TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Wednesday, July 5, 2017

💢இடியாப்ப சிக்கலில். தமிழக கல்வித்துறை 💢

ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை 23ன்படி 2011லிருந்து வழங்கி வரும் தனி ஊதியம் 750 ஐ 1.1.2006ல் 2800 தர ஊதியம் பெறுபவர்களுக்கு வழங்காது 1.1.2011 முதல் வழங்குவதால் ஏற்பட்டுள்ள இளையோர் மூத்தோர் முரண்பாடுகளை களைய முடியாமல் தமிழக கல்வித்துறை திணறி வருகிறது .


  🛑 ஊதியக்குழவில் வழங்கப்படும் திருத்தம் அனைத்தும் அவ்வூதியக்குழுவின் ஆரம்ப காலம்(1.1.2006) முதல் வழங்காமல் குறிப்பிட்ட தேதியை (1.1.2011)வைத்து ஆசிரியர்களை பிரிவிணைப்படுத்தியதே இதற்கு காரணம் ..

      🔵அனைத்து பணப்பலன்களுக்கும் பொருந்தும் தனி ஊதியம் 750ஐ ஆறாவது ஊதியக்குழவின் மையத்திலிருந்து வழங்குவதும் 1.1.2006 லிருந்து 31.12.2010 முடிய 2800தர ஊதியம் பெற்ற சாதாரண இடைநிலை ஆசிரியர்கள் எவருக்கும் எந்த பணப்பலனுக்கும் வழங்காமல் மறுப்பதும் அரசாணை 23 ன் தவறாகும் ...

     🔴ஓர் ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக அல்லது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது எப்படி தனி ஊதியம் கையாளப்பட வேண்டும் என்பதை அரசு தெளிவாக விளக்காமல் போனதாலும் ...தனி ஊதியம் 5200-20800 க்கு மாற்றாக அடிப்படை ஊதியத்திற்கு வழங்கப்பட்டதா ? அல்லது 4200க்காக வழங்கப்பட்டதா ? என்பது பற்றி அரசு தெளிவு படுத்தவில்லை ...


     ⛔கேட்டதோ 9300-34800  கிடைத்ததோ 750 மட்டும் ....இது எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே இன்னும் முடிவாக வில்லை ....எப்படி இருப்பினும் இத்தனி ஊதியம் எல்லோருக்கும் 1.1.2006லிருந்து வழங்கப்பட்டு இருக்க வேண்டும் ...வழங்காத காரணத்தால் பணியில் பதவி உயர்வில் மூத்தோர் பல ஆயிரக்கணக்கானோர் குறைவான ஊதியம் பெறும் நிலை தமிழகமெங்கும் உருவாகி உள்ளது .


      ❇8764 தெளிவுரை பதவி உயர்விற்கு பிறகு தனி ஊதியம் எக்காரணம் கொண்டும் தொடரக்கூடாது என்று கூறியுள்ள நிலையில் ..எல்லோருக்கும் 1.1.2011க்குப்பின் பதவி உயர்விற்கு பிறகு தனி ஊதியம் பதவி உயர்வு பெற்ற பிறகும் தனி ஊதியமாக தொடராமல் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து இணைத்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது ....

     ⏰ஆறாவது ஊதியக்குழவில் pay in the pay என்றும் grade pay என்றும் ஊதியம் வழங்கும் நிலையில் இத்தனி ஊதியம் 750 இந்த இரு நிலைகளில் எதில் வருகிறது என்பதை தமிழக கல்வித்துறை விளக்காமல் பணியில் மூத்தவருக்கு குறைந்த ஊதியத்தையும் ..பணியில் இளையோருக்கு தனி ஊதியம் 750 பதவி உயர்வில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது தவறானது என தணிக்கை தடைகளை காரணம் காட்டி பிடித்தம் செய்வதும் ஆசிரியர்களிடையே கொந்தளிப்பான சூழலை உருவாக்கி உள்ளது ...

       🍎தனி ஊதியத்தை 1.1.2006 முதல் கொடுக்காமல் மறுப்பதும் ..1.1.2011 முதல் பதவி உயர்வில் சேர்த்து கொடுத்ததை எடுப்பதும் பல நீதிமன்ற வழக்குகளுக்கு வித்திட்டு காலத்தையும் பணத்தையும்
நிர்வாக குழப்பங்களையும் ஏற்படுத்தும் ..

