TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Saturday, March 4, 2017

ஓய்வு வயதை உயர்த்துவது இளைஞர்களுக்கு அநீதி ஆட்சிப்பணியாளர் சங்கம் கண்டனம்

மதுரை, :'அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.மாநில தலைவர் செல்வம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக்குழு அமல்படுத்தப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக நிதி செலவினம், 15 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட உள்ளது.

வரும் 2017-18 ல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்; அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதி சுமையை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. 
இது அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும், இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மாநிலத்தில் 148 அரசு துறைகள் உள்ளன. இதில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 12 லட்சத்து 56 ஆயிரத்து 352.
31.12.16 நிலவரப்படி வேலைவாய்ப்புக் கோரி ஒரு கோடியே 58 லட்சத்து 22 ஆயிரத்து 38 பேர் காத்திருக்கின்றனர். மொத்தம் 148 அரசு துறைகளிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பத்து ஆண்டுகளாக காலியாக உள்ளன. 
வருவாய்த்துறையில் மட்டும் 50 ஆயிரத்து 557 பணியிடங்களில் 10 ஆயிரத்து 95 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் 37 ஆயிரத்து 500ல் 4,827 பணியிடங்கள், வணிகவரித்துறையில் 9,732ல் 4,303 பணியிடங்கள், போலீஸ் துறையில் 21 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர் வயதை 60 ஆக உயர்த்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.நிதி பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிமுறைகள் அரசின் ஆலோசனையில் உள்ளன. 
அதை நடைமுறைப்படுத்தி, அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களில் படித்த இளைஞர்களை அமர்த்த வேண்டும்.

1 comment:

  1. ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதை வரவேற்கிறேன். ஆனால் 2001முதல்2006 வரை யாருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க வில்லை. 45 வயதில் அரசு வேலையில் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் குறைந்தது 15 ஆண்டு காலம் வேலை செய்ய வேண்டும்.

    ReplyDelete

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!