சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, டிச., 5 முதல், 13 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுக்கு, அக்., 31 வரை, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டுக்கான நுழைவுத்தேர்வு, டிச., 5முதல், 13 வரை நடக்கும் என, தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும், 41 நகரங்களில், ௮௬ மையங்களில் தேர்வு நடக்கிறது. செப்., 26ல், பதிவு துவங்கியது; அக்., 31க்குள் ஆன் - லைன் பதிவை மேற்கொள்ள, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, www.nbe.edu.in என்ற இணையதளத்தில், கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.