*தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. பரவலாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துவருகிறது.*. *சென்னையில்  நேற்றுவரை மேகமூட்டதுடன் காணப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் நல்ல மழை பெய்துவருகிறது.*

*தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. *

*இந்நிலையில், வரும் நவம்பர் 3-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் என  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.*

*இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் நாளை, தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட தென் மாநிலங்கள் முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.*

*அடுத்த ஐந்து நாள்களுக்கு தமிழகம் மட்டும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், வரும் நவம்பர் 3 வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.*