1.மாணவர்களின் பாதுகாப்புகுறித்த விஷயங்களில் அனைத்து ஆசிரியர்களும் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும்.
2.பள்ளி வளாகத்தில் இடிக்ககப்பட வேண்டிய கட்டிடங்கள் இருந்தால் உடன் (நாளை) அலுவலகத்திற்கு தகவல் எழுத்துபூர்வமாக அளித்துவிட்டு "தடைசெய்யப் பட்ட பகுதி "என எழுதி ஒட்டிவிட்டு,  அந்த கட்டிடடத்திறகு அருகில் மாணவர் செல்லாதவண்ணம் ஒரு கயிற்றைக்
கட்டி தடுக்கவும்.

3.பள்ளியில் உள்ள மின்சாதனங்களை மாணவர்களைவிட்டு இயக்கச் (மின்விசிறி போடுதல்,லைட் போடுதல்) செய்யவேண்டாம்.
4.பட்டு போன மரங்கள் பள்ளி அருகிலோ,பள்ளி வளாகத்திலோ இருந்தால் உடன் அப்புறப்படுத்தவும்.
5.குடிதண்ணீரை சத்துணவு பணியாளர் மூலம் காய்ச்சி வடிகட்டி மாணவர்களுக்கு அளிக்கவும்.
6.ஆறு,குளங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மாணவர்களை அவற்றில் குளிக்கச்செல்லவேண்டாம் என கண்டிப்பாக அறிவுறுத்தவும்.
7.மழை நேரத்தில மாணவர்களை குடை, ரெயின்கோட் கொண்டுவர அறிவுறுத்தவும்.
8.தலைமை ஆசிரியர்கள் பள்ளியில் ஒரு குடை,Torch light வாங்கி வைக்கவும்.
9.இயற்கை பேரிடர் நடைபெறும் காலங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு இடம் கேட்டால் (முக்கியஆவணங்கள்,பொருட்களை பத்திரமாக பீரோ அல்லது தலைமை ஆசிரியர் பொறுப்பில் வைத்துக்கொண்டு) உடன் தங்க அனுமதி அளிக்கவும்.
10.பள்ளி அமைந்துள்ள பகுதியைச் சார்ந்த மருத்துவமனை,மருத்துவ அலுவலர்,சுகாதாரச் செவிலியர்,காவல் நிலையம்,தீயணைப்பு நிலையம,கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருடைய கைப்பேசி எண்கள் கட்டாயம் பள்ளியில் எழுதியிருத்தல் வேண்டும்.
11.NCERT மூலம்"தமிழப்பள்ளி கலைத் திருவிழா "நடத்தப்படவுள்ளது.வட்டார அளவில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கும்,மாவட்ட அளவில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறும்.
1-2 வகுப்பு;3-5வகுப்புகள்;6-8 வகுப்புகள் என்ற நிலையில் போட்டிகள் நடத்தப்படும்.
12.பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாத நிலை (கழிவறை,குடிதண்ணீர்)  இருந்தால் உடன் வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யவும்.
13.மாணவிகளுக்கு "நாப்கின்"தேவைப்படும் நடுநிலைப்பள்ளிகள் இருந்தால் உடன் மாணவிகள் எண்ணிக்கையை குறித்து அலுவலகத்தில்  தபால் அனுப்பினால் சுகாதாரத்துறை உதவியுடன் பெற்று வழங்கப்படும்.
14.துப்புரவுப் பணியாளருக்கான ஊதியம் வங்கிக் கணக்கிற்கு வந்தவுடன் (வங்கி கணக்கை பார்க்கவும்) அதனை காசோலையாக தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட பணியாளருக்கு நேரடியாக வழங்கவு.
15.EMIS பதிவு செய்ய(போட்டோ&இரத்தப்பிரிவுடன்)  கடைசி தேதி 31/10/17.
16.NAS தேர்வு நவம்பர் 13 நடைபெறும்.எட்டாம் வகுப்பிற்கு மட்டும் Coding sheet.
17.Team visit "A" கிரேடு பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளுக்கும் இந்த மாத இறுதியில் உண்டு.
18.பள்ளிகளில் "மெல்லக் கற்போர் " பதிவேடு கண்டிப்பாக நடைமுறையில் இருத்தல் வேண்டும்.அதில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான மேற்கொள்ளளப்பட்ட செயல்பாடு "Remedy " குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.