சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,000த்துக்கும் மேல் ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இரண்டு வாரங்களில், புதிய அறிவிப்பை வௌியிடவும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து, வெங்கடேசன், ஆனந்தன் ஆகியோர் தாக்கல் செய்த மனு: பொறியியல் படிப்பில், முதுகலை பட்டம் பெற்றுள்ளோம். தொழில் கல்லுாரிகளில் பணிபுரிய, ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துஉள்ளது. தமிழகத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை நிர்ணயித்து, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள தகுதியை பின்பற்றினால், நாங்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுகிறோம். ஆனால், ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த தகுதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றவில்லை.பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதி யாக, பொறியியல் பட்டத்தில் முதல் வகுப்பு அல்லது முதுநிலை பொறியியல் படிப்பில் முதல் வகுப்பு என, ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ளது. தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், பொறியியல் படிப்பில் முதல் வகுப்பு என நிர்ணயித்துள்ளது. முதுநிலை பொறியியல் படிப்பு பற்றி, அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த தகுதியை பின்பற்றியிருந்தால், முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றுள்ள நாங்கள், விண்ணப்பிக்க தகுதி பெற்றிருப்போம். எனவே, பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில், 2017 ஜூனில் வெளியிடப்பட்ட அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்து, இரண்டு வாரங்களில் புதிய அறிவிப்பை வெளியிடும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,000த்துக்கும் மேல் ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இரண்டு வாரங்களில், புதிய அறிவிப்பை வௌியிடவும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து, வெங்கடேசன், ஆனந்தன் ஆகியோர் தாக்கல் செய்த மனு: பொறியியல் படிப்பில், முதுகலை பட்டம் பெற்றுள்ளோம். தொழில் கல்லுாரிகளில் பணிபுரிய, ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துஉள்ளது. தமிழகத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை நிர்ணயித்து, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள தகுதியை பின்பற்றினால், நாங்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுகிறோம். ஆனால், ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த தகுதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றவில்லை.பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதி யாக, பொறியியல் பட்டத்தில் முதல் வகுப்பு அல்லது முதுநிலை பொறியியல் படிப்பில் முதல் வகுப்பு என, ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ளது. தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், பொறியியல் படிப்பில் முதல் வகுப்பு என நிர்ணயித்துள்ளது. முதுநிலை பொறியியல் படிப்பு பற்றி, அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த தகுதியை பின்பற்றியிருந்தால், முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றுள்ள நாங்கள், விண்ணப்பிக்க தகுதி பெற்றிருப்போம். எனவே, பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில், 2017 ஜூனில் வெளியிடப்பட்ட அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்து, இரண்டு வாரங்களில் புதிய அறிவிப்பை வெளியிடும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.