TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..






Saturday, August 19, 2017

மதுரை காமராஜ் பல்கலைக்கு யு.ஜி.சி., நிதி ரூ.10 கோடி

மதுரை, மதுரை காமராஜ் பல்கலை உயிரி அறிவியல் பள்ளியின் ஒருங்கிணைப்பு வள மையத்தின் சிறப்பான செயல்பாடுகளையடுத்து ஆய்வு மற்றும் திறன் மேம்பாடு பணிகளுக்காக பல்கலை மானியக் குழு(யு.ஜி.சி.,) 2வது கட்டமாக 10 கோடி ரூபாய்  வழங்கியுள்ளது.

இதுகுறித்து துணைவேந்தர் செல்லத்துரை கூறியதாவது:
உயிரி அறிவியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப துறைகளில், ஆய்வு பணிகளுக்காக யு.ஜி.சி., 2008-13 காலத்திற்கு பத்து கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்நிதியின் மூலம் ஒருங்கிணைப்பு வள மையம் துவக்கப்பட்டது. 
நாடு முழுவதும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வு பணிகளை திறம்பட மேற்கொள்ள உயர்ரக ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டது. 
மேலும், கோடை கால கருத்தரங்குகள், உயிரி அறிவியல் துறையில் பல்வேறு வித ஆய்வுகள் நடந்தன. 
மேலும், 2 கோடி ரூபாயில் ஆய்வு மாணவர்களுக்காக விடுதி அமைக்கப்பட்டது.மையத்தின் சிறப்பான செயல்பாடுகளை அடுத்து யு.ஜி.சி., 2017-22 காலத்திற்கு 2வது கட்டமாக மேலும் 
10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 
'ஜினோமிக்ஸ்', 'ஹெல்த்' பிரிவுகளில் ஆய்வுகளை மேற்கொள்ள ஆராய்ச்சி பேராசிரியர்கள், மாணவர்களுக்கு இந்நிதி 
செலவிடப்படும். விஞ்ஞானிகளை வரவழைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
கருத்தரங்குகள், மாணவர் திறன் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர் ஹூசைன் முனவார் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், 
இப்பல்கலைக்கு 'பர்ஸ்' திட்டத்தில் வழங்கிய 7 கோடி ரூபாயிலும், ஆய்வக மேம்பாடு பணிகள் நடக்கின்றன.
தென் மாவட்டங்களில் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குட்டை ரக பனைமரங்களை உருவாக்க ஆய்வு பணிகளை உயிரிஅறிவியல் துறை துவக்கியுள்ளது. உலகின் தலைசிறந்த 200 பல்கலைகளில் இப்பல்கலையும் ஒன்றாக தரம் உயரும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறினார்.
பதிவாளர் சின்னையா மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
நீரிழிவை குணப்படுத்தும் கடற்பாசி ரசாயனம்

பேராசிரியர் வரலட்சுமி கூறியதாவது: உயிரிஅறிவியல் துறை சார்பில் நீரிழிவு நோயை குணப்படுத்த கடற் பாசியிலிருந்து புதிய ரசாயன பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை விலங்குகளுக்கு வழங்கிய போது நீரிழிவு நோய் குணமாவது தெரிய வந்தது. இந்த ஆய்வை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம். 
இவ்வாறு கூறினார்.
பேராசிரியர் ஆரோக்கியதாஸ், ''இயற்பியல், வேதியியல் உட்பட பல துறைகளில் 62 கண்டுபிடிப்புகளை கண்டறிந்துள்ளேன். இதில் 35க்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது,'' என்றார். 

மேலும் பொது செய்திகள்:

ஆகஸ்ட் 20,2017
1,000 பேர் மதம் மாறியது ஏன்?; என்.ஐ.ஏ., விசாரிக்க உத்தரவு
Comments

ஆகஸ்ட் 20,2017
ஜி.எஸ்.டி., ஜூலை கணக்கு தாக்கல் செய்ய கெடு
Comments

ஆகஸ்ட் 20,2017
பவானி ஆற்றில் மேலும் 4 தடுப்பணைகள்! - மீண்டும் ...
Comments (3)

ஆகஸ்ட் 20,2017
கனமழையால் உயர்கிறது பெரியாறு அணை நீர்மட்டம்
Comments

ஆகஸ்ட் 20,2017
இன்றைய(ஆக.,20) விலை: பெட்ரோல் ரூ.70.85; டீசல் ரூ.60.08
Comments

ஆகஸ்ட் 20,2017
நுண்துளை ஆப்பரேஷனால் முதியவருக்கு மறுவாழ்வு
Comments

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!