TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Monday, October 31, 2016

அகவிலைப்படி உயர்வு எப்போது?

'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, இரு மாதங்களுக்கு முன், இரண்டு சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது.

தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி : அரசு பள்ளிகளுக்கு அறிவுரை

பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான, வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ள நிலையில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில் சேரதமிழக பல்கலைகளுக்கு உத்தரவு

மத்திய அரசின் டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில், மாணவர்களின் சான்றிதழ் விபரங்களை பதிவு செய்யும்படி, தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலை சான்றிதழ்களில் போலி சான்றிதழ்கள் அதிகரித்துள்ளதாக, பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு புகார்கள் வந்தன.

'பிளே ஸ்கூல்' அங்கீகாரம்; முடிந்தது காலக்கெடு

'பிளே ஸ்கூல்' என்ற மழலை பள்ளிகள், அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. விண்ணப்பிக்காத பள்ளிகளில், 'ரெய்டு' நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

பள்ளி வேன்களில் பாதுகாப்பு பணிக்கு ஆசிரியை கூடாது: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

புதுடில்லி : 'பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, தனியாக பெண் காவலர்கள் அல்லது உதவியாளர்களையே பயன்படுத்த வேண்டும்.

NTSE 2016 - Hall Ticket Download revised Instructions


மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்வு: நள்ளிரவு முதல் அமல்.

மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குநாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கேரள மாநிலத்திருந்து கன்னியாகுமரி மாவட்டம் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டு ஆகியதை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று வெளியிட்டார்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,5-ல் உள்ளூர்விடுமுறை.

திருச்செந்தூரில் வரும் 5-ம் தேதி கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறஉள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்கில், தொடர்ந்து 36 மாதங்களாக பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு செயல்படாத கணக்கு ஆகி விடும். இப்படி செயல்படாமல் போன கணக்குகளில் ரூ.42 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் உள்ளது.

TRB:2011-12 To 2014-15 Appointment Tamil BT's Regularisation order.


TRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு தேர்வு:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

NATIONAL UNITY DAY CEREMONY

Sunday, October 30, 2016

தொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அ.க.இ. சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட உத்தரவு.


பள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்மை பதிவில் குளறுபடி

பள்ளியை தக்க வைக்க, தகவல் மேலாண்மை இணையதளத்தில், மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து பதிவேற்றம் செய்த ஆசிரியர்களால், அதன் விகிதாச்சாரத்தை முறைப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.

இ.எம்.ஐ.எஸ்.,(எஜிகேஷனல் மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) என்ற திட்டத்தில், தமிழகத்தில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகிறது. 

'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்

ஊராட்சி நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஸ்மார்ட்' வகுப்புகளால், கிராமப்புற மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த, அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இதன்படி, கிராமப்புற மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வரும் வகையில், செயல்வழி கற்றல், விளையாட்டுடன் இணைத்து வகுப்புகளை நடத்துவது, ஆங்கில பயிற்சி போன்ற, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

எம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு

சென்னை;அரசு கல்லுாரிகளில், எம்.டி., சித்தா படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம் சித்தா கல்லுாரியில் இன்று நடக்கிறது.தமிழகத்தில், சென்னை மற்றும் நெல்லையில் உள்ள சித்த மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., படிப்பில், 94 இடங்கள் உள்ளன.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி

சென்னை:ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக, பெரியார் பல்கலை உறுப்பு கல்லுாரி முதல்வர் ரவீந்திரநாத் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆசிரியர் கல்வியியல் கட்டுப்பாட்டின் கீழ், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தும், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த பல்கலையில், கல்வியியல் படிப்புக்கான தேர்வுகளை நடத்த, தனியாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செயல்படுகிறார். இந்த பொறுப்பில் இருந்த, பேராசிரியர் மணிவண்ணன், 2015ல், ஓய்வு பெற்றார்.

பிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வி துறையின் அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. 

தமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மறுப்பு

ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி'யை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாக வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.சமச்சீர் கல்வியில், தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக்கொடுக்க, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், வீடியோ பாடங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. 

தேசிய திறனாய்வு தேர்வு:நாளை 'ஹால் டிக்கெட்'

சென்னை:கல்வி உதவித்தொகைக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

Saturday, October 29, 2016

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அரசுப் பள்ளிகள் பார்வையிடல் (31.10.2016 & 01.11.2016) - உத்தேச சுற்றுப்பயண விவரம்..

