TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Monday, February 29, 2016

"பிளஸ் 2 தனித் தேர்வர்கள் செல்லிடப்பேசியுடன் வந்தால் நடவடிக்கை'

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தனித் தேர்வர்கள் செல்லிடப்பேசியுடன் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் இர. திருவளர்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:

பி.எஃப். பணம் பெற புதிய விதிமுறைகள்: தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை (பி.எஃப்.) பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர் சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 12-வது வகுப்பு மற்றும் 10-வது வகுப்பு தேர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகின்றன. ஆங்கில பரீட்சையுடன் தொடங்கும் 12-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 12-வது வகுப்பு தேர்வை 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

அடுத்தாண்டிற்கு புத்தகங்கள் வழங்கமெட்ரிக் மாணவர்கள் கணக்கெடுப்பு

திண்டுக்கல்;தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வழங்க மாணவர்கள் குறித்த கணக்கெடுப்புப்பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. பொதுத்தேர்வுகள் நடந்து முடியும் நிலையில் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை ஆராய மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல் துவங்குகிறது. 2,420 தேர்வு மையங்களில், ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வின் போது, 30 ஆயிரம் ஆசிரியர்கள், 5,000 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மின் வாரியத்தில் 2,175 ஊழியர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, புதிய ஊழியர்களை தேர்வு செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது. அதன்படி, 375 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, ஜன., 31ல் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வு சம்பந்தமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை

ஆண்டுக்கு, 2.5 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுபவர்களுக்கு, வழங்கப்படும் வரி தள்ளுபடி, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்; கல்வி துறைக்கான முக்கிய அம்சங்கள்

பொது பட்ஜெட் உரையில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:

உலகத்தரத்துக்கு, 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.
பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைப்பு; டீசல் விலை ரூ.1.45 உயர்வு

மத்திய பட்ஜெட் இன்று தாக்கலான நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

RMSA - FEB 2016 PAY AUTHORIZATION ORDER FOR 2408 TEACHING AND 888 NON-TEACHING STAFF WORKING IN SCHOOLS UPGRADED ON 2010 - 2012

2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்!

2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* வரி சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
* நிதிக் கொள்கை குழு அமைக்க ஆர்பிஐ சட்டம் திருத்தப்படும். 



* புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வரி விடுமுறை.

ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது பெரும்பாலானோர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது.

ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு

மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 8.33% பங்களிப்பை அரசே அளிக்கும் என்று கூறினார். ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்த இடைக்கால நிதி ஒதுக்கீடு.

G.O Ms.No. 208 Dt: February 23, 2016 Scholarships - Tamil Nadu Government Scholarships to cadets of Tamil Nadu studying in Rashtriya Indian Military College (RIMC), Dehradun - Enhancement of Scholarship amount from Rs. 12,000/- to Rs. 40,000/- per annum - Orders issued.


Sunday, February 28, 2016

நேற்று நடைபெற்ற VAO தேர்வில் கேட்கப்பட்ட குழப்பான கேள்விகள் மற்றும் அதற்க்கான விடைகள்

TNPSC VAO KEY ANSWERS 2016

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, குறைந்த செலவிலான ஏர்செல் நிறுவனத்தின் CUG திட்டம்!!

AIRCEL POST PAID CORPORATE CUG PLAN FOR Govt. STAFFS and TEACHERS:
PLAN NATIONAL SME @ Rs149,
(Service Tax 14% Extra)
CUG CALLS UNLIMITED FREE
400 MIN FREE LOCAL TO TN MOBILE
500MB 2G DATA FREE PER MONTH
AFTER FREE MINUTES,CALL RATE:
ALL NETWORK TN MOBILE 30p Min

காலை உணவில் தான் மூளையின் சக்தி உள்ளது உணவு நிபுணர் ஆலோசனை

தேர்வின் போது பயத்தின் காரணமாகவே மாணவர்கள் பசியை தவிர்த்து விடுகின்றனர். இதனால் மனதளவில் பதட்டமும், உடலளவில் கூடுதல் சோர்வுமாக தவிக்கின்றனர்.

'மூளைக்கு தேவையான சக்தி, காலை உணவில் உள்ளது' என்கிறார், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதன்மை உணவு நிபுணர் ஜெயந்தியால்.அவர் கூறியதாவது: மாணவர்கள் தேர்வு நேரங்களில் முறையான உணவு முறையை பின்பற்றாததால் எடை கூடுதல், மந்தநிலை, விரைவில் சோர்வடைதல், மனஉளைச்சல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. முறையான உணவுமுறையை பின்பற்றினால் பயமின்றி தேர்வெழுதலாம்.

மாணவர்களுக்கு அறிவியல் போட்டி வென்றால் இலவச ரஷ்யா பயணம்

ராமேஸ்வரம்:அறிவியல் படைப்பு போட்டியில் வெல்லும் மாணவர்கள், ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இதுகுறித்து கலாம் பேரன் சலீம், ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் இயக்குனர் ஸ்ரீமதிகேசன் கூறியதாவது:

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு

சென்னை:பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாயின.தேர்வு முடிவுகளை, www.tndge.in என்ற இணையதளத்தில்,

SSTA - கோரிக்கை ஏற்கப்பட்டதால்ஆசிரியர் போராட்டம் 'வாபஸ்'

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 
தமிழக தொடக்க பள்ளிகளில், 2009 ஜூன், 1க்கு பின், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய கோரி, ஆசிரியர்கள் பல முறை மனு அளித்தும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

வி.ஏ.ஓ., தேர்வு தாள் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது யார்?

கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தது. இதில், 'மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த ஆட்சி எது?' என்ற வினா இடம் பெற்றிருந்தது.

வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பதவிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நேற்று எழுத்து தேர்வு நடந்தது. சென்னை, பாரதி மகளிர் கல்லுாரி தேர்வு மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, செயலர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.

பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி

பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், பெற்றோர் மற்றும் தனித்தேர்வர்களும் புகார் மனுக்களை போடலாம்.

பள்ளி மாணவர்களுக்கு பங்கு சந்தை தேர்வு

பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, பங்குச்சந்தை பாடம் குறித்து தனியாக தேர்வு நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி களில், முதன் முறையாக, 2010ல், பங்கு சந்தை குறித்த பாடம், 8ம் வகுப்பு, ௯ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது. கணித பதிவியல் மற்றும் பொருளாதார பாட ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர்.

'கேந்திரிய வித்யாலயா'க்களில் தேசிய கொடி ஏற்ற உத்தரவு

புதுடில்லி:'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தினமும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா கூடுதல் ஆணையர் யு.என்.காவரே, மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:இந்திய தேசியக் கொடி, கவுரவம் மற்றும் சுதந்திரத்தின் சின்னமாக விளங்குகிறது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். தேசியக் கொடியை பற்றி, அனைத்து தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகின்றன.

பிளஸ் 2 தேர்வு, நாளை துவங்கி, ஏப்., 22 வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு நாளை துவங்கி, மார்ச், 28ல் முடிகிறது. நாடு முழுவதும், 16 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 25.67 லட்சம் பேர் இத்தேர்வுகளை எழுத உள்ளனர். பிளஸ் ௨வில், 10.67 லட்சம் பேரும்; 10ம் வகுப்பில்,

ஐ.ஏ.எஸ்., தேர்வு 'இன்டர்வியூ' இனி அழைப்பு கடிதம் வராது

புதுடில்லி:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இனிமேல், நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும், மாறாக, தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'இ - சம்மனை' டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

'எய்ம்ஸ்' கிளை அமைவது எங்கே? இன்று அறிவிப்பு வெளியாகலாம்

தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை எங்கு அமையவுள்ளது என்பது குறித்த முறையான அறிவிப்பு, பார்லிமென்ட்டில், இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY


TNPSC VAO KEY ANSWERS - 2016

தனித்தேர்வர்களூக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016- தேர்விற்கான கால அட்டவணை


Saturday, February 27, 2016

இன்று வி.ஏ.ஓ., தேர்வு 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

கிராம நிர்வாக அலுவலர் என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்துத்தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். 
தமிழக வருவாய் துறையில், காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, இன்று தமிழகம் முழுவதும், 244 இடங்களில், 3,466 மையங்களில் நடக்கிறது. தேர்வில், 10 லட்சத்து, 27 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். சென்னையில் மட்டும், 77

திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது திட்டம்

திருப்பதி,:திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கு என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை துவங்கஉள்ளது.திருமலையில் திருமணம் செய்வதை பக்தர்கள் பாக்கியமாகக் கருதுகின்றனர். அதனால், தேவஸ்தானத்தின் சார்பில் திருமலையில், பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில், புரோகித சங்கம் ஏற்படுத்தி உள்ளது. 

பிளஸ் 2 தேர்வில் முறைகேடா?15 வகை தண்டனை அறிவிப்பு

இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கான 
தண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:

1 துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரை 
எச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வெளியேற்றப்படுவர்.

94 லட்சம் பேருக்கு தமிழகத்தில் வேலையில்லை

தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து விட்டு, காத்திருப்போரின் எண்ணிக்கை, 94 லட்சமாக உயர்ந்துள்ளது' என, தமிழக வேலைவாய்ப்பு துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர், 31ன் படி, பல்வேறு வகை படிப்புகள் முடித்து, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை, வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு

பரிதாபாத் : மாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார்.

அச்சம் தவிர்த்தால் உச்சம் தொடலாம் (தேர்வு காலங்கள்)

''பொதுத் தேர்வு எழுதும் அறைக்குள் சென்றவுடன் ஏற்படும் பயத்தில் இருந்து ஒவ்வொரு மாணவரும் விடுபட வேண்டும். அப்போது தான் அதிக மதிப்பெண்கள் எடுக்க முழுஅளவில் சிந்திக்க முடியும்,'' என, கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் மதுரை மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் (சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி) சந்தோஷ் தெரிவித்தார்.

முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்ஒரே பாடப்பிரிவுக்கு அதிக வாய்ப்பு

அரசு பள்ளிகளில், 1,062 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில், ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.பதவி உயர்வில்...அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் காலியிடங்களில், 50 சதவீதம் பதவி உயர்வின் மூலமும்; 50 சதவீதம் நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும். இதன்படி, தமிழகத்தில், 2016 - -17ல், 1,062 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNTET :ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 04.03.2016 அன்று பதிவாளர் கோர்ட் எண்-2 இல் வரிசை எண் 27 ஆக விசாரணைக்கு வருகிறது

TRB anounce exam for lecturer post


Friday, February 26, 2016

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 

ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அதிக வாய்ப்பு

சிவகங்கை,:அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே 'மேஜருக்கு' (பட்டமேல்படிப்பு) அதிக வாய்ப்பு உள்ளது என, கல்வித்துறை தெரிவிக்கிறது.அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளுக்கான காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன்படி, தமிழகத்தில் 2016--17ல் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி, காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர் தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை:தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தனித்தேர்வர்களுக்கான, ௮ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 18ம் தேதி துவங்கும். 
ஏப்., 18ம் தேதி, தமிழ்; 20ம் தேதி, ஆங்கிலம்; 21ம் தேதி, கணிதம்; 22ம் தேதி, அறிவியல்; 23ம் தேதி, சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கும்' என, கூறப்பட்டு 
உள்ளது.

வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்

ராமநாதபுரம் :முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில

பதவி உயர்வால் காலியான தலைமையாசிரியர் பணியிடங்கள்: தகுதி பட்டியல் பரிசீலிக்கப்படுமா

மதுரை: கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்களாக (டி.இ.ஒ.,க்கள்) பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

திண்டுக்கல்":அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,' 
ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணி

10 ஆண்டு சம்பளம் குடுத்தாச்சு: சான்றிதழை பற்றி தெரியாதாம்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம் அளித்த பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடுக்க அதிகாரிகள் உத்தரவு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்வி படிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரி

தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - துவக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி கணுக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு - பணிகளை துரிதப்படுத்த மாநில/மாவட்ட அளவில் "NODAL OFFICER" நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.

ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம்,

பிளஸ்–2 தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு

பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க அந்தந்தப் பகுதி என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ்–2 தேர்வுதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 4–ந்தேதிதொடங்கி ஏப்ரல் 1–ந்தேதி முடிவடைய உள்ளது. பிளஸ்–2 தேர்வு சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தலைமையில் இணை இயக்குனர் உமா,

அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

7th Central Pay Commission - Meeting of the Empowered Committee of secretaries (E-CoS) headed by Cabinet Secretary on 7th Central Pay Commission recommendation with members of the Standing Committee of the JCM National Council Staff Side will be held on 1st March 2016 at 06:45 PM


தொழிலாளர்கள் வைப்பு நிதியில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்

தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டது. இதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் முதலாளிகளின் பங்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

வருமான வரித்துறை அலுவலர் பள்ளிகளின் பெயர் மற்றும் முகவரி பட்டியல் கோருதல் சார்பு தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்.


Thursday, February 25, 2016

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு TAMILAGAASIRIYAR– TIPS 1


SSTA தங்களுடன் வேலைபார்ப்பவர்களுக்கு இணையாக சம்பளம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 6–வது நாளாக உண்ணாவிரதம் மயக்கம் அடைந்தவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது

சென்னை,தங்களுடன் வேலைபார்க்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம்கோரி நேற்று டி.பி.ஐ. வளாகத்தில் 6–வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். உண்ணாவிரதம் இருந்த சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அனைத்து வள மையப் பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் பெ.மாங்கனி தலைமை வகித்தார். பொருளாளர் க.செந்தில்குமரன் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் கோ.ரா.ரவிச்சந்திரன் பேசினார்.

உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு

உதவி புள்ளியியல் துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
 உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator) பதவிக்கான 270 காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது.

பிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் விவரம்

பிளஸ் 2 தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

   தமிழகத்தில் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை, மதுரை மாவட்டத்தில் 92 மையங்களில் 37,863 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: நேர விவரங்கள் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நேர விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

  தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. மதுரை மாவட்டத்தில் 37 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர். இதற்கான வினாத் தாள்கள் 12 மையங்களில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாத்து வருகின்றனர்.

"பள்ளிக் கல்வித் துறை மூலம் ரூ.126.94 கோடியில் கல்வி உபகரணங்கள்'

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.126 கோடியே 94 லட்சத்து 34 ஆயிரத்து 368 மதிப்பில் மாணவர், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசுப் பள்ளியின் சம்பளப் பட்டியலில் திருத்தம் செய்து ரூ.15 லட்சம் மோசடி:இளநிலை உதவியாளர் தாற்காலிகப் பணி நீக்கம்

ஆரணி அருகே அரசுப் பள்ளியின் சம்பளப் பட்டியலில் மாதந்தோறும் திருத்தங்கள் செய்து, ரூ.15 லட்சம் வரை மோசடியாகப் பெற்ற இளநிலை உதவியாளரை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டுள்ளார்.

புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு

வேடசந்துார், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.

சி.ஏ., நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் மாற்றம்: இனி பிளஸ் 2 தேர்ச்சி கட்டாயம்

சி.ஏ., படிப்புக்கான நுழைவுத்தேர்வு மற்றும் பாடத்திட்டத்தில், அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. இனி, பிளஸ் 2 முடித்தால் மட்டுமே, சி.ஏ., தேர்வை எழுத முடியும்.
ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய 'சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' அமைப்பின், தேசிய தலைவர் எம்.தேவராஜ ரெட்டி மற்றும் துணைத் தலைவர் நிலேஷ் ஷிவ்ஜி விகம்சே, நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது

'பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. இதற்கான விதிமுறைகளை, சுற்றறிக்கையாக ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.காலணிக்கு தடை*பிளஸ் 2 தேர்வு அறைக்குள், மாணவர்கள் தங்கள் உடைமை களை கொண்டு செல்லக் கூடாது; தேர்வு அறை முன்பும் வைத்திருக்க கூடாது. தேர்வு மைய வளாகத்தில் ஒதுக்கப்பட்ட அறைகளில் உடைமைகளை வைக்கலாம்

அரசு தேர்வுப்பணிகளுக்கானா கையேடு - 2016 அரசு தேர்வுகள் இயக்கம் வெளியீடு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் தனியார் பள்ளிகளில் பகுதி நேரமாகப் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அ.ஞானகௌரி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேர்வு அறையில் செய்ய வேண்டியது (தேர்வு காலங்கள்)

"பொதுத் தேர்வு குறித்து மாணவர் களின் மனதில் உள்ள பயத்தை போக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. கடைசி நேரத்தில்கூட இதுதொடர்பான ஆலோசனையை அவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க வேண்டும்," என மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.

