ஊதிய குழு அரசாணை 303, பக்கம் 4 ல் S.No. 14 ஐ பொறுமையாக படித்துவிட்டு PP 750 ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்ய epay roll ஐ காட்டி தகவல் பதிவிடுங்கள்.

  வ.எ.14 ல் Junior Assistants/Accountants க்கு PP 60 shall be absorbed while fixing the pay in the revised pay structure என உள்ளது.

   எனவே அவர்களுக்கு PP 60 அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக் கொள்ளப்படும். அதற்காகவே IF PP IS eligible for Revision add with Basic pay என உள்ளது. இந்த PP 60 ஐ குறிப்பிட்டு வ.எ.14 ல் கூறப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக PP  ஐ பக்கம் 9 ல் 3(i) existing basic pay means என குறிப்பிடும்போது மற்றும் 3(viii) ல் basic pay in the revised pay structure means என குறிப்பிட்டு விளக்கியுள்ளதிலும் கணக்கில் கொள்ளப்படாததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

  நமது PP 750 ஐ அடிப்படை ஊதியத்துடன் இணைக்க குறிப்பிட்டு ஆணை வந்தால்தான் இணைத்திட முடியும். Epay roll ல் குறிப்பிடப்பட்ட்டுள்ளது இந்த PP 60 என்பதே ஆகும். அதனையே if possible என குறிப்பிட்டுள்ளது.( பக்கம் 4 ல் PP 60 possible என்பதற்கான விளக்கம் உள்ளது.

   எனவே நண்பர்களே எதையாவது கண்டதும் forward செய்யாதீர்கள். ஆசிரியர்களுக்கு விளக்கியே கொஞ்சம் சலிப்பாகி விட்டது. கொஞ்சம் நிதானமாக பகிருங்கள். ஏற்கனவே பாதிக்கப்பட்ட இ.நி.ஆசிரியர்களிடம் கண்ணை மூடி forward செய்து பரபரப்பை உண்டாக்காதீர்.