     🔥அரசின் முறையற்ற அரசாணை 23 ஆல் தெளிவற்ற 8764 நிதித்துறை தெளிவுரையால் தமிழக கல்வித்துறையில் 750 பெற்றவரும் பெறாதவரும் அல்லல் படும் சூழல் உருவாகி உள்ளது ..ஐந்தாவது ஊதியக்குழவில் தனி ஊதியம் கையாண்டு வந்த முறையும் .ஆறாவது ஊதியக்குழவின் தனி ஊதியமும் ஒன்றா ? அல்லது எப்படி வேறுபட்டது என கல்வித்துறை விளக்காமல் அதிக ஊதியம் வழங்குவதும் பிறகு பிடுங்கி எடுப்பதும் தேவையற்ற நடவடிக்கைகள் ..

    💥கீழ்நிலை அலுவலக பணியாளர் செய்தது தவறெனில் தமிழகம் முழுதும் தெளிவாக அரசாணைகளை வழங்குதல் அரசின் கடமை ஆகிறது ...அரசின் இத்தகைய ஆசிரியர் விரோத போக்கினால் ஆயிரக்கணக்கான ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்ட மேலும் மேலும் குழப்பமான நடைமுறைகள் தொடர்கிறது ..

    🌏ஆறாவது ஊதியக்குழவின் முரண்பாடுகள் களைய ஒரே தகுதி .ஒரே பணி .ஒரே ஊதியம் என்பதை தமிழக அரசும் கல்வித்துறையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும் ...

சுரேஷ் மணி
ப.ஆ
நாமக்கல்
9943790308

1 comment:

  1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் 2012 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் முறயாக நடத்தப்பட்ட பாேது துணைத் தேர்வில் தாள் 1ல் தேர்ச்சி பெற்றேன். தேர்வு அறிவிப்பின் பாேது இறுதி ஆண்டு பயில்பவர்களும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப் பட்டதால் ஆசிரியர்பட்டயப் பயிற்சி இறுதி ஆண்டு படித்த என்னப் பாேன்ற பலரும் பி.எட் படித்த பலரும்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாேம். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் பாேது பட்டயப் பயிற்சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படாததால் எங்களால் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியவில்லை. பிறகு 2013ம் ஆண்டு சென்னை அசாேக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்பாது நாங்கள் அனைத்து சான்றிதழ்களையுயம் முறயாக சமர்ப்பித்து தகுதி பெற்றாேம். அப்பாேது எங்களுக்கு பழைய தகுதி காண் மதி்ப்பெண் வழங்கப்பட்டது. பணி வழங்கப்படும் என உறுதியும் அளித்தனர். ஆனால் 2014ம் ஆண்டு எங்களுடன்சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து காெண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டது. எங்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. இது வரை எங்களைப் பற்றி யாரும் கண்டுகாெள்ளவில்லை. 2013ம் ஆண்டு புதிய தகுதி காண் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மதிப்பண் தளர்வும்வழங்கப்பட்டது. அதில் எங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் பணி வாய்ப்பு பெற்றனர். ஆனால் அனைத்து தகுதிகளையும் பெற்றும் அவர்களை விட அதிகமதிப்பெண் இருந்தும் நாங்கள் பணி வாய்ப்பை இழந்து ஐந்து வருடங்களாக தவிக்கறாேம். 2012ல் நடந்த தகுதித் தேர்வில் அதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாத பாேது குறைந்த எண்ணிக்கயிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றனர். அப்படிப்பட்ட கடினமான தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றுள்ளாேம். நாங்கள் எத்தனயாே முறை கல்வி அமச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியாேரை சந்தி்த்து மனு காெடுத்துள்ளாேம். ஆனால் இது வரை எங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்க வில்லை. இப்பாெழுது கூட அனவரும் 2013ம் ஆண்டு தேர்வர்களப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆகவே தாங்கள் எங்களைப் பற்றி செய்தி வெளியட்டு தங்களால் ஆன உதவியை செய்யுமாறு கேட்டுக்காெள்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் எங்களின் சான்றிதழ் பயனற்றுப் பாேய்விடும். ஆகவே எங்களுக்கு முடிந்த அளவு உதவுமாறு கேட்டுக்காெள்கிறேன். நன்றி... நன்றி..

    ReplyDelete

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!