ரிலையன்ஸ் ஜியோவின் மேம்படுத்தப்பட்ட தண் தணா தண் சலுகைக்கு போட்டியாக வோடபோன் இந்தியா புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவில் ரூ.244 என அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி அளவு 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் வோடபோன் எண்களுக்கு மட்டும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை முதல் முறை ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படும், இதனால் ஏற்கனவே வோடபோன் சேவையை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை வேலை செய்யாது.

முதல் முறை ரீசார்ஜ் செய்தபின் 70 நாட்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகை அடுத்த முறை ரீசார்ஜ் செய்தபின் 35 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதேபோல் வோடபோன் ரூ.346 விலையில் திட்டத்தை வழங்குகிறது. இதில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் 56 ஜிபி டேட்டா தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது. எனினும் வாய்ஸ் கால்ஸ் தினமும் 300 நிமிடங்களும், வாரத்திற்கு 1200 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. 

மை வோடபோன் செயலி கொண்டு ரூ.244 மற்றும் ரூ.346 திட்டங்களுக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் டாக்டைமில் சேர்க்கப்படும் என வோடபோன் அறிவித்துள்ளது.  

வோடபோன் போன்றே பாரதி ஏர்டெல் ரூ.244 விலையில் தினமும் 1 ஜிபி டேட்டா மற்ரும் ஏர்டெல் எண்கலுக்கு வாய்ஸ் கால் வழங்குகிறது. ஐடியா செல்லுலார் ரூ.297 விலையில் இதே போன்ற சலுகையை வழங்குகிறது. எனினும் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இந்த சலுகைகள் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகிறது.