Wednesday, October 11, 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு

7வது ஊதிய குழுபரிந்துரைகள் பற்றிஅமைச்சரவை கூடிமுடிவு எடுக்க போவதாகதகவல்கள் வந்தவண்ணம்இருக்கின்றன. அரசுஊழியர்களின் சம்பளஉயர்வு கோரிக்கையைஏற்க கூடாது என்று சட்டபஞ்சாயத்து இயக்கம்தமிழக முதலமைச்சர்மற்றும் துணைமுதலமைச்சருக்குஅவசர கடிதம் எழுதிஉள்ளோம். நேரில்சந்தித்து விளக்கம் தரதயாராக உள்ளோம்என்பதையும்


தெரிவித்து உள்ளோம்என சட்ட பஞ்சாயத்துஇயக்கத்தின் தலைவர்சிவ.இளங்கோகூறியுள்ளார்.
கடிதத்தின் விவரம்:


அரசு ஊழியர்கள்(JACTTO-GEO) 3 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி கடந்த 3மாத காலமாக பல்வேறுபோராட்டங்களை நடத்திஅரசிற்கு நெருக்கடிஅளித்து வருகின்றனர். 7வது ஊதிய குழுவின்பரிந்துரைப்படிசம்பளத்தைஉயர்த்தவேண்டும்மற்றும் புது ஓய்வூதியதிட்டத்தைநிறுத்திவிட்டு பழையஓய்வூதிய திட்டத்தைஅமல்படுத்தவேண்டும்என்பது அவர்களுடையமுக்கியமானகோரிக்கைகள். அதுசம்மந்தமாக தமிழகஅமைச்சரவை நாளைகூடி முடிவெடுக்கபோவதாக செய்திகள்வந்த வண்ணம்இருக்கின்றன. சட்டபஞ்சாயத்து இயக்கம்தன்னுடையகருத்துக்களையும்ஆலோசனைகளையும்இந்த கடிதம் மூலம்தெரிவிக்கவிரும்புகிறது. (இதுசம்மந்தமாக ஏற்கனவே18 செப்டம்பர் அன்று ஒருகடிதம் எழுதிஇருந்தோம்.)


கட்டாயம் இல்லை:


மத்திய அரசின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டுபரிந்துரைக்கப்பட்டுள்ள7வது ஊதிய குழுவின்பரிந்துரைகளை ஏற்கவேண்டிய கட்டாயம்தமிழக அரசிற்குஇல்லை. 1988இல்மத்திய அரசுஊழியர்களுக்குஇணையாக ஊதியம்தர வாய்மொழிஉத்திரவாதம் மட்டும்தான் தமிழக அரசுதந்துள்ளது என்பதைகுறிப்பிடவிரும்புகிறோம்.


வரி வருவாய் சரிவு:


தமிழக அரசின் சொந்தநிதி வருவாய் - 99590 கோடி

ஊழியர்களின் சம்பளம்  - 47000 கோடி

ஓய்வூதியம் - 21000கோடி


அதாவது தமிழகஅரசின் சொந்த வரிவருவாயில் 67%ஊழியர்களின் சம்பளம்மற்றும்ஓய்வூதியத்திற்கு போய்விடுவதால் வளர்ச்சிதிட்டங்களுக்கு நிதிபற்றாக்குறை நிலவிவருகிறது. இது தவிரமாநில அரசின் கடன் 4லட்சம் கோடியாகஇருக்கிறது. கடந்தநான்கு வருடங்களாகதமிழக அரசின் சொந்தநிதி வருவாயும் (மொத்தவருவாயில் 61%)குறைந்து கொண்டேவருகிறது என்பதையும்சுட்டிக் காட்டவிரும்புகிறோம்


GST தாக்கம்:


தமிழக அரசின் ஜூலைமாத வரி வருவாய் - 5000கோடி

GST மூலம் கிடைத்தவருவாய்  - 2750 கோடி

Non GST வரி வருவாய் - 2250 கோடி (மது மற்றும்பெட்ரோல்-டீசல் மூலம்கிடைத்த வருவாய்)


மறைந்த முதல்வர்ஜெயலலிதா அளித்தவாக்குறுதி படி தமிழகஅரசு படிப்படியாகமதுக்கடைகளை மூடவேண்டிய கட்டாயத்தில்உள்ளது. மத்திய அரசுபெட்ரோல்-டீசலைGSTக்குள் கொண்டுவரமும்முரமாக இருக்கிறது.இதனால் Non GST வரிவருவாய்எதிர்காலத்தில்பாதியாக  குறையும்பட்சத்தில் கடும் நிதிபற்றாக்குறை ஏற்படும்.


