கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15ல் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக அரசு சார்பில் கொண்டாடப் படுகிறது. அன்று அனைத்து பள்ளிகளிலும், கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.


அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் வாழ்க்கை வரலாறு, அவரது எளிய வாழ்க்கை, ஆட்சியின் சாதனை, கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும்.அன்றைய தினம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல், பள்ளிக்கு வர வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.