சென்னை: 'மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலை தொடர வேண்டும்' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் வரும் 17ம் தேதி, கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு நாளை தர வரிசை பட்டியல் வெளியிடப்
பட்டு வரும் 17ல் கவுன்சிலிங் நடத்தப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் 
அறிவித்திருந்தது. இந்நிலையில் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதி
மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி வரும் 17ம் தேதி கவுன்சிலிங் நடைபெறுமா என மாணவர்களிடயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று உத்தரவு ெவளியாக வாய்ப்புள்ளது. தீர்ப்பு தமிழக அரசுக்கு சாதகமாக வரும் பட்சத்தில் நாளை திட்டமிட்டப்படி தரவரிசை பட்டியல் வெளியாகும்; 17ம் தேதி கவுன்சிலிங் துவங்கும். வந்தாலும் கவுன்சிலிங் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளது. இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் வரை சென்றாவது மாநில பாடத்திட்ட மாணவர்களின் நலனை தமிழக அரசு பாதுகாக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.