DSE : PAY ORDER FOR 210 BT's & 500 PGT's UPTO 30.06.2017

CPS - INTEREST CALCULATION WORKSHEETS..2009 - 2016

குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது. கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:

'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாகம்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த, அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இதன்படி, கிராமப்புற மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வரும் வகையில், செயல்வழி கற்றல், விளையாட்டுடன் இணைத்து வகுப்புகளை நடத்துவது, ஆங்கில பயிற்சி போன்ற, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அகஇ - குருவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் சார்ந்த மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..மாவட்ட அளவிலான குருவள மைய எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு விவரம்...

Friday, October 28, 2016

'வாட்ஸ் ஆப்' மூலம் வாழ்வு பெற்ற பள்ளி

சிவகங்கை: தற்போது வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்றவைகள் இளைஞர்களை சீரழித்து வருகிறது என்று கூறி வந்தாலும், சிவங்கையில் 'வாட்ஸ் ஆப்' குரூப்பால் அரசு பள்ளி வாழ்வு பெற்றுள்ளது. சிவகங்கை அருகே மலம்பட்டி ஊராட்சி கன்னிமார்பட்டியில் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1968ல் துவங்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளை நெருங்கும் இந்த பள்ளியில், கடந்த ஆண்டு 18 மாணவர்களே இருந்தனர்.

மரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு : களம் இறங்கிய பள்ளி மாணவர்கள்

தேனி: மரங்கள் வளர்த்து பூமியை பசுமையாக்கும் நோக்கில் தேனி பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர். மரங்களை வெட்டியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் மண்டலத்தில் ஓட்டையால் பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றம் என பல வகையில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் இயற்கையை அழிக்கும் நிகழ்வுகள் தொடர்கிறது. இந்நிலையில் தேனி அருகே பள்ளி மாணவர்கள் பசுமையை பாதுகாக்க மரக்கன்றுகள் வளர்க்க புது முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா?

ஐந்து ஆண்டுகளாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டு கிடைப்பது சிரமம் என, தெரிகிறது. தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், 4,331 கோடி ரூபாய் செலவில், 38 லட்சம் லேப் -- டாப்கள், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு துவங்கிய, இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங்கள் பின்பற்ற துவங்கியுள்ளன.

அரசு அலுவலகங்களில் ஊழல் ஒழிப்பு வாரம்

சென்னை: அனைத்து அரசு அலுவலகங்களிலும், 31ம் தேதி முதல், நவ., 5 வரை, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: 'தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்க, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடக்கிறது.

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு

'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். 

TET PAPER I SELECTED CANDIDATES WAITING LIST published for Social Defence Department Teachers.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS
SOCIAL WELFARE DEFENCE DEPARTMENT - 2016

Dated: 28-10-2016

Member Secretary

G.O.No.279 FINANCE Dt: October 27, 2016-PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st October, 2016 to 31st December, 2016 is 8%- Orders - Issued


5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து.

ஐந்தாம் வகுப்பு முதல், கட்டாயமாக ஆண்டுஇறுதி தேர்வு நடத்தவும், 'ஆல் பாஸ்' திட்டத்தை நீக்கவும், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, தேர்வின்றி ஆல் பாஸ் செய்வது அமலில் உள்ளது. 

TET : ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துபூர்வ வாதம் தாக்கல்

ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு தரப்பில் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.   

ஆசிரியர் தேர்வு வழக்கு

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு.

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.

Thursday, October 27, 2016

EMIS - FORMAT - 2016 -17 4 FORMS AVAILABLE....


பத்தாம் வகுப்பு - பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்பட்டியலை தயாரிப்பதை விரைந்து முடிக்கவேண்டும் !!


தேசிய ஒற்றுமை நாள் :- 31.10.16 கொண்டாடுதல் - உறுதிமொழி!


TRB SCERT Lecturer Exam Result Published..

'எமிஸ்' பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்

பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு நிதியுதவியுடன், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மூலம், 'எமிஸ்' கல்வி மேலாண்மை தொழில்நுட்ப திட்டம், அமலுக்கு வந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும் உள்ள, 50.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 54.24 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது அடிப்படை சம்பளத்தில், 2 சதவீத அகவிலைப் படி உயர்வு அளிக்க,

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு

'பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது. இதன்படி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, அரசு உத்தரவிட்டது.

5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து

ஐந்தாம் வகுப்பு முதல், கட்டாயமாக ஆண்டு இறுதி தேர்வு நடத்தவும், 'ஆல் பாஸ்' திட்டத்தை நீக்கவும், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, தேர்வின்றி ஆல் பாஸ் செய்வது அமலில் உள்ளது. இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் உள்ளன.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்து

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு நடத்தப்படும், இரட்டை தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. கடந்த, 2010 முதல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு இரண்டு வகையில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அழகான அடையாள அட்டை : வாக்காளர்களிடம் ஆர்வம்

அரசு இ - சேவை மையங்களில், உடனுக்குடன் புகைப்படம் எடுத்து, வினியோகிக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைக்கு, மவுசு அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில், 1.67 லட்சத்திற்கும் அதிகமானோர், அவற்றை பெற்றுள்ளனர்.

