தொடர்ந்து நடந்த விசாரணையின்போது, இந்த 344 மருந்துகளுக்கு மாற்றாக பாதுகாப்பான மருந்துகள் கிடைப்பதாகவும், பொதுமக்களின் நலம் கருதியே தடை விதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



நம்நாட்டில் 40 ஆயிரம் எஃப்டிசி (FDC) மருந்துகள் பொது மருந்துகளாக விற்கப்படுவதால், அனைத்தையும் கண்காணித்து முறைப்படுத்த சாத்தியமில்லை என்பதால், ஆபத்தானவை என நிபுணர் குழு பரிந்துரைத்த 344 மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. அரசின் இந்த முடிவை ஆதரிப்பதாக இந்திய மருத்துவ சங்கமும் தெரிவித்தது.



ஆய்வக சோதனைகள் மற்றும் புள்ளிவிவரங்களை கவனத்தில் கொள்ளாமல், சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காமலும் திடீரென தடை விதிக்கப்பட்டதை ஏற்க இயலாது என்று மருந்து நிறுவனங்கள் வாதிட்டன. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ராஜிவ் சகாய் மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தார்

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!