GSTயினால் கடும்நெருக்கடியில் இருக்கும்பஞ்சாப் அரசு, அரசுஊழியர்களுக்குசம்பளம் தர முடியாமல்திணறி வருகிறது.ஜனவரி மாதம் முதல்தமிழக அரசிற்கும் இதேநிலை ஏற்பட வாய்ப்புஇருப்பதாகபொருளாதாரவல்லுநர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.FRBMA சட்டத்திற்குஎதிராக அமையும்:


7வது ஊதிய குழுவின்பரிந்துரைகளைஏற்றால் தமிழகஅரசிற்கு 20000 கோடிவரை கூடுதலாக சுமைஏற்படும். இதனால்தமிழக அரசின்  Fiscal deficit-GSDP Ratio மீண்டும்3% மேற் (3.34%)செல்லும்.  (Fiscal deficit-GSDP Ratio should not be above 3% as per the Fiscal responsibility and budget management act). 7வதுஊதிய குழுவை ஏற்றால்FRBMA சட்டத்திற்குஎதிராக அமையும்என்பதை கோடிட்டுகாட்ட இயக்கம்விரும்புகிறது.வேலைநிறுத்தம்சட்டப்படி குற்றம்:


Tamilnadu Government employees act 1973 (Clause 22) மற்றும்  ESMAசட்டப்படியும் அரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில்ஈடுபடுவது சட்டப்படிகுற்றம். TK ரங்கராஜன்vs தமிழக அரசு (2003)சுப்ரீம் கோர்ட்வழக்கிலும் அரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில்ஈடுபட எந்தவித தார்மீகஉரிமையும் இல்லைஎன்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுருக்கிறது.சட்டத்தை மதிக்காமல் மீண்டும்வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டால் சட்டப்படிஅவர்களை வேலையில்இருந்து நீக்க முடியும்என்றாலும் அவர்களின்வாழ்வாதாரத்தைகருத்தில் கொண்டுஇரண்டு பணிஉயர்வையும் சம்பளஉயர்வையும் (Promotion and Increment) ரத்துசெய்யலாம்.


நீதிமன்றம் தலையிடமுடியாது:


சம்பள உயர்வு என்பதுஅரசின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டு எடுக்கப்படும்கொள்கை முடிவுஎன்பதால் நீதிமன்றம்இதில் தலையிடமுடியாது. நீதிமன்றம்தலையிட முற்பட்டால்,அரசு ஊழியர்களின்சம்பள உயர்வு பற்றிமுடிவு எடுப்பதுஅரசினுடைய அதிகாரஎல்லைக்குள் உட்பட்டது,நீதிமன்றங்கள் எந்தஉத்தரவையும்பிறப்பிக்க முடியாதுஎன்று நீதிமன்றத்தில்தெரிவித்துவிடலாம்.செயற்திறனுக்கேற்பசம்பளம்:


மத்திய அரசின் ஊதியகுழுவின்பரிந்துரைகளையும் நிராகரித்துவிட்டுசெயற்திறனுக்கேற்பசம்பளம் (performance based appraisal system and people satisfaction index)என்ற கொள்கையைதமிழக அரசுஅமல்படுத்திஇந்தியாவுக்கேமுன்னுதாரணமாகதிகழவேண்டும்.சிறப்பாக செயற்படும்ஊழியர்களுக்கு மத்தியஅரசின் ஊழியர்களைவிட 10% அதிகமாகஊதியம் தரலாம்.


தற்பொழுதே,போக்குவரத்துஊழியர்களுக்கு தமிழகஅரசு சரியாக சம்பளம்தரமுடியாமல்இருப்பதாக செய்திகள்வருகின்றது. ஆதலால்தற்போதுள்ளசூழ்நிலையில், அரசுஊழியர்களுக்கு சம்பளஉயர்வு சாத்தியமில்லை. 2% (தமிழக மக்கள்தொகையில்) அரசுஊழியர்களுக்கு (12லட்சம்), 7வது ஊதியகுழுவின் பரிந்துரைப்படிசம்பள உயர்வுகொடுத்தால் அனைத்துதமிழக மக்களும் (8கோடி மக்கள்)பாதிக்கப்படுவார்கள்.இது அரசுஊழியர்களுக்குஎதிரான செயல்இல்லை, மக்களுக்குஆதரவான செயல்என்பதை அரசுஊழியர்களுக்கு புரியவைத்து, அவர்கள்ஒப்புதலோடு இதைசெயல்படுத்தவேண்டும்.


அரசு சரியான முடிவுஎடுத்தால் சட்டபஞ்சாயத்து இயக்கம்அரசிற்கு துணையாகநின்று, மக்கள் இடையேவிழிப்புணர்வைஏற்படுத்த அனைத்துமுயற்சிகளையும்எடுக்கும்.


இது சம்மந்தமாகவும்பென்ஷன் திட்டம்பற்றியும் நேரில்சந்தித்து விளக்கம்அளிக்க தயாராகஉள்ளோம். நேரில்சந்திக்க நேரம் ஒதுக்கிதருமாறு தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!