கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியான நிலையில் நாளை 12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களையும் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 31ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் http://www.dge.tn.gov.in அஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் நவ. 2 முதல் நவ 4 வரை சிஇஓ அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.