'கை நாட்டை' ஒழித்த இளைஞர்கள் : பசுமையை நோக்கி செல்லும் கிராமம்

காளையார்கோவில்: 20 ஆண்டுகளுக்கு முன் கருவிக்கண்மாய் கிராமத்தில் 'கைநாட்டு' பெண்களே அதிகம். தற்போது படிக்காத பெண்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் களையார்கோவில் ஒன்றியம் புலியடிதம்மம் ஊராட்சிக்குட்பட்டது கருவிக்கண்மாய் கோபாலபட்டணம் கிராமம். 120 குடும்பங்கள் வசிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு பட்டதாரி மட்டுமே இருந்துள்ளார்.

2% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக்கல்.

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

DA:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு ?

TNPSC பொதுத் தமிழ் -DINAMANI (group IV - முக்கிய குறிப்புகள் தேதி வாரியாக)

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 6-ம் வகுப்பு
07-11-201508-11-201509-11-201510-11-201506-12-201507-12-2015
08-12-201509-12-201510-12-201511-12-201528-02-201629-02-2016
01-03-201602-03-201625-03-201626-03-201627-03-201628-03-2016
29-03-201630-03-201603-06-201604-06-201605-06-201606-06-2016
29-06-201630-06-201601-07-201602-07-201603-07-201604-07-2016
 TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 7-ம் வகுப்பு
10-11-201512-11-201513-11-201514-11-201511-12-201512-12-201513-12-201514-12-2015
15-12-201516-12-201502-03-201603-02-201604-03-201605-03-201630-03-201631-03-2016
04-03-201605-03-201630-03-201631-03-201601-04-201602-04-201603-04-201604-04-2016
06-06-201607-06-201608-06-201609-06-201604-07-201605-07-201606-07-201607-07-2016
08-07-201609-07-2016

Wednesday, October 26, 2016

28ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

அரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக்கிழமையே (அக்.28) ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி பண்டிகை சனிக்கிழமை(அக்.29) வருவதால், ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமையே (அக்.25) ஊதியம் வழங்கப்பட்டதால் தமிழக அரசு ஊழியர்களிடையே இந்தக் கோரிக்கை தீவிரமடைந்தது.

அண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு அதை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 15 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தங்களது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), பட்டச் சான்றிதழை(Covocation)  இதுவரை பெறாததால் அவை தேர்வுத் துறையில் உள்ளன.

அரசு பள்ளி ஆசிரியர்கள் எம்.பில், பி.எச்.டி உயர்படிப்பு முடித்தமைக்கு பின்னேற்பு வழங்கிய அரசாணை


தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை? - DINAMALAR

தீபாவளிக்கு முதல் நாள், பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகள், உள்ளூர் விடுமுறை எடுக்க முடிவு செய்துள்ளன. தீபாவளி பண்டிகை, அக்., 29ல் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆயுத பூஜை பண்டிகை முதலே, தீபாவளி பண்டிகைக்கான முன் தயாரிப்புகள் துவங்கி உள்ளன. தீபாவளி பண்டிகை, சனிக்கிழமை வருவதால், அதற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை வரையும், அதேபோல், அக்., 31, திங்கள் கிழமையும் வழக்கம் போல், பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

'அந்த' கணக்கு; விடை தேடுது கல்வித்துறை : அரசு பள்ளிகளில் கணக்கெடுப்பு ஜரூர்

மதுரை: மதுரை, திண்டுக்கல், தஞ்சை மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்து கல்வி அதிகாரிகள் அவசர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.'தினமலர்' நாளிதழில் 2014 ஆக., 8ல் வெளியான செய்தி அடிப்படையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கு ஒன்றில், 'அக்.,27ல் திண்டுக்கல், தஞ்சையிலும், அக்.,31ல் மதுரை மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதியை 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' ஆய்வு செய்ய வேண்டும்' என உத்தரவிடப்பட்டது.

அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க!

வேடசந்துார்: மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர் 1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராக நியமிக்கப்பட்டார்.

மின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு

இளநிலை தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம், நேர்முகத் தேர்வு நடத்த உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூலை, ஆக., மாதங்களில், எழுத்துத்தேர்வு நடத்தியது. அதில், கள மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்,

தொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புவளர்த்தல் பயிற்சி நடத்துதல் சார்ந்த செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல்!!


TNPSC - Group - 4 Hall Ticket Published..

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு அதிகாரி நேரடி செயல் முறை விளக்கம்

பாதுகாப்பாக பட்டாசுகளை  வெடிப்பது எப்படி ? 
      தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்பாதுகாப்பான தீபாவளிகொண்டாடுவது எப்படி? பட்டாசுகளை வெடிப்பது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு  நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.

