தமிழக பாடத்திட்டத்தில், நேற்றுடன் காலாண்டு தேர்வு முடிந்தது. இன்று, அரசு பள்ளிகள் மட்டும் இயங்குகின்றன. நாளை முதல் அக்., 2௨ வரை, காலாண்டு மற்றும் சரஸ்வதி, ஆயுத பூஜை நாட்களுக்கான விடுமுறை

விடப்படுகிறது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த வகையில், தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 25 லட்சம் மாணவர்களுக்கு தினமும் அரை நாள் மட்டும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்' போராட்டம் நடத்தியதால், வகுப்புகள் நடத்தாமல் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பை, சிறப்பு வகுப்புகள் மூலம் ஈடுகட்ட ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.