தமிழகத்தில் கல்விக் கூடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 3,000 பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நாகர்கோவிலில் நடைபெற்ற இச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேல்நலைப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.