7th Pay Commission Latest News – Empowered Committee may submit its report in April

There is good news in the store for central government employees who are waiting for the implementation of Seventh Pay Commission. Reportedly, review report will be submitted to Finance Ministry at April end. Pay commission Sources say that P K Sinha headed Empowered Committee of Secretaries will submit its report to Finance Minister Arun Jaitley in April end.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 100% அதார் அட்டை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்.

பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.கடந்த கல்வி ஆண்டு வரையில் பிஎட், எம்எட் படிப்புக் காலம் ஓராண்டாகத்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் (என்சிடிஇ) 2014 விதிமுறைகளின்படி 2015-16-ம் கல்வி ஆண்டிலிருந்து பிஎட், எம்எட் படிப்பு காலம் ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டன.

பெயரின் முதல் எழுத்து(Initial)பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்,மற்றும் விவரங்கள்.


அகரம் பவுன்டேஷன் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளது இதைப் பயன்படுத்திக் கொள்ள கீழுள்ள இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்

Wednesday, February 24, 2016

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு TAMILAGAASIRIYAR– TIPS 1

தொடக்க/நடுநிலைப்பள்ளி வகுப்பறை சுவரில் ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதற்கான வரையவேண்டிய 16 படங்களும் அளவுகளும்

பிளஸ்2 தமிழ், ஆங்கில ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தல்

பிளஸ் 2 தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பேசுதல், கேட்டல் செய்முறைத் தேர்வுக்கு 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள உழைப்பூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.

இதுகுறித்து ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ஆ.ராமு, நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி எஸ்.கோபிதாஸிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

10-ஆம் வகுப்பு தனித் தேர்வருக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு பிப். 29-இல் தொடக்கம்

10-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் காஜாமைதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


நாமக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் வரும் 29-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 1-ஆம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெற உள்ளன.

TNPTF - கூடுதல் நிதித்துறை செயலர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறை அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து விவாதித்தனர்.

🔰 TNPTF அலுவல் செய்தி 🔰

24.2.2016, இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பபப்ள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.மோசஸ் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் திரு.பா.வி.டேவிதார் அவர்களையும் மற்றும் நிதி துறையில் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கே.சண்முகம் அவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

இச்சந்திப்பில் முக்கிய துளிகள்:

1.முதல்வர் அறிவித்த அறிவிப்புகளில் எஞ்சியுள்ளவைகளுக்கு ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு

2. சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு உடனடியாக பங்கு தொகையுடன், அரசின் பங்கும் சேர்த்து தொகை வழங்கிட அரசாணை இரண்டு நாட்களுக்குள் வெளியிட உறுதி

பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறைதேர்வுத்துறை சுற்றறிக்கை

பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த 
சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 
அதன் விவரம்:
* பிளஸ் 2 தேர்வு காலை, 9:45 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு முடியும்
* முதல் மணி, 9:45 மணிக்கு அடிக்கும்; கண்காணிப்பாளர்கள், 'ஹால் டிக்கெட்'டை சரிபார்த்து, தேர்வர்களை அறைக்குள் அனுப்ப வேண்டும்
* பின், 9:50 மணிக்கு, தேர்வு விதிமுறைகள் குறித்து, அறை கண்காணிப்பாளர் விளக்குவார் 

மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்

திண்டுக்கல்,:பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது. அதற்காக பல்கலைகள், பள்ளி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.இதனால் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அனைவருக்கும் தேசிய கண்டுபிடிப்பு இயக்கத்தை (ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்) அறிமுகம் செய்தது. 

உண்மை தன்மை சான்று இல்லைஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல்

ராமநாதபுரம் :பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2016 ஜன.,1 ன் படி பாடவாரியாக சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் தகுதிகாண் பருவம் முடித்த ஆசிரியர்கள் மட்டுமே இடம்பெற முடியும். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும்.

தேர்வு நேரத்தில் உடம்பை கவனிப்பது எப்படி? (தேர்வு காலங்கள்)


''தேர்வுக்கு தயாராகும் நேரத்திலும், தேர்வின் போதும் உடலும், மனதும் தளர்வாக இருக்க வேண்டும். அதற்கு தளர்வான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்,'' என்கிறார் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.
தேர்வுகாலங்களில் மாணவர்கள் உடல்நலத்தை எப்படி கவனிக்க வேண்டும் என்பது குறித்து அவர் கூறியதாவது:கோடையில் வியர்வை அதிகமாகும். காலை, மாலையில் குளிப்பது நல்லது. தடிமனான ஆடைகளை தவிர்த்து இலகுவான காட்டன் ஆடைகள் அணியவேண்டும். வெயில் காலத்தில் தோல் வெடிப்பு, வியர்க்குரு, கழுத்துப்பகுதி, அக்குளில் வியர்க்குருவால் புண்ணாகலாம். சருமத்தை நன்றாக

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை



40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை..

CPS SETTLEMENT FORMS UNDER GO 59 FINANCE DATE:22/02/16

தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அட்டவணை மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடைபெற்று வரும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், பொது பட்ஜெட் பிப்ரவரி 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நடப்பு தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. மே மாத இறுதிக்குள் 5 மாநில சட்டசபை தேர்தல்களும் நடத்தி முடிக்கப்படும் என சமீபத்தில் புதுச்சேரியில் நடக்கும்

NMMS EXAM Instructions...


பெற்றோர், ஆசிரியர் சங்கதேர்தல்; கல்வி அதிகாரிக்கு உத்தரவு

அரசு பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தக் கோரிய மனுவை பரிசீலித்து, இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி, நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரைச் சேர்ந்த பூமிநாதன் தாக்கல் செய்த மனு:

முதல்வர் பிறந்த நாளுக்காக அரசு பள்ளிக்கு கட்டாய விடுமுறை!

முதல்வர் பிறந்த நாள் மருத்துவ முகாம் நடத்துவதற்காக, அரசு நடுநிலை பள்ளிக்கு கட்டாய விடுமுறை அளித்து, பள்ளி வளாகத்தை பயன்படுத்திய மாநகராட்சியின் அத்துமீறலால் பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்தனர்.

சென்னை மாநகராட்சியின், 15 மண்டலங்களில், முதல்வர் பிறந்த நாள் விழாவையொட்டி, நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாதவரம் மண்டலத்தில், 22வது வார்டு புழல் காந்தி பிரதான சாலையில்

வேலூர் மாவட்டத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகம்

நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித் தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரத்தின் செயல் விளக்கம் பொதுமக்கள் முன்னிலையில் அளிக்கப்பட உள்ளது.

PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders - Issued.

Tuesday, February 23, 2016

"ரூ.251க்கு செல்லிடப்பேசியை அளிக்கத் தவறினால் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை'

செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான "ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்தின் அறிவிப்பின்படி, ரூ.251-க்கு செல்லிடப்பேசியை விற்பனை செய்யாவிட்டால், அந்த நிறுவனம் மீது மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

பள்ளிகளில் காலை உணவு திட்டம்: தேமுதிக வாக்குறுதி

பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்று தேமுதிக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையின் முதல் பகுதி வெளியிடப்பட்டது. அதன் விவரம்:-

 செயல்படுத்தப் போகும் திட்டங்கள்: "நம்மாழ்வார் விவசாயத் திட்டம்' எனும் பெயரில் நாற்று நடுவதற்குரிய கருவிகளும், இயற்கை உரங்களும் மானிய விலையில் வழங்கப்படும்.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் வெளியானது!!

சென்னை: மத்திய பொதுத் தேர்வாணையத்தின் தேர்வு (யுபிஎஸ்சி தேர்வு) முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. குடிமைப் பணிகள் தேர்வுகள் கடந்த டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற்றன.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் வெளியானது!!

இந்தத் தேர்வுகளின் முடிவுகள்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.



இந்தத் தேர்வு முடிவுகளை அறிய http://upsc.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும்.

அங்கு ‘Written Result – Civil Services (Main) Examination. 2015 என்ற இடத்தில் கிளிக் செய்தால் முடிவுகள் தோன்றும். அந்த முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

'டிமிக்கி' ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

சட்டசபை தேர்தல் பணி இருக்கிறது எனக்கூறி, பொதுத்தேர்வு பணிக்கு, 'டிமிக்கி' கொடுத்த ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர். முதலில், தேர்வு பணியை பார்க்கும்படி உத்தரவிட்டு உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, 10 நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை தேர்வுத் துறை தீவிரப்படுத்தி உள்ளது. தேர்வு மையம் அமைத்தல், தேர்வு கட்டுப்பாட்டு மையம் அமைத்தல், முதன்மை விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்புதல் என, பல பணிகள் நடந்து வருகின்றன. 

'விடையை அடித்தால் ரிசல்ட் நிறுத்தம்'

'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும் நிறுத்தப்படும்' என, அடுத்த எச்சரிக்கையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிமுறைகளை, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

பொதுத்தேர்வு பணியை பார்க்க உத்தரவு: ஊத்துக்கோட்டையில் வினோதம்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில், பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சட்டசபை தேர்தல் பணியை பார்க்க, ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். 
இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு வழங்கப்பட்ட புத்தக பையை, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு பள்ளிகளுக்கு திரும்பினர்.

+2 வினாத்தாள் திருப்பூர் வந்தது

திருப்பூர்:பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள், திருப்பூருக்கு வந்து சேர்ந்தன. வினாத்தாள் காப்பக மையங்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 4ல் துவங்கி, ஏப். 1ல் நிறைவடைகிறது. திருப்பூர் மாவட்டத்தில், தனித்தேர்வர் உட்பட மொத்தம், 22 ஆயிரத்து, 742 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுத உள்ளனர். இதற்கென, 64 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் மொழித்தாள் பாடங்கள், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்,

பெற்றோர்கள் தருவது ஆதரவா... தொந்தரவா! (தேர்வு காலங்கள்):

இன்னும் சில தினங்களில் பிளஸ் 2 தேர்வும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்கிவிடும். தேர்வு நெருங்க நெருங்க மாணவர்கள் மனதில் இயல்பாகவே பதட்டம் ஆரம்பித்து விடும். இந்தநிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்தால் போதும்; தொந்தரவு செய்யவேண்டாம் என்கிறார், மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத்தலைவர் டி. குமணன்.

தேர்தல் கமிஷனின் '1950' அழைப்புகளுக்கு பதில் கூற கூடுதல் ஊழியர்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க; சந்தேகங்களுக்கு விளக்கம் பெற; தேர்தல் பணியின் போது புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண், 1950 உள்ளது. 

14 வயது தாண்டலையா? 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 14 வயதுக்கு குறைவானவர்கள் எழுத முடியாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரலில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, மார்ச் 4ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 15ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலருக்கு, பல காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதில், பள்ளி மாணவர்களுக்கு வயது பிரச்னையே காரணமாக இருந்ததால், அதை சரி செய்து மீண்டும் அனுமதிப்பது குறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளி மாணவர்கள் எழுத, வயது கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.

