சென்னை: மாநகர காவல் துறை மற்றும் மாநகராட்சி இணைந்து பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்காக காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து, நேற்று முன்தினம் அண்ணாநகர், செனாய் நகரிலுள்ள அம்மா அரங்கத்தில் கல்வி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதற்கு மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், சென்னை மாநகராட்சியின் தொடக்கப் பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.