சென்னை : பிளஸ் டூ மாணவனுக்கு சான்றிதழ் தராத ராசிபுரம் விகாஸ் பள்ளிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாணவன் கார்த்திக்கின் பிளஸ்டூ மதிப்பெண், மாற்றுச்சான்றிதழை பள்ளி தராததால் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் பள்ளிக்கு ரூ. 75,000 கட்டணம் செலுத்தி விட்டதாக பெற்றோர் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். பின்னர் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ராசிபுரம் விகாஸ் பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் உயர்நீதிமன்ற நோட்டீசுக்கு ராசிபுரம் விகாஸ் பள்ளி நிர்வாகம் பதில் தரவில்லை. இந்த வழக்கில் விகாஸ் பள்ளி நிர்வாகம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். பின்னர் இரண்டு வாரத்தில் மாணவனுக்கு சான்றிதழ்கள் தரவேண்டும் எனவும் ஓராண்டு கல்வியை இழந்த மாணவன் கார்த்திக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்துக்கு பதில் தராத விகாஸ் பள்ளி ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தவும் ஆணையிட்டது.