அதேஇ - 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 2016 - தேர்வர்களுக்கு தேர்வு நேர பங்கீடு மற்றும் நடைமுறைகள் - அறிவுரைகள் கூறி இயக்குனர் செயல்முறைகள்

பிளஸ்–2 தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம் - இயக்குனர் செயல்முறைகள்


01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுநிலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு அளிக்க பள்ளிக் கல்வி துறை சார்பில் முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது.

01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுநிலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு அளிக்க பள்ளிக் கல்வி துறை சார்பில் முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
தமிழ் (ஒரே பாடம்) 2004/2005 வரை.
ஆங்கிலம் (ஒரே பாடம்)2005/2006வரை.
ஆங்கிலம் (வேறு பாடம்)2007/2008வரை.
கணிதம் 2005/2006வரை.

பி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா? அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!

வழக்கம்போல், எதிர்பார்ப்புக யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில்  ‘வந்தே தீரும்’ என நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த ‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.

Monday, February 22, 2016

10th std science practical Mark allotment guide ...

இந்திய அரசின் பட்ஜெட் தயாரிக்கும் முறை..!

அதிநவீன அச்சக இயந்திரங்கள் மூலம் தலா 2500 பிரதிகள் கொண்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும்

நிதியமைச்சர் அலுவலக வடக்கு பிளாக்கில்  உள்ள பாதாள அறையில் தயாரிக்கப்படும்

இதில் நிதித்துறை உயரதிகாரிகள் பங்கு பெறுவர்

DEE Proceeding-Long Absent leave Teachers & Suspended Teachers Details called


போராட்ட களமான டி. பி.ஐ வளாகம் !!!

சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு

சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகி  உள்ளது. கடைசி தேதி 11.3.2016

"பள்ளிகளில் பணிபுரிவோருக்கு மாற்றுப் பணி கூடாது'

எவ்வித ஆணையும் இல்லாமல் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர் அலுவலர்கள் மாற்று பணி அளிக்கக்கூடாதென பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். ராஜேந்திரபிரசாத் தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிளஸ் 2 வினாத்தாள் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான வினாத் தாள்கள் வியாழக்கிழமை வந்தடைந்தது. மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் சீல் வைத்த அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

12 மையங்களில் பாதுகாக்கப்படும் பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்கள்

மதுரையில் பிளஸ் 2 தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் பாதுகாக்கப்படும் 12 மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 4ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த 18ஆம் தேதி நிறைவடைந்து அதற்கான மதிப்பெண்களும் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அறப்போராட்டம்

ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அறப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.

 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அத்தனூர் சின்னப்பாவடி தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (68). பொதுப் பணித் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து  ஓய்வுபெற்றவர். இவர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை எதிர்த்து நாமக்கல் பூங்கா சாலையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு தேர்வறை அனுமதி சீட்டு வெளியீடு

பிளஸ்-2 தனித் தேர்வர்கள் தேர்வறை அனுமதிச் சீட்டை பிப்ரவரி 25-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை விண்ணப்பித்தோர் www.tndge.in என்ற இணையதளம் 25-ஆம் தேதி வரை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

சென்னை, :தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் ௨ பொதுத்தேர்வு, மார்ச், ௪ முதல் ஏப்ரல், ௧ வரை நடக்க உள்ளது. இதற்கு சிறப்பு அனுமதியான, 'தத்கல்' திட்டத்தின் கீழ், பிப்., 2 முதல் 4 வரையில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல் பிப்., 25 வரை, www.tndge.in இணையதளம் மூலம், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஊழியர் 'ஸ்டிரைக்' நீடிப்பு ரூ.4,000 கோடி வரி வசூல் பாதிப்பு

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், வணிக வரி ஊழியர்களின், வேலை நிறுத்தம், 20 நாட்களாக நீடிக்கிறது. 'திருத்திய முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிக வரித்துறை ஊழியர்கள், பிப்., 3 முதல், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

வலுக்கிறது போராட்டம் திணறும் டி.பி.ஐ., வளாகம் - SSTA

பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித் துறை ஊழியர் சங்கங்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 
தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக்கோரி, பள்ளிக்கல்வி துப்புரவு பணியாளர்கள், 5ம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தினர், நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்' தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Sunday, February 21, 2016

jacto உயர் மட்டக் குழு கூட்டம் - 21-02-2016 - திருச்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

தேர்தல், தேர்வு நெருங்குவதால் அரசு ஊழியர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

அரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விடுபட்ட கோரிக்கைகளை வரைவு அறிக்கையாக தயாரித்து தலைமைச் செயலாளரிடம் அளிக்க உள்ளோம். இவற்றை அரசு தனது அரசாணையில் வெளியிட வேண்டும். அதன்பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளனர்.

பொதுத் தேர்வு: மாணவர்களின் நலனுக்காக தடையில்லா மின்சாரம்

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி, தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கோவிந்தராஜு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி கோட்டத்தில் முன்பருவ கால பராமரிப்பு, 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கவனத்தில் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 22-ஆம் தேதி மணவரானப்பள்ளி, கங்கோஜிகொத்தூர், எட்ரப்பள்ளி, ஆவல்நத்தம், கே.என்.பள்ளி,

கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கணினி அறிவியல் பாடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கி, நடைமுறைப்படுத்திட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் கற்பிப்பதற்கு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

இன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்

காரைக்குடி:மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும், என்ற அடிப்படையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (இன்ஸ்பயர்) வழங்கப்படுகிறது.
பள்ளி அளவில் அறிவியல் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையில் மாணவர் வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் சுற்று சூழல் மற்றும் அறிவியல் தொடர்பான புதிய கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும். இது கல்வி மாவட்ட அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் இடம் பெறும். மாவட்ட, மாநில, தேசிய அளவில் முதலிடம் பெறும், சிறந்த அறிவியல் படைப்பாளருக்கு மத்திய அரசின் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்படுகிறது. இந்த விருது செயல்முறையில் மாற்றம் செய்து பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்

காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்த, 4.5 லட்சம் அரசுப்பணியாளர்கள், 12 நாட்களுக்குப்பின், இன்று பணிக்கு திரும்புகின்றனர்.பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தனர்; மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த போராட்டங்களில், 4.5 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர்.

