மத்திய அரசின், ஜி.எஸ்.டி., வரியால், எல்.எல்.பி., ஐந்து ஆண்டு மற்றும் மூன்றாண்டு சட்ட படிப்புகளின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.மத்திய அரசின், ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரி, இந்த ஆண்டு, ஜூலை, ௧ல் அமலுக்கு வந்தது. இந்த வரி சட்டத்தில், 

மாநிலங்களின் சார்பில், மாநில சரக்கு மற்றும் சேவை வரியும், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே, மாநில இணைப்பு சரக்கு மற்றும் சேவை வரியும் அறிமுகமானது.
அதற்கேற்ப, சட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தில், 'வரிவிதிப்புக்கான சட்டம்' என்ற தலைப்பில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின், ஜி.எஸ்.டி., - மாநில ஜி.எஸ்.டி.,
- மாநிலங்களுக்கு இடையிலான ஜி.எஸ்.டி., என, மூன்று புதிய பாடங்கள், ஒரு தொகுப்பாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டம், நவம்பர் பருவ தேர்வுக்கு அமலாகும் என, தமிழக அம்பேத்கர் சட்டப்பல்கலை தெரிவித்துள்ளது.