மதுரை: "மதுரை காமராஜ் பல்கலையில், அனைத்து துறைகளையும் மேம்படுத்தும் வகையில் 82 அறிவுத்திறன் வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) துவங்கப்படும்," என துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: இப்பல்கலையின் பொன்விழா, கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு பேராசிரியர்களின் ஆய்வுகள், கட்டுரைகள் இடம்பெறும் வகையிலான, சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழ் உட்பட மூவகை பொன்விழா இதழ்கள் வெளியிடப்படும்.உலகத்தரம் வாய்ந்த பல்கலையாக மாற்றுவதற்கான, பிரமாண்ட வகையிலான மாணவர் மேம்பாட்டு மையம், வளாகம் முழுவதும் 'வைபை' வசதி மற்றும் 'பசுமை வளாகமாக' மாற்றுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கோடையில் பசுமைக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஏழு ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்தும், 3 லட்சம் லிட்டர் தண்ணீர்
பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில், ஒரு லட்சம் கன்றுகள் நடப்படும்.
மாணவர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, ஆராய்ச்சிகள் தொடர்பாக, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன், பல்கலை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் 50 வது பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலையில் காலியாக உள்ள சிண்டிகேட் பதவிகளை நிரப்பவும், பொறுப்பு பதவிகளில் நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தினக் கூலி பணியாளர்களின் சம்பள பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
'ரூசா' திட்டத்தில் ரூ. 20 கோடி : தொலைநிலை கல்வியில் எம்.பி.ஏ., போலீஸ் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி., கிரிமினல் ஜஸ்டிஸ் அன்ட் விக்டிமாலஜி உட்பட புதிய படிப்புகள் துவங்க உள்ளன. எம்.பி.ஏ., (போலீஸ் மேனேஜ்மென்ட்)வில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஓய்வு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மாணவருக்கு பாடம் நடத்த வருகை தருவர். பல்கலை வளர்ச்சிக்காக 'ரூசா' திட்டத்தின்
கீழ் 20 கோடி பல்கலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் 82 அறிவுத்திறன் (ஸ்மார்ட் கிளாஸ்) வகுப்பறைகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
'இக்னோ'வை வளர்ச்சி பெற செய்யும் முடிவு : ''மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி மையங்கள், வெளி மாநிலங்களில் செயல்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) உத்தரவு உள்ளது. தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையிலானது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்.வட மாநிலத்தவர் தமிழகத்தில் வந்து
தொழில் செய்யும்போது, தமிழக கல்வி மையங்கள் வட மாநிலங்களில் ஏன் செயல்படக் கூடாது. இதை சொல்வதால், எனக்கு பயம் கிடையாது. 'இக்னோ'வை வளர்ச்சி
பெற செய்யவே, இந்த முயற்சி. இதை துணைவேந்தராக இல்லாமல், ஒரு கல்வியாளனாக குறிப்பிடுகிறேன்,'' என்றார் துணைவேந்தர் செல்லத்துரை. மதுரை: "மதுரை காமராஜ் பல்கலையில், அனைத்து துறைகளையும் மேம்படுத்தும் வகையில் 82 அறிவுத்திறன் வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) துவங்கப்படும்," என துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: இப்பல்கலையின் பொன்விழா, கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு பேராசிரியர்களின் ஆய்வுகள், கட்டுரைகள் இடம்பெறும் வகையிலான, சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழ் உட்பட மூவகை பொன்விழா இதழ்கள் வெளியிடப்படும்.உலகத்தரம் வாய்ந்த பல்கலையாக மாற்றுவதற்கான, பிரமாண்ட வகையிலான மாணவர் மேம்பாட்டு மையம், வளாகம் முழுவதும் 'வைபை' வசதி மற்றும் 'பசுமை வளாகமாக' மாற்றுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கோடையில் பசுமைக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஏழு ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்தும், 3 லட்சம் லிட்டர் தண்ணீர் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில், ஒரு லட்சம் கன்றுகள் நடப்படும். மாணவர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, ஆராய்ச்சிகள் தொடர்பாக, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன், பல்கலை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் முதல் வாரத்தில் 50 வது பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலையில் காலியாக உள்ள சிண்டிகேட் பதவிகளை நிரப்பவும், பொறுப்பு பதவிகளில் நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தினக் கூலி பணியாளர்களின் சம்பள பிரச்னைக்கு தீர்வு காணப்படும். 'ரூசா' திட்டத்தில் ரூ. 20 கோடி : தொலைநிலை கல்வியில் எம்.பி.ஏ., போலீஸ் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி., கிரிமினல் ஜஸ்டிஸ் அன்ட் விக்டிமாலஜி உட்பட புதிய படிப்புகள் துவங்க உள்ளன. எம்.பி.ஏ., (போலீஸ் மேனேஜ்மென்ட்)வில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஓய்வு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மாணவருக்கு பாடம் நடத்த வருகை தருவர். பல்கலை வளர்ச்சிக்காக 'ரூசா' திட்டத்தின் கீழ் 20 கோடி பல்கலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் 82 அறிவுத்திறன் (ஸ்மார்ட் கிளாஸ்) வகுப்பறைகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். 'இக்னோ'வை வளர்ச்சி பெற செய்யும் முடிவு : ''மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி மையங்கள், வெளி மாநிலங்களில் செயல்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) உத்தரவு உள்ளது. தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையிலானது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்.வட மாநிலத்தவர் தமிழகத்தில் வந்து தொழில் செய்யும்போது, தமிழக கல்வி மையங்கள் வட மாநிலங்களில் ஏன் செயல்படக் கூடாது. இதை சொல்வதால், எனக்கு பயம் கிடையாது. 'இக்னோ'வை வளர்ச்சி பெற செய்யவே, இந்த முயற்சி. இதை துணைவேந்தராக இல்லாமல், ஒரு கல்வியாளனாக குறிப்பிடுகிறேன்,'' என்றார் துணைவேந்தர் செல்லத்துரை.
No comments:
Post a Comment