கட்டாய தமிழ் தேர்வு மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்

பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழ் அல்லாத இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற, 11 மொழிகளை தாய்மொழியாக கொண்ட, 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

'குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி

மதுரை;நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது. பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச், 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பதவிகளை பொறுத்து, 18 முதல், 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் ஆட்-கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வர்கள் கடும் அதிர்ச்சி:'செட்' தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை

உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான மாநில தகுதித் தேர்வான, செட் தேர்வு நேற்று நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடைமுறைப்படி, தேர்வர்களுக்கு இலவச கறுப்பு, 'பால்பாய்ன்ட்' பேனா வழங்கப்பட்டது; மொபைல் போன்கள் தேர்வறையில் தனியாக வைக்கப்பட்டன.

அண்ணா பல்கலையில் அறிமுகம்:போலி சான்றிதழ் கண்டுபிடிக்க வசதி

போலி சான்றிதழ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணா பல்கலையில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் போலி சான்றிதழ் பிரச்னைகள் உருவெடுத்து உள்ளன. அரசு வேலை, மேற்படிப்பு, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்வது, பாஸ்போர்ட் எடுத்தல், சொத்து பிரச்னைகளை தீர்த்தல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் பெறுதல், நீதிமன்ற வழக்குகள், பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு, கல்விச்சான்று தேவைப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை

புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை கால புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளும்படியும், ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.எல்.டி.சி., விண்ணப்ப நடைமுறை சிக்கலாக இருப்பதாக, மத்திய அரசு ஊழியர்கள் கூறி வந்தனர். விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனக்கூறி, எல்.டி.சி., நிராகரிக்கவும் படுகிறது. இதையடுத்து, இதற்கான நெறிமுறைகளை, மத்திய அரசு எளிமை படுத்தியுள்ளது.

ஜேக்டோ உயர் மட்ட குழு முடிவு: புதிய அரசு அமையும் வரை அனைத்து போராட்டங்களும் ஒத்திவைப்பு. புதிய அரசு அமைந்த பின் போராட்டம் தொடரும்.

பெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்... நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்...

அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..! 
குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.
உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்க்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம்.

காலவரையற்ற வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ளுதல் மற்றும் நிலுவை கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசி தீர்வு காண கால நேரம் கோருதல் சார்பான TNPTF @ TNGEA அறிக்கை.

Saturday, February 20, 2016

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி: வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வலியுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள்தொகை  பதிவேட்டில் விவரங்களை பதிவுசெய்ய, வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்கும்  பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள்தொகை  பதிவேட்டில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு; நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

New Delhi: Empowered Committee of Secretaries processing the recommendations of 7th Pay Commission(7thCPC) in an overall perspective, are likely to double the percentage of pay hike recommended by the pay commission.
As per reports, central government employees are likely to expect basic pay hike of around 30%, which will be effective January 1, 2016.
The 7th central pay commission in its report submitted in November 2015 had recommended a pay hike of 23.55% for central government employees, with the highest basic salary at Rs 250,000 and the lowest at Rs 18,000.

jacto வை உடைத்த அரசியல் கட்சிகள் ..... நொறுங்கிப்போன ஆசிரியர்கள் போராட்டம் - dinamalar


5 மாணவர்களுக்காக 5 ஊழியர்கள்தொடக்கப்பள்ளியில்தான் இந்த கூத்து

கொளத்துார்: மாணவ, மாணவியர், ஐந்து பேர் பயிலும் தொடக்கப்பள்ளியில், 2 ஆசிரியர்கள் உட்பட, 5 பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியம், கோல்நாயக்கன்பட்டி பஞ்., ஏரிக்காடு கிராமத்தில், அனல்மின் நிலையம் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 

பொதுத்தேர்வு பணி சுணக்கம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்

அரசுக்கு எதிரான போராட்டத்தால், பொதுத்தேர்வு பணிக்கு ஒத்துழைக்காத ஆசிரியர்கள் மீது, பொதுத்தேர்வுக்கு பின் நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் துவங்கி, ஏப்ரலில் முடிகின்றன. தேர்வு மையங்கள் அமைத்தல்; மாணவர் இறுதி பட்டியல் தயாரித்தல்; 'ஹால் டிக்கெட்' வழங்கும் பணிகள் தீவிரமாகியுள்ளன.பொதுத்தேர்வை அமைதியாகவும், வினாத்தாள், 'லீக்' போன்ற பிரச்னைகள் இன்றி நடத்தி முடிப்பதில், தேர்வுத்துறை தீவிரமாக உள்ளது.ஆனால், ஆசிரியர்களின் தீவிர போராட்டத்தால், தேர்வுக்கான முன் தயாரிப்பு பணி; ஆசிரியர்களுடன் தேர்வு விதிமுறை ஆலோசனை கூட்டம் நடத்துவதில், தேர்வுத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது செயல்முறைகளில் மாற்றம்

மத்திய அரசு நிதியுதவி வழங்கும், 'புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது'க்கான செயல்முறைகளில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல் ஆய்வு- - இன்ஸ்பயர்) விருது வழங்கப்படுகிறது.

ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க உத்தரவு

சென்னை,: ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், 2016-17ம் ஆண்டிற்கான உயிர் சான்று, வரும், மார்ச் 1ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை, அலுவலக வேலை நாட்களில், காலை, 10:30 மணிமுதல், மாலை, 4:00 மணி வரை, மாநகராட்சி ஓய்வூதிய பிரிவில் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை,: பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்தனர். மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் பல சலுகைகளை அறிவித்தார். 'இது, வாக்குறுதிகளாகவே உள்ளன; அரசாணைகளாக தரவில்லை' எனக்கூறி, அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'கை தொடர்ந்தனர். 

மத்திய அரசின் 'குரூப் பி', 'குரூப் சி' பணி: மார்ச் 10 கடைசி தேதி

மதுரை:நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது. பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச் ௧௦ க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

இன்று 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை : தமிழகம் முழுவதும் 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம், இன்று(21-02-16) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 43,051 சொட்டு மருந்து மையங்கள், 1,652 நடமாடும்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயருகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறியதாவது:–மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. 


கடந்த 6–வது ஊதியக்குழு பரிந்துரையில் அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது.கடந்த ஜனவரி 2015 முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர்வோர் குறியீட்டு எண். 6.73 சதவீதமாகஉள்ளது.அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம். அடிப்படை ஊதியத்துடன் இணைந்து அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1–ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசுஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்காக சலுகைகளை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக சில முக்கிய சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆற்றிய உரையில்,மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் ஓர் அங்கமாக அனைவரும் ஏற்பதற்கும், வளர்ச்சியில்  மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

Friday, February 19, 2016

10 science practical study Material-EM 10 science practical EM click here..

CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:

PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017

BT TO PGT PROMOTION | 2016-2017ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் பதவி உயர்வு அளிக்க 1.1.2016 நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் விவரங்கள் கோரப்பட்டுள்ளது..

"ஜாக்டோ' சார்பில் இன்று மனிதச் சங்கிலி

சென்னை உள்பட மாவட்ட தலைநகரங்களில், மனிதச் சங்கிலி போராட்டத்தை சனிக்கிழமை நடத்த "ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.
 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், பிற பணப்பயன்கள் ஆகியவைகளை வழங்குதல் உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியறுத்தி, ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாததால் ஆசிரியர்கள் சங்கத்தினர் ஏமாற்றம் அடைந்தனர். 

படியில் மாணவர்கள் பயணம்: அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஆட்சியர் கண்டிப்பு

ஏராளமான மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு வந்த அரசுப் பேருந்தை நிறுத்திய ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், ஓட்டுநரை அழைத்து எச்சரித்து அறிவுரை கூறினார்.

 மதுரை மாட்டுத்தாவணி  நிலையத்தில் இருந்து போக்குவரத்து நகர் செல்லும் அரசு நகரப் பேருந்து தெற்குவாசல் பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்தனர். அதோடு பள்ளி மாணவர்கள், பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு வந்தனர்.

பெரிய ஏமாற்றம் போராட்டம் தொடரும்!

'முதல்வரின் அறிவிப்பு கண்துடைப்பு; போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி' என, தெரிவித்துள்ள ஆசிரியர், ஊழியர் சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
கண் துடைப்புஅரசுக்கு நிதி இழப்பு இல்லாத, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்றுவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான குழு எப்போது விசாரித்து, முடிவு எப்போது கிடைப்பது; 

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜெ., அறிவித்த சலுகைகள் போதாது: போராட்டத்தை தொடர அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு


சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகளை அறிவித்தார். ஆனால், 'முதல்வர் அறிவித்த சலுகைகள் போதாது' என, அறிவித்துள்ள அரசு ஊழியர் சங்கங்கள், போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளன.

வி.ஏ.ஓ., தேர்வு'ஹால் டிக்கெட்'

சென்னை,:டி.என்.பி.எஸ்.சி.,யின் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.பிப்., 28ம் தேதி நடக்கவுள்ள, வி.ஏ.ஓ., தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, www.tnpsc.gov.in மற்றும், www.tnpscexams.net என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். சந்தேகம் இருப்பின், 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்'.

பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிப்., 25ல் பேரணி'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுக்குழுவின் உயர்மட்டக் குழு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் ரங்கராஜன் தலைமையில், இன்று கூடி, மாவட்ட தலைநகரங்களில் பேரணி; பிப்., 25ல் சென்னையில் கோட்டை நோக்கி பேரணி போராட்டத்தை அறிவித்துள்ளது.

எல்.கே.ஜி.,க்கு ரூ.42 ஆயிரம் 'பீஸ்' சிங்காரவேலர் கமிட்டி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் சார்பில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயித்து, அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'ஒழுங்கு நடவடிக்கையும் பாய்கிறது

பிப்., 10 முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு, வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளத்தை பிடிக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து, சில ஆசிரியர் சங்கங்களும், சில கல்வி அலுவலக ஊழியர் சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, வேலைக்கு வராமல், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள், ஆசிரியர்களிடம், எந்த விளக்கமும் கேட்காமல் சம்பளத்தை பிடிக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

TNPSC VAO HALLTICKET DOWNLOAD - EXAM DATE - 28-02-2016

Advt. No./
Notification No.
Name of the Post (s) with Code No.
Date of Notification
Date of Closing
Date of Exam
Status
19/2015
Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service
12.11.2015
31.12.2015
28.02.2016 FN

இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் விதி 110 இன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள்

Thursday, February 18, 2016

அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பட்டியல்

அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, "அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள்.

அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் : ஜெயலலிதா அறிவிப்பு

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!