திருச்சி: ''நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், புதன்கிழமைக்குள் முடிவு தெரியும்,'' என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர், திருச்சி விமான நிலையத்தில் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாணவர்களின் நலனுக்காக, இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பான தமிழக அரசின் அவசர சட்ட மசோதா, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் அதை பரிசீலிப்பதாக உறுதி அளித்து உள்ளது. புதன்கிழமைக்குள், இதில் முடிவு தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.