2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியராக பணியாற்றலாம் ?

நேற்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.

புதிய வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

2 நாட்கள் எஸ்.எஸ்.ஏ., பயிற்சி, மானவர்கள் நலன் கருதி பயிற்சி குறைப்பா

காரைக்குடி:அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், கடந்த ஆண்டு மாதம் ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை இரண்டு பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் மூலம், ஆண்டுதோறும் தொடக்க, நடுநிலை, உயர் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார, குறுவள அளவில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சியில் பங்கேற்பது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கடமையாகும். மாதம் ஒரு நாள் என ஆண்டுக்கு 10 நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 28.10.16 அன்று உள்ளூர் விடுமுறை விட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் CEO செயல்முறைகள்.


Tuesday, October 25, 2016

தீபாவளி முந்தைய நாள் பள்ளி உள்ளூர் விடுமுறை இல்லை..வேலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவு.


TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவு - விரைவில் தீர்ப்பு!

தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அரசாணை

தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு.தமிழ்நாடு..

சமஸ்கிருத கல்வி, 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் ரத்து - தமிழக அரசு எதிர்ப்பு!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.
புதிய வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.,அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக் குழுவினர் கருத்துக் கேட்புக்களை நடத்தினர். அதன் பின்னர் “புதிய கல்விக் கொள்கை வரைவு” ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினர்.

அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்காததற்கு காரணம்??

31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cutt of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி.
அதாவது இன்று மாலை ECS கணக்கினை TREASURY முடித்தால் மட்டுமே 26.10.2016 காலை யில் BATCH அனுப்ப இயலும்.

ஜி.பி.எப்., வட்டி குறைப்பு

சென்னை: ஜி.பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, வட்டி விகிதத்தை குறைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெடு'

ரேஷன் கடைகளில், 'ஆதார்' விபரம் தர, காலக்கெடு நிர்ணயிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், பழைய ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு, அதில், ரேஷன் கார்டுதாரின், ஆதார் விபரங்கள் பெறப்படுகின்றன.

எல்காட் 'இ - சேவை' மையங்களிலும் வண்ண வாக்காளர் அட்டை பெறலாம்

தமிழக அரசு மின்னணு நிறுவனமான, எல்காட், தன் கட்டுப்பாட்டில் உள்ள, 361, 'இ - சேவை' மையங்களில், வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அச்சிட்டு தர முடிவுசெய்துள்ளது. 
இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், அரசின் சான்றிதழ்கள், உதவி திட்டம் உள்ளிட்ட, 90க்கும் மேற்பட்ட சேவைகள், 10 ஆயிரம், இ - சேவை மையங்கள் மூலம், மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு

'நாட்டின் சமூக கட்டமைப்புக்கு முரண்பாடாக அமையும் என்பதால், வெளிநாட்டு பல்கலைக் கழங்களை,இந்தியாவில் அமைக்கஅனுமதிக்க கூடாது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டில்லியில், நேற்று நடந்த, மத்திய அரசின் கல்வி வாரிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தமிழகம் ஏற்காது

தமிழகத்தில், மீன்வளம், விவசாயம், கல்வி, சட்டம், இசை, கலை, விளையாட்டு என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பல்கலைக் கழகங்கள் உள்ளன. 

இம்மாத ஊதியம் வழக்கம் போல் 31:10:2016 அன்றே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் அரசாணை எண் 277 செயல்படுத்த இயலாது என்பதற்கான கருவூலத்துறையின் கடித நகல்


பள்ளிக்கல்வி - விபத்தில்லா தீபாவளி - முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கும்படி ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

விபத்தில்லா தீபாவளி குறித்து பள்ளியில் எடுக்கவேண்டிய உறுதிமொழி


அரசு ஊழியர்களின் பணிப்பதிவேட்டை Digitization செய்ய உத்தரவு.....

G.O No. 276 Dt: October 2016- PROVIDENT FUND– GPF (Tamilnadu) – Rate of interest fo 01.10.2016 to 31.12.2016 is 8.0%– Orders issued

SPECIAL OFFICER DUTIES & RESPONSIBILITIES...தனி அலுவலர்களின் பொறுப்புகளும்,கடைமைகளும்..

தனி அலுவலர்களின் பொறுப்புகளும்,கடைமைகளும்..


CLICK HERE TO DOWNLOAD - SPL OFFICER DUTIES...

CLICK HERE TO DOWNLOAD SPL OFFICERS - GO .....

CONTIGENCY FUND REGARDING LETTER..

பள்ளிகளில் கழிவறை,தண்ணீர் இருக்கிறதா? ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி அதிரடி ஆய்வு.

