TAMILAGAASIRIYAR QUICK LINKS

CLICK HERE TO VIEW..







Wednesday, August 23, 2017

'நீட்' தேர்வு முடிவுகள் : ஓசூர் மாணவர் முதலிடம்

ஓசூர்: நீட் தேர்வு முடிவில், ஓசூர் மாணவர், மாநில அளவில் முதலிடமும், இந்திய அளவில், 226வது இடமும் பெற்று, சாதனை படைத்தார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் ரங்கராஜ், 47; நரம்பியல் நிபுணர். இவரது மனைவி விஜயலட்சுமி, 47; மகப்பேறு மருத்துவர். இவர்கள், ஓசூரில், மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, சந்தோஷ், 18, என்ற மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர்.
ஓசூர், பத்தலப்பள்ளி, டி.வி.எஸ்., அகாடமி, சி.பி.எஸ்.சி., பள்ளியில், 10ம் வகுப்பு முடித்த சந்தோஷ், மேல்நிலை கல்வியை, கர்நாடகா மாநிலத்தில் படித்தார். பிளஸ் 2, பொதுத்தேர்வில், 500க்கு, 489 மதிப்பெண் பெற்றார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வை, பெங்களூரு ஜெய்நகரில் உள்ள மையத்தில் எழுதினார். டில்லி எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில், 70வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் தேர்வில், 86வது இடமும் பெற்றார். நீட் தேர்வில், 720 மதிப்பெண்களுக்கு, 656 பெற்ற சந்தோஷ், தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில், 226வது இடமும் பெற்றார்.
ஜிப்மர் தேர்வில், 86வது இடம் பெற்ற சந்தோஷ், அதே மருத்துவ கல்லுாரியில், ஒரு மாதத்திற்கு முன் சேர்ந்து, எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். நீட் தேர்வில், மாநில அளவில், சந்தோஷ் முதலிடம் பெற்றதை அடுத்து, அவரது பெற்றோர், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி, மகிழ்ந்தனர். நீட் தேர்வில், தர்மபுரியை சேர்ந்த கபிலன், ஏழாவது இடம் பெற்றார்.

அவர் கூறியதாவது: என் தந்தை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்; தாயும் ஆசிரியை தான். செட்டிக்கரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 2015ல் பிளஸ் 2, படித்தேன். பொதுத்தேர்வில், 500க்கு, 471 மதிப்பெண் பெற்றேன். டாக்டராக விரும்பியதால், பெங்களூரு தனியார் பயிற்சி மையத்தில் பெற்றோர் சேர்த்தனர். இந்தாண்டு, நீட் தேர்வு எழுதியதில், தேசிய அளவில் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில், சென்னை மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தது. நேற்று, தமிழக அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியலில், 633 மதிப்பெண் பெற்ற எனக்கு, ஏழாவது இடம் கிடைத்துள்ளது; இது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!