CPS NEWS: தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில் ஓய்வு பெற்ற சந்தாதாரர்களின் ஓய்வூதிய விபரங்கள் தம்மிடம் இல்லை - PFRDA

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில் ஓய்வு பெற்ற சந்தாதாரர்களின் ஓய்வூதிய விபரங்கள் தம்மிடம் இல்லை.

PFRDA வால் நிதி மேலாளராக நியமிக்கப்பட்ட LIC PENSION நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது SBI PENSION FUND நிறுவனமும் ஓய்வூதிய விபரங்கள் தம்மிடம் இல்லை என கைவிரிப்பு.

Flash news:salary on 28.10.16,just now all STO received mail


Monday, October 24, 2016

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இலவச சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அடிக்கப்போகிறது 'லக்': !

Reliance Jio likely to continue free services till March: analysts . 


Reliance Jio Infocomm Ltd may extend its offer of free phone services to customers till March, about three months later than its earlier plan of ending free services on 31 December, parent Reliance Industries Ltd told analysts. 

“Mass scale free welcome offer could continue until March 2017 to attract subscriber growth towards the celebrated 100 million mark with RJio’s indicative data pricing at Rs130-140 per giga byte,” Motilal Oswal analysts wrote in a 21 October note. 

தனி அதிகாரிகளின் பொறுப்புகள்-கடமைகள் என்ன?

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகளின் பொறுப்புகள், கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

என்னென்ன பணிகள்? 

கிராம ஊராட்சிகளில் சாலைகள் அமைப்பது, பராமரிப்பது, சீரமைப்பது, பொது சாலைகள், பொது இடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்துவது, சாலைகளை சுத்தமாக பராமரிப்பது, பொது கழிப்பிடங்கள், சுடுகாடுகளை தூய்மையாகப் பராமரிப்பது, பொது மக்கள் குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்தும் நீர் ஆதாரங்களை பராமரிப்பது போன்ற பணிகளை தனி அதிகாரிகள் கண்காணிப்பர்.

தனியார் பள்ளிகள் எனும் அதிகார பீடங்கள்

தனியார் பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

நடுத்தர வயதைச் சேர்ந்த அவர் பதற்றத்தோடு காத்திருந்தார். அவருடைய உடையையும் தோரணையையும் பார்த்தாலே ஏதோ ஒரு பெருநிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரி என்பதைச் சொன்னது. பக்கத்தில் அவர் மனைவி. இருவரும் பொறுமை இல்லாமல் அரை மணிநேரம் காத்திருந்த பிறகு அவர்கள் அந்த அறைக்குள் அழைக்கப்பட்டார்கள். வெளியே வர 15 நிமிடங்கள் ஆயின.

பட்டாசு வெடிப்பது எப்படி: மாணவர்களுக்கு அறிவுரை

'பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கவனக் குறைவாக பட்டாசு வெடிப்பதால், தீ விபத்து ஏற்பட்டு, உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்படுகின்றன. மாணவர்களுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்புகளும் ஏற்படுகின்றன.

28.10.2016 வெள்ளிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும்.

2011-12 B.T. ENGLISH COMMON REGU.ORDER RC NO.8635 dt.17.10.16

ADW - UNCLEAN SCHOLORSHIP REGARDING LETTER

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று (25.10.2016) இறுதிகட்ட விசாரணை பட்டியலில் எண் 222ல் இடம்பெற்றுள்ளது.


G.O M.S.NO :124 - ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு ஆணை வெளியீடு.

வினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை

கல்வித் துறையின் கீழ் இயங்கும், பெற்றோர், ஆசிரியர் கழகம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா வங்கி புத்தகத்தை தயாரித்துள்ளது. இதில், தற்போதைய பாடத்திட்டம் அமலுக்கு வந்த, 2006 முதல், கடந்த செப்., வரை நடந்த, பல தேர்வுகளின் வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி

பேராசிரியர் பணி தகுதிக்காக, தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 14 சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, செட் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. இதன் முடிவை, தேர்வை நடத்திய, அன்னை தெரசா பல்கலை நேற்று வெளியிட்டது.

அகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள் முடிவு

மதுரை: அகவிலைப்படி, சம்பளக்குழு அமைக்க கோரி தமிழகத்தில் ௧,௦௦௦ அலுவலகங்கள் முன் நாளை (அக்., 26) ஆர்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
மாநில செயலாளர் செல்வம் மதுரையில் கூறியதாவது: 'புதிய சம்பளக் குழுவை மத்திய அரசு அமைத்ததும், மாநில அரசும் அமைக்கும்' என முதல்வர் ஜெ., வாக்குறுதி அளித்தார்.

'டிபாசிட்' பணம் கிடைக்குமா? : நிபுணர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, அக்., 17, 19ல், நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, செப்., 25ல் வெளியானது. வேட்பு மனு தாக்கல் மறுநாள் துவங்கி, அக்., 3ல் முடிந்தது. தேர்தலில் போட்டியிட, 4.97 லட்சம் பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களிடம் இருந்து, 10 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி,

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தனி அதிகாரிகள் நியமனம் செய்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. 
இன்று காலை பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம், நேற்றுடன் நிறைவு பெற்றது. அவர்களின் பதவி காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் பணிகளை துவக்கியது. வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தல் பணிகளை நிறுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி

'அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், தட்டச்சர் உட்பட, 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 எழுத்து தேர்வு, நவ., 6ல் நடக்கிறது. 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேர வாய்ப்பு

பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே நுழைவுத்தேர்வு எழுத முடியும் என்பதால், தமிழக மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் சேர பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. பிளஸ் 2 முடித்தோர், மத்திய அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தனி அதிகாரிகள் நியமனம் செய்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இன்று காலை பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம், நேற்றுடன் நிறைவு பெற்றது. அவர்களின் பதவி காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் பணிகளை துவக்கியது.

EMIS student data capture format..

தீபாவளிக்கு முதல்நாள் [28.10.2016] பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது ...


SET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

EMIS TUTORIAL FOR TN SCHOOLS - HOW TO USE COMMON POOL DETAILS

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு நாளை(25.10.2016) விசாரணை!

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு நாளை(25.10.2016) இறுதிகட்ட விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ATLAS : ALL COUNTRY MAPS FOR SCHOOL STUDENTS

1 - 5 th GRAMMARATICAL WORDS WITH TAMIL MEANINGS

6 - 8 TERM - II SCIENCE MIND MAP

CPS பற்றி ஆராயும் வல்லுநர் குழு அறிக்கையை, அரசிடம் சமர்ப்பிக்கும் தேதியையும், இது வரை எத்தனை பக்க அறிக்கையை தயார் செய்துள்ளது கேள்விக்கு RTI - நிதித்துறை பதில்

Sunday, October 23, 2016

வகுப்பில் ஹலோ ஹலோ ஆசிரியர்கள் கலக்கம்.....


vellore district a/c pin no change details of account holders list with their mobile no please check it and share this pic....

Atm Card இல் பின் நம்பர் மாற்றப் படவேண்டியவர்கள் விவரம் வெளியீடு இதில் உங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் யார் a/c என்பதை நீங்கள் search இல் உங்களது district விவரம் தந்தால் போதும் உங்களது district இல் உள்ளவர்கள் விவரம் தோன்றும் அல்லது mobile no கொடுத்து search செய்து கொள்ளவும் இவர்கள் உடனடியாக தங்களது a/c pin no change செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

  • 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் atm card pin no திருடப்பட்டவர்கள்  விவரம் வெளியீடு ...
  • இதில் நீங்கள் அல்லது உங்களது குடுமப்த்தில் உள்ளவர்களது a/c  atm card pin no கூட திருடப்பட்டிருக்கலாம் 
  • Atm Card இல் பின் நம்பர் மாற்றப் படவேண்டியவர்கள் விவரம் வெளியீடு இதில் உங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் யார் a/c என்பதை நீங்கள் search இல் உங்களது district விவரம் தந்தால் போதும் உங்களது district இல் உள்ளவர்கள் விவரம் தோன்றும் அவர்களது atm pin no   உடனடியாக மாற்ற படவேண்டும்.
  • அல்லது உங்களது வங்கியில் கொடுத்த mobile பதிவு செய்து உங்களது a/c திருடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்....

click here to download compromised list (a/c atm pin no need to be changed list ) 

சித்தா கலந்தாய்வு நடக்குமா?வரும் 31ல் முடியுது அவகாசம்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து, நான்கு மாதங்களாக தவம் கிடக்கின்றனர். ஒரு வாரத்தில், சேர்க்கை அவகாசம் முடிவதால், கலந்தாய்வு நடக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதிக் கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன; இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'

பேராசிரியர் பணி தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.நாடு முழுவதும், பல்கலை மற்றும் கல்லுாரி களில் பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் மட்டும் பேராசிரியராக, தமிழக அரசு நடத்தும் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழகத்தில், தெரசா பல்கலை, பிப்ரவரியில் இத்தேர்வை நடத்தியது. எட்டு மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. 

புதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டம் குறித்து, தமிழக அரசின் நிலையை, பள்ளிக் கல்வி அமைச்சர், டில்லியில் நாளை அறிவிக்கிறார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஜூலையில் வெளியானது. அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறையினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அத்துடன், மாநில அரசுகளும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறியது. கருத்துக் கேட்பு, செப்., 30ல் முடிந்தது.

நேரில் வந்தால் உடனே வேலை:டாக்டர்களுக்கு அரசு சிவப்பு கம்பளம்

'நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' என, சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, தமிழக அரசு, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது; 414 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில், எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டாலும், எம்.எஸ்., - எம்.டி., என்ற முதுநிலை பட்டம் பெற்ற, அறுவை சிகிச்சை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை. அதனால், சிறப்பு பிரிவு டாக்டர்களை, கூடுதலாக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

'மேதகு வேண்டாம்; மாண்புமிகு போதும்'

சென்னை:'மேதகு என்பதற்கு பதிலாக, மாண்புமிகு என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே போதும்' என, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை, அவர்களது பெயருக்கு முன், மாண்புமிகு எனக்கூறி கவுரவப்படுத்துவர். அதே நேரத்தில், கவர்னரை அழைக்கும் போது, 'மேதகு ஆளுனர்' என, கவுரவமாக அழைப்பர்.

Teach your kids through this wonderful technique..மாணவர்கள் எளிமையாக ஓவியம் வரைய பயிற்சித்தாள்..


மீண்டும் முத்திரை பதித்த மூலத்துறை பள்ளி...


மூத்தோர்,இளையோர் இடையே ஏற்படும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டி நிதித்துறை முதன்மை செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம்..

LIST OF INCENTIVE G.O"S..

RTI - இளையோர், மூத்தோர் இடையே ஏற்படும் ஊதிய முரண்பாடு குறித்து RTI மூலம் பெறப்பட்ட தகவல்..

உள்ளாட்சி 21: குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!

தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நோக்கி பேருந்து விரைகிறது. காகங்களின் கரைதலில் கரைந்துக்கொண்டிருக்கிறது அதிகாலை இருட்டு. வாய்க்காலில் சிறுவர்கள் பாய்கிறார்கள். எங்கும் பசுமை. நெற்பயிர்கள் முளைவிட்டிருக்கின்றன. பெருகுமோ, கருகுமோ தெரியவில்லை. காவிரித் தாயை நம்பிக் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். படிப்படியாகக் குறைகிறது பசுமை. வயல்களில் முளைத்திருக்கின்றன திடீர் கட்டிடங்கள்.

குழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா? கூச்சம் போக்கும் 10 டிப்ஸ்!

ஒரு குழந்தையை ஐந்து, ஆறு வயதுவரை தாய்மொழியிலேயே பேசிப் பழக்கும்போது, அது மனதில் ஆழமாக தங்கிவிடும். அதன்பின் எளிதாக பேசுவார்கள். அதன்பிறகு, இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. அதில் பலரின் தேர்வு ஆங்கிலமாவே இருக்கிறது.

அனைத்து மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE

வாட்சாப்பில் வாய்ஸ் மெஸேஜ் !

Whats appல் வலது பக்கம் மேலே 📎 இந்த அடையாளத்தில் click செய்து Audio வில் click செய்து Record with whatsapp என்றதில் click செய்தால் அமர்த்தி பிடிக்காமலேயே  hands free ஆக Recording செய்யலாம். தேவைப்பட்டால் play செய்து கேட்ட பிறகு Send செய்யலாம், இல்லை cancel லும் செய்யலாம். குறைந்த KB மட்டுமே file வரும்.

விடைபெற்றது 'சஞ்சாயிகா' : கேள்விக்குறியானது மாணவர்களின் சேமிப்பு பழக்கம் !

பள்ளிக்கூடத்துக்கு போக மறுத்து அடம்பிடித்தால் போதும், வழக்கமான பாக்கெட் மணியை விட, 50 பைசா கூடுதலாகவே கொடுத்து அனுப்புவார் அப்பா. வகுப்பறைக்குள் நுழைவதற்குள்ளே, மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் பாக்கெட் மணி கரைந்து விடும். சில குழந்தைகள் மட்டுமே அதை மண் உண்டியலில் சேமித்து வைப்பார்கள்.

இனி ஆளுநரை " மாண்புமிகு " என்று அழைக்க வேண்டும் !!

குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!

தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நோக்கி பேருந்து விரைகிறது. காகங்களின் கரைதலில் கரைந்துக்கொண்டிருக்கிறது அதிகாலை இருட்டு. வாய்க்காலில் சிறுவர்கள் பாய்கிறார்கள். எங்கும் பசுமை. நெற்பயிர்கள் முளைவிட்டிருக்கின்றன. பெருகுமோ, கருகுமோ தெரியவில்லை. காவிரித் தாயை நம்பிக் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். படிப்படியாகக் குறைகிறது பசுமை. வயல்களில் முளைத்திருக்கின்றன திடீர் கட்டிடங்கள்.

Saturday, October 22, 2016

டைப் ரைட்டிங் தேர்வு: 69,775 பேர் தேர்ச்சி

போடி: 'டைப்ரைட்டிங்' , சுருக்கெழுத்து(சார்ட்ஹேண்ட்), வணிகவியல் தேர்வுகளில் 69 ஆயிரத்து 775 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசு தொழில் நுட்ப கல்வி இயக்கம் மூலம் ஆகஸ்டில் நடந்த டைப்ரைட்டிங், சார்ட்ஹோண்ட் பிரிஜூனியர், இளநிலை, முதுநிலை, சி.இ.ஓ., அக்கவுண்டன்சி உள்பட தொழில் நுட்ப பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 872 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவர் விபரங்களை தாக்கல் செய்யும்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 

EMIS ANNEXURE -I, ANNEXURE - II, STUDENT POOL FORM தயாரிக்கும் வழிமுறை - STEP BY STEP PIC GUIDE

II mid term test- time table 2016




Friday, October 21, 2016

EMIS - FORMAT - 2016 -17 4 FORMS AVAILABLE....

கல்வி கொள்கை கூட்டத்தில் தமிழகம் பங்கேற்க முடிவு

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் நடக்கும் கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பங்கேற்கிறார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கையின் படி, மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. அதன் முக்கிய அம்சங்களை, மூன்று மாதங்களுக்கு முன், மத்திய அரசு வெளியிட்டது;

பள்ளிகளில் கேமரா : பெண்கள் சங்கம் மனு

சென்னை: 'பள்ளி, கல்லுாரிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சங்கத் தலை வர், கலைச்செல்வி கொடுத்த மனு: பல கல்லுாரி மற்றும் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு எதிராக, வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் நிதி முறைகேடுக்கு முற்றுப்புள்ளி

தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., செலவுகளை, ஆன்லைன் முறையில் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளில், மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்க்க, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம், 2009ல் அமலுக்கு வந்தது.

இன்ஜி., கல்லூரி பேராசிரியர் பணிக்கு இன்று தேர்வு

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடக்கிறது.அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடிகிறது. தேர்வுக்கு, 48 ஆயிரத்து, 286 பேர் விண்ணப்பித்தனர்; 2,336 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன; மீதமுள்ள, 45 ஆயிரத்து, 950 பேர், இன்று தேர்வில் பங்கேற்கின்றனர். 

அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?

'ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள், ஜூலையில் அமலுக்கு வந்தன; ஜனவரியிலிருந்து கணக்கிடப்பட்டு, பணப்பலன்கள் வழங்கப்பட்டன.

தீபாவளிக்கு முன் சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை கொண்டாட, பொதுத்துறை ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பண்டிகை முன்பணம் என்ற பெயரில், 5,000 ரூபாய் தரப்படும். இந்த ஆண்டு, பெரும்பாலான மாவட்டங்களில், முன்பணத்திற்கான விண்ணப்பமே பெறப்படவில்லை.

உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ணயித்தது அரசு

சென்னை: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான, கல்வி தகுதியை நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. 'ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு முன் மற்றும் பின் பெறும் உயர்கல்வி தகுதிகளுக்கு ஏற்ப, இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம்' என, அரசு ஆணை உள்ளது. அதே போல், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க, அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பொம்மலாட்டம் ஆடும் ஆசிரியர்கள் : அடிப்படை கல்விக்கு 'டாட்டா!'

அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள் தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டிய, எஸ்.எஸ்.ஏ., என்ற, மாநில திட்ட அமைப்பு, மத்திய அரசிடம் பெறும், பல கோடி ரூபாய் நிதியில், ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகளை அளிக்கிறது.

இணையதளத்தில் கட்டண விபரம் : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு

இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சுயநிதி பல்கலைகள், பாட வாரியான கட்டண விபரத்தை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.நாட்டில் பல மாநிலங்களில், இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி வசதிகள் இல்லை.

மவுனம்! ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்தில் ஆர்.பி.ஐ. புலனாய்வு செய்யாததால் வாடிக்கையாளர்கள் கோபம்

சென்னை:பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சத்திற்கும் அதிகமான, ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப் பட்டது குறித்து, ரிசர்வ் வங்கி மவுனம் காப்பது, 

வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம், சில வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் இருந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பணம் எடுக்கப்பட்டதாக, புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் விசாரணை மேற்கொண்டது. 

'பிற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்தாதீங்க!'

கோல்கட்டா: 'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காரணம் கருதி, பிற வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்' என, அந்த வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
வெளிநாட்டு மோசடி பேர்வழிகளின் கைவரிசையால், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களின், 'டெபிட்' கார்டுகளில் தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின், 6.5 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன.

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!